Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அபிசேகம்

Featured Replies

அபிசேகம்

நரகத்திலிருந்து விடுதலை கிடைத்து விட்டது. யமனுடைய கோட்டை வாயில் வரை சென்று மீண்டு வந்தாயிற்று. இது சாத்தியமா? நடக்கக் கூடியது தானா? நான் காண்பது கனவா? என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டதில் இது நனவு தான் என்று தெரிகிறது.

இனிமேல் தினம் தினம் தூக்கமற்ற நீண்ட இரவுகளாய் அம்மாவை நினைத்து கண்கலங்கி, இராப்பொழுதுகளைக் கழிக்கத் தேவையில்லை. சாப்பிடுவதற்கு வைத்திருக்கும் ஒரேயொரு தகரப் பாத்திரத்தையே இரவில் சிறுநீர் கழிக்கும் பாத்திரமாகப் பாவிக்கும் கொடுமை இனியில்லை. இன்றைக்கு யார் வருவார் எப்படியான சித்திரவதைகளைச் செய்யப் போகிறார்கள் என்ற ஏக்கம் இனியில்லை.

நாட்டைக் காக்கப் புறப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் சிங்கள அரசின் கைப்பிள்ளைகளாக மாறி தமிழர்களைக் கடத்திச் சென்று பணம் பறித்துச் சிங்கள அமைச்சர்களிடம் ஒப்படைக்கும் கொடுமையைப் பத்திரிகையிலும் வானொலியிலுமே கேட்டுக் கொண்டிருந்த எனக்கும் அந்த அனுபவம் விரையில் கிடைக்கப் போகிறது என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை. ஆனால் அந்த நரக வேதனையை கடந்த ஆறு மாதங்களாக அனுபவித்தாயிற்று. இருந்த சொத்துக்களை எல்லாம் விற்று மற்றவரிடம் கடன் வாங்கியும் அவர்கள் கேட்ட தொகையைக் எனது மாமா கொடுத்த பின்பு தான் அந்தச் சகதியினுள் இருந்து மீண்டு வந்தேன்.

ஆனால் இந்தப் பணக் கொடுக்கல் வாங்கல்கள் எதையும் அறிந்திராத அம்மாவிற்கோ இது சந்திப் பிள்ளையாரின் திருவிளையாடல் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. அதிலும் தான் கடவுளுக்குத் தருவதாக வேண்டிக் கொண்ட ‘லஞ்சம்’ தான் என்னைக் காப்பாற்றிக் கொண்டு வந்து சேர்த்து விட்டதாய் ஒரு எண்ணம்.

அம்மா பம்பரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். அவர் முகத்தில் பூரிப்பின் உச்சக் கட்ட உற்சாகம். இந்த ஆறு மாதங்களாக அவர் எவ்வளவு துன்பப்பட்டிருப்பார். பெற்ற பிள்ளை உயிருடன் இருக்கிறானா இல்லையா என்றறியாது எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார். அவை எல்லாவற்றற்குமாகச் சேர்த்து வட்டியும் முதலுமாகச் சந்தோசப்படுகிறார். எனது அம்மாவிற்குக் கிடைத்த அதிஸ்டம் கிடைக்காது எத்தனை தாய்மார்கள் தினம் தினம் துன்பப்பட்டுக்கொண்டிருக்கி

மணிவாசகன் இது நீங்கள் எழுதின கதையோ இல்லாட்டிக்கு சாத்திரி அண்ணை எழுதின கதையோ.. சாத்திரி அண்ணா சொல்லிற பாணியில கதைபோகிது. ஹிஹி.

கோயில், அபிசேகம் எண்டு எல்லாம் செலவுகள்தான். ஆனால் ஒவ்வொருத்தர் நம்பிக்கை என்ன செய்யமுடியும்? இவ்வளவு பெருந்தன்மை ஆக்களுக்கு இருக்கும் எண்டால் உலகத்தில இப்பஏன் இவ்வளவு பிரச்சனை? காசு வச்சு இருக்கிறவன் வச்சு இருக்கிறான் செலவளிக்கிறான். ஆனால் இன்னொரு மூலையில வறுமையில வாடுறீனம். இது வழமையானது தானே?

கடவுள் விசயமாவது பரவாயில்லை. ஆனால்.. இதர ஆடம்பரவிசயங்கள்.. எல்லாம் இருக்கிதுதானே?

  • தொடங்கியவர்

திருவிளையாடல் நகேஷ் பாணியில் சொன்னால் கதை என்னுடையது தான், என்னுடையது தான், என்னுடையது தான் ஐயா :)

ஆபிசேகம் போன்றவற்றை கடவுள் விடயங்கள் என்று ஒதுக்கிவிடமுடியவில்லை. நான் கதையில் சொன்னது போல அன்பே வடிவான கடவுள் ஒரு ஏழைக் குழந்தை குடித்துப் பசியாறக் கூடிய பாலை தன்னுடைய சிலை மேல் ஊற்றும் படி கூறியிருப்பாரா? எனக்கென்னமோ இவையெல்லாம் பின்னால் வந்தவர்களின் இடைச்செருகல்களாகத் தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன் ஏதேச்சையாக நடந்த சம்பவம்தான் பாலைப் பெருச்சாளி தட்டி ஓடியது. இதுகூட அம்மாவின் மூளைக்குள் பகுத்தறிவைத் தூண்டியிருக்கும் என்று நம்பமுடியாது. அம்மாவின் தெய்வநம்பிக்கையை அதீதப்படுத்தியிருக்கும் என்றே தோன்றுகிறது. சிறு சம்பவத்தை புனைந்த விதம் நன்றாக உள்ளது. பாராட்டுகள் உரித்தாகட்டும்.

  • தொடங்கியவர்

நன்றி சஹாறா அக்கா

பாரம்பரியம், பழக்கவழக்கம் என்பவற்றிற்கு அப்பால் சிந்திக்காத அல்லது சிந்திக்கத் தயங்குகின்ற முன்னைய சந்ததியை விட்டு விடுவோம். ஆனால் புலம் பெயர்ந்த தேசத்தில் புத்திஜீவிகளாக இருப்பவர்கள் கூட இத்ததைக இடைச் செருகல்களை கைக்கொள்வது கவலைக்குரியது.

ஏன் எதற்கு என்று கேள்விகளை எழுப்பும் எமது அடுத்த சந்ததிக்கு இவற்றிற்கெல்லாம் எப்படியான விளக்கங்களைக் கொடுக்கப் போகிறோம்?

  • கருத்துக்கள உறவுகள்

யந்திரத்தனமான விளக்கங்கள் அற்றதான அது அப்படித்தான்... இது இப்படித்தான் என்று தெளிவில்லா நோக்கிலேயே புலம் பெயர்ந்த தேசங்களில் எங்கள் சந்ததியைப் பயணிக்கத் தூண்டுவதை நம்மவரிடையே அதிகளவில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது மணிவாசகன். நானே சிலவிடயங்களில் அதிகபடியான கேள்விகளைச் சில பெற்றோரிடம் கேட்டு முரண்பட்டிருக்கிறேன். பொறுப்பு வாய்ந்த நீயே இப்படி வியாக்கியானம் கதைத்துப் பிள்ளைகளை கெடுக்காதே என்று என்மேலேயே குற்றச்சாட்டுகளைப் போடுவதற்கு என்னுடைய நண்பர்களான தாய்க்குலம் தயங்குவதில்லை. அநேகமாக நட்பு நிலை கருதி எனக்கு உடன்பாடற்ற விடயங்களைப் பற்றி கதைப்பதைத் தவிர்த்துவருகிறேன். எமக்குள் தோன்றும் விடயங்களையே நாம் பேசத் தயங்கும்போது எப்படி?

சிந்தனை எல்லோருக்கும் இருக்கிறது.. ஆனால் 'நான்' என்ற ஆணவம்தான் எல்லோருரைய கண்களையும் மறைத்து, சிந்தனையால் பெறும் அறிவை ஓரம்தள்ளுகிறது.

போலிக் கெளரவமும் படாடோபமும் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொருவருள்ளும் உட்பட்டிருக்கும்போது, பல்வேறுபட்ட வேசங்களும் கூத்துகளும் விளையத்தான் செய்யும். இது இன்று நேற்று உருவானதொன்றல்ல.. சந்ததி சந்ததியாகத் தொடரும் தொட்டில் பழக்கம். மாற்றுவதென்னவோ முயற்கொம்புதான். :)

  • தொடங்கியவர்

எமது மதம் மற்றவர்களால் ஏளனம் செய்யப்படுவதற்கும் எமது மக்கள் இலகுவாய் மதம் மாற்றப்படுவதற்கும் சம்பிரதாயம் என்ற போர்வையில எம்மிடையே உள்ள மூடப் பழக்கங்களும் ஒரு காரணம்.

ஏனைய மதப் போதகர்கள் மக்களால் மதிக்கப்படுகிறார்கள். ஆனால் எம் மதப் பூசகர்கள் எங்களாலேயே ஏளனப் படுத்தப்படும் அளவிற்கு நடந்து கொள்கிறார்கள்.

ஆலயங்களில் இறைவனோடு பேசுவதற்கும் இடைத்தரகர்கள். அவர்களுக்குப் பணம் கொடுத்து 'ஆண்டவனுக்குத் தெரிந்த' சமஸ்கிரத பாசையில் மூல நட்சத்திரத்து மணிவாசகன் வந்திருக்கிறார். அவரைக் கவனிச்சுக் கொள்ளுங்கோ என்று சொன்னால் மட்டுமே கடவுளுக்கு விளங்கும் என்பது பணம் பறிப்பதற்கான ஒரு வியாபார தந்திரமல்லாமல் வேறு என்ன?

இதனால் தான் ஆலயம் உருவாக்குவது மிகச் சிறந்த வணிகம் என்றாகிவிட்டது. இன்றைக்கு புலம் பெயர் நாடுகளில் மிகவும் பணம் கொட்டுpகன்ற தொழிலாக 'கோயில்' மாறியிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கதையின்படி அந்த அம்மாவுக்கு பகுத்தறிவு வரா விட்டாலும்,குழந்தைக்கு அந்தப்பாலை கொடுக்காதபடியால் தான் பிள்ளையார் கோவித்துப்போட்டார் என்று நினைத்தாலே பலரின் பசியை போக்கலாம்.உங்கள் ஆதங்கத்துக்கு பாராட்டுக்கள் மணி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய மனதில் பலவருடங்களாக ஏக்கமாக இருந்த விடயம். கடவுள் என்ற பெயரால் எவ்வளவு அநியாயம் செய்கின்றார்கள்....! நான் ஒருகட்டத்தில் கோயிலுக்கு போவதையே நிறுத்திக்கொண்டேன்.... வேறு வழியில்லாமல்...!

  • தொடங்கியவர்

வணக்கம் சஜீவன், நிரூஜா

உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி

  • தொடங்கியவர்

இது தொடர்பாய் நான் எழுதிய கவிதையொன்றை இங்கே இணைக்கிறேன்

மானிடனே உனக்காக

அழகான இவ்வுலகை

அன்புடனே படைத்தவன்நான்

படைப்பிற்கு மகுடமென

மனிதனுன்னை வடித்தவன்நான்

வழிதவறிப் போகாமல்

வாழ்வதற்காய் உங்களுக்கு

சைவமதம் என்கின்ற

சர்வமதம் தந்தவன்நான்

மகத்தான இவ்வுலகை

மகிழ்வுடனே படைத்துவிட்டு

நிகழ்வதனை மட்டும்நான்

நிம்மதியாய் பார்த்திருந்தேன்

கனிவான உந்தன்மனம்

கல்லாகிப் போனதனால்

கல்லாக இருந்தவன்நான்

கடிந்திதனை எழுதுகின்றேன்

மனிதாபி மானமிங்கே

மதிப்பிழந்து போனதனால்

மனிதத்தை உயிர்ப்பிக்க

மனந்திறந்து பேசுகிறேன்

சிறப்பான படைப்பென்று

சிந்தித்த மனிதரின்று

செய்கின்ற செயலாலே

செவ்வாயைத் திறக்கின்றேன்

எளிமையின் வடிவமாகி

எல்லார்க்கும் அருளுமெந்தன்

சந்நிதியில் பணக்காரச்

சடங்குகளைத் தவிர்த்திடுவாய்

அடுத்தவரைப் பற்றித்தான்

ஆலயத்தில் அலசுகின்றீர்

வீண்பேச்சுப் பேசியெந்தன்

வெறுப்பைத்தான் தேடுகின்றீர்

உம்தந்தை என்னுடனே

உரையாடத் தயக்கம்ஏன்

இடைத்தரகர் பேசுவதில்

இஷ்;டமில்லை எந்தனுக்கு

எல்லாம் தெரிந்தவன்நான்

எம்மதமும் என்மொழியே

உம்மொழியில் எனைத்துதித்து

உயர்ந்திடுவாய் மானிடனே

ஊனுடலைத் துளைத்துந்தன்

உருக்கத்தைக் காட்டாதீர்

உம்முழைப்பை ஏழைக்கு

உவந்தளித்து மகிழ்விப்பீர்

கையுூட்டுக் கொடுக்கின்ற

காரியத்தை ஆலயத்தில்

காட்டாதீர் என்னையும்நீர்

கறைபடிய வைக்காதீர்

அபிசேகம் எனும் பெயரில்

அருமந்த திரவியத்தை

அநியாய மாக்கிவிட

ஆண்டவன் நான் சொன்னேனா

அடுத்தவேளை உணவின்றி

அழுகின்ற குழந்தைக்கு

அபிசேகத் திரவியத்தை

அளித்தென்னை மகிழ்விப்பீர்

துன்பங்கள் நேருகையில்

துவண்டுவிடும் போதினிலே

தன்மனதின் அமைதிக்காய்

தேடிநிற்பார் என்னைமக்கள்

உறவொன்றை இழந்ததனால்

உருகிநிற்கும் வேளையிலே

துடக்கென்று சொல்லிநீரும்

தடுக்கின்றீர் எனைஅணுக

துயர்நிறைந்த வேளையிலே

தூரத்தே நிறுத்திவிட்டால்

யாரிடம்தான் சென்றவர்கள்

தம்குறையைச் சொல்வார்கள்

விதிசெய்த செயலாலே

வாழ்விழந்து நிற்பவளை

விதவை எனச்சொல்லி

விலக்குகின்றீர் சடங்குகளில்

வேதங்கள் சொன்னதென்று

வேதாந்தம் பேசுகின்றீர்

அடுக்காத செயல்களுக்கும்

அர்த்தங்கள் சொல்லுகின்றீர்

எல்லோரும் சமமென்ற

எண்ணம்தான் வேதம்

மனிதநேயம் காட்டுகின்ற

மார்க்கம்தான் வேதம்

அடுத்தவர்க்காய் வாழுகின்ற

அர்ப்பணம்தான் வேதம்

இல்லார்க்குக் கொடுக்கின்ற

இன்பம்தான் வேதம்

அன்பே சிவமென்று

அருளுகின்ற சைவமதத்

தத்துவத்தைஉணர்ந்தேநீர்

தரணியிலே வாழ்ந்திடுவீர்

எங்கடை மதம் மூட நம்பிக்கை என்று நாங்களே எங்களை மூடர்களாக தாழ்த்துவதால் எதுவுமே நிகழ்ந்துவிடப் போவதில்லை. இன்றைய கலைகளின் உருவாக்கத்திற்கும், மானுட ஒழுக்கத்தின் கடைப்பிடித்தலுக்கும் மூல காரணம் ஆலயங்கள்தான்.

நம்மடை மதம் சம்பளத்தில இவ்வளவு வீதம் கட்டாயம் தா என்று 'கட்' பண்ணலை. இன்னது செய்யாவிட்டால் திருமணத்துக்கோ ஈமக்கிரியைகளுக்கோ இங்கே இடமில்லை என்றும் நிபந்தனை விதிக்கவில்லை.

சரி.. இதுதான் இப்படி என்றால்.. நம்மடை சமயத்தில போன சிலதுகள்.. உருவாடிக் கொண்டு கன்னா பின்னான்னு ஏதோ பேசீனமாம்.. அது எபிரேய மொழியாம்.. கடவுளைக் கண்டவங்களுக்கு தானாகவே அந்த மொழியில் பேச வருமாம்.. ம்.. என்னமோ.. நாம் எம்மை மூடத்தனமானவர்கள் என்று சொல்லிச் சொல்லியே மேன்மேலும் அடிமையாய் நக்கிக் கொண்டு திரிவோம்... அரோகரா!!

  • தொடங்கியவர்

வணக்கம் சோழியான்

எங்கள் மதத்தில் மூட நம்பிக்கைகள் இல்லை என்று கூறுகிறீர்களா? அல்லது அவை இருந்தாலும் பறவாயில்லை அவற்றைப் பற்றிப் பேசாமல் மூடி மறைத்து விடுவோம் என்று கூறுகிறீர்களா?

என்னைப் பொறுத்த வரை எமது மதத்தில் இருக்கின்ற இடைச்செருகல்களும் முடநம்பிக்கைகளும் நீக்கப்பட வேண்டும். நாளை எமது பிள்ளைகள் கேட்கும் கேள்விகள் தகுந்த பதில் அளிக்கக் கூட்டியதாயிருந்தால் மட்டுNடீமு எமது சமயம் வாழும்

மூட நம்பிக்கை என நீங்கள் எதைக் கூறுகிறீர்கள்?

விஞ்ஞானத்தின் அளவுகோல் கொண்டு மெய்ஞானத்தை அளக்க முற்படுகிறீர்களாயின், சகலதுமு மூட நம்பிக்கைதான்.

கிறீஸ்தவ சமயத்துடன் நமது சமயத்தை ஒப்பு நோக்கின் பாசை குறுக்கிடலாம். இஸ்லாமிய சமயத்துடன் ஒப்பு நோக்கினால் உருவம் குறுக்கிடலாம். சமயத்தைப் பொறுத்தவரையில் நம்பிக்கைதான் முக்கியமானது. நம்பிக்கைகளின் வெளிப்படுத்தல் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாகலாம். :)

  • தொடங்கியவர்

நான் விஞ்ஞானத்தைக் கொண்டு அளவிடவில்லை. சாதாரண பகுத்தறிவைக் கொண்டு கேள்வி கேட்கிறேன்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாய் இதோ ஒன்று

அபிசேகம் எனும் பெயரில்

அருமந்த திரவியத்தை

அநியாய மாக்கிவிட

ஆண்டவன் நான் சொன்னேனா

அடுத்தவேளை உணவின்றி

அழுகின்ற குழந்தைக்கு

அபிசேகத் திரவியத்தை

அளித்தென்னை மகிழ்விப்பீர்

இதற்கு உங்கள் பதில் என்ன என்று அறிய ஆர்வமாய் இருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூட நம்பிக்கை என நீங்கள் எதைக் கூறுகிறீர்கள்?

விஞ்ஞானத்தின் அளவுகோல் கொண்டு மெய்ஞானத்தை அளக்க முற்படுகிறீர்களாயின், சகலதுமு மூட நம்பிக்கைதான்.

கிறீஸ்தவ சமயத்துடன் நமது சமயத்தை ஒப்பு நோக்கின் பாசை குறுக்கிடலாம். இஸ்லாமிய சமயத்துடன் ஒப்பு நோக்கினால் உருவம் குறுக்கிடலாம். சமயத்தைப் பொறுத்தவரையில் நம்பிக்கைதான் முக்கியமானது. நம்பிக்கைகளின் வெளிப்படுத்தல் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாகலாம். :)

நாம் இந்து மதம் உட்பட்ட எந்த மதத்தையும் தவறு என்று சொல்லவில்லை. அதில் காலங்காலமாக செருகப்பட்ட இடைச் செருகல்கள் தான் தவறு என்று கூறுகின்றோம்.

எடுத்துக்காட்டாக, சிவனின் தலையில் இருந்து கங்கை வருகிறது என்று சொன்னார்கள்...! இமயத்தின் உச்சியிலே கைலாயம் இருக்கின்றது என்று சொன்னார்கள். எவரஸ்டையும் ஏறிமுடித்துவிட்டார்கள் இன்னும் கைலாயத்தைக் காணவில்லை.

ஆனால், இன்றைய விஞ்ஞான உலகின் யதார்த்தத்தின் முன்னே யாரால் இவற்றை உண்மை என்று நிரூபிக்க முடியும்...!!!

ஆரியர்களின் திட்டமிட்ட கதை உருவாக்கங்களால் உருவான கந்தபுராணம், இராமாயணம் போன்றவற்றில் கொடுங்கோலர்களாகச் சித்தரிக்கப்பட்ட சூரபன்மன், இராவணனின் வழித்தோன்றல்களாக தான் நாம்(தமிழர்கள்) இன்றும் இருக்கின்றோம். அப்போ நாங்களும் நரம்மாமிசம் தின்னும் அரக்கர்களா?

இன்னும் எனக்கு இதுவரை விடைகாணப்படாத பல நூறூ கேள்விகள் உள்ளன. சற்றே விளக்கி வையுங்கள் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கதையும் ,கவிதையும் நன்று வாழ்த்துக்கள் மணி வாசகன்

  • தொடங்கியவர்

நன்றி முனிவர்

சமயமானது இவ்வளவு காசைத் தந்து அபிசேகம் செய் என்றோ அல்லது இதைத் தந்து வேண்டுதலை நிறைவேற்று என்றோ கூறவில்லை. அது வழிபடுபவரின் மனதைப் பொறுத்து வேறுபடுகிறது.

ஒருவன் தகப்பனை பன்னோலைல சுடுகாட்டுக்கு எடுத்து செல்வான். இன்னொருவன் பல்லக்கு கட்டி தாரை தப்பட்டைகளோடை எடுத்துச் செல்வான்.. இன்னொருவன் வெள்ளை வேட்டியால சுத்தி மூடிப்போட்டு, சேமக்கலத்தோடையும் சங்கோடையும் கொண்டு போவான்.

அதைப்போல ஒருத்தன் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுப்பான். இன்னொருவன் அழைப்பிதழுடன் ஊடகங்களிளும் அறிவிப்பான். இன்னொருவன் வீடியோ எடுத்து சீடீல அழைப்பிதழ் அனுப்புவான். அது அவரவர் மனனிலையைப் பொறுத்தது. அதற்காக.. என்ன பெரிய கலியாணம்? ஏதோ மற்றவன் செய்யாததையா செய்யப் போறியள்? குழந்தைதானே பெறப் போறியள்? ஏன் மோட்டுத்தனமான செலவுகள் என்று கூற முடியுமா?

அதற்காக அவன் அந்த நிகழ்வில் பணத்தை செலவு செய்கிறான் என்பதற்காக, இன்னலுறுபவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்காமல் இருக்கிறான் என்றும் கூற முடியுமா?

அவன் தன் திருப்திக்காக செய்கிறான்.. ஊரில் என்றால் ஊறுகாய்த் தண்ணியும் சர்க்கரைத் தண்ணியும் ஊத்துவான்.. இங்கை சர்பத் ஊத்துறான்.. அங்கை முதுலாம் திருவிழாவுக்கு பவளக்கொடி கூத்தென்றால் இரண்டாம் திருவிழாவுக்கு போட்டியாக சத்தியவான் சாவித்திரி.. அடுத்தவர் வள்ளி திருமணம்.. அடுத்தவர் கண்ணன் கோஸ்டி.. மற்றவர் இரட்டையர் கோஸ்டி.. இங்கை ஒருத்தர் அவுடி என்றால் மற்றவர் பீஎம்டபிள்யூ.. அடுத்தவர் பென்ஸ்.. அடிப்படை ஒன்றுதான்.

அதுக்காக மூடநம்பிக்கை என்று சொல்லலாமோ?! இப்பிடிச் சொல்லுறதால எதுவுமே நடந்துவிட முடியாது.. மாறாக வீண் சலிப்புகளும் வெறுப்புகளும்தான் தோன்றும்.. வேண்டுமானால் தங்கள் கருத்துடன் உடன்படுபவர்கள்மாத்திரம் இதற்கு 'ஓ..' போட்டுவிட்டு போவார்கள். இதனால் என்ன பலன்?

ஆடிக் கறக்குற மாட்டை ஆடிக் கறக்கணும். பாடிக் கறக்குற மாட்டை பாடித்தான் கறக்கணும்.

திருவிழாக்களில சனம் கொட்டிச் சிந்துது என்று சொல்பவர்கள்.. அந்த கொட்டிச் சிந்துற இடத்தில ஆகக் குறைந்தது 'இன்னலுறுபவர்களுக்காக' ஒரு உண்டியலை ஏன் வைக்கக் கூடாது.. கொட்டிச் சிந்துபவன் அதிலயும் ஏதாவது போடுவான்தானே? அதைவிடுத்து.. கொட்டிச் சிந்தாமை முழுவதையும் போடு என்றால்.. அவன் என்ன நினைப்பான்? 'இவர் என்ன சொல்லுறது.. நான் என்னவும் செய்வன்..' ஏன் என்றால் அவனும் நம்ம இனம்தானே?! :rolleyes::unsure:

'அப்பு ராசா.. நீ கொட்டு.. சிந்து.. இதிலையும் கொஞ்சம் கொட்டு' என்றால்.. அவனுக்கும் கொஞ்சமாலும் யோசனை வரும்.. அதை விடுத்து 'மூடத்தனத்தைவிட்டு வா' என்றால்.. 'யோவ்... யாரையா மூடன்? நானோ? எனக்கு சின்னனில வயித்து வலி வந்தா.. அம்மா செல்லச் சந்நிதியானுக்கு நேர்ந்து அறுணாக் கயித்திலை (அரை நார்க்கயிறு) ஐம்பது சதம் முடிஞ்சு வைச்சுட்டு.. சந்நிதியாக் சுகப்படுத்துவான் எண்டுட்டு நிம்மதியாய் படுப்பா.. பேந்து வருசத்துக்கொருக்கா செல்வச் சந்நிதி தேருக்கு போகேக்கை.. அதை மறக்காமை கொண்டுபோய் உண்டியலிலை போடுறவ.. அப்ப அவவும் மோடியோ..' என்று உணர்ச்சிவசப்பட.. சொல்ல வந்த விடயம் குப்பைக்குத்தான் போகும்.

மணிவாசகனுக்கு இதெல்லாம் தெரியாததா என்ன? அதுவும் பத்திரிகையாளர்.. எப்படி கருத்துகளை செலுத்த வேண்டும் என்ற யுக்தி பத்திரிகையாளர்களுக்குத்தான

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

சமயமானது இவ்வளவு காசைத் தந்து அபிசேகம் செய் என்றோ அல்லது இதைத் தந்து வேண்டுதலை நிறைவேற்று என்றோ கூறவில்லை.

இன்றைக்கு ஆலயங்களில் இந்த அபிசேகத்திற்கு இவ்வளவு இந்த அபிசேகத்திற்கு இவ்வளவு என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டல்லவா இருக்கிறார்கள். நண்பரே அதைத் தான் நானும் கூறுகிறேன். இவையெல்லாம் ஆண்டவனால் சொல்லப்பட்டவை அல்ல. இடையில் வந்தவர்களின் இடைச்செருகல்கள் என்று. இந்த இடைச்செருகல்கள் களையப்பட்டு சைவ மதம் பாதுகாக்கப்பட வேண்டம் என்பது தான் என் போன்றவர்களின் அவா.

ஏழை வடிவல் எனைக் காண்பாய்

இரக்கச் செயல்களில் எனைக் காண்பாய்

என்று சொன்ன இறைவனைக் காண ஆலயம் செல்பவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்?

கார்த் தரிப்பிடத்தைக் கூடப் பணம் படைத்தவர்களுக்காக Reserve செய்தல்லவா வைத்திருக்கிறார்கள்

இந்த தேரை இழுக்க இவ்வளவு பணம் என்று பணம் படைத்தவர்கள் மட்டும் தங்கத் தேர் இழுக்கும் கூத்தெல்லாம் நடக்கினறனவே?

ஆலயத்துக்கு வரும் சிங்கள அரசின் பிரதிநிதிக்கு பொன்னாடை போர்க்க பூசாரி முண்டியடித்த கதையெல்லாம் ஜெர்மனியில் நடந்தேறியதே

இவை போன்ற செயல்கள் எம் மதத்தின் மீதான மதிப்பை மக்கள் இழப்பதற்குக் காரணமாக அமையும். அது மதங்கொத்திகளுக்கும் வாய்ப்பாக அமையும் என்பதைத ;தான் சொன்னேன்.

சைவ சமயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உங்களுடைய அவா போற்றுதற்குரியது. ஆனால் எது சைவ மதம்? அங்கேயே சிக்கலான கேள்விதானே உள்ளது. காளி கோயில்.. பறை மேளம் ஒலித்து நடாத்தப்படும் வேள்வி.. படைக்கப்படும் வெண் பொங்கல்.. நீர்ச்சோறு.. மீன் தீயல்.. அவிச்ச முட்டை.. இது சைவமா அல்லது வேறு சமயமா? 3ம் வகுப்பு சமய பாடத்தில் கடவுள் ஒருவர் எனப் படித்து சமய பாடத்தை ஆரம்பித்தோமே.. அப்படியாயின் அதற்குப் பின் தொடர்ந்த வகுப்பு சமய புத்தகங்கள் கூறியவை..??

நிருஜா கூறியதைப்போல ஒன்றல்ல.. நூறல்ல.. ஓராயிரம் கேள்விகள் இங்கே.. ஆகவே தற்போது நிகழ்பவை நம்பிக்கைகளின் வெளிப்பாடுகள்.. பற்றுதல்களின் படாடோபங்கள்!!

ரஜனி படத்துக்கு திரையரங்கு நிறையும் என்றால் ரிக்கற்றில கட்டணத்தை கூட்ட வேண்டியதுதான்.. எனக்கு ரிக்கற் முக்கியமல்ல.. நான் தியேட்டரில ரஜனி படம் பார்த்தே ஆகவேண்டும்.. வீடியோ பிறகு!!

யேர்மனியில் முதன்முதலாக சில வருடங்களுக்கு முன் சென்ற ஒரே ஆலயம் ஹம் அம்பாள்தான். அதுவும் சனம் வஸ்சில போகுதென்று.. பம்பலா போவம் என்றுதான் போனேன்.. அங்கு நான் உள்ளேயே போகவில்லை.. வெளியில் பலகாலத்துக்கு முன் சந்தித்தவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.. ஆனால், மனதில் ஒன்றை பிரார்த்தித்துக் கொண்டேன்.. அம்மா அடிக்கடி நேரிலும் கடிதத்திலும் தொலைபேசியிலும் என்னிடம் கோரியது. 'ராசா.. நான் செத்தாலும் நீ வருமட்டும் என்ரை பிணம் கிடக்கும்.. ஊரில கொண்டுபோய் முறைப்படி அடக்கம் செய்ய வேணும்.' என்பதுதான் கோரிக்கை. இது நாடு இருக்கும் நிலையில் எவ்வளவுதூரம் சாத்தியம் என தெரியாது.. எனினும் 'செய்வேன்' என சொல்லி வைத்தேன்.

அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வல்லமையை எனக்குத் தா தாயே என்பதுதான் என் பிரார்த்தனையாக இருந்தது.

அந்த வருடமே பல ஆண்டுகளாக கொழும்பில் வாழ்ந்த எனது அன்னை ஊருக்கு சென்றார். பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் வீடிழந்த அவரது சகோதரர் குடும்பம் அவருக்கு துணையாக வந்தனர். சில மாதங்களால் உயிர் நீத்தார். அது சமாதான ஒப்பந்த காலமாதலால் என்னால் முறைப்படி காரியங்களை நிறைவேற்ற முடிந்தது. (பிரார்த்தனையை நிறைவேற்ற அம்பாள் அவசரமாக அன்னையின் உயிரை எடுத்துவிட்டார் என சிலர் கூறலாம்.. அவர்களுக்கு அம்பாள் அருள் கிடைக்கட்டும். :rolleyes:) இது என்னைப் பொறுத்தவரை நம்ப முடியாத திரைக்கதை. சமாதான காலத்துக்கு முன்போ அல்லது பின்போ இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்திருந்தால் எனது கடமையை எனது அன்னைக்கு எனது ஊரில் நிறைவேற்ற முடியாது போயிருக்கும்.

அதனால் அம்பாளுக்கு நன்றி கூற அடுத்த வருடமும் அங்கு சென்றேன். அப்போதும் கூயிலுள் நுழையாமல் வெளியே 'மோகன் அண்ணாவுடன்' கதைத்துக் கொண்டிருந்தேன். வேறு நண்பர்களுடனும் அலம்பல். ஆனால் மனதுள் அம்பாளுக்கு நன்றி கூறிக்கொண்டிருந்தேன். இது எனது இயல்பு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இயல்பு. அவற்றை குறை கூறமுடியாது.

கோயிலுக்கு போனா நான் சர்பத் குடிக்கிறதிலையும் (வீட்டில சலரோகம்னு சித்திரவதை.. இங்கதான் சுதந்திரம் :D ) பசங்க அவங்க சிநேகிதரோடை.. சம்சாரம் அவங்க பொண்ணுகளோட சாரிக்கடையளுக்கை கொட்டாவிவிட.. இப்படி நாலாபுறம் சிதறினாலும் 'இந்த நேரம் இந்த இடத்தில நிக்கவேணும் எல்லாரும்' ... இந்த வசனத்திலமட்டும் நான் நிற்பன்.. :(

அதுபோல, யாரும் எதையும் செய்யட்டும். ஆனால் எங்க நாடு என்ற இடத்தில எல்லாரும் நிற்கவேணும்.. அதில நாங்களும் நிற்போம்.. :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுபோல, யாரும் எதையும் செய்யட்டும். ஆனால் எங்க நாடு என்ற இடத்தில எல்லாரும் நிற்கவேணும்.. அதில நாங்களும் நிற்போம்.. :rolleyes:

அதிலே எனக்கும் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம் கிடையாது. நாம் அனைவரும் நம்முள் எவ்வளவோ பிரிவினைகள் இருந்தாலும் தமிழ், ஈழம் என்ற இரண்டாலும் ஒன்றுபட்டு நிற்கிறோம். அது எப்போதுமே மாறுதலுக்கு உட்படாத ஒன்று.

மணிவாசகன் கூறியதைப்போல நாம் ஒன்றும் சமயத்துக்கு எதிரானவர்கள் கிடையாது. அதில் காணப்படுகின்ற முறைகேடுகளுக்கும் டீ கடையில் தொங்கும் விலைப்பட்டியல் போல் தொங்கவிடப்படும் அர்ச்சனைச் சீட்டு பட்டியலுக்கும், தர்ச்சணை என்ற பெயரினால் மரியாதை செய்யப்படவேண்டிய, எமக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழவேண்டிய ஐயர்மார் சாதாரண பாமரமக்களிடியே உருவாக்கிவிட்டுள பாகுபாடுகாளையும் தான் எதிர்க்கின்றோம்.

கோடிக்கணக்கான தமிழர்களில் முதல்நாள் காசு கூடக்கொடுத்து படம் பார்க்கும் ரஜனி ரசிகர்கள் எத்தனை பேர். படம் திரையிட்டு, கூட்டம் குறையும் வரை காத்திருந்து குடும்பத்தோடு அமைதியாக படம் பார்க்கும் ரஜனி ரசிகர்களை நீங்கள் கண்டது இல்லையா? அல்லது அவர்கள் ரஜனி ரசிகர்களே இல்லையா?

நான் கூறவருவத்து...., உங்களைப்போல் மனப்பக்குவம் உள்ளவர்கள் எல்லாம் சேர்ந்து தற்போது நடக்கின்ற கூத்துக்களை நிறுத்தவேண்டும். ஒருவன் 50 வருடங்களாக திருடிக்கொண்டு இருக்கின்றான் என்றால் அவன் திருடுவது தெரிய வந்த பிறகு, "50 வருடங்காளாக அவன் இதைத்தானே செய்கின்றான், தொடர்ந்து செய்யட்டும் என்று விட்டுவிடுவீர்களா ...? அல்லது அவனைத் திருத்த முயற்சிப்பீர்களா?"

மற்றயது...., நாம் இந்த விடயத்தில் தனியே சைவ சமயம் என்று மட்டும் நிற்க முடியாது. இந்து சமயம் என்ற பரந்த வட்டத்துக்குள்ளேயே சென்று சிந்திக்க வேண்டும்.

பிற்குறிப்பு:

நாடு வந்தால் இப்படியான விவாதங்கள் அப்போது துவை.. அதனால் பலவற்றுக்கு நிரந்தர விடைகளும் அப்போது காணப்பட வேண்டியவையே.. அதுவரை குட்டைகள் குழம்பி நாற்றமெடுக்காமல் அதனுள்ளும் மீன் பிடிக்க முயற்சிக்கலாமே!!

தயவு செய்து இது போன்ற கருத்துக்களை பகிரும்போது நாட்டையும் நமது தேசியத்தையும் கொண்டுவந்து செருகி பயமுறுத்தாதீர்கள். நான் பயப்படமாட்டேன். ஆனால், இந்த விடயத்தில் கருத்து கூற விளைபவர்கள் இதுபோன்ற உணர்வுபொதிந்த வார்த்தைகளால் வாயடக்கப்படுகின்றார்கள். குட்டை என்று வந்து விட்டால் சுத்தபடுத்த தானே வேண்டும்....!!!

இதனை நாம் நாடு கிடைத்த பின் பேசுவோம் என்று ஒதுக்கி வைக்கவும் முடியாது. இன்று எமது அடுத்த சந்ததிக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதே மிகவும் கடினமாக உள்ளது என்பது மிகவும் கசப்பான உண்மைதான். இது இவ்வாறு இருக்க, அவர்களை தற்பொதைய சமய கொள்கைகளுக்குள் புகுத்தி விட்டோம் என்றால் மீண்டும் அவர்களிடம் இதனை எடுத்துச் சொல்லி விளங்க வைப்பது மிகவும் கடினம்.

அது மட்டுமல்ல, எமது மனங்களில் இருக்கும் விடைகாணப்படாத கேள்விகளை அவர்கள் எம்மிடம் கேட்கும் போது, அவர்களிடமும் நீங்கள் "நாடு கிடைக்கட்டும் உட்கார்ந்து பேசலாம்" என்றா கூறுவீர்கள். இல்லை இல்லை. அப்படிக்கூறினால், நீங்கள் கூறியதைப்போல அவர்கள் எம்மைப்பார்த்து விசரர் என்று விழித்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

எனவே சிந்தியுங்கள்...! சமயம் வேறு...! சமயம் என்ற பெயரினாலே நாட்டில் நடாத்தப்படும் கொள்ளைகள் வேறு...!

Edited by நிரூஜா

இத்தகைய விடயங்கள் தனிநபரால் சீரமைக்கப்படக் கூடிய விடயங்களே அல்ல. ஏனெனில் இவற்றின் வேர்கள் மிக ஆழமானவை. இவற்றை சீரமைக்கிறோம் என முனைந்தால், அங்கே இலகுவாகத் தூன்றுபவை புதுப்புது பிரிவுகளும் முரண்பாடுகளும்தான். அதுவே தமிழின ஒற்றுமையைக் குலைக்கும் இன்னொரு காரணியாகவும் உருவாகும். அதனால்தான் நான் இன்றைய தேவை எமக்கான தாயகத்துக்கான பயணம் என்றேன். மற்றும்படி இது பயமுறுத்தல் அல்ல. பத்திரப்படுத்தல்.

இங்கு பிறந்த குழந்தைகள் அல்ல. குழந்தைகள் எங்கு பிறந்தாலும் அவர்களுக்குள்ளே ஆயிரம் கேள்விகள் உதிக்கும். கேட்பார்கள். தேடல் அற்ற குழந்தையால் வளர முடியாது.

'அம்மா.. உங்க வயிறு ஏனு் பெரிசாகுது?'

'குட்டிப் பாப்பா வரப்போகுது..'

'குட்டிப் பாப்பா எப்பிடி வயித்துக்க போச்சு..'

இப்படி குழந்தை பலவற்றைக் கேட்கும். பின்பு குழந்தை குறிப்பிட்டு வயதை அடையும்போது குழந்தைக்கு தெரியும், குட்டிப் பாப்பா எப்படி வயிற்றினுள் போனது என்று.

இதைப்போலத்தான் சமயங்கள்பற்றிய கேள்விகளும் பெறும் அறிவுகளும். அந்தந்த பருவத்தில் அவர்களால் அறிய முடியும்.. உணர முடியும்.. அவர்களுக்கு அதிலே ஆர்வம் இருந்தால்.

ஆகவே, இதைப்பற்றி நாங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை!!

கோயில்காரங்க விலைப்பட்டியல் தூக்கட்டும். அது அவங்க விருப்பம். இந்த அர்ச்சனை செய்தால்தான் இன்ன வரம் தருவேன் என்று கடவுள் சொல்லவில்லை. ஆக, நுகர்வோர்கள் கவனமாக இருந்தால் போதும்.

வெளிநாட்டுக்கு வந்து இருக்கைகளை உறுதிப்படுத்தத் தெரிந்தவர்களுக்கு, இந்த விசயங்களிலுள்ள உண்மை பொய்களை கூறவேண்டிய தேவை இல்லை. அது அவர்களுக்கு தெரிந்த விடயம். அதையும் தாண்டி ஏதோ ஒரு காரணத்துக்காக அவர்கள் செய்கிறார்கள். அதைத் தடுக்க முற்பட்டு அவர்களிடமிருந்து நாமோ அல்லது எம்மிடமிருந்து அவர்களோ பிரிந்தால்.. அதுதான் தற்போது தேவையில்லாத விளைவு.

திருவிளையாடல் நகேஷ் பாணியில் சொன்னால் கதை என்னுடையது தான், என்னுடையது தான், என்னுடையது தான் ஐயா :D

:Dஎன்ன இங்கே நக்கீரன் யாரும் இல்லை என்ற துணிச்சலா?? :D

முதலில் மணிவாசகனின் படைப்பிற்கு வாழ்த்துக்கள். ஆத்துக்காரியையும் சுகம் கேட்டதாகச் சொல்லுங்கள்.

சோழியானின் கருத்துக்களோடு நானும் ஒத்துப் போகின்றேன். பொதுவாகவே இந்த மூட நம்பிக்கைகள் என்பது எல்லாமதங்களிலும் இருக்கின்றது. இதை மூட நம்பிக்கைகள் என்பதை விட சில பக்தர்களின் அதீத நம்பிக்கைகள் என்று கூறுவதே சாலப் பொருந்தும். இந்து மதம் என்பதால் எவரும் இலகுவில் விமர்சிக்க முடிகின்றது. ஆனால் ஏனைய மதங்களை இப்படி எம்மால் விமர்சிக்க முடியுமா??

மணிவாசகன் கூறுவது போல் இந்தச் சடங்குகள் எல்லாம் சிலரால் தமது பிழைப்பிற்காக இடையில் ஏற்படுத்தப் பட்டவை தான். இவற்றைப் பற்றி நாம் வாதப் பிரதி வாதங்கள் பொதுவான தளங்களில் செய்வதால் நாமே நமது மதத்தை இழிவு படுத்துவது போல் ஆகிவிடும். அதைவிடுத்து எமது மதத்தில் தேவையில்லாத சடங்குகளை நாம் ஒவ்வொருவரும் சுயமாக முன்வந்து தவிர்த்துக் கொண்டு வருவோமாயின் எதிர்காலத்தில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்தேயாகும். மாற்றங்கள் முழுவதுமாக வர சில காலங்கள் எடுக்கலாம். ஆனால் வருகின்ற மாற்றங்கள் உறுதியானதாக இருக்கும்.

Edited by Vasampu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.