Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா-பாகிஸ்தான் சண்டையால் 3-வது உலகப்போர் மூளும் பிரஞ்சு மேதை `நாஸ்டர்டாமஸ்' கணித்த அதிர்ச்சி தகவல்கள்

Featured Replies

மும்பையில் கடந்த 26-ந் தேதி நடந்த அந்த பயங்கர சம்பவம் உலகம் முழுக்க புயலடித்த தீ போல் பரவியபடி இருக்கிறது.

ஒரு மிகப்பெரிய போர் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக உலக நாடுகள் உணர்கின்றன. பயங்கரவாதத்தை ஒழித்தே தீர வேண்டும் என எல்லா நாடுகளுமே ஒருமித்த கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டன.

என்ன நடக்க போகிறதோ? என இந்தியா-பாக் இரு நாட்டு எல்லை பகுதிகளிலும் `திகில்' உறைந்து போய் கிடக்கிறது. உலகம் அழியும் வரை என்னவெல்லாம் நடக்கும்? என்பதை 500 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்து விட்டு போயிருக்கிறார் ஒருவர்.

பெயர்: நாஸ்டர் டாமஸ்.

ஊர்: பிரான்சில் உள்ள புனித ரெமிடி.

பிறப்பு: 1503. இறப்பு: 1566.

நாஸ்டர் டாமஸ் உலக மறிந்த மகா ஞானி. இவர் கணித்து சொன்ன எந்த விஷயமும் தப்பியதில்லை. தனது தாத்தா மூலம் கணக்கு, கலை ஜோதிடம் ஆகியவற்றை சிறுவயது முதலே கற்ற நாஸ்டர் டாமஸ், மரணத்தை தழுவும் நிலையில் இருந்த பலரையும் காப்பாற்றிய மருத்துவரும் ஆவார்.

1532ல் நாஸ்டர் டாமசுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்த போதிலும் அடுத்த 3 ஆண்டுகளில் அவர்கள் மூவரையுமே `பிளேக்' நோய்க்கு பறிகொடுத்து விட்டார். இதன் பின்னர் 6 ஆண்டுகள் அவர் பிரான்சு, இத்தாலி ஆகிய நாடுகளில் கால்போன போக்கில் சென்ற போது தான் `திடீர்' ஞானியாகி உலக விஷயங்களை கணித்து சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு மத பிட்சு மூலம் பல கலைகளை கற்ற அவர் `ஒரு தடவ சொன்னா அது 100 தடவ சொன்ன மாதிரி'

இந்தியா- பாக் இடையே போர் வருமா?

ஒரு உலக மகாயுத்தத்தை இந்த 2 நாடுகளும் தான் ஆரம்பித்து வைக்க போகின்றன என்ற அதிர்ச்சி தகவல்களை அவர் எப்போதோ சொல்லி விட்டு போயிருக்கிறார்.

2006ம் ஆண்டிலிருந்தே இந்தியா பல சோதனைகளை சந்திக்க தொடங்கும் பட்சத்தில் ஒரு உச்சகட்ட காட்சியாக 2011 அல்லது 2012ல் 3-வது உலக போர் ஏற்படும் என்கிறார்.

இந்த போர் இடைப்பட்ட எந்த ஆண்டில் வேண்டுமானாலும் நிகழலாம்!. மக்களின் அப்போதைய இறை பக்தியை பொறுத்திருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்தியா-பாகிஸ்தான் என எதிரும் புதிருமான இந்த போரில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, சவூதி அரேபியா, சிரியா, இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், லெபனான், ஈரான், ஆஸ்திரேலியா என உலகின் 21 நாடுகள் முக்கிய களமிறங்கும் என்கிறார் அவர்.

வானத்தில் சனி-ராகு கிரகங்களின் புதிய மாற்றத்தால் இந்தபோர் ஏற்படும். போர் சமயத்தில் அணு ஆயுத வீச்சுகளால் கடல் அலை 100 அடிக்கு எழுந்து ஓயும். சுமார் 100 கோடி பேர் மரணத்தை தழுவினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார் நாஸ்டர் டாமஸ்.

இதன் பின்னர் 2026 வாக்கில் உலகின் நம்பர் 1 நாடாக இந்தியாவும், 2-வது நாடாக சீனாவும் விளங்கும் என்று கணித்திருக்கிறார் நாஸ்டர் டாமஸ்.

போரை பொறுத்த வரை இந்தியாவில் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களும் எல்லை பகுதிகளும் பாதிக்கப்படும் என்பதையும் அவர் சொல்லியிருக்கிறார்.

இந்தியர்கள் 2006க்கு பிறகு தங்கள் வாழ்க்கையில் பல வகையான மாற்றங்களை காண்பார்கள்.

மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கி திணறுவார்கள். இறை பக்தி குறையும். அரசியலில் பற்பல மாற்றங்கள் நிகழும். உண்மை தோல்வியை தழுவும். பொய் வெற்றி பெறும். மக்கள் அலை பாய்ந்து திரிவார்கள்.

இத்தகைய சுமார் 20 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு இளைய தலைமுறை குழந்தைகளால் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். பெற்றோர்கள் மற்றும் வயதானவர்களால் அவர்கள் அறிவை புரிந்து கொள்ள முடியாமல் ஆச்சர்யப்பட்டு போவார்கள்.

இந்தியா மிக நவீனமாகி விடும். பணம் கொழிக்கும். அனைவரது வாழ்க்கையும் மிக நவீன நாகரீகமடையும். மேலை நாடுகளை போன்ற வாழ்க்கை தரத்திற்கு மாறிவிடுவார்கள். உலக அரங்கில் இந்தியா தலை சிறந்து விளங்கும்.

இப்படியெல்லாம் இந்தியா பற்றி ஜாதக பலனை சொல்லியிருக்கும் நாஸ்டர் டாமஸ் மேற்கண்ட 20 ஆண்டு கால போராட்டத்தை ஒவ்வொருவரும் எப்படி சமாளிப்பது என்ற ஆலோசனையையும் வழங்கியிருக்கிறார்.

ஒரு நாட்டில் பாவசெயல்கள் பெருகும் போது அந்த நாட்டின் அதற்குரிய சிக்கலையும், கஷ்டங்களையும் அனுபவிப்பார்கள். எனவே, பாவசெயல் செய்யாது அன்புடன் இருங்கள். அவரவர் வீட்டில் தினமும் இறைவனை நன்றாக பிரார்த்தனை செய்யுங்கள்.

இத்தகைய பிரார்த்தனை செய்யும் போது மட்டும்தான் மனம் தெளிவடையும். நல்ல சிந்தனை பிறக்கும். நெஞ்சு தைரியம் உண்டாகும். நீங்கள் இதை செய்யாவிட்டாலும் இறை சக்தி மிகப்பெரியது. அது செய்ய வைக்கும் என்கிறார் அவர்.

நாஸ்டர் டாமஸ் சொல்வது சரிதான்! `எதை கொண்டு வந்தோம். கொண்டு செல்வதற்கு?'

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  • தொடங்கியவர்

16ஆம் நூற்றாண்டில் பாகிஸ்தான் இருந்ததா ? :)

யோசிக்க வேண்டிய விடயம்

16ஆம் நூற்றாண்டில் பாகிஸ்தான் இருந்ததா ? :lol:

அவர் குறிப்பிடும்போது பாகிஸ்தான் என்று குறிப்பிடாமல் வேறு பெயரால் குறிப்பிட்டிருக்கலாம். :)

ஆனாலும், முதலாம், 2ம் உலக யுத்தங்களைப் பற்றி எதிர்வு கூறாமல் 3ம் உலக யுத்தத்தைப் பற்றி மட்டும் எதிர்வு கூறிவிட்டாரே... :):D

  • கருத்துக்கள உறவுகள்

நாஸ்ரடாமின் குறிப்பக்கள் ஏதோ பிதற்றல்கள் போல ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும். பிறகு வந்தவனெல்லாம் அந்தக் குறிப்பின் ஒவ்வொரு வசனங்களிற்கும் ஒவ்வொரு அர்த்தம் சொல்லத் தொடங்கிட்டாங்கள். இப்பிடித்தான் 91லை வளைகுடா யுத்தம் உலக யுத்தமாகும் எண்டு நஸ்ரடாம் சொன்னவர் எண்டு ஆளாளுக்கு அளந்தாங்கள். இப்ப அடுத்ததாய் தொடங்கிட்டாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாப் பக்கம் ஏதும் பிரச்சனை வரும் எண்டவோ? 13ம் ஆண்டுக்குள்ள கலியாணம் கட்டி, மனிசியைப் பொன்சர் பண்ணிவிடணும்....

16ஆம் நூற்றாண்டில் பாகிஸ்தான் இருந்ததா ? :lol:

அட நீங்கள் பாகிஸ்தானை மட்டும் கேட்கின்றீர்கள். இதில் இந்தியா, இஸ்ரேல் என்று நீண்ட பட்டியலே வருகுது. நம்மவர்கள் தான் கதை விடுவதில் வல்லவர்கள் என்றால், அதையும் தாண்டி .............................................. :):)

  • கருத்துக்கள உறவுகள்

கனடாப் பக்கம் ஏதும் பிரச்சனை வரும் எண்டவோ? 13ம் ஆண்டுக்குள்ள கலியாணம் கட்டி, மனிசியைப் பொன்சர் பண்ணிவிடணும்....

அடப்பாவி

நாங்கள் இதிலிருந்து தப்புவது எப்படியென்று நித்திரையில்லாமல் கிடக்கிறோம்

இந்த ஆள் இரண்டு மூன்றாகி

அதுகளையும் கூட்டிக்கொண்டு ஏலாதா என்று யோசிக்குது

3+1 தரம் யுத்தம் செய்தவர்கள், தொடரும் சர்ச்சைக்குரிய எல்லைகள், சமூக சமய ரீதியான முரண் எதிர்ப்பலைகள் தொடரும் 2 (எதிரி என முறையே ஒருவரை ஒருவர் எண்ணும்) நாடுகளிற்கிடையேயான status-quo இதுவரை பேணப்பட்டிருக்கிறது ஆணு ஆயுத திறன் வரை. ஆனால் இந்தியாவின் பொருளாதார எழுச்சி என்பதும் இதுவரை கண்ட முன்னேற்றங்களும் எதிர்வு கூறல்களும் இந்த status-quo அய் தவிடு பொடியாக்கிவிடும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது.

இந்தியாவின் பொருளாதார எழுச்சியை அதே தளத்தில் சமப்படுத்தக் கூடிய நிலையில் பாக்கிஸ்தான் இல்லை. இது பாக்கிஸ்தானின் எதிர்காலத்தை அது இந்தியாவோடு பேணி வந்த status-quo அய் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. சுருக்கமாக சொன்னால் எதிர்காலத்தில் பொருளாதார வர்த்தகத்தில் பலமான இந்தியாவினால் அதன் அயலவர்கள் "விழுங்கப்படும்" அச்சம் வங்காளதேசம், சிறீலங்கா என்பவற்றிற்கு போல் இன்று பாக்கிஸ்தானுக்கும் ஏற்பட்டிருக்கிறது. பாக்கிஸ்தானின் அயல் நாடான ஆப்கானிஸ்தானின் நிலையும் அங்கு இந்தியா காட்டி வரும் ஆர்வம் ஆப்கானிஸ்தானிற்குள் இருக்கும் வடக்கு வடமேற்கு - தெற்கு தென்கிழக்கு பிளவும் வரலாறும் எதிர்காலத்தை கட்டியம் கூறுகிறது.

இதன் பின்னர் 2026 வாக்கில் உலகின் நம்பர் 1 நாடாக இந்தியாவும், 2-வது நாடாக சீனாவும் விளங்கும் என்று கணித்திருக்கிறார் நாஸ்டர் டாமஸ்.

இந்தியா உலகத்தில நம்பர் 1 ஆக முதல் பிராந்தியத்தில நம்பர் 1 ஆக வேணும். பிராந்தியத்தில நம்பர் 1 என்றதை நிலை நிறுத்தி தக்க வைக்க முனையும் பொழுது பாக்கிஸ்தானோடு ஒரு final show down தவிர்க்க முடியாது இருக்கும்.

சுன்னி இஸ்லாமியர்களின் கீரோ மாவீரன் சதாமின் வீழ்ச்சிக்கு பிறகு பாரிய (நியாயமான) எதிர்பார்ப்புகளோடு இருக்கும் சியா ஈரானிற்கும் பிராந்திய வல்லரசுக் கனவோடு இருக்கும் இந்து இந்தியாவிற்கும் நடுவில் இருப்பவர்கள் சுன்னி இஸ்லாமியர்களின் 2 கிட்டத்தட்ட உருக்குலைந்த அரசியல் நிர்வாக கட்டமைப்புகள் (ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான்).

வேகமாக அபிவிருத்தி அடைந்து வந்த பொருளாதாரம் (சீனா 13% இந்தியா 9% )அதன் நன்மைகள் என்பவை இந்தப் பிராந்தியங்களிற்கு இடையிலான வர்த்தகத்தை அதிகரித்தது. அதன் தொடர் வெற்றிக்கு ஒருவருக் ஒருவரில் தங்கியிருக்கும் நிலையையும் உருவாக்கி முறுகல்களை தவிர்த்து வர்த்தகம் பண்ணும் மனநிலையில் எல்லாச் சமூகங்களையும் வைத்திருந்தது.

தற்பொழுது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு வரும் பொருளாதார மந்தம் என்பது சீனாவை விட இந்தியாவை அதிகம் பாதிக்கும். இருந்தாலும் இந்தியாவின் அடிப்படை பாக்கிஸ்தானைவிட பல மடங்கு பலமானது அது தொடர்ந்து பேணப்படும். ஆனால் கடந்த வருடங்களில் காணப்பட்ட அசூர பொருளாதார வளர்ச்சி முடிவிற்கு வந்துவிட்டது. உலக பொருளாதார புறநிலை மற்றும் மும்பாய் தாக்குதல் ஏற்படுத்திய பிரச்சார உளவியல் தாக்கத்தினாலும் சேர்ந்த விளைவாக இந்தியப் பொருளாதாரம் அபிவிருத்தி 8..9 வீதத்தில் இருந்து 3...4 வீதம் என்று குறைந்தாலே பாரிய சமூக புரட்சிகள் போராட்டங்கள் அமைதியின்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் 2009 பிற்பகுதி 2010 அளவில். ஆனால் நிலமை அதைவிட மோசமானதாக மாறலாம்.

இந்த நிலை ஏற்படு் பொழுது இதுவரை பரஸ்பரம் இருந்த பொருளாதார அபிவிருத்தி என்ற பொது நலன் என்பதை நடை முறையில் குறுகிய கால நோக்கில் இல்லாது போகிறது. இப்படியான காலப்பகுதியில் தான் சிக்கலான குறுகிய காலத்தில் நியாயப்படுத்தப்படமுடியாத நீண்ட கால நோக்கிலான தேசிய நலன்களிற்கான நகர்வுகளை எடுக்க சந்தர்ப்பங்களைக் கொடுக்கிறது.

பிராந்தியத்தில் அடுத்த சந்ததி தலைவர்கள் வரும் வரை பொருளாதார வழர்ச்சி தொடர்ந்திருந்தால் ஒரு final show down அய் தவிர்க்க முடியும். ஐரோப்பிய ஒன்றிய அனுபவத்தில் ஒன்றை காலப்போக்கில் உருவாக்கி கொள்ளும் பக்குவம் அந்த தலைமுறைக்கு இருக்க சந்தர்ப்பம் அதிகம். ஆனால் party has prematurly come to an end. hangover இல என் நடக்கப் போகுதோ :D:D

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கு உங்கடை பார்வை நல்லாயிருக்கு ஆனாலும் ஏதோ குறையிற மாதிரி இருக்கு ..ஆ இடைக்கிடை பூறிஸ்...மந்தை.. பொப்கோன்.. செம்மறி .. இதுகளையும் சேர்த்திருந்தால் இன்னமும் கலக்கலாய் இருந்திருக்கும்.. :):D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.