Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் சிங்களவர்களின் பொய்ப் பிரச்சாரத்திற்கு எதிராக தமிழர்கள் போராட்டம்!

Featured Replies

பிரான்சில் இன்று நடைபெற்ற சிங்கள மக்களின் போராட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் ஆர்பாட்டத்தினை நடத்தியுள்ளனர். பிரான்சின் தலைநகர் பரிசிலுள்ள ரொக்கடரோ ஈபிள் கோபுரம் அமைந்துள்ள பகுதியில் சிங்கள அரசு இனப்படுகொலையை நியாயப்படுத்தி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாத்திற்காக ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.

ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காதபோதும் இறுதியில் அனுமதி வழங்கியுள்ளனர். அனுமதியைப் பெறுவதற்காக சிறிலங்கா தூதரகம் அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சிங்களவர்களின் உண்மைக்குப் புறம்பான போராட்டத்தை அம்பலப்படுத்தவும், சிறீலங்காவின் இனப்படுகொலையை அம்பலப்படுத்தும் முகமாகவும் தமிழ் மக்களும் பெருமளவில் அப்பகுதியில் குவிந்து போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

ஆனால், சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதையும், தமிழ் மக்களுக்கு அனுமதி வழங்கப்படாமையையும் எடுத்தக்கூறிய காவல்துறையினர், தமிழ் மக்களை அங்கிருந்து கலைந்துபோகுமாறு வலியுறுத்தியுள்ளனர். எனினும், அங்கு சென்றிருந்த தமிழ் மக்கள் பிரெஞ்சுக் கொடி, ஐரோப்பிய ஒன்றியக்கொடி, தமிழீழ தேசியக் கொடி ஆகியவற்றை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் சிறீலங்காவின் இனப்படுகொலையை அம்பலப்படுத்தும் துண்டுப் பிரசுரங்களையும் மக்களுக்கு விநியோகித்தனர்.

இதேவேளை, தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு அனுமதி வழங்க மறுக்கும் பிரெஞ்சு காவல்துறையினர், சிறிலங்காவின் நியாயமற்ற போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளமை தமிழ் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளதாக தமிழ் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, இவ்வார்ப்பட்டத்தின் பின்னர் பரிசின் தமிழர்களின் அதிக வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள லாச்சப்பல் பகுதியில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட ஒரு சிங்கள தேனீர் கடையில் ஒன்றுகூடும் சிங்கள இளைஞர்கள் சிலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்ததுடன், தமிழீழத் தேசியக்கொடியை அவமதிப்புச் செய்தமையால் ஆத்திரமடைந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள், குறிப்பிட்ட தேனீர் நிலையத்தை முற்றுகையிட்டனர். எனினும், பின்னர் தமிழ் இளைஞர்கள் தமது கடும் கட்டணங்களை தெரிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றதாக தெரியவருகின்றது.

இது தொடர்பான ஒளிப்பதிவைப் பார்வையிட...

http://www.tamilkathir.com/news/552/58//d,view_video.aspx

http://www.sankathi.com/

______________________

http://vaththirayan.blogspot.com/

Edited by jaalavan

நன்றி உறவுகளுக்கு புலத்திலும் நம்மை நிம்மதியாக இருக்கவிட மாட்டான் சிங்களவன்.

புலம்பெயர்ந்த சிங்கள தேசியம் எழுச்சி கொள்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த சிங்கள தேசியம் எழுச்சி கொள்கிறது.

இவருடைய கருத்துக்கள்...

1. சிங்களவன்.. தேசிய எழுச்சி கொண்டு.. ஓர்மத்தோடு புறப்பட்டுவிட்டான்.. தமிழ் தேசியப் புலிகள் ஓடுகிறார்கள்..!

2. சிறீலங்காவில் இருப்பது சிங்களப் பேரினவாதம் அல்ல.. சிங்களத் தேசியமும் அதன் எழுச்சியும்...!

இந்த இரண்டையும் இவர் தமிழ் தேசிய உணர்வை சிதைக்கும் வகையிலேயே இங்கு பிரச்சாரப்படுத்தி வருகிறார். நேரடியாகவன்றியோ மறைமுகமாகவோ.

சிங்களவர்கள் காலம் காலமாக சிங்கள பேரினவாதத்தில் எழுச்சி கொண்டுதான் உள்ளனர். சிங்களத் தேசியம்.. சிங்களப் பேரினவாதமாக இருக்கிறதே அன்றி.. சிங்களத் தேசியமாக இல்லை. ஆனால் இவர் அண்மைக்காலமாக.. சிங்களப் பேரினவாதத்தை சிங்கள தேசியமாக.. இனங்காட்டி.. சிங்களவர்கள் சிறுபான்மையினரின் தேசியத்தை.. உரிமைகளை அங்கீகரிக்காத.. பேரினவாதப் போக்கை மறைக்க முற்படுகிறார்.

அதேபோல்... பிராந்திய சர்வதேச உதவிகளுடன் சிங்களப் பேரினவாதத் தேவைகளுக்காகப் படைநகர்த்தும் சிங்களப் பேரினவாத பயங்கரவாதக் கூலிப்படையினரை.. இவர் சிங்களத் தேசியத்துக்காகப் போராடும் ஓர்மம் மிக்க படையினர் என்று நிரூபிக்க விளைகிறார்.

எதிர்மறைப் பிரச்சாரம் என்ற ரீதியில்.. சிறீலங்கா தூதுவராலயம்.. தமிழர்களின் தேசிய எழுச்சியை நசுக்க எடுக்கும் பேரினவாத சிந்தனையில் அமைந்த போராட்டங்களை சிங்களத் தேசியமாக இவர் உச்சரிப்பதன்.. அல்லது இனங்காட்டுவதன் நோக்கம்.. என்ன.

சிறீலங்கா சிங்கள பெளத்த நாடு என்று அதன் ஜனாதிபதி.. இராணுவத்தளபதி பகிரங்கமாக அறிவித்த பின்னும் எம்மத்தியில் சிங்களவனுக்கு தேசியம் புகட்ட.. சில அதிபுத்திசாலிகள் அலைந்து திரிகிறார்கள் என்பது.. வெட்கக்கேடானது.

யாழ் களமும் இவ்வாறான பிரச்சாரங்களுக்கு இடமளிப்பதன் மூலம்.. சிங்களப் பேரினவாதம்.. சிங்களத் தேசியமாக இங்கு இனங்காட்டப்பட செய்யப்படுகிறது.

தமிழ்மக்கள் சிங்கள தேசியத்தை மறுதலிக்கவோ... அதற்கு எதிராகப் போராடவோ இல்லை. சிங்களப் பேரினவாதத்தையும் அது தமிழ் தேசிய இருப்பை, தமிழர் தேச இருப்பை அழிக்க முனைவதையும் தமிழர்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை இரண்டாம் தரப்பிரஜைகளாக அடிமைகளாக நடத்த விளைவதையுமே எதிர்த்துப் போராடுகின்றனர்.

சிங்களப் பேரினவாதச் சிந்தனைகளை.. சிங்களத் தேசியமாக இனங்காட்டுதல் மிகவும் தவறானது. சிங்களப் பேரினவாதம் புரிந்துவரும் தமிழினப் படுகொலையை நியாயப்படுத்தும் ஒரு செயலாகவே இது அமைகிறது. ஏனெனில் எந்த தேசிய இனமும் அதன் இருப்பை பாதுகாக்க போராட உரிமை பெற்றிருக்கிறது. சிங்களவர்களும் தமிழர்களால்.. தமிழ் தேசிய எழுச்சியால் சிங்களத் தேசியத்தை இழப்பதாக காட்டி.. அவர்கள் அதற்கு எதிராகப் போராடுவதாக.. இந்தப் போராட்டத்தை இவர் சித்தரிக்க முனைகிறார்.

சிங்கள அரசு ஒன்று அதன் இறையாண்மை மிக்க நாட்டில் சிங்களத் தேசிய அடிப்படையில் ஆட்சி அதிகாரங்களில் இருக்கிறது அதன் தேசியத்தை பாதுகாத்தபடி. அப்படி இருக்க சிங்களத் தேசியத்துக்கு ஆபத்து எதுவும் வரப்போவதில்லை. தமிழர்களின் போராட்டம் சிறீலங்கா சிங்கள பெளத்த நாடு என்ற சிங்களப் பேரினவாத சிந்தனைகளுக்கு எதிரானதே அன்றி சிங்கள தேசிய இன இருப்புக்கு எதிரானதல்ல. அப்படிக் காட்ட முனைவது தமிழ் தேசியத்துக்கு எதிரான கொடுந்துரோகச் செயலாகும்.

அமெரிக்க தூதுவர் விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற கொள்கையை சிதைக்க வழிசொல்கிறார். ஆனால் அதே தூதுவர் சிறீலங்கா ஜனாதிபதியும்.. தரைப்படைத் தளபதியும் கூறிய சிறீலங்கா சிங்கள பெளத்த நாடு என்பதை ஏற்றுக் கொள்ள தமிழ் மக்களை நிற்பந்திக்கிறார். இது அமெரிக்காவின் நோக்கங்களை தெளிவாக இனங்காட்டுகிறது. தமிழர்களை தீர்வு என்ற போர்வையில் ஏமாற்றி தமிழ் மக்களின் போராடும் சக்தியாக உள்ள விடுதலைப்புலிகளை அழிப்பதையே இந்தியா முதற்கொண்டு அமெரிக்கா வரை செய்ய முனைகிறது. அதற்கு பக்கபலமாக சிங்களப் பேரினவாத சிந்தனை என்பது மறைக்கப்பட்டு அது சிங்களத் தேசியமாக அங்கீகரிக்கப்பட்ட வடிவில்.. தமிழர்களாலேயே.. தமிழர்களிடத்தில் எடுத்து வரப்படுவது.. மிகவும் வருந்தத்தக்க ஒன்று..! :lol:

Edited by nedukkalapoovan

நேடுக்கு சொல்லாமல் விட்டது.. 2000 தமிழர் கூடினால், புலம்பெயர்ந்த பன்னாடைகள்... 100 பேர் கூடினால் சிங்கள தேசிய எழுச்சி எனும் புதிய தத்துவம்...!!

அந்த நூறு பேரில் பலர் தமிழர் சிங்கள தேசியத்தில்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளுக்கு புலத்திலும் நம்மை நிம்மதியாக இருக்கவிட மாட்டான் சிங்களவன்.

சேர் பொன் இராமநாதனில் இருந்து.. கருணா வரைக்கும்.. எம்மவர்களில் குறிப்பிட்ட தொகை ஆக்களுக்கு சிங்களவனோட Gay காதல் இருக்கிறது. அவன் என்னதான் ஏறி மிதிச்சாலும் அந்தக் காதல் தலைமுறை தலைமுறைக்கு இவர்களை விட்டுப் போகாது.

உண்மையாக நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள்..

பிரித்தானியாவில் தமிழர் ஒருவர் நடத்தும் பெற்றோல் நிலையத்தில் ஒரு சிங்களவனும் தமிழர் ஒருவரும் வேலை செய்து வந்துள்ளனர். அண்மையில் பூநகரி வீழ்ச்சியை அடுத்து அந்தச் சிங்களவன் தமிழனைப் பார்த்து நையாண்டித்தனமாக அரசியல் பேசி இருக்கிறார். அந்தத் தமிழனும் பதிலுக்குப் பேசி இருக்கிறார். சிங்களவன்.. தன்ர தமிழ் மாத்தையாவட்ட தான் செய்ததைச் சொல்லாமல்.. தமிழன் மீது குற்றம் சாட்டி இருக்கிறார். மாத்தையாவும் சிங்களவன் மீது வைத்திருந்த Gay காதலில தமிழனைப் பிடிச்சு.. விசாரணைகள் ஏதும் இன்றியே வேலையை விட்டு நீக்கிவிட்டார். இப்படிப்பட்ட தமிழ் Gayகள் இருக்கும் வரை.. தமிழனுக்கு விடிவு.. தமிழ் தேசியத்தின் பெயரால் தமிழர்களுக்குள் இன ஒற்றுமை பிறக்கும் என்று நினைக்கிறீங்க.. நடக்காது..! :lol::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கன பேருக்கு தங்கட வீட்ட இடி விழுந்தாலும் கேட்காது ஆனால் தெருவில குண்டூசி விழுந்தாலும் கேட்கும்ம :lol::lol: ,

தங்கட இனத்தை அதாவது தமிழினத்தை யாரவது கேடுகெட்ட இனம், மந்தைகள்,பன்னாடைகள் என்று இழிவாக பேசுகிறானோ அவன் தான் எமக்கு முதல் எதிரி முதல் துரோகி :lol:

ஆரம்பத்தில் சிங்கள பேரினவாதம் சாதுரியமாக காய்களை நகர்த்தி நீண்ட கால நோக்கில் கல்வி அபிவிருத்தி குடியேற்றத்திட்டங்கள் மூலம் எம்மை நீண்ட காலநோக்கில் பலவீனப்படுத்திய படி அடக்குமுறைகளை செய்தது. அதற்கு எதிராக போராட்டம் ஆரம்பமாகி அகிம்சையில் இருந்து ஆயுத வடிவில் வந்து இன்று அது தமிழ் தேசியம் ஆக வடிவம் பெற்றிருக்கிறது. அதை எதிர்கொள்ள சிங்கள பேரினவாதம் சிங்கள தேசியத்தை எழுச்சி கொள்ள வைக்கிறது. ஏற்கனவே பல முறை சொன்னது போல் ஈழப்போர் 4 முன்னைய ஈழப்போர்கள் போன்றது அல்ல. 2002 இல் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை அதில் கொடுக்கப்பட்ட 2 தரப்பிற்குமான சம உரிமைகள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் தரை (கடல் விவாதிக்கப்பட்டது) இறையாண்மை போன்றவை சிங்களவர்களை சிந்திக்க வைத்தது களநிலமையின் பாதகத்தை உணர்த்தியது. அதை ஒரு தேசிய அவமானமாக (national humiliation) கூட பார்த்தார்கள். அன்றில் இருந்து சிங்கள ஆளும் வர்க்கம் கல்விமான்கள் கொழும்பு ஊடகங்கள் சிங்கள தேசியத்தை எழுச்சி கொள்ள (mobilization) வைக்கும் குறிக்கோளோடு இயங்கினார்கள். இது 2001 இல் சமாதான ஒப்பந்த ஏற்படுத்த முயன்ற காலத்தில் இருந்து தொடர்கிறது.

அதே சமாதான காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் கொழும்பில் சென்று அடுக்கு மாடிகள் வேண்டி விட்டு வியாபார முதலீடுகள் செய்து கதிர்காமத்தில் காவடி ஆடி இன்பம் கண்டார்கள். தென்னிலங்கைக்கும் புலம்பெயர்ந்தவர்களிற்கும் இடையிலான வர்த்தகத்தை பெருக்கிக் கொண்டார்கள். இந்த முதலீடுகள் வர்த்தகங்கள் யாரை பலப்படுத்தியது எந்த அளவில் பலப்படுத்தியது என்று கணக்கு பார்க்கவில்லை. ஆனால் புலிகள் ஏ9 இல் வரி கேக்கிறார்கள் என்று சிங்களவரை விட அதிகமாக புறுபுறுத்தார்கள்.

தமிழரின் எதிர்பார்ப்பு வெளியக சுயநிர்ணய உரிமையோடு பிரிந்து சென்று தனிநாடு அமைக்க வேண்டும் என்றால் அந்தப் பிரிவிற்கு தயாராக வேண்டும். அதாவது சிறீலங்கா இறுதியில் தனது ஒட்டுமொத்த தேசிய பலத்தையும் ஒன்று திரட்டி போர் தொடுக்கும் அதை எதிர்கொண்டே ஆகவேண்டும். இது இறுதி யுத்தத்தின் இறுதி அத்தியாயம் வரை தொடரும் எல்லைக் கிராமங்களிற்காக சிறீலங்காவும் ஓர்மத்தோடு மோதும்.

சிறீலங்காவில் மாத்திரமல்ல உலகெங்கும் பரந்து வாழும் சிங்களவர்களையும் எழுச்சி கொள்ள வைக்கும் நடவடிக்கைகள் துரிதமாக நடக்கிறது. இதுவும் தவிர்க்க முடியாததும் எதிர்பார்த்ததும் தான். எம்மைப் பொறுத்தவரை எமது உலகினுள் இருந்தபடி சர்வதேச மயப்படுத்திவிட்டம் இறுதிப் போர் என்று 2001 இல் நடந்ததை வைத்து இன்றும் நீட்டி முழங்கின படியிருக்கிறம். எதிரியை தனியே ஊழல்கள் நிறைந்த அரசியல் தலமையால் வழிநடத்தப்படும் கூலிக்கு மாரடிக்கும் படைகளாகத்தான் எண்ணி சிற்றின்பம் கண்கிறோம். 2001 இல் இருந்த எதிரிக்கும் இன்றை எதிரிக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதை மறந்து அல்லது மறைத்து பூசிமெழுகுவதற்கு பெயர் உளவுரணைப் பேணும் பிரச்சார தந்திரம் அல்ல. எதிரியை சரியாக மதிப்பிடாது செய்யும் தற்கொலை.

சிங்கள தேசியத்தின் எழுச்சி (சிறீலங்காவிலும் ஏனைய நாடுகளிலும்) முழு வடிவம் பெறும் பொழுது புலம்பெயர்ந்த தமிழருக்கு (போராட்ட ஆதரவாளர்கள், விசிலடிச்சான் குஞ்சுகள், எதிர்பாளர்கள், கண்டும் காணாது இருந்தவர்கள் என எல்லாத் தரப்பிற்கும்) பல விடையங்கள் புலப்படும். அதுவரை தாயகத்தில் போராட்டம் பாதுகாக்கப்பட்டால் வெற்றி கிடைக்க சந்தர்ப்பம் உண்டு.

பொங்கு தமிழில் பேசியவர்கள் "மன்னராட்சி" "மேற்குலகம் காலில் வந்து விழும்" என்று குறிப்பிட்டதை விமர்சித்திருக்கிறன்.

புலம்பெயர்ந்த நாடுகளில் போராட்டங்கள் கவனயீர்ப்புகளில் பங்குபற்றுபவர்களை ஒருபோதும் பன்னாடைகள் மந்தைகள் என்றதில்லை.

தேசிய வளத்தை கோயில்களில் கோடி கோடியா கொட்டிப்போட்டு கிடைப்பதை நக்கிக்கு கொண்டு பூவை செருகிக் கொண்டு தாயக நாட்காட்டி விக்கலாம் ஒளிவீச்சு விக்கலாம் வன்னியில இருந்து தேங்காய் ஏற்றுமதி செய்யினம் புலிகள் அந்தா அடிக்கப்போகிறார்கள் இந்தா பாயப்போகிறார்கள் என்று திரிபவர்களைத்தான் மந்தைகள் என்றிருக்கிறேன் பன்னாடைகள் என்றிருக்கிறேன்.

இறுதியுத்தம் கிளிநெச்சி தொலைபேசி இலக்கம் தாறன் அடிச்சுக் கேளுங்கோ தயார்படுத்தல் பற்றி எண்டவை கோவில் மணியை உருக்கி வன்னிக்கு அனுப்புவம் ஸ்கை கார்டாலை வெட்டி விழுத்தலாம் எண்டவை தான் இண்டைக்கு சிறீலங்கா தன்னுடைய எல்லா வளத்தையும் போருக்கு திருப்பி விட்டிருக்கு எண்டு புலம்பீனம்.

போராட்டம் எங்கையோ போட்டுது பிரேமதாச காலம் மாதிரி அல்ல எண்டு இனிப்பான செய்திகளை எழுதி குசிப்படுத்தினவை தான் இண்டைக்கு தங்கடை ரிவிகேம் அனுபவத்தில வார்கேம் விளையாடி தமிழீழம் காணலாம் எண்டு மகிந்தவுக்கு பொன்சேக்காவுக்கும் சவால் விடுகினம்.

இளையோர் அமைப்பின் கவனயீர்ப்பு நிகழ்வுகளின் படங்களை இங்கு போட்டு நக்கல் அடித்தவர்களையும் தெரியும்.

இந்த கூத்துகளுக்கு மோகன் எண்டு ஒருத்தர் வேலை வெட்டியில்லாமல் களம் நடத்திறார்.

straight, gay, bi என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் தெரிவு. சமுதாயத்துக்கு கலாச்சாரத்திற்கு அஞ்சி வெளிப்பார்வைக்கு மூர்கமாக சம்பந்தம் இன்றி tolerance இன்றி எதிர்த்து பேசுபவர்களுக்கு உண்மையில் உள்ளுக்குள் அதில் ஒரு ஈர்ப்பு உடன்பாடு இருப்பது வழமை. அந்த உண்மை வெளியில் தெரிந்துவிடாது இருக்க படத்தட்டில் வெளி வேடம் போட்ட படி கீச்சுடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் எங்கையோ போட்டுது பிரேமதாச காலம் மாதிரி அல்ல எண்டு இனிப்பான செய்திகளை எழுதி குசிப்படுத்தினவை தான் இண்டைக்கு தங்கடை ரிவிகேம் அனுபவத்தில வார்கேம் விளையாடி தமிழீழம் காணலாம் எண்டு மகிந்தவுக்கு பொன்சேக்காவுக்கும் சவால் விடுகினம்.

இளையோர் அமைப்பின் கவனயீர்ப்பு நிகழ்வுகளின் படங்களை இங்கு போட்டு நக்கல் அடித்தவர்களையும் தெரியும்.

இந்த கூத்துகளுக்கு மோகன் எண்டு ஒருத்தர் வேலை வெட்டியில்லாமல் களம் நடத்திறார்.

straight, gay, bi என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் தெரிவு. சமுதாயத்துக்கு கலாச்சாரத்திற்கு அஞ்சி வெளிப்பார்வைக்கு மூர்கமாக சம்பந்தம் இன்றி tolerance இன்றி எதிர்த்து பேசுபவர்களுக்கு உண்மையில் உள்ளுக்குள் அதில் ஒரு ஈர்ப்பு உடன்பாடு இருப்பது வழமை. அந்த உண்மை வெளியில் தெரிந்துவிடாது இருக்க படத்தட்டில் வெளி வேடம் போட்ட படி கீச்சுடுவார்கள்.

உலகப் போர்முறை virtual games க்குள் கொண்டு வரப்பட்டால்.. கேம் விளையாடியும் வெல்லலாம் பாருங்கோ..! நீங்கள் எப்படி சிங்களப் பேரினவாத்தை தமிழர்கள் எதிர்ப்பதை சிங்களத் தேசியத்தை எதிர்ப்பதாக சித்தரிக்க முனைகிறீர்களோ.. அப்படியான ஒன்றையல்ல நாம் இங்கு சொல்கிறோம். சிங்கள தேசியம் என்பதை தமிழர்கள் அங்கீகரித்தே இருக்கின்றனர். தமிழ் தேசியத்தைப் போல சிங்களவர்களுக்கும் தமது தேசியத்தை பாதுகாக்க உரிமை உண்டு.

தமிழர்கள் சிங்களவர்களின் தேசிய இருப்புக்குரிய நிலங்களை பறிக்கப் போர் செய்யவில்லை. எனவே சிங்களவர்கள் எல்லை வரை ஓர்மமாகப் போராடி.. தங்கள் நிலத்தைக் காக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

குறிப்பாக இந்தப் போர் மாவிலாறில் ஆரம்பித்த போது கூட விடுதலைப்புலிகள் தெளிவாகக் குறிப்பிட்ட காரணத்தை திரும்பப் படித்துப் பாருங்கள். சிங்களப் பேரினவாதமே இன்று போர் முனைப்புக் கொண்டு தமிழ் தேசியத்தை வேரறுக்க நினைக்கிறது. ஆனால் தமிழ் தேசியம் சிங்களத் தேசியத்தை அங்கீகரித்தே நிற்கிறது. தமிழர்கள் சிங்களவர்களின் நிலப்பரப்பை ஆக்கிரமித்து நிற்க அல்ல போர் புரிகிறார்கள். இரண்டு தேசியமும்... தேசிய இனமும் தனக்குரிய நிலப்பரப்பில்.. தன்னைத் தானே ஆளும் அதிகாரத்தோடு இருக்க வேண்டும் என்பதற்கான போராட்டமே நிகழ்கிறது. எனவே சிங்களவன்.. ஓர்மமாப் போராடி.. எம்மை எல்லையில் கூட வீழ்த்துவான் என்று புலம்பிப் பயங்காட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை. சிங்களவனையும் உசுப்பேத்தத் தேவையில்லை. சிங்களவன்.. ஓர்மமாப் போராடுறானோ இல்லையோ தமிழர் சேனை தமிழர் நிலப்பரப்பைத் தாண்டி ஆதிக்கம் செய்ய முனையாது. என்பதை சிங்கள மக்களுக்கு தெளிவாக வலியுறுத்துவதும் அவசியம்.

சில விளங்க முடியாத உறவு முறைகளை.. தமிழர்கள் சிலர் சிங்களர்வகளோடு வளர்த்திருப்பதையே "Gay" என்பதாக குறிப்பிட்டேன். இவ்வளவு இன அழிப்புக்குப் பிறகும்.. அப்படி ஒரு ஈர்ப்பு சிங்களவனில்.. சிலருக்கு..!

புலம்பெயர் தேசங்களில் தமிழ் இளையோர் ஆரம்பத்தில் போட்டு பிடித்து பேப்பரில போடுறதுக்கு நடத்திய போராட்டங்கள் போன்ற போராட்டங்களைப் போலவா இன்று நடைபெறுகின்றன. அன்று நான் சொன்ன பல வழிமுறைகள் இன்று கையாளப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களை அன்றே நாம் வலியுறுத்தி இருந்தோம். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள தேசியத்தால் எமக்கு எதுவும் நடக்காது நாங்கள் சிங்கள பேரினவாதிகளோடே போராடுகிறோம்.நாம் முப்பது வருடங்களாக எமது தமிழ் தேசியத்தோடு (சிலபேரை தவிர்த்து) நிற்கின்றோம் ஆனால் உந்த சிங்கள தேசியம் அரசோடு இவ்வளவுகாலமும் நின்றதா ? இப்பொழுது தான் ஏதோ ஏட்டிக்கு போட்டியாக புலம் பெயர் நாடுகளில போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கியிருக்கினம் அதுவும் ஏன்? களமுனைகளில் தாம் மிகப்பெரும் வெற்றிகளை பெறுகிறோம் புலிகள் என்பது வீதம் அழிந்துவிட்டார்கள் என்று சிங்கள பேரினவாதம் பரப்புரை செய்வதால் தான்(வேறு சில காரணங்களும் உண்டு ஆனால் அவற்றின் வீதம் குறைவு) , இந்த செய்திகளை தமிழர் சேனை மாற்றிப்போடும்போது இவர்களின் சிங்களதேசியம் தாக்குபிடிக்குமா என்பது சந்தேகமே.இந்த சிங்கள தேசியத்திற்கு உண்மையாக தேசப்பற்று இருந்தால் நாட்டுக்ககாக பணம் பெறாமல் போராடமுடியுமா? முடியாது அப்படி இருக்க அது எப்படி தேசியம் ஆகும். இன்றைய நிலையில் ராணுவத்தினருக்கு ஒரு 5 மாத சம்பளம் கொடுக்கவில்லை என்றால் களத்தில் தொடர்ந்து போராடுவதற்கு எத்தனை பேர் நிற்பார்கள்? சிங்களதேசியம் அரசுக்கு முண்டுகொடுக்காமல் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது,இதை நடத்தியது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஆகும்.

நேரம் போட்டுது அப்புறம் வாறன்

Edited by suppannai

தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தை தான் எதிர்க்கிறார்கள் அதில் மாற்றுக் கருத்தில்லை. இறுதி யுத்தம் வெளியக சுயநிர்ணய உரிமை என்பது தான் தமிழர் நிலைப்பாடு என்றால் சிங்களத்தின் ஒட்டுமொத்த தேசிய பலத்தோடுதான் மோத வேண்டும். இங்கு "சிங்கள தேசியம்" என்று குறிப்பிடுவது பொருளாதார படை பலம் ஆள் அணி வலு கண்ணோட்டத்தில். இது இதுவரை நடக்கவில்லை ஆனால் ஈழப்போர் 4 இல் அதன் (சிங்கள தேசிய mobilization இன் ) ஆரம்பத்தை காணக் கூடியதாக இருக்கிறது. அதனால் தான் கடந்த கால ஒப்பீடுகள் பல வழிகளில் தற்பொழுது பொருத்தமற்றவை ஆகிறது.

இங்கு "தமிழ் தேசியம்" "சிங்கள தேசியம்" பற்றி பேசுவது mobilization கண்ணோட்டத்தில் ஆள் அணி படை பலம் மற்றும் அவற்றிற்கான potential என 2 தரப்பையும் ஒப்பிட்டு எம்மை தயாராக்க வேண்டும் என்பதற்காக. தமிழத் தேசியம் சிங்கள தேசியத்தை கொள்கைரீதியில் எதிர்க்கிறது அழிக்கப் போகிறது ஆக்கிரமிக்கப் போகிறது என்ற பிரச்சார கண்ணோட்டத்தில் அல்ல.

தற்பொழுது ஒன்றும் இல்லாது இருக்கும் தமிழர் தரப்பின் தனிநாடு உரிமை கோரல் எந்தளவு நியாயமானதாக இருந்தாலும் அதன் (தமிழ் தேசியத்தின்) பின்னால் தனது எல்லா வளங்களை திரட்டி போரிட்டு வென்றால் தான் முடியும். தனது இன்றைய நிலைப்பாடு எந்தளவு அநியாயமானது என்றாலும் தனது statu-quo அய் (தமிழர் தாயக பிரதேசம் மீதான உரிமை கொண்டாடல் உட்பட)பேணுவதற்கு சிங்களம் இறுதியில் தனது எல்லா வளங்களையும் திரட்டி போர் புரியும்.

ஒவ்வொரு நாடுகளும் தமது status-quo அய் உருவாக்குவது பேணுவது பலத்தின் அடிப்படையிலேயே அன்றி நியாயம் அநியாயத்தின் அடிப்படையில் அல்ல.

மோசமடைந்துவரும் உலக பொருளாதார நிலை எதிர்க்கட்சியின் திட்டங்களை அர்த்தமற்றதாக்கிவிட்டது. மகிந்த சகோதரர்களிற்கு தமது dynasty அய் மேலும் பலப்படுத்த வழி கொடுத்திருக்கிறது. களமுனை வெற்றிச் செய்திகள் அவை சார்ந்த பிரச்சாரங்களிற்கு அப்பால் இந்த புறச்சூழலும் சிங்கள தேசியம் மேலும் எழுச்சி கொள்ளுவதற்கான வழியை பலப்படுத்தியிருக்கிறது.

போராட்டம் இப்ப எங்கையோ போய்விட்டுது எண்டு சில்லறைக் காசில் நொட்டிப் பாத்துவிட்டு சிங்களவன் திருப்பி இறுக்கி அடிச்சவுடன் பேசி ஏதாவது சமரசமாக போனால் இழப்புகள் இருக்காது அனியாய இறப்புகளை தவிர்கலாம் அல்லது உலகப் போர்முறை virtual games க்குள் கொண்டு வரப்பட்டால்ல்ல்.... என்று காலத்துக்கு ஏற்றமாதிரி தத்துவங்கள் போச்சுக்கு பொழுது போக்கிற்கு நல்லா இருக்கும்.

போர் அற்ற இயல்பான சூழலில் சொகுசாக இருக்கும் புலம்பெயர்ந்தவர்களிற்கு எதிரியின் பலம் பற்றி விவாதிக்க முடியாது புலிகளின் பலம் பற்றி குளுக்கோஸ் ஏத்த வேணும் எண்டு தான் 2005 இல இருந்து கூத்தாடினார்கள். சிங்களவன் உங்கடை குளுக்கோஸ் தேவையை கண்டுதான் ஒவ்வொரு சந்தி சந்தியா நினைவுகல் மாவீரர் துயிலும் இல்லம் எல்லாம் தேடி தேடி படம் பிடிச்சு விடுறான்.

Edited by kurukaalapoovan

போராட்டம் இப்ப எங்கையோ போய்விட்டுது எண்டு சில்லறைக் காசில் நொட்டிப் பாத்துவிட்டு சிங்களவன் திருப்பி இறுக்கி அடிச்சவுடன் பேசி ஏதாவது சமரசமாக போனால் இழப்புகள் இருக்காது அனியாய இறப்புகளை தவிர்கலாம் அல்லது உலகப் போர்முறை virtual games க்குள் கொண்டு வரப்பட்டால்.... என்று காலத்துக்கு ஏற்றமாதிரி தத்துவங்கள் போச்சுக்கு பொழுது போக்கிற்கு நல்லா இருக்கும்.

அமைதி அமைதி... இதெல்லாம் நீங்க கண்டுக்கப்படாது... உதெல்லாம் சிங்களவனிட்ட நல்லபிள்ளை போல நடிச்சு கட்டுநாயக்காவுக்குள்ளால நழுவி வந்த வீரர்களின்.... நோகாமல் நொங்கு தின்கிற கனவு!

இன்றைக்கே புலத்தில வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்காக திட்டம் அமுல் படுத்தப்பட்டால் இங்க யாழ்களமே சனமில்லாம வெறிச்சுப் போயிடும்!

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி அமைதி... இதெல்லாம் நீங்க கண்டுக்கப்படாது... உதெல்லாம் சிங்களவனிட்ட நல்லபிள்ளை போல நடிச்சு கட்டுநாயக்காவுக்குள்ளால நழுவி வந்த வீரர்களின்.... நோகாமல் நொங்கு தின்கிற கனவு!

இன்றைக்கே புலத்தில வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்காக திட்டம் அமுல் படுத்தப்பட்டால் இங்க யாழ்களமே சனமில்லாம வெறிச்சுப் போயிடும்!

ஐயா சாணக்கியன்.. நான் சிங்களவனோட இருந்தும் எமது மக்களின் போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்தினனான் தான். அதற்காக சந்தியில நின்று நான் புலி என்று உறுமிக் கொண்டு திரிஞ்சு பொலிஸ்காரனட்ட பிடிபட்டு வாங்கிக்கட்டல்ல.

எங்கட வீட்டார் எல்லாம் தாயகத்தில தான் வாழினம். நான் எங்கட மக்களின் போராட்டத்தை வேதனைகளை அடகு வைச்சோ.. காட்டிக் கொடுத்தோ வளமா வாழனும் என்றோ இங்க வரல்ல. அப்படியான தேவையும் எமக்கில்ல..!

அப்படி ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டால் எனது தாய் மண்ணிற்கு அப்படி ஒரு கட்டாயம் எழுந்தால் வன்னிக்கும் போய் போராடத் தயாராகவே இருக்கிறேன். அதற்காக.. கா கூ வன்னிக்குப் போய் போராடப்போறன் என்று அறிக்கை விடமாட்டன். அதேநேரம் வன்னியில போராடு மக்களின் உணர்வுகளை சுமக்காமலும் மெய்மறந்து.. வாழமாட்டன்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

அப்படி ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டால் எனது தாய் மண்ணிற்கு அப்படி ஒரு கட்டாயம் எழுந்தால் வன்னிக்கும் போய் போராடத் தயாராகவே இருக்கிறேன். அதற்காக.. கா கூ வன்னிக்குப் போய் போராடப்போறன் என்று அறிக்கை விடமாட்டன். அதேநேரம் வன்னியில போராடு மக்களின் உணர்வுகளை சுமக்காமலும் மெய்மறந்து.. வாழமாட்டன்..!

நீங்கள் போவீர்கள் என்று தெரியாதா எனக்கு, அதுதானே சொன்னேன் "யாழ்களமே சனமில்லாம வெறிச்சுப் போயிடும்!" என்று...

கிளிநொச்சி நகரை நெருங்கி விட்டதாக அரசு அறிவித்துள்ளது!

மன்னவன் ஏன் இன்னும் தயக்கம்?

சென்றுவாருங்கள் வென்றுவாருங்கள்!

Edited by சாணக்கியன்

இந்த கூத்துகளுக்கு மோகன் எண்டு ஒருத்தர் வேலை வெட்டியில்லாமல் களம் நடத்திறார்.

அவருக்கு உதவியாய் இணையவன், வலைஞன், யாழ்பிரியா, யாழ்பாடி எண்டு உதவியாளர்கள் வேற. ஹிஹி

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி நகரை நெருங்கி விட்டதாக அரசு அறிவித்துள்ளது!

மன்னவன் ஏன் இன்னும் தயக்கம்?

சென்றுவாருங்கள் வென்றுவாருங்கள்!

அடடா உங்கட பாசமுகு சிங்கள அரசு அறிவிச்சிட்டுதோ. வன்னிக்காட்டுக்குள்ளால நடந்து வந்து கிளிநொச்சியில இத்தனைக்கு நிற்க வேண்டிய படை.. இன்னும்... கூப்பிடு தொலையிலையே நிற்குது. முடியல்ல. நினைச்சா சிரிப்பா இருக்குது.

ரத்வத்தையும் கிளிநொச்சி.. மாங்குளம்.. முருகண்டி.. எல்லாம் பிடிச்சுக் கொண்டுதானே நின்றவர். அப்புறம்.. என்ன.. புதிசா உங்கட அரசு.. புடிக்கிறது..!

மன்னவனுக்கு வெளி வேலை அதிகமா இருக்குது. சிங்கள அரசோட கொச்சுப்பட்டுக் கிடக்கிற மரத்துப்போனதுகளுக்கு உணர்ச்சி ஊட்டிற வேலை கொஞ்சம் அதிகமா இருக்குது..! :rolleyes:

Edited by nedukkalapoovan

அந்த களத்தில வேலை வெட்டி இல்லாமல் பந்தி பந்தியா எழுதி வாழ்க்கை வெறுத்தும் கொஞ்ச பேர்

Edited by பல்லவன்

அழகா சிரிக்கிறீங்க நெடுக்கு... சரி சரி என்னோட கதைச்சு மினக்கெடாம... உணர்ச்சியூட்டுற வேலையை பாருங்க!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவருக்கு உதவியாய் இணையவன், வலைஞன், யாழ்பிரியா, யாழ்பாடி எண்டு உதவியாளர்கள் வேற. ஹிஹி

ஆமால்ல

  • கருத்துக்கள உறவுகள்

மோசமடைந்துவரும் உலக பொருளாதார நிலை எதிர்க்கட்சியின் திட்டங்களை அர்த்தமற்றதாக்கிவிட்டது. மகிந்த சகோதரர்களிற்கு தமது dynasty அய் மேலும் பலப்படுத்த வழி கொடுத்திருக்கிறது. களமுனை வெற்றிச் செய்திகள் அவை சார்ந்த பிரச்சாரங்களிற்கு அப்பால் இந்த புறச்சூழலும் சிங்கள தேசியம் மேலும் எழுச்சி கொள்ளுவதற்கான வழியை பலப்படுத்தியிருக்கிறது.

அண்ணாச்சி.. சிங்களவங்கள் நாலு பேரை சிங்களப் பேரினவாத அரச தூதரகம் தூண்டி விட கொடிபிடிக்கிறதில இல்ல.. சிங்கள தேசியம்.

உது சிங்களத் தேசியத்தின் உணர்ச்சிப் பெருக்கா நீங்கள் சித்தரிக்கிறீங்களே ஒழிய.. உண்மையில் புலம்பெயர் தேசங்களில் தமிழ் தேசிய எழுச்சியை மழுங்கடிக்கவும்.. தமிழக எழுச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமையிலும்.. சிங்களப் பேரினவாதம் போடும் கூத்தே இது.

சிங்கள தேசியம்.. சாப்பாட்டுக்கு பாணுக்கு பருப்புக்கு வழியில்லாமல் தவிக்குது. இராணுவ வீரர்களின் மரணத்துக்கு ஒப்பாரி வைச்சிட்டு இருக்குது. அதுக்குள்ள... நீங்கள்.. எழுச்சி.. குளிர்ச்சி.. என்று கதையளந்து கொண்டு திரிகிறீர்கள்.

சரி அப்படி சிங்கள தேசியம் எழுச்சி பெற்றிட்டா.. என்ன தமிழ் தேசியம் இறந்து போயிடும் என்று பயப்பிடிறியளோ.. இல்ல தமிழ் தேசியம் மழுங்கடிக்கப்பட்டிரும் என்றியளோ..??! சிங்களப் பேரினவாதம்.. இருக்கும் வரை.. தமிழ் தேசியம் மழுங்கடிக்கப்பட முடியாது..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த களத்தில வேலை வெட்டி இல்லாமல் பந்தி பந்தியா எழுதி வாழ்க்கை வெறுத்தும் கொஞ்ச பேர்

room போட்டு think பண்ணுவாங்களோ!!!!

room போட்டு think பண்ணுவாங்களோ!!!!

எனக்கெண்டா எதோ (பச்ச)தண்ணி போட்டுட்டு யோசிக்கிற மாதிரி தான் தெரியு து, ஏன் யோசிக்கணும் தானாய் வரும் தானே

வந்த புதிசில எல்லாம் ஒரே குழப்பமாய்தான் இருந்தது, இப்பிடியும் எழுதுவாங்கள் , அப்பிடியும் எடுதுவாங்கள்.

தவற சுட்டிகாட்டிறம் எண்டுவாங்கள், பிறகு நடுநிலை எண்டு பல்டி அடிப்பினம்

இப்ப கொஞ்சம் விளங்கிட்டுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா... ஆஹா.. ''ஆரம்''பிச்சிட்டாங்கய்யா....

சிங்களர்கள் ஒன்று கூடினர் சொற்ப அளவில். அனுமதி வழங்கியதை பொத்தி வைத்தாலும் ஒன்று கூடியதை அறிந்த தமிழர்கள் சிங்களரை விட அதிக எண்ணிக்கையில் கூடினர். காவல்துறை திகைத்தது. தமிழரை வளைத்தது. தமிழரில் ஒருவர் வெட்டியாக குதர்க்கம் பேசாத ஒரு நல்லவர் கேட்டார் 'எங்களை ஏன் தடுக்கிறியள். இலங்கை மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி உள்ளது தானே' காவலர் சொன்னார் 'இலங்கையின் கொடி சிங்கம். நீ வைத்திருப்பது புலி'.. கேட்டவன் சட்டென்ற்று புலிக்கொடியை இறக்கினான் பிரன்ஸ் கொடியை ஏந்தினான். இப்ப நான் போலமா.. போலாம் ஆனால்.. பிரான்ஸ் தெருக்கள் புரட்சியின் பாதைகள். உங்களுக்குச் சொந்தமானவை. இப்போது குப்பையை எடுத்துக்கொண்டு வெள்ளம் ஓடுது. அதுல கால் கழுவப்போறாயா...

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சமாதான ஒப்பந்தம் போட்டதாலதான் சிங்களதேசியம் எழுச்சி பெற்றதாக குறுக்கிஸ் சொல்லுறார். அட இந்த விசயம் தலைவருக்கு தெரியாமல் போச்சே! இங்க இருக்கிறவங்களுக்குத்தான் தமிழ்தேசியத்தை வளர்க்கத் தெரியாமல் இருக்குது. நீங்களாவது இந்த வெட்டி (ஒட்டிற) வேலையை விட்டிட்டு தமிழ்த்தேசியத்தை வளர்ப்பதற்கு முன்வரலாமே? அதுதான் யாழ்களத்திலே வகுப்பெடுக்கிறன் எண்டு சொல்லிடாதையுங்கோ! பலன் இருக்காது. ஏனென்றால் இஞ்ச இருக்கிறவங்கதான் மந்தைகளாச்சே!!!!!!

போராட்டம் முன்னகரும் பொழுது சிங்கள தேசிய எழுச்சியை தவிர்க்க முடியாது.

அதன் அர்த்தம் போராட்டம் முன்னகர கூடாது என்பது அல்ல.

மாறாக போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தது போல் எதிரி இருப்பான் (ஊழல் நிறைந்த அரசியல் தலமை கூலிக்கு மாரடிக்கும் சிங்கள சிப்பாய்கள்) என்று தொடர்ந்து எதிரியை குறைத்து மதிப்பிடுவது தவறு.

இந்த புதிய சவாலை சரியாக நாம் உணர வேண்டும் எம்மை தயார்படுத்த வேண்டும் இல்லாவிட்டால்

-1- இதுவரை பெற்ற முன்னேற்றங்களை தக்க வைக்க முடியாது

-2- அடுத்த கட்டத்திற்கும் நகர முடியாது.

குறித்த கால எல்லைக்குள் இவை 2 உம் நடை பெறவிட்டால் போராட்டம் நிரந்தர பின்னடைவை அழிவை சந்திக்கும்.

அதாவது போராட்டத்தின் இன்றைய வழர்ச்சி நிலைக்கு ஏற்ற மாதிரி அதனை தாங்கும் மக்களின் சிந்தனைகள் செயற்பாடுகள் கட்டமைப்புகள் பங்களிப்புகள் (transform) மீளஅமைக்கப்படாது பழம் பெருமை பேசிய படி இருந்தால் அழிவு நிச்சையம். இதனை தான் இன்று கண்டு கொண்டிருக்கிறம்.

சிங்கள பேரினவாதம் இருக்கும் வரை போராட்டம் கரந்தடி முறையிலாவது தொடரும் என்பது வெறும் rhetoric. அது யதார்த்த அரசியலுக்கு ஒவ்வாதது நகைப்பிற்குரியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.