Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உராய்வு

Featured Replies

uraivuajeevanimg7mg.jpg

இரவில்லை பகலில்லை

பொழுதெல்லை ஏதுமில்லை

நாடெல்லை அதுவுமில்லை

-----------

அன்புடையீர்

சஞ்சீவ்காந்தின் உராய்வு கவிதை நூல் வெளியீட்டு விழாவும்

ஆய்வு மற்றும் விமர்சனமும் வெகு விரைவில் சுவிஸில் நடைபெற இருக்கிறது.

இந் நிகழ்வில் பங்கு கொள்ளவும்

இணைந்து நிகழ்வுகளை ஒழுங்கு செய்யவும்

விமர்சனங்களை முன் வைக்கவும் விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் கருத்துகளையும் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம்.

ajeevanhand15zy.jpg

நாம்

நமது படைப்பாளிகளையும்

அவர்களது படைப்புகளையும் கெளரவித்து -நாளைய

நம் சமூகத்தின் இளையோர் கரம் பற்றி

வளர வழி செய்வோம்.

யாழ் இணைய கருத்துக் களத்தின் வழியாகவும்

நேரடி மின் அஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.

e-mail: ajeevan@ajeevan.com

www.europemoviesfestival.com

or

www.ajeevan.com

  • Replies 318
  • Views 42.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அவர்கட்கு நன்றி....சுவிசில் நடைபெற இருக்கும் உராய்வு நிகழ்வு பற்றிய முன்னறிப்புக்கு....

  • தொடங்கியவர்

அன்பின் சோழியன் அண்ணா,தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.உறுத்தும் ஒரு விடயத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்

கவிஞர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் பட்டம் சூட்டி மகிழ்வது.திராவிட முன்னேற்றக் கழகங்களின் எச்சம்.அது ஈழத்தவர்களையும் பிடித்தாட்டுகிறது என்பது எனது அபிப்பிராயம்.

வேடிக்கையான,மற்றவர்களால் கேலியாகப் பேசப்படும் இந்தப் பட்டங்களை எதற்காக நண்பர் சஞ்சீவுக்கும் சூட்டியிருக்கிறார்கள் என்று புரியவில்லை.இது அவரது தவறோ உங்களது தவறோ இல்லை ஆனால் நீங்கள் அந்தப் பட்டத்தைப் பயன்படுத்தியமையால் சுட்டிக் காட்டுகிறேன்.

சஞ்சீவின் சிந்தனைகளுக்கும் செயலுக்கும் ஏற்றதாக இளஞன் என்னும் புனைபெயரை அவரே தேர்ந்தெடுத்திருக்க எதர்காக கவிக்கூர் என்னும் பட்டம்?யாரோ ஒரு பெரியவர் பாராட்டாய்ச் சொல்லிவிட்டார் என்பதற்காக நாம் அதனைக் காவித்திரிய வேண்டுமா?'செந்தமிழ்க் கோடையிடி' பட்டம் கேட்கவே சிரிப்பு வருகிறது.

இளைஞன் இந்தப் பட்டங்களிலிருந்து விலகி தன்பாதையில் செல்லவேண்டுமென்பது எனது விருப்பம்

முதலின் அனைவருக்கும் நன்றி. :)

அடுத்து ஈழநாதனின் கருத்தோடு நானும் உடன்படுகிறேன்.

சோழியான் அண்ணாவும், அஜீவன் அண்ணாவும் "கவிக்கூர்" பற்றி தெளிவுபடுத்திவிட்டார்கள். அவர்களுக்கும் நன்றி.

TTN (தமிழ்த் தொலைக்காட்சி இணையம்) இல் மூன்று மாதகாலம் பயிற்சிக்காய் சென்றிருந்தபோது, ஆரம்பகால என் கவிதை முயற்சிக்கு உற்சாகம் தந்தவரான நாடகக் கலைஞர் தாசீசியஸ் ஐயா (அப்போது ரிரிஎன் தமிழ் ஒளியின் நிர்வாகப்பொறுப்பில் இருந்தார்.) அவர்களிடம் எனது கவிதைத் தொகுப்புக்கான கவிதைகளைக் கொடுத்து வாழ்த்துரை எழுதித் தருமாறு கேட்டிருந்தேன். அவரும் அனைத்தையும் வாசித்துவிட்டு சில நாட்களின் பின் "காலத்தின் கவிக்கூர் இவன்" என்று ஒரு வரியை மட்டும் எழுதித் தந்தார். அதுதான் கவிதைத் தொகுப்பின் தொடக்கமாக இடப்பட்டுள்ளது. அவரின் அன்பின் வெளிப்பாடாகவே நான் அதைப் பார்க்கிறேன். பட்டமல்ல - வாழ்த்துரை மட்டுமே!!! :)

ஈழநாதன்,

நீங்கள் குறிப்பிட்டதுபோல பட்டங்கள் என்பன இன்று சும்மா சும்மா அள்ளி வழங்கப்படுகின்றன. யாருக்கு எதற்காக வழங்குகிறோம் என்கிற அடிப்படையில்லாமலே வழங்கப்படுகின்றன.

மேடையும், ஒலிவாங்கியும் கிடைத்துவிட்டால் போதும் பட்டங்கள் குவிந்துவிடும். அதனால் அதற்குரிய மதிப்பும் இன்று இல்லாமல் போய்விட்டது. (துரோகி என்ற சொல்லுக்குரிய தன்மை இன்று எப்படி காணாமல் போயிற்றோ, அதேபோல்!)

பிறர் தரும் வாழ்த்தோ, பாராட்டோ, கருத்தோ அது அவரவர் எனது கவிதைகளை உள்வாங்கியதன் வெளிப்பாடு - அவர்களின் சுதந்திரம் - அதனை நான் தடுக்க முடியாது. அதேநேரத்தில் அவர்கள் சொல்லியதை அப்படியே காலம்பூராவும் சுமந்துகொண்டும் செல்ல முடியாது. (பெயருக்கு முன்னால எத்தனையைத்தான் போடுவது :) )

நான் எப்படி என்னை சமூகத்தில் அடையாளம் காட்ட விரும்புகிறேனோ அதுதான் முக்கியம்.

இளைஞன் இந்தப் பட்டங்களிலிருந்து விலகி தன்பாதையில் செல்லவேண்டுமென்பது எனது விருப்பம்

பட்டங்கள் சுமப்பதில் இளைஞனுக்கும் உடன்பாடில்லை. வெளியார் உருவாக்கும் ஒரு போலியான புகழ் வட்டத்துக்குள் முடக்குப்பட்டு கிடக்க இளைஞன் விரும்புவதில்லை. எனவே, ஈழநாதனின் விருப்பம் தான் இளைஞனதும். :lol:

மீண்டும் அனைவரது கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

  • தொடங்கியவர்

ஜேர்மனியில் பிறீமன் தமிழ்க்கலை மன்றத்துடன் இணைந்து சலனம் நடாத்திய 'குறும்படமாலை - 2005' கடந்த 30.10.2005 ஞாயிற்றுக்கிழமை அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் நடந்து முடிந்தது. அதன் நிழ்ச்சி நிரல் இரு நிகழ்வுகளாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

முதலாவதாக ஜேர்மனியை வதிவிடமாகக் கொண்டு வளர்ந்துவரும் 22அகவையுடைய அடுத்த தலைமுறை வாலிபனான சஞ்சீவ்காந்தின் "உராய்வு" கவிதைநூல் அறிமுகம் இடம்பெற்றது.

இரண்டாவதாக சலனத்தின் குறும்படங்களாக கனடா சுமதி ரூபனின் "மனமுள்", ஈழவர் திரைக்கலைமன்றம் வழங்கும் ஜேர்மனி கலைக்கண் பால்ராஜின் "கனவுகள்", பாரிஸ் நேயாலயம் வழங்கும் கரைஞர் பராவின் "பேரன் பேத்தி", பிரான்சு நல்லூர்ஸ்தான் வழங்கும் வதனனின் "விலாசம்", கனடா எம் சுதனின் "அடிட்" ஆகியன திரையிடப்பட்டன.

அத்துடன் புலத்தமிழர்களின் திரைக்கலை வரலாற்றில் புதிய தடம்பதித்த "பேரன் பேத்தி" குறும்படத்தின் மூலம் அநேகரின் கவனத்தை ஈர்த்த பன்முகக்கலைஞர் பரா, அவையின் பலத்த கரவொலிக்கு மத்தியில் பிறீமன் தமிழ்க்கலை மன்றத்தால் "சிறந்த இயக்குநர் 2005" பட்டயம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

நூல் அறிமுக நிகழ்வில் தமிழையும், தமிழர் வாழ்வியலையும் சுருங்க விபரித்து அந்நதந்தக் காலப் பதிவுகளில் அக்கறையில்லாதிருக்கும் தமிழர்களின் அலட்சியப்போக்கை கண்டித்ததுடன், நாம் வாழும் புலத்தில் வளரும் அடுத்த தலைமுறை இளைஞனான சஞ்சீவ்காந்தின் இந்தப் பதிவு முயற்சியைப் பாராட்டிப் பேசினார் புலத்தமிழர் மத்தியில் சிறந்த சொற்பொழிவாளராகத் திகழும் கோடையிடிக் குமரன். இதனால் அவையிலிருந்தோரின் வாஞ்சைக்குள்ளானார் "இளைஞன்" என்ற புனைப்பெயரையுடைய சஞ்சீவ்காந்.

இவரது எளிமையான ஏற்புரையும், பிறீமன் தமிழ்க்கலை மன்றத்தின் புதிய தலைமுறையினருக்கான உற்சாகமூட்டலும் கவனங்கொள்ளத் தக்கன.

இணைப்பு: இங்கே அழுத்தவும்

நன்றி: அப்பால் தமிழ்

சஞ்சீவ்காந்த் அவர்களின் 'உராய்வு' கவிதைத் தொகுப்பிலிருந்து ஓர் கவிதை..

செயற்படு(பொருள்)

seyatpadu.jpg

இருட்டைக்

கவிழ்த்து

வெளிச்சத்தின் மேல்

ஏறி நில்.

சுதந்திரத்தை

விரி

உலகை அதில்

கிடத்து

பண்பாட்டால்

போர்த்து

சமுதாயத்தை

நிர்வாணப்படுத்து

அதன் காயங்களில்

முத்தமிடு

அழுக்குகளை

நக்கு.

உண்மைகளைக்

கட்டிப்பிடி

உன் சொல்லைக்

கவ்விப்பிடி.

காலத்தை

நடத்து

வேகத்தை

முந்து.

முரண்படு

முட்டிமோது

உடன்படு

ஒட்டி உரசு

திறன்படு

தீர அனுபவி.

வாழ்க்கையைக்

கொண்டாடு

வரலாற்றில்

நின்றாடு.

ஆசைகளோடு

உறவுகொள்

தேவைகளைக்

கருத்தரி

தேடல்களைப்

பிரசவி.

பழசை மென்று

புதுசாய்த் துப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாக்கை திரி

காதல் சுடர்

ஞாபகத்திற்கு வந்தாலும்

சஞ்சீவின் தனித்தன்மையான கவிதை.நன்றி சோழியன் அண்ணா

  • தொடங்கியவர்

நன்றி சோழியான் அண்ணா, ஈழநாதன்...

"யாக்கைத் திரி" க்கு முதல் எழுதப்பட்ட கவிதை :lol:

யேர்மனியில் உள்ள இளைஞர் மன்றம் நடாத்திய

நிகழ்வொன்றிலும் படிக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப உங்களைக் கவிக்கூர் என்றது மெத்தச் சரி.

முரண்படு

முட்டிமோது

உடன்படு

ஒட்டி உரசு

திறன்படு

தீர அனுபவி.

செயற்கரிய செயல் அது, செயற்படு பொருள்.

இக்கவிதை நிச்சயமாய் எல்லோர் மனத்திலும் முட்டி மோதி இருக்கும்.

நான் தீர அனுபவித்த கவிதைகளில் இதுவும் ஒன்று.

என்னுள் நுளைந்து செயற்பட்ட கவிதை. இக்கவிதை

செயற்பட்டு பொருளை உணர்த்திற்று. மிகச்சிறந்த்த படைப்பு.

செயற்படு பொருள் கவிதை பலமுறை வாசிக்கத் தூண்டுகிறது. எத்தனை உண்மைகளை இயல்பாக சின்னச் சின்ன கவி வரிகளுக்குள் சொல்லி முடித்திருக்கிறார் இளைஞன்.

எழுவாய் பயனிலை செயப்படுபொருள என ஒத்த கருத்தோடை இருக்கிறதாலை பிரச்சனைக்கு இடமில்லை :lol::lol:

எழுவாய் பயனிலை செயப்படுபொருள என ஒத்த கருத்தோடை இருக்கிறதாலை பிரச்சனைக்கு இடமில்லை :lol::lol:

சின்னக்குட்டிஅண்ண உங்களுக்கு என்ன ம++பே? ஒரு வசனத்தில் இருக்கும் எழுவாய், பயனிலை, செய்யப்படு பொருள் எல்லாம் ஒத்தகருத்தோ? தோன்றாஎழுவாய் கூட வரும் தெரியுமோ? :P :P :P

மோனை பிருந்து....கொஞ்சம் துள்ளாமால் கொஞ்சம் பறக்கமால் ஒரு இடத்தில் நினறு கேள்... எதோ பண்டித விளக்கம் சொல்ல வந்திட்டீர்...இந்த மந்தி சின்னக்குட்டி எந்த மப்பென்றாலும் கொப்பிழக்க பார்க்காது கண்டியோ....கேள்வியின் நாயகனோடை சிலேடையாய் லொள்ளு பண்ணினான் ...அவ்வளவு தான்..... :lol:

மோனை பிருந்து....கொஞ்சம் துள்ளாமால் கொஞ்சம் பறக்கமால் ஒரு இடத்தில் நினறு கேள்... எதோ பண்டித விளக்கம் சொல்ல வந்திட்டீர்...இந்த மந்தி சின்னக்குட்டி எந்த மப்பென்றாலும் கொப்பிழக்க பார்க்காது கண்டியோ....கேள்வியின் நாயகனோடை சிலேடையாய் லொள்ளு பண்ணினான் ...அவ்வளவு தான்..... :lol:

சரி அப்பு செய்வினை இருக்கு, பயனிலை இருக்கு, எழுவாய் எங்க இருக்கு அப்பு, அதுதான் நான் சொன்னேன் தோன்றாஎழுவாய் இருக்கு என்று. 8) 8) 8)

அல்லது உங்களுக்கு ஆராவது செய்வினை செய்து போட்டினமோ? :P :P :P

  • 3 months later...

என் பார்வையில் சிக்கிய உராய்வு

நீண்ட கால ஆவல் இன்றுதான் தணிந்தது.

உராய்வு அழகான அட்டையில் வித்தியாசமான எழுத்தில் உராய்வு என தலைப்பிட்ட ஓர் அழகான இதழ். என் கையில் கிடைத்ததும் ஒவ்வோர் பக்கத்தையும் மென்மையாக புரட்டினேன். (புது புத்தகம் எல்லோ அதுதான்)

"அன்புடன்" கி பி அரவிந்தன் எழுதியதையும் "உராய்வுடன்" கவிஞன் சஞ்சீவ்காந்த் தன்னை அறிமுகப்படுத்திய விதமும் "நன்றியுடன்" அனைவருக்கும் நன்றி செப்பிய விதமும் என்னை வியப்பில் மூழ்க வைத்தது. தனிமையில் யாருடைய தொந்தரவும் இன்றி வாசிப்பதற்காக மாமர நிழல் தேடி சென்று மரத்தடியில் அமர்ந்தேன். இளந்தென்றல் எனை வருடிச்செல்ல உராய்வுடன் ஐக்கியமானேன்.

1) வருக 2004

இரண்டாயிரத்து மூன்றின்

எதிர்காலமே...

இரண்டாயிரத்து ஐந்தின்

இறந்தகாலமே...

வருமாண்டில் நீ என்ன செய்வாய்?

கல்லறைகள் காணும்

பதுங்குகுழிகள் மூடு

ஆயுதங்களை உறங்க வை

இப்படியான பல வரிகளை உள்ளடக்கிய முதல் கவிதை அருமையோ அருமை.

2) தமிழழகு

அழகாக சிலேடைச் சொற்களை பொருத்தி தமிழுக்கு அழகு சேர்த்து கவிதைக்கு தமிழழகு என தலைப்பிமிட்டு அழகான மூனாவின் படமுமிட்டு அழகாக வடித்த கவிதையே தமிழழகு. இக்கவியை நான் வாசித்தேன் என பெருமை கொள்வதை விட வாசிக்காதோருக்காக கவலைப்படுறேன்.

3) கடிதம்.

கடிதம் என தலைப்பிட்டு எழுதிய கவிதை நன்று.

அன்புள்ள தாயகமே...

ஆசைமகன் எழுதும் மடல்

நான் இங்கு நலமம்மா

நீயங்கு நலம்தானா?

வாசிக்கும் போது என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர்.இக்கவிதையில் உள்ள கவிஜனின் சிந்தனையை சொல்லி புரிய வைக்க முடியாது. இதையும் வாசித்தால் தான் புரியலாம். மூனாவின் ஓவியம் இன்னும் கவிதைக்கு மெருகூட்டுகின்றது.

4) விடுதலையின் பங்குதாரர்

இதுவும் ஓர் சிலேடையுடன் கூடிய அழகான கவிதை. தமிழீழ கவிதை.

சுட்டெரிக்கும் சூரிய வீரர்

துட்டர் படை கொன்ற வீரர்

விட்டெறியும் வேலாய் வீரர்

எட்டிப்பகை வென்ற வீரர்

இப்படியான தொனியில் அமைந்த இக்கவிதையும் அருமை. நன்றி கவிஞனே.

5) அரிச்சுவடி , பெரியார், சிற்பி, திலீபன் ., காந்தி , பூமிப்பந்து

இத்தலைப்பில் அமைந்த் ஹைக்கூ கவி வரிகளும் இனிதே.

6) கடவுள்

நாதியற்று வாழும் நம்மவர்க்கு நாளும்

சோறுமே இல்லையடா

நாள்தோறும் இந்த வெற்று சிலைக்கு

பூசைகள் ஏதுக்கடா?

ஆகா தினமும் கடவுளை மனதார பூஜிக்கும் எனக்கே கடவுள் கவிதையை வாசித்ததும் சிந்தனை வந்தது. ஆமா ஏன் தான் நான் கடவுளை வணங்குறேன் என்று. :cry:

7) கவிதை

இளைஞன் தனது கவிதையின் பிறப்பை இக்கவிதையில் இனிமையாக வடித்திருக்கிறார்.

நல்லதை எடுத்துப் பதமாக்கி

இனிப்பிட்டு இளக வைத்து

மென்றுண்டு சுவைத்தால்

கக்கி விடுவேன்.

வாவ் அருமை. நன்றி கவிஞனே.

8) விருப்பு வெறுப்பு

இக்கவி வாசிப்போரை வெறுக்காமல் விருப்பம் கொள்ளக்கூடிய மாதிரி எழுதி இருக்கிறார்

புலியை வெறுப்பவள் புலியை விரும்புபவனை அணைப்பது போல ஒரு கவிதை. வாசித்தால் விருப்பம் வரும் இக்கவி மீதும் கவிஞனின் சிந்தனை மீதும்.

9) இவள் யாரோ

இக்கவி வாசித்ததும் நட்பை சுவாசிகும் எனக்கு அழுகையே வந்தது. காமத்திலான இப்பிரபஞ்சத்தில் நட்பை தூய்மையாக வைத்திருப்போர் எண்ணிக்கை குறைவானதே. ஆனால் இக்கவிஞனோ மின் வழியில் சந்தித்து அன்பு கொண்ட வார்த்தைகளை பரிமாறி அவளே தன் தோழி என அழகாக சொல்லி இருக்கிறார். வாழ்க உங்கள் நட்பு. நட்பை கொச்சைப்படுத்தும் :evil: :cry: இவ்வுலகில் உங்களது நட்பாவது தழைத்தோங்க வாழ்த்துகிறேன்.

10) வர்ணிக்க தோன்றுதே

பதினெட்டு வயது

பவனி வரும் அழகு....

வர்ணிக்க தோன்றும்

வஞ்சியிவள் மேனி

வள்ளல் மொழி எதுவோ

வார்த்தைகள் தாரும்

இக்கவிஞனுக்கே வஞ்சிவள் மேனியை வர்ணிக்க வார்த்தைக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்டதே. அடடடா வஞ்சியவளின் சிற்றிடை போல பெண்ணவளின் வர்ணிப்புக்கான கவிதையையும் சிறிதாக்கி அருமையாக வர்ணித்திருகிறார் கவிஞன். நன்றி

11)பிறந்தநாள் பரிசு

முதல் கவியில் வர்ணிக்க சொல் இலை என பஞ்சம்கொட்டிய கவிஞன் இத்தலைப்பின் கீழ் அமைந்த கவிதையில் பெண்ணவளை ஆழமாக வர்ணனை செய்துள்ளார்.

உன் சின்னக் கழுத்து

புதிய தொழில்நுட்பத்தின் படைப்பு

உன் விரிந்த மூக்கு

யூப்பிட்டரில் பூத்த மொட்டு

இப்படியாக தொடர்கிறது இனிமையான வர்ணனை.

ஆகா அருமைஅருமை.

நேரம் போதாமையினால் தொடர்ந்து எழுதமுடியாமைக்கு வருந்துகிறேன். ஏனைய கவிதைகளுடன் மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து வெண்ணிலா................. :P

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி நிலா..

நானும் உராய்வை எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றேன்.

  • தொடங்கியவர்

நன்றி வெண்ணிலா.

கவிதைத் தொகுப்பை வாசித்து

உங்கள் கருத்துக்களை எழுதியமைக்கு நன்றி.

ரமா விரைவில் உங்கள் கருத்துகளையும்

எதிர்பார்க்கிறேன். எழுதுங்கள்.

வரும் 19.04.2006 அன்று பிரான்சில் அறிமுக நிகழ்வு இடம்பெயற உள்ளது.

அதுபற்றிய விபரம் இதோ:

inniya.jpg

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வணக்கம்,

சிலம்பு அமைப்பு ஒழுங்கமைத்துள்ள "இன்னிய மாலை" நிகழ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை பாரிசில் நடைபெற இருக்கிறது. பிரான்சில் வசிக்கிற யாழ்கள உறவுகளையும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

silambu_212.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டன் நிகழ்வு போல பாரிஸ் இல் நடைபெறும் விழாவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..................................

என்னடாப்பு....உந்த நிகழ்ச்சி லண்டனிலை...நடந்த மூட்டம்...களத்தில் எடுப்பு எடுத்தெண்டு இருந்தியள்...... பரிஸிலை நிகழ்ந்த நிகழ்ச்சி பற்றி ஒரு அசுமாத்தத்தையும் காணல்லை...எழுதுவும் காணல்லை போட்டாக்களையும் காணலை........அது சரி..லண்டண்,லண்டன் தான்...

நிகள்வு இனிதே நடந்தேற வாழ்த்துக்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வு இனிதே நடந்தேறி விட்டது மதுரன்.

ஓஓ கவனிக்கவில்லை. சுட்டி காட்டியமைக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நிகழ்வு தொடர்பான பதிவு அப்பால் தமிழில் வெளிவந்துள்ளது. இதனை நன்றியுடன் இணைக்கிறேன்.

-துடிப்பான இளைஞர்களது நல்வெளிப்பாடுகள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதற்கு இது ஒரு சான்று.

அகதியன்

பிரான்ஸ் சிலம்பு அமைப்பினர் ஏற்பாடு செய்த 'இன்னியமாலை' பார்வையாளர்களை ஈர்த்த மாலையாக அமைந்தது. 09-04-2006 ஞாயிறு அன்று பாரிசில் இரண்டு பிரிவுகளை கொண்டதான இம்மாலை இரு பிரதான நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்தது. ஆடம்பரமோ ஆரவாரமோ இல்லாத இந்நிகழ்வு வந்திருந்தோரின் விழிகளை விரியப்பண்ணி வியக்க வைத்தது. கண்காட்சியாக விரிக்கப்பட்டிருந்த அரிய சேகரிப்புகளான நாணயங்கள் முத்திரைகள் பத்திரிகைகள் என்பவற்றை யேர்மனியில் வாழும் நம்மவர் ஒருவர் சேகரித்து வருகிறார் என்பதே அவ்வியப்பிற்குரிய காரணமாகும். எம்மவர் நிகழ்வுகள் அகவணக்கத்துடன் ஆரம்பிப்பது வழமை. அதுபோலவேதான் அன்றும் அகவணக்கம் மக்கள விளக்கேற்றல் என்ற ஆரம்ப விழிமியங்களுடன் ஆரம்பித்தது. மேற்படி இன்னிய மாலை நிகழ்வினை சிலம்பு அமைப்பின் செயலாளர் திரு க.முகுந்தன் அவர்களும் துணைச் செயலாளர் செல்வன் பிரசாந்தும் இணைந்து தமிழிலும் பிரெஞ்சிலும் தொகுத்து வழங்கினர். சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட நகரசபை உறுப்பினரும் தமிழ் சமூக ஆர்வலருமான திரு.அலன் ஆனந்தன் கண்காட்சியை திறந்து வைத்து இன்னிய மாலைக்குள் அழைத்துச் சென்றார். அவர் தனது உரையில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து இளைஞனான அன்ரனின் தனித்த உழைப்பினால் சேகரிப்பட்டவற்றை காண்கையில் மெய் சிலிர்க்கினறது. இவற்றின் பெறுமதி கணக்கிட முடியாதவை. ஈழத்தமிழர்கள் தம்மால் எதனையும் சாதிக்க முடியும் என்பதற்கு இது சான்றாக இருக்கின்றது எனப் புகழ்ந்துரைந்தார். கண்காட்சியை பார்வையிட்டவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு அன்ரன் பதிலிறுத்தார்.

கண்காட்சியில் பண்டைய நாணயங்கள், தாள் காசுகள் என்பனவும் தபால் முத்திரைகள்இ முதல்நாள் உறைகள் என்பனவும் பத்திரிகைகள் சஞ்சிகைள் மற்றும் கருத்துச் சித்திரங்கள் என்பற்றின் தொகுப்பும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அதன்பின் அப்பால் தமிழ் இணைத்தளத்தின் நெறியாளர் கி.பி.அரவிந்தன் கண்காட்சியில் வைக்கப்பட்டிருப்பவற்றில் அரிய நாணயங்கள் பற்றி எடுத்துரைத்தார். அவரது எடுத்துரைப்பில் யாழ்பாண அரசு காலத்திய நாணயங்கள் இருப்பதையும் ஒல்லாந்து கால நாணயங்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டியதுடன் ஐந்து சதம்இ பத்து சதம் என்பவை நாணயங்களாக இல்லாது தாள்களாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார். அத்துடன் அன்ரன் அவர்களையும் அறிமுகம் செய்து வைத்து அன்ரனை உரையாற்றும்படி கேட்டுக்கொண்டார். அன்ரன் தனது உரையில் தான் பொழுதுபோக்காக தொடங்கிய இந்த சேகரிப்பு இன்று பலரையும் ஆச்சரியப்பட வைத்திருப்பது தனக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருவதாக கூறினார். அத்துடன் தனது பெற்றோர் சகோதரர்கள் துணைவியார் தந்த ஒத்துழைப்பும் ஆதரவுமே தொடர்ந்து இதில் ஈடுபட வழிவகுத்தது என்றும் அவ்வகையில் அவர்களுக்கு தான் நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் தனது சேகரிப்புகள் தனக்குப்பின் யாழ்பாண நுலகத்திற்கு வழங்க விரும்புவதாகவும் உணர்ச்சி வசப்பட கூறினார்.

அடுத்த நிகழ்வாக சஞ்சீவ்காந்தின் உராய்வு கவிதை நூல் அறிமுகம் இடம்பெற்றது. இதனை கவிஞரும் ஈழமுரசு ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவருமான மாணி.நாகேஷ் அறிமுகம் செய்துவைத்தார். அவர் தனது அறிமுக உரையில் 12வயதில் சிறுவனாக யேர்மனிக்கு வந்தடைந்த சஞ்சீவ்காந்த் அந்நியமொழிக் கல்விச் சூழலிலும் தமிழில் கவிதை எழுத முனைந்தனை பாராட்டினார். இந்த தலைமுறையினர் தமிழில் எழுதுவதையும் சிந்திப்பதையும் நாம் உற்சாகப்படுத்த வேண்டியது கடமை என்றும் சுட்டிக்காட்டினார். வளரும் இளந்தலைமுறையினர்க்கு இவரொரு முன்மாதிரியாக விளங்குகிறார் என்றும் புகழ்ந்துரைத்தார். சஞ்சீவ்காந் தனது ஏற்புரையில் கவிதை பற்றிய விமர்சனங்களை தயங்காது முன்வைக்கும்படியும் அதுவே தன்போன்றோர் வளர உதவும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அவருடைய உராய்வு கவிதை நூலை பார்வையாளர் வரிசையில் நின்று வாங்கிச் சென்றதுடன் கவிஞரான அந்த இளைஞனின் கையெழுத்தை நூலில் வாங்குவதிலும் ஆர்வம் காட்டினர்.

எமது பண்டைய கலையான நாட்டுக்கூத்தின் ஒருபகுதியான வரவேற்புக்கூத்து ஒன்று ஆனந்தன் குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. அதன்பின் எம்மிடையே புரையோடிப்போன சாதியம் வெளிப்படும் முறையையினை அம்பலப்படுத்தும் எம்.அரியநாயகத்தின் 'விளம்பரம்' என்ற ஓரங்க நாடகம் கலைஞர்கள் இரா.குணபாலன் மற்றும் லீனா ஆகியோரின் நடிப்பில் மேடையேறியது. திருவாளர்கள் ஒகஸ்ரின்இ பீ்ற்றர் ஆகியோரின் பாட்டும் பாவமும் என்ற நிகழ்வும் நடாத்தப்பட்டது.

இரண்டாவது அரங்கான திரையிடலில் இன்னிய அணி பற்றியதான விவரணமும்இ கிச்சான்இ பேரன்பேர்த்தி ஆகிய குறும்படங்களும் காண்பிக்கப்பட்டன. இந்நிகழ்வில் சிறப்புரையாற்ற இருந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை பீடாதிபதி பாலசுகுமார் இலங்கையில் இருந்து வந்து சேராமையால் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டபடி சிறப்புரை இடம்பெறாது என்பதற்கான வருத்தத்தினை க.முகுந்தன் சபைக்கு தெரிவித்தார்.

-சிவலிங்கம் சிவபாலன்

நன்றி: அப்பால்-தமிழ்

பிகு: ஈழமுரசு (101) இதழிலும் பதிவாகியுள்ளது

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வணக்கம் அனைவருக்கும்,

உராய்வு கவிதைத் தொகுப்பை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் பின்வரும் இடங்களில் அல்லது கீழ்க் குறிப்பிடும் நண்பர்களுடனோ தொடர்புகொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்:

பிரான்ஸ்:

பாரிசில் உள்ள நான்கு புத்தகக் கடைகளிலும் உராய்வு தொகுப்பை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக அறிவாலயம் மற்றும் தமிழாலயம்.

கனடா:

கனடாவில் உராய்வு கவிதைத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் யாழ் கள உறுப்பினர் "ரமா"வுடன் தொடர்புகொள்ளவும்.

நோர்வே:

நோர்வேயில் கவிதைத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் Jaffna food அல்லது நெய்தல் மக்கள்கடை Kalbakkan ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது யாழ் களப்பொறுப்பாளர் மோகன் அண்ணாவுடன் தொடர்புகொள்ளவும்.

இங்கிலாந்து:

இங்கிலாந்தில் பெற்றுக்கொள்ள விரும்புவோர் யாழ் கள உறுப்பினர் "மதன்" உடன் தொடர்பு கொள்ளவும்.

யேர்மனி, இலங்கை, மற்றும் ஏனைய நாடுகளிலும் பெற்றுக்கொள்ள விரும்புவோர் என்னுடன் தொடர்புகொள்ளவும்.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.