"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 64
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 64 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை
புத்தர், கேவத்தா (கேவாத்தா) வுக்கு கூறிய கேவத்தா சுத்தத்தில் (Kevatta (Kevaddha) Sutta), தெளிவாகக் தன் நிலைப்பாட்டை கூறியிருக்கிறார்.
புத்தர், தான் மறைக்கப்பட்ட, இரகசியமான மற்றும் மர்மமான, குறிப்பாக இயற்கைக்கு அப்பாற்பட்ட [அமானுஷ்ய] சக்தியின் அற்புதங்களையும் தொலைமனமுணர்தலையும் [டெலிபதியின்] அதிசயத்தையும் [the miracles of psychic power and miracle of telepathy.] விரும்பவில்லை, நிராகரிக்கிறேன் மற்றும் வெறுக்கிறேன் என்று தெளிவாகக் கூறுகிறார். அது மட்டும் அல்ல, புத்தர் இரக்க குணம் கொண்டவர், மனிதர்களிடையே அரிதாகவே காணப்பட்டார். அவரது அனுதாபம், அனைத்தும் தழுவியதாகவும் தன்னிச்சையாகவும் இருந்தது. புத்தரின் போதனையானது அனைத்து உயிர்களிடத்தும் உலகளாவிய அன்பு மற்றும் இரக்கத்தின் கருத்தாக்கத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
வத்தூபம சூத்தம் (மஜ்ஜிம நிகாயம் / Majjhima Nikaya 7) என்றால், ஒரு பொருளுக்குப் (வத்து) ஒப்பீடு (உபமா) என்பதாகும். சங்கத்தின் ஒரு உறுப்பினரான உத்திய சந்தி மிகவும் தற்பெருமை கொண்டவனாக இருந்தான். புத்தர் அவருக்கு இந்த உபதேசத்தை வழங்கினார். இதில் முக்கிய கருத்து என்னவென்றால்:
தர்மத்தை உணர மனம் தூய்மையாக இருக்க வேண்டும்.
தற்பெருமை, ஆசை, கோபம் ஆகியவற்றை விடுதல் வேண்டும்.
புத்திசாலித்தனம் மட்டும் போதாது, நல்ல பண்புகளும் வேண்டும்.
நல்ல எண்ணங்களைக் கொண்டால் நல்ல வாழ்க்கை கிடைக்கும்.
என்பதாகும். அதேபோல, லக்ஷண சூத்தம் (Digha Nikaya 30) என்றால், லக்ஷண என்றால் அம்சங்கள் அல்லது தனிப்பட்ட இலட்சணங்கள் என்பதாகும். இந்த சூத்தத்தில், புத்தரின் 32 விசேஷ உடல் அம்சங்கள் பற்றிய விளக்கத்தைக் காணலாம்.
புத்தர் ஒரு மாபெரும் ஒளிவாய்ந்த தோற்றத்தைக் கொண்டிருந்தார். அவருடைய அழகிய மற்றும் விசேஷமான உடல் அமைப்பு பலரையும் கவர்ந்தது. துறவிகள், அரசர்கள், மற்றும் பொதுமக்கள் இது குறித்து கேட்டபோது, புத்தர் இந்த 32 இலட்சணங்கள் அவருடைய முந்தைய நல்ல கர்மங்களின் விளைவாக வந்தன என்று கூறினார். சுருக்கமாக, லக்ஷண சூத்தம் எதையும் அமானுஷ்யமாக பார்க்காமல், நல்ல செயல்களின் மூலம் உயர்ந்த நிலை பெறலாம் என்று உணர்த்துகிறது. புத்தர் ஒரு மாமேதாவியாக, மாபெரும் போதகராக ஆனது அவரது நல்ல மனநிலை, தர்ம வழி, மற்றும் கடந்த பிறவிகளில் செய்த கர்மங்களின் பலனாகும் என்கிறார்.
பௌத்தம் உலகின் மிகப்பெரிய மதங்களில் ஒன்றாகும் என்பதையும், 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றியது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மேலும் அவரின் உண்மையான போதனை வழியில், மனித வாழ்க்கை துன்பம் நிறைந்தது என்றும், தியானம், ஆன்மீகம் மற்றும் உடல் உழைப்பு மற்றும் நல்ல நடத்தை ஆகியவை ஞானம் அல்லது நிர்வாணத்தை அடைவதற்கான வழிகள் என்றும் பௌத்தர்கள் நம்புகிறார்கள். இதைத்தான் புத்தபிக்குகள் கடைபிடிக்கவேண்டும். ஒழுகவேண்டும். சாதாரண பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்கவேண்டும். அப்படி எத்தனை புத்த பிக்குகளை இலங்கையில் பர்மாவில் காண்கிறீர்கள்?
அப்படியானால், அவரின் இலங்கைக்கான மூன்று வருகைகளிலிருந்தும் நீங்கள் என்ன நல்ல நடத்தைகளைக் கற்றுக் கொண்டீர்கள்? இது உண்மையான புத்தரின் வருகையா அல்லது வெவ்வேறு நோக்கங்களுக்காக இட்டுக்கட்டப்பட்டதா என்பதை தயவு செய்து சிந்தித்து முடிவு செய்யுங்கள்?
இன்னும் ஒரு வரலாற்று உண்மையையும் நான் கூறவேண்டும். கடவுளைப் பற்றி அவர் [புத்தர்] அதிகமாக எதுவும் சொல்லவில்லை. அதோடு, தானே கடவுள் என்றும் அவர் ஒருபோதும் உரிமை பாராட்டவில்லை. பார்க்கப்போனால் தன் சீடர்களுக்கு அவர் இப்படி சொன்னதாக குறிப்பிடப்படுகிறது: “ஒருவேளை கடவுள் என்று ஒருவர் இருந்தாலும், அவருக்கு என்னுடைய அன்றாட வாழ்க்கை மீது அக்கறை இருக்குமென்று கற்பனை செய்யக்கூட முடியவில்லை, மனிதனுக்கு உதவி செய்ய விருப்பமுள்ள அல்லது அதற்குரிய சக்தியுள்ள எந்தக் கடவுளும் இல்லை.”நிச்சயமாகவே கடவுள் நம்பிக்கையை கற்பிக்கவுமில்லை, அது அவசியம் என்று சொல்லவும் இல்லை” என்கிறார்.
புத்த மதத்தை பின்பற்றுகிற சராசரி நபர்கள் இப்போது விக்கிரகங்களையும் நினைவுச் சின்னங்களையும், கடவுட்களையும் பேய்களையும், ஆவிகளையும் முன்னோர்களையும் வணங்குவதிலேயே மூழ்கிப்போயிருக்கிறார்கள்; அதோடு புத்தர் கற்பிக்காத அநேக சடங்குகளையும் பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிப்பதிலுமே மூழ்கிப்போயிருக்கிறார்கள்.
இலங்கையில் இயக்கர்கள், நாகர்கள், என்ற இரு குழுக்கள் இருந்ததாகவும், இயக்கர்கள் எலு மொழியையும் நாகர்கள் தமிழையும் பேசியதாகவும் எலு மொழி பாளியுடன் கலந்து சிங்கள மொழியாக மாறியதாகவும் ஒரு கருத்து உள்ளது. ஆனால் எலு, பாளியுடன் கலந்ததற்கும் அது சிங்களமாகப் பரிணாமம் அடைந்ததற்கும் எந்தவொரு தர்க்கரீதியான வரலாற்று ஆதாரங்களும் காணப்படவில்லை. 12ம் நூற்றாண்டுக் காலப் பகுதிவரை தமிழ் - சிங்களம் என்ற மொழி ரீதியான முரண்பாடு இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்களை யாரும் குறிப்பிட்டதில்லை.
17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கண்டி அரசனால் சிறைப் பிடிக்கப்பட்ட Robert Knox என்ற ஆங்கிலேயர், அங்கிருந்து தப்பி வடக்கு நோக்கிச் சென்ற போது அனுராதபுரத்தை அடைந்தார். பின்னர் 1681இல Historical Relation of the Island of Ceylon என்ற நூலை அவர் வெளியிட்டார். இந்த நூலில், அனுராதபுரத்தை அடைந்த Robert Knox அந்த மக்களுக்குச் சிங்களம் விளங்கவில்லை என்றும், அவர்கள், தன்னை தலைவனிடம் தான் கூட்டிச் செல்லப்பட்ட போது, அவனுடன் உரையாடுவதற்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவி தேவைப்பட்டது என்றும் அங்கிருந்தவர்கள் பேசிய மொழி தமிழ் என்றும் எழுதியிருந்தார்.
இலங்கையில் பௌத்த மதத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் அனுராதபுரத்திலேயே சிங்களமொழி பரந்தளவில் பேசப்படாது இருந்திருக்குமானால், இந்த மொழியின் பரந்துபட்ட வளர்ச்சி என்பது மிகவும் அண்மைக் காலத்துக்குரியது என்று புலனாகின்றது
Part: 64 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37
Please note that In the Kevaddha Sutta (Digha Nikaya Sutta 11 in Maurice Walshe’s translation), The Buddha says, He dislikes, rejects and despises the miracles of psychic power and miracle of telepathy. The Buddha was possessed of a quality of compassion, seldom seen among men. His sympathy was all embracing and spontaneous. The Buddha’s teaching is based and built on a conception of universal love and compassion for all living beings.
In the Vatthupama Sutta (Majjhima Nikaya 7) the Buddha says, “he abides pervading that all-encompassing world with a mind imbued with loving kindness, abundant, exalted immeasurable, without hostility, without ill will. He abides pervading one quarter with the mind imbued with compassion.” and
“In the Lakkahan Sutta (Digha Nikaya sutta 30) it is stated, “the Tathagata rejects harsh speech, abstains from it, spoke what was blameless, pleasing to the ear, agreeable, reaching the heart, urbane, pleasing and attractive to the multitude.”
Please note that Buddhism is one of the world's largest religions and originated 2,500 years ago in India. Buddhists believe that the human life is one of suffering, and that meditation, spiritual and physical labor, and good behavior are the ways to achieve enlightenment, or nirvana. If so, What good behaviors you have learnt from all three visits. Please think and decide Whether this would be a real Buddha's visits or fabricated one for different purposes ?
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 65 தொடரும் / Will follow
துளி/DROP: 1941 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 64
https://www.facebook.com/groups/978753388866632/posts/32842378748744015/?
By
kandiah Thillaivinayagalingam ·
Archived
This topic is now archived and is closed to further replies.