Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம்.. இந்திய இராணுவத்தின் இறுதித் தாக்குதல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம்.. இந்திய இராணுவத்தின் இறுதித் தாக்குதல். 2:28 PM, Posted by சாத்திரி, 5 Comments

கடந்த திங்கட்கிழமை 6 ந்திகதி ஒரு செய்தி.. புதுக்குடியிருப்பில் நச்சு இரசாயனக்குண்டுத் தாக்குதல்.ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் பலி..அதுமட்டுமல்ல புலிகள் இயக்கதின் சில தளபதிகளும் போராளிகளும்.. கொல்லப்பட்டதாக இலங்கையரசாங்கம் செய்திகளையும் வெளியிட்டுச் சில படங்களையும் வெளியிட்டுள்ளது..

உலகத் தமிழர்கள் அனைவரின் உணர்வுகளையும் ஒருகணம் உறையவைத்த இந்தச் செய்தியானது தமிழர்கள் எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்களோ அந்தந்த நாடுகளிலெல்லாம்..இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கெதிரான போராட்டமாக வெடித்துள்ளதுடன் ஜரோப்பிய நாடுகளின் நாடாளுமன்றங்களை முற்றுகையிடும் போராட்டமாகவும் மாறியுள்ளது.

இன்றைய செய்திகளின்படி தமிழ்நாட்டிலும் இந்த நச்சு இரசாயனத்தாக்குதலுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றது. தாக்குதல் நடந்தது புதுக்குடியிருப்பில். பொதுவாக வெளியுலகத்தின் பார்வையில் அங்கு புலிகள் என்கிற ஒரு சிறு அமைப்பிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் சண்டை நடக்கின்றது என்கிற ஒரு மாயைத் தோற்றத்தைக் காட்டி நிற்கும் வேளையில், இந்தத் தாக்குதலில் இந்திய இராணுவத்திற்கும் இந்திய அரசிற்கும் எதிராக ஏன் போராட்டங்கள் நடக்கின்றது?? என்பது பலரின் கேள்வியாக இருக்கும்...

இன்றைய யுத்தத்தில் ஈழத்தமிழர் போராட்டத்தினை எப்படியாவது நசுக்கிவிட வேண்டுமென்று தீர்மானித்துள்ள இந்திய அரசு இலங்கையரசிற்கு ஆயுதங்கள் ஆலோசனைகள் மற்றும் தொழில் நுட்பஉதவிகள் அனைத்தையும் இந்தியாவே வழங்கி வருகின்றதென்பது அனைவரிற்கும் தெரிந்த விடயம். அதனை இந்தியத் தலைமை அமைச்சர் உட்பட இந்திய அதிகாரிகளும் , இலங்கையரசும் பகிரங்கமாகவே ஒப்புக்கொண்ட விடயங்கள்தான்.

ஆனால் இதுவரை இந்திய இலங்கை அரசுகளால் ஒப்புக்கொள்ளப்படாத விடயம் என்னவெனில் சுமார் ஜந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய இராணுவமும் நேரடியாக இலங்கைச் சமர்க்களத்தில் இலங்கை இராணுவத்துடன் புலிகளிற்கெதிரான சமரில் பங்கேற்கிறார்கள் என்பது தான். இருபது மாதங்களிற்கு மேலாக தொடர்ந்து புலிகளுடன் சண்டையிட்டு வரும் இலங்கைப் படைகளின் முக்கிய விசேட படையணியான 58 மற்றும் 59 வது படையணிகள், புலிகளின் ஊடறுப்புத் தாக்குதல்களினால் மிக மோசமாகத் தாக்கப்பட்டு இழப்புக்களை சந்தித்து ஆளணியற்று உள்ளிருந்து உதிர்ந்து போன ஒரு கூடாக மாறிவிட்டதனால் ஆலோசனைகளையும் ஆயுதங்களையும் கொடுத்துக் கொண்டிருந்த இந்திய அரசு உடனடியாகவே இலங்கையரசின் இழந்து போன ஆட்பலத்தினையும் ஈடு செய்வதற்காக இந்திய இராணுவத்தினையும் இலங்கையில் களமிறக்கி இலங்கை இராணுவத்தின் 58, மற்றும் 59 வது படையணிகளில் இணைத்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் கர்நாடகா மானிலத்திலுள்ள பெல்கம் இராணுவ முகாமிலிருந்தே கடல்வழியாக அனுப்பப் பட்டிருப்பதால் பெரும்பாலானவர்கள் கன்னடர்களே.

இந்தியாவின் நோக்கம் என்னவெனில் இந்தியாவின் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிற்கு முன்னராக என்ன விலைகொடுத்தாவது இந்தமாதம்(சித்திரை) 15 ந் திகதிக்குமுன்னர் புலிகளை முற்றாக அழித்துப் புலிகளின் தலைமையையும் கொலைசெய்து விடுவதோடு ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதேயாகும். அப்படி நடந்து விட்டால் காங்கிரஸ் அரசிற்கு அது ஒரு தேர்தல் பிரச்சாரமாக மட்டுமல்ல தெற்காசிய பிராந்தியத்தில் மாலைதீவிற்கு அடுத்தபடியாக இன்னொரு குட்டி நாடான இலங்கையையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இப்போதைக்கு இந்த இரண்டு நாட்டிற்காவது வல்லரசாக இருந்துவிட்டு போகலாம் என்பது இந்தியாவின் ஆசை.

அதே நேரம் இலங்கையரசிற்கோ ஈழத்தமிழர் போராட்டத்தை நசுக்கிவிட்டால் அது சிங்களவரின் சித்திரைப்புத்தாண்டுச் செய்தியாக அறிவிப்பது மட்டுமல்ல.அடுத்த தேர்தலிலும் ராஜபக்ச சிங்கள இனவாதத்தின் தலைவராகலாம். இது அவருடைய ஆசை.இவை எல்லாவற்றிற்கும் மேலாக மேற்குலகின் நிலை என்னவென்றால் கால் காசிற்கும் பிரயோசனமில்லாத சிறீலங்கா கடன் வாங்கியே சண்டையை நடத்திக் கொண்டிருப்பதால் சரிந்த பொருளாதாரத்தில் தாங்களே தள்ளாடும் பொழுது சிறீலங்காவிற்கு முண்டு கொடுக்க முடியாதது மட்டுமல்ல, *ஈழத்தில் தமிழர் மீதான படுகொலைகளை நிறுத்த உதவுங்கள்* என்கிற புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் வேறு நாளுக்கு நாள் அதிகரித்து மேற்குலகில் அரசு நிருவாகங்களை மட்டுமல்ல அவர்களது நாடாளுமன்றங்களையே முற்றுகையிடும் போராட்டமாக மாறியுள்ளது.

இந்த நேரத்தில் இலங்கை மற்றும் இந்திய அரசுகள்... ஈழத்தமிழர் போராட்டத்தினை நசுக்கியே தீருவோம் என நாட்குறித்து அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள் , அதற்குப் பின்னர் உங்களிற்கும் நிம்மதி எங்களிற்கும் பிரச்சனையில்லையென மேற்குலகிடம் வேண்டுகோளும் விடுத்துள்ளதனால் ஈழத்தமிழர் பிரச்சனையைத் துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் மேற்குலகின் தொண்டையில் சிக்கி விழிபிதுங்கி நிற்கும்வேளை எப்படியாவது சித்திரை மாதத்துடன் சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்று மேற்குலகின் ஆசை.

இப்படி அவரவருக்குள் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுதுதான் கடந்த சனிக்கழைமை 4 ந் திகதி புதுக்குடியிருப்பை நோக்கிப் பலமுனைகளில் முன்னேறிய இராணுவத்தினரை ஊடறுத்து புலிகள் ஒரு தாக்குதலை நடத்தினார்கள். இந்த ஊடறுப்புத்தாக்குதலில் இலங்கை இராணுவம் பாரிய இழப்புக்களைச் சந்தித்துக் கொண்டிருந்தது.. மறுநாள் ஞயிற்றுக்கிழைமை இரவு புலிகள் இன்னொரு களமுனையை திறப்பதற்காக கனரக ஆயுதங்களை நகர்த்திக் கொண்டிருந்தவேளை, புலிகளின் சிறிய அசைவுகளையும் துல்லியமாகக் கவனித்துக் கொண்டிருந்த இந்திய கவீதுகள்(ராடர்கள்) புலிகளின் கனரக ஆயுதங்களுடனான அசைவினைக் கவனித்துவிட்டன. ஏற்கனவே புலிகளின் ஊடறுப்பு தாக்குதலால் இழப்பினைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இலங்கை இந்தியக் கூட்டுப்படையணியால் புலிகளின் இந்தப் புதிய நகர்வினால் எதிர்கொள்வது கடினம் என்று தெரிந்து கொண்ட இந்திய இராணுவ அதிகாரிகள் உடனடியாக அதனைத் தடுத்துநிறுத்தத் திட்டமிட்டுப் பேரழிவினை ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட நச்சு இரசாயனக் குண்டுகளைக் தருமபுரம் பகுதியில் அமைந்திருக்கும் இந்திய விசேட படையணி முகாமிலிருந்து புதுக்குடியிருப்பை நோக்கி ஏவப்பட்டது.

இரசாயனக் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததும் காற்றிலே நச்சுத்தன்மை சில கி.மீற்றர்களிற்கு பரவும் என்பதால் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உட்டபட போராளிகளும் மூச்சுத் திணறல் எற்பட்டு இரசாயனத் தாக்கத்தால் மரணமடைந்துள்ளது மட்டுமல்ல, இப்படியான தாக்குதலை இந்திய இராணுவ அதிகாரிகள் திடீரென நடாத்துவார்களென அறியாமல் முன்னேற்றபாடாக நச்சு வாயுவிடமிருந்து காத்துக்கொள்ளும் முகமூடிகள் அணியாமல் அந்தப்பகுதியில் சண்டையில் இருந்த இலங்கை இந்தியப்படைகளும் இறந்துள்ளனர். இந்த விடயத்தினை இரண்டு அரசுகளுமே மூடி மறைத்துள்ளனர்.

ஆனாலும் அதிகாரங்களின் ஆசைகளா?? அல்லது ஈழத்தமிழரின் துயரமும் துன்பங்களும் நிறைந்த அவர்களின் நியாயமான போராட்டமா?? எது வெற்றி பெறும் என்பதனை இனிவரும் சில நாட்கள் தீர்மானிக்கும்.........

இப்படியான தாக்குதலை இந்திய இராணுவ அதிகாரிகள் திடீரென நடாத்துவார்களென அறியாமல் முன்னேற்றபாடாக நச்சு வாயுவிடமிருந்து காத்துக்கொள்ளும் முகமூடிகள் அணியாமல் அந்தப்பகுதியில் சண்டையில் இருந்த இலங்கை இந்தியப்படைகளும் இறந்துள்ளனர். இந்த விடயத்தினை இரண்டு அரசுகளுமே மூடி மறைத்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் இதற்கு தங்களால் ஆதாரங்களை திரட்ட முடியுமா குறிப்பாக இந்தியாவில் உள்ள நண்பர்கள் உதவலாமே..... இறந்த இந்திய இராணுவவீரர்களின் புகைப்படங்களை வெளீயிட முடியுமா?

ஈழத்தமிழர்களை பாதுகாக்க தமிழர்களின் கடைசி நம்பிக்கை சோனியாகாந்தி: திருமாவளவன்

ஈழத்தமிழர்களை பாதுகாக்க தமிழர்களின் கடைசி நம்பிக்கை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திதான் என்று கூறியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், சோனியாகாந்தி நினைத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இலங்கை அதிபர் ராஜபக்சேவை டெல்லிக்கு வரவழைத்து, போர் நிறுத்த நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை ஆகியவற்றை வெளியிட்டு, அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

முல்லைத்தீவில் நச்சு புகைக்குண்டுகளை வீசி அப்பாவித் தமிழர்களை சிங்கள இனவெறி அரசு கொன்று குவித்து வருகிறது. சிங்களப் படையின் 58 மற்றும் 59வது படைப்பிரிவு புலிகளால் அழிக்கப்பட்டுள்ளது. அந்த படை பிரிவில் இந்திய படையினரும் களமிறங்கி மக்களை அழித்தொழிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஈழத்தமிழர்கள் மீது நச்சு புகைக்குண்டுகளை வீசி அழித்தொழிக்கும் கொடுமை, 2வது உலகப்போரில் கூட நடக்காத ஓர் கொடூரம் ஆகும். இதை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துகொண்டிருப்பதை சகிக்க முடியாது.

இந்த பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையிலும் தாயுள்ளத்தோடும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அணுகவேண்டும். அவர் நினைத்தால் சிங்கள அரசை கட்டுப்படுத்த முடியும். அவரது தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள முறையில் தோழமை உணர்வுடன் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். ஈழத் தமிழர்களை பாதுகாக்க தமிழர்களின் கடைசி நம்பிக்கை சோனியாகாந்திதான் என வெளிப்படையாக அறிவிக்கிறோம்.

முதல்வர் கருணாநிதியும் போர் நிறுத்தம் செய்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

சோனியா காந்தி நினைத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை டெல்லிக்கு வரவழைத்து, போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யமுடியும். எனவே எங்கள் இனத்தை காப்பாற்றுவதற்காக சோனியாவிடம் மடிப்பிச்சை கேட்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

http://tamil.webdunia.com/

  • கருத்துக்கள உறவுகள்

..

Edited by kuddipaiyan26

இந்த பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையிலும் தாயுள்ளத்தோடும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அணுகவேண்டும். அவர் நினைத்தால் சிங்கள அரசை கட்டுப்படுத்த முடியும். அவரது தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள முறையில் தோழமை உணர்வுடன் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். ஈழத் தமிழர்களை பாதுகாக்க தமிழர்களின் கடைசி நம்பிக்கை சோனியாகாந்திதான் என வெளிப்படையாக அறிவிக்கிறோம்.

திருமா உங்களைப்போல விடுதலைச்சிறுத்தையாக இருந்து இப்பொழுது பதவிக்காக + சந்தர்ப்பவாத தேர்தலுக்காக பூனையாக மாறுவதைப்போலில்லை எங்கள் போராட்டம்.தொப்புள் கொடிப்பாசம் எல்லாம் எங்களுக்கு நன்றாகப்புரியும். பிரச்சினையே எங்களுக்கு காங்கிரஸோடதானே பிறகென்ன .... சோழியன் குடுமி சும்மா ஆடாது .... ஆட்டுங்கோ ஆட்டுங்கோ ....

எங்களுக்கும் எங்கள் மக்களுக்கும், தனது உயிரிலும் மேலாக எங்களை நேசிக்கும் எங்கள் தலைவன் + எங்கள் தளபதிகள் + எங்கள் வீரர்கள் போதும்.கடைசி ஈழத்தமிழன் உயிருடன் இருக்கும் வரைக்கும் இந்தியாவின் இந்த இராஜ துரோகத்தையும் அதாவது வடக்கனுக்கு புரியும் மொழியில் சொன்னால் இராமாயணத்தில் இராமன் நேருக்கு நேர் மோதாமல் கோழை போல் ஒழித்திருந்து வாலியை எப்படி வீழ்த்தினானோ அதே போல் இந் நவீன பாரதம் நேருக்கு நேர் மோத துப்பில்லாமல் எம் கரிகாலன் சேனையை நயவஞ்சகமாக வீழ்த்தி கொக்கரிக்கிறது.

ஒன்று மட்டும் உண்மை எங்களால் முடிந்த வரைக்கும் வெள்ளை சேலை கட்டிய அன்னையின் இரத்தம் குடிக்கும் வரலாறை உலக அரங்கில் அறைகிறோம்.இறுதியாக வீரத்தியாகி முத்துக்குமாரின் வரியில் "காலம் கடந்த நீதி அநீதியை விட கொடுமையானது"

பிரச்சாரத்தோழரே புறப்படுங்கள் உங்கள் பொறிபறக்கும் பேச்சுக்கு .......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் என்னிடம் கைவசமில்லை. கிடைத்ததும் இணைத்து விடுகிறேன். சிலவேளை அவை கிடைக்காமல் கூடப் போகக்கூடும்.

கடைசியில் திருமாவும் தானும் ஒரு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத அரசியல் வாதி என்று நிரூபித்து விட்டார். நல்லது இப்போதாவது தனது உண்மையான முகத்தைக் காட்டினாரே!

தமிழ்நாட்டில் உண்மையான அரசியல்வாதிகள் யாருமே இல்லையா?!

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் திருமாவும் தானும் ஒரு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத அரசியல் வாதி என்று நிரூபித்து விட்டார். நல்லது இப்போதாவது தனது உண்மையான முகத்தைக் காட்டினாரே!

தமிழ்நாட்டில் உண்மையான அரசியல்வாதிகள் யாருமே இல்லையா?!

தமிழனுக்கு என்றும் தமிழனே (தமிழகம் உட்பட) உதவி...! தமிழ் அரசியல் வாதிகள் அல்லர்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களே..கசப்பான செய்திகள் காத்திருக்கின்றன.... தமிழக உறவுகளை விட்டால் மாற்றம் கொண்டுவர வேறு யாராலும் முடியாது....கிளர்ந்தெழுவோம் ......கடைசிக்கட்டம்...இதை விட்டால் எல்லாமே போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

சோனியாவா? பிரச்சினையே அவதானே, இதுகூடத்தெரியாத திருமாவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.