Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்கள் தினம் (நவம்பர் 19)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ஆண்கள் தினம் (IMD - International_Men's_Day) பொதுவாக ஆண்டு தோறும் நவம்பர் (புரட்டாதித் திங்கள்) 19ம் நாள் கொண்டாடப்படுகிறது. இது 1999 இல் பிரேரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது.

உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதி இது கொண்டாடப்படுகிறது.

இவ்வாண்டுக்கான ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்.. உண்மையான ஆம்பிளையளுக்கு உரித்தாகட்டும்.

ஆண்கள் மீதான பாரபட்சங்களில் சில.

1. அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளுக்கு பெண்களைப் போன்று ஆண்கள் கிரமமாக உட்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக பெண்களில் பல வகை நோய்களைத் தடுக்கவும் கட்டாய ஸ்கிறீனிங் (screening) செயற்பாடுகள் இருக்கின்றன. ஆனால் ஆண்களுக்கு அப்படி இல்லை. இதனால் புரஸ்ரேட் புற்றுநோய் போன்ற நோய்களை ஆண்கள் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாமல் உள்ளது. இதனால் ஆண்கள் மத்தியில் அநியாய மரணங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

2. வன்புணர்வு வழக்குகளில் அநேக தடவைகள் ஆண்கள் திட்டமிட்டு சிக்க வைக்கப்படுவது தீர்வின்றித் தொடர்கிறது.

3. குடும்ப வன்முறையில் பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு நிவாரணம் பெற எந்த வழியும் இல்லை.

4. விவாகரத்துப் பெறும் தம்பதியரிடத்தில் சட்டரீதியாக குழந்தைகள் தந்தையரிடம் குறுகிய காலத்துக்கு மட்டுமே வாழ அனுமதிக்கப்படுகின்றனர்.

5. தொழில்ரீதியாக ஆண்கள் சில தொழிற்துறைகளில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதும் பெண்களின் உடலழகு மட்டும் கருத்தில் கொள்ளப்பட்டு வேலை வழங்குதலும் என்ற பாரபட்சம் தொடர்கின்றமை.

6. ஆண்களை தவறான வழியில் செல்ல தூண்டும் பெண்களுக்கு சட்ட ரீதியான தண்டனை ஏதுமில்லாமை.. ஆண்கள் தவறாக வழிநடத்தப்படுவது தொடர்கின்றமை.

7. விபச்சாரம் என்ற வியாபாரத்தில் பெண்கள் ஆண்களை வலிந்து சிக்க வைத்தலில் இருந்து பெண்களை தடுக்க முயலாமை.

8. கல்வியில் பரீட்சையில் சித்தியடையும் ஆண்களின் சதவீதம் தொடர்ந்து குறைவடைவது தொடர்பில் தீர்வுகள் தேடப்படுவதில் அக்கறை செலுத்தாமையும் புறக்கணிப்பும்.

9. போதைப்பொருளுக்கு அடிமையாக்கி பின் ஆண்களை (கணவர்களை) பெண்கள் கைவிட்டுச் செல்லுதல். அப்படியான பெண்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்.. போதைப்பொருள் பாவனையில் இருந்து ஆண்களை விடுவிக்க பயன்படுத்தப்படுவது குறைவாக இருத்தல்.

10. காதல்.. டேற்றிங் என்ற போர்வைகளில் ஆண்களிடம் உள்ள சொத்து மற்றும் சுகத்தை பறித்துக் கொண்டு செல்லும் பெண்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படாமை. குழந்தைகளைக் காட்டி பெண்களும் சொத்துப்பறித்தலை சட்டரீதியாக ஊக்குவித்தல்.

11. ஆண்கள் மீது பகிடி வதை புரியும் பெண்கள் மீது சட்டம் பாயாமல் தடுக்கப்படுகின்றமை.

12. ஆண்களுக்கு மன உழைச்சல் ஏற்படும் வகையில் செயற்படும் பெண்களுக்கு தண்டனைகளும் ஆலோசனைகளும்.. வழிநடத்தலும் வழங்கப்பட அக்கறை செலுத்தாமை.

13. வர்த்தக விளம்பரங்களில் பெண்களுக்கு அதிக முக்கியமளிக்கின்றமை.

14. விமானப்பணியாளர்களில் பெண்களுக்கு திட்டமிட்டு முன்னுரிமை அளிக்கப்படுகின்றமை.

15. அந்தரங்கச் செயலாளர்கள் என்று பெண்களை நியமிப்பதை வழக்கமாகக் கொண்டிருத்தல். அங்கு ஆண்களுக்குரிய சம தொழில் வாய்ப்பு புறக்கணிக்கப்படுதல்.

16. கடினமான வேலைகளில் ஆண்கள் தேர்வு செய்யப்பட்டு ஈடுபடுத்தப்படுதல்.

17. இராணுவத்தில் ஆண்களை காக்க ஆண்கள் இராணுவமும்.. பெண்களைக் காக்க பெண்கள் இராணுவமும் அமைக்காமல்.. ஆண்களையே போருக்கு இரையாக்குதல்.

18. வீடுகளில் பெண்களால் ஆண்களின் பேச்சுரிமை.. வதிவிட சுதந்திரம் பறிக்கப்படுவது குறித்து அக்கறை செய்யாமை.

19. ஆண்களின் ஊதியத்தை பெண்களுக்கு பறித்துக் கொடுக்கும் பாரபட்ச சட்டங்கள் ஆண்களின் அடிப்படை உரிமையை மீறுகின்றமை.

20. போரின் போது பெண்களை.. குழந்தைகளைக் காக்க இருக்கும் சிறப்பு ஏற்பாடுகள்.. ஆண்களைக் காக்க இல்லாமை.

21. ஆண்களின் சராசரி ஆயுட்காலம் குறைவடைந்துள்ளமைக்கான சரியான காரணிகளை இனங்காட்டி ஆண்களுக்கு கிரமமான ஆலோசனைகளை வழங்கி அவர்களின் ஆயுட்காலத்தை பெண்களுக்கு நிகராகக் கொண்டு வர முனையாமை.

22. குழந்தை ஒன்றை உருவாக்குவதில் உள்ள ஆணின் 50% பங்களிப்பு திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதோடு.. குழந்தை பெற்றபின் குழந்தையை.. துணைவியை பராமரிக்க என்று ஆணுக்கு விசேட நீடித்த விடுமுறை வழங்கப்படுவதில் முழுமையான பாரபட்சம் காட்டப்படுதல்.

இன்னும்.. தொடரும்..!

http://en.wikipedia.org/wiki/International_Men's_Day

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
womenaggressorsap1.gif

Edited by nedukkalapoovan

நல்ல பெண்களும் இருக்கிறீனம். வக்கிரபுத்தி படைச்ச பெண்களும் இருக்கிறீனம். இதுமாதிரியே நல்ல ஆண்களும் இருக்கிறீனம். வக்கிரபுத்திபடைச்ச ஆண்களும் இருக்கிறீனம். ஆண்கள் பலவிதங்களில ஒடுக்கப்படுறீனம் எண்டுறதும் உண்மைதான். பெண்களாவது அழுது அழுது காரியம் பார்க்கலாம். ஆண்கள் எண்டால் அழுகிற விளையாட்டும் சரிவராது. வாழ்க்கை கஸ்டம்தான்.

நல்ல பெண்களும் இருக்கிறீனம். வக்கிரபுத்தி படைச்ச பெண்களும் இருக்கிறீனம். இதுமாதிரியே நல்ல ஆண்களும் இருக்கிறீனம். வக்கிரபுத்திபடைச்ச ஆண்களும் இருக்கிறீனம். ஆண்கள் பலவிதங்களில ஒடுக்கப்படுறீனம் எண்டுறதும் உண்மைதான். பெண்களாவது அழுது அழுது காரியம் பார்க்கலாம். ஆண்கள் எண்டால் அழுகிற விளையாட்டும் சரிவராது. வாழ்க்கை கஸ்டம்தான்.

'அழும் ஆண்கள் சங்கம்' என்று ஏதாவது தொடங்கி.. பசங்களுக்கு எப்படி அழுவதென்றுபயிற்சி கொடுத்து முன்னேற முடியாதா மாப்ஸ்?! :huh:

Edited by sOliyAn

நான் வெளியில ஆக்களுக்கு முன்னால் அழாவிட்டாலும் நிறைய தடவைகள் எனக்குள்ள அழுது இருக்கிறன். ஆண்களுக்கு பெண்களை விட அதிக அளவில சுதந்திரம் இருக்கிது ஜாலியா இருக்கலாம் எண்டுறது எல்லாம் உண்மை இல்லைதான். ஆண்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இளகிய மனம் படைச்சு இருந்தால் மற்றவர் கட்டுக்க இருக்கும்போது சுதந்திரம் எண்டுறது கேள்விக்குறி. இது காதலாகவும் இருக்கலாம். கலியாணமாகவும் இருக்கலாம். கொஞ்சம் யோசிக்கவேண்டிய விசயம். அன்புக்கு அடிமையாகினால் அணுஅணுவாக சித்திரவதை செய்யும்போது நமக்குள்ள அழுவது தவிர வேறஒண்டும் செய்ய ஏலாது. அந்தவகையில பார்த்தால் நெடுக்காலபோவான் வழியில இறுக்கமான மனதோட இருந்தால் உய்வு உண்டு. இல்லாட்டி பிய்வு உண்டு.

நெடுக்காலபோவான்ரை 'வைரஸ்' உங்களுக்கும் தொத்தீட்டுதுபோல.. பலருக்கு முன்னால அழ வெட்கமாக இருந்தால்.. குளியலறைக்கை பூட்டிப்போட்டு இருநஇது அழுங்க சார்.. முகம் கழுவுற தண்ணியும் மிச்சமாகும்.. :huh: குழந்தை பிறந்த உடன அழுது சார்.. அதுக்கு பிறகுதான் அதன் வளர்ச்சியே தெரிய ஆரம்பிக்குது.. :rolleyes: அது அழுதாலும் அம்மாதான் தூக்கணும்.. நீங்க அழுதாலும் உங்க சோடிதான் அணைக்கணும்.. :unsure:

Edited by sOliyAn

சகோதரர்கள் அனைவருக்கும் ஆண்கள் தின வாழ்த்துகள்.

[ஏதோ பாத்து கவனமா இருங்க..அப்புறம் அய்யோ குய்யோன்னா யாரும் உங்களை ஏன்னு கேட்க மாட்டாங்க. புத்திசாலி புள்ளங்களா இருங்க..சரியா?] ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தச்செய்தியை இன்னொரு குழுமத்தில் படித்த போது என் கண்முன்னால் வந்துபோனது 'நெடுக்ஸ் அண்ணைதான்"...அந்த நினைப்பை மறக்காமல் நனவாக்கிப்போட்டீங்கள்..

:huh:

நெடுக்காலபோவான்ரை 'வைரஸ்' உங்களுக்கும் தொத்தீட்டுதுபோல.. பலருக்கு முன்னால அழ வெட்கமாக இருந்தால்.. குளியலறைக்கை பூட்டிப்போட்டு இருநஇது அழுங்க சார்.. முகம் கழுவுற தண்ணியும் மிச்சமாகும்.. :rolleyes: குழந்தை பிறந்த உடன அழுது சார்.. அதுக்கு பிறகுதான் அதன் வளர்ச்சியே தெரிய ஆரம்பிக்குது.. :D அது அழுதாலும் அம்மாதான் தூக்கணும்.. நீங்க அழுதாலும் உங்க சோடிதான் அணைக்கணும்.. :D

நான் வாழ்க்கையில பலப்பல தடவைகள் அழுது இருக்கிறன். பிறப்போட துவங்கின அந்த அழுகை பதினைஞ்சு, பதினாறு வயசோட எனக்குள்ள மட்டும் நடக்கிது. எனது நண்பர்கள் பிரிஞ்சபோது, இறந்தபோது, வீட்டில அக்காமார் பிரிஞ்சு போனபோது, பிறகு சிறையுக்க இருந்தபோது, பிறகு வாழ்க்கையில பலப்பல ஏமாற்றங்கள் வந்தபோது இப்பிடி அழுகை தொடர்ந்துகொண்டு இருக்கிது. நீங்கள் சொன்னமாதிரி பாத்துரூமுக்க போய் இருந்தும் பூட்டுப்போட்டு மணித்தியாலக்கணக்கா இருந்து அழுது இருக்கிறன். ஒரு பெரிய உள்ளக்குமுறலுக்கு பிறகு திடீரெண்டு ஏதோ மாயாஜாலமாக ஒரு சக்திவந்து புதியசிந்தனையோட திருப்பி சுறுசுறுப்பு அடைஞ்சிடுவன்.

எனக்கு அம்மா, அப்பா இப்பவும் அருகில இருக்கிறீனம். நான் எனக்கு வாற என்னவிதமான பிரச்சனையையும் அது படிப்பாக இருக்கட்டும், வேலையாக இருக்கட்டும் இல்லாட்டிக்கு காதலாக இருக்கட்டும் அம்மா, அப்பாவிட்ட ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாத்தையும் சொல்லுவன். ஏதாவது சரியான கவலை வந்தால் எனக்கு இதால இப்பிடி கவலையா இருக்கிது எண்டு சொல்லுவன். அவேளும் சரி கனக்க ஒண்டும் யோசிக்காதை. எல்லாம் நல்ல மாதிரி நடக்கும் எண்டு ஏதாவது ஆறுதல் வார்த்தை சொல்லுவீனம்.

நெடுக்காலபோவான் சொல்லிற சில கருத்துக்களோட எனக்கு உடன்பாடு இல்லை. மற்றது நெடுக்காலபோவான் ஒரு விசயத்தை சொல்லேக்க பிச்சு உதறி நையாண்டி செய்யுறது அதிகம். எண்டாலும் பல விசயங்களில நெடுக்காலபோவானிண்ட கருத்துக்களோட எனக்கு உடன்பாடு இருக்கிது. இந்த ஆண்கள் விசயமும் இப்பிடித்தான்.

நல்ல பெண்கள், நல்ல ஆண்கள் மத்தியில குரூர குணம் படைச்ச பிறப்புக்களும் இருக்கிது. பாதிக்கப்படுவது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் உதவிசெய்யவேண்டிய தேவை இருக்கிது. இதை எங்கட நாளாந்த வாழ்க்கையிலையே நாங்கள் பார்க்கிறம். ஆண்களால வாழ்க்கை சீரழிக்கப்பட்ட எத்தனையோ அபலைப்பெண்கள், இதுமாதிரி பெண்களால வாழ்க்கை சீரழிஞ்சுபோன எத்தனையோ நல்ல உள்ளம் கொண்ட ஆண்கள் எண்டு கதை ரெண்டு பக்கமும் இருக்கிது.

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் ஆண்கள் தின வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் மீதான பாரபட்சங்கள்.

5. தொழில்ரீதியாக ஆண்கள் சில தொழிற்துறைகளில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதும் பெண்களின் உடலழகு மட்டும் கருத்தில் கொள்ளப்பட்டு வேலை வழங்குதலும் என்ற பாரபட்சம் தொடர்கின்றமை.

11. ஆண்கள் மீது பகிடி வதை புரியும் பெண்கள் மீது சட்டம் பாயாமல் தடுக்கப்படுகின்றமை.

13. வர்த்தக விளம்பரங்களில் பெண்களுக்கு அதிக முக்கியமளிக்கின்றமை.

14. விமானப்பணியாளர்களில் பெண்களுக்கு திட்டமிட்டு முன்னுரிமை அளிக்கப்படுகின்றமை.

15. அந்தரங்கச் செயலாளர்கள் என்று பெண்களை நியமிப்பதை வழக்கமாகக் கொண்டிருத்தல். அங்கு ஆண்களுக்குரிய சம தொழில் வாய்ப்பு புறக்கணிக்கப்படுதல்.

16. கடினமான வேலைகளில் ஆண்கள் தேர்வு செய்யப்பட்டு ஈடுபடுத்தப்படுதல்.

17. இராணுவத்தில் ஆண்களை காக்க ஆண்கள் இராணுவமும்.. பெண்களைக் காக்க பெண்கள் இராணுவமும் அமைக்காமல்.. ஆண்களையே போருக்கு இரையாக்குதல்.

22. குழந்தை ஒன்றை உருவாக்குவதில் உள்ள ஆணின் 50% பங்களிப்பு திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதோடு.. குழந்தை பெற்றபின் குழந்தையை.. துணைவியை பராமரிக்க என்று ஆணுக்கு விசேட நீடித்த விடுமுறை வழங்கப்படுவதில் முழுமையான பாரபட்சம் காட்டப்படுதல்.

இன்னும்.. தொடரும்..!

http://en.wikipedia.org/wiki/International_Men's_Day

ஆண்களின் மீது காட்டப் படும் மேற்கூறிய பாரபட்சங்கள் ரொம்ப மோசமாக உள்ளது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க எங்கள் வர்க்கம் ஆனால் ஆன்கழுக்கெதிரான எல்லா வன்மறைகளும் நிறுத்தப்படவேண்டும் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க எங்கள் வர்க்கம் ஆனால் ஆன்கழுக்கெதிரான எல்லா வன்மறைகளும் நிறுத்தப்படவேண்டும் :unsure:

உந்த வன்முறைகளை எதிர்த்து எங்கடை அப்பா , தாத்தா , பூட்டன் மாரெல்லாம் போராடியிருந்தால் எங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது . :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் அடிவாங்குவோர் சங்கம் அமைச்சு இவளைவையிளிட்டை அடி உதை வாங்கி செத்தேன்சிவனே எண்டு திரியிறம் :wub:

இப்ப இரண்டொருத்தர் புதிசாய் சங்கம் கிங்கம் எண்டு வெளிக்கிட்டிருக்கினம் :wub:

என்னமோ பட்டுழுத்துப்பாக்கட்டும் உங்கடை தலைவிதியை ஆராலை மாத்தேலும் :unsure:

ஒண்டுமட்டும் சொல்லுறன் தம்பிமாரே! உவளவை கண்ணாலையும் விரலாலையும் தான் சகல அலுவலையும் முடிக்கிறவளவை.அதுக்கு நீங்கள் அடங்கேல்லையோ கதைகந்தல் கவனம்.

உதாரணத்துக்கு எங்கடை கந்தப்பு. :o

  • கருத்துக்கள உறவுகள்

என்ன .......... விரலாலை விறாண்டிப் போடுவினம் எண்டு சொல்லுறியளோ .......... அண்ணை .

சீ ........... நான் நம்பேல்லை , அவை அப்பிடி செய்யாகினம் .

  • கருத்துக்கள உறவுகள்

என்ன .......... விரலாலை விறாண்டிப் போடுவினம் எண்டு சொல்லுறியளோ .......... அண்ணை .

சீ ........... நான் நம்பேல்லை , அவை அப்பிடி செய்யாகினம் .

அனுபவப்பட்ட ஆட்கள் சொல்லும் போது கேட்டுதானே ஆக வேண்டும் பாவம்[ கு.சா, கந்தப்பு] :):):)

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவப்பட்ட ஆட்கள் சொல்லும் போது கேட்டுதானே ஆக வேண்டும் பாவம்[ கு.சா, கந்தப்பு] :):lol::)

முனிவர் , இவையள் அதுக்கு பக்குவமாய் போயிருந்தால் இந்த வில்லங்கம் ஏன் ? :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்த வன்முறைகளை எதிர்த்து எங்கடை அப்பா , தாத்தா , பூட்டன் மாரெல்லாம் போராடியிருந்தால் எங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது . :)

அவையள் தங்கட சில பலவீனங்களால.. பெண்களிடத்தில்... தலையணை மந்திரம்.. மோகம்.. ஆசை என்றே வாழ்ந்து கெட்டுட்டினம். அதுகளை விதைச்சுப் போட்டும் போட்டினம். அதுகளை எல்லாம் அகற்றி ஆண்களை முதலில் ஆண் மனிதர்களாக மனிதப்பண்புகளோட வாழ வைக்கிறது என்றதே பெரிய பாடா இருக்குது. அதுக்குள்ளையும் அதிகம் ஆம்பிள்ளை என்று உணர்ந்தவுடன் ஆண்களுக்கும் பெண்களைப் போல தலைக்கணமும் எல்லோ வந்திடுது. அதால பெண்கள் ஆண்களை அடிமைப்படுத்த முனைவது போல.. சில ஆண்களும் மற்றவனை அடிமைப்படுத்த முனையினம். அதுவும் தவறு.

ஒரு சிங்கக் கூட்டத்தைப் பாருங்க.. ஆண் சிங்கம் பெண்ணுக்கு அடிபணியாது. அதேபோல் பெண் ஆணில் தங்கி வாழ்நாள் பூராவும் வாழுறதில்ல. கூட்டமா வாழ்ந்தாலும்.. சோடி போட்டு வாழ்ந்தாலும்.. உறவாடி வாழ்ந்தாலும் ஒன்றின் வாழ்வுரிமையில் மற்றது தலையிடுவதில்லை. ஆக பகுத்தறிவற்ற மிருகங்களுக்கே அப்படி இயல்பு இருக்கேக்க..

மனிதனுக்கு மட்டும் ஏன் மற்றவனை அடக்கி.. ஆள மனம் பிறக்குது..! பெண்களும் ஆண்களை அடக்குகிறார்கள். ஆண்களும் சில சந்தர்ப்பங்களில் பெண்களை.. அடக்குகின்றனர். இரண்டுமே தப்பு.

ஒருவரை ஒருவர் புரிஞ்சுகொண்டு.. அடுத்தவரின் வாழ்வுரிமையை பறிக்காத வகையில் ஒற்றுமையாக ஒழுக்கத்தோடு அன்போடு தேவைகளை கூட்டாக பூர்த்தி செய்து கொண்டு குடும்பமாக வாழ்வதுதான் குடும்ப வாழ்க்கை..! :)

Edited by nedukkalapoovan

ஏனெடா ஆணாக பிறந்தோம் எண்று கவலை கொள்பவர்களுக்கும், கஸ்ர படுபவர்களுக்கும் அதில் இருந்து விடுபட ஒரு இலகுவான வளி இருக்கிற்றது..!

Tarnssexual ஆண் மாதிரியே இல்லாமல் இருக்கும் எண்று உறுதி இல்லை...

Edited by தயா

என்ன தயா பெண்ணாக பிறந்தவர்களே - ஒரிஜினல் பெண்களாளேயே வேதனைகள் பிரச்சனைகளை தாங்கிப்பிடிக்க ஏலாமல் இருக்கிது. ஆணாக இருக்கிறவன் பெண்ணாக மாறி அதாலவாற பிரச்சனைகளிற்கு யார் உதவிசெய்யபோறாங்கள்? இப்பிடி பால் மாறினவர்கள் படுகிற துன்பங்கள் பற்றி பலவிதமான தகவல்களை இணையத்தில வாசிக்கலாம். பலர் கொலைசெய்யப்பட்டு இருக்கிறார்கள். தற்கொலை செய்து இருக்கிறார்கள். பலர் தீராத உடல் வியாதிகளாலையும், மற்றும் மனவியாதிகள் காரணமாகவும் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறீனம். மற்றது இப்படியான பாலியல் மாற்று சிகிச்சைகள் உயிருக்கு மிகவும் ஆபத்தானது. குறுகிய காலத்தில இல்லாவிட்டாலும், நீண்டகாலத்தில அதிக பிரச்சனைகளை உடல் உபாதைகளை கொண்டுவரும்.

நான் சிறிதுகாலத்திற்கு முன்னர் நைஜீரியாவில இருக்கிற ஒருத்தர் தனக்கு உதவிகேட்டு எழுதிய மிகவும் அதிர்ச்சி தரும் ஒரு கடிதத்தை உளவளம் சம்மந்தமான இந்த http://psychcentral.com/ இணையத்தில வாசிச்சு இருந்தனான். இந்த தளத்துக்கு போனால் பலவிதமான உளவியல் ஆரோக்கியம் சம்மந்தமான தகவல்களை பெறலாம்.

சாதாரண பெண்கள் இல்லாட்டிக்கு ஆண்கள் அனுபவிக்கும் கொடுமைகளை விட இப்படி பால் மாறினவர்கள் சமூகத்தில படுகின்ற கொடுமைகள், துன்பங்கள் மிகவும் அதிகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.