Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகங்கார சிறீலங்காவும் ஆப்பிறுகிய இந்தியாவும்

Featured Replies

20060723005.jpg

வன்னியில் இன்று குறுகிய நிலப்பரப்பில் குற்றுயிராய் கிடக்கும் தமிழனின் வாயிலிருந்து இறுதி மூச்சாகவும்.. அதனைக்கண்டு பொறுக்கமுடியாத தமிழகத்து உறவுகளிடமிருந்து ஆதங்கமாகவும்..ஆத்திரமாகவும்.. உலகெங்கும் வாழும் தமிழர்களிடமிருந்து ஆவேசமாகவும் ஒலித்துக்கொண்டிலுக்கும் வேண்டு கோள்கள் என்னவெனில்..இந்தியாஅரசே இலங்கையில் நடக்கும் யுத்தத்தினை நிறுத்து....தமிழர் படுகொலையை நிறுத்து.. சிறீலங்கா அரசிற்கு ஆயுத உதவியை நிறுத்து... இவைதான்.. ஆனால் உண்மையிலேயே இந்திய அரசு நினைத்தாலும் கூட இப்பொழுது யுத்தத்தினை நிறுத்தமுடியாது...

காரணம் இந்தியாவும் இலங்கையும் சுதந்திரமடைந்த காலத்தின் பின்னர் வரலாற்றினை சிறிது பின்நோக்கி புரட்டினால்..காலங்காலமாகவே குட்டிசிறீலங்கா என்கிற தீவின் அகங்காரமும் அதற்கு அடங்கியே பழகிப்போன இந்தியத்துணைக்கண்டத்தின் தொடைநடுங்கித்தனத்தையும் துல்லியமாகவே காணலாம்.. அதற்கு மிகப்பெரிய உதாரணங்களாக..1961 லும் 1964 லும் சிறீலங்காவின் சீன மற்றும் பாகிஸ்த்தான் அதரவு நிலையை தடுப்பதற்காக சிறீலங்காவிடம் பணிந்து போய் செய்த ஒப்பந்தங்கள் முலம் பல இலட்சம் மலையகத்தமிழர்களின் எதிர்காலத்தினை அழித்ததுமட்டுமல்ல..அதற்கடுத்

ததாக..1975 ம் ஆண்டு மீண்டும் சிறீலங்காவின் பாகிஸ்தான் ஆதரவு நிலையை தடுப்பதற்காக கச்சதீவை வர்ணக்கடதாசியில் பொட்டலம் கட்டி சிறீலங்கவிற்கு பரிசாகக்கொடுத்தனர்.. பொட்டலம் கட்டுவதற்கு வர்ணக்கடதாசி கொடுத்து ஒப்புதலும் கொடுத்த இன்றை தமிழக முதல்வர்தான் அன்றைகாலகட்டத்திலும் தமிழக முதல்வராக் இருந்தார்..

இதனை நான் எழுதிக்கொண்டிருக்கும் பொழுது கச்சதீவை திரும்பப்பெறும்வரை போராட்டம் தொடரும் என்று ஒருதேர்தல் அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார்..இத்தனை

க்கும் கச்சதீவை சிறீலங்காவிற்கு கரம்பிடித்து கொடுத்த காங்கிரஸ் மத்தியிலும்.. அதற்கு சாட்சிக் கையொப்பமிட்ட தி.மு.க.தமிழ்நாட்டிலும் ஆட்சியில் இருக்கின்றது..

அதற்கடுத்தாக சிறீலங்காவில் 83 ம் ஆண்டு நடந்த தமிழினப்படுகொலைகளை நிறுத்தச்சொல்லி அன்றைய இந்தியப்பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பி.வி. நரசிம்மராவ்இ மத்திய அமைச்சர் அந்தஸ்தில் இருந்த வெளியுறவுத்துறை ஆலோசனைக் குழுத் தலைவர் ஜி. பார்த்தசாரதி ஆகிய இருவரையும் கொழும்புக்கு அனுப்பி வைத்தார்.. அன்றைய சிறீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். அவர்கள் இருவரையும் சந்திக்காமல் இழுத்தடித்து பின்னர் தன்னுடைய அலுவலக வாசலிலேயே ஒரு மணிநேரம்வரை காக்கவைத்த சம்பவங்களை ஜி.பார்த்தசாரதி அவர்களே தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார்..

அடுத்தாக 87ம் ஆண்டு ஒப்பந்தம் கைச்சாத்திட சென்ற இராஜீவ் காந்தியை துப்பாக்கியால் அடித்து வரவேற்றதை இந்த உலகமே கண்டுகளித்தது..இராஜீவ் காந்தியை துப்பாக்கியால் அடித்த ரோகன விஜயமுனி என்பவர் ராஜீவின் தலைக்குத்தான் இலக்கு வைத்தேன்: என்று பகிரங்க வாக்குமூலம் கொடுத்திருந்தும். சிறீலங்கா அரசு ஒரு சம்பிரதாயக் கைது மட்டும் செய்து விடுதலை செய்துவிட்டு ..சூரிய வெப்பத்தில் அதிகநேரம் நின்றதால் அந்த இராணுவ வீரன் மயங்கி விழும்பொழுது துப்பாக்கி இராஜீவின் பிடரி மயிரில் பட்டுவிட்டது என்றொரு அறிவியல் ரீதியான விளக்கத்தையும் கொடுத்து..அடித்தவனிற்கு சிறீலங்காவின் தேசிய வீரர் என்கிற பட்டமும் கொடுத்து மகிழ்ந்தது சிறீலங்கா..

அப்படி அடிவாங்கி கொண்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இலங்கையில் இந்திய இராணுவத்தினை குவித்து இந்திய மக்களின் பலகோடி வரிப்பணத்தினை செலவழித்து மூவாயிரத்திற்கு மேற்பட்ட இந்திய இராணுவத்தினை பலிகொடுத்தும்..பல ஆயிரம் இரணுவத்தினரை அங்கவீனர்களாக்கியும் புலிகள் மீதும் ஈழத்தமிழர்கள் மீதும் ஒரு முடிவில்லாத யுத்தத்தினை நடத்திக்கொண்டிருந்த பொழுது.. சிறீலங்காவில் பிரேமதாசா ஜனாதிபதியாகபதவியேற்றதும் முதலில் செய்த வேலையாக இந்தியாவைப்பார்த்து சொன்னார்.. இது எங்கள் உள்வீட்டு பிரச்சனை நீங்கள் வெளியேறலாமென்றார்..பிறகென்ன இந்தியாவும் வெளியேறியது மட்டுமல்ல இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் மாபெரும் தியாகம் செய்து தான் ஈழத்தமிழர்களிற்கு செய்த ஒரோயொரு சாதனையென்று இந்தியா மார்தட்டிக்கொண்ட வடக்கு கிழக்கு இணைப்பு என்கிற ஒப்பந்தத்தையும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது போல ஒரு பொதுசனவாக்கெடுப்பு நடத்தாமலேயே சிறீலங்கா அரசு கிழித்து எறிந்தபொழுது.. புதுமணப்பெண்போல இந்தியா நாணிக் கோணி எதுவும் பேசாமல் தலைகுனிந்து நின்றது..

ஆனால் மீண்டும் 87 ம் ஆண்டு இராஜீவ் காந்தி தட்டிய அதே பழைய குருடியின் வீ்ட்டுக்கதவினை சோனியாவின் தலைமையில் மன்மோகன் சிங் தட்டினார்..புலிகளை அழிக்க அத்தனை உதவிகளையும் தரலாமென்றனர்.. சிறீலங்கவிற்கு சார்க் மகாநாட்டிற்கு போன பிரணாப் நடுத்தெருவில் நடத்திவிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.. ஆனாலும் நாங்க ரெம்ப நல்லவங்க... என்றபடியே தொழில்நுட்ப உதவிகளையும்..ராடர்வசதிகள்.. இந்திய இராணுவஅதிகாரிகளின் நேரடி ஆலோசனைகள்.. என்று மீண்டும் அனைத்தையும் கொடுத்து கெஞ்சிக்கூத்தாடியாவது சிறீலங்காவின் இதயத்தில் ஒரு ரோசாப்பூவாய் இடம்பிடிக்க ஆசைப்படுகின்றது..இத்தனைக்கும

் சீனா சத்தமின்றி சிறீலங்காவில் அம்பாந்தோட்டையில் நவீனவசதிகளுடனான துறைமுகம் ஒன்றினை நிருமானித்து அதில் கண்காணிப்பு கோபுரத்தை அமைத்து இந்தியாவை வர்ணப் படங்கள் எடுப்பது மட்டுமல்ல மன்னாரில் எண்ணெய் ஆராய்ச்சி என்கிற பெயரில்..இந்தியாவிற்கு மிக அருகிலேயே தமிழகத்தில் எல்லையில் இந்தியாவிற்கு எள்ளெண்ணெய் கொழுத்த தயாராகிக்கொண்டிருக்கின்றத

வல்லரசுக் கனவில் மிதப்பவர்களுக்கு சிறிலங்காவின் கணக்குப் புரியாதா என்ன? ஆனாலும் அவங்க ரொம்ப நல்லவங்க, அப்பாவித்தனமா எத்தனைதரம் போட்டு மிதித்தாலும் கண்டுக்கவே மாட்டாங்க. கண்டுகொள்ள வேண்டிய காட்சி அவர்களை அறிந்தே நெருங்கி வருகிறது. சீனா சீனா சீனா.

இந்தியா அதனால்தான் ஜெயலலிதா எனும் பெரிய ஆப்பை இலங்கை நோக்கி இறக்கி இருக்கிறது... ஒட்டு மொத்த தமிழர்களுக்கு தமிழீழத்துக்கு ஆதரவாக வாக்குக்கள் என்பது இலங்கை அரசுக்கு இனிப்பான விடயம் அல்ல...

தனி ஈழம் அமைப்போம் எனும் சொற்பதம் பல முடிச்சுக்களை இலங்கை பிரச்சினை நோக்கி போட்டு வைத்து இருக்கிறது.... இவைகள் மெதுவாக அவிழ்வதுக்கு நீண்ட காலம் எடுக்கலாம்...

(இந்தியாவின் கணக்கு படி எல்லாம் நடந்தால் ஏன் இப்படி) எல்லாம் சரி வரும் போது புலிகள் அமைப்பு ஈழத்தில் இருக்காது முழுமையாக அழிந்து இருக்கும் என்பதை இந்திய கொள்கை வகுப்பு கூட்டம் நம்புவது போல தோண்றுகிறது...

வரதராச பெருமாள் காலம் மீண்டும் வரும் என்பதை நம்புகிறார்களா....???

எங்கள் விடுதலை இன்னும் கைகூடமல் இருப்பதே இந்த இந்திய அரசியல் வாதிகளால்தானே. இனியும் நம்பலாமா?.

எங்களுக்குத்தான் இந்தியா மீது மரியாதையும் வெறுப்பும் தொப்புள் கொடி உறவும் ஆனால் சிங்களவனுக்கு இந்தியா என்றும் ஆபத்தான கண்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்டுகொள்ள வேண்டிய காட்சி அவர்களை அறிந்தே நெருங்கி வருகிறது. சீனா சீனா சீனா.

இந்தியாவின் தலைமாட்டில் நேபாளம்,கால்மாட்டில் சிறிலங்கா........வலதுபுஜத்தில்பா

கிஸ்தான் ,இடதுபுஜத்தில் பர்மா... இந்தியாவின் வல்லாதிக்க கனவு ......அதோகதிதான்.....இந்தியா பயில்வானின் வெற்றி கேள்விகுறிதான்.....

  • கருத்துக்கள உறவுகள்

தனி ஈழம் அமைப்போம் எனும் சொற்பதம் பல முடிச்சுக்களை இலங்கை பிரச்சினை நோக்கி போட்டு வைத்து இருக்கிறது.... இவைகள் மெதுவாக அவிழ்வதுக்கு நீண்ட காலம் எடுக்கலாம்...

(வரதராச பெருமாள் காலம் மீண்டும் வரும் என்பதை நம்புகிறார்களா....???

அந்த நீண்டகாலத்தின் முடிவில் தமிழ்த்தேசிய எழுச்சி நலிவடைந்து விடும்,இந்தியாவின் வரதராஜபெருமாள் வரும் முன் ...சிங்களத்தின் வரதராஜபெருமாக்களை வடக்கு கிழக்கில் இருத்துவதுதான் சிங்களத்தின் கனவு.......சிங்களத்தின் கனவுதான் பலிக்கும்.....காரணம் இறையான்மையாம்... :unsure::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.