Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருப் பெயர்ச்சி பலன்கள்! (6.12.2008)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குருப் பெயர்ச்சி பலன்கள்!

நிகழும் சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 21-ம் நாள் சனிக்கிழமை (6.12.2008) காலை மணி 10.34-க்கு சுக்லபட்சம், நவமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் வஜ்ஜிரம் நாம யோகம் கௌலவம் நாமகரணம் நேத்திரம், ஜீவனம் நிறைந்த மரண யோகத்தில் உத்யோக வேளையில் குரு பகவான் தனுசு ராசியிலிருந்து தனது நீச்ச வீடான மகர ராசிக்குள் நுழைகிறார். 15.12.2009 வரை இங்கிருந்து பலன்களை தருவார்.

இந்த மகர குரு மக்களின் அலட்சியத்தைப் போக்கி, விழிப்பு உணர்வை ஏற்படுத்தும். தெய்வ நம்பிக்கை மற்றும் சிக்கனத்தை அதிகரிக்க வைக்கும். நாடாளுபவர்களின் தன்னலப் போக்குக்கு தகுந்த பதிலடி தருவதுடன், தீவிரவாதத்தை ஒடுக்கும்.

மேஷம்:

தன்மானக்காரர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் அமர்ந்து கொண்டு பல வகைகளில் முன்னேற்றங்களையும் அந்தஸ்தையும் அளித்த குரு பகவான், 6.12.2008 முதல் பத்தாவது வீட்டுக்குள் நுழைந்து பலன் தரப் போகிறார். 'பத்தாம் வீடு என்றாலே பதவி பறிபோகும்' என்று பயப்படாதீர்கள். மே, ஜூன், ஜூலை ஆகிய மூன்று மாதங்களில் அதிசாரம் மற்றும் வக்ரகதியில் 11-ம் வீட்டுக்கு குரு செல்வதால் அந்தக் கால கட்டங்களில் கெடுபலன்கள் குறையும். 22.3.2009 முதல் 15.12.2009 வரை குரு பகவான் உங்கள் ராசிநாதன் செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டத்தில் செல்வதால் உங்களின் செல்வாக்கு குறையாது. என்றாலும், உங்களின் பிரபல யோகாதிபதியான குரு பகவான் பாதகாதிபதியான சனி வீட்டில் தொடர்ந்து செல்வதால் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். மே, ஜூன், ஜூலை மாதங்களில் புது முயற்சிகள் வெற்றியடையும்.

கன்னிப் பெண்களுக்கு உயர் கல்வியில் வெற்றி உண்டு. மாணவிகளின் அறிவுத் திறன் மற்றும் கேள்வி கேட்கும் ஆற்றல் கூடும்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். போட்டிகள் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் பனிப் போர் வரும். கமிஷன், எலெக்ட்ரானிக்ஸ், உணவு விடுதி மற்றும் மருந்து வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் சச்சரவுகள் வந்து நீங்கும். வேலைப்பளு அதிகரிக்கும். அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வேண்டி வரும். கலைஞர் கள் பரபரப்புடன் இருந்தாலும் ஆதாயம் இருக்காது.

இந்த குருப் பெயர்ச்சி உங்களை பண்பட வைப்பதுடன் பணப்புழக்கத்தையும் தருவதாக அமையும்.

--------------------------------------------------------------------------------

ரிஷபம்:

நேருக்கு நேர் பேசுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் அமர்ந்திருந்து அடுக்கடுக்காக அவமானங்களையும் அலைச்சல்களையும் கொடுத்து வந்த குரு பகவான், இப்போது உங்கள் ராசியின் ஒன்பதாவது வீட்டில் நீச்சம் பெற்று அமர்கிறார். 'ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு' என்ற பழமொழிக்கேற்ப இனி நன்மைகள் உங்களைத் தேடி வரும். குருவின் அருட் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால், உடல் நலம் சீராகும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். கணவர் அனுசரணையாக நடந்து கொள்வார். குடும்பத்தில் பணவரவு சரளமாக இருக்கும். மகளுக்குப் பொருத்தமான வரன் அமையும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாமனார், மாமியார் உதவுவார்கள். உடன்பிறந்தோர் பாசமழை பொழிவார்கள்.

மே, ஜூன், ஜூலை மாதங்களில் எதிலும் எச்சரிக்கை தேவை. உறவினர் பகை, உடல்நலக் குறைவு ஏற்படக் கூடும். குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீட்டைப் பார்ப்பதால், வராது என நினைத்திருந்த பணம் கைக்கு வரும்.

கன்னிப் பெண்களுக்கு தடைபட்ட திருமணம் நடக்கும். உடல் உபாதைகள் விலகும். மாணவி களுக்கு சோர்வு, மறதி, அலட்சியம் விலகும். ஜெயிக்க வேண்டும் என்னும் ஆர்வத்துடன் படிப்பார்கள்.

வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பாக்கிகள் வசூலாகும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள்.

உத்யோகத்தில் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மேலதிகாரிகள் மதிப்பார்கள். சம்பளம் உயரும். கலைஞர்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். இந்த குரு மாற்றம், உங்களை பல ஏமாற்றங்களில் இருந்து விடுபட வைப்பதுடன் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவதாகவும் அமையும்.

--------------------------------------------------------------------------------

மிதுனம்:

மிதவாதிகளே! இதுவரையில் உங்களின் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருந்த குரு நல்லதையும் கெட்டதையும் கலந்து தந்தாரே! இப்போது குரு உங்கள் ராசிக்கு மறைவு வீடான எட்டாம் வீட்டுக்குச் செல்கிறார். உங்களுக்கு பாதகாதிபதியான குரு, பாதக ஸ்தானத்தை விட்டு மறைவதால் நன்மையே கிட்டும். கணவருடன் இருந்த சண்டை, சச்சரவுகள் எல்லாம் நீங்கும். அவரின் வருமானம் உயரும். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். மகனின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். உடன் பிறந்தோர் ஆதரவாக இருப்பார்கள்.

மே, ஜூன், ஜூலை மாதங்களில் தொட்டதெல்லாம் துலங்கும். ஆனால், 'எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே' என்ற ஆதங்கம் இருக்கும். வெளிநாடு சென்று வருவீர்கள். இந்த வருடத்தில் யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.

கன்னிப் பெண்களுக்கு நினைத்தபடி திருமணம் முடியும். வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.மாணவிகளே.. குரு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் படிப்பில் ஆர்வம் பிறக்கும். விளையாட்டு, இலக்கியப் போட்டிகளில் பரிசு உண்டு.

வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஏற்றுமதி - இறக்குமதி, வாகன வகைகள் மற்றும் உணவுத் தொழில் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கடின உழைப்பை மேலதிகாரி பாராட்டுவார். ஆனாலும், முக்கிய ஆவணங்களைக் கையாளும்போது நிதானம் தேவை. வருட மத்தியில் பதவி உயர்வு உண்டு. கலைத் துறையினருக்கு விருது கிடைக்கும். மூத்த கலைஞர்கள் பாராட்டுவார்கள்.

இந்த குரு மாற்றம் கொஞ்சம் அலைக்கழித்தாலும், ஆதாயத்தையும் சேர்த்துத் தருவதாக அமையும்.

--------------------------------------------------------------------------------

கடகம்:

கடமை தவறாதவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஆறில் அமர்ந்திருந்த குரு பகவான் இப்போது ஏழாம் வீட்டில் நுழைகிறார். முடங்கிக் கிடந்த நீங்கள் முன்னேறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் சுருங்கியிருந்த முகம் மலரும். கணவர் அன் பாக இருப்பார். வருமானம் உயரும். பழைய கடனில் ஒரு பகுதி தீரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகனுக்கு நிரந்தர வேலை கிடைக்கும்.

வீடு கட்ட லோன் கிடைக்கும். நாத்தனாருக்கு திருமணம் கைகூடும். பாராமுகமாக இருந்த உறவினர்கள், நண்பர்கள் இனி உங்களைத் வருவார்கள். தாழ்வு மனப்பான்மை விலகும். புது வண்டி வாங்குவீர்கள். மே, ஜூன், ஜூலை மாதங்களில் காரியத் தடைகள், அலைச்சல், தூக்கமின்மை, பணப் பற்றாக்குறை, வீண் பழி ஆகியன வந்து நீங்கும்.

கன்னிப் பெண்களுக்கு கல்யாணம் சிறப்பாக நடக்கும். சோர்வு, அசதி, உடல் நலக் கோளாறு நீங்கும். மாணவிகளே.. இனி அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

வியாபாரத்தை விரிவுபடுத்த பண உதவி கிடைக்கும். அனுபவம்மிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். பூமி, கட்டடம், உணவு, மின்சார வகைகளால் லாபம் கிட்டும். கூட்டுத் தொழிலில் பிரிந்து சென்ற பங்குதாரர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் ஓடி ஒடி வேலை பார்த்தும் உதாசீனப்படுத்தப்பட்டீர்களே! அந்த நிலை இனி மாறும். வெகு நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு இப்போது கிடைக்கும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் மட்டும் கவனம் தேவை. கலைஞர்களுக்கு வருமானம் உயரும். வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவார்கள்.

இந்த குருப் பெயர்ச்சி அடிவாரத்தில் இருந்த உங் களை உச்சியில் உட்கார வைத்து அழகு பார்க்கும்.

--------------------------------------------------------------------------------

சிம்மம்:

வாய்மையாளர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து ஓரளவு அமைதியைத் தந்த குரு பகவான், இப்போது ஆறாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். 'சகட குருவாச்சே! சங்கடங் களைத் தருவாரே!' என்று வருந்த வேண்டாம். மே, ஜூன், ஜூலை மாதங்களில் வக்ரகதியில் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டுக்கு குரு செல்வதாலும் உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 22.3.2009 முதல் 15.12.2009 முடிய குரு பகவான் செல்ல இருப்பதாலும் கெடு பலன்கள் குறையும்.

குரு உங்கள் தனஸ்தானத்தைப் பார்ப்பதால், பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகளும் அலைச்சலும் வருட முற்பகுதியில் வந்து நீங்கும். வருட மத்தியில் உங்கள் மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மக னுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.

வக்ரமாகவும் அதிசாரமாகவும் குரு பகவான் மே, ஜூன், ஜூலை மாதங்களில் 7-ம் வீட்டுக்குச் சென்று உங்கள் ராசியைப் பார்ப்பதால், அந்தக் காலகட்டத்தில் தாம்பத்யம் இனிக்கும். உறவினர்களால் இருந்த பிரச்னைகளும் நீங்கும். புது சொத்து வாங்குவீர்கள். பழைய வாகனத்தை விற்று விட்டு நவீன வாகனம் வாங்குவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை கவனமாகக் கையாளுங்கள். மற்றவர்களை நம்பி எதிலும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.

கன்னிப் பெண்களுக்கு இருந்த தடுமாற்றம் விலகும். தடைபட்ட உயர் கல்வி தொடரும். உடல் உபாதைகள் வந்து நீங்கும். மாணவிகள் அன்றன்றைய பாடங்களை உடனுக்குடன் படித்து முடிப்பது நல்லது. அலட்சியப் போக்கு, வீண் விவாதம் வேண்டாம்.

வியாபாரத்தில் வருட மத்தியில் புது முதலீடுகள் செய்யலாம். வேலையாட்களை அரவணைத்துப் போங்கள். மூலிகை, மருந்து, கமிஷன் வகைகள் மூலம் லாபம் வரும். உத்யோகத்தில் உங்களின் தகுதி உயரும். உயர் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு சின்னச் சின்ன மன சங்கடங்கள் மூத்த கலைஞர்களுடன் வந்தாலும், முன்னேற்றம் தடைபடாது. இந்த குரு மாற்றம் அலைச்சலையும், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையையும் தந்தாலும், கூடவே வருமானத்தையும் வளர்ச்சியையும் தரும்.

--------------------------------------------------------------------------------

கன்னி:

கனிவாகப் பேசுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலாவிதத்திலும் புரட்டிப் போட்ட குரு பகவான், 6.12.08 முதல் 5-ம் வீட்டுக்கு வருவதால் அடிப்படை வசதிகள் பெருகும். குடும்பத்தில் குழப்பம், பணப் பற்றாக்குறை நீங்கும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேருவீர்கள். நல்ல வேலை கிடைக்கும்.

நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் அழகு கூடும். சோர்ந்த முகம் மலரும். ராசிக்கு 9-ம் வீட்டை குரு பார்ப்பதால் விலை உயர்ந்த நகைகள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். கல்யாணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உடல் நலக் கோளாறுகள் நீங்கும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வெளிச்சம், தண்ணீர் வசதி உள்ள வீட்டுக்கு மாறுவீர்கள்.

மே, ஜூன், ஜூலை மாதங்களில் வக்ரகதியில் குரு 6-ம் வீட்டுக்கு செல்வதால் அந்தக் காலகட்டத்தில் வீண் செலவுகள், அலைச்சல், குடும்பத்தில் சலசலப்புகள், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

கன்னிப் பெண்களுக்கு உற்சாகம் பிறக்கும். பெற்றோர் மீது பாசம் உண்டாகும். தள்ளிப் போன கல்யாணம் விரைந்து முடியும். முறிந்த காதல் மீண்டும் அரும்பும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருப்பவர்களுக்கு வேலை உடனே கிடைக்கும். தடைப்பட்ட உயர் கல்வி தொடரும். மாணவிகளுக்கு இருந்த மறதி நீங்கும். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். ஆசிரியர்கள் பாராட்டும்படி அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. வேலையாட்கள் அனுசரித்து நடப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். மே, ஜூன், ஜூலை மாதங்களில் புது முதலீடுகளில் கவனம் தேவை. புது பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பார்கள். பதவி உயரும். உங்களின் நிர்வாகத் திறமையும் கூடும். சிலருக்கு பெரிய நிறுவனத்தில் புது வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு மதிப்புக் கூடும்.

ஆக மொத்தம், இந்த குருப் பெயர்ச்சி தலைநிமிர்ந்து நடக்க வைப்பதுடன் செல்வத்தையும் சேர்த்துத் தரும்.

--------------------------------------------------------------------------------

துலாம்:

நியாயத் தராசுகளே! இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்துகொண்டு, தடங்கலையும் தயக்கத்தையும் தந்த குரு பகவான் 6.12.2008 முதல் 15.12.2009 வரை உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்வதால் நீங்கள் கவனமாகத்தான் இருக்க வேண்டும். உங்கள் ராசிக்கு 3, 6-ம் வீடுகளுக்கு அதிபதியான குரு பகவான் நீசமாகி அமர்வது ஒரு வகையில் நல்லதுதான். இருந்தாலும் கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு வரும். செலவுகளும் அலைச்சலும் துரத்தும். உடல் உபாதைகள் வந்து நீங்கும். உயர் கல்வி - வேலைவாய்ப்பு பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். பணப்புழக்கம் சுமாராகத்தான் இருக்கும். வாகனம் தொந்தரவு தரும்.

உங்களின் ஜீவனாதிபதியான சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் 21.1.2009 முதல் 21.3.2009 வரை குரு செல்வதால் திடீர் பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். குரு பகவான் அதிசாரம் மற்றும் வக்ரகதியில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் ராசிக்கு 5-ம் வீட்டில் சென்று அமர்வதால் எதிலும் வெற்றி உண்டு. கணவர் உங்களைப் புரிந்து கொள்வார். பிள்ளைகளும் பொறுப் பாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். விலகிச் சென்ற உறவினர்களும் நண்பர்களும் வலிய வந்து பேசுவார்கள். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக அமையும். பழைய வாகனத்தைத் தந்து விட்டு புது வாகனம் வாங்குவீர்கள்.

கன்னிப் பெண்களே.. புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். உயர் கல்வியை போராடி முடிப் பீர்கள். மாணவிகளே.. அறிவியல் மற்றும் மொழிப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

வியாபாரத்தில் வருடத்தின் முற்பகுதி லாபகரமாக இருக்கும். கமிஷன், உணவு, இரும்பு வகைகள் லாபம் தரும். உத்யோகத்தில், 'இரவு பகலாக உழைத்தும் நல்ல பெயர் இல்லையே..' என்ற ஆதங்கம் அடிமனதில் இருக்கும். புது வேலை கிடைக்கும். கலைஞர்களே.. பொறுமை தேவை.

இந்த குரு மாற்றம் அவ்வப்போது உங்களை சோதித்தாலும் இறுதியில் சாதிக்கவும் துணை புரியும்.

--------------------------------------------------------------------------------

விருச்சிகம்:

பகுத்தறிவுவாதிகளே! இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் இருந்த குருபகவான் ஓரளவு மன நிம்மதியையும் பணப் புழக்கத்தையும் கொடுத்தார். ஆனால், இப்போது மூன்றாவது வீட்டுக்குள் நுழைகிறார். தன பூர்வ புண்யாதிபதியான குரு பகவான் மறைவதால் இரண்டு, மூன்று முறை முயன்று சில காரியங்களை முடிக்க வேண்டி வரும். குரு ஏழாவது வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையாது. கணவர் அன்பாக இருப்பார். ஆனாலும் பழைய பிரச்னைகளால் சண்டை, சச்சரவுகள் வரலாம். குரு உங்கள் ஒன்பதாவது வீட்டைப் பார்ப்பதால் பணவரவு குறையாது. லாப வீட்டையும் பார்த்துக் கொண்டிருப்பதால் புது முயற்சிகள் வெற்றியடையும். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். உங்கள் மகளுக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் வரன் அமையும்.

6.12.2008 முதல் 20.1.2009 வரை உங்களின் ஜீவனாதிபதியான சூரியனின் சாரத்தில் குரு செல்வதால் அந்தக் காலகட்டத்தில் புது வேலை கிடைக்கும். பூர்விகச் சொத்துகள் வந்து சேரும். 21.1.2009 முதல் 21.3.2009 வரை உங்களின் பாதகாதிபதியான சந்திரனின் சாரத்தில் செல்வதால் வீண் செலவுகள் வரும்.

22.3.2009 முதல் உங்கள் ராசிநாதனான செவ்வாயின் நட்சத்திரத்திலேயே குரு செல்வதால் அரசால் அனுகூலம் உண்டு. ஆனால் மே, ஜூன், ஜூலை மாதங்களில் குரு உங்கள் ராசிக்கு 4-வது வீட்டுக்கு செல்வதால் அந்தக் காலகட்டத்தில் மன உளைச்சல் வந்து நீங்கும்.

கன்னிப் பெண்களே.. உயர் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உடல் உபாதைகள் வந்து நீங்கும். முக்கிய முடிவுகளை பெற்றோரின் ஆலோசனையின்றி செயல்படுத்த வேண்டாம். மாணவிகளே.. விடைகளை எழுதிப் பாருங்கள். விளையாட்டில் பதக்கம் பெறுவீர்கள்.

வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் மன நிம்மதி கிட்டும். அதிகாரிகள் செய்யும் தவறுகளை வெளியில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். இந்த குரு மாற்றம் 'தன் கையே தனக்கு உதவி' என்பதை உங்களுக்குப் புரிய வைக்கும்.

--------------------------------------------------------------------------------

தனுசு:

தாராள மனசுக்காரர்களே! இதுவரை உங்கள் ராசிக்குள்ளேயே உட்கார்ந்த குரு உங்களைப் பல விதங்களில் பதம் பார்த்தாரே.. அவமானங்களையும் இழப்புகளையும் சந்தித்தீர்களே! இப்போது உங்கள் ராசிக்கு தன வீட்டில் வந்து அமரும் குரு பகவான், இனி தொட்டதை எல்லாம் துலங்க வைப்பார். கணவர் அன்பாக இருப்பார். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். செலவுகள் அதிகம் இருந்த நிலை மாறி, இனி உங்கள் கையில் பணம் தங்கும். பிள்ளை பாக்கியம் கிடைக்கும். குரு மாற்றத்தால் சகோதரர்கள் பாச மழை பொழிவார்கள். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.

குரு பகவான் ஆறாவது வீட்டைப் பார்ப்பதால் கடன் பிரச்னைகள் தீரும். குரு பகவான் ஏழாவது பார்வையால் எட்டாவது வீட்டைப் பார்ப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. கணவரின் வருமானம் உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாட்டில் நல்ல வேலை கிடைக்கும்.

6.12.2008 முதல் 20.1.2009 வரை பாக்யாதிபதி சூரியனின் சாரத்தில் குரு செல்வதால் விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். 21.1.2009 முதல் 21.3.2009 வரை அஷ்டமாதிபதி சந்திரனின் சாரத்தில் செல்வதால் வீண் பழி, பொருள் இழப்புகள், வேலைச்சுமை வந்து நீங்கும். 22.3.2009 முதல் 15.12.2009 முடிய உங்கள் பூர்வ புண்யாதிபதி செவ்வாயின் சாரத்திலேயே குரு செல்வதால் பூர்விகச் சொத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள்.

கன்னிப் பெண்களுக்கு உயர்கல்வியில் வெற்றி உண்டு. வேலை கிடைக்கும். மாணவிகளே.. உங்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மதிப்பெண் உயரும்.

வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சம்பளம் அதிகரிக்கும். பதவி உயரும். கலைஞர்களே.. நீங்கள் பாராட்டு மழையில் நனைவீர்கள்.

இந்த குரு மாற்றம் அதிரடி வளர்ச்சியையும் மன நிறைவையும் தருவதாக அமையும்.

--------------------------------------------------------------------------------

மகரம்:

கவரிமான்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் பதுங்கியிருந்த குரு பகவான்.. விரய வீட்டில் அமர்ந்து பல இன்னல்களையும் மனக் குழப்பங்களையும் ஏற்படுத்திய குரு பகவான்.. இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே நுழைவதால் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும். கணவருடன் சண்டை வரலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.

6.12.2008 முதல் 20.1.2009 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், 21.1.2009 முதல் 21.3.2009 வரை திருவோண நட்சத்திரக்காரர்களும், 22.3.2009 முதல் 15.12.2009 முடிய உள்ள காலகட்டத்தில் அவிட்டம் நட்சத்திரக்காரர்களும் எதிலும் பொறுமையுடன் நிதானமாக செயல்படுவது நல்லது. வக்ரம் மற்றும் அதிசாரத்தில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் குரு பகவான் உங்கள் ராசியை விட்டு விலகி தன ஸ்தானத்துக்கு செல்வதால் அந்தக் காலகட்டத்தில் திடீர் யோகம் உண்டு. கொடுத்த கடன் திரும்பி வரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

குரு பகவான் பூர்வ புண்ணிய வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்வார்கள். சோர்வு நீங்கி, துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள்.

குரு பகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் அதிக நாட்கள் செல்வதால் அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு ஏமாற்றம், உடல் நலக் கோளாறு ஏற்படும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் புது முயற்சிகள் வெற்றியடையும். வீடு கட்டும் பணி முடிவடையும். கன்னிப் பெண்களுக்கு தடைப்பட்டு வந்த திருமணம் வருட மத்தியில் கூடிவரும். மாணவிகளே.. படிப்பில் கவனத்தைத் திருப்புங்கள்.

வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். உத்யோகத்தில் எல்லாப் பணிகளையும் உங்கள் தலையில் கட்டுவார்கள். கலைஞர்களே.. மறைமுகப் பாராட்டுகள் உண்டு.

ஆகமொத்தம், இந்த குரு மாற்றம் புதிய பாதைக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

--------------------------------------------------------------------------------

கும்பம்:

சத்தியம் தவறாதவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இருந்த குரு பகவான் ஓரளவு நன்மை தந்தார். அர்த்தாஷ்டமச் சனியால் இருந்த பிரச்னையைக் குறைத்தார். தற்சமயம் குரு பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் நுழைகிறார். இனி காசை செலவழிப்பதில் கவனமாக இருங்கள். கணவர் உங்களை நம்பி சில பொறுப்புக்களை ஒப்படைப்பார். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.

குரு பகவான் உங்களின் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். புது வீடு கட்ட லோன் கிடைக்கும். வாகன வசதி பெருகும். என்றாலும் குரு ஆறாவது வீட்டையும், எட்டாவது வீட்டையும் பார்ப்பதால் அதிக செலவுகளும் அலைச்சல்களும் ஏற்படும்.

மே, ஜூன், ஜூலை மாதங்களில் உங்கள் ராசிக்குள்ளேயே குரு நுழைவதால் முன்கோபம், உடல் சோர்வு, சலிப்பு வந்து நீங்கும். அவிட்ட நட்சத்திரக்காரர்கள் அந்தக் காலகட்டத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னிப் பெண்களே.. எதிலும் அவசர முடிவுகளை தவிர்த்து, பெற்றோரின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது. உடல் நலக் கோளாறு வந்து விலகும். மாணவிகளே.. அறிவியல், வரலாற்றுப் பாடங்களை ஒன்றுக்குப் பல முறை படிப்பதுடன் விடைகளை எழுதியும் பார்ப்பது நல்லது.

வியாபாரத்தில் அளவாக முதலீடு செய்து புதுத் தொழில் தொடங்குங்கள். சில முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். அயல்நாட்டுத் தொடர்பு வகையில் ஆதாயம் அதிகரிக்கும்.

உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைஞர்களே.. மூத்த கலைஞர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

இந்த குரு மாற்றம் சிக்கல்களை உருவாக்கினாலும் அதிலிருந்து விடுபடும் ஆற்றலையும் உழைப்பால் உன்னத நிலையையும் அடைய வைக்கும்.

--------------------------------------------------------------------------------

மீனம்:

இரக்க சுபாவம் உள்ளவர்களே! இதுவரை உங்கள் ராசிக்குப் பத்தாம் இடத்தில் உட்கார்ந்து கொண்டு உங்களை பலவகையிலும் பாடாய்ப் படுத்தினார் குரு பகவான். அவர் இப்போது லாப வீட்டுக்கு வருவதால், சமயோஜித புத்தியால் எதையும் சாதிப்பீர்கள். தொட்டதெல்லாம் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வாங்கியிருந்த கடனை அடைப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். கணவர் உங்களைக் கொண்டாடுவார். மாமியார்- மாமனார் மெச்சுவார்கள்.

உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டை குரு பார்ப்பதால் ராட்சச பலமடைவீர்கள். மனச் சோர்வும் உடல் அசதியும் முற்றிலும் நீங்கும். மூன்றாம் வீட்டின் மீது குருவின் பார்வை பதிவதால் சகோதர, சகோதரிகள் உதவுவார்கள். ஐந்தாம் வீட்டை குரு பார்ப்பதால் சந்தான பாக்கியம் உண்டு.

மே, ஜூன், ஜூலை மாதத்தில் உங்கள் ராசிக்கு அதிபதியான குரு 12-ம் இடத்தில் மறைவதால் வேலைச் சுமை அதிகரிக்கும். சேமிப்புகள் கரையும். சகோதரிக்கு திருமணம் முடியும். உங்களின் தன பாக்யாதிபதியான செவ்வாயின் சாரத்தில் குருவின் நகர்வு அதிக நாட்கள் இருப்பதால் உங்கள் ரசனைக்கேற்ற வீடு, மனை வாங்குவீர்கள்.

கன்னிப் பெண்களே.. காதலித்தவரை கைபிடிப்பீர்கள். புது நிறுவனத்தில் நல்ல வேலையில் அமர்வீர்கள். மாணவிகளே.. படிப்பில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். நினைவாற்றல் கூடும். ஆசிரியர்களால் நீங்கள் மிகவும் பாராட்டப் படுவீர்கள்.

வியாபாரத்தில் இருந்த தேக்கங்கள் இனி மறையும். இரும்பு, உணவு, புரோக்கரேஜ் போன்ற தொழிலில் உள்ளவர்கள் கொடிகட்டிப் பறப்பீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

உத்யோகத்தில் உங்களின் திறமையை மேலதிகாரி கண்டு வியப்பார். சம்பளம் கூடும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கதவைத் தட்டும். இந்த குரு மாற்றம் சகல சௌபாக்கியங்களையும் தருவதோடு நீண்ட நாள் கனவுகளை நனவாக்கும்.

விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

நாத்தனாருக்கு திருமணம் கைகூடும்.

நாத்தனாருக்கு தான் ஏற்கனவே கலியாணமாகி விட்டதே ?

இந்த குருப் பெயர்ச்சி அடிவாரத்தில் இருந்த உங் களை உச்சியில் உட்கார வைத்து அழகு பார்க்கும்.

இந்த குருப்பெயர்ச்சியோடை நான் இனி உச்சிக்குதான் .

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புதுக்கார் வருமாம். வராட்டி.. இதைப் பிரசுரித்த கறுப்பி அக்கா தான் கார் வாங்கித்தர வேண்டி இருக்கும்.

இப்படியே ஒவ்வொரு தடவையும் நாங்கள் சும்மா இருக்க.. குருவும்.. சனியும் வியாழனும்.. இடம்பெயர்ந்து எல்லாத்தையும் செய்வினம் என்றால் என்ன ஒரு சுகம். அவை எமக்காக இடம்பெயர்ந்து கஸ்டப்படேக்க நாம் ஏன் கஸ்டப்பட வேண்டும். :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா நம்பவே முடியலை எனக்கு இனிமல் இப்படியா :D ? சுப்பண்ணை நீ எங்கயோ போகப்போறயடா இப்பிடித்தான் எல்லாரும் சொல்லி கடைசியாக நொந்து நூலைபோனது தான் மிச்சம் :lol: ,சரி யார் மாறினாலும் மாறட்டும் ஆனால் நான் மாறமாட்டன். என்னை தாராள மனசு என்று சொல்லுறாங்களே ம் எல்லாருக்கும் குடுத்து குடுத்துதான் கடைசியா எனக்கு ஒன்றுமில்லாமல் நிக்கிறன். குரு பகவான் அதிரடியா வாராரு உன்னை எங்கயோ கொண்டுபோக போராரு என்று யாரோ சொல்லுறது கேட்குது :wub:

இந்த குரு மாற்றம் 'தன் கையே தனக்கு உதவி' என்பதை உங்களுக்குப் புரிய வைக்கும்.

இது சாத்திரமோ, தத்துவமோ? :D

இன்னொரு சந்தேகம். இந்த குரு, சனி ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு மாறும்போது, இவை குரு, சனி Numerology, Astrology எல்லாம் பார்த்து தான் மாறுறவையோ, இங்கு சில மனிதர்கள் செய்வதைப்போல? :wub:

Edited by Mallikai Vaasam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புதுக்கார் வருமாம்.

நீங்க ஸ்டைலா ஏறி வலம் வருவீங்களே அந்தக் காருக்கு என்னாச்சு? :wub::D

எனக்கு புதுக்கார் வருமாம். வராட்டி.. இதைப் பிரசுரித்த கறுப்பி அக்கா தான் கார் வாங்கித்தர வேண்டி இருக்கும்.

இப்படியே ஒவ்வொரு தடவையும் நாங்கள் சும்மா இருக்க.. குருவும்.. சனியும் வியாழனும்.. இடம்பெயர்ந்து எல்லாத்தையும் செய்வினம் என்றால் என்ன ஒரு சுகம். அவை எமக்காக இடம்பெயர்ந்து கஸ்டப்படேக்க நாம் ஏன் கஸ்டப்பட வேண்டும். :)

ஏன் நெடுக்ஸ்..அவர்களும் ஈழதமிழர்களா? எப்போது பார்த்தாலும் இடம்பெயர்கின்றார்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க ஸ்டைலா ஏறி வலம் வருவீங்களே அந்தக் காருக்கு என்னாச்சு? :lol::lol:

இது எங்கையோ சிக்குதே? confused0006.gif:)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குரு மாற்றம் தமிழர் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்துமா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குரு மாற்றம் தமிழர் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்துமா?

இப்படித்தான் வசி , 2008 ம் ஆண்டு பிறக்கும் போது புது வருட பலனைப்பற்றி சொல்லும் போது ,

ஒரு சாத்திரியார் தொலைக்காட்சியில் இந்தவருடம் தமிழ் ஈழத்துக்கு ஒரு விடிவு வரும் என்று சொன்னவர் .

2008 ம் ஆண்டு முடிய இன்னும் 6 கிழமை தான் இருக்கிறது .

எனக்கு புதுக்கார் வருமாம். வராட்டி.. இதைப் பிரசுரித்த கறுப்பி அக்கா தான் கார் வாங்கித்தர வேண்டி இருக்கும்.

இப்படியே ஒவ்வொரு தடவையும் நாங்கள் சும்மா இருக்க.. குருவும்.. சனியும் வியாழனும்.. இடம்பெயர்ந்து எல்லாத்தையும் செய்வினம் என்றால் என்ன ஒரு சுகம். அவை எமக்காக இடம்பெயர்ந்து கஸ்டப்படேக்க நாம் ஏன் கஸ்டப்பட வேண்டும். :rolleyes:

நெடுக்காலபோவான் சிம்ம ராசியோ?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் சிம்ம ராசியோ?

முரளி , கன்னி ராசி தான் வர வேணும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்காலபோவான் சிம்ம ராசியோ?

ஏன் உங்கை சாதகம் பொருந்தாமல் இருக்கிற பழசுபட்டையளை நெடுக்கரின்ரை தலையிலை கட்டி விடுற பிளானோ :rolleyes:

கொலை விழும் சொல்லியாச்சு :unsure:

ஒருவன் வாழ்க்கையில முன்னேறி நல்லா வாரது எண்டால் விட மாட்டீங்களே.

மகம் நச்சத்திரம் எண்டால் அவேள் சிம்மராசி எண்டு ஏதோ எங்கையோ வாசிச்ச ஞாபகம். ஆண்களுக்கு மகம் சூப்பரான ஒரு நச்சத்திரம் எண்டும் எங்கையோ வாசிச்ச ஞாபகம். அதான் நெடுக்காலபோவானும் மகமாக இருக்கலாமோ எண்டு சும்மா ஒருக்கால் கேட்டன்.

அப்ப பின்ன நீங்களே பாத்து ஆளுக்கு ஒண்டை மாட்டி விடுங்கோ (இன்னும் ஒண்டும் மாட்டுப்படாமல் இருந்திச்சிது எண்டால்)

  • கருத்துக்கள உறவுகள்

முரளி , நீங்கள் ஏன் கண்டபடி கவலைப்பட வேண்டாம் .

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த குரு மாற்றம் 'தன் கையே தனக்கு உதவி' என்பதை உங்களுக்குப் புரிய வைக்கும்.

கல்யாணம் காலவரையன்றி தள்ளிப் போகப் போகுது என்றதை பூடகமாச் சொல்லுகினம். உசார்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேஷம்

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் நட்சத்திரங்கள்)

மேன்மையான நற்குணங்கள் அதிகம் கொண்டவர்கள் நீங்கள். படபடவென எதையும் முகத்திற்கு நேரே பேசி விடுவீர்கள். யாருக்காகவும் உங்களின் தார்மீக கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். எல்லா விடயங்களிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவீர்கள்.

அன்புக்கு என்றுமே வசமாகும் உங்களின் ராசிக்கு குரு பகவான் 06.12.08 அன்று ஜீவனஸ்தான 10 ஆம் இடம் அமைகின்றார். உங்களின் ராசிக்கு பாக்கிய, விரயஸ்தான ஆதி பத்தியம் பெறுகின்ற குரு பகவான் பத்தாம் இடம் அமைகின்றார். பொதுவாகவே பத்தாம் இடம் குருவிற்கு உகந்த இடமல்ல என்பது ஜோதிட கூற்று.

தொழில் நிலைகளிலே சற்று பிரச்சினைகள், தொழில் சார்ந்த இடமாற்றம், பதவி மாற்றம் போன்ற பலா பலன்கள் எதிர்பாராத வகையிலே அமையும் நிலைகள் உண்டு. கடந்த ஒரு வருட காலமாக உங்களுக்கு குருவின் சஞ்சாரம் பாக்கியஸ்தானம் அமைந்து எல்லாவிதமான சிறப்பு நிலைகளையும் கொடுத்தது. முக்கியமாக பண விடயங்களில் நல்லதொரு சேமிப்பு நிலை உருவாகியிருக்கும். அதற்கு மாறாக இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு பண விடயங்களில் சற்று இழுபறி நிலைகளைக் கொடுக்கும்.

எனவே, கொடுக்கல் வாங்கல் விடயங்களில் மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் நீங்கள் செயற்பட வேண்டும். வெளிநாட்டு பிரயாண ஆர்வம் உடையவர்களுக்கு எப்படியும் இந்தக் குருப் பெயர்ச்சி மூலமாக அனுகூலமான பலாபலன்கள் கிடைக்கும் நிலையுண்டு. பொதுவாகவே மற்றவர்களின் கஷ்டங்களில் கவலை கொள்ளும் மனமும் உதவி செய்கின்ற மனப் பக்குவமும் கொண்ட உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி தேவையற்ற வீண் அலைச்சல் நிலைகளை அதிகம் கொடுக்கும். எதிர்பாராத வகையில் பண விடயங்களில் தொழில் விடயங்களில், திடீர் வீழ்ச்சி நிலைகள் அமையும் பலன் உண்டு.

எனவே, மிகவும் நிதான செயல் வேண்டும். குடும்ப நிலையில் சிறு சிறு மனச் சஞ்சலம், செலவினங்கள் என்பன இடையிடையே ஏற்பட்டு மறையும். தொழில் வாய்ப்பை எதிர்கொள்வோருக்கு அனுகூல பலன்கள் அமையும். பெண்களுக்கு மன நிலை சஞ்சலம் அதிகமாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலைகளில் சற்றுக் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.

உங்களின் ராசிக்கு சனி பகவானும் நான்காம் இடம் சஞ்சரிப்பது சற்று சுமாரான நிலைகளையே கொடுக்கும். எனவே, குருப்பெயர்ச்சி மூலமாக பெரும் நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. பிரதி வியாழக்கிழமை தோறும் குருவிற்கு கடலை மாலை அணிவித்து மஞ்சள் பூவினால் அர்ச்சனை செய்யவும். அத்தோடு உங்களின் அதிபதித் தெய்வம் அம்பாளுக்கும் அர்ச்சனை வழிபாடு செய்யவும். இதன் மூலமாக ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் பெறலாம்.

ரிஷபம்

(கார்த்திகை 2 ஆம்,3ஆம், 4 ஆம் பாதம், ரோகிணி, மிருக சீரிடம் 1 ஆம் 2 ஆம் பாதம்)

இங்கிதமான பேச்சாற்றல் கொண்டு எவரையும் வசப்படுத்துகின்ற குண இயல்பும் எதையும் மனதிற்கு உள்ளே வைத்து சிந்திக்கின்ற நிலையும் கோபத்தை வெளிக்காட்டாது இடம், பொருள், ஏவல், பார்த்து செயற்படுகின்ற தன்மையும் தன் காரியத்திலே கண்ணும் கருத்துமாக இருக்கின்ற குண இயல்பும் கொண்ட உங்களின் ராசிக்கு 06.12.2008 அன்று குருபகவான், பாக்கியஸ்தானம் எனப்படுகின்ற ஒன்பதாம் இடம் அமைகின்றார். எல்லா வகையிலும் பாக்கியங்களை வாரி வழங்குவார் என்பதில் ஐயமில்லை எனலாம்.

உங்களின் ராசிக்கு அட்டம, லாபஸ்தான, ஆதிபத்தியம் பெறுகின்ற குருபகவான் பாக்கியஸ்தானமாகிய 9 ஆம் இடம் அமைவது தொழில் ரீதியிலே மிகவும் சிறப்பான நிலைகளைக் கொடுக்கும். தொழில் சார்ந்த பதவி உயர்வுகள் தொழில் நிலை வருமானங்கள் என்பன மிகவும் சிறப்பாக அமையும் நிலையுண்டு.

புதிய முயற்சிகளில் அனுகூலமான வெற்றிகள் ஏற்படும். சொத்துக்கள் சேரக்கூடிய பலா பலன்கள் உண்டு. குடும்பத்திலே சிறப்பான மகிழ்வும், சுப காரிய நிலைகளும் அமையக் கூடிய பலா பலன்கள் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய பலா பலன்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன்கள், பூரணமாக அமையக் கூடிய நிலை இருக்கும். கடன் பிரச்சினைகளில் இருந்து முழுமையாக நீங்கிவிடக் கூடிய பலன் உண்டு. பண வரவும், பண நிலுவையும் மிகவும் அனுகூலமானதாக அமையும் நிலையுண்டு.

லாட்டரி அதிர்ஷ்டங்களும் உங்களின் வீட்டுக் கதவை தட்டிப் பார்க்கின்ற நிலை உண்டு. எதிரிகளும் உங்களை தேடி வந்து பணிகின்ற நிலைகள் ஏற்படும். வெளிநாட்டுப் பயணங்களில் ஆர்வமாக உள்ளவர்களுக்கு அப்பலன் பூரணமாக சேரும் நிலையுண்டு. சென்ற ஆண்டு அட்டமஸ்தானமாகிய 8 ஆம் இடம் அமைந்த குருபகவான் பல வகையிலும் உங்களை ஆட்டிப் படைத்து விட்டிருப்பார். அதற்கெல்லாம் சேர்த்து இந்த ஆண்டு குருவின் பெயர்ச்சிப் பலன்கள் உங்களை மகிழ்ச்சிக் கடலிலே ஆழ்த்தும்.

மாணவர்களுக்கு கல்வி நிலையிலே சிறப்பான முன்னேற்றங்கள் அமைகின்ற நிலையுண்டு. குடும்பஸ்தர்களுக்கு எதிர்பாராத வகையிலே தலயாத்திரை, பயணங்கள் அமையும். சமூகத்திலே உயர்வும் கௌரவமும் ஏற்படுகின்ற நிலையுண்டு. தான, தர்மம் செய்யக்கூடிய வாய்ப்புகளும் அமையும். எனவே, எல்லா நிலைகளிலும் குரு பகவானின் சிறப்புப் பலன் உங்களை நாடி வரும். நன்மை வரும் என்று குருபகவானை மறந்து விடாமல் இடையிடையே அர்ச்சனை வழிபாடுகள் செய்வித்து, இரட்டிப்பு அதிர்ஷ்டம் பெறுங்கள்.

மிதுனம்

(மிருக சீரிடம் 3 ஆம் 4 ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1 ஆம் 2 ஆம் 3 ஆம் பாதம்)

மிருதுவான தோற்றம் கொண்டவர்கள், பார்வைக்கு அமைதியானவராகவும் மிக அப்பாவித்தனமுமுடையவராகவும் இருப்பீர்கள். ஆனால் செயற்பாட்டில் ஆகாய சூரர்களாக இருப்பீர்கள். உங்களின் தனிப்பட்ட ஒவ்வொரு விடயத்தையும் எளிதாகவும் சிறப்பாகவும் செய்து முடிப்பீர்கள்.

இந்தப் பூனையும் பால் குடிக்குமா? என்கின்ற சுபாவமாகவே இருந்து உங்கள் காரியங்களில் ஜெயித்து விடுவீர்கள். நீங்கள் எøதயும் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள். உங்களின் ராசிக்கு குருபகவான் 06.12.2008 அன்று அட்டமஸ்தானமாகிய 8 ஆம் இடம் அமைகின்றார். உங்கள் ராசிக்கு, களத்திர, ஜீவன, ஸ்தான ஆதி பத்தியம் பெறுகின்ற குருபகவான் 8 ஆம் இடத்திலே நீச பங்கமாக சஞ்சரிப்பது பெரும் நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. எந்த விடயமாக இருப்பினும் மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் செயற்பட வேண்டும்.

தொழில் ரீதியில் சற்று அலைச்சல், வேலைப்பளு, மேலதிகாரிகளுடன் மனச் சஞ்சலம், தேவையற்ற வீண் பிரச்சினைகள் போன்ற பலாபலன்கள் ஏற்படும் நிலையுண்டு. திடீர் சுகயீனங்கள், மருத்துவ செலவு, சத்திர சிகிச்சை போன்ற நிலைகளும் ஏற்படலாம். எனவே, எல்லா விடயங்களிலும் நிதானமான செயற்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.

பண வரவு விடயங்களிலும் சற்று மந்த நிலைகள் இருக்கும். எதிர்பார்க்கும் லாபங்கள், தொழில் ரீதியில் அமைவது மிகவும் சிரமமாகும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையே மனச் சஞ்சலங்கள், தேவையற்ற பிரச்சினைகள் போன்ற பலாபலன்கள் ஏற்படும். நீங்கள் உண்டு, உங்கள் பாடு உண்டு என்ற போக்கிலே இருந்து கொள்ளுங்கள். அப்படியில்லையென்று செயற்பட்டீர்கள் என்றால் பிரச்சினை உங்கள் வீட்டுக் கதவை தட்டும்.

திருமணம் போன்ற சுப காரியங்களை எதிர்பார்க்கின்ற அன்பர்களுக்கு சிறு தடைகள், தாமத நிலைகள் என்பன ஏற்பட்டு மறையும். வெளிநாட்டு பயண ஆயத்தங்களில் ஈடுபாடு கொள்பவர்கள் சற்று அவதானத்துடன் செயற்பட வேண்டும். மாணவர்கள் தங்களின் கல்வி நிலையிலே கூடுதலான ஊக்கமும் முயற்சியும் எடுக்க வேண்டும். உங்களின் ராசிக்கு சனி பகவான் சஞ்சாரம் ஓரளவிற்கு அனுகூலமானதாக அமைவதினாலே சற்று ஆறுதல் தருகின்ற பலா பலன்கள் இடையிடையே அமையும்.

கடன் பிரச்சினைகளில் இழுபறி நிலைகளும் தேவையற்ற அலைச்சல், மனச் சஞ்சலங்களும் ஏற்படுகின்ற நிலை இருக்கும். நண்பனும் எதிரியாகின்ற நிலைகள் இருக்கும். பிரதி வியாழக்கிழமை தோறும் குருபகவானுக்கு கடலை மாலை அணிவித்து மஞ்சள் புஷ்பத்தினால் அர்ச்சனை வழிபாடு செய்து வரவும், அத்தோடு உங்களின் ராசி நாத தெய்வமான விஷ்ணு பகவானுக்கும் துளசி வில்வ இலையால் அர்ச்சனை வழிபாடு செய்யவும். எந்த விடயத்தையும் சாதுரியமாக சமாளிக்கின்ற நீங்கள் இந்தக் குருப் பெயர்ச்சியின் பலாபலன் அறிந்து அதற்குத் தக செயற்பாடு கொண்டு வெற்றி காண்க.

கடகம்

(புனர்பூசம் 4 பாதம், பூசம், ஆயிலியம்)

கலகலப்பான சுபாவமும் எவரையும் எளிதிலே நட்புறவு கொள்கின்ற ஆற்றலும் எல்லோருடனும் அன்பாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணமும் அதிகமான நட்புறவுகளினாலேயே ஆபத்துக்களையும் எதிர்ப்புக்களையும் சந்திக்கின்ற நிலையும் சற்று சுய நலம் கலந்த செயற்பாடும் எல்லோருக்கும் உதவி செய்கின்ற தன்மையும், நிறைந்த நல் மனமும் கொண்ட உங்களின் ராசிக்கு 06.12.08 அன்று குரு பகவான் களத்திரஸ்தானமாகிய 7 ஆம் இடம் அமைகின்றார். உங்களின் ராசிக்கு ரோக, பாக்கியஸ்தான ஆதிபத்தியம் பெறுகின்ற குருபகவான் 7 ஆம் இடம் அமைவது, அனுகூலமான நற் பலாபலன்கள் அமையும்.

பொதுவாகவே, சந்தோஷத்தையும் நட்புறவையும் விரும்புகின்ற உங்களுக்கு இந்தக் குருப் பெயர்ச்சி சிறப்பான பலாபலன்களை கொடுக்கும். குடும்பத்திலே கணவன், மனைவியிடையே நல்ல நட்புறவு இருக்கும். சுப காரிய நிகழ்வுகளும் சுபச் செலவுகளும் அமையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்ற பலன் உண்டு. தொழில் ரீதியிலே நல்ல சிறப்பான முன்னேற்றங்கள் அமைகின்ற நிலையுண்டு. பண வரவு மிகவும் திருப்திகரமான முறையிலே உங்களுக்கு வந்து சேருகின்ற பலன் உண்டு.

புதிய முயற்சிகளில் வெற்றிகள் ஏற்படுகின்ற பலாபலன் அமையும். திருமணம் போன்ற சுப காரியங்களை எதிர்கொள்ளுகின்ற அன்பர்களுக்கு அப்பலன் பூரணமாக அமையும் நிலையுண்டு. வெளியூர் பிரயாணங்களுக்கு முயற்சி செய்பவர்களுக்கு அப்பலன் அனுகூலமானதாக அமையும் நிலையுண்டு. மாணவர்களுக்கு கல்வி நிலையில் சிறப்பான நல்ல முன்னேற்றங்கள் அமையும் பலன் உண்டு.

எனவே இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு ஏற்புøடய நல்ல பலாபலன்களையே பெரும்பாலும் தருகின்ற நிலையுண்டு. உங்களின் ராசிக்கு ஏழரைச் சனி சஞ்சாரம் நடைபெறுகின்றது. கடைக்கூற்று சஞ்சார நிலை அமைகின்றது. 2009 ஆம் ஆண்டு நடுப் பகுதியோடு ஏழரைச் சனி நிறைவு பெறும். எனவே இந்த ஏழரைச் சனி சிறு சிறு அலைச்சல் நிலைகளை இடையிடையே கொடுக்கும். சற்று நிதானத்துடன் செயற்படுவது மிகவும் நல்லது.

களத்திரஸ்தான நிலையில் அமைகின்ற இந்தக் குருப்பெயர்ச்சி மனைவி வழியால் எதிர்பாராத வகை நன்மைகளை கொடுக்கின்ற பலாபலன் உண்டு. குழந்தைப் பேறு எதிர்பார்க்கின்றவர்களுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.