Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்காவின் கொலைப் பொறி வலயம் இடம் மாறியது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் சிறீலங்கா இராணுவம் தன்னிச்சைக்கு அறிவித்த பாதுகாப்பு வலயத்தை.. தானே தாக்கி கைப்பற்றி விட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அந்த வலயம்.. மீண்டும் வன்னியின் கிழக்கு கடற்கரை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது என்று அறிவித்திருக்கிறது.

பாதுகாப்பு வலயம் என்பதன் உள்நோக்கம்.

1. மக்களை அவ்வலயங்களுக்குள் இழுத்து எறிகணைகளை, கொத்தணிக் குண்டுகளை செறிவாக வீசிக் கொள்வது.

2. மக்களை மனிதக் கேடயங்களாக பாவித்துக் கொண்டு சவால் மிக்க களங்களை, பாதுகாப்பு வலயம் என்ற பெயரின் கீழ் விடுதலைப்புலிகளை அங்கிருந்து சர்வதேச அழுத்தங்கள் மூலம் வெளியேறக் கேட்டு அவற்றைக் கைப்பற்றுவது.

இவ்வாறான கோழைத்தனமான இராணுவத்தின் பாதுகாப்பு வலயம்.. இப்போ அதன் நடவடிக்கைகளுக்கு வசதியாக கடற்கரைக்கு மாற்றப்பட்டுள்ளது. கடற்படையைக் கொண்டு மக்கள் பகுதி மீது ஒரு தரையிறக்கத்தை மேற்கொள்ளும் நோக்கோடும்.. கடற்புலிகளின் செயற்பாட்டை கட்டுப்படுத்தவும்.. இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

eyzwjhjqaloaft5550ykufqo_Mullaitivu-new-safe-zone.jpg

Army today announced the demarcation of a new 12-km long Safe Zone along the Western boundary of the Mullaitivu lagoon, effective from today afternoon, the Army Headquarters declared.

The 12-km long strip, beginning from the northwest of Vadduvakal to the west, and north of Vadduvakal to the eastern coastal boundary, runs up to Palamattalan south on the western side. On the coastal belt up to the extreme north, the eastern strip ends at the southeast of Palamattalan The area between the northwest of Vadduvakal to the north of Vadduvakal that touches the eastern sea boundary is about 2 km in width and the extent at the northern end of the strip, touching Palamattalan area is about 1 km in breadth.

The entire un-cleared coastal area from the north of Vadduvakal in the demarcated zone includes tiny villages, Vellamullavaikkal, Karayamullivaikkal, Velayanmadam, Ampelavanpokkanai and putumattalan in the 12 km-long strip.

dailymirror.lk

Edited by nedukkalapoovan

வெட்ட வெளிகளில் இருக்க போகும் மக்களை கடலாலும், முல்லைதீவில் இருந்தும் குண்டு வீசி அழிக்க இலகுவாக இருக்கும்....

எல்லாவற்றையும் அவர்களால் இடம்பெயரை வைக்க முடிகிறது.. ஆனால் அவர்களால் மக்களின் ஆன்ம உறுதியை குலைக்க முடியவில்லை எண்று ஊடகவியலாளர் பு. சத்திய மூர்த்தி அவர்கள் சொன்னவைதான் ஞாபகத்தில் வருகிறது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அத்தோடு இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் மக்களை வைத்து புலிகள் தான் தங்களை பிடித்து வைத்துள்ளார்கள் என்ற மாதிரியான பிரச்சாரங்களை வெளி நாடுகள் நம்பும்படி எதிரி மேற்கொள்கிறான்.

புதிதாக அறிவித்துள்ள பாதுகாப்பு வலயம் இராணுவ நலன்களை நோக்காக கொண்டது - போரியல் ஆய்வாளர்கள்

முல்லைத்தீவில் 20 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் மற்றுமொரு யுத்த சூனிய பிரதேசம் ஒன்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கரையோரத்தில் இருந்து 12 கிலோ மீற்றர் மேற்கு திசை வரையும், வடுக்காலில் இருந்து 112 கிலோ மீற்றர் வடக்கு திசையில் பழைய மத்தாளன் தெற்கு வரையான இந்த நிலப்பரப்பு இந்த யுத்த சூனிய பிரதேசத்திற்கு அடங்கும்.

அரசாங்கம் புதிதாக அறிவித்துள்ள பாதுகாப்பு வலயமானது இராணுவ நலன்களை நோக்காக கொண்டுள்ளதாக போரியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கரையோர பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிவித்துள்ளதன் மூலம் இலங்கை அரசாங்கம் கடற்புலிகளின் செயல்பாடுகளை முடக்க திட்டமிட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

ஏற்கனவே கடற்புலிகளின் பிரதான தமாக விளங்கிய சாலையை படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் கடற்புலிகள் தமது படைக்கட்டுமானங்களை புதமத்தாளன் மற்றும் அம்பலவன் பொக்கணை வலையன் மடம் போன்ற பிரதேசங்களுக்கு மாற்றியுள்ளனர்.

தற்போது அரசாங்கம் அந்த பகுதிகளை பாதுகாப்பு வலயங்களாக அறிவத்துள்ளதன் மூலம் கடற் புலிகளின் தாக்குதல்களை தடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தில் கடற் புலிகளின் நடவடிக்கைள் இடம்பெறுமானால் அதனை அங்கு பிரசன்னமாகியிருக்கும் சர்வதேச செங்சிலுவை சங்க பிரதிநிதிகள் அவதானிக்க முடியும் என்பதோடு அதன் மூலம் புலிகளுக்கு சர்வதேச நெருக்கடியினையும் ஏற்படுத்தலாம் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

இதேவேளை கடற்கரையோரங்களை நோக்கி பொதுமக்களை நகர்த்தி பின்னர் ஐநாசபை மற்றும் சர்வேதேச செஞ்சிலுவை சங்கம் ஆகிகயவற்றின் ஒத்துழைப்புடன் கப்பல் மூலமாக பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றும் திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

நன்றி

GlobalTamilnews.net

http://www.globaltamilnews.net/tamil_news....=5949&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.