Jump to content

புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் மீதான தாக்குதல் பதிவு


Recommended Posts

பொதுமக்கள் மீதான தாக்குதல் பதிவு

Get Flash to see this player.

Get Flash to see this player.

புதுக்குடியிருப்பில் சிறிலங்கா படையினர் எறிகணை தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் பலி

[ஞாயிற்றுக்கிழமை, 11 சனவரி 2009, 05:50 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பின் தென்பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அப்பாவி பொதுமக்கள் உட்பட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு தெற்கு 9 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று சனிக்கிழமை இரவு எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இந்த எறிகணைகள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த பொதுமக்கள் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன.

இதில் வீடொன்றின் மீது வீழ்ந்து வெடித்துள்ள எறிகணைகளால் முல்லைத்தீவு சிலாவத்தையில் இருந்து இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான

காத்தான் துரைச்சாமி (வயது 60)

துரைச்சாமி சின்னம்மா (வயது 55)

துரைச்சாமி தமிழினி (வயது 17)

ஆகியோருடன் சிறுவனான சு.தவக்குமார் (வயது 17) என்பவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

கலாதீபன் திவ்யா (வயது 05)

கலாதீபன் மஞ்சு (வயது 25)

மரியம்மா (வயது 60)

ச.சுப்பையா (வயது 62)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சுப்பையா தனது கால்களை இழந்துள்ளார்.

நன்றி: புதினம்

Link to comment
Share on other sites

நன்றி மோகன் அண்ணா.

இந்தப் பதிவுகளை யூ ரூப்பில் இணைப்பதற்கு அனுமதிக்க முடியுமா ?

Link to comment
Share on other sites

நன்றி மோகன் அண்ணா.

இந்தப் பதிவுகளை யூ ரூப்பில் இணைப்பதற்கு அனுமதிக்க முடியுமா ?

இதை எல்லாம் கேட்க்க வேண்டுமா... நீங்கள் பயன் படுத்த வேண்டும் என்பதுதானே அவரின் வேண்டுதல்...

Link to comment
Share on other sites

இதை எல்லாம் கேட்க்க வேண்டுமா... நீங்கள் பயன் படுத்த வேண்டும் என்பதுதானே அவரின் வேண்டுதல்...

ஆமாம். சரிதான்.

நன்றி தயா அண்ணா.

அதற்கான ஆங்கில, பிரஞ்சு மொழிகளில் விளக்கத்துடன் இணைத்துவிட்டேன்.

Link to comment
Share on other sites

நன்றி தாயகன் உங்கள் மொழிபெயர்ப்பிற்கும் இணைப்புகளுக்கும்

இத்தகைய ஒளிப்படங்கள் search engin ல் முன்னுக்கு வரவைப்பதற்கான முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்

கூடிய tag களை இடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேரவலங்களை கண்கொண்டு பார்க்க, மனம் மிகவும் வேதனையாக இருக்கிறது. இதே போன்ற சம்பவங்கள் சொந்த வாழ்க்கையின் நினைவுகளை இரை மீட்கின்றன. ஈழத்தமிழன் ஒவ்வொருவனுக்கும் யுத்தத்தின் அழியாத வடுக்கள் உள்ளன. செந்தமிழர் இரத்தம் எல்லாம் நாய் குடித்து போனதடா. சுதந்திரத்திற்காக நாம் அதிக விலை கொடுத்து விட்டோம். விடியல் வரை போரடுவோம். உலகத் தமிழினமே, நாடு மதம் தவிர்த்து தமிழ் மொழியின் பெயரால் நாம் ஒன்றுபடுவோம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

நன்றி மோகன்.

இப்படிக்கு

பென்மன்

என்.வை.

Link to comment
Share on other sites

தாயகன் யு டியுபில விடியோவைத் தூக்கிட்டங்கள் போல.ஏன் எண்டு கேளுங்கோ?

Daily motion இணையத்தில் இணையுங்க வலைப் பதிவுகளில இணைக்கலாம்.

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா இதனை உயர்ந்த தர காணொளியினை தருவீர்களா நான் ஆங்கில சப் ரைட்டில் போட்டு யூடியுப்பில் ஏற்றி விடுகின்றேன்

Link to comment
Share on other sites

தாயகன் யு டியுபில விடியோவைத் தூக்கிட்டங்கள் போல.ஏன் எண்டு கேளுங்கோ?

Daily motion இணையத்தில் இணையுங்க வலைப் பதிவுகளில இணைக்கலாம்.

எல்லாவற்றுக்கும் காரணம் நாம்தான்

சிங்களவன் இதனை flag பண்ணி விடுவதால் விதி முறைக்கு எதிரானது என தூக்குவார்கள் நாம் எமது காணொளிகளை rate பண்ணுவதோடு மட்டும் நின்றுவிடாது எமக்கு எதிரான காணொளிகளை flag பண்ண வேண்டும் இதிலாவது ஒன்று சேருமா தமிழினம்!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம். சரிதான்.

நன்றி தயா அண்ணா.

அதற்கான ஆங்கில, பிரஞ்சு மொழிகளில் விளக்கத்துடன் இணைத்துவிட்டேன்.

">

Link to comment
Share on other sites

You tube இல age confirmation செய்தாப் பிறகு வேலை செய்யுது

அது ஏன் என்றால் அதிகமானவர்கள் வன்முறை காட்சிகள் உள்ளது என flag பண்ணியிருப்பதால் உது தான் வீடியோவை தூக்குவதன் முதற்படி

Link to comment
Share on other sites

வணக்கம்.

இதைப்போல இன்னும் ஒரு வீடியோவையும் login செய்துதான் பார்க்க வேண்டியதாய் இருந்தது. இப்பதான் விளங்குது இது, உண்மைகளை மற்றவர்களைப்பார்க்க விடாமல் செய்வதற்கு எதிரிககள் செய்யும் வேலை எண்டு.

இருந்தும் நான் வீடியோவின் ஆரம்பத்தில் எசச்சரிக்கை வசனம் போட்டிருந்தேன்.

இனிமேல் எதிரிகள் இணைக்கும் இப்படிப்படட்ட வீடியோக்களை ஈழவன்85 சொன்னது போல flag செய்யவேண்டியதுதான்.

நாரதர் அண்ணா, இதன் embed code ஐ பாவித்்து வலைப்பூக்களில் இணைக்கலாம் என்று நினைக்கிறேன்.

எதற்க்கும் dailymotion ல் இணைக்க முயற்ச்சிக்கிறேன்.

நன்றி.

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/-sT4EulDIBI&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/-sT4EulDIBI&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.