Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழருக்கு நடுவிரல் காட்டிய சனத் ஜெயசூரியா!

Featured Replies

நண்பர்களே சனத் ஜெயசூரிய நடு விரலை காட்டியது எவ்வளவுக்கு உண்மையோ அவ்வளவுக்கு எமது பெடியள் களத்துக்கு உள் போய் மிகப்பெரிய அட்டகாசம் புரிந்து விளையாட்டை குழப்பியுள்ளார்கள். எமது சகோதரர்களின் அட்டகாசத்தால் தான் சனத் நடுவிரலை மீடியாவுக்கு தெரியாமலும் நாசுக்காக கையை காட்டினார் என்பது பல நண்பர்கள் ,உள்ளே சென்றவர்களின் நம்ப தகுந்த கருத்து. உள்ளே எம்மை விட பல சிங்களவர்கள் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் உட்பட பேசாமடந்தைகளாக இருந்தார்கள் என்பது தான் நிதர்சனம்.ஜெய சூரியா இனவாதியா இல்லையா என யாழ் கள உறுப்பினர்கள் நிர்ணயிக்கட்டும்..

அருமையான கருத்துக்களை வழங்கிய கிருபன், வசம்பு ,நிழலி, பல்லவன், ரகுநாதன், வெற்றிவேல் , மற்றும் பல நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

ஒரே ஒரு ஆதங்கம்: ஒரு சில பிறயன்களோ, அல்லது ஒரு சில விக்கிரமாகு கருணா ரட்ணாவால் எதையும் சாதிக்க முடியாது. அவ்வளவுக்கு சிங்கள மக்களின் நிலை. உ+ம்: தமிழ் செல்வன் அண்ணா இறந்த போது வெடி கொழுத்திய மக்களை உதாரணம் காட்ட முடியும் இவர்கள் எவ்வளவுக்கு இனவாதம் ஊட்டப்பட்டுள்ளார்கள் என.

நன்றி நுணாவிலான் உஙகள் கருத்திற்கு.

இங்கு ஜெயசூரியாவிற்கு இனவாதம் இருக்காது என்று எவரும் வாதாடவில்லை. அத்துடன் நீங்கள் கூறியது போல் ஜெயசூரியா நடு விரலை காட்டிய சம்பவமும் நடைபெற்றும் இருக்கலாம். ஆனால் அதற்காக இங்கே இணைக்கப்பட்ட படம் தவறானது என்பதைத் தான் பலரும் சுட்டிக் காட்டினார்கள். ஒரு வேளை ஜெயசூரியா நடுவிரலைக் காட்டிய போது அதனைப் படமெடுக்க முடியாமல் போனதால், இந்தப் படத்தை இணைத்து அதனைச் சிலர் ஆதாரப்படுத்த நினைத்தார்களோ தெரியவில்லை. ஆனால் தவறான ஒரு படத்தை இணைத்து அதன் மூலம் ஒரு செய்தியைப் பரப்ப முனைவது, அந்தச் செய்தியின் நம்பகத் தன்மையைத்தான் கேள்விக் குறியாக்கும்.

  • Replies 107
  • Views 15.1k
  • Created
  • Last Reply

ஜெயசூரியா ஆபாசமாக விரல் காட்டினாரா / இல்லையா என்று தெரியவில்லை.

ஆனால், களத்தில் கருத்து பதிபவர்கள் Century போட்டுவிட்டார்கள், கருத்துகளின் எண்ணிகையில்...

ஆட்டத்தில் யாருக்கு தான் வெற்றியோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் தவறான ஒரு படத்தை இணைத்து அதன் மூலம் ஒரு செய்தியைப் பரப்ப முனைவது, அந்தச் செய்தியின் நம்பகத் தன்மையைத்தான் கேள்விக் குறியாக்கும்.

ஒரு வேளை செய்தி பொய்யாக இருந்தால் கூட ஜெயசூரியா மீது பழி சுமத்துவதால் தமிழினத்துக்கு எதுவித நட்டமும் வரப்போவதில்லை.

ஆகவே நீங்கள் அழுதுவடிக்கத் தேவையில்லை.

Edited by காட்டாறு

ஜெயசூரியா ஆபாசமாக விரல் காட்டினாரா / இல்லையா என்று தெரியவில்லை.

ஆனால், களத்தில் கருத்து பதிபவர்கள் Century போட்டுவிட்டார்கள், கருத்துகளின் எண்ணிகையில்...

ஆட்டத்தில் யாருக்கு தான் வெற்றியோ?

எம்மவர்கள் வெறும் வாய்ச் சவடால்களிலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்க, வழமைபோல் வெற்றிக் கிண்ணத்தை இலங்கை அணியே தடடிச் சென்றுள்ளது.

ஒரு வேளை செய்தி பொய்யாக இருந்தால் கூட ஜெயசூரியா மீது பழி சுமத்துவதால் தமிழினத்துக்கு எதுவித நட்டமும் வரப்போவதில்லை.

ஆகவே நீங்கள் அழுதுவடிக்கத் தேவையில்லை.

ஆக நீங்களே ஒத்துக் கொள்கின்றீர்களா இது இட்டுக் கட்டப்பட்ட கதையென்று?? ஒருவர் மீது பொய்யாகப் பழி சுமத்துவதால் தமிழினத்திற்கு எதுவித நட்டமும் வரப் போவதில்லை என்று உங்களைப் போன்றவர்களின் நினைப்புக்களால்த் தான் தமிழினத்தை சந்தேகக் கணணுடனேயே பார்க்கும் நாடுகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நுணா அண்ணா சொன்னதைப்போலத் தான் நானும் கேள்விப்பட்டேன். நான் சனத் விரல் காட்டவில்லை என எங்கும் வாதாடவில்லை, இணைக்கப்பட்டுள்ள படத்தினைப் பற்றியதுதான் விவாதம்.

இங்கு அநேகர் கொழும்பிலே பலகாலம் வசித்த அனுபவத்திலே கருத்துக் கூறியுள்ளீர்கள். நான் கொழும்பிலே பிறந்தாலும் சில வருடங்களின் பின்னர் யாழ் குடாவில் தான் எனது வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்திருக்கிறேன். எனக்கு சிங்களவர்களின் பழக்கம் உங்களளவிற்கு இல்லை என்பது உண்மைதான் :) . எனக்கு நேர்ந்த அனுபவங்களின் அடிப்படையிலேயே கருத்துக் கூறியுள்ளேனே ஒழிய இங்கு கருத்து எழுதும் அனைவரிலும் எனக்கு வயது மிகக்குறைவு ஏன்னெனில் நான் 80களின் நடுப்பகுதிக்குப் பின்னர் பிறந்தவன். உங்கள் எல்லார் போலவும் எனக்கும் மண் பற்று நிறைய உண்டு. உங்களில் எத்தனை பேர் ஆயுதம் தூக்கியிருகிறீர்கள், ஒரு AK 47 load பண்ணி நிலை எடுக்கத் தெரியுமா அல்லது RPG ஒன்றை குறிக்கு அடிப்பீர்களா, வாக்கியில் எதிரிக்கு விளங்காமல் உங்களுடைய நிலையை இன்னொரு போராளிக்கு கூறமுடியுமா எனக்க கேட்டால் எத்தனை பேர் ஆம் எனகூறுவீர்கள்? சமாதான காலத்தின் இறுதி வருடத்தில் யாழ் மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கு வன்னியிலுள்ள எரிமலையில் போர்ப் பயிற்சி அளிக்கப்பட்டது. விடயம் தெரிந்தவர்களுக்கு விளங்கும் என நினைக்கிறேன். அந்தவகையில் எமது பாடசாலையிலும் பலர் எரிமலைக்கு போய் வந்திருக்கிறோம். ஆயுதத்தைத் தொட்டவன் என்ற ரீதியில் கூறுகிறேன் சில விடயங்களின் நடைமுறைச் சாத்தியம் பற்றி பலர் சிந்திப்பதில்லை என்பது தெளிவு :rolleyes: . உலகின் அரசியல் பொருளாதார நிலைகளைக் கவனத்தில் கொள்ளாது செய்யப்படும் எதுவித செயற்பாடுகளும் வெற்றியளிக்கப்போவதில்லை. ஆயுதத்தால் செய்யப்படும் போர் மூலம் கிடைக்கும் வெற்றியை விட அரசியல் ரீதியில் கிடைக்கும் வெற்றியின் நீண்டகால நன்மைகள் அதிகம்.

இலங்கையிலுள்ள சிங்கள பௌத்த மக்களில் மிகச்சிலரைத் தவிர ஏனையோர் பேரினவாதிகளாகவே இருக்கின்றனர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவ்வளவு காலமாக யுத்தத்தைத் தொடர்ந்தோம், இனியும் தொடர்வோம் என்பதில் தவறில்லை, ஆனால் உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் மாறவேண்டிய தேவை இருக்கிறது. ஆரம்பத்தில் யாழ் குடாநாட்டைக் கைப்பற்றும் நிலையில் இருந்த புலிகள் ஏன் அதைக் கைவிட்டு சமாதானத்தின் திசையில் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது? அதற்க்கான அழுத்தங்கள் எங்கிருந்து கொடுக்கப்பட்டது? சமாதான காலத்தில் தான் புலிகளைப் பிரிப்பதில் சிங்களம் வெற்றிகண்டதோடு பல சர்வதேச நாடுகள் புலிகளை சமாதான காலத்திலேயே தடை செய்தன என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆயுதக் கப்பல்களும் அழிக்கப்பட்டது இக்காலத்தில் தான். அந்தவகையில் சர்வதேச, வல்லாரசு நாடுகளின் அழுத்தங்களுக்கு இரு தரப்புகளும் உள்ளாகும் என்பது எழுதப்படாத நியதி. இப்போது ஏற்பட்டிருக்கும் இந்தியாவின் இலங்கை அரசின் மீதான அழுத்தமும் இது போன்றதே.

இவ் விவாதத்திலும் இனவாதிகளை மற்ற முடியாது எனப்பலர் கூறியுளீர்கள், உண்மைதான் ஆனால் சர்வதேச அழுத்தங்களிற்கு இலங்கை போன்ற ஒரு அரசு நிச்சயம் பணிந்துபோயே ஆகவேண்டும். இங்கு கருத்து எழுதும் பலர் போர் தான் இனப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு எனக்கொருகிறீர்கள். நீங்கள் வெளிநாட்டுப் பிரஜைகளாக இருக்கிறீர்கள், உங்களுடைய நெருங்கிய உறவினர்களும் புலத்தில் இருப்பார்கள். ஆனால் என் போன்ற எத்தனையோ பேர்களின் இரத்த உறவுகள் ஈழத்திலே இருக்கிறார்கள். சிலர் கூறியுளீர்கள் ஈழம் தான் எனது நாடு. புலம்பெயர் தேசமோ இலங்கையோ அல்ல என்ன. உங்களுக்கு ஓர் வேண்டுகோள் நீங்கள் இங்கிருந்து கருத்து எழுதுவதால் எவ்வித பலனும் ஏற்ற்படப்போவதில்லை, பணம் அனுப்புவதாலோ புலத்திலே ஆர்ப்பாட்டங்கள் செய்வதாலோ சர்வதேசம் செவி கொடுக்க வாய்ப்பில்லை. இவ்வளவுகாலம் செவி கொடுக்கவில்லை இனி செவி கொடுப்பார்களா? எனவே நான் எனது பல்கலை படிப்பையும் நிறுத்திவிட்டு உடனடியாக வன்னி சென்று ஆயுதம் எடுக்கத் தயார் நீங்கள் எத்தனைபேர் வருவீர்கள்? அல்லது இலகுவாக புலம் எனது நாடல்ல இலங்கையும்மல்ல ஈழம் தான் ஆனால் மற்றவர்கள் அதைப் போராடிப் பெருத்தரட்டும் நாங்கள் ஆறுதலாகப் போவோம் என்ற நினைப்பில் இருக்கப்போகிறீர்களா? போராட்டத்திற்கு இப்பொது பணம் தேவையில்லை, அனுப்பினால் கிடைப்பதும் மிகக்கடினம். ஆயுதங்களும் தாராளமாக உண்டு ஆனால் களத்திலே நிறு அடிபடத்தான் ஆக்கள் தேவை. எத்தனை பேர் இதற்குத் தயார்? விவாதத்திற்கு சிறிது வெளியே போனதற்கு மன்னிக்கவும் சில விடயங்களை விவாதத்தின் அடிப்படைத்தன்மையை தெளிவுபடுத்தக் கூற விரும்பினேன்.

"ஒரு வேளை செய்தி பொய்யாக இருந்தால் கூட ஜெயசூரியா மீது பழி சுமத்துவதால் தமிழினத்துக்கு எதுவித நட்டமும் வரப்போவதில்லை"

அப்படியாயின் அரசுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? தமிழனின்ட தலையில குண்ட போட்டிட்டுதெரிவு செய்யப்பட்ட புலிகளின் இலக்குகள் மீது வெற்றிகரமாகத் தாக்குதல் எண்டு பொய் சொல்லுறவங்கள் தானே.

தும்பளையான், இங்கு பலர் ஆயுதம் ஏந்திப் போராடத் தயாராக இல்லாவிட்டாலும், தமது தார்மீகக் கடமையைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் அந்தக் கடமையையும் செய்யாமல், செய்கிறவர்களையும் குற்றம், குறை சொல்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். அவர்களுக்காகத் தான் இவ்வாறான விடயங்களை வெளிக்கொணர முனைகிறோம். இத்தனைகால போராட்டத்தில், நாம் இதுவரை சிறீலங்கா அரசிற்கெதிராகத்தான் ஆர்ப்பாட்டங்களை நடத்திவந்தோம். ஆனால், சிறீலங்கா அரசாங்கமோ, தமிழர் வாழும் அத்தனை நாடுகளிலும் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, தமிழருக்கெதிராகப் பல சதி வேலைகளைச் செய்து வந்திருக்கிறது. அதில் இந்தக் கிரிக்கெட் ரீமும் அடங்கும். இனிமேலும், பொறுக்கமுடியாமல்தான் நாம் சிங்களவர்களுக்கெதிரான போராட்டங்களையும் தொடங்கியிருக்கிறோம். இனிமேலும் எமது மக்கள் அல்லல்படக்கூடாது என்பதற்காகத்தான் நாம் இவ்வாறு செய்யத் தொடங்கியிருக்கிறோம். இதுவரைகாலமும் நாமும், போரையும் விளையாட்டையும் வேறு வேறாகத்தான் பார்த்து வந்தோம். ஆனால், அப்படிப் பிரித்துப் பார்க்கமுடியாத ஒரு நிலையை சிங்கள அரசாங்கம் எமக்கு ஏற்படுத்திவிட்டது. சிறீலங்கா அரசிற்கெதிராக, எமக்குக் கிடைக்கும் அனைத்துவழிகளிலும் நாம் போராடவேண்டும். அதுவும் எமது விடிவை துரிதப்படுத்த உதவலாம். சிறுதுரும்பும் பல்லுக்குத்த உதவும்.

நுணாவிலான், நீங்கள் குறிப்பிட்டதுபோல, அங்கு பார்வையாளர்களாகச் சென்றவர்கள், குழப்பத்தை உண்டுபண்ணுவதற்காகவேகூடச் சென்றிருக்கலாம். அதோடு, அன்று நடந்த போட்டி, சிறீலங்கா அணிக்கும் கனடிய அணிக்கும் என நினைக்கிறேன். அப்படிப் பார்க்கும்போது, அவர்கள் சிறீலங்கா அணிக்கெதிராகக் கூச்சல் போட்டிருக்கலாம். அன்று கனடிய அணிக்கு கூடுதல் ஆதரவு இருந்திருக்கலாம். அதனைப் பொறுக்கமுடியாத சனத் ஜெயசூரிய தனது விரலைக் காட்டியிருக்கலாம். எங்கள் வீட்டிலும் சிங்கள அணிக்கு ஆதரவானவர்கள் இருக்கிறார்கள். 20-20 போட்டியின்போது, எங்கள் வீட்டிலும் இரவிரவாக விழித்திருந்து பார்த்தார்கள்தான். அதேபோல், சிங்கள அணி இங்கு வரப்போவதாக அறிந்தபோதும் மகிழ்ந்தார்கள்தான். ஆனால், இவ்வாறான கவனயீர்ப்பு நடக்கப்போவதாக அறிந்தபின்னர், அவர்கள் கவனயீர்ப்பில்தான் பங்கு கொண்டார்களே தவிரப் போட்டிக்குச் செல்லவில்லை. எமது இப்போதைய தேவை எமது மக்களின் விடிவுதான். காலத்தின் தேவையை விளங்கி உங்கள் ஆதரவைத் தொடருங்கள். தூற்றுவார் தூற்றட்டும் நாங்கள் எங்கள் கடமையைத் தொடர்வோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக நீங்களே ஒத்துக் கொள்கின்றீர்களா இது இட்டுக் கட்டப்பட்ட கதையென்று?? ஒருவர் மீது பொய்யாகப் பழி சுமத்துவதால் தமிழினத்திற்கு எதுவித நட்டமும் வரப் போவதில்லை என்று உங்களைப் போன்றவர்களின் நினைப்புக்களால்த் தான் தமிழினத்தை சந்தேகக் கணணுடனேயே பார்க்கும் நாடுகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகின்றது.

ஒரு வேளை என்று தான் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் பலரிடம் விசாரித்தறிந்ததிலிருந்து ஜெயசூரியா தமிழரை நோக்கி விரல் காட்டியது உண்மை என்பது எனக்குத் தெரியும்.

ஆனால் ஜெயசூரியாவின் பாசக்காரப் பயலுகளான உங்களின் அழுதுவடிப்புகளுக்கு ஆறுதல் சொல்லத்தான் அப்படிச் சொன்னேன்.

ஒரு வேளை என்று தான் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் பலரிடம் விசாரித்தறிந்ததிலிருந்து ஜெயசூரியா தமிழரை நோக்கி விரல் காட்டியது உண்மை என்பது எனக்குத் தெரியும்.

ஆனால் ஜெயசூரியாவின் பாசக்காரப் பயலுகளான உங்களின் அழுதுவடிப்புகளுக்கு ஆறுதல் சொல்லத்தான் அப்படிச் சொன்னேன்.

இங்கே நான் ஜெயசூரியா பற்றி எழுதவில்லை. குறிப்பிட்ட அந்த படத்தைப் பற்றித் தான் எழுதியுள்ளேன். இவ்விடயத்தைப் பற்றி பல தடவை குறிப்பிட்டு எழுதினாலும், உங்களைப் போன்றவர்களுக்கு விளக்கம் குறையும் போது, உண்மயைச் சொல்பவர்கள் அழுது வடிவதாகத் தான் தோன்றும். முதலில் உங்கள் தாடையில் வடிவதை துடைத்துக் கொள்ளுங்கள். :):rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.