Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள ஜெயமோகன்,

நான் உங்கள் எழுத்துக்களை பலவருடங்களாக விடாமல் வாசித்து வருகிறேன். இப்பொழுது இணையத்திலும் மிகவும் விருப்பத்துடன் உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். உங்கள் சிறுகதைகள்/நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உங்களுடைய பல எழுத்துக்கள் நான் என் வாழ்க்கையை பார்க்கும் விதத்தை பாதித்திருக்கின்றன.

நான் சமீப காலங்களாக ஒரு விதமான மன உறுத்தலில் இருக்கிறேன். அதை உங்களிடம் கூறி உங்கள் ஆலோசனையை பெறலாம் என நினைக்கிறேன். இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கூறினால் அது மிகவும் பயனுடையதாய் இருக்கும் என நம்புகிறேன்.

நான் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில். தற்பொழுது மென் பொருள் துறையில் லண்டனில் வேலை செய்து வருகிறேன். சமீபத்தில் திருமணம் செய்து கொண்டேன். காதல்/கலப்பு திருமணம்.(நான் ஐயர். என் மனைவி நாயுடு). நான் கடவுள் நமபிக்கையை தொலைத்து வெகு நாட்கள் ஆகிறது. ஓஷோ,கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் தன்னை அறிதல் என்ற கோட்பாட்டையே ஆன்மீகம் என்று நம்புகிறேன். கலப்பு திருமணம் என்பதால் சாதி குறித்தும் கவனத்துடன் இருக்கிறேன். அம்பேத்கர் எழுத்துக்கள் மூலமாகவும் இணையத்தில் கிடைக்கும் சில பெரியாரிய எழுத்துக்கள் மூலமாகவும் என் சாதி அடையாளத்திலிருந்து முடிந்த வரையில் மன அளவில் விலகியிருக்க முயல்கிறேன்.

அ)இதனால் குடும்பத்தில் என்ன விதமான அடையாளத்தை பேணுவது என்று சற்று குழப்பமாக தான் உள்ளது. உதாரணமாக குழந்தைகளுக்கு கடவுள் நம்பிக்கையை சொல்லி தர வேண்டுமா? அவர்களுக்கு ஒரு சாதி அடையாளத்தை கொடுக்க வேண்டுமா? சாதி அடையாளம் இல்லா விட்டால் அவர்கள் தனிமைபட்டு போய் விடுவார்களா? மேலும் கடவுள் நம்பிக்கை என்பது பொய்யாகவேனும் ஒரு மன ஆசுவாசத்தை பல பேருக்கு அளிக்கிறது அல்லவா? இதை சொல்லி தரா விட்டால் அவர்களுக்கு அந்த வசதியை மறுப்பதாகிவிடாதா?

ஆ)உங்களது ஆன்மீகம் என்ன? உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் தியானம் அல்லது வேறு பயிற்சிகள் செய்கிறீர்களா?எனக்கு பரிந்துரைக்க உங்களுக்கு ஏதேனும் குரு அல்லது ஆசிரியர் இருக்கிறார்களா?

இதை பற்றி உங்கள் கருத்துக்களை கூற முடியுமா?

அன்புடன்,

G

அன்புள்ள கோகுல்,

உங்கள் கடிதம் கண்டேன்

என்னுடைய மாமனார் இரா.சற்குணம் அவர்கள் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர். அவர் தன் வாழ்க்கையை கடுமையான நாத்திகநோக்கிலேயே அமைத்துக் கொண்டார். தி.க.வுக்குரிய எதிர்மறை நிலைபாடு அவருடையது. இந்துமதம் சார்ந்த எந்தவிழாவையும் கொண்டாடுவதில்லை. தீபாவளி நாட்களில் ஊரே விழாக்கோலத்தில் இருக்கும்போது தன் வீட்டில் வேண்டுமென்றே விளக்குகூட போடாமலிருப்பார். பொங்கல் அன்றுகூட பொங்கலை சமையலறையில் வைத்து செய்து மத்தியான்னம் சாப்பிடுவார்- சூரியனைவழிபடக்கூடாதாம்.

அவரது இந்த மனநிலை என் மனைவியின் மனதில் அழுத்தமான ஒரு வடுவை உருவாக்கிவிட்டது. தன் இளமைப்பருவத்தை தன் தந்தை அவரது பிடிவாதங்கள் காரணமாக நிறங்களில்லாததாகச் செய்துவிட்டதாக அவள் உணர்கிறாள். இந்தியப் பண்பாட்டுடன் உணர்வுபூர்வமான தொடர்பு தனக்கு ஏற்படாது போய்விட்டதாக நினைக்கிறாள். அவளுக்கு ஆர்வமிருந்த மரபிசை, பரதநாட்டியம் முதலியவற்றில் கூட அவளுக்கு அறிமுகம் உருவாகவில்லை. தஞ்சைமண்ணில் பிறந்து வளர்ந்தபோதும்கூட அவள் தஞ்சை பெருவுடையார் ஆலயமன்றி எதையும் பார்த்ததில்லை. அதற்கான இன்றும் அவள் தன் தந்தையை மன்னிக்கவில்லை.

ஆனால் என் மாமனார் என் மகனுக்கு காதுகுத்து உட்பட எல்லா மதச்சடங்குகளையும் செய்தார். அதில் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் அதில் மென்மையான ஒரு கவித்துவம் இருப்பதை வயோதிகத்தில் மனம் நெகிழ்ந்த நிலையில் அவர் புரிந்ந்துகொண்டார். காசிக்குப்போய் கங்கையை பார்த்துவிட்டு வந்தார், ஏன் வட இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக ராமேஸ்வரம் வருகிறார்கள் என்பதை புரிந்துகொண்டார்.

என் மனைவிக்கு இப்போதும் மதநம்பிக்கையோ இறை நம்பிக்கையோ இல்லை. பிரார்த்தனை வழிபாடு நோன்பு எதையும் அவள் செய்வதில்லை. அவளே வாசிக்க ஆரம்பித்தபின் உருவான தெளிவு அது. ஆனால் இந்தியப் பண்பாடு என்பது மதமென்னும் வடிவிலேயே உள்ளது என்ற எண்ணம் அவளுக்கு உண்டு. ஆகவே கோயில்களுக்கு சென்றுகொண்டே இருக்கிறோம். விழாக்கள் கொண்டாட்டங்கள் எதையுமே விடுவதில்லை. கிறிஸ்துமஸ் ஈஸ்டர் உட்பட எல்லா பண்டிகைகளையும் நாங்கள் வீட்டில் குழந்தைகளுடன் விமரிசையாகக் கொண்டாடுவோம்.

நம்முடைய கொள்கைகளை நம் குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது என்றே நான் எண்ணுகிறேன். நம்மைவிட மேலான சிந்தனையாளர்களாக அவர்கள் இருக்கலாமல்லவா? ஆனால் நம்முடைய சிந்தனைகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். பொதுவாக குடும்பத்துக்குள் எப்போதும் உரையாடல் இருக்க வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். தமிழ்நாட்டில் பிராமணக் குடும்பங்கள் தவிர பிறவற்றில் பொதுவாக குடும்பத்தலைவருக்கும் பிறருக்கும் இடையே உரையாடலே இருப்பதில்லை. அதிகாரம் மிக்க ஒரு இடத்தில் குடும்பத்தலைவர் விலக்கி தனிமைப்படுத்தப்பட்டிருப்பா

"ஆகவே கோயில்களை சடங்குகளை விழாக்களை மதஇலக்கியங்களை தத்துவங்களை கலைகளை இசையை குழந்தைகளுக்கு அளியுங்கள். அவற்றின் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கைகள் மறுப்புகள் ஐயங்களுடனேயே அளியுங்கள். அவர்களை மரபின் வளமான மண்ணில் ஊன்றி வையுங்கள். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வளரட்டும். ஆத்திகரானாலும் நாத்திகரானாலும் அவர்கள் இந்தியப்பண்பாட்டுக்குள்ளேய

Edited by Iraivan

குழந்தைகளை எப்படியும் வளக்கலாந்தானே? கடவுள் இல்லை.. பாவ புண்ணியம் என்று எதுவும் இல்லை.. எதுக்கும் பயப்பிடத் தேவையில்லை.. பெரியோர் சிறியோர் என்ற மரியாதை தேவையில்லை.. பெற்றோர் மகவு என்ற வரைமுறை தேவையில்லை.. எப்படியும் வளர்க்கலாம்.. எப்படியும் வளரலாம்.. எப்படியும் திரியலாம்.. எப்படியும் அலையலாம்.. சும்மா சும்மா அது கூடாது இது கூடாது என்று கடவுளையும் சம்பிரதாயங்களையும் காட்டி மூடத்தனத்துக்குள் ஏன் முடங்கிக் கிடப்பான்? அப்படித்தானே?!! :o:unsure:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள

ஜெயமோகன்;

கோகுலுக்கான

உங்கள் பதிலைப் படித்தபோது எனக்குள் இன்னும் சில சந்தேகங்கள் உதிக்கின்றன.

<<<<<நம்முடைய சிந்தனைகள், கலைகள், வாழ்க்கைமுறைகள் அனைத்தும் மதம் என்ற வடிவிலேயே தொகுக்கப்பட்டிருக்கின்றன. >>>>>>

பிரான்ஸிலும்

ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் இருக்கும் இந்துக்கோவில்களின் தினசரிப்பூஜைக்கு கரும்பும், வெத்திலையும், அருகம்புல்லும், வாழையிலையும், இளனியும் விமானத்தில் வந்து இறங்குகின்றன. இன்னும் இப்புலம்பெயர்ந்த நாடுகளில் இங்கே சூரன்போர்கூட ஆட்டுகிறார்கள். இது ஒரு absolute waste என்று ஏன் உங்களுக்குத்தெரியுதில்லை, மூடநம்பிக்கையையும் சேர்த்தல்லவா இறக்குமதி செய்கிறீர்கள் என்று கேட்கும் எங்கள் பிள்ளைகளுக்கு என்னபதில் சொல்லுவது? இவையெல்லாம் மதமென்கிறபெயரால் அறியாமை செய்யும் பேய்க்கூத்து என்று ஏன் அவர்களுக்குச்சொல்லப்படாது?

.<<<<< பௌத்தம் மற்றும் அத்வைதத்தின்படி [நான்X அது] என்ற பேதபுத்தியே அறியாமை. அறியாமையே நரகம். அதிலிருந்து விடுபடுதலே முக்தி. அதை ‘ஒவ்வொன்றாய் தொட்டு எண்ணி எண்ணும் பொருள் ஒடுங்கையில் நின்றிடும் பரம்’ என்கிறார் நாராயணகுரு. அவ்வாறு ஒவ்வொன்றாய் தொட்டு எண்ணுவதையே நான் செய்துவருகிறேன் என்று சொல்லலாம்.>>>>

ஒவ்வொன்றாய்

தொட்டு ஒடுங்கும் பொருள் அதாவது சடம் ஒடுங்கும்போது பரம் தெளியும் என்று சொல்லப்படுகிறது. ஸ்தூலபிண்டங்கள் அனைத்துமே மாயை என்பதல்லவா பௌத்தம்? சடம் எப்போதுதான் ஒடுங்கும் மரணத்திலா? சடத்தை உணரமுடியாத நிலை மரணத்தில்தானே ஊண்டாகும். இன்னும் முக்திபற்றி பௌத்தம் எங்காவது பேசுகிறதா?

குருவோ

, சிஷ்யனோ, சாமானியனோ ஞானம் என்பது மானுஷப்பிறவிக்குத்தானேயுண்

கிருபன், மிக சிறந்த ஒரு பக்கம் இது. நான் இப்பொழுது தான் ஜெயமோகனின் 'காடு' என்னும் நாவலை வாசிக்க தொடங்கி உள்ளேன். அவரின் எழுத்தின் வீச்சம் பிரமிக்க வைக்கின்றது.

--நிழலி--

இணைப்பிற்கு நன்றி கிருபன். ஜெயமோகனின் இரசிகர்களில் நானுமொருவன் (ஏழாம் உலகத்தை அடுத்து, மண் என்ற அற்புதமான சிறுகதைத் தொகுப்பை அண்மையில் முடித்து (மண்தொகுப்பில் அத்தனையும் அற்புதம், குறிப்பாக "மடம்", "பரிணாமம்" மற்றும் "டார்த்தனியம்" பற்றி எவ்வாறு விபரிப்பது என்றே தெரியவில்லை, அத்தனை அருமை) தற்போது திசைகளிற்கு நடுவே மற்றும் ஆயிரங்கால் மண்டபம் இரண்டையும் சமாந்தரமாக வாசித்துக்கொண்டுள்ளேன். என்னைப் பொறுத்தவரை சிறுகதைகளைக் காட்டிலும் நாவல்கள் அற்புதம்).

எனினும் ஜெயமோகனின் படைப்புக்களைப் பொறுத்தவரை எனது அனுபவத்தில் நான் கண்டுகொண்ட ஒன்று, அவரது எழுத்துக்களின் ஆழத்தைப் பூரணமாக அனுபவிப்பதற்குப் பரந்து பட்ட, தொடர்ந்த வாசனைப்பழக்கம் உள்ளவர்களால் மட்டுமே முடிகிறது (குமுதமோ ஆனந்தவிகடனோ படிப்பதுபோல் ஜெயமோகனைப் படித்த சிலரை நான் சந்தித்துள்ளேன்). குறிப்பாக மேற்கத்தேய தத்துவவியல் பக்கம் (அதிலும் குறிப்பாக இருத்தலியல்) ஆர்வம் உள்ளவர்களிற்கு ஜெயமோகனின் எழுத்துக்களின் ஆழம் இலகுவில் அனுபவிக்கக்கூடியதாய் இருக்கும்.

. >>>>>>

பிரான்ஸிலும்

ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் இருக்கும் இந்துக்கோவில்களின் தினசரிப்பூஜைக்கு கரும்பும், வெத்திலையும், அருகம்புல்லும், வாழையிலையும், இளனியும் விமானத்தில் வந்து இறங்குகின்றன. இன்னும் இப்புலம்பெயர்ந்த நாடுகளில் இங்கே சூரன்போர்கூட ஆட்டுகிறார்கள். இது ஒரு absolute waste என்று ஏன் உங்களுக்குத்தெரியுதில்லை, மூடநம்பிக்கையையும் சேர்த்தல்லவா இறக்குமதி செய்கிறீர்கள் என்று கேட்கும் எங்கள் பிள்ளைகளுக்கு என்னபதில் சொல்லுவது? இவையெல்லாம் மதமென்கிறபெயரால் அறியாமை செய்யும் பேய்க்கூத்து என்று ஏன் அவர்களுக்குச்சொல்லப்படாது?

மதம் என்பது குறியீடுகளின் பெரும்தொகுப்பு. தேங்காய் பழம் பூ கரும்பு பொங்கல் பட்டு மாலைகள் தேர் நாதஸ்வரம் என அது விரிந்துகொண்டே செல்கிறது. ஆசார அனுஷ்டானங்களும் குறியீடுகளே. மதம் தேவையென்றால் குறியீடுகளும் தேவையே. குறியீடுகளை தவிர்த்தால் மதத்தில் எஞ்சுவது அருவமான தத்துவமே. அதை ஒரு சமூக ஆழ்மனம் உள்வாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே என் நோக்கில் ஒரு ·பிரான்ஸ் கோயிலில் கரும்பு கொண்டுவரப்படுவது எனக்கு தவறானதாக, மூடநம்பிக்கையாக , தோன்றவில்லை. புத்தர் கோயிலுக்கு வெண்ணிறப்பூக்கள் கொண்டு செல்வதும் அதைப்போலத்தான்.

கோவில்களில், கரும்பு, இளனீர் இப்படியானவை இறக்குமதி செய்யப்பட்டு பாவிக்கப்படுவது தேவையில்லை தான். ஆனால், விழாக்களை ( சூரன்போர்) போன்றவற்றை கொண்டாடுவது எமது இளையோருக்கு நல்லதாகப்படுகிறது. ஆனால் ஆடம்பரம் தேவையில்லை. தேர் இழுப்பது ஏன்? - ஊரில் கோவிலுக்கு போகமுடியாதவர்கள், வயதானோர், நோயாளிகள் போன்றவர்களும் பங்கு பெறத்தகுந்தவகையில் தேரிழுப்பு நடைபெறும். இங்கே புலத்தில் அதற்கான தேவையில்லையே? கோவிலுக்குள்ளேயே செய்யலாமே? மற்ற இனத்தவரை ஏன் இடைஞ்சலுக்கு ஆளாக்கவேண்டும்?

மற்றது அடையாளங்கள்:- எத்தனை தேவை? உருவ வழிபாடில்லாத முஸ்லிம் மதமும், யூத மதமும் அழிந்துவிடவில்லையே? தெய்வம் என்பது உயர்ந்தது, அதனால் அந்தக்காலங்களில் மிக உயர்வாக கருதப்பட்ட பால், பழம், நெய் போன்றவற்றை காணிக்கை கொடுப்பது வழக்கம், ஆனால் அதை வீணடிப்பது ஒத்துக்கொள்ளக்கூடியதல்ல. வேல்ஸ் கோவிலில் சமயமுறைப்படி அபிஷேகம் செய்கிறார்கள், ஆனால் அங்கே வேணடிப்பதில்லை. கடவுள் இப்படியெல்லாம் செய்தால் தான் கருணைகாட்டுவார் என்பது மூட நம்பிக்கை.

அருமையான தத்துவங்களை உள்வாங்க குறியீடுகள் அவசியம் என்றால், நாங்கள் பண்பட்டவர்கள் அல்ல. குறியீடுகள் இல்லாமலேயே மதங்கள் வாழ்கின்றன.

சைவமுறைப்படி சிலவழக்கங்கள் கடைப்பிடிக்கப்படும் போது, சில அப்பட்டமாக மூட நம்பிக்கை என்று பட்டால் அதை நாம் நீக்கவேண்டும். அப்போது தான் இளையசமுதாயம் அதை நம்பி பின்பற்றும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.