Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியின் பின் விடுதலைப் புலிகள்

Featured Replies

கிளிநொச்சியின் பின் விடுதலைப் புலிகள்

கிளிநொச்சி வீழ்ச்சி கண்டபின் விடுதலைப் புலிகளால் மீண்டும் மேலெழுந்துவர முடியுமா? இலங்கைத் தமிழரின் நோக்கம் நம்பிக்கையற்றதாகி விட்டதா? புலிகளை தோற்கடிப்பதால் சமாதானம் ஏற்படுமா? பயங்கரவாதம் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பாக இரட்டைத் தனமான நிலைப்பாட்டை இந்தியா கடைப்பிடிக்கின்றதா?

இக்கேள்விகளுக்கு இந்தியா அமைச்சரவை செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் பி.ராமன் பதிலளித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக இருந்த கிளிநொச்சியை 2 ஜனவரி 2009 இல் இலங்கை இராணுவம் கைப்பற்றியதையடுத்து அது தொடர்பாக நான் எழுதிய கட்டுரை குறித்து பல கேள்விகள் எனக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றுக்குப் பதிலளிக்க நான் முயற்சித்துள்ளேன் என்று பி.ராமன் தெரிவித்திருக்கிறார்.

அவற்றை "அவுட்லுக்' சஞ்சிகை பிந்திய வெளியீட்டில் பிரசுரித்திருக்கிறது. அவை வருமாறு;

* இலங்கை இராணுவத்தின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறானதாக இருக்கும்? கடந்த இரு வருடங்களில் இலங்கை இராணுவம் பெற்ற தொடர்ச்சியான வெற்றியானது புலிகளின் தாக்குதல் நடவடிக்கைக்கான சந்தர்ப்பத்தை நிராகரித்துள்ளது.கிழக்கிலோ, வடக்கிலோ தற்பாதுகாப்பு நடவடிக்கைக்கே புலிகளை தள்ளிவிட்டுள்ளது. எதிர்ப்பு மோதலை மேற்கொள்ள வாய்ப்பில்லாத தொடர்ச்சியான தற்பாதுகாப்பு சண்டைகள் உளரீதியான தாக்கத்தையே எங்கும் ஏற்படுத்தும்.

அந்தத்தருணம் இன்னமும் புலிகளுக்கு வரவில்லை. புலிகள் தாக்குதல் நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை இராணுவம் தொடர்ந்தும் அளிக்காதிருந்தால் அந்த நிலைமை ஏற்படும். இலங்கை இராணுவம் கிளிநொச்சி வெற்றியின் பின்னர் எந்தவொரு கால இடைவெளியையும் வழங்கவில்லை என்பதை வடக்கிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தனது தாக்குதல் நடவடிக்கையை இராணுவம் முல்லைத்தீவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. முல்லைத்தீவை இலங்கை விமானப்படை குண்டு வீச்சுக்களை நடத்தும் பிரதான இலக்காக காணப்படுகிறது. மீண்டும் அணிதிரளாமல் புலிகளை வைத்திருப்பது இராணுவத்தின் நோக்கமாக உள்ளது.

* கடந்த காலத்தில் இந்திய சமாதானப்படை மற்றும் இலங்கை இராணுவம் ஆகியவற்றுக்கு எதிரான மோதல்களில் நம்பிக்கையில்லாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என்று கருதப்பட்டபோதும் அவர்கள் இழந்த பகுதிகளை திரும்பக் கைப்பற்றியிருந்தனர். அதனை மீண்டும் செய்ய முடியுமா?

புலிகளின் மனப்பலமும் நோக்கமும் வலிமையாகவுள்ளது. ஆனால், ஆட்கள் மற்றும் பொருட்கள் போன்ற வளங்கள் இல்லாமல் மனவலிமையும் நோக்கமும் மட்டும் சண்டைகளில் வெற்றியை ஏற்படுத்த முடியாது. ஆனால், 1990 களில் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஒருவரால் முற்றாக நிராகரிக்க முடியாது. ஆயினும் 9/11 இற்கு முன்னனைய உலக நிபந்தனையை விட 9/11 இற்குப் பின்னரான உலக நிபந்தனைகளில் வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

வேறு தெரிவு இருக்காவிடின் அரசியல் ரீதியான நோக்கத்தை வென்றெடுக்க பயங்கரவாதம்/ கிளிநொச்சி என்பனவற்றின் நியாயபூர்வத் தன்மை குறித்து கணிசமான அளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மை 9/11 இற்கு முன்னர் (உலக வர்த்தக மையத் தாக்குதல்) காணப்பட்டது.

இக்காரணத்தினால் புலிகள் சர்வதேசத்தில் சுதந்திரமாக நிதி திரட்டியதுடன் திரைமறைவாக பொருட்களையும் சேகரித்திருந்தனர். ஆனால், 9/11 இல் அமெரிக்காவில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்து பயங்கரவாதமானது தீயசக்தி என்றும் அதனை எந்தவொரு காரணத்துக்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சர்வதேச சமூகத்திடம் நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது,

சர்வதேச சமூகத்தின் பார்வையில் புலிகள் இன்று ஒரு பயங்கரவாத அமைப்பாகும். அந்த அமைப்பு சுதந்திரமாகச் செயற்பட முடியாது. அதன் நிதி மற்றும் ஏனைய வளங்களும் ஒவ்வொன்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. 9/11 இற்கு முன்னய புலிகள் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை சேகரிக்கும் முக்கியமான மற்றொரு வளமாக இலங்கை இராணுவத்திடமிருந்து கைப்பற்றும் ஆயுதங்கள் இருந்தன. தற்காப்பு சண்டையில் இது அருகி விடுகிறது. 9/11 இற்கு முன்னர் இருந்ததை விட களநிலை யதார்த்தமானது புலிகளுக்கு எதிரானதாக உள்ளது. 9/11 இற்கு முன்னாய காலகட்டத்தில் நிகழ்வுகளுக்கு புலிகளால் திரும்பிவர முடியுமாக இருந்தால் அது அதிசயமாக இருக்கும். ஆனால், மீண்டும் புலிகள் அமைப்பால் பழைய நிலைமைக்கு வரமுடியாது என்ற எண்ணத்துடன் செயற்படக்கூடாது. குறிப்பாக இலங்கை இராணுவத்திடம் அதீத நம்பிக்கையோ அல்லது அதிகமான எண்ணமோ இருந்தால் அது பாரதூரமான வகையில் உபாயரீதியான தவறுகளைத் தோற்றுவிக்கும்.

* ஆனால், 9/11 இற்குப் பின்னர் உலகில் ஈராக்கில் அல்ஹைதா மற்றும் அல்ஹைதா சார்பு சக்திகளும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களும் மீண்டும் அரங்கில் தலைதூக்கியுள்ளனவே?

ஆம். இதற்கு இரு காரணங்கள் உள்ளன. அல்ஹைதா சார்பு சக்திகளுக்கு ஈரான் மற்றும் சிரியாவில் புகலிடமும் உதவியும் கிடைக்கின்றன. அதேபோன்று தலிபான்களுக்கு பாகிஸ்தான் இராணுவத்திடமிருந்தும் ஐ.எஸ்.ஐ.யிடமிருந்தும் அத்தகைய உதவிகள் கிடைக்கின்றன. விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக புலிகள் அமைப்பின் தலைவர் இந்தியாவால் தேடப்படுபவராகும். இந்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து புலிகளால் புகலிடமோ அல்லது உதவிகளோ பெற்றுக்கொள்ள இயலாது. கடலுக்கு அப்பால் தப்பிச் செல்லும் சாத்தியம் இல்லை. உள்ளுக்குள் இருந்தே போராட வேண்டியிருக்கும்.

* ஆனால், இந்திய சமாதானப்படை இருந்த காலகட்டத்தில் புலிகள் சமாளித்துக் கொண்டு மீண்டும் அரங்கிற்கு வந்தனரே? அச்சமயம் இந்தியாவிற்குள்ளிருந்து புகலிடமோ அல்லது உதவிகளோ வழங்கப்படவில்லையே?

நான் இதுதொடர்பாக ஏற்கனவே கூறியிருந்தேன். 9/11 இற்கு முன்னைய நிலைமைகள் 9/11 இற்குப் பின்னரான நிலைமைகள் என இரண்டும் வேறுபட்டவையாகும். யாவற்றுக்கும் மேலாக புலிகளுக்கு எதிராக வான்பலத்தை இந்திய அமைதிப்படை கடுமையாகப் பிரயோகிக்கவில்லை. இலங்கை விமானப்படை இப்போ செய்துகொண்டிருப்பதைப் போன்று இந்திய சமாதானப்படை செய்திருந்தால் புலிகளால் மீண்டும் அரங்கிற்கு வந்திருக்க இயலாததாக இருந்திருக்கும்.

* இந்தியாவில் பிரபாகரனும் அமைப்பின் உறுப்பினர்களும் புகலிடம் கோருவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளனவா?

இந்திய, தமிழக அரசாங்கங்கள் இதனை அனுமதிக்க மாட்டார்கள். ஆயினும் இந்தியாவின் மத்திய பகுதியிலுள்ள காடுகளில் சில பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மாவோயிஸ்டுகள் (நக்சலைட்டுகள்) அவருக்கு உதவக்கூடும்.

மாவோயிஸ்ட்டுகளின் பகுதிக்கு அவர் சமாளித்துக்கொண்டு செல்ல முடிந்தால் எமது பாதுகாப்புப்படையினர் அவரைப் பிடிப்பது மட்டுப்படுத்தப்பட்ட விடயமாக இருக்கக்கூடும். விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைப் பொறுத்தவரை அவர்களில் சிலர் அகதிகளாக இந்தியாவுக்கு வரக்கூடும்.

* புலிகளை இலங்கை இராணுவம் தோற்கடித்தால் இலங்கையில் சமாதானம் தோன்றுமா?

அநேகமாக இல்லை. கிளர்ச்சியின் முடிவாகவே அது இருக்கும். இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பலவீனப்படுத்தாதவிதத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்குத் தீர்வு காணப்படும் வரை பயங்கரவாதத்துக்கு முடிவு ஏற்பாடாது.

* இந்தியா இரட்டைத்தனமாக செயற்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறதே? மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவ?தத்துக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக தென்படுகிறது. அதேசமயம் இலங்கை அரசின் கடுமையான நடவடிக்கைகள் குறித்துத் தவறு கண்டுபிடிப்பதாக கூறுவது பற்றி?

இரட்டைத் தனம் இல்லை. ஐ.எஸ்.ஐ.யின் அனுசரணையுடனான பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நாம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். அவர்களுக்கு எமது நாட்டிற்குள் அலுவல் இல்லை. அவர்களை அழிப்பது தொடர்பான தயக்கமான கொள்கையை நாம் பின்பற்றத் தேவையில்லை. பிரிவினைவாதிகள், கொள்கைரீதியான பயங்கரவாதிகள் அல்லது ஜிகா தி பயங்கரவாதிகள் என்ற எமது நாட்டிலுள்ள சொந்த மக்கள் தொடர்பான எமது நிலைப்பாடுகள் அதிகளவுக்கு வேறுபட்டவையாகும். அவர்கள் தொடர்பான எமது நிலைப்பாடு அரசியல் மற்றும் சட்டம், ஒழுங்கு போன்ற விடயங்கள் ஒன்றுசேர்ந்த கலவையாகும். அவர்களுடன் பேசுவதற்கு ஒருபோதுமே நாம் தயங்கியது கிடையாது.

ஒரு சமூகத்திற்கு எதிரான மற்றொரு சமூகத்தின் மோதலாக உள்நாட்டு இயக்கங்களை நாம் பார்க்கவில்லை. அரசாங்கத்துக்கும் சமூகத்திலுள்ள ஆத்திரமடைந்துள்ள சக்திகளுக்கும் இடையிலான மோதலாகவே அவற்றை நாம் பார்க்கின்றோம். விசனமடைந்த சமூகங்களின் மனித உரிமைகள் தொடர்பாக தீவிரமாகக் குரல் கொடுப்பவர்கள் பெரும்பான்மை இந்து சமூகமாகவே உள்ளனர். இலங்கையில் வெளிநாட்டு பயங்கரவாதிகள் எவரும் செயற்படவில்லை. சகல கிளர்ச்சியாளர்களும் பயங்கரவாதிகளும் அந்த நாட்டு மக்களே. மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான உபாயத்தில் எங்களிடம் இருப்பது போன்ற பரந்த உலகஞானமோ பல்வேறுபட்ட தன்மைகளோ குறைவாகவே உள்ளது. இலங்கைத் தமிழர்களை வெளிநாட்டவர்கள் போன்று இலங்கை அரசு நடத்துகின்றது. சம உரிமையுடனான பிரஜைகள் என்று உதட்டளவில் கூறிக்கொண்டு அவர்களை வெளிநாட்டவர்கள் போன்று நடத்துகிறது. இதுவே இலங்கையில் மோதலைத் தோற்றுவித்துள்ளது. இது தமிழ் சமூகத்தின் விசமனடைந்துள்ள சக்திகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான மோதலை மட்டுமன்றி பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கும் இடையிலான மோதலாக உருவாகியுள்ளது.

தமிழர்களின் மனித உரிமைகளுக்கு ஆதரவாக எத்தனை சிங்களவர்கள் குரல் கொடுக்க முன்வந்துள்ளனர்? தமிழ் மக்களுக்கு விமானப்படையை பயன்படுத்துவதை எத்தனை பேர் விமர்சித்துள்ளனர்? விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் தோற்கடித்தாலும்கூட ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கைகளும் நியாயபூர்வமான காரண வரையறைகளுக்கு அப்பாற்பட்டதான இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவின் கருத்துகளும் சிங்கள, தமிழ் மக்கள் மத்தியிலான பிளவுகளை நீக்கி நல்லிணக்கத்தை இலங்கைச் சமூகம் ஏற்படுத்துவதற்கு பல வருடங்கள் எடுக்கும்.

http://www.thinakkural.com/

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உளறல் இது..! :D

சுத்திச்சுத்தி வந்திக......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா , P.Raaman, உங்களிடம் இன்னுமொரு கேள்வி,

ஒரு வேளை நீங்கள் சொல்வதுபோல் தம்ழரின் போராட்டம் ஒடுக்கப்படுமாக இருந்தால் ,

அதன் பின் இலங்கை இந்தியாவுக்கு மரத்தில செய்ஞ்ச ஆப்படிக்குமா? இ இல்ல இரும்புல செஞ்ச ஆப்படிக்குமா? அந்த ஆப்புட size எவ்வளவு இருக்கும் எண்டு நீங்க நினைகிறீங்க ?

இரும்புல செஞ்ச ஆப்பு சூடா இருக்குமா? இல்ல Jill எண்டு குளிரா இருக்குமா?

  • தொடங்கியவர்

ராமன் தனது அளவீடுகளுக்குள் நின்று கருத்தைக் கூறுகிறார். விடுதலைப்புலிகளை ஒன்றுசேர விடாமல் தொட்ர்ந்து சிங்கள இராணுவம் செயற்படப் போகிறதாம். அதுதான் வெற்றியாம். ஏன் இனியொரு கெரிலாப் போராட்டம் உருவாகாதா?

ராமன் தனது அளவீடுகளுக்குள் நின்று கருத்தைக் கூறுகிறார். விடுதலைப்புலிகளை ஒன்றுசேர விடாமல் தொட்ர்ந்து சிங்கள இராணுவம் செயற்படப் போகிறதாம். அதுதான் வெற்றியாம். ஏன் இனியொரு கெரிலாப் போராட்டம் உருவாகாதா?

அதுக்கு முதலிலை புலிகளின் குரல் இணையத்திலை அப்லோட் ஆகாமல் தடுக்க வேணும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இனியொரு கெரிலாப் போராட்டம் உருவாகாதா?

பலமாக இருந்த விடுதலைப்புலிகளை இப்படி கொரில்லாப்போராட்ட நிலைக்கு (வருமானால்) தள்ளிய பெருமை புலம்பெயர்ந்த தமிழர்களையே சாரும்.

;ஆனையிறவிற்கு பின்... எப்ப வருமாம்?

;ஆனையிறவிற்கு பின்... எப்ப வருமாம்?

உங்களைப்போல நல்லவர்கள் இருக்கும் வரை இதுவும் வரும் இதற்கு மேலும் வரும்...

  • தொடங்கியவர்

"திருமலையில் சிறிலங்கா படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: 12 படையினர் பலி"

தொடங்கிவிட்டது என்றே வைத்துக்கொள்ளுங்கள். போராட்டவடிவங்கள் மாறலாம்.

;ஆனையிறவிற்கு பின்... எப்ப வருமாம்?

பின்னுக்கு வரும்... வடிவா இருந்து பாருங்கோ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.