Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதையும் கானமும்!!

Featured Replies

  • தொடங்கியவர்

எங்கடை சோழியும் ரெக்கோடிங் பார் திறந்துட்டார் போலை கிடக்கு :rolleyes:

எல்லாம் முடிஞ்சு இப்ப இந்த திறப்பில வந்து நிக்குதெண்டுறியள்.. இப்போதைக்கு இதுதான் கொண்டு நடத்த சுலபமா இருக்கு.. :lol:

  • Replies 99
  • Views 10k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நீ பூவென்றால் என்ன

பொன் என்றால் என்ன

உன் வார்த்தைகளில் நான்

மயங்குவேனா, என்ன?!

http://www.esnips.com/doc/eb7295f6-8f16-41...2/Kunguma-Poove

  • தொடங்கியவர்

உணர்வோடும் உயிரோடும் பிணைந்தவனே

உறவாகி அத்தானென வந்தவனே

என் நம்பிக்கையும் வாழ்க்கையும் நீதானே

எந்நாளும் நமக்கினி இணை கிடையாது!

http://www.esnips.com/doc/840f32e9-83d8-44...anum-Naanthaane

  • தொடங்கியவர்

அன்பா! தாமதமேன்

அன்பும் பண்பும் கொண்ட பெண்ணை

எண்ணிப் பார்த்ததுண்டா?

சிந்தனை ஏன்?

பயமா? வெறுப்பா? சினமா?

http://www.esnips.com/doc/5b6885a3-15a4-43.../Mathanaa-Ezhil

இணைக்கப்பட்ட பாடல்களை கேட்க இல்லை. வாசிக்க பொன்மொழிகள் மாதிரி நல்லாய் இருக்கிது. உங்கட சொந்த சரக்கையும் பாத்து இறக்கிவிடுங்கோ.

சோழியன் அண்ணை,

எனது net இணைப்பு மெதுவாக இருப்பதால் தற்போது பாடல்களை கேட்க முடியாதுள்ளது. :(

தொடருங்கள் உங்கள் பழைய பாடல் தொகுக்கும் பணியை.

Edited by Mallikai Vaasam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோழியன் அண்ணை,

எனது net இணைப்பு மெதுவாக இருப்பதால் தற்போது பாடல்களை கேட்க முடியாதுள்ளது. :)

தொடருங்கள் உங்கள் பழைய பாடல் தொகுக்கும் பணியை.

மல்லிகைத் தோட்டம் எந்த நாட்டில இருக்கு....???

மல்லிகைத் தோட்டம் எந்த நாட்டில இருக்கு....???

அது தோட்டம் இல்லை அக்கா. பூந்தோட்டம். பலவித மலர்கள் நிறைந்த பூந்தோட்டம்.

தோட்டத்துக்கும், பூந்தோட்டத்துக்கும் வேறுபாடு உண்டு. :)

  • தொடங்கியவர்

இணைக்கப்பட்ட பாடல்களை கேட்க இல்லை. வாசிக்க பொன்மொழிகள் மாதிரி நல்லாய் இருக்கிது. உங்கட சொந்த சரக்கையும் பாத்து இறக்கிவிடுங்கோ.

அப்படீன்னுறீங்க.. எதுக்கும் பாடலைக் கேட்டுட்டு பிறகு வாசிச்சுட்டு.. இன்னொரு முறை என்ன செய்யணும்னு சொல்லுங்க.. :D

சோழியன் அண்ணை,

எனது net இணைப்பு மெதுவாக இருப்பதால் தற்போது பாடல்களை கேட்க முடியாதுள்ளது. :)

தொடருங்கள் உங்கள் பழைய பாடல் தொகுக்கும் பணியை.

தொடங்கியாச்சு.. ஒரு கரை காணத்தானே வேணும்..!! :lol:

மல்லிகைத் தோட்டம் எந்த நாட்டில இருக்கு....???

இந்த இடத்தில உப்பிடி எல்லாம் கேக்குறது சரியில்லை.. எதுக்கும் கீழுள்ள பாடலைக் கேட்டுட்டு நான் சொல்லுறது சரியில்லையா அல்லது பிழையில்லையான்னு சொல்லுங்க. :)

http://www.esnips.com/doc/3865d7c0-249d-4a...iyillai-Meththa

ஏற்கனவே வாழ்க்கை வெறுத்துபோய் இருக்கிறன். இந்தக்கேவலத்தில உந்தப்பாடலுகளையும் கேட்டுப்போட்டு அழுது ஒப்பாரி வைக்கச் சொல்லுறீங்களோ? பாடல்கள் மனம் நல்ல நிலையில இருந்தால் கேட்கலாம். பொன்மொழிகள் - வெறும் எழுத்துக்கள் எண்டால் சும்மா வாசிக்கிறது சிக்கலாக இருக்காது. :)

  • தொடங்கியவர்

ஏற்கனவே வாழ்க்கை வெறுத்துபோய் இருக்கிறன். இந்தக்கேவலத்தில உந்தப்பாடலுகளையும் கேட்டுப்போட்டு அழுது ஒப்பாரி வைக்கச் சொல்லுறீங்களோ? பாடல்கள் மனம் நல்ல நிலையில இருந்தால் கேட்கலாம். பொன்மொழிகள் - வெறும் எழுத்துக்கள் எண்டால் சும்மா வாசிக்கிறது சிக்கலாக இருக்காது. :)

முரளி சார்! அப்போ இந்தப் பாடலையாவது கேளுங்கள் (எனக்காக.. ப்ளீஸ்..)

http://www.esnips.com/doc/5229d776-3c38-4e...nthaathe-Maname

இப்போ வாழ்க்கை வெறுக்காதென நினைக்கிறேன். :)

வருந்தாதே மனமே... வீணே வருந்தாதே மனமே...

நல்ல கருத்தான பாடல்... :o

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சோழியன் .அருமையான பாடல் . துன்பத்தில் இருப்பவன் மனதை தேற்றி முன்னேறுவது தான் வாழ்கை ,இன்பமாக இருப்பவன் துன்பமும் வரலாம் என்று எண்ணாது இது தான் வாழ்கை என்று இருப்பான் . இரண்டுமே உள்ளது தான் வாழ்கை என்று பாடம் சொல்லும் பாடல் ."வருந்தாதே மனமே ." பதிவுக்கு நன்றி .நிலாமதி

முரளி சார்! அப்போ இந்தப் பாடலையாவது கேளுங்கள் (எனக்காக.. ப்ளீஸ்..)

http://www.esnips.com/doc/5229d776-3c38-4e...nthaathe-Maname

இப்போ வாழ்க்கை வெறுக்காதென நினைக்கிறேன். :o

இந்தப்பாடலை நாலுதரம் இப்ப கேட்டன். எதுவித மாற்றமும் இன்னமும் ஏற்பட இல்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பாட்டை கேட்டேன். ஒரு மாற்றமும் வந்த மாதிரி இல்லையே :o

  • தொடங்கியவர்

முரளி சாருக்கும் கறுப்பி அம்மாவுக்கும் இரவில தூக்கத்துக்கு ஆயத்தமாகும்போதாவது இந்த பாடல் வரிகள் நினைவில் வந்து சில சேதிகள் சொல்லி, வாழ்க்கைக்கு நம்பிக்கை தரும்!! :o:)

மல்லிகைவாசத்திற்கும் சகோதரி நிலாமதிக்கும் நன்றி.

உதுகளைக் கேட்கிறதிலும் பார்க்க இரவு கந்தசட்டி கவசம் கேட்டுக்கொண்டு படுத்தால் டொங்கு டொக்கு டொங்கு டொக்கு எண்டு தபேலா சத்தமும், தாளமும், வீணையுமா கேக்க நல்லா நித்தா வரும். சுருண்டு படுக்க வசதியாய் இருக்கும்.

சும்மா ஆக்கள் பொன்மொழிகள் எண்டு ஆயிரம் பொய்யுகள் சொல்லுவீனம். எல்லாத்தையும் கேட்டு நம்பிக்கை வளர்க்க ஏலுமோ? வாசிக்கிறதுக்கு நேர்த்தியாக வார்த்தைகளால கோர்க்கப்பட்ட வசனங்கள் அழகாய் இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் நிஜவாழ்க்கையில அவை பிரயோசனமாய் இருக்கும் எண்டு நான் நினைக்க இல்லை :)

  • தொடங்கியவர்

உதுகளைக் கேட்கிறதிலும் பார்க்க இரவு கந்தசட்டி கவசம் கேட்டுக்கொண்டு படுத்தால் டொங்கு டொக்கு டொங்கு டொக்கு எண்டு தபேலா சத்தமும், தாளமும், வீணையுமா கேக்க நல்லா நித்தா வரும். சுருண்டு படுக்க வசதியாய் இருக்கும்.

சும்மா ஆக்கள் பொன்மொழிகள் எண்டு ஆயிரம் பொய்யுகள் சொல்லுவீனம். எல்லாத்தையும் கேட்டு நம்பிக்கை வளர்க்க ஏலுமோ? வாசிக்கிறதுக்கு நேர்த்தியாக வார்த்தைகளால கோர்க்கப்பட்ட வசனங்கள் அழகாய் இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் நிஜவாழ்க்கையில அவை பிரயோசனமாய் இருக்கும் எண்டு நான் நினைக்க இல்லை :blink:

வாழ்ந்து பார்த்தவர் சொல்ல வந்துட்டார்.. கேட்டுக் கொள்ளுங்க! :wub: இந்த பாடலைபற்றி உங்க அப்பாவிடமோ அம்மாவிடமோ கருத்துக் கேளுங்க.. அவங்கதான் வாழ்க்கையை வாழ்ந்து அனுபவப்பட்டவங்க..

சொல்லீட்டன்.. உங்க வயதை.. அந்தந்த வயதுக்கான உணர்ச்வுகளை எல்லாம் தாண்டித்தான் வந்திருக்கன்.. சும்மா எடுத்தெறிஞ்சு பேசாம 'றெஸ்பெக்டு' தரணும்.. ஆமா.. !! :blink: என்ன.. உங்கடை உணர்வுகள் சேட்டு களிவாணுக்கை மெத்தைல இருக்கும்.. எங்கடை உணர்வுகள் சாரம் பெனியனோடை பாயிலை இருந்திருக்கும்.. அடிப்படை ஒன்றுதானே.. போடுற வேசங்கள்தான் வித்தியாசம்.. :unsure:)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அண்ணா

நீண்ட நாட்களாக காணவில்லை எனது கணனியும் மக்கர் பண்ணியது.

உங்கள் ஆக்கங்களை காண ஆவல்வணக்கம் .

  • கருத்துக்கள உறவுகள்

சோதர,சோதரி(முரளி, கறுப்பி)! இதிலெல்லாம் உடனடியாகப் பலன் தெரியாது. தொடர்ந்து மூன்று மாதம் கேட்டால்தான் புலன் மாறிப் பலன் தெரியும். அப்பவும் தெரியாவிட்டால் இன்னொரு மூன்று மாதம் தொடர்ந்து கேட்டால் அது பழகிவிடும்!!!

தொடருங்கள் சோழியன் வரி;த்துக்கள்!!!

  • தொடங்கியவர்

கருத்துகளுக்கு நன்றி! தொடருவோம்!!

  • தொடங்கியவர்

புரிதலும் தெளிதலும் உணர்தலும் இருந்தால்

கவலைகள் ஏன் மனிதா?

வருவதும் போவதும் பொருட்டென நினைத்தால்

சோகங்கள் ஏன் மனிதா?

இருப்பதைத் தொலைத்து ஆசையை வளர்த்து

ஆவலாய் பறந்தால் கவலை வரும்

வாழ்க்கையைத் தெரிந்து வரவினை சேர்த்து

ஆளாய் இருந்தால் இனிமை வரும்!!

http://www.esnips.com/doc/156099fc-af04-47...laatha-Manithan

இன்பத்திலும் துன்பத்திலும்

என்னருகே இருப்பவளே!

என் எண்ணங்களின் எழுச்சிகளை

என்றும் இரசிப்பவளே!

உன்னன்பில்தானே என் இயல்புகள்

இற்றைவரை மாற்றமடையாமல்..!

http://www.esnips.com/doc/000f21bc-11a8-48...444/Engey-Neeyo

சோதர,சோதரி(முரளி, கறுப்பி)! இதிலெல்லாம் உடனடியாகப் பலன் தெரியாது. தொடர்ந்து மூன்று மாதம் கேட்டால்தான் புலன் மாறிப் பலன் தெரியும். அப்பவும் தெரியாவிட்டால் இன்னொரு மூன்று மாதம் தொடர்ந்து கேட்டால் அது பழகிவிடும்!!!

தொடருங்கள் சோழியன் வரி;த்துக்கள்!!!

பாடை கட்டி அனுப்பி வைக்கிறன் எண்டுதான் நிக்கிறீங்கள் ரெண்டு பேரும். விதி யாரை விட்டு வச்சிது. சரி பரவாயில்ல. நான் கேட்காட்டியும் பிறகு நீங்கள் போட்ட பாட்டுக்களை அம்மா, அப்பாவுக்கு போட்டுக்காட்டி அவையள் என்ன சொல்லுறீனம் எண்டு கேட்டு உங்களுக்கு சொல்லிறன். :huh:

ஆனால்... நான் பொய்யுக்கு சொல்ல இல்லை. உண்மையில நான் கந்தசட்டி கவசம் சிலது கேட்கேக்க அது என்னமோ தெரியாது.. ஒரு இனப்புரியாத ஈர்ப்பு.. மனதுக்கு இனிமையாய் நிம்மதியாய் இருக்கும் எப்படியான நிலமையில இருந்தாலும்.

நான் சின்னனில அதை வாசிச்சு இருக்கிறன். அதை எழுதினவர் வேற ஒரு நாளைக்கு ஏதோ முப்பத்தாறு தரம் சொன்னால் பலன் கிடைக்கும் எண்டு போட்டு இருந்தார். அதுக்காவும் முந்தி சின்னனில ஊரில கஸ்டப்பட்ட காலத்தில அதை சொல்லி இருக்கிறன். ஏதோ கந்தன் கருணை திறந்ததாலதான் என்னமோ ஊரில பொறிவெடிகளில இருந்து தப்பி எம்பெருமான் மயில் வாகனமாம் சிறீ லங்கன் எயார் லைன்சில் ஏறி தப்ப வாழ்க்கையை காப்ப்பாற்ற முடிஞ்சிது. :rolleyes:

  • தொடங்கியவர்

மகா கனம்பொருந்திய பக்த கோடிகளில் ஒருவராகிய முரளி அவர்களே! அதாகப்பட்டது எம்பெருமான் முருகவேள் தேவயானை வள்ளி சமேதராய் பறந்த மயில்வாகனத்தில் தப்பி வந்ததாக கூறுகிறீர்கள்.. ஆலயம் மனித உருவத்தின் வடிவில் ஏன் அமைந்திருக்கிறதென்றால்.. ஆலயத்தில் உருவமாக வீற்றிருக்கும் எம்பெருமான் மனிதருள்ளும் வீற்றிருக்கிறான் என்பதை உணர்த்துவதற்காகத்தான். அதாவது மனம்தான் தெய்வம்.. எனவே உங்கள் மனம் என்ற முருகப்பெருமானின் கிருபையால் தாங்கள் கனடா தேசம் வந்து கரைசேர்ந்துவிட்டீர்கள்!! :huh::rolleyes:

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

".எங்கிருந்தாலும் அவள் வாழ்க "......... நல்ல பாடல் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.