Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்றும் உன் அன்புக்காய்....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்றும் உன் அன்புக்காய்....

சிறு கதை....

படுக்கையில் இருந்து விழித்த பார்வதிக்கு இன்றும் பொழுது வழமைபோல் விடிந்தது. ஜன்னல் திரையை திறக்க வெளியே ஒரே பனிமூட்டமாய் தெரிய அந்தப் பனிப்புகாரில் தெரு விளக்குகள் மங்கலாகத்தெரிந்து கொண்டிருந்தது. ஆனால் அவளின் அறையோ யாழ்ப்பாண வெய்யில் போல் தக தகவென கொதித்துக்கொண்டிருந்தது.

யாழ்ப்பாண ஞாபகம் வரவே, இரண்டாம் கட்ட ஈழப்போரில் சிக்கி கணவரை இழந்த பின் தனது மூத்த மகள் மாலதியையும் கடைக்குட்டி கணேசையும் தூக்கிக்கொண்டு விமானக் குண்டுவீச்சுக்கும் செல் அடிக்குமாக பயந்து இங்கும் அங்குமாக ஓடித்திரிந்து குண்டுவீச்சில் தானும் தன் மகனுமாய் காயமும் பட்டதை நினைத்துக்கொண்டாள். தன் காயத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் மகன் கணேஸ் காயம் பட்டு கிடந்து துடித்ததை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் அவள் கண்களில் நீர் ஆறாகப் பெருகிவிடும்.

பின்னர் 96ம் ஆண்டளவில் இருந்த சொத்தெல்லாம் விற்று மகளைக் கலியாணம் கட்டிக்கொடுத்துவிட்டு மிகுதிப்பணத்தில் 15 வயது ஆகியிருந்த கணேஸை ஏஜென்சி மூலமாக லண்டனுக்கு அனுப்பியதையும் நினைத்து கண் கலங்கியவளாக முகம் கழுவப் போக ஆயத்தம் செய்ய..''பார்வதி யொஉர் ப்ரெஅக்fஅச்ட் ரெஅட்ய் '' என்ற குரல் கேட்டு அறைக்கு வெளியே எட்டிப்பார்த்து மெதுவாகச் சிரித்துவிட்டு ஓம் வாரன் என்ற தொனியில் தலையை அசைத்துவிட்டு பாத்து றூமுக்கு மெதுவாக தள்ளாடித் தள்ளாடிப் போனள் போனாள் பார்வதி.

பார்வதி கடந்த ஒருவருடமாக இருப்பது home என்று சொல்லும் முதியோர் காப்பகத்தில், அவளை மகன் கணேஸ் ஒன்றரை வருடம் முன்பு லண்டனுக்கு அழைத்ததும் அழைத்து 6 மாதத்தின் பின்னர் இங்கு கொண்டுவந்து சேர்த்ததும் தான் இங்கு படும் துன்பங்களை சிறிதும் கூட நினைத்துப்பார்க்க கூட நேரமில்லாமல் அவன் திரிவதையும் நினைத்து உள்ளூர கவலையடைந்தாள் பார்வதி.

தன் காலைச் சுற்றிக்கிடந்த கடைக்குட்டி காதலித்து ஓர் இந்தியப்பெண்ணை திருமணம் செய்து தனக்கு பேரப்பிள்ளைகள் பிறந்ததும் தன்னை அழைத்து, பின்னர் இங்கு கொண்டுவந்து சேர்த்ததையெண்ணி தினம் தினம் மனதில் அழுது கலங்குவாள். வாரத்துக்கு ஒருமுறை பேரப்பிள்ளைகளிடம் கூட்டிச்செல்வது பின்னர் கொண்டுவந்து விடுவதுமாக இருந்தான் கணேஸ்.

ஒவ்வொருமுறையும் மகனுடன் வெளியே செல்லும் போது பழகியோர் மற்றும் சொந்தங்களிடம் தன்னை மகன் காப்பகத்தில் வைத்துப் பராமரிப்பதாகவும் அதற்கு பெருமளவு பணம் செலவழிப்பதாகவும் தான் அங்கு ராணிமாதிரி இருப்பதாகவும் மகனின் புராணம் பாடிக்கொள்வாள் ஆனால் உள்ளுக்குள் அழுது கொண்டே.

அன்னிய இடம், அன்னிய மக்கள், உடலிலோ மனத்திலோ ஏற்படும் கஸ்ரங்களை சொல்லி உதவி கேட்க முடியாத அன்னிய பாஷை என்று பல சங்கடங்களுக்கு உள்ளாகியிருந்ததால் பார்வதியை மன அழுத்தம் மிகவும் நண்றாகவே பாதித்திருந்தது.

வேலை, விடுமுறை, பாட்டி, பங்ஷன் என்று திரிந்த கணேஸுக்கு அம்மாவின் கவலைகளை தெரிந்து கொள்ள முடியவில்லை பார்க்க வரும்போதெல்லாம் £100 கொடுத்துக் கொள்வான் மற்றும் விடுமுறை சென்றுவந்த படங்களைக் காட்டி மகிழ மகனின் சந்தோசத்தில் தானும் மகிழ்ந்துகொள்வாள்.

பார்வதி இவனை வெளி நாடு அனுப்பிவிட்டு மகள் மாலதியுடனும் பேரப்பிள்ளைகளுடனும் இருந்த சந்தோசத்தை இழந்து மகனுடன் இங்கு இருக்க வந்து இங்கு காப்பகத்தில் இருப்பதை அவளால் தாங்க முடியவில்லை. மகளும் பேரப்பிள்ளைகளும் இலங்கையில் என்ன கஸ்ரப்படுகிறார்களோ என நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு அடைப்பதாக உணருவாள். இருந்தும் சாவிலிருந்து தப்பிப் பிழைத்த தன் மகணை லண்டனுக்கு அனுப்பியதால் இன்று அவனென்றாலும் சந்தோசமாக இருப்பதையெண்ணி சந்தோசப்பட்டுக்கொள்வாள்.

இப்படியாக சோகங்களில் மூழ்கி இருந்த பார்வதிக்கு அடிக்கடி வருத்தம் வருவதும் உடல் நிலை மிகவும் மோசமாகிக்கொண்டு வருவதும் அவளாலேயே உணர முடிந்தது. இன்று ஏதோ மிகவும் சுகவீனப்பட்ட நிலையில் தன்னைப் பராமரிக்கும் பெண்மணியிடம் போய்..

'' மை..சன்...கணேஸ்..போன்..என்று..'' துண்டுதுண்டாய் ஆங்கிலத்திலும்.. கை பாஷையிலுமாக மகனிடம் கதைக்கவேண்டும் என சொல்லி முடிக்க பார்வதியை கவனிக்கும் அந்த பெண்மணியும்.

''மகனுடன் கதைக்க வேண்டுமா நான் அழைகிறேன் அவரை '' என் ஆங்கிலத்தில் கூறிவிட்டு கணேஸுக்கு போன் பண்ண, பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்த பார்வதிக்கு திடீரென வாந்தி வரவும் அங்கே வாந்தி எடுத்துவிட பார்வதி கடுமையாகச் சுகவீனமுற்று இருப்பதாய் உணர்ந்த லேடி உடனே கணேசுக்கு போன் பண்ணினாள். மாலை ஆகிவிட்டு இருந்ததனால் கணேஸும் வீட்டிலிருக்கவே போன் மணியடிக்கவே போனை எடுத்தவனுக்கு..

Mr கணெஸ் நான் பிரான்சிஸ் உங்கள் அம்மா சுகமில்லாமல் இருக்கிறா உடனடியாக வரமுடியுமா '' என

உடனே நிலமையின் தீவிரத்தை உனர்ந்தவன் உடனே..

''ஓ.கே நான் விரைவில் வருகிறேன்....'' என ஆங்கிலத்தில் பதிலளித்துவிட்டு உடனே பிள்ளைகளையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு காரில் காப்பகத்துக்கு புறப்பட்டான். பாதி வழி சென்றவனுக்கு மறுபடியும் போன்...

''Mr கணேஸ் உங்கள் அம்மாவுக்கு மாரடைப்பு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டோம், அங்கே போகவும்..'' எனவும் கணெஸும் பதறியடித்தபடி ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.

ஆஸ்பத்திரிக்கு அவன் போய் சேர்ந்ததும் அவனின் தாய் பார்வதி குற்றுயிராக கிடந்ததை கண்டவனுக்கு கண்களால் நீர் வடிய, பார்வதிக்கு மேஜர் அட்டாக் எனவும் ஒப்பரேசனுக்கு ஆயத்தப்படுத்துவதாகவும் தெரிவித்தார்கள்.

அரை குறையாய் முழித்திருந்த பார்வதி மகன் கணேஸ் வருவதைக்கண்டதும் மனதில் கொஞ்சம் தெம்பு வந்தவளாக கட்டிலிலிருந்து எழும்ப முற்பட...

''அம்மா.. அம்மா..கிடவுங்கோ..எழும்பவேண்ட

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

நன்று இளங்கவி ........இயந்திர உலகிலே தாய் பாசம் மறந்த உள்ளங்கள் ..இருக்கத்தான் செய்கின்றன . ஆழமான நெஞ்சை தொடும் கதை . ஆங்கில பதம் வரும் ஒரு இடத்தில் சிறு தடங்கல் முடிந்தால் திருத்தவும் .அக்கா

பாராட்டுக்கள் இளங்கவி. உங்கள் கதைகள் மிகவும் அருமையாக உள்ளன. நீங்கள் மேலும் பல கதைகளை எழுதவேண்டும். முக்கியமாகத் தாயகம் சம்பந்தமான மேலதிகக்கதைகளை எதிர்பார்க்கிறேன். :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா. நீங்கள் சொன்ன பிழையை வெகு விரைவில் திருத்துகிறேன்.

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழச்சிக்கு

உங்கள் பெயரிலேயே தமிழ் பற்று தெரிகிறது.....

நான் யாழில் இணைந்த நோக்கம் எனது படைப்புக்கள் எமது மக்களுக்கும், எமது தாய் நாட்டிற்கும், எமது தாய்மொழிக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதற்காகவே. நிச்சயம் உங்கள் விருப்பம் போல் தாயகம் சம்பந்தமான எனது படைப்புக்களைத் தருவேன்.

எனது கதையை ரசித்து நல்லது.....! :huh: என்று கூறியதற்கு மிக்க நன்றி தமிழச்சி.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இளங்கவி

தாய்மையின் தவிப்பை தளர்வில்லாத எழுத்து நடையில் எடுத்து வந்துள்ளீர்கள். நீண்ட நாட்களின்பின் யாழ்களத்தில் நுழைந்த எனக்கு நல்லதோர் விருந்தாக நல்லதொரு சிறுகதையை வாசிக்க வாய்ப்பளித்த இளங்கவிக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் கலைப்பயணம் வாழ்த்துக்கள்

மிகவும் நல்ல கதை இளங்கவி...

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் உங்கள் கலைப்பயணம்....ஊரில இருந்து வந்த அம்மா அப்படி நினைப்பது தப்பில்லை....அனால் இப்ப இளசுகளாக புலத்தில இருப்பவர்கள் கிழசுகளாகி வயோதிபர் மடத்திற்க்கு போகும் பொழுது தங்களை அந்த சுழழுகுக்கு எற்ற மாதிரி மாற்றி வழ்ந்தார்கள் என்றால் அவர்களுக்கு நிம்மதி.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kavallur kanmani

உங்களைப் போன்றோரின் பாராட்டுக்கள் தான் என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது. என் கதையைப் பாராட்டியதற்கு மிக்க நன்றிகள்.

இளங்கவி

mallikai vaasam

என் கதையைப் படித்ததற்கு மிக்க நன்றிகள்.

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தனுக்கு

மிகவும் உணர்ச்சிபூர்வமான தலைப்பையெடுத்து தராசின் முள்ளைப்போல் நடு நிலையாக கதையைச் சொல்லவேண்டியிருந்தது. தாயின் மனம் பாசத்தை நாடுவது உண்மை, அதே நேரம் பிள்ளைகளும் பல காரணங்களால் பாசத்தை காலங்கடந்தே புரிகிறார்கள். அப்படியான உள்ளங்களுக்கு இழந்து விட்டால் கிடைக்காத அன்பு தாயின் அன்பு என்று சொல்ல முயற்சித்தேன்.

உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி புத்தன்.

இளங்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.