Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெஞ்சம் மறக்குமா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எரியும் நெரும்பில் தலைகள் முழுகும் கரிய புலிகள் நாமடா

உடல் உருகும் போதும் தலைவன் பெயரை உரத்துப் பாடுவோமடா

பூக்கள் எமது ஜாதி பூங்காற்றும் எமது ஜாதி

பூக்கள் எமது ஜாதி பூங்காற்றும் எமது ஜாதி

தாக்கப்போகும் நாளில் மட்டும் எமக்குப் புதிய நீதி

கண்ணிமை திறந்தால் அதிலோ நெருப்பாறுகள் ஓடுமடா

எங்கள் அண்ணன் வழி எதுவாயினும் கருவேங்கைகள் பாயுமடா

எரியும் நெரும்பில் தலைகள் முழுகும் கரிய புலிகள் நாமடா

உடல் உருகும் போதும் தலைவன் பெயரை உரத்துப் பாடுவோமடா

எமது தாயின் மடியில் ஏறும் எதிரி மீது அதிர்வோம்

வெடிகளாகும் நொடியில் கூட விரியும் சிரிப்பு சொரிவோம்

எரியும் நாளை அறிவோம் உயிரை வெளியில் எறிவோம்

எரியும் நாளை அறிவோம் உயிரை வெளியில் எறிவோம்

விரைவில் எமது தமிழர் தேசம் விடியும் எனவே விரைவோம்

உலகம் எங்கும் பரவும் காற்றில் எமது உயிரைக் கலப்போம்

உறவு வேரில் புதியதான மலர்களாகப் பிறப்போம்

உயிரும் எமக்குப் பெரியதல்லடா

இது வரிகள் எழுதும் கவிதையல்லடா

எரியும் நெருப்பில் தலைகள் முழுகும் கரிய புலிகள் நாமடா

உடல் உருகும் போதும் தலைவன் பெயரை உரத்துப் பாடுவோமடா

அழுது அழுது சிவந்த விழியில் நெருப்பு மூட்டு தமிழனே

உறங்கிக் கிடக்கும் உனது பொழுதை உதயமாக்கு தமிழனே

எமது ஊரில் பேய்கள் உலவுதாமே ராவில்

எமது ஊரில் பேய்கள் உலவுதாமே ராவில்

அதிக நாளிற்கிருக்க விடுதல் அழிவுதானே ஊரில்

புலிகளாகி எழுக எழுக எமது தாயைக் காப்போம்

புனிதப்போரில் இணைக இணைக புதிய வாழ்வு சேர்ப்போம்

சஞ்சலிக்கும் மனதை வெல்லடா

இது சாவுக்கான யுத்தமல்லடா

எரியும் நெருப்பில் தலைகள் முழுகும் கரிய புலிகள் நாமடா…..

இசைத்தட்டு : ஊர்க்குயில்

பாடல் ஒலிவடிவில்

நன்றி தமிழர் இணைப்பகம்

  • Replies 112
  • Views 29.6k
  • Created
  • Last Reply

நன்றி பிறேம்!

நன்றிகள் பல பிறேம்

நன்றி பிறேம்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

அட உலகுக்கு எங்கே இது புரியும்

கரு வேங்கைகள் விடை பெறும் வேளையில்

நாம்படும் வேதனை யாருக்கடா தெரியும்

ஆ..ஆ... ஆ....வேதனை யாருக்கடா தெரியும்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

அட உலகுக்கு எங்கே இது புரியும்

போய் வருகின்றோம் போய் வருகின்றோம்

என்று இவர் எம்மிடம் சொல்வார்கள்

இவர் பூமுகம் பார்த்து போய்வர சொல்வோம்

புன்னகையாலே கொல்வார்கள்.

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

அட உலகுக்கு எங்கே இது புரியும்

பொத்தி பொத்தி கைகளில் இவரை

பூவாய் வளர்கிறோம்

கரும்புலிகளுக்கு எங்கள் உயிரினை

ஊட்டி புயலாய் வளர்க்கிறோம்

காலம் வரையும் தோள்களில்

இவரை சுகமாய் சுமக்கிறோம் (காலம்..)

இவர் கைகளை ஆட்டி போனபின்னாலே

மறைவாய் அழுகிறோம்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

அட உலகுக்கு எங்கே இது புரியும்

உயிரினில் எழுதும் கவிதைகள் எனவே

உறவினை வளர்ப்பார்கள்

இந்த உறவுகள் ஒருநாள் விலகதும் இன்றி

எரிந்திட போவார்கள்

பாட்டும் கூத்தும் பகிடியுமாக

பால்குடி போல் இருப்பர் (பாட்டும்..)

பகைமீதினில் இவர்கள் மோதிடும் போதும்

ஞானிகளா இருப்பர்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

அட உலகுக்கு எங்கே இது புரியும்

வெடித்திடும் நாளை விரல்களில்

எண்ணி கணக்கெடுத்து இருப்பார்கள்

இந்த வேளையும் பகைவர் மிதினில்

எரியும் விருப்பினில் இருப்பார்கள்

அடிக்கடி எழுதும் வரிகளில்அண்ணன்

முகத்தினை கேட்பார்கள் (அடிக்கடி...)

வழி அனுப்பிடும் கடைசி நொடியினில்

எங்கள் உயிரினில் பூப்பார்கள்

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

அட உலகுக்கு எங்கே இது புரியும்

கரு வேங்கைகள் விடை பெறும் வேளையில்

நாம்படும் வேதனை யாருக்கடா தெரியும்

ஆ..ஆ... ஆ....வேதனை யாருக்கடா தெரியும்

பாடல் இசைத்தட்டு: கரும்புலிகள் 2

இருளுக்குள் எரிகின்ற தீபம்

இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்

விடிவிற்கு ஒளி தூவும் பேர்கள்

இவர் வெளியாலே தெரியாத வேர்கள்

இது காலவரனும் பலநூறு முகவர்

இவரோடு படகில் பலவேறு வகைகள்

சிறைவாடுவோரும் திரை முடுவோரும்

உயிர் ஈந்தபேரும் என நீளுவோர்கள்

இருளுக்குள் எரிகின்ற தீபம்

இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்

வெளியே இவர்கள் தெரியாவண்ணம் திரிவார்கள்

நாளை விடியும் போதும் சிலபேர் வெளியே தெரியார்கள்

பகையின் வாசல் படியைகூட தொடுவார்கள்

பகையின் வாசல் படியைகூட தொடுவார்கள்

எங்கள் பலமே இவரின் பலமென்றாகி விடுவார்கள்

இருளுக்குள் எரிகின்ற தீபம்

இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்

குஞ்சுகள் தன்னை கூட்டி சென்று சேர்ப்பார்கள்

எங்கள் கூட்டுக்குள்ளும் குஞ்சினை வைத்து காப்பார்கள்

வஞ்சகம் காட்டி கொடுத்தால் உயிரை மாய்ப்பார்கள்

வஞ்சகம் காட்டி கொடுத்தால் உயிரை மாய்ப்பார்கள்

இவர்கள் வதையுறும் போதும் இரகசியம் தன்னை காப்பர்கள்

இருளுக்குள் எரிகின்ற தீபம்

இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்

தமிழரின் தாகம் இவர்களிடம் சொல்லி போவார்கள்

எங்கள் முகவர்கள் என்றும் மனம்தளராமல் சிரிப்பார்கள்

விழ விழ எழுவார் எழுந்த பின்னாலும் நடப்பார்கள்

விழ விழ எழுவார் எழுந்த பின்னாலும் நடப்பார்கள்

பெரு வெற்றியின் பின்னே இவர்களும் பெரிதா இருப்பார்கள்

இருளுக்குள் எரிகின்ற தீபம்

இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்

விடிவிற்கு ஒளி தூவும் பேர்கள்

இவர் வெளியாலே தெரியாத வேர்கள்

இது காலவரனும் பலநூறு முகவர்

இவரோடு படகில் பலவேறு வகைகள்

சிறைவாடுவோரும் திரை முடுவோரும்

உயிர் ஈந்தபேரும் என நீளுவோர்கள்

இருளுக்குள் எரிகின்ற தீபம்

இது இடி தாங்கும் போதெல்லாம் வேகும்

விடிவிற்கு ஒளி தூவும் பேர்கள்

இவர் வெளியாலே தெரியாத வேர்கள்

விடிவிற்கு ஒளி தூவும் பேர்கள்

இவர் வெளியாலே தெரியாத வேர்கள்

பாடல் இசைத்தட்டு: கரும்புலிகள் 2

நண்பர்களே! எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா? கீழ் உள்ள இசைத்தட்டுகளில் இருந்தும் முடிந்தளவு பாடல் வரிகளை தரமுடியுமா? இவைகள் என்னிடம் உள்ள சில பாடல்கள் இவற்றை பாடல் வரிகளுடன் இணையத்தில் தரவேற்றம் செய்ய இருக்கின்றேன்! இந்த முயற்சிக்கு உங்கள் உதவி தேவை செய்வீர்களா?

ஹரி உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்

நான் ஒரு ஒலிப்பேளையை எழுத்துருவில் தருகின்றேன்

  • தொடங்கியவர்

பாடல்வரிகளுக்கு மிக்க நன்றி..தொடருங்கள்...

பாடல்களை இணையத்தில் போடுபவர்கள் அவற்றை கேட்பதற்கு மாத்திரம் என்று தொழில்நுட்பரீதியில் கட்டுப்படுத்தவும். தரைவிறக்கம் செய்யும் வகையில் விடுவது பொருத்தமானதா?

எமது தயாரிப்புகளை நாமே களவாக பயன்படுத்துகிறம் என்பதை கொஞ்சம் கவனத்தில் எடுங்கோ. களவெடுக்காது உரிய முறையில் அதை பெற்றுக்கொள்வது நாங்கள் கொடுக்கும் முதல் மரியாதையாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல்களை இணையத்தில் போடுபவர்கள் அவற்றை கேட்பதற்கு மாத்திரம் என்று தொழில்நுட்பரீதியில் கட்டுப்படுத்தவும். தரைவிறக்கம் செய்யும் வகையில் விடுவது பொருத்தமானதா?

எமது தயாரிப்புகளை நாமே களவாக பயன்படுத்துகிறம் என்பதை கொஞ்சம் கவனத்தில் எடுங்கோ. களவெடுக்காது உரிய முறையில் அதை பெற்றுக்கொள்வது நாங்கள் கொடுக்கும் முதல் மரியாதையாகும்.

முடிந்தவரை நேரடியாக தரவிறக்கம் செய்யமுடியாத வகையினில் இணைக்கின்றோம். அவ்வாறான தொழிநுட்பங்களை பகிரும் போது நாமும் அவற்றினைப் பின்பற்றக் கூடியதாக இருக்கும். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போய் வருகின்றோம் போய் வருகின்றோம்

என்று இவர் எம்மிடம் சொல்வார்கள்

இவர் பூமுகம் பார்த்து போய்வர சொல்வோம்

புன்னகையாலே கொல்வார்கள்.

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு.....

நன்றி ஈழப்பாடல்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குஞ்சுகள் தன்னை கூட்டி சென்று சேர்ப்பார்கள்

எங்கள் கூட்டுக்குள்ளும் குஞ்சினை வைத்து காப்பார்கள்

வஞ்சகம் காட்டி கொடுத்தால் உயிரை மாய்ப்பார்கள்

வஞ்சகம் காட்டி கொடுத்தால் உயிரை மாய்ப்பார்கள்

இவர்கள் வதையுறும் போதும் இரகசியம் தன்னை காப்பர்கள்

பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு..

நன்றி Eelasongs

பிறேம் நான் முதலில் பாடலையும் இணைத்து இருந்தேன் பின் குருகாலபோவன் எழுதியிருந்ததை பார்த்துவிட்டு இணைப்பை எடுத்துவிட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு இருக்கும் பாடல் இணைப்பு நேரடியாக தரவிறக்கம் செய்ய முடியாதது சிறி. மற்றும் அவ்விணையத்தில் அநேகப் பாடல்களும் இருக்கின்றன. இணைய இணைப்பில் இருக்கும் போது கேட்கமுடியும்.

ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தம்

ஓடு பகையே ஓடு

இந்த மண் எங்கள் சொந்தம்

இந்த மண் எங்கள் சொந்தம் ( ஒவ்வொரு )

எங்கள் இயிர் மூச்சும் உடலும் உடல் சதையும்

இரத்தமும் எங்கள் தமிழீழம்

பொங்கியெழுந்த தெங்கள் புலிகள் படை நாங்கள்

பொறுப்பதில்லை இனி ஒரு நாளும் (பொங்கி) (ஒவ்வொரு )

புயலைத்தளை கொண்டு கட்டிப்போடவா

பொங்கு கடலுக்குச் சிறைப் பூட்டோ

கயவர் கொலை வெறியர் ஆளவோ - நாங்கள்

காலில் விழவோ இது விளையாட்டோ (ஒவ்வொரு )

அஞ்சா நெஞ்சமும் அசையா வீரமும்

அரிய தமிழ் மாந்தர் சொத்தாகும்

வஞ்ச நரியே வா வந்து பார் எங்கள்

வலிமை ஒன்றல்ல பத்தாகும் (ஒவ்வொரு)

விண்ணை நொருக்கி எங்கள் வீரர் எழுந்தார்

வெறியர் ஆட்டம் இங்கே நிலைக்காது

உண்மை எங்கள் தமிழ் மண்ணில் கொடியர்

உயிர் ஒன்று கூட தப்பிப் பிழைக்காது (ஒவ்வொரு)

பாடல் "ஒரு தலைவனின் வரவு" ஒலிப்பேளை

பாடலை இயற்றியவர் - காசி ஆனந்தன்

பாடலை பாடியவர் - தேனிசை செல்லப்பா

பாடலை ஒலிவடிவில் நன்றி ஈழப்பாடல்கள்

http://www.eelasongs.com/songs/oruthalaiva...nvaravu/04.smil

  • தொடங்கியவர்

பாராட்டுக்கள் பிறேம் & சிறி....

பாடல்வரிகளுக்கு மிக்க நன்றி

பாராட்டுக்கள் பிறேம் & சிறி....

பாடல்வரிகளுக்கு மிக்க நன்றி

தொடர்ந்து தமிழீழ(தாயக) பாடல்களை எழுத்து வடிவில் எதிர்பார்க்கலாம்.

காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை

கல்லறை அல்ல

உயிர் உள்ளவர் பாசறை (காலத்தால்)

தீபங்கள் அணையலாம் தீ அணைவதில்லை

தேசத்தை காத்த உயிர் ஒய்ந்தொழிவதில்லை (தீபங்கள்) (காலத்தால்)

குண்டு மழை நடுவினிலும் குருதி மழை நடுவினிலும்

நின்று போர்களம் பார்த்தவன்

உண்ட சோறு தொண்டைஉள் நுழையுமுன்

நஞ்சை உண்டு தாய்மண் காத்தவன் (குண்டுமழை) (காலத்தால்)

இலையுதிர் காலத்தில் உதிர்ந்தாரா இல்லையவர்

இள்வேனில் நாளில் உதிர்ந்தார்

தலை தந்து தமிழீழ மண் வாழ விலை தந்து

மாவிரராய் நிமிர்ந்தார் (இலையுதிர்) (காலத்தால்)

மாற்றார் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை

மண்ணாய் நிலைக்குமையா

ஆற்றல் மிகுந்த மாவிரர் கல்லறை மண்ணில்

அனலே முளைக்குமையா (மாற்றார்) (காலத்தால்)

தமிழீழ மாமண்ணில் என்றென்றும் புலி வீரர்

நடந்த கால் தடமிருக்கும்

தமிழ் மாந்தர் உள்ளவரை என்றென்றும்

அவர் நெஞ்சில் மாவீரர் படமிருக்கும் (தமிழீழ) (காலத்தால்)

பாடல் "ஒரு தலைவனின் வரவு" ஒலிப்பேளை

பாடலை இயற்றியவர் - காசி ஆனந்தன்

பாடலை பாடியவர் - தேனிசை செல்லப்பா

நன்றி ஈழப்பாடல்கள். பாடலை ஒலிவடிவில்

http://www.eelasongs.com/songs/oruthalaiva...nvaravu/07.smil

இந்த மண் எங்களின் சொந்தமண் பாடல் வரிகளை யாராவது தாருங்களேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தமண் எங்களின் சொந்தமண் (2)

இதன் எல்லைகள் மீறியார் வந்தவன்

இந்தமண் எங்களின் சொந்த மண்

இதன் எல்லைகள் மீறியார் வந்தவன்

நீர்வளம் உண்டு நிலவளம் உண்டு

நிம்மதி ஒன்றுதான் இல்லை

இந்தமண் எங்களின் சொந்தமண்

நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து

நின்றது போதும் தமிழா

உன் கலைகள் அழிந்து கவலை மிகுந்து

கண்டது போதும் தமிழா

வரிப்புலிகள் எழுந்து புயலைக்கடந்து

போர்க்களம் ஆடுது தமிழா

இன்னும் உயிரை நினைந்து உடலைச்சுமந்து

ஓடவா போகிறாய் தமிழா

இந்தமண் எங்களின் சொந்தமண்

இந்தமண் எங்களின் சொந்த மண்

இதன் எல்லைகள் மீறியார் வந்தவன்

நீர்வளம் உண்டு நிலவளம் உண்டு

நிம்மதி ஒன்றுதான் இல்லை

எனினும் இந்தமண் எங்களின் சொந்தமண்

சாவா இலையொரு வாழ்வா எனப்பெரும்

சமரே எழுந்தது தமிழா

உடன் வா வா புலியுடன் சேர் சேர் எனும் குரல்

வரையைப் பிளக்குது தமிழா

நீ ஆகா அழைத்திது

போ போ எனவொரு மகவை அனுப்பிடு தமிழா

நீ பூவா இலைப்பெரும் புயலாய் எழுந்துமே

புறப்பட்டு வந்திடு தமிழா

இந்தமண் எங்களின் சொந்தமண்

இந்தமண் எங்களின் சொந்த மண்

இதன் எல்லைகள் மீறியார் வந்தவன்

நீர்வளம் உண்டு நிலவளம் உண்டு

நிம்மதி ஒன்றுதான் இல்லை

எனினும் இந்தமண் எங்களின் சொந்தமண்(3)

  • கருத்துக்கள உறவுகள்

ஆலக்கடல் எங்கும் சோழ மக ராஜன் ஆட்சி புரிந்தாலே பாடல் வரிகளை யாராவது தாருங்களேன்.

ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்

ஆட்சி புரிந்தானே அன்று

ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்

ஆட்சி புரிந்தானே அன்று

தமிழ் ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன்

ஏறி நடக்கின்றான் இன்று

காலை விடிந்தது என்று பாடு

சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

எட்டு திசையாவும் கொட்டு பெருசோழன்

ஏறி கடல் வென்றதுண்டு

அவன் விட்ட இடமெங்கும் வென்று வருகின்றான்

வேங்கை கடல் வீரர் இன்று

காலை விடிந்தது என்று பாடு

சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

எங்கள் கடல் மிதில் எதிரி வருகின்ற

இன்னல் இனி மேலும் இல்லை

புலி பொங்கி எழுந்திட்ட தங்க தமிழீழ

பூமி தனிலேது தொல்லை

காலை விடிந்தது என்று பாடு

சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

கடலில் என்றாலும் தரையில் என்றாலும்

காவல் இருக்கின்ற தம்பி

எதிர் படைகள் வரும்போது பாயும் புலிவீரன்

பகையை முடிப்பானே பொங்கி

காலை விடிந்தது என்று பாடு

சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

வலிமை தரும் எங்கள் தலைவன்

வழிதன்னில் வங்ககடல் நின்று படும்

கடல் புலிகள் எழுகின்ற போர்கள்

தனிவெற்றி பெற்று தமிழீழம் ஆடும்

காலை விடிந்தது என்று பாடு

சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகள் சிறி

  • தொடங்கியவர்

இந்த பாடலை எங்கு கேட்கலாம்?

இந்த பாடலை எங்கு கேட்கலாம்?

எங்கள் தேசம் எனும் ஒலிப்பேளையில் இந்த பாடல் உள்ளது.

பாடலை ஒலிவடிவில் நன்றி ஈழப்பாடல்கள்

http://www.eelasongs.com/songs/engalthesam/11.smil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.