Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னொரு கடிதம்: ஆனையிறவிலிருந்து ஆனையிறவு வரை... அங்கிருந்து தமிழீழம் வரை...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சில கேள்விகள்...

1) இந்தப் போரில் இந்தியாவின் பங்கு என்னவென்பது தெள்ளத் தெளிவு. அதே நேரத்தில், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் மேற்குலகின் நலன்கள் எதிலுமே சம்பந்தப்படாத தமிழரின் தாயகப் போராட்டம் சிக்குண்ட காரணம் என்ன?

2) ராஜீவின் மரணத்தின் பின் ஒதுங்கியிருந்த இந்தியா மறுபடி மூக்கை நுழைத்தது ஏன்? இதே காங்கிரஸ் கட்சி 1991 மூதல் 96 வரை ஆட்சியில் இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3) தன் குழந்தைகள் பிச்சையெடுப்பதைப் பார்த்தாலும் பார்ப்பேனே ஒழிய அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று ஒரு காலத்தில் கூறிய சோனியா காந்தி 1997 இல் அதே அரசியலுக்குள் நுழைந்தது ஏன்? அவரது இந்தப் பாரிய மனமாற்றத்துக்கு காங்கிரஸ் கட்சி பலமிழந்து போய்க்கொண்டிருந்தது மட்டும்தான் காரணமா?

4) மே 2004 தேர்தல் நேரத்தில் கடைசி நிமிடத்தில் அரசியலில் உள்நுழைந்து தேர்தலிலும் போட்டியிட்ட ராகுல் காந்தியின் நோக்கங்கள் எவை? அவரின் தேர்தல் வெற்றியுடன் கூடவே வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்த மாயம் என்ன?

5) பாகிஸ்தான், சீனா போன்ற இந்திய வைரிகள் சம்பந்தப்பட்டிருந்தும், தானும் தன் பங்குக்கு இலங்கைக்கு முண்டு கொடுக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு என்ன?

6) எதிலுமே அதிகம் சம்பந்தப்படாமல் இருந்த பிரியங்கா திடீரென சிறையிலிருக்கும் நளினியைச் சந்தித்தது ஏன்?

7) தற்போதைய காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் அதன் அரசியல் எதிர்காலத்தையே கிடப்பில் போட்டுவிட்டு இலங்கை அரசின் இன ஒழிப்பு முயற்சிக்குத் துணை போவது ஏன்?

8) ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றான திமுகவின் தலைவர் கலைஞர் கருணாநிதியின் கையாலாகாதநிலை ஏன்?

9) தோழர் திருமாவின் உண்ணாநோன்பு குறித்து மத்தியிலும், மாநிலத்திலும் ஆள்பவர்கள் பெரிதும் அலட்டிக் கொள்ளாதது ஏன்?

10) போரில் இவ்வளவு நடந்த பின்னும், புலிகள் இன்னும் நல்லெண்ண சமிக்கைகளை மட்டுமே இந்தியாவை நோக்கி அனுப்பிக் கொண்டிருப்பதன் தார்ப்பரியம்தான் என்ன?

ம்ம்ம்ம்... கன்றுக்குட்டி நியாயம் கேட்கிறதோ? :o:(:)

அட ..... இப்ப தான் இதனை வாசித்தேன் டங்குவார் . :D:):)

  • கருத்துக்கள உறவுகள்

164tj2.gif

நான் ஒண்டும் சொல்லேல்ல..! இந்த விளையாட்டுக்கும் நான் வரேல்ல..! :o:)

ஓம்

விளையாட்டை ரசியுங்கோ நல்லா

அட ..... இப்ப தான் இதனை வாசித்தேன் டங்குவார் . :D:):)

இவரது கேள்விக்கு உங்களுக்கும் பதில் தெரியாதுபோல

அதுசரி தூங்குபவனை எழுப்பலாம்.........

நடிப்பவனை...........??????

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் டங்குவார்!

உங்களது ஆதங்கம் கேள்விகளில் இருந்து புரிகிறது.

அதற்குரிய எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் எங்களது தேசிய இயக்கத்தின் செயல்பாடுகள் பலவற்றை வெளிப்படையாக விவாதிக்க முடியாதவை.

உதாரனத்துக்கு இன்றைய களத்தின் சூழ்நிலையைப் பாருங்களேன் அதாவது எமது படை எவ்வளவு பலமாக இருந்தும் சில விடயங்களை அடக்கி வாசிக்கின்றன.

தமிழ்த்தேசியத்தின் உண்மையான விசுவாசிகள் ஒருபோதும் ததும்பமாட்டார்கள் தங்களது கடமையில் இருந்தும் இறங்கவும் மாட்டார்கள்.

ஆகவே நடக்க இருப்பவை நல்லதாகவே இருக்கும் என்ற நம்பிக்கையில் தொடருவோம் எங்களது பங்களிப்பை.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்

விளையாட்டை ரசியுங்கோ நல்லா

உங்களோட சொல்லாடுற விளையாட்டுக்கு நான் வரேல்ல எண்டுதான் சொன்னன்..! அண்ணை.. கருத்துக்கு கருத்து எழுதுங்கோ..! என்னைத் தாக்கிக் கொண்டிருக்கிறதால ஆருக்கும் ஒரு பிரியோசனமும் இல்லை. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்கு முன்பு பரந்து விரிந்திருக்கும் எதிரியின் பொய் பரப்புரைகளை முறியடிப்பதே இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது. ஒரு கட்டத்தில் தமிழர்கள் இல்லாதவர்களை நோக்கி திரும்பிய எமது பரப்புரை போராட்டங்களும், பரப்புரை செயறப்பாடுகளும், இன்று தேவையற்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் விரையாக்கப்படுகின்றது

இதில் வேடிக்கை என்னவெனில் தமிழர்களுக்கு தமிழர்களும், விடுதலை போராட்டத்தை நன்கு அறிந்தவர்களுக்கு இளைஞர்கள் விளக்கமளிக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது. சிங்கள அரசின் பரப்புரை போரானது அந்தளவுக்கு இருக்கின்றது.

நாம் பொழுது போக்காக தேசியப்போராட்டத்தை வைத்து நக்கலும் நையாண்டியும் செய்துவிட்டு போகின்றோம். 100 பேர் இருந்தால் 75 பேருக்கு இன்றைய சூழல் பற்றி விளக்கத்தை மீதமுள்ள 25 பேர் சொல்லி விட்டு அதில் மேலும் ஒரு 25 பேரை அழைத்துக்கொண்டு தமிழர்அல்லாதோருக்கான பரப்புரயை செய்ய முடிகின்றது.

இந்த நிலை மாற்றம் பெற்றால் நாங்களும் பிரச்சார போரில் பாரிக இலக்கை அடைய முடியும்.

வாறன் சூறாவளி.. அதுக்கு முன்னால...

குருடன் கம்பு சுத்துற மாதிரி எல்லாப் பக்கமும் வீசாமல், ஏதாவது குறித்த சில இலக்குகளை வைத்து எமது செயல்திட்டங்களை முன்னெடுக்க வேணுமல்லோ...! அதுதானே வெற்றியை நோக்கி நம்மைச் செலுத்தும்? அப்படி சிந்தித்தபோது எனக்குள் எழுந்த கேள்விகள்தான் இவை.

தமிழருக்கெதிரான இந்த சர்வதேச அடக்குமுறை, பயங்கர வாதத்துக்கு எதிரான போரின் விளைவு என்பதை ஏற்க முடியவில்லை. இந்தியாவில் 2004 க்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றமே காரணம் என்பது எனது எண்ணம். இது உண்மையாயின் அந்தச் சதியின் பின்னணி என்ன? அதை முறியடிப்பது எப்படி என்பதில்தானே எங்கள் நடவடிக்கைகள் தங்கியிருக்கின்றன...? :unsure:

டங்குவார்,

நீங்கள் நினைப்பது சரி, ஆனால் 2001 க்குப்பின்னராண காலத்திலி இருந்தே இக்கட்டான சூழலில் எமது போராட்டம் இருந்தது ஏதோ உண்மைதான். இதற்கு அனுசரணை நாடுகள் என்று சொல்லிக்கொண்டவை அப்பப்ப விட்ட அறிக்கைகளே சான்று. இதுகளை முறியடிக்கும் விசயத்தில் தமிழர் தரப்பிலும் பல முனைப்புக்கள் எடுக்கப்பட்டன, இருந்தாலும் ஒப்பீட்டளவில் இமது செயற்றிறன் குறைவானதே. இதுக்குக்கான காரணிகளை என்னால் இப்போது தரமுடியாது.

இதுக்கு 2004 ஒரு திருப்பு முனையாக இருந்திருக்கலாம். ஆனாலும் என்று இந்திய ஆட்சிமாற்றம் உண்டாயிற்றோ அண்றிலிருந்தே நோர்வேவை நோக்கி இந்தியா குறிவைத்தது என்பதே உண்மை. ஏதோ கரணத்துக்காக ராசபக்ஸ வர அவரை எவரோ சரியாக பாவித்தார்கள். அதன் விளைவுக்கு ராசபக்ஸவே பொறுப்பில்லை...

இறுதியாக ஒன்று இப்போது எமக்கு வேற தெரிவில்லை.... வாறிகளா?

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக ஒன்று இப்போது எமக்கு வேற தெரிவில்லை.... வாறிகளா?

கருத்துக்கு நன்றி சூறாவளி..

சரி.. இப்போ இங்கிருந்து எங்கே செல்வது?

1) இந்திய அரசைக் குறிவைத்து தூதரகங்களுக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதா? அவர்களுக்கு மடல்கள் எழுதுவதா?

2) வெளிநாட்டு அரச மற்றும் அமைப்புசார் பிரதிநிதிகளுக்கு (ஐரோப்பிய யூனியன் ஐ.நா. போன்றவை) மடல்கள் அனுப்புவதா?

3) தமிழர் தரப்பை முன்னிறுத்துவதா? இல்லை வன்னி மனிதப் பேரவலத்தை முன்னிறுத்துவதா? இல்லை இரண்டையுமா?

4) அவரவர் நாடுகளில் அரச பிரதிநிதிகள் மற்றும் கட்சிகளை அணுகுவதா?

5) இல்லையென்றால் தாயகப் பங்களிப்பை மேற்கொண்டு அவ்வப்போது தமிழர்தரப்பால் விடுக்கப்படும் கோரிக்கைகளை (பொங்குதமிழ் போன்றவை)மட்டும் முன்னெடுப்பதா?

6) இவை எதுவும் இல்லாது வேறு ஏதாவ‌து.

இவற்றில் நான் 2 மற்றும் 5 ஐ ம‌ட்டும்தான் செய்கிறேன்.

இப்போதுள்ள‌ சூழ்நிலையில் என் அறிவுக்கு எட்டிய‌வ‌ரை எம‌து பிர‌ச்சார‌ங்க‌ள் இந்தியாவைக் குறித்து இருக்க‌ வேண்டும். பின்புல‌மாக‌ புல‌ம்பெய‌ர் நாடுக‌ளில் செய்ய‌ப்ப‌டும் க‌வ‌ன‌ ஈர்ப்பு முன்னெடுப்புக‌ள் த‌மிழ‌ர் பிர‌திநிதிக‌ள் யார் என்ப‌தை தெரிய‌ப்ப‌டுத்த‌வும் ம‌னித‌ப் பேர‌வ‌ல‌ங்க‌ளை ஆவ‌ண‌ப்ப‌டுத்த‌வும் உத‌வும்.

தமிழீழத்துக்கு முதல் எதிரி இந்தியாவே. இது தமிழன் மீது வட இந்தியரின் வெறுப்பு என்கிற அளவில் சுருங்கி விடவில்லை. ஈழத்தை அங்கீகரிப்பது காஷ்மீர் விவகாரத்தில் அவர்களைச் சிக்கலில் தள்ளும். ஈழப்பிரச்சினையில் நாங்கள் சொல்வது காலனி ஆதிக்க காலத்துக்கு முன் எங்களுக்கென்று ஒரு நாடு இருந்தது; அது எங்களுக்கு வேண்டும் என்பது. காஷ்மீரிகளுக்கும் இதே வாக்குவாதம் பொருந்துகிறது. அஸ்ஸாமியருக்கும் பொருந்தும். பிறகு இந்தியா எப்படி ஈழத்தை ஆதரிக்கும்? இந்தியா எதிர்க்கும்வரை சர்வதேசமும் எதிர்க்கவே செய்யும். புஷ் போய் ஒபாமா வந்தாலும் ஒரு கல்லு கூட பெயராது.

நமக்கு உள்ள ஒரே வழி, இலங்கைப் பிரச்சினையை கைவிடும் நிலைக்கு அல்லது கண்டும் காணாமல் இருக்கும் நிலைக்கு இந்தியாவைத் தள்ளுவது. தமிழர்தரப்பு இதைப் பகிரங்கமாகச் சொல்லவோ செய்யவோ மாட்டார்கள். நாம்தான் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் எமது பிரச்சாரத்தை முன்னெடுப்பது இதற்கு ஒரு வழி. அங்குள்ள ஊடகங்களுக்கு எழுதுவது மற்றும் அவர்கள் போராட்டத்துக்கு ஊக்குவிப்பு செய்வது போன்றவை. புலம்பெயர் நாடுகளில் உள்ள இந்திய அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி எமது பிரச்சாரத்தை முன்னெடுப்பதும் ஒரு வழி. இங்குள்ள ஒரு கல்சா அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

இங்கே நான் எழுதியவை என் தனிப்பட்ட கருத்துக்களே.. யாரையும் புண்படுத்தும் நோக்கமோ வேறு முயற்சிகளைத் தடுக்கும் நோக்கமோ இங்கு இல்லை.

நன்றி.

நீங்கள் செய்பவைகளை திருத்தவோ மாற்றவோ வேண்டாம். இப்போது உங்களின் நேரடிப்பங்களிப்பை இரட்டிப்பாக்குங்கள்.

இதற்குமேல் என்னால் எதையும் சொல்ல முடியாது.

இன்னொரு கடிதம்: ஆனையிறவிலிருந்து ஆனையிறவு வரை... அங்கிருந்து தமிழீழம் வரை...

முக்கியமானது என்னவெனில் - பேரணிகள் ஒழுங்கு செய்வதற்கு ஒதுக்கப்படும் சக்தியின் அதே அளவு, அல்லது அதைவிட அதிகமான அளவு சக்தி ஊடகங்களை அந்த நிகழ்வுக்கு வரவைப்பதில் செலவிடப்படவேண்டும். நான் இங்கே தமிழ் ஊடகங்களைக் குறிப்பிடவில்லை.

பேரணிகளை வைத்துவிட்டு, சும்மா 'புதினத்"திலும், 'தமிழ்நெற்"றிலும் மட்டும் 'சங்கதி"களைப் 'பதிவு" செய்து, படங்களைப் போடுவதில் எந்தப் பலனும் இல்லை.

மிக முக்கியமான விடயங்களில் இதுவம் ஓரு விடயம் ஆனாலும் பலராலும் இதைக் கவனத்தில் ஏடத்ததாக தெரியவில்லை அல்லது நடைமுறைப்படத்தியதாக இல்லை என்பது நாம் ஒரு அறிவு சார் விடயங்களில் பல புலமை சாhந்த இனமாக இருந்தும் இவை போன்றவற்றை கவனிக்காமல் விட்டதும் வேதனையானது . அத்தடன் வெறுமனமே எமது தரப்பு செய்பாட்டாளர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக எமது பாராளுமன்ற உறுப்பினர்களில் சில பேர் மிக திறமையான ஆங்கில மொழி புலமை இருந்தும் கூட திரும்ப திருத்ப தமிழ் ஊடகங்கிளற்கே பேட்டிகளானுலும் சரி கருத்தக்ள வெளிப்படுத்துவதாயினும் சரி செய்கிறார்களே தவிர வெளிநாட்டு மொழி ஊடகங்களை நோக்கி செய்யப்பட்டவை பெரும்பாலும் குறைவு என்றே சொல்ல வேண்டும் ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.