Jump to content

இப்படியும் ஒரு குடும்பமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானென்ன பெரிதாய்க் கேட்கப்போறன். 3 டிக்கட்தான்!!!

  • Replies 57
  • Created
  • Last Reply
Posted

தங்கச்சி சுஜி,

நீங்கள் சொன்னமாதிரியும் இருக்கலாம். ஆனால்.. எனது கருத்து இன்னொரு பக்க கதையை கேட்காமல் நீங்களும் கனக்க கதைக்கக்கூடாது. உங்களுக்கு அறிஞ்சவர், சொந்தக்காரர் எண்டபடியால உங்களுக்கு அவர்பக்கம் கூட ஒருபக்கச் சார்பாக இருக்கலாம். ஆனால்.. மற்றப்பக்க என்ன எண்டு உங்களுக்கு சரியாக தெரியாமல் இருக்கலாம். நிலா அக்கா உங்களுக்கு சொன்ன தனது பக்க நியாயங்களை மட்டும் கேட்டுப்போட்டு நீங்கள் போட்டுத்தாக்க கூடாது.

எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.. யாராக இருந்தாலும்.. என்ன பிரச்சனை இருந்து இருந்தாலும்... இருவரும் பிறக்கப்போகின்ற குழந்தையுக்காக ஒன்று சேர்ந்து நிம்மதியாக வாழவேணும். இல்லாவிட்டால் கடைசியில பாதிக்கப்படப்போவது அந்த ஒன்றும் அறியாத அப்பாவிக் குழந்தைதான்.

கலையன் எனக்கு இருவரையும் நல்லாவே தெரியும்.. இருவரும் எனக்கு நண்பர்களே.. ஒருவரை மட்டும் குறை சொல்ல மாட்டன்.. இருவரையும் தெரிந்த படியால்தான் ஒருவர் பக்கம் நியாயம் இருக்கு என்று அறிந்தேன்.. இதில் சொல்ல போனால் பொண்ணை விட பெடியன் எனக்கு நன்கு தெரிந்தவர் ஆவர்.. தெரியாமல் ஒரு பக்கம் மட்டும் தப்பாய் நான் ஒரு பொழுதும் என் கதையில் எழுத மாட்டன்.. நன்றி அண்ணா..

இன்னும் ஒரு விடயம் எனக்கு பெண் சொந்தம் இல்லை..

நானென்ன பெரிதாய்க் கேட்கப்போறன். 3 டிக்கட்தான்!!!

இதுதானே பிரச்சனை.. அம்மா தாயே யாழ் வரும் எனது அன்பு உறவுகளே எனக்கு பிச்சை போடுங்கள் நான் இந்த சுவிக்கு ரிக்கட் எடுத்து கூட்டி இட்டு வர.. :blink:

Posted

தங்கச்சி சுஜி,

பெண்ணை விட ஆண் உங்களுக்கு நல்ல நண்பர் எண்டால் அவருடன் நீங்கள் கதைச்சுப் பார்த்து இருக்கலாமே? அவருடன் கதைச்சு அவரின் பிரச்சனைகள் என்ன எண்டு அறிஞ்சு இருக்கலாமே? அப்பிடி எண்டால் அவர் சொன்னதுகளை ஏன் நீங்கள் கதையில சொல்ல இல்லை? இல்லாட்டிக்கு அவரோட கதைக்க இல்லையா?

நண்பன் எண்டுறவன் யார்? ஆபத்துக்காலங்களில இன்னொருவனுக்கு உதவுறவன், பிழையான வழியில செல்லும்போது தவறுகளை சுட்டிக்காட்டி சரியான பாதையில போறதுக்கு உதவுறவன் இவர்கள் தானே நண்பர்கள்? அப்பிடி எண்டால் நீங்கள் ஏன் உங்கள் நண்பனுக்கு ஓர் நல்லதொரு நண்பியாக இருக்கவில்லை அல்லது இருக்கக்கூடாது? சும்மா கண்டவரையும் நண்பன், நண்பி எண்டு சொல்லலாமா தங்கச்சி?

சரி, என்னமோ... என்ன பிரச்சனையோ.. இனியும் காலம் போக இல்லை. உங்கள் நண்பர்கள் மீண்டும் சேர்ந்து வாழ ஆக்கபூர்வமாய் ஏதாவது செய்யுங்கோ. ஆரோக்கியமான உரையாடல்களை முதலில அவர்களோட செய்து பாருங்கோ.

Posted

கலையன் நீங்கள் சொன்னது சரிதான் பேசினால் கேட்க வேணும் நீ யார் என்று கேட்டால் என்ன பண்ண... சொல்லி பிரஜோசனம் இல்லை..அவர் எனக்கு நெருங்கிய நண்பன் இல்லை.. ஆனாலும் தெரியும்.. நான் பேசி பார்த்தன்..சின்ன பிள்ளைகள் வாய முடிட்டு இருக்கணுமாம்.. நான் என்ன பண்ண.. அவர் ஒரு முட்டாள்..இவர்கள் வாழ்க்கை எப்படி போகுது என்று தொடர்ந்து எழுதுவன் பாருங்கள்.. நான் அவர்களிடம் சொன்னன்.. என்னால் முடிந்த வரை அவர்களின் லீலைகள் தெரிய படுத்துவன் என்று.. என்னால் இது மட்டும்தான் முடியும்.. அது ஒரு படித்த முட்டாள்.. கேட்கும் நிலையில் இல்லை கலையன் அண்ணா அவர்களே.. நன்றி

Posted

தங்கச்சி சுஜி,

இதில லீலை என்ன இருக்கிது? வெளிநாட்டில எம்மவர் வாழ்க்கையில இதுகள் எல்லாம் சகஜமாய் போயிட்டிது. இதுக்கு அவர்களை சொல்லி குற்றம் இல்லை. வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்ததால நம்மவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கவேண்டி இருக்கிது. பல்வேறு உளவியல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கவேண்டி இருக்கிது. எதையும் மேலோட்டமாக பார்த்து விமர்சனம் சொல்ல ஏலாது.

முக்கியமாக, பல குடும்பங்கள்: கணவன் மனைவி, காதலன் காதலி எண்டு உறவுகளில பிரிவுகள் வாறதுக்கு மூன்றாம் மனிதர்கள்தான் காரணம். வீட்டுக்கு வீடு வாசல்படி. அதாவது பிரச்சனைகள் எப்பவும் வந்துகொண்டுதான் இருக்கும். அவை நிரந்தரமானவை. ஆனால்... வெளி ஆக்கள் குடும்பத்துக்க போகேக்கதான் அது ஊதிப்பெருத்து இன்னும் அகோரமாகிது.

அதுக்காக உங்களை நான் குறை சொல்லுறதாய் நினைக்ககூடாது. நல்லது நடக்கும் என்று நினையுங்கள். அப்படி நினைச்சு செயற்படுங்கள். ஏன் எதிர்மறையாக நினைச்சு நாங்களே பிடிகொடுக்க வேணும்?

Posted

[ஐயோ அண்ணா நான் ஊதி பெருது படுத்த வில்லை நானும் சரி பண்ணதான் நினைத்தன்.. ஆனால் முடியலை.. காதலில் உடனையும் போயு விழ கூடாது அதுதான் நான் எழுதினன்.. நான் உங்களுக்கு தனி மடலில் இதின் உண்மை விபரம் சொல்லுறன் .இதில் பிரச்சனை இருவரின் குடும்பம்தான் வேற யாரும் இல்லை..

Posted

ஐயோ தங்கச்சி சுஜி,

நான் உங்களை பிழை சொல்வதாக நினைக்ககூடாது. எனக்கே ஆயிரம் பிரச்சனைகள். மற்றவர் பிரச்சனையை தனிமடலில அறிஞ்சு என்ன செய்யுறது?

நான் அறிஞ்ச ஒருத்தர் இப்ப சுமார் பத்து பதினைஞ்சு வருசங்களாக தனது மனைவியை விவாகரத்து செய்யப்போறன் எண்டு சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஆனால்.. இன்னும்தான் ஆரம்ப முயற்சியைக்கூட செய்ய இல்லை. அவருக்கு அவவில அன்பு அதிகம். இதனால... சின்னப்பிரச்சனையைக் கூட சரியாக எதிர்கொள்ளமாட்டார், தாங்கிகொள்ளமாட்டார்.. இப்படி ஒரு வகை இருக்கிது.

நான் அறிஞ்ச இன்னொருத்தர் குடும்பத்தில என்ன நடந்திச்சிது எண்டால்... சொந்தக்காரர் கணவன் மனைவியை பிரித்து விட்டார்கள். கணவன் பிள்ளைகளைக் கூட பார்க்க வழியில்லை. அவர் அவர்கள் வீட்டுக்கு சுமார் 300மீற்றர் அருகாகக்கூட போக முடியாது. போனால் காவல்துறை அவரை உள்ளே போட்டுவிடும். இப்படி சட்டரீதியாககூட அவர் வருத்தப்பட்டார். ஆனால்.. அண்மையில அவர் இறந்துவிட்டார். மனைவியும், பிள்ளைகளும் பல வருடங்களுக்கு பிறகு அவரது உயிரற்ற உடலிற்கு அஞ்சலி மட்டும்தான் செலுத்த முடிஞ்சிது... இப்படி ஒரு வகை இருக்கிது.

இந்தவகையில... நல்லது நடக்கும், நடக்கவேணும் எண்டு நினைச்சுக்கொண்டு எமது கடமையைச் செய்வோம். இதைத்தான் நான் சொன்னன். ஏன் நாங்களே எதிர்மறையாக தீர்ப்பை தீர்மானிக்கவேண்டும். கணவன் மனைவி பிரிய, தகராறுகள் ஏற்பட அவர்கள் பெற்றோர், சகோதரங்கள், உறவினர்கள், நண்பர்கள், மூன்றாம் நபர்கள்தான் காரணமாய் இருக்கிறீனம். பெரும்பாலான இடங்களில பிரச்சனைகள் இப்படித்தான் உருவாகிது.

ஆனால்.. ஆரோக்கியமான உரையாடல்கள் கணவன் மனைவி / காதலன் காதலியிடையே நிகழும் போது... நிலமைகள் மாற்றம் பெற்று நல்ல விசயங்கள் நடைபெற சந்தர்ப்பம் ஏற்படுகிது. இதனால... எப்பவும் சுமுகமாக வாழ்வதற்கு ஒரு வாய்ப்பை பிரச்சனைக்குரியவர்களிடம் கொடுத்துவிட்டு மற்றவர்கள் கொஞ்சம் விலத்தி நிற்பதுதான் நல்லது.

நன்றி!

Posted

[ ஐயோ கலையன் நான் எந்த பிரச்சனையும் இதில் பண்ண வில்லை.. நான் உங்கள் குறை நினைக்க வில்லை.. ஒகே எனக்கு ஏன் வேண்டாத பிரச்சனை நல்லதே நடக்கும் என்றும் நம்புவோமே.. நன்றி உங்கள் கருத்துக்கு.. இதில் இன்னும் ஒரு விஷயம் நான் அறிந்தேன் அவருக்கு வேறு பொண்ணு பார்த்தாசு என்று.. ஆனாலும் நல்லது நடந்தால் நல்லம்தான்..

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.