Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"

Edited by kuddipaiyan26

  • Replies 181
  • Views 113.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    பாட‌லை கேக்க‌ https://voca.ro/mNAN1gtR4tT   நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    த‌மிழ‌ர‌சு  அண்ணா இணைத்த‌ இர‌ண்டு பாட்டு வ‌ரி பாட்டு , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா /  https://voca.ro/jqv6QDW5fSY https://voca.ro/fKbes0CdvUe  இர‌ண்டு பாட‌லுக்கும் இசை அமைத்த‌து முன்னால் போராளி

  • தமிழரசு
    தமிழரசு

    மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும் மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும் கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள் கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள் வண்ண மலர் தூவும் அந்த வாசல் வ

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/.../karum_pulikal/

கரும்புலிகள் என நாங்கள்

மகிழ்வோடு செல்வோம்

கண்டதும் சிங்களம்

கலங்கிடும்  வெல்வோம்!

 

கரும்புலிகள் என நாங்கள் .....

 

கடலினில் சிங்கள

படகினை உடைப்போம்

தரையினில் எதிரியின்

பாசறை முடிப்போம்..

 

கரும்புலிகள் என நாங்கள் .....

 

அம்மாவும் அப்பாவும்

எங்களுக்கு உண்டு

ஆனாலும் மண் மீது

பெரும் பாசம் உண்டு

ஆறடி மண் கூட

எமக்காக கேளோம்!

தமிழ் தாயின் துயர் தீர்க்க

மகிழ்வோடு சாவோம்!

 

கரும்புலிகள் என நாங்கள் .....

 

சாவினை தோள்மீது

நாங்கள் சுமப்போம்

சாவுக்கும் அஞ்சாமல்

சாவுக்குள் வாழ்வோம்

தமிழரின் சாவுகள்

வரலாறு படைக்கும்

தமிழீழ தாய் அவள்

விலங்குகள் உடைக்கும்

 

கரும்புலிகள் என நாங்கள் .....

 

ஊர் அதில் வெடி ஓசை

வான் வரை கேக்கும்

உலகத்தின் திசை எங்கும்

எம் செய்தி தாக்கும்

காற்றாக்கி எம்முடல்

 நீர் ஆக்கி கரையும்

தமிழர் தம் உனர்வோடு

எம் உயிர் கலக்கும்

 

கரும்புலிகள் என நாங்கள் .....

 

கடலினில் சிங்கள

படகினை உடைப்போம்

தரையினில் எதிரியின்

பாசறை முடிப்போம்..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/ZE4qqbsH/track09/ :unsure::unsure:

கண் மூடி தூங்கும் எந்தன் தோழா கல்லறைக்கு இருந்து கொஞ்சம் வாடா கல்லறைக்கு இருந்து கொஞ்சம் வாடா கண் மூடி தூங்கும் எந்தன் தோழா கல்லறைக்கு இருந்து கொஞ்சம் வாடா கல்லறைக்கு இருந்து கொஞ்சம் வாடா

காலால நடந்து செல்வோம் தொறுவில் தோலோடு இல்லை எந்தன் அருகில்

தோலோடு இல்லை எந்தன் அருகில் அறும்பு மீசை சிரிப்பை கான எந்தன் விழிகள் தேடுது திரும்பி நீயும் போட்ட குப்பி எந்தன் களுத்தில் ஆடுது கண் மூடி தூங்கும் எந்தன் தோழா கல்லறைக்கு இருந்து கொஞ்சம் வாடா கல்லறைக்கு இருந்து கொஞ்சம் வாடா

காச்ச‌ல் வ‌ந்த‌ போதிலுமே ப‌க்க‌ம் இருப்பாய் நான் க‌ள‌த்தில் நின்ற போதிலுமே ப‌க்க‌ம் இருப்பாய் போர் வெடியின் ஓசையிலே பொழுது புல‌ந்திடும் உந்த‌ன் புன்ன‌கைய‌ பாத்து தானே க‌ண்க‌ள் விடியும் தோழா க‌ண்க‌ள் விடியும் அறும்பு மீசை சிரிப்பை கான எந்தன் விழிகள் தேடுது திரும்பி நீயும் போட்ட குப்பி எந்தன் களுத்தில் ஆடுது

காய‌ ப‌ட்ட‌ வேளையிளும் நீ க‌த்த‌ வில்லையே உன் க‌ண்க‌ள் ம‌ட்டும் என்னை விட்டு அக‌ழ‌ வில்லையே காய‌ ப‌ட்ட‌ வேளையிளும் நீ க‌த்த‌ வில்லையே உன் க‌ண்க‌ள் ம‌ட்டும் என்னை விட்டு அக‌ழ‌ வில்லையே உறுதியோடு செந்து உந்த‌ன் உயிரும் வ‌ழிந்தது என்னை பிடித்து இருந்த‌ உந்தன் கையும் மேல்ல‌ ச‌ரிந்தது தோழா மேல்ல‌ ச‌ரிந்த‌து அறும்பு மீசை சிரிப்பை கான எந்தன் விழிகள் தேடுது திரும்பி நீயும் போட்ட குப்பி எந்தன் களுத்தில் ஆடுது

கல்லறையில் விதைக்கும் போது க‌ண்ணீர் ப‌ய‌ன‌ம் உந்த‌ன் விடைபேறுத‌ல் க‌ண்ட‌ போது ப‌கையின் கோவ‌ம் கல்லறையில் விதைக்கும் போது க‌ண்ணீர் ப‌ய‌ன‌ம் உந்த‌ன் விடைபேறுத‌ல் க‌ண்ட‌ போது ப‌கையின் கோவ‌ம் வ‌ல்ல‌ புலி என்று உன்னை கால‌ம் பொற்றும் எந்த‌ன் வாழ் நாளும் உந்த‌ன் க‌ன‌வை சேந்தே ஏற்க்கும் தோழா க‌ன‌வை ஏற்க்கும்

கண் மூடி தூங்கும் எந்தன் தோழா கல்லறைக்கு இருந்து கொஞ்சம் வாடா

கல்லறைக்கு இருந்து கொஞ்சம் வாடா

Edited by kuddipaiyan26

ஒலி.... ஒளி.... வடிவங்கள்.

http://worldtv.com/eelamboys

யாவரும் பார்கவேண்டிய இணயமாகலாம். :unsure:

Edited by Netfriend

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/D7DEx2Z2/track-1/

கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையை சொல்லவா நான் கறுத்த வரி அனிந்து நிமிர்ந்த சிறப்பை சொல்லவா கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையை சொல்லவா நான் கறுத்த வரி அனிந்து நிமிர்ந்த சிறப்பை சொல்லவா வான் ஏரி வந்து பகைவன் குண்டை கொட்டினான் பட்டினியால் எம் இணத்தை பாவி வாட்டினான் மழழை கூட எங்கள் மண்னில் மகிழ்வை இழந்தது என்ன வாழ்வு என்று எங்கள் இனமே அழுதது கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையை சொல்கிரேன் நான் கறுத்த வரி அனிந்து நிமிர்ந்த சிறப்பை சொல்கிரேன்

கரும்புலியாய் சேர நான் கடிதம் எழுதினேன் கடிதத்துக்குள் எந்தனது உனர்வை எழுதினேன் அண்ணனிடம் எந்தனது மனதை அனுப்பினேன் நாளும் அண்ணன் பதிலுக்காக பாத்து எங்கினேன் அண்ணன் பதிலை கண்டு கரும்புலியேன்ர வடிவம் தாங்கினேன் கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையை சொல்கிரேன் நான் கறுத்த வரி அனிந்து நிமிர்ந்த சிறப்பை சொல்கிரேன்

தேக‌த்தையே வ‌ருத்தி தின‌மும் வென்றேனே தேவு என்ர‌ ப‌யிர்ச்சியில் தேரி வ‌ந்தேனே தேச‌ம் தானே எந்த‌ன் நெஞ்சில் வாழ‌ க‌ண்டேனே அந்த‌ த‌தேச‌ம் மீட்க்கும் போரில் நானும் வேக‌ம் கொண்டேனே எங்க‌ள் அண்ணன் அது ஆனைக்காக‌ காத்து இருந்தேனே கரும்புலியாய் பிறப்பெடுத்த கதையை சொல்கிரேன் நான் கறுத்த வரி அனிந்து நிமிர்ந்த சிறப்பை சொல்கிரேன்

காத்திருந்த எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது பூத்திருந்த உனர்வுக்கு வேகம் தந்தது உனர்வு தந்த அண்ணணேடு உனவு உண்டேனே அந்த உனவு கூட அமுதம் ஆக்க இருக்க கண்டேனே விட்டு பிறிந்த போது அண்ணன் முகமும் வாட கண்டேனே

இலக்கு நோக்கி எந்தனது கால்கள் நடக்குது என் இணத்தை அழிக்கும் பகையை அழிக்க உல்லம் துடிக்குது பகையின் துகையில் புகுந்து அவன் உல்லத்தில் அடிக்கிறேன் என் தேச பனி முடிப்பதற்க்காய் கலத்திலே வெடிக்கிறேன்

Edited by kuddipaiyan26

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...-puthayumpothu/

வீரன் மண்ணில் புதையும் போது 
விதையாய்த் தானிருப்பான்
நாளை போரில் பகையை மாய்க்க 
ஆயிரம் தோற்றுவிப்பான்

புலிகளை சாய்த்தாலும் 
ஏந்தும் துவக்குகள் சாயாது

புலிகளை சாய்த்தாலும் .....
வீரன் மண்ணில் புதையும் போது....
புலிகளை சாய்த்தாலும் .....
புலிகளை சாய்த்தாலும் .....


தாயின் மடியில் ஆடும் கால்கள் 
துள்ளி ஓடி வரும் 
பூவின் திறல்கள் புதிரை மீட்ட
பயணம் தொடர்ந்து விடும்.

தாயின் மடியில் ஆடும் கால்கள் .....

ஏந்திடும் துவக்கு வீழ்ந்திடும் முன்னே புது கரங்கள் அதை ஏற்க்கும்.


வீரன் மண்ணில் புதையும் போது விதையாய்த் தானிருப்பான்
நாளை போரில் பகையை மாய்க்க ஆயிரம் தோற்றுவிப்பான்

புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது

தியாக‌ செந்நீர் கீறிடும் ம‌ழையில் 
சூளும் தீ அவியும் 
பாவ‌ம் ம‌க்க‌ள் 
வாழ்வை மாற்றும்
 பாதை தெரிய‌ வ‌ரும்.

தியாக‌ செந்நீர் கீறிடும் ம‌ழையில்.... 


ஆத‌வ‌ன் வரவை அறிந்த‌ன் பின்பே 
வின் மீன்க‌ள் துயில் கொள்ளும்

வீரன் மண்ணில் புதையும் போது விதையாய்த் தானிருப்பான்
நாளை போரில் பகையை மாய்க்க ஆயிரம் போர் குதிப்பான்
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...sam-muluvathum/

ஓஓஓஓ..

மெதுவாய் மெதுவாய் துடி இருதயமே

தூங்கும் என் தோழன் தூங்கட்டும்

சுகமாய் சுகதாய் தொடு மழைத்துளியே

குமரவேல் அமைதியாய் உறங்கட்டும்

காங்கேசன்கடற்தாயே இதமாகத் தாலாட்டு

என் தோழன் தூங்கட்டும் கனவுகள் வாழட்டும்

நெஞ்சம் முழுதும் நீயே

என் நினைவும் கனவும் நீயே

கண்ணில் காட்சி நீயே

என் கால்கள் உன்வழியே

நட்பின் பொருளும் நீயே

நீ காலம் வளர்த்த தீயே

முதலாய் மனதில் வந்தாய்

உன் முடிவில் பாடம் தந்தாய்

நெஞ்சம் முழுதும் நீயே

என் நினைவும் கனவும் நீயே

கண்ணில் காட்சி நீயே

என் கால்கள் உன்வழியே

கரை தேடி வருகின்ற அலைகள்

கால் சோர்ந்த ஓய்வதுமில்லை

உனைத்தேடி அழுகின்ற மனதில்

சிறு சோர்வு வந்ததுமில்லை

விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்

நினைவுகள் துணையுடன் தொடரும்

விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்

நினைவுகள் துணையுடன் தொடரும்

நெஞ்சம் முழுதும் நீயே

என் நினைவும் கனவும் நீயே

கண்ணில் காட்சி நீயே

என் கால்கள் உன்வழியே

ஒற்றைப்பனை மர நிழலில்

நாம் இருவரும் ஒன்றாய் அமர்ந்தோம்

ஒரு குவளைத் தேனீர் தன்னை

சண்டை போட்டே இருவரும் குடித்தோம்

ஒற்றைப்பனை மர நிழலில்

நாம் இருவரும் ஒன்றாய் அமர்ந்தோம்

ஒரு குவளைத் தேனீர் தன்னை

சண்டை போட்டே இருவரும் குடித்தோம்

மிதிவண்டிப் பயணத்தில் கதை நூறு சொன்னாயே

ஆகாயம் அது தாண்டிப் பல கனவு காண்பாயே

தலைவலி காய்ச்சல் எதுவந்த போதும்

முதல்வரும் மாத்திரை நீ தானே

தலைவனின் பிள்ளை தளர்வதே இல்லை

செயல் மொழி சொன்னதும் நீ தானே

மழை ஒழுகும் வீடுகள் நினைவில்-உன்

இரகசிய அழுகைகள் பார்த்தேன்

ஊரவர் பசியை அறிந்து-நீ

உண்ண மறந்தாய் வேர்த்தேன்

மழை ஒழுகும் வீடுகள் நினைவில்-உன்

இரகசிய அழுகைகள் பார்த்தேன்

ஊரவர் பசியை அறிந்து-நீ

உண்ண மறந்தாய் வேர்த்தேன்

என் மக்கள் என் மக்கள்

மனப்பாடம் செய்வாயே

எம் மக்கள் உயிர்காத்து

உன்னுயிரை மாய்த்தாயே

அசைகின்ற காற்றும் விழுகின்ற மழையும்

இருக்கின்ற வரையும் நீ வாழ்வாய்

நமக்கொரு நாடும் இனிதொரு மொழியும்

மீட்கின்ற வரையும் நாம் ஓயோம்

நெஞ்சம் முழுதும் நீயே

என் நினைவும் கனவும் நீயே

கண்ணில் காட்சி நீயே

என் கால்கள் உன்வழியே

நட்பின் பொருளும் நீயே

நீ காலம் வளர்த்த தீயே

முதலாய் மனதில் வந்தாய்

உன் முடிவில் பாடம் தந்தாய்

கரை தேடி வருகின்ற அலைகள்

கால் சோர்ந்த ஓய்வதுமில்லை

உனைத்தேடி அழுகின்ற மனதில்

சிறு சோர்வு வந்ததுமில்லை

விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்

நினைவுகள் துணையுடன் தொடரும்

விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்

நினைவுகள் துணையுடன் தொடரும்

நெஞ்சம் முழுதும் நீயே

என் நினைவும் கனவும் நீயே

கண்ணில் காட்சி நீயே

என் கால்கள் உன்வழியே

இந்த பாட்டு வரி எழுதினது..அண்ணன் அருவி

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பையா ....

எனக்கு அழகான பனைமரம் என்ற ஒருபாடலை தருவீர்களா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...aja-koburammp3/

ராஜ கோபுரம் எங்கள் தலைவன்

பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்

தடை நீக்கி வழி காட்டும் தலைவன்

வந்த பகை வென்று முடிகொண்ட தலைவன். (ராஜ கோபுரம்)

காலம் எல்லாம் கைதந்த ஒளிவீச்சு

கரிகாலன் தமிழரின் உயிர் மூச்சு

ஆஆ...ஆஆ....ஆஆஆ......ஆஆஆஆ.....ஆஆஆஆ

காலம் எல்லாம் கைதந்த ஒளிவீச்சு

கரிகாலன் தமிழரின் உயிர் மூச்சு (ராஜ கோபுரம்)

கண்ணென தமிழரை காக்கும் காப்பரனே

கன்னித்தமிழுக்கு வாய்த்த கதிரவனே

கோடை காலத்து குளிர்விக்கும் நிலவே

கொட்டும் மழை நாளில் குடையான அழகே (ராஜ கோபுரம்)

குளிரான இளம் காலை என நினைந்தவனே

நெருப்பாகி பகைவரின் குகை எரித்தவனே

ஓயாது உழைத்திடும் அலைஆகும் கடலே

தமிழீழம் தனை நோக்கி விரைகின்ற படகே. (ராஜ கோபுரம்)

இந்த பாட்டு வரி எழுதினது.. சிறி அண்ணா

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/rD_9TDi0//

காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை

கல்லறை அல்ல

உயிர் உள்ளவர் பாசறை (காலத்தால்)

தீபங்கள் அணையலாம் தீ அணைவதில்லை

தேசத்தை காத்த உயிர் ஒய்ந்தொழிவதில்லை (தீபங்கள்) (காலத்தால்)

குண்டு மழை நடுவினிலும் குருதி மழை நடுவினிலும்

நின்று போர்களம் பார்த்தவன்

உண்ட சோறு தொண்டைஉள் நுழையுமுன்

நஞ்சை உண்டு தாய்மண் காத்தவன் குண்டுமழை காலத்தால்

இலையுதிர் காலத்தில் உதிர்ந்தாரா இல்லையவர்

இள்வேனில் நாளில் உதிர்ந்தார்

தலை தந்து தமிழீழ மண் வாழ விலை தந்து

மாவிரராய் நிமிர்ந்தார் இலையுதிர் காலத்தால்

மாற்றார் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை

மண்ணாய் நிலைக்குமையா

ஆற்றல் மிகுந்த மாவிரர் கல்லறை மண்ணில்

அனலே முளைக்குமையா மாற்றார் காலத்தால்

தமிழீழ மாமண்ணில் என்றென்றும் புலி வீரர்

நடந்த கால் தடமிருக்கும்

தமிழ் மாந்தர் உள்ளவரை என்றென்றும்

அவர் நெஞ்சில் மாவீரர் படமிருக்கும் தமிழீழ காலத்தால்

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...vu-track-10mp3/

இது தாண்டா கடைசி அடி

எதிரி கதையை இன்றே முடி

பிடியடா தம்பி ஒரு பிடி

பிறக்கும் தமிழீழம் பறக்கும் புலிக்கொடி (இதுதாண்டா)

வலிமை உடைய படை புலிகள் படைதாண்டா

வாடா பகைவனை நொருக்குவோம்

கொலைஞர் படை சிதற தலைகள் விழ வாடா

கொடியர் உடல் தேடிப் பொறுக்குவோம் (இதுதாண்டா)

சீறு புயலாகி வீறு கொண் எழடா

சிங்களம் அதிர தாக்கடா

நூறு படை வரலாம் நூறு தடை வரலாம்

நொடியில் பகை தூள் தூள் ஆக்கடா (இதுதாண்டா)

உரிமை இழப்போமா தமிழர் உயிர் ஈழம்

ஒருபோதும் ஒடுங்கிக் கிடக்காது

நரிகள் விளையாட்டு புலிகள் தமிழ் மண்ணில்

நடக்குமா இங்கு நடக்காது (இதுதாண்டா)

அடியடா ஓங்கி அடியடா - நமது

அன்னை மண் உயிரில் மேலன்றோ

இடியும் எடி எழடா விடியல் எழ எழடா

வெற்றித் தோழ் தமிழன் தோளன்றோ

Edited by kuddipaiyan26

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...alvi-engkalmp3/

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

பள்ளிக்கூடங்கள் அகதியானது

படிக்கும் பாடங்கள் அழுகையானது

அகதி முகாமில் அழுகின்ற விளக்கில் படிக்கிறோம்

அகதி முகாமில் அழுகின்ற விளக்கில் படிக்கிறோம்

ஆளுவோரின் கத்தி

கீறக்குருதி வரும் துடிக்கிறோம்

ஆளுவோரின் கத்தி

கீறக்குருதி வரும் துடிக்கிறோம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

குப்பி விளக்குகள் காற்றில் அணைந்தன

உப்பு நீரினால் விழிகள் நனைந்தன

குப்பி விளக்குகள் காற்றில் அணைந்தன

உப்பு நீரினால் விழிகள் நனைந்தன

வானத்தில் விளக்கு வருமென்று நினைத்து நடக்கிறோம்

வானத்தில் விளக்கு வருமென்று நினைத்து நடக்கிறோம்

வாசலில் வெடிக்கும் குண்டு

ஆசைகள் கருகும் துடிக்கிறோம்

வாசலில் வெடிக்கும் குண்டு

ஆசைகள் கருகும் துடிக்கிறோம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

திட்டமிட்டுப்பல சதிகள் தீட்டினர்

வெட்டி வீழ்த்திட வழிகள் காட்டினர்

திட்டமிட்டுப்பல சதிகள் தீட்டினர்

வெட்டி வீழ்த்திட வழிகள் காட்டினர்

கனவுகள் கிழிந்து தரையினில் கிடந்து துடிக்குதே

கனவுகள் கிழிந்து தரையினில் கிடந்து துடிக்குதே

எதிர்காலத்தின் கழுத்தை

பேரினவாதம் நெரிக்குதே

எதிர்காலத்தின் கழுத்தை

பேரினவாதம் நெரிக்குதே

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

புத்தகத் தாள்கள் எதிரில் விரிந்தன

செத்தவர் முகமே அருகில் தெரிந்தன

புத்தகத் தாள்கள் எதிரில் விரிந்தன

செத்தவர் முகமே அருகில் தெரிந்தன

போருக்கு படிப்பா படித்திட போற கேள்விகள்

போருக்கு படிப்பா படித்திட போற கேள்விகள்

பதில் ஊருக்கு தெரிந்தால்

இனியும் அணுகுமா தோல்விகள்

பதில் ஊருக்கு தெரிந்தால்

இனியும் அணுகுமா தோல்விகள்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

கல்வியும் எங்கள் மூலதனம்

அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

இந்த பாட்டு வரி எழுதினது..அண்ணன் அருவி

Edited by kuddipaiyan26

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...kannan-songs-t/

எங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழ் ஈழம் தந்த கருனாகரன் எங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழ் ஈழம் தந்த கருனாகரன் எங்கும் புகழ் படைத்தான் அவன் எங்கும் புகழ் படைத்தான் அவன்.. எங்கள் இன்னல்கலை துடைத்தான் அவன் எங்கள் இன்னல்கலை துடைத்தான் அவன்..

சத்தியத்தை மதித்தான் அவன் தமிழ் தாயகத்தை குதித்தானவன் சத்தியத்தை மதித்தான் அவன் தமிழ் தாயகத்தை குதித்தானவன் முத் தமிழை வளத்தான் அவன் வீர முத்திரைய பதித்தான் அவன் வீர முத்திரைய பதித்தான் அவன்

ஆதிக்கத்தை வதைத்தான் அவன் எங்கும் அன்புகளை விதைத்தான் அவன் ஆதிக்கத்தை வதைத்தான் அவன் எங்கும் அன்புகளை விதைத்தான் அவன்

பாத‌க‌த்தை க‌லைத்தான் அவ‌ன் பாத‌க‌த்தை க‌லைத்தான் அவ‌ன் இந்த‌ பார்புக‌ளை நிலைப்பான் அவ‌ன் இந்த‌ பார்புக‌ளை நிலைப்பான் அவ‌ன்

அண்ண‌ன் வ‌ழி அணி சேருவோம் அவ‌ர் ஆர்ற‌ளினாள் ப‌கை போக்குவோம் அண்ண‌ன் வ‌ழி அணி சேருவோம் அவ‌ர் ஆர்ற‌ளினாள் ப‌கை போக்குவோம்

க‌ண்ணி தமிழ் துய‌ர் நீக்குவோம் வீர‌ காவிய‌த்தை உருவாக்குவோம்

எங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழ் ஈழம் தந்த கருனாகரன் எங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழ் ஈழம் தந்த கருனாகரன் எங்கும் புகழ் படைத்தான் அவன் எங்கும் புகழ் படைத்தான் அவன்.. எங்கள் இன்னல்கலை துடைத்தான் அவன் எங்கள் இன்னல்கலை துடைத்தான் அவன்..

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தம்பி. நான் தேடிக்கொண்டு இருந்த பாடல் வரிகள் கிடைத்தன.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...orum-pulimugam/

மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே

ஒளி முகம் தோறும் புலி முகம் பார்த்து ஒளி முகம் தோறும் புலி முகம் பார்த்து

குலதெய்வம் போல உம்மை கும்பிடுவோம் நாங்களே

குலதெய்வம் போல உம்மை கும்பிடுவோம் நாங்களே

மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே

உலகம் தோறும் உள்ள சொந்தம் உங்கள் வீரம் நினைக்கும்

மழையும் கூட இறங்கி வந்து உங்கள் துயிலிடம் நனைக்கும்

உலகம் தோறும் உள்ள சொந்தம் உங்கள் வீரம் நினைக்கும்

மழையும் கூட இறங்கி வந்து உங்கள் துயிலிடம் நனைக்கும்

பதுங்கு குழியில் இருக்கும் பிள்ளை என்று தாய்மை நினைக்கும்

அது பத்து மாதம் சுமந்த வயிற்றை தடிவி பார்த்து சிலிர்க்கும்

இறந்தவர் என்றா மறப்போம் உம்மை எத்தனை தலைமுறை நினைப்போம்

கோயில் மணிகள் உங்கள் புகழை ஊர்கள் தோறும் ஒலிக்கும்

அமைதி வணக்கம் முடிந்த நொடியில் ஈகை சுடர்கள் விழிக்கும்

கோயில் மணிகள் உங்கள் புகழை ஊர்கள் தோறும் ஒலிக்கும்

அமைதி வணக்கம் முடிந்த நொடியில் ஈகை சுடர்கள் விழிக்கும்

தலைவர் உரை எழுந்து உம்மை களங்களாட அழைக்கும்

தலைவர் உரை எழுந்து உம்மை களங்களாட அழைக்கும்

இறந்தவர் என்றா மறப்போம் உம்மை எத்தனை தலைமுறை நினைப்போம்

Edited by kuddipaiyan26

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...padamaddeanmp3/

தாலாட்டு பாட மாட்டேன் தாலாட்டு பாட மாட்டேன் தாலாட்டு பாட மாட்டேன் தாலாட்டு பாட மாட்டேன்

தமிழ் ஈழ பிள்ளை என் பிள்ளை அவன் தலை சாய்த்து தூங்க இது நேரம் இல்லை

தாலாட்டு பாட மாட்டேன் தாலாட்டு பாட மாட்டேன்

எதிரியின் கொடிய குண்டு வீச்சிலே தொட்டில் எரிந்தது என் பிள்ளை விளையாடும் முற்றத்தில் நின்ர பந்தல் சரிந்தது எதிரியின் கொடிய குண்டு வீச்சிலே தொட்டில் எரிந்தது என் பிள்ளை விளையாடும் முற்றத்தில் நின்ர பந்தல் சரிந்தது உறங்கக் கூடாது என் மகன் என்றொரு உண்மை புரிந்தது உறங்கக் கூடாது என் மகன் என்றொரு உண்மை புரிந்தது

தாலாட்டு பாட மாட்டேன் தாலாட்டு பாட மாட்டேன்

தமிழ் ஈழ பிள்ளை என் பிள்ளை அவன் தலை சாய்த்து தூங்க இது நேரம் இல்லை

தாலாட்டு பாட மாட்டேன் தாலாட்டு பாட மாட்டேன்

விடுதலைப்புலிகள் போராடும் வேளை மகனே தூங்காதே வீரம் இல்லா பிள்ளை இவன் என்று கெட்ட பெயரை வாங்காதே

விடுதலைப்புலிகள் போராடும் வேளை மகனே தூங்காதே வீரம் இல்லா பிள்ளை இவன் என்று கெட்ட பெயரை வாங்காதே

நான் என்ன செய்தேன் தாய் மண்ணுக்கு என்று நீ நாளை ஏங்காதே

நான் என்ன செய்தேன் தாய் மண்ணுக்கு என்று நீ நாளை ஏங்காதே

தாலாட்டு பாட மாட்டேன் தாலாட்டு பாட மாட்டேன்

தமிழ் ஈழ பிள்ளை என் பிள்ளை அவன் தலை சாய்த்து தூங்க இது நேரம் இல்லை

தாலாட்டு பாட மாட்டேன் தாலாட்டு பாட மாட்டேன்

தாய் மணம் குளிர பகைவனே என் பிள்ளை இருக்கையால் கிலிவாண் தாவி விடுதலை புலிகள் கண்ணத்தில் முத்தங்கள் பொழிவான்

தாய் மணம் குளிர பகைவனே என் பிள்ளை இருக்கையால் கிலிவாண் தாவி விடுதலை புலிகள் கண்ணத்தில் முத்தங்கள் பொழிவான்

விழித்தே இருப்பான் என் பிள்ளை பகைவன் இருப்பானா அழிவான் விழித்தே இருப்பான் என் பிள்ளை பகைவன் இருப்பானா அழிவான்

தாலாட்டு பாட மாட்டேன் தாலாட்டு பாட மாட்டேன்

தமிழ் ஈழ பிள்ளை என் பிள்ளை அவன் தலை சாய்த்து தூங்க இது நேரம் இல்லை

தாலாட்டு பாட மாட்டேன் தாலாட்டு பாட மாட்டேன்

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள குட்டிப்பையன் உங்கள் சேவை தமிழின்திற்கு தேவை.

நிட்சயம் விடுதலைப்புலிகளை உலகத் தமிழினம் நினைத்து ஏஙகும்.

நன்றி

இபபடிக்கு

பென்மன்

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

..

Edited by ரவுடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...ley-oru-naal-t/

வங்கத்திலே எங்கள் சங்கத் தமிழ் மகன் தீயில் எரிந்ததென்ன வங்கத்திலே எங்கள் சங்கத் தமிழ் மகன் தீயில் எரிந்ததென்ன தேசங்கள் காத்திருக்க எங்கள் பாச விழிகளும் பூத்திருக்க வங்கத்திலே எங்கள் சங்கத் தமிழ் மகன் தீயில் எரிந்ததென்ன தேசங்கள் காத்திருக்க எங்கள் பாச விழிகளும் பூத்திருக்க

சீமைக்கு போய் வந்த காவல் தெய்வங்களை சிறை இட வந்தாய் சீமைக்கு போய் வந்த காவல் தெய்வங்களை சிறை இட வந்தாய் எங்கள் செந் தமிழ் வீரர் சந்தனம்மாக்க தீயினிலே வெந்தாய் சீமைக்கு போய் வந்த காவல் தெய்வங்களை சிறை இட வந்தாய் எங்கள் செந் தமிழ் வீரர் சந்தனம்மாக்க தீயினிலே வெந்தாய் அன்று வீசிய காற்றே புயல் ஆக்காதோ அந்த பாவியர் மீதே ஓர் நாள் மோதாதோ

வங்கத்திலே எங்கள் சங்கத் தமிழ் மகன் தீயில் எரிந்ததென்ன தேசங்கள் காத்திருக்க எங்கள் பாச விழிகளும் பூத்திருக்க

வைகறை வானத்து தாரகையால் வல் அலி நீ ஒலி தர வேண்டும் மார்கழி மாதத்து மழை முகிலாய் எம் மண்னதிலே வலம் வர வேண்டும் நெஞ்சுக்குள் சும்மந்த தாயக்க கனவு நித்தமும் இங்கு வாழும்மையா நீல கடல் அலை போல் எங்கள் நெஞ்சுக்குள் வாழும்மையா

வங்கத்திலே எங்கள் சங்கத் தமிழ் மகன் தீயில் எரிந்ததென்ன தேசங்கள் காத்திருக்க எங்கள் பாச விழிகளும் பூத்திருக்க வங்கத்திலே எங்கள் சங்கத் தமிழ் மகன் தீயில் எரிந்ததென்ன தேசங்கள் காத்திருக்க எங்கள் பாச விழிகளும் பூத்திருக்க

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டி.

வானுயர்ந்த காடிடையே நான் எழுந்து பாடுகிறேன் .................................

..............வல்லை வெளி தாண்டிப்போகுமோ.....................................

என்ற பாடலை இதை;திடமுடியுமா?

பென்மன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/manaosai/music/MKTqmS...-kaddidaiyemp3/

வானுயர்ந்த காட்டிடையே

நான் இருந்து பாடுகின்றேன்

வயல் வெளிகள் மீது கேட்குமா-இது

வல்லை வெளி தாண்டிப் போகுமா

வயல் வெளிகள் மீது கேட்குமா

வல்லை வெளி தாண்டிப் போகுமா

நாளை ஒரு குண்டு தைத்து

நெஞ்சில் துளை போடக் கூடும்

ஆளைக் கொல்லும் நஞ்சைக் கூட

அள்ளித் தின்று சாகக் கூடும்

எந்த நிலை வந்து சேருமோ

எனக்கு எப்ப வந்து சாவு கூடுமோ

எந்த நிலை வந்து சேருமோ

எனக்கு எப்ப வந்து சாவு கூடுமோ?

வானுயர்ந்த காட்டிடையே...

நான் சரியும் மண்ணில் நாளை

பூ மலர்ந்து ஆடக் கூடும்

தேனெடுக்கும் ஈக்கள் கூட்டம்

தேடி வந்து பாடக் கூடும்

எந்த நிலை வந்து சேருமோ-அதை

இந்த விழி பார்க்க் கூடுமோ?

(வானுயர்ந்த காட்டிடையே...

நாளை தமிழ் ஈழ மண்ணில்

நாங்கள் அரங்கேறக் கூடும்

மாலை கொடியோடு எங்கள் மன்னன்

சபை ஏறக் கூடும்

இந்த நிலை வந்து சேருமோ-அதை

எந்தன் விழி காணக் கூடுமோ

வானுயர்ந்த காட்டிடையே...)

Edited by kuddipaiyan26

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...anet-spor-1mp3/ :unsure:

மண்ணில் கொண்ட காதல் தான் கண்ணுக்குள்ளே நீங்கள் தான்

பாட்டாலே உமை தொழுகிண்றோம் நாளும் உமை நினைத்து

அன்பால் உமை அழைத்து ஆவாறம் சூடி நாங்கள் வணங்கிகிறோம்

மண்ணில் கொண்ட காதல் தான் கண்ணுக்குள்ளே நீங்கள் தான்

பாட்டாலே உமை தொழுகிறோம் நாளும் உமை நினைத்து

அன்பாய் உமை அழைத்து ஆவாறம் சூடி நாங்கள் வணங்கிகிறோம்

பூ மலர்திடும் பூமி ஏன் எரியுது சாமி தமக்கென வாழ்ந்தாள் ஏதும் நிலையாது

பார் என் உயிர் நாடு நாம் வாழ்ந்திடும் வீடு நிலத்திலே வாழ்க்கை எங்கள் மண்ணொடு

உயிர்கொடை ஆக்கும் வீரர்கள் வாழ்வு கலப்பதிவாக்கி தினம் வாழும் கலப்பதிவாக்கியே தினம் வாழும்

மண்ணில் கொண்ட காதல் தான் கண்ணுக்குள்ளே நீங்கள் தான்

பாட்டாலே உமை தொழுகிண்றோம் நாளும் உமை நினைத்து

அன்பால் உமை அழைத்து ஆவாறம் சூடி நாங்கள் வணங்கிகிறோம்

வீரர் உயிர் விடும் போது தீ அழுதிடும் பாரு இனத்தையே காக்கும் இவர் வரலாறு

சாய் எமை தொழும் போது நாம் அஞ்சுதல்க் கேடு துனிந்தவர் யார்க்கும் துன்பம் நெருங்காது

நெருப்பென வெக்கும் வேங்கைகள் தேக்கம் இனத் துயர் தீர கொழி ஏற்றும் இனத் துயர் தீர இங்கு ஒளி ஏற்றும்

மண்ணில் கொண்ட காதல் தான் கண்ணுக்குள்ளே நீங்கள் தான்

பாட்டாலே உமை தொழுகிண்றோம் நாளும் உமை நினைத்து

அன்பால் உமை அழைத்து ஆவாறம் சூடி நாங்கள் வணங்கிகிறோம்

மண்ணில் கொண்ட காதல் தான் கண்ணுக்குள்ளே நீங்கள் தான்

பாட்டாலே உமை தொழுகிறோம் நாளும் உமை நினைத்து

அன்பால் உமை அழைத்து ஆவாறம் சூடி நாங்கள் வணங்கிகிறோம்

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் இனமே... என் சனமே...

என் இதயத்தை தொட்ட பாடலில் இதுவும் ஒன்று

நன்றி குட்டியப்பன்

எங்கிருந்தாலும் எம் தலைவர் வாழ்க வாழ்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/...aivar-saakavil/

எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

கரும்புலிகள் வெடி வெடித்து காடையரை ஊடறுத்து

பொட்டம்மான் சூசையோடு புறப்பட்டாறு எம் தலைவன்

சிங்களவன் முற்றுகையை சிதறடித்த பெருமறவர்

பொங்கு தமிழ் உலகத்தார்கள் போற்றுகின்ற புலித்தலைவன்

கரும்புலிகள் வெடி வெடித்து காடையரை ஊடறுத்து

பொட்டம்மான் சூசையோடு புறப்பட்டாறு எம் தலைவன்

சிங்களவன் முற்றுகையை சிதறடித்த பெருமறவர்

பொங்கு தமிழ் உலகத்தார்கள் போற்றுகின்ற புலித்தலைவன்

எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

புலம் பெயர் நெஞ்சமெல்லாம் புயல் நெருப்பாய் மாறிடிச்சி

காடையன் மகிந்தாவின் கருவறுக்கத் துணிந்திடிச்சி

காடுமேடு வீடு எல்லாம் கரும்புலிகள் புகுந்துடுச்சி

கேடு கெட்ட சிங்களவன் உயிர் எடுக்கப் பதுங்கிடுச்சி

புலம் பெயர் நெஞ்சமெல்லாம் புயல் நெருப்பாய் மாறிடிச்சி

காடையன் மகிந்தாவின் கருவறுக்கத் துணிந்திடிச்சி

காடுமேடு வீடு எல்லாம் கரும்புலிகள் புகுந்துடுச்சி

கேடு கெட்ட சிங்களவன் உயிர் எடுக்கப் பதுங்கிடுச்சி

எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

ஈழத்தில் நம்மை வந்து கொந்தளித்தக் காடையனை

ஆழத்தில் மனம் கொதிக்க அடித்தொழிக்கும் நாள் வரட்டும்

மானத்தமிழ் உள்ளமெங்கும் மண் மீது உறங்காது

வானமே இடிந்த போதும் வன்னி மண்ணும் வணங்காது

ஈழத்தில் நம்மை வந்து கொந்தளித்தக் காடையனை

ஆழத்தில் மனம் கொதிக்க அடித்தொழிக்கும் நாள் வரட்டும்

மானத்தமிழ் உள்ளமெங்கும் மண் மீது உறங்காது

வானமே இடிந்த போதும் வன்னி மண்ணும் வணங்காது

எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓய்வதில்லை

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை

விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

தலைவர் படை வெடிக்கும் சிங்களத் தடியர் உயிர் குடிக்கும்

Edited by kuddipaiyan26

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.