Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீக்கியர்களால் செய்ய முடிந்ததை தமிழ்ச்சாதியால் ஏன் செய்ய முடியவில்லை?

Featured Replies

என் தோழர்கள் பலருக்கு நான் இப்படி எழுதுவது வருத்தத்தைக் கொடுக்கும். அவர்கள் விரும்புவதை நானும் விரும்பி பதிவுகளாக்கும்போது தூக்கிப்பிடிக்கும் அவர்கள் தோள்கள் ஒரு பெண்ணாகவும் ஒரு தாயாகவும் நான் உணர்ந்து சில விசயங்களைப் பதிவு செய்யும்போது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கும். ஆரம்பகாலங்களில் இவை எல்லாம் என்னை மிகவும் பாதித்தன. ஆனால் இன்று நான் ஓரளவுக்கு இந்தப் பாதிப்புகளிலிருந்து வெளியில் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதுதான் வீரவணக்கங்கள் குறித்த ஒரு பார்வையை முன்வைக்கும் அவசியத்தை வளர்த்திருக்கிறது.Image

ஈழப்போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் மும்பை ஆசாத் மைதானத்தில் 25/02/2009-ல் ஆதித்தமிழர் பேரவையும் அருந்ததியர் அமைப்பும் இணைந்து நடத்திய உண்ணாநிலை போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவு தரும் நோக்கில் பிற்பகலில் கலந்து கொண்டேன். ஈழத்திலிருந்து வந்திருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) எம்.கே.சிவாஜிலிங்கம் ஈழத்தில் நடக்கும் செய்திகளைப் பேசினார். அப்போது கூட்டத்திலிருந்த ஓர் இளைஞன் ஓவென அழுது அருகிலிருந்த நண்பனின் மடியில் படுத்துக் கொண்டான. அவன் கண்களிலிருந்து கண்ணீர்த் தாரைத்தாரையாக வழிகிறது. அவன் கால்களும் கைகளும் நடுங்குகின்றன. அவன் உடல்மொழி என்னை அச்சுறுத்தியது. இதே மனநிலையில் இந்த இளைஞன் இருந்தால் அல்லது அவனுடைய இந்த மனநிலை வளர்க்கப்பட்டால் இவனும் வீரவணக்கம் பட்டியலில் வந்துவிடுவானோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஒரு தாயாக சகோதரியாக அவனைப் பார்த்த எனக்கு அவன் கண்களும் அந்தக் கண்களில் கண்ட சோகமும் இயலாமையில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன் உடல் நடுங்குவதையும் கண்டு அச்சம் ஏற்பட்டது.

"ஒரு பெரிய ஆலமரம் வேரோடு சாயும்போது அதில் தங்கியிருந்த பறவைகளும் முட்டைகளும் அழியத்தான் செய்யும்"

அப்படியே அவனை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டுவதும் நன்றாக ஓய்வு கொடுப்பதும் தேவை என்று என் உள்ளம் சொன்னது. அருகிலிருந்த நண்பரிடம் "அவனுக்கு குடிக்கத் தண்ணீர்க்கொடுங்கள் டேக் கேர் ஆஃப் கிம்" என்று சொன்னேன். அவர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தப் பார்வை அந்த இடத்திலிருந்து என்னை நகர்த்தியது. அதன் பின் தொடர்ந்து பத்திரிகைகளில் வெளிவந்த உயிர்த்தியாகங்கள் என்னை இதை எழுத வேண்டியதன் அவசியத்தை உணர்த்தின. அதிலும் கட்சி வாரியாக தமிழ்நாட்டில் தீக்குளிப்புகள் நடக்கிறதோ என்று ஐயப்படும் அளவுக்கும் பத்திரிகை செய்திகள் பயமுறுத்தின.Image

கொழுந்துவிட்டெரியும் ஈழத்துப் பிரச்சனைகளுக்கு நடுவில் அதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த எவரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. இன்னும் சொல்லப்போனால் அந்த ஒரு கணத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட மன அழுத்தம். அதுவும், தான், தன் மனைவி, மக்கள், சாதி, சமயம், ஊர், உறவுகள் என்ற வட்டங்களை உடைத்துக்கொண்டு தன் சகமனிதனின் துன்பம் கண்டு சகிக்கமால் தங்கள் இயலாமையின் காரணமாக சினம் கொண்டு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்கள்.

அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியது அரசாங்கமும் அரசியல் தலைவர்களும்தான். இன்னும் சொல்லப்போனால் அரசாங்கத்தை ஓட்டுப்போட்டு உருவாக்கிய நாமும் அரசியல் தலைவர்களை ஏற்றுக்கொண்டிருக்கும் நம் சமூகமும்தான் குற்றவாளிகள். வீரவணக்க வசனங்களை, கவிதைகளை மறந்து அறிவுப்பூர்வமாக இதை அணுகும்போது தமிழினத்தின் இயலாமையோ என்ற எண்ணம் வருகிறது! வீரவணக்கம் என்ற வழிபாடு நம் இனக்குழு பண்பாட்டின் எச்சமாகவே நம்மிடம் தொடர்கிறது என்று நினைக்கிறேன். சங்க இலக்கியத்தில் புறநானூறு 335-ல் "பகைவர் முன்நின்று தடுத்து யானையைக் கொன்று மரணம் அடைந்த வீரனுக்கு எடுத்த நடுகல்லில் நெல்தூவி வழிபாடு செய்வது தவிர வேறு வழிபாடில்லை" என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டின் தாக்கத்தை அப்படியே இந்தி எதிர்ப்பின்போது உயிர் நீத்த தாளமுத்து, நடராசன் விசயத்தில் திராவிட இயக்கங்கள் பயன்படுத்திக்கொண்டன. போர்க்களத்தில் வீரமரணம் அடைவதும் தன் எதிர்ப்பைக் காட்டும் வகையில் தன்னுயிரை மாய்த்துக்கொள்வதும் ஒன்றல்ல. இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதை நாம் அறிந்திருந்தாலும் வெளிப்படையாக இதைப் பற்றிப் பேசவோ எழுதவோ அச்சப்படுகிறொம். அந்தளவுக்கு நம்மை நம் தலைவர்களும் சமூகமும் கட்டுப்படுத்தி வைத்திருப்பது உண்மை.

இன்னொரு செய்தியும் எனக்கு நினைவுக்கு வருகிறது 2008, 26/11 மும்பை மாநகர தாக்குதலின்போது எதிரியின் குண்டுக்குப் பலியான மூன்று உயர் போலீஸ் அதிகாரிகள் (Hemant Karkare, Ashok Kamte and Vijay Salaskar) ஹேமந் கர்க்கரே, அசோக் காம்டே, விஜய் சாலஸ்கர் மூவருக்கு இந்திய அரசு அசோகச்சக்ர விருது வழங்கியது. ஆனால் இம்மாதிரி தாக்குதல்களில் எதிரியின் குண்டுக்குப் பலியாவதும் போர்க்களத்தில் எதிரியை எதிர்க்கொண்டு போரிட்டு உயிரிழப்பதும் ஒன்றல்ல. மும்பைத் தாக்குதலில் பலியான அவர்களை மதிக்கிறோம் எனினும் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது சரியல்ல என்று இந்திய இராணுவ படைத்தளபதிகள் தம் கருத்தை மிகவும் தெளிவாக முன்வைத்தார்கள். நம்மில் பலர் நினைக்க கூடும். இம்மாதிரியான உயிர்த்தியாகங்கள் மக்களிடம் ஓர் எழுச்சியை ஏற்படுத்தவல்லன

இந்திப் போராட்ட காலத்திலிருந்து இன்றுவரை நம் தமிழ்ச்சாதி கண்ட உயிர்த்தியாகங்களின் எழுச்சிகள் மூலம் நாம் சாதித்துக் கிழித்தது என்ன? இன்றுவரை நடுவண் அரசின் இந்தி மொழிக்கொள்கை புறவாசல் வழியாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறதே! செம்மொழி நாடகத்தில் தமிழன் இந்திய அரசால் எந்தளவுக்கு ஏமாற்றப்பட்டான்? நாம் செய்தது என்ன? 1983-லிருந்து ஈழத்து நம் உறவுகளுக்காக நாம் எழுதி எழுதிக் குவித்திருக்கும் கவிதைகளும், கவியரங்கங்களும் இலட்சங்களைத் தாண்டும். ஒரு கவிதை ஒரு தமிழன் உயிரைக் காப்பாற்றி இருந்தால் கூட இன்றைக்கு நம் ஈழத்தமிழ் மண் இடுகாடாகியிருக்காதே!

எதையும் உணர்வுப்பூர்வமாக பார்ப்பது தவறல்ல. ஆனால் அப்படி மட்டுமே பார்ப்பது மாபெரும் தவறு. பிரச்சனைகளைத் தீர்க்க அறிவாயுதம் ஏந்த வேண்டும். ராஜீவ்காந்தி மரணத்தில் தமிழினம் எவ்வளவு பாதிக்கப்பட்டதோ அதைவிட அதிகமாக அவர் அன்னையார் இந்திராகாந்தி அம்மையார் மரணத்தில் சீக்கியர்கள் பாதிக்கப்பட்டார்கள். தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள் கண்டனக் கவியரங்கங்கள் நடத்தவில்லை. உயிர்த்தியாகங்கள் செய்யவில்லை. ஆனால் செயலில் காட்டினார்கள். "ஒரு பெரிய ஆலமரம் வேரோடு சாயும்போது அதில் தங்கியிருந்த பறவைகளும் முட்டைகளும் அழியத்தான் செய்யும்" என்று 3000 சீக்கியர்களை டில்லியில் கொன்று குவித்ததை அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தி நியாயப்படுத்தி பேசினார். கொதித்துப்போன சீக்கியர்கள் விடவில்லை. கொஞ்சநாள் கடந்து ராஜீவ்காந்தியை மன்னிப்பு கேட்க வைத்தார்கள்.

சீக்கியர்களால் செய்ய முடிந்ததை தமிழ்ச்சாதியால் ஏன் செய்ய முடியவில்லை?

இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவோம். அந்தத் தேடலில் நாம் இதுவரைப் பார்க்காத நம் இருண்ட பக்கங்கள் தெரியவரலாம்.

வீரவணக்கம் சொல்ல

அச்சமாக இருக்கிறது.

மன்னித்துவிடுங்கள்.

கட்சிவாரியாக தீக்குளிப்புகள்

வீரவணக்கங்கள்

கூட்டங்கள்

தலைவர்கள்

வீரவசனங்கள்

அறிக்கைகள்

அறிக்கைகளுக்கு எதிர் அறிக்கைகள்

கதவடைப்புகள்

கண்டனக்கூட்டங்கள்

கவிதையின் இடிமின்னல்

போதும் போதும்….

முத்துக்குமரன்களை ஈன்ற

அன்னையின் கருவறை சத்தியமாய்

எமக்கு வேண்டும்

எம் மண்ணில்

ஒரே ஒரு மண்டேலோவின்

மனித சரித்திரம்.

- புதியமாதவி, மும்பை-

அதிகாலை ஸ்பெஷல்

http://tamilthesiyam.blogspot.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் குரலுக்கு வணக்கம்

தங்களின் தேடலுக்கு இதுதான் பதிலாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்

ஒற்றுமையின்மை

முன்னர் இருந்ததை விட மாறினாலும் புல்லுரிவிகளாக திரியும் எம்மவர்தான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சாதி என்பது திராவிடர்கள். ஆரியர்கள் எபோதும் எம்மை எதிரியாகவே பார்க்கிறார்கள். மதராசி என்று வேறு தமிழ் நாட்டாரை நக்கல் அடிக்கிறார்கள். மாறாக சீக்கியர்கள் வட இந்தியர் மட்டுமல்லாது ஆரியர்கள். ஆகவே சகோதரர்களாக மன்னிக்கப்பட்டார்கள். ஒரு சீக்கிய நண்பனே இதனை கூறினார். எம்மை பழி வாங்க ராஜீவ்காந்தியின் கொலையை ஒரு காரணமாக பாவிக்கிறார்கள்.

என்ன இது கேள்வி?

சீக்கியருக்கு ஒரு கர்நாடகா பெரியார் கிடைக்கவில்லை ஆனால் நமக்க்கு தந்தை பெரியார், கருணாநிதி என்ற திராவிடம் கிடைத்து இருக்கே இது தான் சாபக் கேடு.

ஏன் யாழ்கள நாரதஎ, குருக்காலபோனவர், சபேசன் காணவில்லை? இது எல்லாம் சாபக்கேடு தானே?

ஐ.வி.சசி அவர்களே,

கருணாநிதியைப் பற்றி வேண்டுமானால் நீங்கள் இப்படிச் சொல்லலாம். ஆனால் பெரியாரைப் பற்றி இப்படி விமர்சிப்பதற்கு முன் அவரைப் பற்றி சிறிதாவது அறிந்துகொள்ள முயலுங்கள்.

ஆரிய மாயையிலும் ஆங்கில மாயையிலும் ஊறிப்போயிருந்த தமிழர்கள் தங்களை, தங்களது பண்பாட்டை, தங்களது மொழி வளத்தை, தங்களது ஆளுமையை, தங்களது பலத்தை உணர்வதற்கு பெரியார் ஆற்றிய பணி அளப்பரியது. பதவிக்காகவோ அல்லது தேர்தலுக்காகவோ அல்லாமல் கொள்கைக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்த ஒரு மாமனிதனைப் பற்றி இவ்வாறு விமர்சிப்பது உங்களையே நீங்கள் இழிவுபடுத்துவதாக அமையும்.

அதைவிட முக்கியமாக இந்தத் திரியின் தலைப்புடன் சம்பந்தப்பட்ட கருத்துக்களை எழுதுவது பயனுள்ளது. அனாவசியமான காழ்ப்புணர்வை இங்கு கக்குவது உங்களையும் சேர்த்து எங்கள் எல்லோருக்கும் ஆரேக்கியமாக இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக சீக்கியர்கள் செய்த்ததைபோல் தமிழர்களால் செய்ய முடியாதுதான் 1984 நிகழ்ந்த அந்த சீக்கிய இனப்படுகொலையின் பின் தோன்றிய காலிஸ்தான் போராட்டத்தைக் கைவிட்டதன் மூலம் நீங்கள் கூறிய அந்த "சாதனையை?"சீக்கிய இனம் சாதித்தது அனால் தமிழினம் தமிழீழப்போராட்டத்தை கைவிட்டு அது பொன்ற சாதனையை? செய்யாது.

  • கருத்துக்கள உறவுகள்

புனித பொற்கோவிலுக்குள் இந்திய இராணுவம் புகுந்து சீக்கிய தலைவர் உட்பட பல போராளிகளை கொன்று இந்திய மத்திய அரசு சீக்கியருக்கு துரோகம் இளைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் அழிவு தொடங்கி நான்காவது தலைமுறை களத்திலே நிற்கின்ற இன்றைய பொழுதிலும் யாழ்க் களத்திலே எழுத்துச் சண்டைகள்.

கருத்து மோதல்கள் காத்திரமானதாக இருக்க வேண்டும்.

அது தமிழ்த் தேசிய மலர்வுக்கு உரமிடட்டும். எங்கோ நெடுந்தொலைவில் அனாதைகளாக தமிழனின் உடல்கள். எடுத்துப் போடக் கூட முடியாத, இன்றைய சூழலில் ஏன் நாமின்னும்........

இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவோம். அந்தத் தேடலில் நாம் இதுவரைப் பார்க்காத நம் இருண்ட பக்கங்கள் தெரியவரலாம்.

வீரவணக்கம் சொல்ல

அச்சமாக இருக்கிறது.

மன்னித்துவிடுங்கள்.

கட்சிவாரியாக தீக்குளிப்புகள்

வீரவணக்கங்கள்

கூட்டங்கள்

தலைவர்கள்

வீரவசனங்கள்

அறிக்கைகள்

அறிக்கைகளுக்கு எதிர் அறிக்கைகள்

கதவடைப்புகள்

கண்டனக்கூட்டங்கள்

கவிதையின் இடிமின்னல்

போதும் போதும்….

முத்துக்குமரன்களை ஈன்ற

அன்னையின் கருவறை சத்தியமாய்

எமக்கு வேண்டும்

எம் மண்ணில்

ஒரே ஒரு மண்டேலோவின்

மனித சரித்திரம்.

இப்போதாவது சிந்திக்கவில்லையெனில் இனியெப்போது சிந்திக்கப் போகிறோம். நூற்றாண்டுகால அடிமை வாழ்வு ஏன் இன்றும் .......... சிந்தைகொள்வோம். எம்மினம் சிறகு விரிப்பதற்காய் !

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி மாதிரி எனது கருத்துக்கு நான் மன்னிப்புக் கேட்டுவிட்டேன் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.