Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருக்கடி மிகுந்த காலகட்டத்திற்குள் கிழக்கு வன்னி - வன்னியன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெருக்கடி மிகுந்த காலகட்டத்திற்குள் கிழக்கு வன்னி - வன்னியன்.

ஞாயிறு, 30 நவம்பர் 2008, 08:18 மணி தமிழீழம் []

யாவரும் எதிர் பார்த்துக் காத்திருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவீவர் நாள் கொள்கைப்பிரகடண உரை பலரது எதிர்பார்ப்புக்கும் மாறாக வித்தியாசமான கோணத்தில் அமைந்திருப்பதனையும் வன்னிப் போர் நெருக்கடி தொடர்பாக அவர்கள் பெரிய அளவிலான நெருக்கடிகளை சந்தித்திருக்கின்ற இந்த வேளையிலும் அவரது நிதானமான போக்கினை இவ்வுரை பறை சாற்றி நிற்கிறது.

வன்னிப் போர் தொடர்பாக அவர் தனது உரையில் எதனையும் பெரிய அளவில் அலட்டிக் கொள்ள விரும்பவில்லை. நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணத்தில் ஏற்பட்ட பல சரிவுகள், திருப்பங்கள், பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், நாசச் செயல்கள், புயலாக எழுந்த நெருக்கடிகள் என்பவற்றுடன் ஒப்பிடும் போது இன்றைய சவால்கள் எமக்கு பெரியனவல்ல. என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சொல்லுக்கு முன் செயல் என்பதுதான் அவருடைய பாணி. அதனையே அவர் இவ்விடயத்திலும் கடைப்பிடிக்கப் போகின்றார் என்பது தெளிவாகிறது.

மாவீரர் தினத்தன்று கிளிநொச்சியைக் கைப்பற்றி வெற்றிச் செய்தியை தென்னிலங்கைக்கு அறிவிக்கப் போவதாக சூளுரைத்த படைத்துறை. கிளிநொச்சியை நோக்கி மும்முனைகளில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகள் யாவற்றையும் கடும் எதிர்த் தாக்குதலை நடத்தி முறியடித்து படையினருக்குப் பேரிழப்பை ஏற்படுத்தினர். குஞ்சுப் பரந்தன் நோக்கியும், புதுமுறிப்பு நோக்கியும், முறிகண்டி இரணைமடுச் சந்தி நோக்கியும் பெருமெடுப்பில் நகர்ந்த படையினர் புலிகளின் முறியடிப்பு படையணிகளின் வியூகத்தினுள் சிக்கி சின்னாபின்னப் பட்டுப் போனது. இதில் ஏற்பட்ட இழப்பு செய்தித் தணிக்கைகள் மூலம் வெளிவராவிட்டாலும் காலப்போக்கில் அதனது தாக்கம் தென்னிலங்கை அடிமட்டச் சிங்களச் சமூகம் உணரத்தான் போகின்றது.

வடபோர்முனையில் கிளிநொச்சியும் அதனையடுத்த பரந்தனும் இன்றைய நிலையில் படைத்துறையினரின் உயர்ந்த பட்ச இலக்கு. இவ்விலக்கினை எட்டுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாகவே உள்ளது. ஏனெனில் நீண்ட நாட்களாக தற்காப்புச் சமரில் ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மிகவும் சுருங்கி விட்டது. வன்னிப் பெருநிலப்பரப்பின் 25 சதவீதப்பகுதியே தற்போது அவர்களின் இறுக்கமான ஆளுகைக்குட்பட்ட பிரதேசமாக இருப்பதனால் மேன் மேலும் பின்நகர்வுகளை செய்ய முடியாத நிற்பந்தம் ஏற்பட்டு விட்டது. இதனாலேயே படையினரின் முன்நகர்வு முயற்சிக்கு என்றுமில்லாதளவிற்கு எதிர்த் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

கிளிநொச்சி நகருக்கு மிக அண்மையாகவே படையினர் நிலையெடுத்திருக்கின்ற நிலையிலும் கண்ணுக்கெட்டிய தூரத்திலுள்ள கிளி நகரை நெருங்கமுடியாமல் உள்ளது. அவ்வாறே கிளாலி, முகமாலை, கண்டல், நாகர்கோவில் முன்னரங்கப் பகுதிகளில் சில இடங்களில் கடந்த வாரம் முன்னரங்கக் காப்பரண்கள் சிலவற்றை படையினர் கைப்பற்றியிருந்தது தெரிந்ததே ஆனால் அங்கு தொடர்ந்து நிலைகொண்டிருக்க முடியாமல் தற்போது பபடைகள் பின்வாங்கி தமது பழைய நிலைக்கு சென்pறு விட்டதாகவே களமுனைத் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

கிளிநொச்சிப் பகுதியும், முகமாலைப் பகுதியும், விடுதலைப் போராட்டத்தின் வாழ்வுக்கான போராட்ட களம். எனவே இப்பகுதியில் ஏற்படுகின்ற இராணவ பாதகத் தன்மை கிழக்கு வன்னியின் இருப்பை தலைகீழாக மாற்றவல்லது. எனவே இப்பகுதிக்கான சண்டை என்பது விட்டுக் கொடுக்க முடியாத அல்லது இழக்கப்பட முடியாத கேந்திர முக்கியத்துவத் தன்மை வாய்ந்தது. எனவே தான் மேற்குவன்னியில் முழுமைப் பகுதியையும் படிப்படியாக விட்டுக் கொடுத்த புலிகள் இக்களமுனையில் கிளாலி தொடக்கம் நாகர் கோயில் வரையிலான முன்னரங்கப் பகுதி போர் தொடங்கிய நாள்முதல் இன்று வரை ஒரு அங்குலம் கூட இராணுவ ஆக்கிரமிப்புக்கு விட்டுக் கொடுக்கப்படவில்லை. என்பதிலிருந்து இப்பிரதேசத்தின் புவியியல், இராணுவ கேந்திர முக்கியத்துவத் தன்மையை புரிந்து கொள்ள முடியும்.

ஏ9 வீதியை முழுமையாக தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவராமல் ஏ32 வீதி வழியே பூநகரியூடான யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப் பாதை பாதுகாப்பானதாக இருக்கப் போவதில்லை.

ஏனெனில் யாழ்க்குடாவுடன் ஏ32 வீதியை இணைப்பதற்கு சங்குப்பிட்டியிலிருந்து கேரைதீவுக்கு இடைப்பட்ட கடல் நீரேரிப் பகுதியில் சிறிது தூரத்திற்கு படகுப் பயணம் மேற்கொள்வது சிரரமானதும், பாதுகாப்பற்றதும் கூட. எனவே தற்போதைய நிலையில் யாழ்ப்பாணத்திற்கான பூநகரியூடான தரைவழிப் பாதை என்பது பெரிய அளவில் பயனற்றதொன்றாகவே கருத முடியும்.

எனவேதான் ஏ9 வீதியை இலக்கு வைத்து மாங்குளத்தில் ஊடறுப்புத் தாக்குதலைச் செய்து வீதியைக் குறுக்கறுத்து ஆறு மைல் தூரத்திற்கு பெட்டியடித்து நிலை கொண்டதனால் கிழக்கு வன்னியின் தென்னரைப் பாகத்திலிருந்து புலிகள் பின்வாங்கி விட்டனர். இதனால் இன்று மாங்குளம் கிழவன்குளம் தொடக்கம் ஓமந்தை வரையான கிட்டத்தட்ட 25 மைல் தூரத்தில் இராணுவப் பெட்டிக்குள் அடங்கும் ஆறுமைல் தவிர்ந்த ஏனைய பகுதி இன்று யாருமற்ற சூனியப்பிரதேசமாகக் கிடக்கிறது.

அதுமட்டுமல்லாமல் வவுனியா வடக்கு பிரதேசச் செயலகப் பிரிவுக்;குட்பட்ட நெடுங்கேணி, குளவிசுட்டான், நைனாமடு, சின்னடம்பன், கனகராயன்குளம், புளியங்குளம், புதூர், அனந்தர்புளியங்குளம், மருதோடை, வெடிவைத்தகல்லு, ஊஞ்சால்க்கட்டி, மற்றும் பன்றிக்கெய்தகுளம், சேமமடு ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பரிய பிரதேசம் சூனியப்பிரதேசமாக மாற்றமடைந்திருக்கின்றது. காரணம் மாங்குளத்திலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்த படையினர் ஒலுமடுக்கிராமத்தைக் கைப்பற்றியதோடு அங்கிருந்து நேர் கிழக்காக காடுகளுக்கூடாக நகர்ந்து தண்ணிமுறிப்புக் குளப்பகுதியில் நிலைகொண்டிருக்கும் 59வது டிவிசன் படையினருக்கிடையில் தொடர்ச்சியற்ற இணைப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

எனினும் இப்பகுதியினுள் படையினர் நுழைவதை தவிர்த்திருக்கின்றனர். காரணம் இப்பெரும்பகுதியில் நிலைகொள்வதற்கு பெருமெண்ணிக்கையிலான படையினர் தேவைப்படுவதனால் படைத்துறையினருக்கு ஏற்பட்டிருக்கும் ஆட்பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கு இப்பகுதியில் நிலைகொள்வதை இராணுவம் தவிர்த்திருக்கின்றது. என்றே சொல்லலாம். இப்பகுதியில் படையினர் வலுவாக நிலை கொள்வார்களேயானால் கிழக்கு வன்னியில் ஏ9, ஏ34, ஏ35 ஆகிய மூன்று வீதிகளும் இணையும் முக்கோணப்பிரதேசத்தினுள் தான் ஒட்டுமொத்த வன்னி மக்களும் தஞ்சமடைந்திருக்கின்றனர். அவர்களின் நிலை மேன்மேலும் ஆபத்தானதொன்றாகவே மாறிவிடும்.

எனவே இவ்வாறு மக்கள் செறிவாக ஒடுக்கப்பட்டிருக்கின்ற கிழக்கு வன்னியின் வட அரைப்பாக முக்கோண வலயத்தினை நோக்கி படையினர் நகர்வார்களேயானால் அதனை எதிர்த்து புலிகளும் மூர்க்கமான தாக்குதலை மேற்கொள்வது தவிர்க்க முடியாததொன்றாகவே அமையும். அவ்வாறு சண்டைகள் உக்கிரமடைந்தால் படையினரின் கடுமையான ஆடட்லறிப் பல்குழல் எறிகணை வீச்சுக்கும், விமானத் தாக்குதலுக்கும் இப்பிரதேசம் உள்ளாகும் பட்சத்தில் மிகப்பெரும் மனிதப் பேரவலம் ஏற்படுவது மிகக்கசப்பான உண்மையே. இதனை புலிகளும் நன்கறிவர். எனவே படையினரின் இத்தந்திரோபாயத்தின் மூலம் குறிப்பிட்டளவு வன்னிமக்களை தம்பக்கம் கவர்ந்துவிட முடியும் என நம்புகின்றனர். ஆனால் இதற்கெதிராக புலிகள் என்னதான் மாற்று வியூகம் எடுக்கப் போகிறார்கள் என்பதிலேயே வன்னிமக்களின் வாழ்வு தங்கியுள்ளது.

அடுத்து மணலாற்றுப் பகுதியினூடாக முன்னகர்ந்த 59 வது டிவிசன் படையினர் மணலாற்றுக் காட்டுப்பகுதியின் பெரும்பகுதியில் நிலைகொண்டுள்ளதோடு தணிணிமுறிப்புக் குளப்பகுதியையும், குழுழ முனைப்பகுதியையும் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்கின்றனர். இதனால் கிழக்குக் கடற்கரையிலிருந்து குழுழமுனை, தண்ணிமுறிப்பு, தட்டாமலை வரையான வீதிக்கு தெற்குப்புறம் முழுவதும் படையினர் நிலைகொண்டிருப்பதனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய சனச்செறிவு மிக்க முள்ளியவளை, தண்ணீரூற்று ஆகிய பகுதிகள் இராணுவ நிலையிலிருந்து ஆறு அல்லதுn ஏழு மைல்கள் தூரத்திற்குள்ளேயே உள்ளடங்குவதனால் இங்கிருந்தும் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உள. இது இவ்வாறிருக்க கடந்த வாரம் புலம்பெயர் தமிழ்ஊடகமொன்று முள்ளியவளையை இராணுவம் கைப்பற்றியதாக செய்தி வெளியிட்டு புலம்பெயர் மக்களை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டதும், தெரிந்ததே.

இவ்வாறு வன்னிமீது மேற்கொள்ளப்பட்ட படைநடவடிக்கைகளுக்கு எதிராக படிப்படியாக தந்திரோபாயப் பின்வாங்கல்களைச் செய்து படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியவாறு மேற்கு வன்னியையும் இழந்து தற்போது கிழக்கு வன்னியின் தென்னரைப் பாகத்தையும் விட்டுக் கொடுத்து கிழக்கு வன்னியின் வடஅரைப்பாகத்தில் செறிவாக ஒதுங்கி நிலையெடுத்திருக்கும் விடுதலைப்புலிகள் மேன்மேலும் பின்வாங்குவதற்கோ அல்லது விட்டுக் கொடுக்கக் கூட நிலப்பகுதிகளோ இல்லை என்ற நிலையை அடைந்திருப்பதனால் இவ்வருட இறுதியும் புதிய வருட ஆரம்பமும் வன்னிக் களமுனையில் யாரும் எதிர்பார்க்காத இராணுவச் சமநிலையை ஏற்படுத்தப் போகின்றது. என்பது மட்டும் உண்மை.

http://www.pathivu.com/news/682/34//d,view.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சிப் பகுதியும், முகமாலைப் பகுதியும், விடுதலைப் போராட்டத்தின் வாழ்வுக்கான போராட்ட களம். எனவே இப்பகுதியில் ஏற்படுகின்ற இராணவ பாதகத் தன்மை கிழக்கு வன்னியின் இருப்பை தலைகீழாக மாற்றவல்லது. எனவே இப்பகுதிக்கான சண்டை என்பது விட்டுக் கொடுக்க முடியாத அல்லது இழக்கப்பட முடியாத கேந்திர முக்கியத்துவத் தன்மை வாய்ந்தது. எனவே தான் மேற்குவன்னியில் முழுமைப் பகுதியையும் படிப்படியாக விட்டுக் கொடுத்த புலிகள் இக்களமுனையில் கிளாலி தொடக்கம் நாகர் கோயில் வரையிலான முன்னரங்கப் பகுதி போர் தொடங்கிய நாள்முதல் இன்று வரை ஒரு அங்குலம் கூட இராணுவ ஆக்கிரமிப்புக்கு விட்டுக் கொடுக்கப்படவில்லை. என்பதிலிருந்து இப்பிரதேசத்தின் புவியியல், இராணுவ கேந்திர முக்கியத்துவத் தன்மையை புரிந்து கொள்ள முடியும்.

இப்படித்தான் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக பல் இடங்கள் வன்னியில் இருந்தன. அவையெல்லாம் தற்போது சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் வந்துவிட்டன. அதுபோல இப்பகுதிகளும் இராணுவத்தின் ஒருமுகப்படுத்தப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகும்போது என்ன நடக்கும் என்பதை யாரும் சொல்லமுடியாது. இக்பால் அத்தாஸ் கூட புலிகள் வலிந்த தாக்குதலை மேற்கொள்ளச் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன என்று கூறியுள்ளார்..

சிலவேளை சில யாழ்கள ஆய்வுகளின்படி, இராணுவம் முல்லைத்தீவைக் கைப்பற்றும்போது புலிகளின் மரபுவழிப் படைகள் யாழ்ப்பாணத்தில் நின்றாலும் ஆச்சரியமில்லை!

Edited by kirubans

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கூலிக்காரனை ஒரு நாள் சுதந்திரமாக வேலை செய்து சாப்பிடவேண்டும் என்பதற்க்காகவே போராட்டம் பிச்சை எடுப்பதற்க்காக அல்ல

சிங்களவன் நமது இடங்களில் இல்லை என்றால் அவனது உணவு யாருக்கு வேண்டும்

இன்று நமது வளங்களை சுரண்டி வேறு ஒரு நாட்டுக்க்கு கொடுக்கிறான் அது யாருடைய அந்த மக்களுடையதுதானே ஏன் நிங்கள் போய் கேட்கிறது இது எங்கள் வளம் எடுத்துசெல்லாதிங்கோ என்று சொல்ல முடியுமா???

மக்களை பற்றி சிந்திக்கும் நீங்கள் வேறு ஒரு இடத்திலிருந்து எழுதுவது வேதனை மதுகா

எனது வீட்டை சுத்திவர எதிரி நின்று கொட்டித்தீர்க்கும்போது

அவனை விட்டுவிட்டு

என்னை

ஏன் சமைத்துச்சாப்பிட உன்னால் முடியவில்லை

விறகு அரிசி எண்ணைய் என எல்லாவற்றையும் வெளியிலிருந்து எதிர்பார்க்கின்றாய் என்று

கொக்கரிக்கும் பேதிலியை என்னவென்பது????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழி சொல்வது இலகு வழி சொல்வது கடினம் :)

இப்படித்தான் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக பல் இடங்கள் வன்னியில் இருந்தன. அவையெல்லாம் தற்போது சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் வந்துவிட்டன. அதுபோல இப்பகுதிகளும் இராணுவத்தின் ஒருமுகப்படுத்தப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகும்போது என்ன நடக்கும் என்பதை யாரும் சொல்லமுடியாது. இக்பால் அத்தாஸ் கூட புலிகள் வலிந்த தாக்குதலை மேற்கொள்ளச் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன என்று கூறியுள்ளார்..

சிலவேளை சில யாழ்கள ஆய்வுகளின்படி, இராணுவம் முல்லைத்தீவைக் கைப்பற்றும்போது புலிகளின் மரபுவழிப் படைகள் யாழ்ப்பாணத்தில் நின்றாலும் ஆச்சரியமில்லை!

கிருபன் நீங்கள் எல்லாம் தேசியத் தலைவரை புரிந்துகொள்ள முடியுமென்றால் இதுவரைக்குள் மகிந்தவின் கனவு நனவாகி இருக்கும். நீங்கள் நாங்கள் எல்லாம் அவரை புரிந்து கொள்ள முடியவே முடியாது. சகோதரா எல்லாம் நன்றே முடியும் விரைவில் எல்லா இணையங்களும் சுறுசுறுப்பாகும். நல்ல செய்திகள் கிடைக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் நீங்கள் எல்லாம் தேசியத் தலைவரை புரிந்துகொள்ள முடியுமென்றால் இதுவரைக்குள் மகிந்தவின் கனவு நனவாகி இருக்கும். நீங்கள் நாங்கள் எல்லாம் அவரை புரிந்து கொள்ள முடியவே முடியாது. சகோதரா எல்லாம் நன்றே முடியும் விரைவில் எல்லா இணையங்களும் சுறுசுறுப்பாகும். நல்ல செய்திகள் கிடைக்கும்

நான் கடவுள் இல்லை என்பதை ஒத்துக் கொள்ளுகின்றேன்..

இவ்வருட மாவீரர் உரையில் பலரும் எதிர்பார்த்த செய்தி கிடைக்கவில்லை என்பது வாராந்த ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிகின்றது. எனவே மீண்டும் நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

உங்கள் தாயை எப்படி நம்புகின்றீர்களோ அப்படியே தலைவரையும் நம்புங்கள்

புலி பாயும் அதுவும் விரைவில் அதற்காக பல நாடகங்கள் அரங்கேறுகின்றன. செக்மேற் வைத்தவர்களுக்கே வைக்கப்பட்டுள்ளது.

எல்லாமே நன்றாக நடைபெறுகின்றது. பாயப்போவதுதான் காத்திருக்கின்றது.

நான் கடவுள் இல்லை என்பதை ஒத்துக் கொள்ளுகின்றேன்..

இவ்வருட மாவீரர் உரையில் பலரும் எதிர்பார்த்த செய்தி கிடைக்கவில்லை என்பது வாராந்த ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிகின்றது. எனவே மீண்டும் நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

மாவீரர் தின உரையில் என்ன எதிர்பார்த்தீர்கள் ? என்ன அதில் இல்லை? ஒருக்கால் தெளிவாகச் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தவணை முறையில் தமிழீழம் கேட்கப்படும் என நினைத்தாரோ???

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று எழுதிய கருத்துக்கள் எங்கே போய்விட்டன........ஓ மட்டறுத்தினரின் வேலையா :o

தலைவருக்கு பாடம் கற்பிக்க நினைக்காதீர்கள் மக்களை பற்றி கவலைப்படாமல் இருந்திருந்தால் இந்த போராட்டம் இன்று இந்த நிலமைக்கு வந்திருக்குமா[ தங்களது மக்கள் கஞ்சியோ கூழோ நிம்மதியாக குடிக்கவேண்டும்] இதுதான் எல்லோரினதும் நினைப்பு

இது நேற்று கருத்து எழுதிய சகோதரிக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தின உரையில் என்ன எதிர்பார்த்தீர்கள் ? என்ன அதில் இல்லை? ஒருக்கால் தெளிவாகச் சொல்லுங்கள்.

யாழ்ப்பாணத்தை இவ்வருட இறுதிக்குள் மீட்க முடியுமா அல்லது ஆறுதலாக புதிய வருடத்தில் மீட்க முயற்சி எடுக்கப்படுமா என்று உங்கள் எல்லோரையும் போல எதிர்பார்த்தேன்..

தவணை முறையில் தமிழீழம் கேட்கப்படும் என நினைத்தாரோ???

இன்னும் ஒரு தடவையே வாங்கவில்லை, தவணை முறையில் கிடைக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தை இவ்வருட இறுதிக்குள் மீட்க முடியுமா அல்லது ஆறுதலாக புதிய வருடத்தில் மீட்க முயற்சி எடுக்கப்படுமா என்று உங்கள் எல்லோரையும் போல எதிர்பார்த்தேன்..

இன்னும் ஒரு தடவையே வாங்கவில்லை, தவணை முறையில் கிடைக்குமா?

இன்னும் ஒரு தடவையே வாங்கவில்லை தவணை முறையில் கிடைக்குமா?

தங்கள் பைலைப்பார்த்ததில்

உங்களுக்கு வழங்கமுடியாது என எனது களணி சொல்கிறது

மன்னிக்கவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.