Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் தொழிலை நடாத்தி வந்த குற்றத்திற்காக இலங்கை பெண்ணுக்கு பிரித்தானியாவில் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை

Featured Replies

இலங்கைப் பெண் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் 9 மாத ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் பாலியல் தொழிலை நடாத்தி வந்த குற்றத்திற்காக, 34 வயதான யஸ்மின் டி சில்வா என்ற இலங்கைப் பெண்ணுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பெண்ணுக்கு 15,000 ஸ்ரேலிங் பவுண்ட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் பாலியில் தொழிலை நடத்தி வந்த குறித்த பெண் நாளொன்றுக்கு சுமார் 500 ஸ்ரேலிங் பவுண்களை வருமானமாக ஈட்டி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நான்கு மாத காலத்திற்குள் அபாராதப் பணத்தை செலுத்தாவிடின் சிறைத் தண்டனை 12 மாத காலத்திற்கு நீட்டிக்கப்படும் என பிரித்தானிய நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தள்ளது.

பிரித்தானியாவின் போர்ன் மவுத் நொர்விச் அவன்யூ பகுதியில் உள்ள வீடொன்றில் குறித்த பாலியல் தொழில் மையம் நடத்தப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இலங்கைப் பெண்ணுடன் இரண்டு பிரித்தானிய பெண்கள் மற்றும் ஓர் லித்துவேனிய பெண்ணையும் சுற்றி வளைப்பின் போது காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

2004ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2008ம் ஆண்டு செப்டம்பர் 9ம் திகதி வரை குறித்த பாலியல் மையம் நடத்தப்பட்டு வந்ததாக இலங்கைப் பெண் நீதிமன்றில் ஒப்புக் கொண்டுள்ளார்.

http://www.tamilskynews.com/index.php?opti...-09-21-04-33-30

கிரடிட் கார்ட் மோசடியை விட இது பெரிய தப்பு இல்லை தானே...

கிரடிட் கார்ட் மோசடியை விட இது பெரிய தப்பு இல்லை தானே...
:):):D

Edited by TAMILNANPAN

  • கருத்துக்கள உறவுகள்

கிரடிட் காட்cradit card என்றால் கடன் அட்டையோ :):):D:D

அதிலாவது வருமானமெடுத்து இலங்கை அரசுக்கு அனுபபட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் ஈழத்திலும், இந்தியாவிலும் பாலியல் தொழிலைச் சட்டபூர்வமாக்க வேண்டும் என்று யாழில் விவாதம் தந்தது. அதற்கு ஆதரவாக முன்பு ஈழநாதனும், பின்னர் சபேசனும் வாதிட்டார்கள்.

பிரித்தானியாவில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் கனடா அமெரிக்க நாடுகளில் பாலியல் தொழில் சட்டவிரோதமானது. எக்காரணத்துக்காகவும், பணத்திற்காக உடலை விற்கின்ற தொழிலுக்கு அந்தந்த நாட்டுச் சட்டங்கள் அனுமதிக்கவில்லை... ஒருவனோ, ஒருத்தியோ தன்னுடைய தேவைகளுக்காக அவ்வாறு நடக்கலாமே தவிர, அதை வியாபாரமாக்க முடியாது.

ஒரு காலத்தில் ஈழத்திலும், இந்தியாவிலும் பாலியல் தொழிலைச் சட்டபூர்வமாக்க வேண்டும் என்று யாழில் விவாதம் தந்தது. அதற்கு ஆதரவாக முன்பு ஈழநாதனும், பின்னர் சபேசனும் வாதிட்டார்கள்.

பிரித்தானியாவில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் கனடா அமெரிக்க நாடுகளில் பாலியல் தொழில் சட்டவிரோதமானது. எக்காரணத்துக்காகவும், பணத்திற்காக உடலை விற்கின்ற தொழிலுக்கு அந்தந்த நாட்டுச் சட்டங்கள் அனுமதிக்கவில்லை... ஒருவனோ, ஒருத்தியோ தன்னுடைய தேவைகளுக்காக அவ்வாறு நடக்கலாமே தவிர, அதை வியாபாரமாக்க முடியாது.

பணம்தான் தேவையாகவிருந்தால்?...

கள நிர்வாகத்திற்கு ! என்ன கோதாரி பாக்கிறயள் கேடம்கிறன் அந்த செய்தி எந்த விதத்தில உங்களிற்கு தெரியுது?

இதை ஓரு செய்தமி எண்டு இதில அணைச்சும் அதை விட்டுட்டு இருக்கிறயிள் ஆனால் தேவையான அறியப்பட வேண்டிய செய்திகளை தூக்கி நிகழ்வு பகுதிகுள்ள போட்டு மகிழுங்கோ !

TAG Report #3 : Sri Lanka'...

By: Tamilmagan

Why is a Hindu temple like a Soho phone box? Must I draw you a picture?

Science Notebook by Terence Kealey

THE HINDU temples of central and southern India can be startlingly erotic. The temples of Khajuraho are the most explicit, being encrusted with statues of naked females — big-breasted and narrow waisted — doing naughty things with rampant men (see them on Google images). How can a religion be so pornographic?

The standard explanation is that Hinduism harnessed sex in the service of mysticism, but we scientists are materialists and we distrust spiritual accounts. How would anthropologists explain pornographic temples?

The first clue was provided by Robert Carneiro in his paper A Theory of the Origin of the State. There, Carneiro noted that the first states were created by despots, who exploited the introduction of agriculture some 10,000 years ago. Human tribes, Carneiro observes, have fought each other for millennia, but when human beings were still hunter-gatherers a battle led only to the dispersal of the defeated, who melted away.

After agriculture was invented, some 10,000 years ago, a defeated tribe could not afford to disperse: it had become dependent on the food of its farms. So, if defeated in battle, agricultural tribes would collude with their victors, producing food in exchange for quarter: “Ye shall give the fifth part unto Pharaoh, and four parts shall be your own, for seed of the field, and for your food” (Genesis 47). The first states, therefore, were cruel places, which exploited men — and women.

In her book Despotism and Differential Reproduction: A Darwinian View of History, Laura Betzig noted how similarly the early emperors — whether in Africa, Asia or America — behaved, suggesting that traditional empires can best be understood not historically but biologically, having been moulded by coalitions of dominant males to propagate their genes. All the emperors had harems, for example, and the Indian Udayama’s 16,000 women were used similarly to the thousands owned by the Inca Sun King or the Chinese Emperor.

Consequently, DNA testing has confirmed that upper- caste females in India are genetically indistinguishable from lower-caste females, because pretty hoi polloi girls have always been imported into the palaces. But the upper-caste males of India — who are the descendants of the Aryan conquerors of 5,000 years ago — have never allowed male proles to marry their daughters, and they remain genetically distinct. They have, therefore, retained the spoils of conquest for themselves and their sons.

One aspect of imperial despotism is the restriction of trade. It was Charles Darwin who noted that trade is a human instinct. In Voyage of the Beagle Darwin described the natives of Tierra del Fuego as primitive, yet: “They had a fair idea of barter. I gave one man a large nail (a most valuable present) without making any signs for a return; but he immediately picked out two fish, and handed them up on the point of his spear.”

Traditional empires, being despotic, restricted trade to the palaces and temples, forbidding hoi polloi from trading or travelling. Only priests and princes and certain privileged merchants (who were closely regulated) traded and travelled. And one lucrative trade that the priests and princes often monopolised was the oldest and most despotic of all, prostitution.

Temple prostitution was, therefore, a feature of Hinduism and other imperial cultures — and a profitable one too. There were, for example, some 400 women on the payroll at the Rajarajesvara temple in Tanjore in the 11th century. They were procured by priests who roamed the land in search of pretty young girls.

Doubtless the girls were seduced by a theology of mysticism, just as the widows who, as suttees, threw themselves on their dead husbands’ funeral pyres believed they were attaining spiritual purity, but the sexual economics of female exploitation provide a candid explanation of what was happening.

As do the statues on the temples. Frankly, they are arousing, even in these jaded times, being more explicit than the photos in today’s telephone booths. In short, a millennium ago the temples of India were brothels — they may have been more than that, but they were brothels too — and they advertised their wares as brothels always have. The erotic temple statues of India remind us, therefore, that kings and priests — like politicians today — have always been despots.

http://www.timesonline.co.uk/tol/comment/c...ticle642206.ece

இணைப்பிற்கு நன்றி குறுக்கு....

நீங்கள் ஒரு ஆள்த்தான்... எங்கயோ இருந்து தேடிப்புடிச்சிட்டியல் உந்தக்கட்டுரையை... :icon_idea::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி குறுக்கு....

நீங்கள் ஒரு ஆள்த்தான்... எங்கயோ இருந்து தேடிப்புடிச்சிட்டியல் உந்தக்கட்டுரையை... :icon_idea::lol::lol:

குறுக்கண்ணை உந்த விசயத்தில கண்ணில விளக்கெண்ணை விட்டெல்லோ பாத்துக்கொண்டிருக்கிறார்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸ் தான் கண்ணுக்குள்ளே விளக்கெண்ணை விடுவது நல்ல விசயம். ஆனால் மற்றவர்களையெல்லோ விளக்கெண்ணை என்று கூப்பிடுகிறார். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் பலதாரமணத்தைப் பூர்த்தி செய்ய உருவான விபச்சாரங்கள் Written by பி.இரயாகரன்

தேவதாசி முறையை விபச்சார நிலைக்கு இட்டுச் சென்ற பார்ப்பனியம் தமது ஆணாதிக்க வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்ள இதை ஊக்குவித்தனர். உடல் சேர்க்கை மூலம் மோட்சத்தை அடையமுடியும் என்ற மதக்கோட்பாட்டை முதன்மைப்படுத்தி, பெண்ணைப் பக்தியின் பின்னால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர். தமிழில் ~தேவரடியாள்| (தேவ அடியாள்) என்ற சொல்லின் மொழி பெயர்ப்பே தேவதாசியானது. தேவதாசி முறை கி.பி. 19-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னால் இந்து மத ஆதிக்க வெற்றியின் விளைவாகியது. பார்ப்பன இரத்தத்தில் பிறப்பவர்கள் மட்டுமே அறிவையும், செல்வத்தையும் பெறுகின்ற இறைவன் அருள் கிடைக்கும் என்று கூறினர். அதைத் தாண்டி உருவான அறிவாளிகளைத் தமது உறவின் விளைவாகப் பிறந்தவர்கள் எனக் காட்டி, பெண்களைப் பாலியல் ரீதியில் சுரண்டினர். இன்று பாலியல் விடுதலையைச் சுதந்திரத்தின் அடிப்படை என்று எப்படிக் கூறுகின்றனரோ அப்படித்தான், பக்தியின் பின்னால் பார்ப்பனருடனான உடலுறவு பெண்ணின் மோட்சத்துக்கும், நிகழ் உலகச் செல்வத்துக்கும் திறவு கோள் என்று கூறி ஆணாதிக்கம் கொழுசாக வாழ்ந்தது. தஞ்சாவூரில் இருக்கும் பெரிய கோயிலில் ''400 தேவதாசிகள்"7 இருந்தனர்.

விபச்சாரம் என்பது ஆணாதிக்கத்தின் பலதார மணத்தின் ஒரு வடிவமாகும். இதை அடைவதில் ஆணாதிக்கம் பெண்ணைப் பலியிடவும் தயாராக இருந்தது. இந்த விபச்சாரம் பலவழியில் சமூக அங்கீகாரத்துக்கு உட்பட்டது. இந்த வகையில் இந்து மதம் ஊடாக விபச்சாரத்தை ஏற்படுத்தினர். இதை இறைவனின் கன்னிகை என்ற பெயரில் பார்ப்பனர்களும், அதிகார வர்க்கமும் அப்பெண்கள் மீது பாலியல் வக்கிரத்தைப் கோயிலில் வைத்தே புரிந்தனர், புரிகின்றனர். ஊரில் அழகான பெண்கள் மீது இந்த ஆணாதிக்கக் கூட்டத்தின் கண்பட்டால் அப்பெண் கடவுளின் கன்னிகையாக வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை.

இதையொட்டி, கடவுளின் பெயரில் விபச்சாரம் என்ற கட்டுரையில் பெண்கள் விபச்சாரத்துக்கும், சிறுவர்கள் ஓரினச் சேர்க்கைக்கும் பயன்படுத்தப் படுகின்றனர். (1.3.1990)6 கலாச்சாரம் என்ற பெயரில் ஐந்து தேவதாசிகளை 1997-இல், நேர்கண்டு கடவுளின் பெயரில் அமர்த்தியது. மீளவும் 1995-இல,; ஐந்து பேரை அமர்த்த ஒரிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் ஆலயம் முயற்சி செய்தது. (15.10.1995)6 தேவதாசி முறையை ஆந்திராவில் நடைமுறைப்படுத்தி அமுலில் உள்ளது அண்மையில் அம்பலமானது. 2 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இதற்குப் பலியிடப்பட்டது தெரிய வந்துள்ளது. இவர்கள் பார்ப்பனருக்கும், முக்கிய புள்ளிகளுக்கும் விபச்சாரத்துக்கு விடப்படுபவர்கள். அத்துடன் பரதம் என்ற நடனமும் இவர்களால் அவர்களுக்கு ஆடிக் காண்பிக்கப்படுகின்றது.20 (1.7.1999). இவை அண்மைக்கால இந்து ஆணாதிக்க ஆதாரச் செய்திகள் ஆகும்.

பெண்களின் விழிப்புணர்ச்சி, மதத்துக்கு எதிரான போராட்டம், பார்ப்பனியத்தின் அம்பலமாகி வரும் நிர்வாணம் போன்றன தேவதாசி ஒழிப்பை வேகப்படுத்தியது. ஆனால் ஆணாதிக்கம் அனுபவித்த சுகத்தை என்றுமே விட்டுக் கொடுக்க தயாராயில்லை என்பதை மேல் உள்ள ஆதாரம் காட்டுகின்றது. இப்பெண்கள் தமது உடலால் மட்டுமல்ல... ஆடல் - பாடல் ஊடாகவும் ஆணாதிக்கப் பிரிவை மகிழ்ச்சியூட்ட வேண்டியிருந்தது. இந்த வகையில் பரதம் என்ற நடனம் இவர்களின் கலையாக வளர்ந்தது. தேவதாசியின் ஒழிப்பு சட்டப்படி வந்து அமுல்படுத்தப்பட்ட பின் பார்ப்பனியம் தமது மனைவிகளை ஆட வைத்து இன்பம் காண அதைச் சுவீகரித்துக் கொண்டது.

ஆரம்பத்தில் கோயிலில் இறைவனை நோக்கியும், பார்ப்பனியத்தின் பாலியல் வக்கிரத்தை நோக்கியும் ஆடிய ஆட்டம் பின்னால் பாப்பாத்திகள் மட்டும் ஆடுவது மரபாகியது. இன்று இவை மெல்ல மெல்ல மேல்தட்டு வர்க்கத்தின் நடனமாக மாறியுள்ளது.

கோயிலுக்கு விடப்பட்ட பெண்களின் கண்ணீர் என்பது இந்து மதத்தின் வக்கிரமான ஆணாதிக்கமாகும். இதை இன்றும் கடைப்பிடிப்பதுடன், அதைக் கோரி நடைமுறைப்படுத்துவதையும் காணமுடிகின்றது. இந்து இராஜ்ஜியம் கோரும் இன்றைய இராமன் வானரங்களின் ஆட்சி பாசிசத்தில் அரங்கேறின் வேதாளம் மீள ஏறிய கதையாகவே மாறும்;. பெண்களின் விபச்சாரம் கோயிலின் மையத்தில் முழுமையாக நிறைவேற்றப்படும். இது இந்து இராஜ்ஜியத்தின் கனவும் கூட.

உலகமயமாதலை விரிவாக்கி ரஷ்யாவில் சுரண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்திய போது விபச்சாரம் சமூக அந்தஸ்து பெற்றுள்ளது. அங்கு மேல்நிலை கல்வி கற்கும் மாணவிகளிடையே செய்த ஆய்வில், 25 சதவீதமானோர் விபச்சாரத்தை ரஷ்ய வாழ்க்கையின் முக்கியமான அம்சமாகக் கருதுகின்றனர். 1990-இல், 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் கருச்சிதைவு ஐந்து வருடத்தில் இரட்டிப்பாகியுள்ளதை ஐக்கிய நாட்டுப் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. ஜனநாயகம் என்பது தனிச்சொத்துரிமை அமைப்பில், ஆணாதிக்கப் பலதார மணத்துக்குத் தேவையான இளமை கொண்ட விபச்சாரிகளை உருவாக்குவதே ஆகும். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தில் இதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆனால் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் இதுவே அடிப்படை மனித உரிமையும், சுதந்திரமுமாகும்.

1991-இல், பாகிஸ்தான் மனித உரிமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் 2 இலட்சம் வங்கதேசப் பெண்கள் பாகிஸ்தானில் கட்டாய விபச்சாரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளனர். தாய்லாந்தில் 15 முதல் 35 வயதுக்கு இடையில் உள்ளோரில் 8.2 சதவீதம் பேர் விபச்சாரத்தில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர

  • கருத்துக்கள உறவுகள்

இதை எழுதிய அதே கையால் இதை விடக் கேவலமாக எம் விடுதலைப் போராட்டத்தை உண்மை போல எழுதுபவர் இராயகரன். அவர் எழுதிய கட்டரைகளில் என்றைக்குமே பாசியப் புலி என்று தான் புலிகளைக் கொச்சைப்படுத்துபவர். அவரின் கட்டுரைக்கு அவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை... அது அவரின் வழமையான பிதற்றல்..

1. கோவிலில் தேவதாசி முறை தொடர்பாக முன்பும் ஒரு தடவை சொல்லியிருந்தேன். கோவிலுக்கென்று அக்காலத்தில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் நேர்ந்து விடப்பட்டிருந்தார்கள். அது சரியோ, பிழையா என்ற வாதம் ஒரு புறமிருக்க,( ஏனென்றால் பொளத்தம், கிறிஸ்தவம் உற்பட்ட அனைத்து மதங்களும் அவற்றைச் செய்து வருகின்றன) ஆண்கள் கூட அவ்வாறு தெர்டாற்றி வந்திருந்தார்கள். ஏன் இப்போது கூடப் பல கோவில்களில் ஆண்கள் சிலர் அதே வாழ்க்கையாக கோவில்களில் பூப்பறிப்பது தொடக்கம், மூலஸ்தானத்தில் பூசாரி கூடத் துணை நின்ற வழிபாடுகளுக்கு உதவியும் வருகின்றார்கள். அப்பர் கூட உழவாரப் பணியில் தான் ஈடுபட்டு வந்தார்.

எனவே இவ்வாறன நிலையில் தேவதாசி என்று வந்தது, எவ்வாறு எனில், அந்த நாட்டின் அரசன், நாட்டாமை, ஜமிந்தர்கள் வரை கோவிலில் உள்ள பெண்கள் மீது கண் வைத்து தன்னுடைய அதிகாரங்களைப் பாவித்து தங்களின் இச்சைகளைத் தீர்த்துக் கொண்டார்கள். அங்கே அதிகாரம் படைத்தவர்களாக இவர்கள் இருந்ததால் கோவில் நிர்வாகத்தால் ஒன்றுNமு எதிர்த்துச் செய்ய முடியவில்லை... பிற்பாடு இதுவே வழக்கமாகிப் போனது.

இந்த அரசர்கள், நாட்டமைகளின் கூத்து சொல்லி அடங்காது. திருமணம் ஆகிப் பெண்ணை முதலில் இவர்களின் வீட்டிற்குத் தான் அனுப்ப வேண்டும். எந்தப் பெண்ணின் மீது கண் வைத்தாலும் கதை சரி... இப்படிப்பட்ட அதிகாரம் மிக்கவர்களாகத் தான் இவர்கள் நடந்து கொண்டார்கள்...

வழமை போலத் திராவிடப் பித்துக்கள் நாயக்கர் போன்ற இதே வர்க்கச் சேர்ந்த அதிகாரம் பிடித்த சிலரின் வம்சக் கதையை மறைக்கவும், எல்லாப் பழியையும் பார்ப்பானி மீது போட்டுத் தாங்கள் தப்பிக்கவும் பார்க்கின்றார்கள்.

யாழ்பாணத்தில் வேளாளர் கூட இவ்வாறு அதிகாரம் பிடித்து நடந்து கொண்டிருக்கலாம்.

பணம்தான் தேவையாகவிருந்தால்?...

நான் சொன்ன தேவைகள் என்பது அவர்களின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய மட்டும் என்ற அர்த்தத்தில் மட்டுமே எடுத்தக் கொள்ளப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை எழுதிய அதே கையால் இதை விடக் கேவலமாக எம் விடுதலைப் போராட்டத்தை உண்மை போல எழுதுபவர் இராயகரன். அவர் எழுதிய கட்டரைகளில் என்றைக்குமே பாசியப் புலி என்று தான் புலிகளைக் கொச்சைப்படுத்துபவர். அவரின் கட்டுரைக்கு அவ்வளவு தூரம் மு இருக்கக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை... அது அவரின் வழமையான பிதற்றல்..

இருக்கட்டுமே . இக்கட்டுரை எனக்கு நியாயமாக படுகிறது. எழுதியவரை பேர் சொல்லி கூப்பிட வேண்டிய அவசியமில்லை. எப்படி ஒருவர் கருத்து எழுதும் போது மட்டும் பிதற்றல். உங்களுக்கு விருப்பமானவர்கள் எழுதும் போது மட்டும் நியாயம்? நீங்கள் என்ன சொல்வது ? யாழ் கள நேசங்கள் தமது கருத்துக்களை பகிரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கட்டுமே . இக்கட்டுரை எனக்கு நியாயமாக படுகிறது. எழுதியவரை பேர் சொல்லி கூப்பிட வேண்டிய அவசியமில்லை. எப்படி ஒருவர் கருத்து எழுதும் போது மட்டும் பிதற்றல். உங்களுக்கு விருப்பமானவர்கள் எழுதும் போது மட்டும் நியாயம்? நீங்கள் என்ன சொல்வது ? யாழ் கள நேசங்கள் தமது கருத்துக்களை பகிரட்டும்.

என்ன கதைக்கின்றீர்கள். நாங்கள் எப்பவாவது எம் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துபவர்களின் உதாரணதது்ககு சுப்பிரமணிய சுவாமி, சோ போன்றவர்களின் கட்டுரைகளுக்கு வக்காளத்து வாங்கியிருக்கின்றோமோ, எந்த அடிப்படையில் எழுந்தமானத்துக்கு இப்படிக் கதைக்கின்றீர்கள்.

என்னைப் பொறுத்தவரைக்கும் இராயகரன் தகுதியானவரல்ல. அவர் போன்ற எதிரிகளுக்கு மதிப்புக் கொடுப்பதையே தவிர்க்கவே விரும்புகின்றேன். உங்களுக்குக் கருத்துச் சொல்ல கொண்டு்ளள உரிமையைப் பொன்று என் கருத்தையும் தெளிவுபடுத்தினேன்.

எனவே தெளிவற்ற விதத்தில் மனதில் வஞ்சத்தை மட்டும் கொண்டபடி கருத்தெழுதிப் பழகாதீர்கள் நண்பரே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.