Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐஞ்சு சதத்துக்கு கடலைக் கொட்டையும் ஐநூறு பிறாங்குக்கு அன்ரி எயாக்கிறாவ் மிசைலும்........?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐஞ்சு சதத்துக்கு கடலைக் கொட்டையும் ஐநூறு பிறாங்குக்கு அன்ரி எயாக்கிறாவ் மிசைலும்........?

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எங்கடை ஊரிலை ஒருத்தர். அம்பத்தைஞ்சு அறுவது வயதிருக்கும். பெரிய கமக்காரன். எந்த நேரமும் வாயிலை சுருட்டுக் கிடக்கும். அடிக்கடி நெருப்புப் பெட்டியைத் தட்டி அதை மூட்டிக் கொண்டிருப்பார். ஆனால் அதைத் தொடர்ந்து பத்தி முடிக்கிறேல்லை. விடிய வெள்ளாப்போட வாயில வைக்கிற சுருட்டு இரவு படுக்கைக்குப் போகும் வரைக்கும் வாயிலேயே கிடக்கும்.

அவர் பெரிய கமக்காரன் எண்டதோட ஆள் பெரிய பொயிலை வியாபாரியும், வீட்டில சுருட்டுக் கொட்டில் வைச்சு சுருட்டுச் சுத்துற வேலையும் நடக்கும். அவர் சுருட்டுக் கொட்டில் வைச்சிருந்தாலும் அவர் பத்திறது கனகலிங்கம் சுருட்டுத்தான். கனகலிங்கம் சுருட்டெண்டாலும் குறைச் சுருட்டெண்டால் நாத்தம் வராதோ? ஆளுக்குக் கிட்ட எப்ப போனாலும் ஒரு பொயிலைக் குடில் வாசனையே நிக்கும். பெயர் பொன்னையர். கமக்காரப் பொன்னையர். ஊர்.....? வேண்டாம். பெயரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக் கூடாது எண்டு சொல்லுறவை. நான் ஊரைச் சொல்லப்போக பிறகு ஆரும் ரெலிபோனை எடுத்து அகராதியிலை இல்லாத சொல்லை எல்லாம் தேடிப் பிடிச்சு செல்லமாப் பாராட்டுவினம் பாருங்கோ !

சரி, ஒரு மனுசன் மினக்கெட்டு காசைச் சிலவு செய்து ரெலிபோன் எடுத்துப் பாராட்டேக்குள்ள பெயரைக் கூடக் கேக்காமல் விடுகிறது எங்கட கலாச்சாரத்துக்கு அழகில்லை எண்டு நினைச்சு, பெயரைக் கேட்டால் " பூதத்தம்பி " எண்டு சொல்லுவினமாம்.

உண்ணானை நான் இதுநாள் வரையில நேரில் கண்டதில்லை. அவர் அடிக்கடி என்னைத் தேடி ரெலிபோன் எடுக்கிறவர், எண்டு மட்டும் அறிஞ்சன். அதால அவரைக் காண பேச சரியான ஆசை. வேலை வெட்டி இல்லாதவர் எண்டுதான் நினைக்கிறன். ஏதாவது நல்ல விசயங்களைச் செய்தால் கடைசி காலத்தில போகிற வழிக்கு புண்ணியமாய் போகும் தம்பி " பூதத்தம்பி " ! . சரி அதைவிடுவம்.

அந்தப் பொன்னையர் சரியான பம்பல் காய். ஆனால் கஞ்சனிலும் மகா கஞ்சன். காசு பணம் தேவைக்கு மேல இருந்தாலும், தோட்டம் துரவுக்கை வேலை எண்டால் தானும் ஒரு ஆளாய் போய்க் குந்தியிடும். அதிலும் பொயிலைக் கண்டுக்கு தண்ணி கட்டுகிற பருவத்திலை கண்டடி கிண்டி மண் அணைச்சு பாத்தியில விடுகிறதெண்டால் பொன்னையர் கட்டாயம் தானும் நிப்பார்.

வேலை செய்யிற ஆக்களோடை தானும் ஒரு ஆளா பாரைச் சத்தகத்தைத் தூக்கிக் கொண்டு குந்தியிடுவார். உடுத்தியிருக்கிற நாலு முழம் வேட்டியோடை இருந்தால் மண் பிரண்டு போகும் எண்டு போட்டு, வேட்டியச் சிரைச்சு இடுப்புக்கு மேல கட்டிக் கொண்டு கோவணத்தோட குந்தியிருந்து அந்த சேத்துப் பாத்தியெல்லாம் மனுசன் தவண்டு திரியும்.

எல்லாப் பணக்காரரும் எஸ்டேட்டில இருந்து ஒரு வேலைக்காரனைக் கொண்டுவந்து வைச்சிருக்கேக்குள்ள, தான் மட்டும் அப்பிடி வைச்சிருக்காதது பொன்னையருக்குப் பெரிய கௌரவக் குறைவு மாதிரிப் போச்சுது. பின்ன அவரும் ஒரு பெடியனை மலைநாட்டில் இருந்து இறக்குமதி செய்து போட்டார்.

அவனுக்குப் பெயர் கந்தசாமி. சின்னப் பெடியன். படிப்பு வாசனைக்கு ஆசையிருந்தும் அதுக்கு வழியில்லாத ஏழைப்பட்ட சனம். அதால பொன்னையர் கேட்ட விலைக்கு பெடியன்ர உழைப்பை வித்துப் போட்டினம். கந்தசாமி எந்த நேரமும் மாங்கு மாங்கெண்டு நல்ல முறிஞ்சு வேலை செய்வான்.

அப்ப பக்கத்துக் கோவிலிலை திருவிழா தொடங்கிவிட்டது. திருவிழா எண்டால் சும்மா இரண்டு தீவட்டியைப் பிடிச்சுக்கொண்டு நடக்கிற சாமிசுத்து இல்லை. பத்து நாளும் பத்துச் சொர்க்கங்களாத்தான் இருக்கும். கொடி ஏறினால் கொடி இறங்கும் வரைக்கும் விடிய விடிய விலாசமான திருவிழாக்கள்தான் நடக்கும்.

கதாகாலட்சேபம், வில்லுப்பாட்டு, நாடகம், நாட்டுக்கூத்து, கானமூர்த்தி பஞ்சமூர்த்தி நாதஸ்வரக் கச்சேரி எண்டு விடிய வெள்ளண நிலம் வெளுக்கும் வரைக்கும் ஒரே சமாதான். சனங்கள் கடலைக் கொட்டையை வாங்கி மடியுக்கை போட்டு ஒண்டொண்டா எடுத்துக் கொறிச்சுக் கொண்டிருக்கும்.சின்னதுகள் ஐஸ்பழம் வாங்கிச் சூப்பிக் கொண்டிருக்குங்கள். உப்பிடி திருவிழாவுக்கு ஊரே திரண்டு போய்விட்டதைப் பார்த்து கந்தசாமிக்கும் காச்சல் வந்திட்டது.

மெ ள்ள மெ ள்ள தயங்கித் தயங்கிப் போய் பொன்னையரிட்டை பவ்வியமா முறையிட்டுப் போட்டு கையால வாயைப் பொத்திக்கொண்டு பெடியன் நிண்டிருக்குது. பொன்னையரும் யோசிச்சுப் பார்த்தார். பேரப்பிள்ளையளும் திருவிழாவுக்குப் போட்டுதுகள். கந்தசாமியும் சின்னப் பெடியன் தானே." சரி… சரி….. அதுக்கு ஏன் நிண்டு மசிந்திக்கொண்டு நிக்கிறாய்? இந்தா..... பிடி „ எண்டு ஒரு ஐஞ்சு சதக் குத்தியை கையில குடுத்திட்டு " ஆசைதீர அள்ளிச் சிலவழிச்சுப் போட்டு, வரேக்கை மறக்காமல் அப்புவுக்கும் கடலைக் கொட்டை வாங்கிக் கொண்டு வா! " எண்டு பெரியமனது பண்ணிக் காசு குடுத்து அனுமதியும் குடுத்துவிட்டார்.

அவரைக் கந்தசாமி " அப்பு " எண்டுதான் கூப்பிடுகிறதெண்டதோட அப்ப ஒரு ஐஸ்பழமே இருப்தைஞ்சு சதம் வித்தது எண்டதையும் நான் சொல்லவேணும். பெடியன் நிண்டு பேந்தப் பேந்த முழிச்சுப் போட்டு கோயிலுக்குப் போகச் சொன்னதே பெரியவிசயம் எண்டு நினைச்சுப் போட்டு போயிட்டானாம்.

நிதி உதவியும் ஆள் பலமும் இருந்தால் இருபதாம் நூற்றாண்டு முடிய முன்னம் தமிழீழம் எண்ட தேசம் உருவாகும் எண்டு நாட்டில புலியள் சொல்லுகினம் எண்டு கிட்டடியில இஞ்சை பேப்பரில பார்த்த ஞாபகம். நாட்டிலயும் ஆமிக்காரர், நேவிக்காரர் எண்டு ஒரே அட்டூழியம், அவங்கள் செய்யிற கொடுமையில எங்கட சனமெல்லாம் செத்துச் சின்னாபின்னமாகிப் போகுதுகள். இந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்த தாங்கள் இருக்கிறம் எண்டு சின்னப் பொடிபெட்டையள் எல்லாம் உயிரைக் குடுத்துப் போராடத் தயாரா நிக்குதுகள்.

ஆனால், உலகத்தில கண்டுபிடிக்கப்பட்ட ஆனானப்பட்ட நவீன ஆயுதங்களோடை எல்லாம் அவங்கள் எங்களைக் கொண்டொழிக்க வரேக்க எங்கட பிள்ளையள் என்ன மண்வெட்டி, கோடாலி, அலவாங்கு, பிக்கான் எண்டு தூக்கிக்கொண்டு போயே அவங்களைக் கலைக்கிறது? அதுகள் வேலி அடைக்கவும் கிடங்கு கிண்டவும்தான் சரி. உந்தப் போருக்கெல்லாம் பயன்படாது எண்டிறதுக்கு நான் விளக்கம் சொல்ல வேணுமே....…..? இப்ப ஆகாயத்தில இருந்து குடிமனையளுக்கையும், கோயிலுகளுக்கையும் குண்டுகளைப் போட்டு நாசங்கட்டுறாங்கள். எங்களிட்டை ஆமான எதிர்ப்பு ஆயுதங்கள் இல்லாததுதானே காரணம். இருந்தால் இப்பிடி நூற்றுக்கணக்கான சனங்கள் செத்து அழிஞ்சிருக்குமே.

இதுகளை எல்லாம் யோசிச்சுப் போட்டு, வெளிநாடுகளிலை இருக்கிறவையளிட்ட உதவி செய்யுங்கோவன் எண்டு தேசிய பாதுகாப்பிற்கான யுத்த நிதி கேக்கீனம். இப்பிடி யுத்த நிதிக்கெண்டு போன இடத்திலை ஒரு வீட்டுக்கு இரண்டு பெடியள் போய் கதவைத் தட்டியிருக்கீனம். நிலமையைச் சொல்லியிருக்கீனம். அவர் ஆள் நல்ல வாட்டசாட்டமான பணக்காரர் பாருங்கோ! போராட்ட அனுபவம் தனக்கு எக்கச்சக்கமா இருக்கிறதா நாலுபேருக்கு முன்னால அடிக்கடி பெரும் விலாசமடிக்கிறவர்.

இண்டைக்கு ஏதோ நரி முழுவியளம். ஏதோ எக்கச்சக்கமாப் பொலியப் போகுது எண்டு போனவையளும் கலர் கலராக் கனவு கண்டு கொண்டிருக்க, அவர் ஒரு ஐநூறு பிரெஞ் பிராங்கைக் குடுத்துப் போட்டு ? " தம்பியவை……. உந்த ஆப்கானிஸ்தான் போடரில…… அன்ரி எயாக் கிறாவ் மிசைல்ஸ் எல்லாம் விக்கிறாங்களடா……!, போய் அதில வாங்கி அவங்களுக்கு நல்லா அடியுங்கோடா……! ’’ எண்டு அட்வைஸ் பண்ணினாராம். அவரின்ரை கணக்குப்படி, ஐநூறு பிராங்குக்கு ஒரு அஞ்சாறு விமான எதிர்ப்பு ஏவுகணையள் வாங்கலாம் எண்டு நினைச்சிட்டார் போல.

இந்த நேரத்தில நாங்கள் எல்லாரும் இல்லையெண்டு வழமையான பஞ்சப்பாட்டுப் பாடாமல் எங்கடை பங்களிப்புக்களை மறக்காமல் குடுக்கவேணும் எண்டதோடை, கொஞ்சம் பசைப் பிடிப்பானவையும் பாத்துப் பாராமல் அள்ளிக் குடுக்கவேணும் கண்டியளோ ! அப்பத்தான் குடுத்ததிலையும் ஏதேனும் பலன் சுவறும்.

அதைவிட்டுவிட்டு, கனக்கக் குடுக்க வசதியிருந்தும் இல்லை எண்டு உலகத்துப் பஞ்சக் கதையெல்லாம் சொல்லி தங்களைத் தாங்களே ஏமாத்திறதோடைமட்டும் நில்லாமல், ஐநூறு பிராங்கைக் குடுத்திட்டு அன்ரி எயாக் கிறாவ் மிசைல் வாங்கச் சொல்லுறது, ஐஞ்சு சதம் கையில குடுத்திட்டு ஆசை தீரக் கைநிறைய அள்ளிச் சிலவழிச்சுப் போட்டு அப்புவுக்கும் கடலைக் கொட்டை வாங்கிக் கொண்டுவரச் சொல்லுறதுக்கும் அப்பிடியொண்டும் பெரிய வித்தியாசம் இல்லையெண்டிறன்.

நீங்கள் என்ன சொல்லுறியள்? நான் சொன்னதிலை ஏதும் பிழை இருக்குதோ? நியாயத்தைச் சொல்லவேணும் கண்டியளோ !

ஈழமுரசு 24 – 30 ஓகஸ்ட் 1995

பிரான்ஸ் பாரிஸ், ஈழமுரசால் வெளியிடப்பட்ட " ஆருக்குச் சொல்லி அழ" என்ற நூலில் (பக்114 – 118) இருந்து இந்த ஆக்கம் எடுக்கப்பட்டது.

இது மாவீரர் கப்டன் கஜன் அவர்களால் " ஆசைத்தம்பி " என்ற பெயரில் " ஆருக்குச் சொல்லி அழ " என்ற தலைப்பில் எழுதி வாராவாரம் ஈழமுரசில் வெளிவந்தவையே. (வந்த காலப் பகுதியையும் கவனிக்க வேண்டும்)

நன்றி : ஈழமுரசு, பாரிஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தா..... பிடி „ எண்டு ஒரு ஐஞ்சு சதக் குத்தியை கையில குடுத்திட்டு " ஆசைதீர அள்ளிச் சிலவழிச்சுப் போட்டு, வரேக்கை மறக்காமல் அப்புவுக்கும் கடலைக் கொட்டை வாங்கிக் கொண்டு வா! " எண்டு பெரியமனது பண்ணிக் காசு குடுத்து அனுமதியும் குடுத்துவிட்டார்.

" தம்பியவை……. உந்த ஆப்கானிஸ்தான் போடரில…… அன்ரி எயாக் கிறாவ் மிசைல்ஸ் எல்லாம் விக்கிறாங்களடா……!, போய் அதில வாங்கி அவங்களுக்கு நல்லா அடியுங்கோடா……! ’’ எண்டு அட்வைஸ் பண்ணினாராம். அவரின்ரை கணக்குப்படி, ஐநூறு பிராங்குக்கு ஒரு அஞ்சாறு விமான எதிர்ப்பு ஏவுகணையள் வாங்கலாம் எண்டு நினைச்சிட்டார் போல.

இந்த உலகம் அழிஞ்சாலும் உந்தஜென்மங்கள் அழியவே அழியாதுகள்.

உப்புடித்தான் நான் ஊரிலை இருக்கேக்கை என்ரை சொந்தகாரர் வீட்டுக்கு போனனான்.

அப்ப அங்கையிருந்த கிழவி என்னை கூப்பிட்டு ஒருகுட்டி தோசையும் ஒருமூலையிலை சொட்டு பச்சடியையும் வைச்சு தந்திட்டு சொல்லிச்சுது ஒருவசனம் எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போச்சுது கண்டியளோ

"அப்பு ராசா கோப்பையிலை இருக்கிற எல்லாத்தையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடு கொட்டிக்கிட்டிப்போடாதை"

நல்லதொரு இணைப்பு nochchi :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பு தவறாமல் படிக்கும் ஆக்கம் இந்த கஜனின் ஆருக்குச்சொல்லிஅழ என்ற பகுதி.இணைப்பிற்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.