Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.

Featured Replies

லிங் கொடுத்த குருவியண்ணனுக்கு நன்றி..

மேடையேறி பட்டம் வாங்குபவர்கள் நடுவில் அடியேனுக்கு இக்களத்தில் கிடைத்த சிறப்புப்பட்டங்களால் இக்களத்துக்கே பெருமையுண்டாகியது.. அதற்காக

வினீத்..நர்மதா..ஜெயதேவன்..கறுண

  • Replies 468
  • Views 73.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சொந்த தாய் ,சகோதரிகளினைக் காட்டிக்கொடுத்து பெற்ற எட்டப்பன் பட்டம்

அப்பு ஒங்கள சேர்க்கலைண்ணு கோபப்டுறமாதிரிக்கு.. மன்னிச்சுடுங்க ஒங்களயும் பட்டியல்ல சேத்துக்கறேன்.. நன்றியப்பு..

8)

சாத்திரி உங்களின் ஆக்கத்தை இன்று தான் படித்தேன். குற்றம் உள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும். ஆகவே இவர்களை நாம் இனம்கண்டு அவர்களை பற்றி புகழ்வதை குறைக்க வேண்டும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவலம் அவலம் அவலம்

http://www.orupaper.com/issue43/pages_K__34.pdf

உலக மகளிர் தினத்தில் எமது நாட்டிலும் மற்றும் உலகமெங்கும் பெண்களின் பிரச்சனைகளிற்காய் போராடுகின்ற பெண்களை நினைவு கூர்ந்து அவர்களை பாராட்டி அவர்களின் ஆக்கமான பணிகளிற்கு ஊக்கம் கொடுக்கவேண்டியது எமது அனைவரது கடைமையுமாகும். அதேவேளை தாங்களும் பெண்கள் என்ற கூறிக்கொண்டு ஒரு அமைப்பையும் வைத்து கொண்டு பெண்களிற்கே இழிவை ஏற்படுத்தும் செயல்களையும் பரப்புரைகளையும் செய்து கொண்டு சில பெண்கள் புலத்தில் புதுமை பெண்கள் என்கிற பெயரில் நடமாடி இல்லை நாடகமாடி கொண்டிருக்கிறார்கள் அவர்களையும் இந்த நேரத்தில் அடையாளம் காணவேண்டியது காலத்தின் கடைமையாகின்றது

காரணம் இவர்களது அண்மைய அணுகு முறைகளும் செயற் பாடுகளும் பெண்ணினத்திற்கு மட்டுமல்ல ஈழத்தமிழ் இனத்தின் போராட்டத்தையும் ஈழதமிழ் பெண்களையும் கேவலப்படுத்துகின்ற செயல்களை மெதுவாக ஆனால் ஆழமாக செய்து வருகின்றனர்.அதற்கு எலும்பிற்கு விலை போன சில எச்சிலிலை இணையதளங்களும் சில பத்திரிகைகளும் தாராளமாகவே இவர்களிற்கு உதவி வருகின்றன.

கடந்த வருடம் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய பெண்மணி ஈழத்தில் நடந்த ஒரு துரோகியின் மரணத்திற்கு ஒரு அறிக்கை விட்டார் அதாவது ஈழத்தில்சிறீலங்கா இராணுவம் சும்மா ஒரு பெண்ணின் கையை பிடித்துவிட்டாலே உடனே எல்லா தமிழ்ஊடகங்களும் பாலியல் வன்முறை அய்யோ என்று கத்துகிறார்கள் ஆனால் மற்றவைகளை ஏன் கண்டும் காணாத மாதிரி இருக்கிறார்கள் என்று அந்த அம்மணியின் அறிக்கை வெளிவந்தத மரணங்கள் கண்டிக்கபட வேண்டியவைதான் ஆனால் அவரின் பார்வையில் ஒரு அப்பாவி தமிழ்பெண் இராணுவத்தால் பலாத்காரமாக பாலியல் வன்முறைக்கள்ளாக்கபட்டு படுகொலையும் செய்யபடுவதென்பது சாதாரணமாய் ஒரு கையில் பட்டதுபோன்றது.

ஆனால் ஒரு துரோகியின் மரணம் கண்டிக்கபட வேண்டிய படுகொலை இப்போது புரிகிறதா இவரின் நோக்கம் என்ன யார் இவர் என்று.பலரின் கைகளிலே தவழ்ந்து புரழ்வது புதுமை பெண்களாகிய அவர்களிற்கு சாதாரணமாய் கை பட்டசெயலாய் இருக்கலாம் ஆனால் ஒரு தன்மானமுள்ள தமிழீழ பெண்ணிற்கு அவளின் அனுமதியின்று அடுத்தவனின் கையென்ன கை நகம் பட்டாலேஅவள் அதை எதிர்த்து உயிருள்ளவரை போராடுவாள்.

அது அவளது தன்மான பிரச்சனை. அது இல்லாதவர்களிற்கு அது எல்லாம் விழங்குமாவென்று எனக்கு விழங்கவில்லை.அடுத்ததாய் இவர்களுள் முக்கியமான ஒருவர் கொழும்பிலேயே பிறந்து கொழும்பிலேயே வளர்ந்த இவர் போலிய கொட பாலம் கடந்ததே கட்டு நாயக்காவிற்கு விமானமேறி வெளிநாடு வரத்தான்.

வெளிநாடு வந்து வெள்ளையனை திருமணம் செய்து வெள்ளைக்கு பிறந்த பிள்ளையளிற்கோ தமிழ் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிற நிலைமை. இப்படி தமிழீழத்திண் தண்ணீர் என்ன சுவை என்றே அறியாத அம்மணி தமிழீழ தங்கைகள் தற்காப்பு பயிற்சி எடுப்பது தவறாம்.என்று பக்கம் பக்கமாக எழுதியும் பத்தாதற்கு ஒண்டாய் கூடி எதிர்ப்பு தீர்மானம் வேறை நிறைவேற்றினமாம்.இவர்களை விட்டு விட்டாலும் இவர்களுள் சிலபெரிய கில்லாடிகளும் உள்ளனர்

இவர்கள் புலித்தோல் போர்த்த நரிகள் இவர்கள் தாங்கள் தமிழீழ ஆதரவாளர்களாகவும் தமிழ் போராட்டத்திற்கு துணை போகின்னறவர்களாகவும் போக்கு காட்டிகொள்வதோடு மட்டுமல்லாமல் சமாதானகாலத்தில் தாயகம் போய் அங்கு போராளிகளுடன் சில புகைப்படங்களையும் எடுத்து கொண்டு வந் தங்கள் இணையதளங்களில் அப்படங்களை இட்டு சுய விளம்பரம் தேடிக்கொண்டு அதே நேரம் இந்த கூட்டத்திற்கும் பின்கதாவால் அழைத்து அரவணைத்தகொண்டும் நன்றாகவே இரு வேடங்களில் கலக்குகிறார்கள்.

இவர்களே மிகவும் ஆபத்தானவர்கள்.இவர்கள் ஆணடிமை தனத்தை எதிர்ப்பதாக கூறிகொண்டு அறியாமல் எழுத்திலும் பேச்சிலும் ஆண்களையே எதிர்த்து கொண்டிருக்கிறார்கள் அதற்கு அவர்கள் எழுதிகின்ற கதைகள் கவிதைகளை என்னவென்று சொல்வது ஒரு குடும்பத்தின் மென்மையான பாசஉறவுகளான அப்பா அண்ணா தம்பி சித்தப்பா மாமன் என்கிற உறவுகளையே கொச்சை படுத்தும் விதமான ஆபாசமான எழுத்துகள் இதை எழுத பெண்கள் விடுதலை அமைப்பு என்று ஒரு அமைப்பு போர்வை தேவையில்லை பேசாமல் ஒரு மஞ்சள் பத்திரிகையை நடத்தி தங்கள் விருப்பங்களை தாராளமாக நிறைவேற்றி கொள்ளலாம் இவர்கள்.

இவர்களது எழுத்துக்கள் பெண்களாலேயே படிக்கமுடியாமல் போய் இவர்களது உண்மை சாயம்மெல்ல வெளுக்க தொடங்க இப்போ புலியெதிர்ப்பு சனநாயகம் என்கிற போர்வையை போர்த்த தொடங்கியிருக்கின்றார்கள். அதவும் கனநாள் நிலைக்காது. காரணம் அண்மையில் அய்ரரோப்பாவின் அதியயர் சனநாயக வாதியும் ஜக்கிய ராச்சியத்தின் அதியயர் பாதுகாப்புடன் இருந்து இவர்களை போலவே மனிதவுரிமை பற்றி பேசி கொண்டிருந்த ஒருவரின் முகமூடி கழன்று சுவிஸ் காற்றில் பறந்தது அனைவரும் அறிந்ததே.

இந்த மகளிர் அமைப்பினருள் ஆரம்பகால உறுப்பினர் ஒருவரை நான் பாரீசில் பல வருடங்களிற்கு மன்னர் சந்தித்த போது அவர் என்னிடம் கூறினார் தாங்கள் புரட்சி பெண்கள் நாங்கள் நகைகள் அணிவதில்லை வண்ணங்கள் பூசி அழகு படுத்துவதில்லை அவையெல்லாம் பெண்ணடிமை சின்னங்கள் என்றார்.நானும் அவர் உண்மையா புரட்சி பெண்தான் எண்ற நம்பி எல்லா பெண்களும் உங்களை போல மாறிவிட்டால் எங்கள் சமூகத்தில் தாலி என்கிற ஒருஅடிமை சின்னத்தையே இல்லாமல் பண்ணிவிடலாம் என்று பாராட்டி விட்டு வந்தேன். பிறகு காலங்கள் செல்லதான் அவர் கூறியதற்கான உண்மையான அர்த்தம் எனக்க விழங்கியது.

என்னவென்றால் பச்சோந்திகளிற்கு வண்ணம் பூச வேண்டும் என்கிற அவசியம் இல்லையே அவை தேவைக்கேற்ப நிறம்மாறி கொள்ளுமே அதனால் தான் அவர் தாங்கள் வண்ணங்கள் பூசுவதில்லை யென்றிருக்கிறார். இப்படி நிறம் மாறி கொண்டிருக்கும் புரட்சி பெண்கள் எப்போது தங்களை ஆட்டிவைத்து கொண்டிருக்கும் அன்னியசக்திகளிற்கு விலை போன ஆண்களிடம் இருந்து விடுபடுகிறார்களோ அப்போதான் இவர்கள் உண்மையான புரடசி பெண்கள் . விடுபடுவார்களா???????

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று புலம் பெயர் நாடுகளில் பல ஊடகங்கள் மற்றும் பத்திரிகை வார மாத இதழ்கள் என்று பலவும் புலம்பெயர் தமிழர்களால் நடாத்தபடுகின்றது அதே போல இன்றைய தொழில் நு.ட்ப புரட்சியின் ஒரு உன்னத கண்டுபிடிப்பால் இன்று இணைய பத்திரிகைகளும் நாளுக்கு நாள் ஒவ்வொன்றாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றன ஒரு சில

வேண்டாத சம்பவங்களை தவிர்த்து பார்த்தால் புலத்து தமிழரின் இந்த முயற்சிகள்

பாராட்டபட வேண்டியவை.

பாராட்டுவோம். இவை இப்படியிருக்க இங்கு இந்த தமிழ் ஊடக மற்றும் எழுத்தளர்கள் ஒன்றியம்

என்று ஒண்டு உண்டு அதற்கு தலைவர்என்றும் ஒருவர் உள்ளார். இது எத்தனை

பேருக்கு தெரியும்? இப்படி ஒரு அமைப்பு இருப்பதாக ஒரு ஆறு மாதங்களிற்கு முன்னர் நான் கேள்விப்பட்டபோது உங்களை மாதிரித்தான் நானும் முழித்தேன்.

காரணம் இப்படியொரு அமைப்பு இயங்குவதாக வாசகர்களிற்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லாவிட்டாலும் புலம் பெயர் எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள்

எத்தனை பேருக்கு இந்த அமைப்பை பற்றி தெரியும்? எத்தனை பேர் இதனுடன் இணைந்து செயல்படுபவர்களாகவோ

அல்லது அங்கத்தவராகவோ இருக்கிறார் என்று முயன்றவரை முயற்சி பண்ணி விசாரித்ததில் பெரிய ஊடககங்களிற்கோ

ஏன் புலத்தில் பெயர் சொன்னால் தெரிய கூடிய எழுத்தாளர்களிற்கோ இப்படி ஒரு ஒன்றியம் ஒன்று இருப்பது தெரியாது.

காரணம் அந்த ஒன்றியத்தின் செயல் வேகமாகவோ விவேகமாகவோ செயற்பட்டு தமிழ் ஊடகவியலாளர்களையோ அல்லது

எழுத்தாளர்களையோ உள்வாங்கவில்லையென்பதே. இன்று புலத்தில் தமிழ் எழுத்தாளர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் அடித்த தேங்காய் போல் சிதறி ஆளுக்கு ஒரு இலக்கிய வட்டம்இ இலக்கண வட்டம் என்று வட்டங்கள் அமைத்து அந்த வட்டத்திற்குள்ளேயே கட்டம் கட்டமாக பிரிந்து போய் வருடத்தில் ஒருமுறை எங்காவது ஒரு மண்டபத்திலோ அல்லது

ஒரு வீட்டிலோ கூடி சில தீர்மானங்கள் அல்லது கண்டனங்களை ஞஉறைவேற்றி விட்டு கலைந்துஇ கரைந்து காலப்போக்கில் காணாமல் போய் விடுகிறார்கள். இப்படி இவர்களது அறிவு ஆற்றல் எல்லாம் வீணே விழலுக்கிறைத்த நீராய் வீணாகாமல் அதை அணைகட்டி ஒருங்கிணைத்து ஒரே பாதையில் எமது தமிழ் தேசியத்தின் பலத்திற்காகவும் இவர்களை கொண்டே புலத்தின் எமது இளம் சந்ததியின் சக்திகளையும் அறிவாற்றலையும் எமது தாயகம் நோக்கியதாய் திருப்ப வேண்டியது இந்த புலம்பெயர் ஊடக மற்றும் எழுத்தாளர் ஒன்றியத்திற்கு முன் உள்ள பாரிய கடமையாகும். ஆனால் அந்த ஒன்றியம் என்ன செய்து கொண்டிருக்கிறதென்றால் தனது இருப்பை காட்டி கொள்ள அவ்வப்போது ஒரு அறிக்கை. அதாவது பலரையும் போய் சென்றடைய கூடிய பத்திரிகைகளில் கூட இல்லை தங்களிற்கு தெரிந்த ஒருசில இணைய தளங்களிற்கு எழுதி அனுப்பி விட்டு மறக்காமல் தலைமை தன்னுடையை பெயரை மட்டும் போட்டு விடுவார்.

அப்படித்தான் அண்மையில் மறைந்த மாமனிதர் யோசப் பரராயசிங்கத்தின் படுகொலைக்கும் அந்த ஒன்றியத்தின் தலைவர் ஏதோ தான் வள்ளுவரின் வம்சாவழி வந்தவர் போல இரண்டே இரண்டு வரியில் இரண்டு கண்டன அறிக்கைகளை விட்டார் அதுவும் ஒரேயொரு இணையதளத்தில் பார்க்க முடிந்தது. கீழே மறக்காமல் வழமை போல தனது பெயர் இட்டுருந்தார். காரணம் அதை போடாவிட்டால்இவரையாரென்று எவருக்கும் தெரியாது. (போட்டாலும் தெரியாது) ஏன் மற்றைய ஊடகங்களிற்கு இவர் அனுப்பவில்லையா? அல்லது அனுப்பியும் அந்த ஊடகங்கள் இவரது இரண்டு வரி கண்டனத்தை பார்த்து இதெல்லாம் ஒரு கண்டனமா? என்று பிரசுரிக்கவில்லையா தெரியவில்லை. இதற்கு முதலும் பெல்ஜியத்தில் அய்ரொப்பிய ஒன்றியத்தின் புலிகள் மீதான சில கட்டுப்பாடுகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து புலம் பெயர் அய்ரோப்பிய தமிழர்களால்

நடாத்த பட்ட மாபெரும் கண்டன பேரணி பற்றிய விபரங்களை மற்றைய அய்ரோப்பிய ஊடகங்கள் மூலம் அய்ரோப்பிர்களிற்கும் எடுத்து சென்று அந்த ஊர்வலத்தின் சரியான பலாபலனை அறுவடை செய்ய தவறியதற்காகவும் இந்த ஒன்றியத்தின் மீதும் அதன் தலைமை மீதும் பலரின் கண்டனங்கள் எழுந்ததும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்று சாதாரணமாக பொழுது போக்குவதற்காகவே பலர்தங்களிற்கு என்று இணையத் தளங்களை உருவாக்குகின்ற காலமிது இந்த காலத்தில் இப்படியான ஒரு பொறுப்புவாய்ந் ஒரு அமைப்புதனக்கென்று ஒரு இணைய தகவல் தளம்ஒன்றை கூட இதுரை அமைக்கவில்லை. நமதுஇலக்கு என்று ஒரு பத்திகை மட்டும்மாதாந்ம்வெளிவருகிறத

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுவோம். இவை இப்படியிருக்க இங்கு இந்த தமிழ் ஊடக மற்றும் எழுத்தளர்கள் ஒன்றியம்

என்று ஒண்டு உண்டு அதற்கு தலைவர்என்றும் ஒருவர் உள்ளார். இது எத்தனை

பேருக்கு தெரியும்? இப்படி ஒரு அமைப்பு இருப்பதாக ஒரு ஆறு மாதங்களிற்கு முன்னர் நான் கேள்விப்பட்டபோது உங்களை மாதிரித்தான் நானும் முழித்தேன்.

புலம் பெயர் பல நாடுகளில் தமிழ் எழுத்தாளர் ஒன்றியங்கள் பல பெயர்களில் பல வருடங்களாக இயங்கிக்கொண்டுதானே இருக்கின்றது. தலைவர், காரியதரிசி, செயலாளர் என்ற பதவியெல்லாம் இருக்கின்றது.

இந்த கட்டுரையில் தமிழமுதத்தைப் பற்றியும் 'கிசுகிசு' வந்ததால் சிறு விளக்கமளிப்பது எனது கடமை.

சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் அதனுடைய பெயர். அதாவது தமிழ் எழுத்தாளர்களது ஒன்றியம். ஊடகவியலாளர்களது அல்ல. எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்களாக இருக்கலாம். ஆனால் ஊடகவியலாளர்கள் எல்லாரும் எழுத்தாளராக இருக்கவேண்டியது அவசியமில்லை.

இன்னொன்று.. தமிழமுதத்துக்கு மேற்குறிப்பிட்ட ஒன்றியத்தின் செயற்பாடுகளை அறியத்தருபவர் அந்த ஒன்றியத்துக்கான ஊடகவியலாளர். அதாவது அந்த ஒன்றியத்தின் ஊடகத் தொடர்பாளர்.

ஒன்றியத்தின் தலைமையோ அல்லது தலைவரோ அல்ல.

ஆக, இதையே புரிந்துகொள்ள முடியாத அல்லது தெரிந்திராத ஒரு வசை... அதுக்கு தோதாக ஒரு பேப்பர். இப்படி எத்தனை தவறுகளோ.. சம்பந்தப்பட்டவர்களுக்குத்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைக்கு லண்டனில் இன்னொரு சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் சங்கம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இடம்: சிவயோகம் மண்டபம். ரூட்டிங் மாலை 5மணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைக்கு லண்டனில் இன்னொரு சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் சங்கம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இடம்: சிவயோகம் மண்டபம். ரூட்டிங் மாலை 5மணி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோழியனிற்கு வணக்கம் உங்கள் விளக்கத்திற்கு நன்றி சினிமா செய்திகளை போல எழுதிய கிசு கிசு அல்ல அதே நேரம் வசையும் அல்ல ஒரு ஒன்றியத்தின் செயற்பாடுகள் சரியான வேகத்தில் இல்லையே என்கிற ஒரு ஆதங்கம் தான் நான்கூட பல முறை இந்த ஒன்றியத்தை பற்றி உங்கள் தளத்தில் செய்தி தரும் உதன் பேச்சாளர் பற்றியும் பல முறை விவாதித்து இருக்கிறேன். இது நீங்கள் கூறியதை போல வசை என்று எடுத்து கொண்டால் என்னால் எதுவும் செய்ய முடியாது இந்த கட்டுரை அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீவிரமாக முடுக்கிவிட அவர்கள் சிந்தனையில் ஒட்டபட்ட பசை என்று நினைத்தால் சந்தோசம். அதைவிட அந்த அமைப்பின் கட்டுரைகளோ கண்டனங்களோ மற்றறை வேறு அறிவித்தல்களோ உங்கள் தளத்தில் மட்டும் தான் வந்திருக்கின்றது என்பதை நீங்களே ஒத்து கொள்கிறீர்கள் அது தான் எனது கேள்வியும் என் அதனை பரந்த அளவில் அனைவரையும் போய் சேர கூடிய விதத்தில் எல்லா உடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் செய்யவில்லை அந்த அமைப்பின்பெயரை சர்வதேச என்கிற பதத்தை நீக்கிவிட்டு தனியாக யெர்மன் பிறீமன் நகர எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் என்று மாற்றிவிடலாமே.மற்றபடி ஒருபேப்பரையோ என்னையொவிமர்சிக்காமல் விமர்சனத்தை விமர்சியுங்கள் நன்றி

ஒரு பேப்பரை விமர்சித்த காரணம் அதிலுள்ள தவறுகளை அவ்வாறே பிரசுரித்தமை.

'கீழே மறக்காமல் வழமை போல தனது பெயர் இட்டுருந்தார். காரணம் அதை போடாவிட்டால்இவரையாரென்று எவருக்கும் தெரியாது. (போட்டாலும் தெரியாது) ' அதேபோல இப்படியான வசனங்களை தாங்கள் பாவிப்பது ஆரோக்கியமானதல்ல.. ஏனெனில் அவரை ஏற்கெனவே பலரும் அறிவார்கள் என்பது எனது கருத்து.

அதேபோல பிறேமன்ல நானிருப்பதால் அந்த ஒன்றியத்தின் பெயரையே பிறேமனுடன் தொடர்பு படுத்துமாறு கூறும் தங்கள் எழுத்துக்கு ஒரு நளினம் இருக்குமாயின்.. அவற்றை சுட்டிக்காட்டி விமர்சிக்கும் உரிமை எனக்கும் இருக்கும்தானே.. விமர்சனம் என்பது ஆரோக்கியமாக இருக்கவேண்டுமே தவிர.. ஒன்றை அழிப்பதாகவோ ஒருவரை களங்கப்படுத்துவதாகவோ இருக்கக்கூடாது.. அந்த ஒன்றிய அறிக்கைகளோ அறிவித்தல்களோ வேறு ஊடகங்களில் வரவில்லை எனில்.. முதலில் அவர்களை தொடர்பு கொண்டு விசாரித்துவிட்டு எழுதியிருக்கவேண்டும்.. இது தங்களுக்கு மட்டுமல்ல.. இதை பிரசுரித்த ஒரு பேப்பர்காரர்களுக்கும் பொருந்தும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் பிறீமனில ;நீpங்களிருப்பதால் அந்த ஒன்றியத்தை நான் உங்களுடன் தொடர்பு படுத்தி நளின படுத்தவில்லை அப்படி போட்டுவிட்டால் உலகெஞ்கிலுமிருந்து தங்கள் தளத்தை படிக்கும் தமிழர்கள் இந்த அமைப்பு தனியாக ஒரு மானிலத்திற்குள்ளேயெ தனது செயற்பாடுகளை வைத்துகொண்டுள்ளது பிறகு நாம் அதை பற்றி மேலதிகமாக எதற்கு அதை பற்றி அலட்டி கொள்ள வேண்டுமென்று பெசாமல் இருந்து விடுவார்கள்

ஆனால் அது சர்வதேச என்கிற சொற்பதம் வருகிறபோது அதன் செயற்பாடுகள் மற்றும் அறிக்கைகள் மற்றைய பத்திரிகைகளில் வருவதில்லையே ஏன் என்றுதான் நான் கேட்டேன் மற்றபடி அதன் தலைவர் யார் எங்கிருக்கிறார் அதன் பேச்சாளர் யார் எங்கிருக்கிறார் என்கிற விபரங்கள் எனக்கு தெரியும் அவர்கள் பிறீமன் நகரில் இருக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை.

அதை விட இங்கு அந்த அமைப்பை அழிக்கிற அளவிற்கோ களங்கம் வருகிற அளவிற்கோ கீழ்த்தரமாக என்ன எழுதிவிட்டேன் ??? இதில் உங்கள் தளத்தை பற்றியதோ அல்லது உங்களை பற்றியோ ஒரு வரிகூட ஏதும் நான் விமர்சிக்ககூட இல்லையே ??ஆனால் நீஙகள் தான் முதலில் உணர்ச்சிவசப்பட்டு வசை பாடிவிட்டதாக எழுதி விட்டீர்கள் வசை என்கித பதத்தை விட்டு அந்த சொல்லிற்கு பொருத்தமான பல தமிழ் சொற்கள் உள்ளது ஒரு தமிழ் எழுத்தாளராகிய உங்களிற்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை ;

அடுத்து இங்கு நீங்கள் உங்கள் தளம்பற்றி செய்திவந்ததால் இங்கு உங்கள் கருத்தை முன்வைக்கின்றீர்களா? அப்படியானால் நான் இதற்கு மேல் விவாதிக்கவில்லை காரணம் நான் முதலே கூறி விட்டேன் உங்கள் தளத்தை நான் விமர்சனம் செய்யவில்லையென்று அது உங்களிற்கும் புரியும்;. நீங்கள் அந்த ஒன்றியம் சார்பாக உங்கள் கருத்தை முன்வைப்பதாக இருந்தால் (காரணம் நீங்கள் அதன் உறுப்பினராக இருக்கலாம் டப்படி இருந்தால்)அந்த ஒன்றியம் பற்றியும் அதன் செயற்பாடுகள் இதுவரை அலர்கள் செய்தவை பற்றி தாராளமாக நான் உங்களுடன் கருத்தாட தயார். இங்கேயும் பாருங்கள் அந்த ஒன்றியத்திற்காக நீங்கள் தான் இங்கு சில விளக்கங்களை கொடுக்க வேண்டியுள்ளது

மன்னிக்கவும்... ஜேர்மன் எழுத்தாளர் சங்கம், சர்வதேசபுலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம்ஆகிய இரண்டு அமைப்புகள் ஆகக் கூடியது 2 வருடங்களுக்குள்ளாக (மன்னிக்கவும்.. ஆரம்பகாலத்தை சரியாக குறிப்பிட முடியவில்லை.) இயங்குகின்றன. நான் இரண்டிலும் இதுவரை அங்கத்துவனாக இணையவில்லை.. காரணம், அவற்றின் செயற்பாடுகளை இன்னும் அறியவேண்டும் என்ற எண்ணத்தினால்தான்.

ஆனால் ஜேர்மன் எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப கூட்டத்தில்மட்டும் பங்குகொண்டேன்.

விக்னா பாக்கியநாதன் , பாக்கியநாதன் ஆகியோர் 'கலைவிளக்கு' எனும் சஞ்சிகையை நடாத்தியபோது.. எனது ஆக்கங்களை பிரசுரித்தவகையில் ஓரளவு அறிமுகம் உண்டு. கோசல்யா சொர்ணலிங்கத்துடனும் சில விழாக்களில் கதைத்ததைத் தவிர வேறு அறிமுகங்கள் கிடையாது. அத்துடன் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அவர்களது நகரங்களிலிருந்து 250 கிமீற். தொலைவில் இருப்பதால் அவர்களைப்பற்றிய மேலதிக விபரங்களும் தெரியாது. எனக்குத் தெரிந்தது அவர்கள் எழுத்தாளர்கள். அவ்வளவுதான்.

சாத்திரி அவர்களுடைய ஆக்கத்திலே.. அவர் ஒன்றியத்தை விமர்சிப்பதற்கு பதிலாக.. ஊடகத் தொடர்பாளரை தாக்குவதாக எனக்குத் தோன்றிய உணர்வை இங்கே வெளிப்படுத்தினேன். அவ்வளவுதான்.

அதேவேளை.. தமிழமுதமானது ஈழவிடுதலை என்ற சார்பில் இருந்து, நடுநிலையான ஆக்கங்களை சகல எழுத்தாளர்களிடமிருந்து பெற்று வெளியிடவே விரும்புகிறது. அதே நேரத்தில் வெளியிடும் ஆக்கங்கள் சம்பந்தப்பட்ட விமர்சனங்களை எவ்வித தடையும் இன்றி பிரசுரிக்கும். ஆனால் ஆக்கத்தை விட்டு, எழுத்தாளரை விமர்சிக்கும் அல்லது எழுத்தாளரை களங்கப்படுத்தும் கருத்துகளை வெளியிடாது. ஆனாலும், சில அனுபவமின்மையால் அப்படியான சில கருததுகள் வெளிவந்துதானுள்ளன. இனிமேலாவது அப்படி வரும் கருத்துகளை தவிர்க்கவே 'தமிழமுதம்' முயற்சிக்கும்.

மற்றும்படி, சாத்திரி மேலோ அல்லது வேறு எவர் மீதோ எனக்கு எந்தவிதமாக தனிப்பட்ட பிரச்சினையோ பகையோ கிடையாது. அந்த ஆக்கம் என்னில் ஏற்படுத்திய உணர்வையும், நான் அறிந்த சில தகவல்களையும் வெளியிட்டேன். அவ்வளவுதான். :D

  • 2 weeks later...

எனவே இந் ஒன்றியத்தி பெறுப்பாளர்தான் தாங்கி நிற்கும்பாரிய கடமையை கருத்தில் கொண்டு இனிமேலும்கதை எழுதுவதும் கவிதை வெளியிவதோடும்மட்டும் தனதுப ணி முந்துவிட்டதுஎன்று எண்ணிவாழாவிருந்துவிடாமல்

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அந்த ஒன்றியப் பொறுப்பாளருக்கு கதையோ, கவிதையோ எதுவுமே எழுதத் தெரியது என்பதே உண்மை. ஒரு சிலரைத் தவிர அந்த ஒன்றியத்தில் இருக்கின்ற பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள் இல்லை. அந்த ஒன்றியம் உண்மையான எழுத்தாளர்களுக்கு ஒரு அவமானச் சின்னம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனியொரு விதி செய்ய புறப்பட்டிருக்கும் இளையொர் அமைப்பு

உலக நாடுகளெங்கும் புலம் பெயர்ந்த தமிழர்களால் பல்வேறு நோக்கங்களிற்காய் பல்வேறு பெயர்களில் பல அமைப்புக்கள்தொடங்கபட்டு அவை ஒன்றுக்கொன்றுதொடர்பில்லா

நல்ல விடையத்தைப் பற்றி எழுதியிருக்குறியள். நன்றி சாத்திரி.

தமிழ் ஒளி அவர்களின் நிகழ்ச்சிகளிற்கு முன்னுரிமை கொடுத்து விளம்பரப்படுத்த வேணும். நடைபெறும் நிகழ்ச்சிகளை ஆவணப்படுத்தி ஒளிபரப்ப வேண்டும்.

நல வாழ்வு என்று வாரம் தோறும் நடப்பது போல் இளையோர் அமைப்பினர் பங்கு கொள்ளும் கலந்துரையாடலை மாதம் ஒரு முறையாவது நடத்தலாம். ஜரோப்பாவில் வாழும் இளையவருக்கு கல்வி தொழில்த்துறை சார்ந்த அறிவுரைகள், தமது நடவடிக்கைகள், தாயகத் தேவைகள் என்ற விடையங்களை மைய்யப்படுத்தி இந்தக் கலந்துரையாடல்களை நடத்தலாம்.

இளையோர் அமைப்பினர் வெறும் எடுபிடிகளாகத்தான் இருக்கின்றனர். முன்பும் புலம்பெயர் நாடுகளில் மாணவர் அமைப்பு என்னும் பெயரில் பல இளைஞர்கள் இயங்கினார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்களை தற்பொழுது காண முடிவதில்லை. கலியாணம் கட்டி செற்றிலாகி விட்டார்கள். இது எல்லாம் அவர்களுக்கு ஒரு ஜாலியான ரைம் பாஸ். இங்கு கல்வி கற்று, மொழி அறிவு பெற்று ஐரோப்பிய மக்களோடு பழகி, அவர்களின் மனநிலையை அறிந்த இவர்கள், ஓரளவு சுதந்திரமாகவும் உண்மையான உணர்வோடும் இயங்கினால் நிறைய சாதிக்கலாம்.

ஆனால் தற்போது உள்ள நிலைமையில் இவர்களால் எந்த ஒரு "விதியும்" செய்ய முடியாது

இளையதம்பி முதல் நீர் யாருடைய எடுபிடியா இஞ்ச வந்து நஞ்சு விதைக்கிறீர் எண்டு எழுதும்.

நீர் ஒருவருடைய எடுபிடியும் இல்லாட்டி எமது சமூகத்திற்கும் போராட்டத்திற்கும் விரோதமான பிற்போக்குவாதியாகத்தான் கருத்து எழுதுறீர்.

முன்பு மாணவர்களாக இருந்தவர்கள் 30 வயது வந்தபின்னரும் மாணவர் அமைப்பு இளையோர் அமைப்பு என்று இருக்க முடியாது. அவர்களுடைய தனிப்பட்ட குடும்ப பொறுப்புக்களுக்கு அப்பால் தேசியத்திற்கு உழைக்க விரும்பும் பொழுது அவர்களுடை பங்களிப்பு வேறுநிலையில் இருக்குமே அன்றி இன்னமும் மாணவர் அமைப்பு இளையோர் அமைப்பு என்ற நிலையில் அல்ல.

புதியசந்ததி தேசிய ஆதரவாளர்களை வழர்த்தெடுக்க இளையோர் அமைப்பு போன்றவை அவசியம். அங்கு தான் ஆரம்ப நிலை இளைய தலமுறை ஆதரவாளர்கள் தமது கடமைகளை உணரவும் தமது காலத்திற்கு ஏற்ப அவற்றை முன்னெடுக்கவும் தயார்பண்ணிக் கொள்ளவும் உதவுகிறது.

இளையவர்கள் முன்னைய சந்ததியை விட ஜாலியாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. தமது கடமைகளை உணர்ந்து பங்களிப்பு செய்கிறார்களா என்பது தான் முக்கியம். அவர்களிடம் உள்ள திறமைகள் புதிய சிந்தனைகள், காலத்தோடும், புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தோடும் ஒத்த கலாச்சாரங்கள் எமது போராட்டத்தை வெற்றியோடு முடித்து வைக்க அத்தியாவசியமானது.

சர்வதேச நிலையில் கொள்கை பரப்பு ஆதரவு திரட்டல், தொழில்நுட்ப பங்களிப்பு என்பவற்றை பொறுத்தவரையில் இளையவர்களின் கையில் தான் பெரும் பங்கு உண்டு.

முன்பு மாணவர் அமைப்பில் இருந்த பலர் தற்பொழுது எவ்விதமான செயற்பாடுகளிலும் இல்லை என்பதைத்தான் நான் சுட்டிக்காட்டுகிறேன். விடுதலைப் போராட்டத்திற்கான நிதி சேகரிப்பு, பரப்புரை, உடல் உழைப்பு என்று எதிலுமே தற்பொழுது அவர்கள் இல்லை. இத்தனைக்கும் அப்பொழுது இருந்த பலர் தாயகத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள். அங்கு பிறந்து, அங்குள்ள நிலையை ஓரளவு நேரடியாக அறிந்தவர்கள். அவர்களையே காணவில்லை.

அவர்கள் காணமற் போனதற்கான காரணிகள் தற்பொழுதும் உண்டு. ஆகவே இளையோர் அமைப்பில் மிதமிஞ்சிய நம்பிக்கை வைத்து பின்பு ஏமாந்து போய்விடாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இளையதம்பி முதல் நீர் யாருடைய எடுபிடியா இஞ்ச வந்து நஞ்சு விதைக்கிறீர் எண்டு எழுதும்.நீர் ஒருவருடைய எடுபிடியும் இல்லாட்டி எமது சமூகத்திற்கும் போராட்டத்திற்கும் விரோதமான பிற்போக்குவாதியாகத்தான் கருத்து எழுதுறீர்.

முன்பு மாணவர்களாக இருந்தவர்கள் 30 வயது வந்தபின்னரும் மாணவர் அமைப்பு இளையோர் அமைப்பு என்று இருக்க முடியாது. அவர்களுடைய தனிப்பட்ட குடும்ப பொறுப்புக்களுக்கு அப்பால் தேசியத்திற்கு உழைக்க விரும்பும் பொழுது அவர்களுடை பங்களிப்பு வேறுநிலையில் இருக்குமே அன்றி இன்னமும் மாணவர் அமைப்பு இளையோர் அமைப்பு என்ற நிலையில் அல்ல.

புதியசந்ததி தேசிய ஆதரவாளர்களை வழர்த்தெடுக்க இளையோர் அமைப்பு போன்றவை அவசியம். அங்கு தான் ஆரம்ப நிலை இளைய தலமுறை ஆதரவாளர்கள் தமது கடமைகளை உணரவும் தமது காலத்திற்கு ஏற்ப அவற்றை முன்னெடுக்கவும் தயார்பண்ணிக் கொள்ளவும் உதவுகிறது.

இளையவர்கள் முன்னைய சந்ததியை விட ஜாலியாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. தமது கடமைகளை உணர்ந்து பங்களிப்பு செய்கிறார்களா என்பது தான் முக்கியம். அவர்களிடம் உள்ள திறமைகள் புதிய சிந்தனைகள், காலத்தோடும், புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தோடும் ஒத்த கலாச்சாரங்கள் எமது போராட்டத்தை வெற்றியோடு முடித்து வைக்க அத்தியாவசியமானது.

சர்வதேச நிலையில் கொள்கை பரப்பு ஆதரவு திரட்டல், தொழில்நுட்ப பங்களிப்பு என்பவற்றை பொறுத்தவரையில் இளையவர்களின் கையில் தான் பெரும் பங்கு உண்டு.

:lol::lol::lol::lol:

தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற என்னை தாக்குவதை விட்டுவிட்டு, திருந்துவதற்கும் திருத்துவதற்கும் வழியைப் பாருங்கள். குறுக்காலபோவான் போன்றவர்களால்தான் தமிழர்களுக்கு எல்லா இடங்களிலும் தடை. நான் செய்வது சுயவிமர்சனம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பல திறமையான படித்த மாணவர்களைக் கொண்ட இளையோர் அமைப்பு சரியான வழிகாட்டல் இருந்தால் நிறைய சாதிக்கலாம். ஆனால் பழையவர்கள் தாங்கள் போன வழியிலேயே அவர்களையும் அழைத்து செல்கிறார்கள். புதிய மொந்தையில் பழைய கள். இதனால் யாருக்கு என்ன பயன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக தமிழ் ஊடகவியலாளர்களே ஊடகங்களே ஒரு நிமிடம்

24.04 .06 அன்று சிறீலங்காதலைநகர் கொழும்பில் பிற்பகல் 1.35 மணிக்கு ஒஐ குண்டுவெடிப்பு நடந்து அதில் சிறீலங்கா இராணுவத்தை சேர்ந்த எட்டுபேர் கொல்லப்பட சிறீலங்கா ராணுவத்தின் தளபதியாகிய சரத் பொன்சேகா உட்பட இருபத்தியேளு பேர் படுகாயமடைந்தனர்.

இது நடந்த சம்பவம் புலம் பெயர் தமிழர்கள் உட்பட உலக மக்கள் அனைவருமே அறிந்த செய்தி.இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே சிறீலங்காவின் அரச சார்பு மற்றும் சிங்கள ஆங்கில ஊடகங்களில் இச்செய்தி சரத் பொன்சேகாவை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல் என்று பரபரப்பாக செய்திகள் வெளிவர தொடங்கின அதனையே சில வெளிநாட்டு ஊடகங்களும் செய்தியாக அறிவித்திருந்தது.இதிலென்ன பிரச்சனை நடந்தவைதானே செய்தியாக வந்தது என்று நாங்கள் யோசிக்கலாம் .ஆனால் அந்த செய்தியையே பல தமிழ் ஊடகங்களும் சரத் பொன்சேகாவை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல் தலைப்பு செய்தியாக போட்டிருந்தன அதுதான் இங்கு கவலை கொள்ளவேண்டிய விடயம்.

குண்டு வெடிப்பு ஒரு சம்பவம் அது எப்படி நடந்தது என்று சிறீலங்கா காவல் துறையோ அல்லது புலனாய்வு துறையோ சரியான முறையில்விசாரனைகளை மெற்கொண்டு அதன் அறிக்கையை சமர்ப்பிக்க முதலே ஏன் விசாரணைகள் மேற்கொள்ள முதலேயே அது தற்கொலை குண்டுதாக்குதல் என்று செய்தியும் போதாததற்கு அது ஒரு பெண்தான் கர்பிணி பெண்போல வந்து குண்டை வெடிக்கவைத்தார் என்றும் பின்னர் அடுத்தடுத்த செய்திகளும் வெளியாகின .அதுவும் ஒரு இராணுவத்தினன் காலை அந்தபெண் நடமாடியதை கண்டதாகவும் அந்த பெண் தான் குண்டுதாரியாக இருக்கும் என்ற சந்தேகம் பின்னர் அப்படியே உண்மை செய்தியாக மாறி விட்டது.இதுவும் எந்த தடவியல் ஆதாரங்களோ அல்லது பகுப்பாய்வு நடத்தி முடித்த அறிக்கைகளுடாகவே உறுதி படுத்தாமல் இறந்த ஒரு வரின்உடல் பாகத்தின் பகுதியை மட்டும் படத்தில் போட்டு சிறீலங்கா பத்திரிகைகளின் வழைமையான புலிகளின் மீது குற்றம் சுமத்தவென்றே தயாரிக்கபட்ட வானவேடிக்கை செய்திகள்.அவர்கள் அரசுதலைவர் காலில் கல்லடி பட்டால்கூட புலிகளின் சதி என்று செய்தி எழுதி பழக்கபட்டு விட்டவர்கள் அப்படித்தான் எழுதுவார்கள்

.இதனையே பின்னர் பெரும்பான்மையான தமிழ் ஊடகங்களும் வழிமொழிந்திருந்தது தான் வேடிக்கை.அதனை படித்தவர்களும் அதுதான் உண்மையென்று நம்பி விட்டனர். இதுவே சிறீலங்கா அரசிற்கும் அதன் ஊடகங்களிற்கும் கிடைத்த மிக பெரும் வெற்றியாகும்.இனி அவர்கள் இந்த குண்டு வெடிப்பை புலிகள்தான் செய்தார்கள் என்று வெளியுலைகை நம்பவைக்க வேறு உதாரணங்கள் தேடி போக வேண்டிய அவசியம் இல்லை இந்த தமிழ் ஊடககங்களில் வந்த செய்தியே போதுமானது.

காரணம் செய்திகளில் தற்கொலை குண்டு என்கிற பதம் தான் காரணம் . சிறீலங்காவில் இலங்கை இராணுவத்தை தவிர வேறு பல இராணுவக்குழுக்கள் இருப்பது கண்காணிப்பு குழுவும் உறுதிசெய்த நிலையில் வேறு நாடுகளிற்கும் அந்த விடயங்கள் தெரியும்.இந்த ஆயுதகுளுக்களாலேயே இலங்கையில் அமைதியை குலைக்க பல படுகொலைகள் நடத்தபட்டதும் உறுதி படுத்தபட்டிருக்கன்றது.

உதாரணமாக இந்த குண்டு வெடிப்பின் பின்னர் கண்காணிப்பு குழு அறிக்கையை பலரும் படித்திருப்பீர்கள் அந்த அறிக்கையில் கூறபட்டிருப்பதாவது சிறீ லங்காவில் என்னபிரச்சனை நடந்தாலும் ஆதாரமின்றிசுலபமாக புலிகள் மீது குற்றம் சுமத்தி விடுகிறார்கள்.கதிர்காமர் கொலையிலும் அப்படித்தான் குற்றம் சுமத்த பட்டது ஆனால் நாங்கள் பலமுறை கேட்டும் அதற்கான ஆதாரங்களை சிறீ லங்கா அரசு தரவில்லை .என்று கூறுகிறது அந்த அறிக்கை .

இங்கு கவனிக்கபடவேண்டிய விடயம் யாதெனில் கதிர்காமல் கொலையில் கதிர்காமர் மட்டுமே சினைப்பர் தாக்குதலில் கொல்லபட்தால் புலிகளின் மீது சுமத்திய குற்றசாட்டு வலுவில்லாமல் போனது .ஆகவே அடுத்த நிகழ்வை ஒரு முக்கிய தளபதியை குறிவைத்து குண்டு தாக்குதலாக நடத்தினால் அதுவும் பலர் கூடி நிற்கும் இடத்தில்நடத்தி விட்டால்அதில் இறந்து போன ஒருவரின் பாகங்களை வைத்து தற்கொலை குண்டு தாக்குதல் என்று சொல்லி புலிகளின் மீது பழியை போட்டு உலக நாடுகளை நம்பவைக்கலாம் என்று சிறீலங்கா புலனாய்வு துறையின்மற்றும் ஒட்டு குளுக்களின் திட்டமாக ஏன் இருக்ககூடாது??காரணம் மற்றைய துணைக்குளுக்கள் இதுவரை தற்கொலை தாக்குதல் நடத்தியதும் இல்லை உயிரை ஆயுதமாக்கும் அளவுக்கு அவர்களிற்கு துணிவோ ஆத்மபலமோ அற்கான சரியான கொள்கைகளோ இல்லைஅவர்கள் கூலிக்கு மாரடிக்கின்ற கூட்டங்கள் என்று உலகிற்கே தெரியும்.

தற்கொலை குண்டு தாக்கதல் என்றாலே புலிகள் தான் செய்வார்கள் என்கிற ஒரு வலுவான ஒரு அடிப்படை காரணத்தை வைத்தே உடனடியாக நடந்த குண்டு வெடிப்பை உலக நாடுகளிற்கும் உள்ளுரிலும் தற்கொலை தாக்குதல் என்று செய்தியை வெளியிட்டார்கள்.அதை அப்பிடியே எம்மவர் ஊடகங்களும் வெட்டி ஒட்டிவிட்டு வேறு வேலை பார்க்க போய்விட்டார்கள்.இந்த செய்தியால் எதிர் காலத்தில் எமது போராட்டத்திற்கு என்ன பாதக விழைவுகள் வரபோகின்றது என்றோ சிறீலங்கா அரசு தான் போட்ட திட்டம் நிறைவேற நாங்களே வழி வகுத்து விட்டேமே என்று ஒரு நிமிடம் யோசித்திருப்பார்களேயானால் அப்படி அலுப்பில் செய்தியை வெட்டி ஒட்டாமல. ?இருந்திருப்பார்கள் சுயமாக ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது போல கொழும்பில் குண்டு வெடிப்பு என்று நடந்ததை மட்டும் போடடிருப்பார்கள். ஒரு ஊடகவியலாளன் வெறுமனே பார்கிற கேக்கிற செய்திகளை அப்படியே வெட்டி ஒட்டுபவனாக இல்லாமல் ஒரு புலனாய்வாளன் போலவும் செயற்பட்டால் தான் உண்மையான செய்திகளை மக்களிற்கு வெளி கொண்டுவர முடியும் எனவேஇனிமேலாவது இந்த ஊடகள்கங் சிறீலங்கா அரசின் திட்டமிட பரப்புரை செய்திகளிற்கு தாங்களும் பலியாகாமல்பொறுப்புடன் நடந்து கொள்ளுமென எதிர் பார்:ப்போம்

ஒரு பேப்பரில் வெளிவந்த சாத்திரி அவர்களது ஆக்கத்திற்கான பதில்!!

- சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்

ஒரு பேப்பர் எனும் பத்திரிகையில் தமிழ் ஊடக எழுத்தாளர் ஒன்றியமா? எங்குள்ளது? என்று வெளிவந்த எட்டுப் பந்திகளைக் கொண்ட இக்கட்டுரையில் எந்த ஒரு பந்தியிலும் சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் என்ற பெயரை துணிவுடன் கூறத் தயங்கிய அல்லது பயந்த சாத்திரியார், எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்பது போல் ஆறாவது பந்தியில,.. நமது இலக்கு என்ற ஒரு பத்திரிகை மட்டும் மாதாந்தம் வெளிவருகின்றது என்று எழுதியதன் மூலம், இந்த அவதூறுக் கட்டுரை சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தைப் பற்றியதுதான் என நாம் திடமாக முடிவெடுத்துள்ளோம். ஏனெனில் நமது இலக்கு என்ற பெயரில் பத்திரிகையை வெளியிடுபவர்கள் நாங்கள்தான்.

தமிழ் ஊடக எழுத்தாளர் ஒன்றியமா? எங்குள்ளது? என்ற கட்டுரையை எழுதிய கட்டுரையாளர் எமது, இப்பதில் கட்டுரைக்குப் பிறகாவது தனது உண்மையான பெயரை ஒரு பேப்பர் என்ற பத்திரிகையிலும் அதன் இணையத்தளத்திலும் எமது பதிலடிக் கட்டுரை வெளிவரும் இணையத்தளங்கள் அனைத்திற்கும் தெரிவிப்பதுடன் எம்மோடு தொடர்பு கொண்டு அவரின் உண்மையான பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் போன்றவற்றை அறியத்தர வேண்டும்.

தமிழ் ஊடக எழுத்தாளர் ஒன்றியமா? எங்குள்ளது? என்ற காழ்ப்புணர்வில் எரிந்து கொண்டிருக்கும் சாத்திரியின் எட்டுப் பந்திகளை உள்ளடக்கிய கட்டுரையில் தகவற் குழறுபடிகள் நிறையவே உண்டு. உண்மை பேசுபவன் தான் பேசியதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவன் ஒன்றையே கூறுவான். ஆனால் பொய் பேசுபவன் தான் பேசியதை வலிந்து ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய பரிதாபகரமான நிலை உண்டு. இந்த பரிதாபகரமான நிலைக்குரியவர் பொய்ச் சாத்திரம் சொல்லும் சாத்திரியார் அவர்களே.

சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் செயல்பாடுகள் பற்றி ஐரோப்பிய பரப்பிலும் ஓரளவு ஆசியப்பரப்பிலும் தெரிந்திருந்தாலும, சர்வதேசமும் இன்னும் அறிந்து கொள்ளட்டும் என்பதற்காக கீழ்வரும் விபரங்களைத் தருகின்றோம்.

சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஒரு கட்டமைப்பைக் கொண்டது. கட்டுப்பாட்டுத் தளத்தைக் கொண்டது.

இந்த ஒன்றியம் பேராசிரியர்களையும்,கல்விமான

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரிக்கே சவாலா?? :wink: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.