Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொறன்ரோவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்

Featured Replies

ரொறன்ரோ 360 யூனிவர்சிட்டி அவெனியூவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால், கனடியத் தமிழ் இளையோரினால் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு ஏப்ரல் 23, 2009 காலை பத்து மணியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது சுமார் 20-50 அளவில் தான் ஆட்கள் நிற்கின்றார்கள். ஒட்டாவாவில் நிற்காததற்க்குக் காரணம் இருக்கின்றது. ரொரன்ரோவிலுமா????

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் கட்டாயம் கருதி இடை புகுத்தும் என் செயலை மன்னிப்பீர்களாக! கடும் குளிரிலும் குழந்தைகளையும் முதியோர்களையும் 360 யூனிவர்சிட்டி அவன்யூ டொரொண்டோ - விற்கு ஆயிரக்கணக்கில் கூட்டி வந்த குடும்பத்தினரின் வேண்டுகோள் இதுதான். போராட வாருங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப் போராட்டம் நேற்று மாலை 7 மணி முதல் மாற்றம் பெற்று சாலை மறியல் போராட்டமாக உருவெடுத்துள்ளது. பெருந்திரலான மக்கள் இங்கு அணிதிரண்ட வண்ணமிருக்கின்றனர். உணர்வின் விளிம்பில் இளைஞர்களின் கோபக்கணல்கள் வீசிக்கொண்டிருக்கின்றது. ரொரன் காவல்த்துறையினரும் கலகமடக்கும் சிறப்பு காவல்துறையினரும் பெருந்தொகையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இரவு பகல் பாராது நடைபெறும் இப்போராட்டத்தில் தற்போதும் ஆயிரக்கணக்கானவர்கள் வீதியின் நடுவே அமர்ந்திருந்து தமது போராட்டத்தை நடாத்துகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் நிலக்கீழ் தொடரூந்தில் பயணிக்கும் பட்சத்தில் போராட்டத்தின் மையப் பகுதியில் உள்ள சென்.பற்றிக்ஸ் தொடரூந்து நிலையத்தில் இறங்கலாம். அதே நேரம் வாகனங்களில் செல்வோர் தரிப்பிடங்களுக்கு குறிப்பிட்டளவு பணம் செலுத்த வேண்டி வரும்.

அதே நேரம், போராட்டத்தில் பங்கு பற்றுவொருக்கான உணவுகள், தேனீர், என்பன தன்னார்வ தொண்டர்களாலும், ஒழுங்கமைப்பாளர்களாலும் வழங்கப்படுகின்றன. இருப்பினும் பல நூற்றுக்கணக்கானோர், ரிம்கோட்டனின் வரிசையாய் நிற்பதைக்காணக்கூடியதாக இருந்தது.

கழிப்பற வசதிகள் பற்றி விபரங்கள தெரிந்தவர்கள் பதிவு செய்யுங்கள், பலர் நகரில் பல மையில் தொலைவுக்கு நடந்து சென்றதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக இரவில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் இந்த சிக்கல் இருக்கின்றது. தற்காலிக வசதிகளை ஏற்ப்டத்த முடிந்தால் ஏற்பாட்டாளர்கள் ஏற்ப்படுத்துவார்கள் என நம்புகின்றேன்.

அதே நேரம், வானகங்களின் சொந்த காரர்கள் தங்கள் வாகனங்களின் மூலம் போராட்டத்தை நடாத்த முடியும், ஆனால் எது வரினும் தளராத துணிவோடு நின்று போராட வேண்டும். அந்த உறுதி எம்மவர்களுக்கு கண்டிப்பாக தேவை!

பணிகளுக்கு பரீட்சைகளுக்கு செல்பவர்கள், சூழற்சி முறையிலாவது வந்து கலந்து கொள்ளுங்கள், உங்கள் வருகை வரலாற்றை திருப்பி எழுதும்!

Edited by Nitharsan

  • கருத்துக்கள உறவுகள்

torontousembassy26april.jpg

torontousembassy26april.jpg

torontousembassy26april.jpg

torontousembassy26april.jpg

torontousembassy26aprilf.jpg

Edited by valvaizagara

கழிவறைதான் முக்கிய பிரச்சனை. யூனியன் ஸ்டேசனுக்கு போனால் அங்கு ஒன்று உண்டு. Eaton Centerல் இருக்கிறது. இதுபோல Ryerson Business Schoolமுன்னாலும் உள்ள கடைத்தொகுதியில் {Bay & Dundas}, மற்றும் Greyhound Bus Terminalல் இருக்கின்றது . ஆனால்... யூனியன் தவிர மிகுதி எல்லாம் இரவு பத்து மணியுடன் மூடி விடுவார்கள். யூனியன் சப்வேயுக்கு அதிகாலை 1.40வரை Trainஇல் போய்வரலாம். ஆனால் 1.40இன் பின் Trainஓடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கழிவறைதான் முக்கிய பிரச்சனை.

நடமாடும் கழிவறைதொகுதி போன்றவற்றை பெறமுடியாதா :o

காலையில் தான் அங்கிருந்து கிளம்பினேன் ஒரு பக்க வீதியை வலுக்கட்டாயமாக திறந்து விட்டார்களாம் உண்மையா

இருவர் வைத்தியசாலையிலும் அனுமதித்திருக்கிறார்கள் வானொலியில் கேட்டேன்.

நடமாடும் கழிவறைதொகுதி போன்றவற்றை பெறமுடியாதா :rolleyes:

அதற்கும் அனுமதி பெறவேண்டும். ஒட்டாவாவில் கவனயீர்ப்பு நடைபெறும் போது முதலில் அனுமதி தர மறுத்து பின் பாராளுமன்றத்தின் கட்டிடத் தொகுதியில் இருந்த இன்னொரு தொகுதி கழிவறையை பயன் படுத்த தந்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தூதராலயம் .....கனடாவில் ஆர்ப்பாட்டம் நடத்தும் நம் இளையோரிடமிருந்து அறிக்கையை கையேற்று இருகிறார்களாம் .........வெள்ளி மாளிகையின் அனுமதியின் பேரில் .....எனவே இது ஒரு நால்ல திருப்பமாக் அமையும் . நாளைய நாள் ஒரு முக்கியமான நாள் ஐ நா விலும் கருத்துக்கு எடுத்து கொள்ள இருக்கிறார்கள். எனவே உறவுகளே ......தொடர்ந்து எமது செயல்களை முன்னெடுக்க வேண்டுகிறேன்........நன்றி

Please start gather from tonight and do not give Police a chance like today.

  • கருத்துக்கள உறவுகள்

வீதி மறிப்பில் ஈடுபட்ட மக்கள் யூனிவேர்சிற்றி வீதியின் இருவழிப்பாதைகளையும் மறித்து நின்று ஒரு விரிவான பகுதியை தங்கள்வசம் வைத்திருந்தார்கள். மக்கள் சக்தி பூரணப்பட்டிருந்த வேளையில் காவல்துறையினரால் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. மக்கள் சக்தி குறையும் வேளை பார்த்து அங்கிருந்த மக்களை நேற்று அதிகாலை ஒருவழிப்பாதைக்குள் மட்டுப்படுத்திய வேளையில் மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பை இந்தக் காணொளியில் காணலாம். முக்கியமாக மக்கள் போராட்டங்களுக்கு தொடர்களங்கள் திறக்கப்படும் வேளைகளில் பின்னிரவு தொடக்கம் அதிகாலை வரையான காலப்பகுதிகளும் பலமான மக்கள் சக்தியைக் கொண்டதாக அமையவேண்டும் என்பதை மறுபடியும் மறுபடியும் நாம் உணரவேண்டிய கட்டாயம் எமக்கு இருக்கிறது.

Edited by valvaizagara

வீதி மறிப்பில் ஈடுபட்ட மக்கள் யூனிவேர்சிற்றி வீதியின் இருவழிப்பாதைகளையும் மறித்து நின்று ஒரு விரிவான பகுதியை தங்கள்வசம் வைத்திருந்தார்கள். மக்கள் சக்தி பூரணப்பட்டிருந்த வேளையில் காவல்துறையினரால் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. மக்கள் சக்தி குறையும் வேளை பார்த்து அங்கிருந்த மக்களை நேற்று அதிகாலை ஒருவழிப்பாதைக்குள் மட்டுப்படுத்திய வேளையில் மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பை இந்தக் காணொளியில் காணலாம். முக்கியமாக மக்கள் போராட்டங்களுக்கு தொடர்களங்கள் திறக்கப்படும் வேளைகளில் பின்னிரவு தொடக்கம் அதிகாலை வரையான காலப்பகுதிகளும் பலமான மக்கள் சக்தியைக் கொண்டதாக அமையவேண்டும் என்பதை மறுபடியும் மறுபடியும் நாம் உணரவேண்டிய கட்டாயம் எமக்கு இருக்கிறது.

தொடர்ந்து காலையில் கவனித்து வருகிறேன். காலையில் வருபவர்கள் 10 மணிக்குப்பின் தான் வருகிறார்கள். அவர்கள் 7 அல்லது 8 வந்தால் நல்லம்

இரவு நிற்பவர்கள் 6 தொடக்கம் 7.30 யில் கலைகிறார்கள். நானும் உட்பட

நேற்று 9 இற்குப்பின் தான் சாலையை ஒதுக்கினார்கள்

சற்று முன்பும் அங்கு சென்றுவந்தேன். இன்றுடன் அமெரிக்க துணைத்தூதரகம் முன்பான போராட்டம் நிறைவுபெறும் என்கின்றமாதிரி சிலர் சொல்கின்றார்களே, உண்மையா? போராட்டத்தை டொரண்டோவில் உள்ள ரஷ்யா, சீனா தூதுவராலங்கள் மீது விஸ்தரிக்குமாறு கேட்கப்பட்டு உள்ளதாகவும் சொன்னார்கள். அதுபற்றிய சரியான தகவல்கள் தெரிந்தால் கூறுங்கள்.

சற்று முன்பும் அங்கு சென்றுவந்தேன். இன்றுடன் அமெரிக்க துணைத்தூதரகம் முன்பான போராட்டம் நிறைவுபெறும் என்கின்றமாதிரி சிலர் சொல்கின்றார்களே, உண்மையா? போராட்டத்தை டொரண்டோவில் உள்ள ரஷ்யா, சீனா தூதுவராலங்கள் மீது விஸ்தரிக்குமாறு கேட்கப்பட்டு உள்ளதாகவும் சொன்னார்கள். அதுபற்றிய சரியான தகவல்கள் தெரிந்தால் கூறுங்கள்.

நேற்று இரவில் இருந்து காலை மட்டும் அங்குதான் நின்றேன் அப்படி கேள்விப்படவில்லை

மேலும் ஒரு 50 இல் இருந்து 100 பேர் வரைதான் இருந்தோம்.

இப்போது தான் அங்கிருந்து வந்தேன்

2500 மேல் நிற்கிறார்கள்

சின்ன பிரச்சனை நடந்தது கொடியுடன் கூடிய தடியை விடமாட்டார்கள் என்று காவல் துறை ஏன் என்றால் தடியை ஆயுதமாக பாவிப்பம் என்று

கடைசியாக 9 பது பேரை கைது செய்யும் போது அத்தடியால் அடித்தார்கள் என்று விளக்கம் கூறினார்கள்

இது வெளியில் இருந்து வரும் போது தான் உள்ளே (ஆர்ப்பாட்டம் நடக்கும் இடம்) தடியுடன் கூடிய கொடிதான் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

மே இரண்டாம் நாள் 360 யூனிவேசிற்ரி அவெனியுவில்

torontousembassymay2200.jpg

torontousembassymay2200.jpg

torontousembassymay2200.jpg

torontousembassymay2200.jpg

torontousembassymay2200.jpg

torontousembassymay2200q.jpg

torontousembassymay2200.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.