Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரணாவ் முகர்ஜிக்கு கருணாநிதி உச்ச புகழாரம்! வைகோவை கைது செய்யாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? கேள்வியும் எழுப்புகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

karunanidhi2020piranabmugarji_1.jpg

இந்திய மத்திய அரசு சொல்லும் எதனையும் பொன் வாக்காக எடுத்துக் கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் நேற்று தூத்துக்குடியில் வெளிவிவகார அமைச்சரின் பேச்சுக்கு உச்ச புகழாரம் சூட்டியுள்ளார்.

இதொடர்பாக கருணாநதி கூறியுள்ளதாவது, தூத்துக்குடி அனல் மின் நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், என் நீண்ட கால நண்பருமான பிரணாப் முகர்ஜி அந்த விழா மேடையிலேயே என் உடல் நிலை விரைவில் குணமாகி நலம் பெற வேண்டுமென்று வாழ்த்துரைத்துள்ளார்.

அது கேட்டு எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விட இரட்டிப்பான மகிழ்ச்சி எது தெரியுமா? இதோ! அவர் உரையில் குறிப்பிட்டுள்ள இந்த செய்தி தான். அது என்ன அவ்வளவு முக்கியமான செய்தி?

தூத்துக்குடி விழாவில் அந்த தூயவர் பேசியது வருமாறு: விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்கு முன் வந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இலங்கை அரசும் போர் நிறுத்தம் செய்து மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வர வேண்டும். இதற்கு விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பும் தேவை.

தமிழ் மக்களை போர் நடைபெறும் இடத்தில் இருந்த பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்ல விடுதலைப் புலிகள் உதவ வேண்டும். தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவை சங்கம் ஆகிய அமைப்புகள் அவர்களுக்கு மருத்துவ வசதிகளை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையின் வடக்கு பகுதியில் இடம் பெயர்ந்து உள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்வதற்காக இந்திய அரசு மருத்துவ குழு மற்றும் மருந்துகளை அனுப்பவும் ஏற்பாடு செய்து வருகிறது.

அடுத்து அரசியல் தீர்வாக இலங்கையில் அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரங்களை பகிர்ந் தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் சம உரிமை கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த அதிகார பகிர்வு இருக்க வேண்டும். குறிப்பாக தமிழ் மக்களுக்கு இலங்கையின் சட்டத்துக்கு உட்பட்டு இறையாண்மை பாதிக்காத அளவில் அதிகார பகிர்வு இருக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக இந்தியாவின் இந்த பொறுப்பான வேண்டுகோளை இலங்கை அரசும், மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்''.

உடன்பிறப்பே, பிரணாப் இப்படிப்பேசியது மட்டு மல்ல, டெல்லியிலிருந்து அறிக்கையாகவும் இதை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டும் தலைவி சோனியா காந்தியின் கருத்தும் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் கருத்தும் கலந்திருக்கின்றன என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?

இலங்கைத் தமிழர்களை வாழ வைப்பதற்கும் அவர்களின் உரிமைகளை இலங்கையில் நிலை நாட்டுவதற்கும், தமிழகத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பிலும் அரசு சார்பிலும் எடுத்த முயற்சிகளுக்கும் எரியுண்டு மாண்ட இனமான ஏந்தல்களின் தியாகத்துக்கும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் நேரில் சந்தித்து தமிழகத் தலைவர்கள் வலியுறுத்திய முறையீட்டுக்கும் பலன் கிடைத்தது என்பது போல இந்தியப் பேரரசின் போர் நிறுத்த வலியுறுத்தல், எனக்கு மருத்துவ சிகிச்சை வெற்றியைப் போன்ற மன ஆறுதலை அளிக்கிறது.

மத்திய அரசுடன் தீர்மானங்கள் மூலமாகவும் சந்திப்புகள் மூலமாகவும் மகஜர்கள் மூலமாகவும் நேரடியாகவும் ஒல்லும் வகையெல்லாம் தொடர்பு கொண்டு செய்த முயற்சிகளினால் இன்று. அனல் மின் நிலைய விழா பிரணாப் பேச்சு. அவரது அறிக்கை இவை அனைத்தும் நம் நெஞ்சத்து அனலைத் தணித்து ஆறுதல் பூங்காற்றாய் வீச செய்திருக்கிறது.

ஆனால் இந்த நேரத்தில் தான் இலங்கைத்தமிழர் பிரச்சினையை மாசாக்கி, மண்ணாக்கி, காசாக்கி,அரசியலில் நாணயத்தை தூசாக்கி வாழும் சில வக்கிற மூளையினர் தாங்கள் வகித்த பொறுப்புகளுக்கு தகுதியற்றோர் என்று காட்டிக்கொள்ள பிரணாப் வருகையை எதிர்த்து மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு நாகரிகக்கேடாக நடந்து கொண்டு நமது மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப்பின் படங்களுக்கும் தீயிட்டுப்பார்த்து திருப்தி அடைந்திருக்கின்றனர்.

யார் அவர்கள் சிங்களவத் தலைமையாளர் ராஜபக்சே தமிழர்கள் மீது நடத்தும் படுகொலைக்கு நியாய வாதம் எடுத்துரைத்த ஜெயலலிதாவின் பாதார விந்தங்களே தமக்கு ஆதார அடி பீடங்கள் என அர்ச்சித்துக் கொண்டிருப்பவர்கள் அந்த அம்மா ஜெயாவின் அத்யந்த சீடர்கள், இலங்கைப் பகைவர்களை விட்டு விட்டு இந்தியத்தலைவர்களின் படங்களுக்கு தீயிட்டு கொளுத்துகிறார்கள் என்றால் தேசப்பாது காப்புக்கான சட்டரீதியான நடவடிக்கைகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா?

முடியாது, முடியாது, முடியவே முடியாது! இலங்கைத்தமிழர்களுக்கு அதிகாரமும் அங்கே அமைதியும் கிடைத்து அவர்கள் வாழ்ந்திட நாம் தமிழ் உணர்வோடு பணி புரிகிறோம். அதில் கிடைக்கும் வெற்றிக்காகக்காத்து நிற் கிறோம். மத்திய அரசுடன் இணைந்து இலங்கையில் போர் நிறுத்தம் இப்போதே கேட்கிறோம்.

ஆம் இந்த உலகில் பெரிய தேசமாம் இந்திய நாடு கேட்கிறது. பிராணாப் முகர்ஜி கேட்டுள்ளார். இந்திய அரசு கேட்கிறது. நாமும் கேட்கிறோம். போரை நிறுத்து என்று மத்திய அரசிடமிருந்து புறப்பட்டுள்ளது அந்த வாசகம். அதுவும் மார்ச் முதல் நாள் மருத்துவ மனையிலிருந்து நான் மட்டுமல்ல என் பழைய நண்பர் வாஜ்பாயும் நலம் பெற்று வெளிவரும் நாள் என்று கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நடத்தும் போரை இந்தியாவே நடத்துவதாக ஆதரபூர்வமான தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் இன்னும் மத்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கையைப் புரிந்துகொள்ளாமல் தமிழக முதல்வர் இருக்கின்றாரா அல்லது தமிழக மக்களை ஏமாற்றுவதற்கும் தேர்தலில் வெற்றிகளைப் பெறுவதற்கும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றாரா என்ற கேள்வியே தமிழின உணர்வாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

karunanidhi2020piranabmugarji_1.jpg

அது கேட்டு எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விட இரட்டிப்பான மகிழ்ச்சி எது தெரியுமா? இதோ! அவர் உரையில் குறிப்பிட்டுள்ள இந்த செய்தி தான். அது என்ன அவ்வளவு முக்கியமான செய்தி?

தூத்துக்குடி விழாவில் அந்த தூயவர் பேசியது வருமாறு: விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்கு முன் வந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இலங்கை அரசும் போர் நிறுத்தம் செய்து மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வர வேண்டும். இதற்கு விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பும் தேவை.

என்ன கொடுமையா இது..

புலிகள் போர் நிறுத்தத்துக்கு வாறோம் என்று இரண்டு வருடாமாய் தானே சொல்லிட்டு இருக்கினம்..இந்த கிழடு இந்த செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைஞ்ச தாம்.. கவிதை மன்னன் என்டா பின்ன சும்மாவா,,,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கொடுமையா இது..

புலிகள் போர் நிறுத்தத்துக்கு வாறோம் என்று இரண்டு வருடாமாய் தானே சொல்லிட்டு இருக்கினம்..இந்த கிழடு இந்த செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைஞ்ச தாம்.. கவிதை மன்னன் என்டா பின்ன சும்மாவா,,,

அவர் அப்பிடித்தான் மருமோன் அவருக்கு நீங்கள் என்ன சொன்னாலும் ரெண்டு வருடத்துக்கு அப்புறம் தான் கேட்கும் மெல்ல கேட்கும் காதுகளை அவர் கொண்டிருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

karunanidhi2020piranabmugarji_1.jpg

இவங்கட ஆனந்தச் சிரிப்பைப் பார்த்தால் ஈழத்தமிழருக்கு ஏற்கனவே விடிவு ஏற்பட்டு பாலாறும் தேனாறும் ஓடுதோ எண்டு சந்தேகம் வருது..! <_< ஊர்ப்புதினத்தை இன்னொருக்கா திருப்பி பாக்கப்போறன்..! :wub:

கடவுள் இருக்கிறார்...

kaligrfg7.jpg

அன்பே நீ இண்றி நான் இல்லை....

2007122159960801.jpg

மானத்தமிழன் கருணாநிதி...

cartoon_261.jpg

3246444906_1063f80ab5_o.jpg

saibabagp6.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர் அப்பிடித்தான் மருமோன் அவருக்கு நீங்கள் என்ன சொன்னாலும் ரெண்டு வருடத்துக்கு அப்புறம் தான் கேட்கும் மெல்ல கேட்கும் காதுகளை அவர் கொண்டிருக்கிறார்

மாம்ஸ் உவன் செத்தா நரகத்துக்கு தான் போவான் <_< அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

மாம்ஸ் உவன் செத்தா நரகத்துக்கு தான் போவான் <_< அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் :wub:

சொர்க்கம் நரகம் செத்தாப் பிறகு இருக்கிறதா எனக்கு நம்பிக்கையில்ல, ஆனா இது மாதிரியானதுகள் செத்தால் செத்தது தான். அதுக்குப் பிறகு எந்த வடிவிலோ, யாருடைய நினைவிலோ வாழாதுகள். அதுவே இதுகளின் இருப்பை ஒரு புழுவுக்குச் சமானமாய் ஆக்கி விடுகிறது. இந்தப் புழுவும் அப்படித் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பே நீ இன்றி நான் இல்லை....

2007122159960801.jpg

அதுசரி பிள்ளை கனிமொழி ஏன் தேப்பன்காரன் கருணா சோனியாவின்ரை கையை புடிக்கேக்கை ஒரு மாதிரி பாக்கிறா?

ஏதும் குண்டக்கமண்டக்க நடந்துடும் எண்டோ? :(

ஏனெண்டால் ஆள் ஏற்கனவே பலபொண்டாட்டிக்காரனெல்லோ :lol:

அதுசரி பிள்ளை கனிமொழி ஏன் தேப்பன்காரன் கருணா சோனியாவின்ரை கையை புடிக்கேக்கை ஒரு மாதிரி பாக்கிறா?

ஏதும் குண்டக்கமண்டக்க நடந்துடும் எண்டோ? :(

ஏனெண்டால் ஆள் ஏற்கனவே பலபொண்டாட்டிக்காரனெல்லோ :lol:

உங்கடை ஆசைக்காக அவரது மூண்று மனைவிகளும்... மாறன் குடும்ப விபரமும்...

Karunanidhi.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாவின்ரை குடும்பகதையே சிக்கல்சிதம்பரம் தான்!

அதுசரி கருணாவுக்கு சண்முகசுண்டரி என்ன முறையப்பா?

கருணாவின்ரை குடும்பகதையே சிக்கல்சிதம்பரம் தான்!

அதுசரி கருணாவுக்கு சண்முகசுண்டரி என்ன முறையப்பா?

சண்முகசுந்தரி மகன் முரசொலி மாறனுக்கு மகள் செல்வியை கல்யாணம் கட்டி கொடுத்த வகையிலை சம்பந்தி... மற்றும் படி அக்காவாம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.