Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடாவில் அடங்காபற்று ஒத்திவைக்கபட்டுள்ளது

Featured Replies

இதில வாற கருத்துக்களைப் பார்த்தா எல்லாரும் சேர்ந்துதான் நாட்டியம் போட வெளிக்கிட்டிருக்கினம். அதற்குள்ள ஒரு குழு முந்திட்டுது. மகளிர் அமைப்புக்கள்.. இந்த நாட்டியம் மூலம்.. எமக்கு விடுதலை பெற்றுத் தரும் என்றால்.. நல்லாப் போடட்டும் விடுங்கள். மகளிர் அமைப்புக்கள் வன்னியில் இராணுவம் அடைத்து வைத்துள்ள மகளிரை இந்த நாட்டியங்களை ஆடிக் காப்பாற்றும் என்றால் நல்லா போடட்டும் விடுங்கள்.

இதில் பகிரப்படும் கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால் இப்படி ஒரு நிகழ்வை நடத்த (தாயகச் சூழலையும் பெரிதுபடுத்தாமல்.. இரண்டு தாயகப் பாடலுக்கு ஆடிட்டு.. அப்புறம் சினிமாவுக்கு ஆடுறதுதானே.. தாயகப்பற்று.! ம்ம்.. நல்லா வேசம் போடுறாங்க.. எப்பதான் கழன்று கொட்டுனப் போகுதோ..??! ) எல்லோரும் துணை போயிருக்கினம்.. சிலர் முந்திக் கொண்டுட்டினம்.. சிலர் தங்களில பிழை வந்திடக் கூடாது என்று நினைக்கினம்.

எவரும் வன்னியில் தென் தமிழீழத்தில் மகளிரின் நிலைக்காக வருந்துவதாகத் தெரியவில்லை. இவர்களுக்கு ஏன் ஒரு மகளிர் அமைப்பு. நாட்டியம் போடவா..???! :o :o :D

வன்னியில் பெண்கள் இராணுவ விலங்குகளுக்கு இரையாகிறார்கள். தெந்தமிழீழத்தில் சிறுமிகள் கூலிகளுக்கு இரையாகிறார்கள்.. இவற்றை உலகின் கண்களின் முன்னிறுத்த எவரும் இல்லை.. ஆனால் நாட்டியம் போட மட்டும்.. ஆயிரத்தெட்டு மகளிர் அமைப்புக்கள். பெண்ணியம்.. பொடியியம் பேச மட்டும் கூட்டம் போடுவார்கள். குடுமியா.. சவரி முடியா பெண்களுக்கு வசதி என்று ஆராய்ச்சி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால்.. ஆமிக்காரன்.. செய்யிற கொடுமையை உலகின் கண்களின் முன்னிறுத்த ஆக்களில்ல.. குங்குமப் பொட்டுக்கும்.. தாலிக்கும் விடுதலை வாங்க பலர் வரிஞ்சு கட்டிக் கொண்டு பக்கம் பக்கமாக எழுத இருக்கிறார்கள்..! ஆனால் ஊரில் வதை முகாம்களுக்குள் கிடக்கும் பெண்களுக்கு விடுதலை கேட்க யாரும் இல்லை..! இவர்கள் மகளிரா.. ஏன் மனிதரா..???! :o :o :D

மன்னிக்கவும் நெடுக்ஸ்... இதனை நடாத்தியது எந்த மகளிர் அமைப்பும் அல்ல....ஆனால் ஒரு சில உறுப்பினர்களின் பிள்ளைகள் இதில் இடம்பெற்றிருந்தனர். இதனைப் போன்று பல நிகழ்வுகள் சிறு பிள்ளைகளை வைத்து நடாத்த்த முன்னர் ஒழுங்கு செய்யப்பட்டு பின் அனைத்தும் நிறுத்தப் பட்டன, இந்த நிகழ்ச்சி நீங்கலாக....... இப்படியான நிகழ்வினை ஒழுங்கு செய்ததில் புலிகள் பெயரைச் சொல்லித் திரிந்த முன்னனி அமைப்புகளும் அடங்கியிருந்தன

கனடாவின் மகளிர் அமைப்புகள் பல, கடும் குளிர் காற்று என்பனவற்றின் மத்தியிலும் நின்று பல நூற்றுக் கணக்கான போராட்டங்களை நடாத்தி வருகின்றன. இளையோர் சமூகத்தின் போராட்டத்திற்கு பக்க பலமாக நின்று தம் முழு பங்களிப்பையும் தருகின்றன. மேலே சொல்லப் பட்ட ஒரு சில உறுப்பினர்கள் போன்று எல்லா அமைப்புகளிலும் சிலர் இருக்கத்தான் செய்வர். அவர்களின் முகத்திரையை கிழித்து மக்களுக்கு இனம் காட்டினால் போதும்....

Edited by நிழலி

லோயர்,

அடங்காப் பற்றை ஒத்திவைத்ததன் காரணம் காவல்துறையினர் தான் என்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. காவல் துறையின் அனுமதி பெறாமல் இவர்கள் இத்தனை ஏற்பாடுகளையும் செய்தார்கள் என்பதை நம்பவே முடியாது..... சரி, அது தான் காரணம் என்றால் மக்கள் எல்லாரையும் உண்ணாவிரதம் இருக்கும் குயின்ஸ் பார்கிற்கு வரச்சொல்லி இருக்கலாம் தானே? ஏன் அவர்களால் அப்படி அறிவிக்க முடியவில்லை? ஏனெனில்...அவர்களுக்கு பிடித்தமானவர் அல்ல அங்கு உண்ணாவிரதம் இருப்பது... யார் பெரியவர் என்ற பாழாய்ப் போன போட்டி எண்ணங்களும் சுயலாப நோக்கான குறுகிய எண்னங்களும் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட தடுத்தன. அப்படி அறிவித்து இருந்தால் உண்ணாவிரத போராட்டமே பெரும் ஆதரவினை பெற்று வெற்றிகரமானதாக அமைந்திருக்கும்

காவல் துறைதான் காரணம் எனில் அதனை வெளிப்படையாக தமிழ் மக்களுக்கு அறிவிப்பதில் என்ன நட்டம் வந்தது இவர்களுக்கு? அப்படி அறிவிப்பது, பொலிசுடன் விரும்பத்தகாத பிரச்சனைகளை ஏற்படுத்த முனையும் பேர்வழிகள் பற்றிய நல்ல விழிப்பை மக்களுக்கு ஏற்படுத்தகூடிய சந்தர்ப்பமாக அல்லவா இருக்கும்?

நடன நிகழ்வை குறிப்பிட வேண்டி வந்ததன் காரணம், இத்தகைய பேர்வழிகளின் முகத்திரையை கிழிப்பதற்காகவே. தமிழ் தேசியத்தின் பெயரால், தமக்கு லாபம் வராத விடயங்களை எதிர்த்து கொண்டு, தமக்கு லாபம் வரக்கூடிய வகைகளை செய்யும் இந்த பேர்வழிகளினால்தான் எம் போராட்டம் பல்லாண்டுகளாக நீடித்து கொண்டு ஈற்றில் ஒட்டுமொத்த வன்னி மக்களிற்கும் சவக்குழிகளை கிண்டிக் கொண்டூ இருக்கின்றது. இத்தகைய பேர்வழிகளை பற்றி மக்களிற்கான ஊடகங்களில் எழுதுவதை ஏன் விமர்சிக்க முயல்கின்றீர்கள். ஒற்றுமை என்பது போலிப் பேர்வழிகளினுடனும் ஒத்துப் போவது அல்ல. இத்தகைய பேர்வழிகளின் ஆட்டம் இன்னும் தொடருமாயின் கனடா எங்கும் இவர்களின் முகத்திரையை கிழிக்கும் போஸ்ரர்களை வெகு விரைவில் காணலாம் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

தலைவர் பிரபாகரன் அவர்கள், புலம் பெயர் நாடுகள் எங்கும் போராட்டத்தினை இளையோர்கள் முன்னெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கேற்றால் போல் இளையோர்கள் அணிதிரண்டு வருவதை பிடிக்காத ஒரு கூட்டம் தான் இந்த பிரச்சனைகளை ஏற்படுத்து கின்றது. ஏனெனில், இளையோரின் தன்னலமற்ற அணிதிரள்வினால் தம் தமிழ் தேசியத்தின் பெயரால் செய்யும் வயிற்றுப் பிழைப்புக்கு பங்கம் வந்துவிடும் என்ற பயம். அத்தகையவர்கள் தான் ஒரு நூறு பேரை வைத்து கொண்டு செய்ய சாத்தியமே இல்லாத சாலை மறியலை செய்ய முயன்று காவல்துறையினருடன் இளையோர்களை மல்லுக் கட்ட வைத்து அவர்களின் அணிதிரள்வின் மீது சேறு பூசினர்

சரியானபாதையில்தான் செல்கிறீர்கள்.

தலைவர் பிரபாகரன் அவர்கள், புலம் பெயர் நாடுகள் எங்கும் போராட்டத்தினை இளையோர்கள் முன்னெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கேற்றால் போல் இளையோர்கள் அணிதிரண்டு வருவதை பிடிக்காத ஒரு கூட்டம் தான் இந்த பிரச்சனைகளை ஏற்படுத்து கின்றது. ஏனெனில், இளையோரின் தன்னலமற்ற அணிதிரள்வினால் தம் தமிழ் தேசியத்தின் பெயரால் செய்யும் வயிற்றுப் பிழைப்புக்கு பங்கம் வந்துவிடும் என்ற பயம். அத்தகையவர்கள் தான் ஒரு நூறு பேரை வைத்து கொண்டு செய்ய சாத்தியமே இல்லாத சாலை மறியலை செய்ய முயன்று காவல்துறையினருடன் இளையோர்களை மல்லுக் கட்ட வைத்து அவர்களின் அணிதிரள்வின் மீது சேறு பூசினர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[நிழலி சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன். நண்பர்களே கனடாவில் நிறைய துரோக குழுக்கள் இருப்பது உள்ளங்கை புண். இந்த போராட்டத்தை எந்த பதவிக்கும் ஆசைப்படாத நம் மாணவர்கள் எடுத்து நடத்திக்கொண்டு இருப்பதை பொறுக்க முடியாத துரோகிகள் வேலை இது.

இனயும் நம் பொறுத்து போக முடியாது. உலகம் முழுவதும் நடக்கிறது ஆனால் கனடா.

இங்கு தலைமைக்கு நிற்கும் அந்த ........................... தேவை conservative,liberal,.NDP ஒன்றில் கிடைக்கும் எம்பி சீட். கெட்ட கெட்ட வார்த்தையால திட்டத்தான் வருகிறது.

நாம் எமது நாட்டு மக்களுக்காக குரல் கொடுப்பதை எந்த துரோகி நாயும் தடுக்க முடியாது.

city இடம் அனுமதி வாங்கி மாணவரே தொடருவோம் போராட்டத்தை.

இனியும் நாம் பொறுமை காப்பதில் அர்த்தம் இல்லை.

உணர்வுள்ள ஒவ்வொருவனும் வருவான். எவன் தடுக்கிறான் பார்போம்.

புலி தோல் போர்திய நரிகள் இங்கே இருக்குது.

தோல் உரித்து காட்டுவோம். வாருங்கள். வாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி நீங்கள் கூறுவதில் உண்மையிருந்தாலும், சில மறைமுகமான சதிகளும் நடந்துள்ளன.

மகளிர் அமைப்பைச்சார்ந்த பல உறுப்பினர்களும் இதில் உடந்தையாக இருந்துள்ளார்கள் என்பதும் உண்மைதான்.

மற்றதாக ஈழினி நீங்கள் கூறுவதுபோல் துரோகக்குழுக்களின் சதி என்றும் இதை கூறமுடியாது கிட்டத்தட்ட இதுவொரு உள் வீட்டுச்சதிபோல்தான் தோன்றுகின்றது.

இதைப்பற்றிய பல சம்பவங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன, இவைபற்றி விவாதிப்பதிற்குரிய நேரம் இதுவல்ல என்ற காரனத்தால் சில விடயங்களை அடக்கி வாசிக்கவேண்டியுள்ளது.

ஆனால் சந்தர்ப்பம் வரும்போது ..........எல்லாம் வெளியில் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நிழலி அவர்களே, எத்தகைய செய்தி எண்டாலும் ஆதராபூர்வமாக தெரிந்துகொண்டாலும், ஏவள், இடம் பொருள் தெரிந்து கதைக்கபாருங்கள், இப்படி வெளிப்படையாக ஊடகங்களில் உங்களுக்கு தெரிந்தவற்றை பொறுக்கி வீசாதீர்கள், எம் தமிழருக்குள் ஒற்றுமை இல்லை எண்டது உலகறிந்த உண்மை, இப்பொழுது பிரச்சினை யார் பெரிது எண்டது இல்லை, வன்னியில் உள்ள மக்களின் எமது உறவுகளின் உயிர்களே, கனடாவில் 3 நேரமும் மூக்குமுட்ட வெட்டிவிட்டு அரங்கேற்றம் செய்து தொழில் சம்பாதிக்கும் மக்கள் பற்றியது அல்ல,

ஒரு வேளை நீங்கள் மேலே கூறிய செய்திகள் 100% உண்மை எனில் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? மறைக்க வேண்டியவற்றை மறைத்து, எமது மக்களை எவ்வாறு ஒன்று சேர்க்க வேண்டும் என்பதை பற்றி கதைச்சிருக்கவேண்டும், இப்ப்பொழுது நீங்கள் செய்யும் செய்கையால் மக்களிடையே மேலும் பிளவை உண்டுபன்ணுகிறீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றதாக ஈழினி நீங்கள் கூறுவதுபோல் துரோகக்குழுக்களின் சதி என்றும் இதை கூறமுடியாது கிட்டத்தட்ட இதுவொரு உள் வீட்டுச்சதிபோல்தான் தோன்றுகின்றது.

வீட்டில் இருப்பவர்களே சதி செய்தல் அது தான் துரோகம் வல்வை மனிதா. இவர்களால் தானே பிரச்சினை. அல்லது எப்பவோ தமிழ் ஈழம் கிடைத்திருக்கும். எதனை துரோகிகளை தான் தலைவரும் சமாளிப்பது.

கடந்த மாவீரர் நாள் உரை போதும் நம் தலைவரின் தீர்கதரிசனாதிற்கு..

எங்கள் தலைவன் எல்லாமும் ஆனவன்.

ஐயா நிழலி அவர்களே, எத்தகைய செய்தி எண்டாலும் ஆதராபூர்வமாக தெரிந்துகொண்டாலும், ஏவள், இடம் பொருள் தெரிந்து கதைக்கபாருங்கள், இப்படி வெளிப்படையாக ஊடகங்களில் உங்களுக்கு தெரிந்தவற்றை பொறுக்கி வீசாதீர்கள், எம் தமிழருக்குள் ஒற்றுமை இல்லை எண்டது உலகறிந்த உண்மை, இப்பொழுது பிரச்சினை யார் பெரிது எண்டது இல்லை, வன்னியில் உள்ள மக்களின் எமது உறவுகளின் உயிர்களே, கனடாவில் 3 நேரமும் மூக்குமுட்ட வெட்டிவிட்டு அரங்கேற்றம் செய்து தொழில் சம்பாதிக்கும் மக்கள் பற்றியது அல்ல,

ஒரு வேளை நீங்கள் மேலே கூறிய செய்திகள் 100% உண்மை எனில் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? மறைக்க வேண்டியவற்றை மறைத்து, எமது மக்களை எவ்வாறு ஒன்று சேர்க்க வேண்டும் என்பதை பற்றி கதைச்சிருக்கவேண்டும், இப்ப்பொழுது நீங்கள் செய்யும் செய்கையால் மக்களிடையே மேலும் பிளவை உண்டுபன்ணுகிறீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்கவும்.

ஐயா டன்ங்கிளாஸ் அவர்களே... யாரிற்கு மறைக்கச் சொல்கின்றீர்கள்? இவர்களை நம்பி ஏமாந்து போய் கிடக்கும் மக்களுக்கா? மக்களுக்கு உண்மையை மறைத்து தத்தம் லாபங்களுக்காக இளையோர் சமூகத்தின் எழுச்சியினை அடக்க முனனயும் இவர்களை இனம் காட்டாமல் ஈழத்தில் இருக்கும் மக்களுக்கான போராட்டம் வெற்றியளிக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள். பிளவை உண்டு பண்ணக் கூடாது என்பதன் அர்த்தம் இளையோர் சமூகத்தின் போராட்டத்தினை முடங்கச் செய்பவர்களுக்கு ஒத்து ஊதுவது அல்ல

புலம் பெயர் தேசமெங்கும் இளையோர் சமூகத்தின் எழுச்சியான போராட்டத்தினை சரியாக முன்னெடுக்க எல்லோரும் பாடுபடும் போது கனடாவில் மட்டும் அதனை முற்றாக முடக்க எடுக்கும் செயல்களைப் பார்த்தும் மெளனமாக இருத்தலே ஒற்றுமையின் அடையாளம் என்கின்றீர்களா?

எதற்கும் நீங்கள் லண்டனில் இருந்து இங்க ஒருக்கா வந்து பாருங்கள்... என்ன நடக்கின்றது என்பதை புரிய முடியும்.

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி நீங்கள் யாருக்கும் பயபடதேவை இல்லை. உங்கள் கருத்துக்கு நான் முழு ஆதரவு தருகிறேன். அடக்கி வைத்த கோபம் எல்லாம் இப்போ yarl.com மூலமாக தான் நானும் கொண்டு வருகிறேன். தேவை இல்லாம இந்த சதிகரருக்காக நான் ஏன் என் பிபி யை கூட்டுவான்.

ஒரு மாதிரி கொடியை முடகினர்கள். இப்போ மனித சங்கிலி? இனி??????????????? வன்னியில் எங்கள் உறவினர் இருந்தால் தான் எங்களுக்கு துடிக்க வேண்டுமா. எமது இனம். தமிழ் நாடு மக்களுக்கு இருக்கும் உணர்வு கனடிய தமிழா உனக்கு எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி நீங்கள் யாருக்கும் பயபடதேவை இல்லை. உங்கள் கருத்துக்கு நான் முழு ஆதரவு தருகிறேன். அடக்கி வைத்த கோபம் எல்லாம் இப்போ yarl.com மூலமாக தான் நானும் கொண்டு வருகிறேன். தேவை இல்லாம இந்த சதிகரருக்காக நான் ஏன் என் பிபி யை கூட்டுவான்.

ஒரு மாதிரி கொடியை முடகினர்கள். இப்போ மனித சங்கிலி? இனி??????????????? வன்னியில் எங்கள் உறவினர் இருந்தால் தான் எங்களுக்கு துடிக்க வேண்டுமா. எமது இனம். தமிழ் நாடு மக்களுக்கு இருக்கும் உணர்வு கனடிய தமிழா உனக்கு எங்கே?

ஈழினி இந்த தேசியக்கொடி முடக்கம் என்றவுடன் என்னை அறியாமலே ஒரு கோபம்தான்.

ஜனவரி மாதம் 10ந்திகதி செய்தியாக இந்த ஆக்கத்தை நான் பதிவு செய்திருந்தேன் அதாவது தேசியக்கொடியை பின்தள்ளியிருந்த சந்தர்ப்பத்தில்.

இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் எமது மக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அறவழிப்போராட்டங்கள் விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கக்கூடியவையா? அல்லது தமிழ்தேசியத்திற்கு எதிரானவர்களின் பிரச்சாரத்திற்கு ஒத்துப்போகின்றனவா?

இப்போது வரும் ஆக்கங்களையும், செயல்பாடுகளையும் பார்க்கும்போது விடுதலைப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஸ்ரீலங்கா உட்பட உலகநாடுகள் எல்லாம் எதை எதிர்பார்த்தார்களோ அதற்குத்தான் நாமும் முன்னுரிமை கொடுப்பது போன்ற ஒரு தோற்றப்பாடு தோன்றியுள்ளது.

அதாவது எமது மக்களின் இன்றைய அவலத்தை நான் புரியாதவனுமல்ல, உணராதவனுமல்ல ஆனால் மக்களிடம் இருந்து விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தும் எதிர்த்தரப்பின் செயல்பாடுகளில் தான் நாங்களும் இப்போது ஈடுபடுகின்றமாதிரி தோன்றுகின்றது.

இன்று வெளிவரும் அறிக்கைகளும், கோசங்களும் ஆக்கங்களும் விடுதலைப்புலிகள் பலவீனமாகிவிட்டார்கள,; இனிமேல் நீங்கள் தான் எமது மக்களை காப்பாற்றவேண்டும் என்ற தொனிப்பில், தமிழர்களை அழிக்கவேண்டும் என்று யார், யாரெல்லாம் துடிக்கின்றார்களோ அவர்களையே நோக்கியதாகவே உள்ளது.

இந்த செயல்பாடுகள் எல்லாம் நாம் என்ன செய்கின்றோம் என்று புரிந்துகொண்டுதான் செய்கின்றோமா?

இப்போது வெளிவரும் ஆக்கங்களிலோ அல்லது எங்களின் செயல்பாடுகளிலையோ போராட்டத்தின் நியாயப்பாடுகள் மிக குறைவாகவே முன்னிலைப் படுத்தப்படுகின்றன.

விடுதலைப்புலிகள் தான் எங்களது உண்மையான தலைமை என்ற கருத்தை நாம் இப்போது உச்சரிப்பதில்லை. இதன்பிரகாரம் எமது பொது எதிரியின் தேவையுடன் நாமும் ஒத்துப்போகின்றோமா?

கிட்டத்தட்ட 22,000 போராளிகளையும், பல்லாயிரக்கணக்கான மக்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்து, எத்தனையோ சோதனைகளையும், வேதனைகளையும் சகித்துக்கொண்டு எமது மக்களின் விடிவுக்காக தங்களது சுகபோகங்களை எல்லாம் இழந்து, புலம்பெயர்ந்து வாழும் எங்களையே நம்பி போராடிவரும் எங்கள் தேசிய இயக்கத்திற்கு நாம் செய்துவரும் நன்றிக்கடன் இதுதானா?

அந்தந்த நாடுகளின் சட்ட திருத்தங்களிற்கு கட்டுப்பட்டுத்தான் நாம் செயல்படவேண்டும் என்ற நியாயப்பாட்டை நாம் முன்வைக்கலாம்.

ஆனால் ஜனநாயக நாடுகளிலை எங்களை கட்டாயப்படுத்தி யாரும் எதையும் எங்களுக்கு திணிக்கமுடியாது அதைப்போல் எங்களுடைய கருத்துச் சுதந்திரத்தையும் யாரும் கட்டுப்படுத்தவும் முடியாது.

மனம்வைத்தால் அதைப்போல் உண்மையான உணர்வும் இருந்தால் உந்த சட்ட திருத்தங்களாலை எங்களை யாராலும் தடுக்க முடியாது என்பது தான் உண்மை.

யாரினதும் மனதை புண்படுத்துவதோ அல்லது இங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் அமைதி வழிப்போராட்டங்களை இழிவு படுத்துவதோ எனது நோக்கம் அல்ல.

அதாவது அகதிகளை எப்படி பாதுகாப்பது என்பதுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போல் அகதிகள் உருவாகாமல் பண்ணுவது எப்படி என்பதுக்கும் அதிகம் கவனம் செலுத்த முயற்சி பண்ணவேண்டும் என்பதை கவனத்தில் கொள்வோமாக.

இணைவோம் தமிழராய்!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50550&hl=

பெப் 22ந் திகதி அதாவது தேசியக்கொடிக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் என்னால் பதியப்பட்ட ஆக்கம்.

இறுதியான தீர்வு தமிழீழம் தான்!

நாம் ஜக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகளை நோக்கி புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் மேற்கொள்ளும் அறவழிப்போராட்டங்களை இன்னும் தீவிரப்படுத்தவேண்டும்.

இறுதியாக இடம்பெற்ற அறவழிப் போராட்டங்களிற்கும் சில தினங்களிற்கு முன்பு இடம்பெற்ற போராட்டங்களிற்கும் இடையில் நிறைய வித்தியாசங்களும் முன்னேற்றங்களும் இருக்கின்றன.

இதையே நான் எதிர்பார்த்து ஒரு ஆக்கத்தை யாழில் பதிவு செய்திருந்தேன் அதில் நான் எதிர்பார்த்த குறை இப்போது நீங்கிவிட்டதாகவே உணருகின்றேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50550&hl=

அதாவது தற்சமயம் இடம்பெறும் அறவழிப்போராட்டத்தில் இடம்பெறும் கோசங்கள் தமிழ்த்தேசியம் மற்றும் தேசியத்தின் தலைமை சம்பந்தமாக மட்டுமன்றி எங்களது தேசியக்கொடியும் அதிகளவில் இந்த போராட்டங்களில் காணக்கூடியதாகவுள்ளது.

உலகமே அதாவது எங்களுடைய மக்களை அழிப்பதிற்கு ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளுக்கு சகல உதவிகளையும் செய்துகொண்டிருக்கும் சர்வதேசங்களே!

எங்களுடைய மக்களை காப்பாற்றுங்கள், யுத்த நிறுத்ததிற்கு ஸ்ரீலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுங்கள் என்ற கோரிக்கைகளை மட்டுமே அதிகமாக காணக்கூடியதாக இருந்தது.

தமிழ்த்தேசியக்கொடியோ, அல்லது விடுதலைப்புலிகள் சம்பந்தமான உச்சரிப்புக்களோ, அல்லது எங்களது உறுதியான, இறுதியான தீர்வு தமிழீழம் தான் என்ற கருத்துக்களுக்கோ முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

ஆனால் இன்றைய நிலைப்பாடுகளில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் திறமையையும், அரசியல் அனுபவத்தையும் பார்க்கின்றபோது பாராட்டாமல் இருக்க முடியாது.

தமிழர் தரப்பினர் தங்களது தேசியப் போராட்டத்தினை சர்வதேச நடைமுறைகளுக்குத் தக்கமாதிரி நெழிந்து சுழிந்து சரியான பாதையில் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை எல்லாத்தரப்பினரும் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆகவே எங்களுக்குள் இருந்த சிறு, சிறு முரண்பாடுகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நாம் தமிழர் என்ற தேசிய ரீதீயாக சிந்தித்து ஒரே குடையின் கீழ் இணைவோம், வெற்றி நிச்சயம் என்ற எண்ணத்தோடு ஒரே அணியாக திரள்வோம், விடுதலைப் புலிகள்தான் எங்கள் தலைமை என்பதை ஏற்றுக்கொண்டு போராடுவோம், தமிழீழம் கிடைப்பதை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது என்பதை வரலாறு சொல்லட்டும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=52972&hl=

இதற்குபின்பு மீண்டுமொரு முறை தமிழ்த்தேசியக்கொடி பின் தள்ளப்பட்டிருந்ததை பார்த்தபோது!

Edited by Valvai Mainthan

புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களை குழப்ப சதி: விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை [வியாழக்கிழமை, 07 மே 2009, 08:46 மு.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]

தாயகத்தில் இடம்பெறும் சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு எதிராகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களைக் குழப்பும் வகையில் சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் ஆதரவுடன் சில சக்திகள் செயற்படுவதாகவும் இதனையிட்டு விழிப்பாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா, இந்திய அரசுகளின் புலனாய்வு அமைப்புக்கள் அல்லது இராணுவத் துணைப்படைகளுடன் இணைந்து வெளிநாடுகளில் செயற்படும் சில தமிழர்கள், தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களுக்கு எதிராக சில சதி நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு முயற்சி செய்துவருவதாக தகவல் கிடைத்திருப்பதாக புலம்பெயர்ந்த தமிழர்களின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்போடு கதைப்பது அனைவருக்கும் நன்று.

குயின்ஸ் பார்க்கில் நடக்கின்ற நிகழ்வுக்கு எத்தனை பேர் போகின்றார்கள்?? கலந்து கொள்கின்றார்கள்...

நிழலிக்கு ஒரு விடயம் சொல்ல வேண்டும். இளையோர்கள் தனித்துவமாக இயங்கினாலும், அவர்கள் மற்றவர்களோடு இணைந்தே செயற்படுகின்றார்கள் என்றே நான் நம்புகின்றேன். எனவே, நீங்கள் பிரச்சனையைத் தூண்டும் வகையில் நடப்பது சரியல்ல... ஆனால், ஒரு பிரச்சனை நடக்கின்றது.... வாறவன் போறவன் எல்லாம் தாங்கள் ஏதோ இளையோர் சார்ந்த அமைப்பின் பெயரைச் சொல்லிக் கொள்கின்றான்.

உண்மையில் பார்த்தால் அப்படி யாருமே உறுப்பினராக அறியவில்லை....

நேற்றும் கூட தாங்கள் இளையோர் சார்ந்த அமைப்பு என்று யாரோ பிரச்சனை. ஆனால் ஆளைப் பார்த்தால் 35,40 வயதிருக்கும்.... அதை விடத் தாடியோடு...

நீங்கள் எவ்வளவு குறைவாக அங்கு நிற்கின்றீர்களோ, அதை எதிரி நிரப்பிக் கொள்கின்றான். முதலில் அதை நிறைவு செய்யுங்கள்.

வேறு வேலையில்லாமல் இளையோர்களோடு, வேறு யாரையும் சீண்டி முடிகின்ற வேலை வேண்டாமே... ஆனால் இளையோர் என்று சொல்லிக் கொண்டு யாராவது திரிந்தால் அவர்கள் குறித்த சந்தேகங்களைக் குறித்தவர்களுக்குத் தெரிவியுங்கள்.... அது தான் தேவையும் கூட

நிழலி, உங்கள் கருத்தோடு நானும் உடன்படுகிறேன். தங்களின் சுயலாபத்திற்காக, இளையோர்களின் கை ஓங்கிவிடக்கூடாது என்பதற்காகத் திட்டமிடப்பட்டுச் செய்த சதியே இது. இளையோர்களுக்கும் காவல்துறையினருக்கும் பிரச்சனைகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில், அமைப்பைச் சேர்ந்தவர்களும் அங்கிருந்தார்கள். ஆனால், அவர்கள் எதுவும் செய்யாமல் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்குக்கூட அவர்கள் முயற்சிக்கவில்லை. அதுமட்டுமின்றி, இரவுநேரங்களில் இவர்களையோ அல்லது இவர்கள் சம்பந்தப்பட்ட ஊடகங்களைச் சேர்ந்தவர்களையோ காணமுடிவதில்லை. ஆனால் வேடிக்கை என்னவென்றால், அந்த ஊடகங்களில் தாங்களும் இரவிரவாக அங்கிருந்தார்கள் என்று பேட்டி வேறு கொடுப்பார்கள்.

நீங்கள் குறிப்பிட்ட அந்த நடனநிகழ்ச்சி 'பரதநாட்டிய நிகழ்ச்சி' அல்ல. அது 'பறைநடனநிகழ்ச்சி'. ஏனெனில், தாயகத்தில் அன்றாடம், உடல்கள் கருகிவிழ, அதைக் கொண்டாடுவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியல்லவா? 'பறைநடனமும்' எமது கலைகளில் ஒன்றுதானே? ஆகவே, அந்தக் கலையை முன்னெடுத்த அந்த இளைய நடனஅழகிக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

இவ்வாறு, தினம்தினம், உயிர்கள் கருகும் இந்த நேரத்திலும், தங்கள் சுயலாபத்திற்காக தேசியத்தைப் பயன்படுத்தும் இவர்கள் எல்லாம் மனிதப்பிறவிகளா? இந்தத் துரோகிகளுக்கும் சிங்கள ஆக்கிரமிப்பாளனுக்கும் என்ன வித்தியாசம்?

  • கருத்துக்கள உறவுகள்

Get Flash to see this player.

"ஐயோ நானும் தம்பியும் ஆருமற்று தெருவில் நிற்கிறோம்."

உறவின் குரல் உயிரை உலுக்கிறது.

எதற்கு நாங்கள் பிழைத்தோம் இனம் காக்க முடியா சாபம் ஏந்தி உழல்வதற்கா?

பெயருக்கும், தலைப்புக்கும் எதுவித பொருத்தத்தையும் காண இல்லை. அடங்காப்பற்று என்று சொல்லப்படுகின்றது. இதை எப்படி ஒத்திவைக்க முடியும்? அப்படி என்றால் அதற்கு பெயர் உண்மையில் அடங்காப்பற்று அல்ல. வேறு ஏதோ பற்றாக இருக்க வேண்டும்.

ஐயா, ஒழுங்கமைப்பாளர்களே... அடுத்த தடவை பேரணி முடியும்வரை அதற்கு ஏதாவது பெயர் வைத்து சொதப்பி விடாதீர்கள். பேரணியின் ஆரம்பத்திலேயே பெயர்சூட்டி மகிழாது பேரணி முடிந்தபிற்பாடு பெயர்சூட்டி மகிழுங்கள்.

அடங்காப்பற்று இருந்து இருந்தால் குயின்ஸ்பார்க்கில் உண்ணாநோன்பு உள்ள இடத்திற்காவது மக்களை செல்லுமாறு கூறி இருக்கலாமே? சுமார் 20 - 50 வரையான மக்கள் மட்டும் ஏதோ உண்ணாநோன்பு உள்ளவருக்கு ஆதரவாக நிற்கின்றார்கள்.

ஒவ்வொருத்தருக்கும் தாங்கள் தாங்கள் ஒழுங்கமைக்கும் நிகழ்வுகளிற்கு மக்கள் வரவேண்டும். அவர்கள் அல்லாத வேறு யாராவது சுயமாக ஏதாவது அடங்காப்பற்றுடன் ஏதாவது செய்தால் அதற்கு ஆதரவு கொடுக்கத் தேவை இல்லை.

இனியாவது இப்படியான தவறுகள் நிகழாதவாறு குறிப்பிட்டவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். அடங்காப்பற்றுடன் இருக்கின்றோம். ஆனால் எங்களால் தாயகத்தில் நடைபெறுகின்ற மனிதப்பேரவலத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி நீங்கள் கூறுவதில் உண்மையிருந்தாலும், சில மறைமுகமான சதிகளும் நடந்துள்ளன.

மகளிர் அமைப்பைச்சார்ந்த பல உறுப்பினர்களும் இதில் உடந்தையாக இருந்துள்ளார்கள் என்பதும் உண்மைதான்.

மற்றதாக ஈழினி நீங்கள் கூறுவதுபோல் துரோகக்குழுக்களின் சதி என்றும் இதை கூறமுடியாது கிட்டத்தட்ட இதுவொரு உள் வீட்டுச்சதிபோல்தான் தோன்றுகின்றது.

இதைப்பற்றிய பல சம்பவங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன, இவைபற்றி விவாதிப்பதிற்குரிய நேரம் இதுவல்ல என்ற காரனத்தால் சில விடயங்களை அடக்கி வாசிக்கவேண்டியுள்ளது.

ஆனால் சந்தர்ப்பம் வரும்போது ..........எல்லாம் வெளியில் வரலாம்.

ஐயா டாங்க்லாஸ்,

நிழலி சொன்னதில் 100% கருதுடன்படுகிறேன் ஆவேசப்படுகிறேன். உங்களுக்கு ரோசம் இல்லையெண்டால் அல்லது உங்களுக்கு எதாவது தொடர்பு இருந்தால் உமது வாயை மூடுமையா. மற்றவர்கள் கருத்தை அவமதிக்க உமக்கு உரிமை இல்லை. இங்கே உமதும் தூயவன் ஐயாவின் கருத்தும் மட்டும்தான் ஏனையவர்களை விட முரண்படுகிறது.

இது தமிழர்களை பிரிப்பதற்காக சொல்லும் கருத்து அல்ல. அப்படி சொன்னால் உங்கள் இருவரின் மட்டும் வியூகம் அது. களையெடுப்பது என்பதும் இருக்கு இதில் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? தலையாட்டுவதற்காக அல்ல தமிழர்கள்.

இன்று புதினத்த்தில் முக்கிய செய்தியாக என்ன வந்தது தெரியுமவோய்?

ஈலினி சொன்னது போல் ஈழப்போராட்டத்துக்கு களங்கம் வர நினைப்பர்களை அடையாளம் காண நாம் பயப்படத்தேவயில்லை.

நிழலி, உங்களை போல பல கருத்துக்களை வேறு நிகழ்வுகளில் ஆராய்ந்து பதில் கேட்டு வேறு சந்தர்ப்பங்களில் எழுதியதும் பலருடன் கதைத்தும் உண்டு.

மக்கள் மனசு திசை திருப்பப்படுகிறது என்பது தெரிந்தால் அதை களை எடுத்து முன்னேற வேண்டும்.

Edited by இனியவன் கனடா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வார்த்தை உபயோகங்கள் மற்றவர்களை காயபடுதாமல் இருப்பது நன்று. தமிழரின் ஒற்றுமையற்ற குணத்தை எங்கு போனாலும் இந்த இனம் விடுவதாய் இல்லை. அந் நிகழ்வு நடந்ததன் மூலம் நிழலி என்ன இழந்தார் என்று எனக்கு தெரியாது. ஆனால் யார் யார் எவ்வளவும் லாபம் கண்டார்கள் என்று கூறுவதை பார்த்தால் இவருக்கும் பங்கு இருக்குமோ???

உண்மையில் நிகழ்வு மூலம் ஈட்டப்பட்டது நாட்டுக்கே அர்பணிக்கப்பட்டது என்பதை நான் எனது இரண்டு கண்களால் கண்ட உண்மை....

உண்மை தெரியாமல்... யாரும் வைத்தெரிச்சலில் உளறி... எம் இனத்தை குழப்ப வேண்டாம்.

பஞ்சன் மகன்... இதனையும் பாருங்கள்

sydneyp.jpg

கனடாவின் இளையோர் அமைப்பும் இப்படி ஒன்றை வெளியிட்டால் நல்லம் என்று நினைக்கின்றேன்

புலிகள் புலம் பெயர் மக்களை வீதிக்கு இறங்கி போராட வாருங்கள் என்று தொடர்ந்து கோரிக்கை விடுகின்றனர். பூட்டிய அறையில் பாட்டுப் பாடி, நாட்டியம் ஆடி, காசு சேர்த்து பிரபலம் ஆகுங்கள் என்று அல்ல.

Edited by நிழலி

அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு நிறுத்தம்.

திகதி: 08.05.2009 // தமிழீழம்

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்படும் அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2009, தாயக உறவுகளின் அவலநிலை காரணமாக 30.05.2009 அன்று நடைபெறமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம்.

- தமிழர் மேம்பாட்டுப் பேரவை

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

http://www.yarl.com/forum3/index.php?showtopic=58017

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாஞ்சான் மகன், உமது வார்த்தை பிரயோத்தை முதலில் சரி செய்து மற்றவரை நிமிர்த்த பாரும். நீர் கதைக்கும் விதம் புண் படாது அடக்குவது போல், மற்றவர் கதைக்கும் விதம் புண்படுவதா? மூக்கை நுழைத்து இன்னும் இந்த விளக்கத்தை கொடுக்காமல் இருந்தால் கதை தொடராது. இப்போது இதை மேலும் கதைக்க தொடங்கி தொடரவைக்கிறீர். கதைக்க விரும்பினால் தொடரலாம் இல்லை. இப்போ அவசத்தை கூட்டி பிளவுபடுத்துவது நீர்தான்.

Edited by இனியவன் கனடா

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை உபயோகங்கள் மற்றவர்களை காயபடுதாமல் இருப்பது நன்று. தமிழரின் ஒற்றுமையற்ற குணத்தை எங்கு போனாலும் இந்த இனம் விடுவதாய் இல்லை. அந் நிகழ்வு நடந்ததன் மூலம் நிழலி என்ன இழந்தார் என்று எனக்கு தெரியாது. ஆனால் யார் யார் எவ்வளவும் லாபம் கண்டார்கள் என்று கூறுவதை பார்த்தால் இவருக்கும் பங்கு இருக்குமோ???

உண்மையில் நிகழ்வு மூலம் ஈட்டப்பட்டது நாட்டுக்கே அர்பணிக்கப்பட்டது என்பதை நான் எனது இரண்டு கண்களால் கண்ட உண்மை....

உண்மை தெரியாமல்... யாரும் வைத்தெரிச்சலில் உளறி... எம் இனத்தை குழப்ப வேண்டாம்.

பஞ்சன்மகன் உண்மை என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? தயவு செய்து உங்களுக்குத் தெரிந்த உண்மைகளை எனக்கு அறியத்தரவும்.

மெளனம் நிலைக்கும் வரை மகிமை தெரியாது மாறி எழுந்தால் பின்னர் மெளனிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தைக் சிதைத்து அந்தச் சிதைவுகளில் இருந்து தம்மை வளர்க்க எத்தணிக்கும் ஒட்டுண்ணிகள் தொடர்பாக விழிப்புடன் செயற்படுவதே தமிழ்த் தேசியத்தினது இருப்புக்கு அவசியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

நொச்சி, இன்றைய தமிழர் நிலை கருதி......

விடுதலை வியாபாரிகளையும், ஒட்டுண்ணிகளையும், சமயம் பார்த்து தம்மை வளர்ப்பவர்களையும் கூட வைத்திருந்து மாரடிக்கவேண்டிய தலைவிதி தமிழனுக்கு......

கேட்ட கேள்விக்கு பஞ்சன்மகன் பதில் தரட்டுமே....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.