Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தாங்கோ பொல்லு…

Featured Replies

அனைத்துத் தமிழரிற்காகவும் தமிழரின் பெயரில் ஆனது தான் எமது போராட்டம் என்ற அடிப்படைக்கமைய, எமது போராட்த்தின் இன்றைய தேவை குறித்த ஒரு பார்வையாக அமைகிறது இப்பதிவு.

காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் இருந்தவர்களின் பிடரிகளைப் பொல்லுகள் பிளந்தபோதும், 1956(150 தமிழ் உயிர்கள்), 1958(300 தமிழ் உயிர்கள்), 1977(300 தமிழ் உயிர்கள்), 1981(பல்லாயிரம் தமிழ் நூல்கள்;), 1983 (3000 தமிழ் உயிர்கள்) என சிங்கள வெறியாட்டங்கள் தொடர்ந்தபோதும், நிராயுதபாணிகளாக, ஏதிலிகளாக, மோட்டார் வண்டியின் மின் விளக்கைப் பார்த்த முயல்களாக தமிழர்கள்--எமக்கு முந்திய சந்ததியினர்--நின்றபோது, ஆயதப் போராட்டத்தின் தேவை மட்டும் அன்றி அது வீரியம் பெற்று வளரவேண்டியதன் அவசியமும் நன்குணரப்பட்டது. உணர்வு செயலாக்கப்பட்டு, எத்துணை பலம் மிகு ஆயுதப் பாதுகாப்பு கட்டியெழுப்பப்படலாமோ அத்தனை பலம் வாய்ந்த ஆயுதப் பாதுகாப்பு எமது தேசியத்தலைவரின் புத்திக்கூர்மையில் கட்டியமைக்கப்பட்டது.

அடியாட்களாகப், பொம்மைகளாக மாறாது, நாம் நாமாக இருப்பதாயின் நாம் மட்டுமே நமக்கு எஞ்சுவோம் என உலகின் ஆதிக்க சக்திகள் வெருட்டியதோடு மட்டுமன்றி செயற்படுத்தியும் காட்டின. நாம் நாமாகத் தனித்து எமது ஆயுத பாதுகாப்பை வளர்க்க நேர்ந்தது மட்டுமன்றி சிங்களத்தோடு சேர்த்து உலகையே எதிர்த்துத் தான் எமது பாதுகாப்பைக் கட்டியெழுப்ப வேண்டிய நிலை எம்மீது திணிக்கப்பட்டது. இந்நிலையில், எமது ஆயுதப் பாதுகாப்பு இவ்வுலகின் இன்றைய தொழில்நுட்பங்கள் அனைத்தையும் பெற்றுவிடுவது என்பது சாத்தியமற்றது. எனினும், தனியர்களான எமக்குச் சாத்தியமான அனைத்தும் பெறப்பட்டு ஒரு மாமெரும் பாதுகாப்பினை உருவாக்குவதில் எமது போராட்டம் வெற்றி பெற்றது. (வான்பாதுகாப்புப் போதிய அளவில் என்றுமே எம்மிடம் இருக்கவில்லை என்ற கவலை முன்னர் எம்மவர்களிடம் இருந்தபோதும், இன்று நாம் பட்டறிந்து விட்ட உண்மைகளின் அடிப்படையில், வான் பாதுகாப்பு ஆயிரக்கணக்கில் இருந்தாலும் ஆட்டிலறி மழையும் நஞ்சுப் புகையும், இன்னும் நாம் காணாதவைகளும் வந்து தான் இருக்கும் என்ற உண்மை எமக்குப் புலனாகிறது.) எனவே, எமது நிலையில் எமக்குச் சாத்தியமான முழுப்பலத்தோடும் கூடிய ஆயுதப் பாதுகாப்பைத் தமிழர்கள் நாங்கள் பெற்றிருந்தோம்.

எனினும், இன்று, 83 போலும் காலிமுகத் திடல் போன்றும் மீண்டும் நாம் மோட்டார் வண்டியின் மின் விளக்கைப் பார்த்த முயல்களாகி நிற்கின்றோம். எமது வீட்டிற்குள் வந்து சிங்களம் எம்மை வதைக்கையில் எமது ஆயுதப் பாதுகாப்பின் மட்டுப்படுப்பாடுகளை உணர்ந்து நாம் நிற்கின்றோம். சிங்களம் நினைத்ததெல்லாம் செய்கின்றது. சொல்லிச் சொல்லிச் செய்வதோடு தாம் செய்பவற்றைப் படமும் பிடித்து எமக்குக் காட்டுகிறது.

காலனித்துவ காலம் எமக்கு விட்டுச் சென்ற எச்சங்களில் ஒன்று வெள்ளையரைக் கனவான்களாகவும் அவர்களது பெறுமதிகளைக் கனவான் பெறுமதிகளாகவும் நம்பும் ஒரு பேதமைத் தனம். விஞ்ஞானம் விதையின்றித் தயாரிக்கும் முந்திரியப் பழம் போல, காலனித்துவம் அறிவுபூர்வமாகச் செய்த சமூதாயப் பரிசோதனையாக அது எம்மில் விதைத்த பேதமையின் அறுவடையினை இன்று நாமே காண்கின்றோம். இது தமிழர்களிற்கு மட்டுமன்றி சிங்களவரிற்கு மட்டுமன்றி எமது விடுதலை இயக்கத்திடம் கூட (ஒப்பீட்டளவில் குறைந்தளவில்) காணப்படுகின்ற காலனித்துவ காலத்து எச்சம். எமது மக்கள் வகைதொகையின்றிக் கொல்லப்படுவதையும், எம்மக்கள் இறந்து கிடக்கும் கோரங்களையும் உலகின் கவனத்திற்குக் கொண்டுவருவோம் என நினைத்து எமது மக்கள் இறப்பின் பின்னும் மறைப்பிழந்து சர்வதேச அலுவலகங்களில் காணொளிகளாக வலம் வர வைத்தோம். ஓடிந்து போன எம் சிறார்களை எமக்குத் தேவையான பதில்கள் வர வேண்டிக் கேள்வி கேட்டு சித்தம் பேதலிக்கச் செய்கின்றோம். ஆனால் சர்வதேசக் கனவான்களோ, “தமிழர்களிற்குப் பிரச்சினை உண்டென ஏற்றுக்கொள்கின்றோம், ஆனால் அதை அவர்கள் அணுகும் போராட்ட முறைமையை நிராகரிக்கின்றோம்” என நித்திரையிலும் உச்சாடனம் செய்கிறார்கள்.

“கொடுமையைச் செய்பவன் புத்திசாலி, அதைச் சகித்துக் கொண்டிருப்பவன் குற்றவாளி” என்ற கண்ணதாசன் வரிகளாகிப் போயுள்ளது எமது நிலைமை.

இவ்வாண்டின் முதற்பகுதி வரை, எமது ஆயதப் போராட்டத்தை நாம் கைவிடின், என்னென்ன கொடுமைகளைச் சிங்களவன் சிரித்தபடி செய்வான் என்று நாம் நிரைப்படுத்தினோமோ, அதையெல்லாம் சிங்களவன் இன்று, எமது ஆயுதப் போராட்டம் இருக்கையிலேயே, சிரித்தபடி செய்கின்றான். சர்வதேசத்தின் நலன் சார்ந்த கொள்கை வகுப்புக்கள் பற்றி எத்தனை நூல்களைப் படிதாலும், ஒவ்வொரு முறையும் அக்கொள்கைகளின் பிரயோகம் பிரமிக்கத் தான் வைக்கின்றது. சதாம் குசைன் அடித்தால் நச்சுப் புகை மகிந்த அடித்தால் மல்லிகைப் பூ வாசம் என்று நிலமை தொடர்கிறது.

கடந்த வருடங்கள் மாதங்கள் தமிழர்கள் எமக்குப் புதிய பட்டறிவுகளைத் தந்துள்ளமை நாம் அனைவரும் அறிந்தது. ஆனால், விரைவில் மேற்கும் ஒரு புதிய பட்டறிவினை ஈழத்தில் பெற இருக்கிறது. அதாவது, சிங்களத்தின் மனவமைப்புப் பற்றி தமிழர்கள் நாங்கள் உத்தரித்துக் கற்றுக் கொண்டதில் ஒரு பகுதியினைக் கூட மேற்கு இன்னமும் பட்டறிந்து கொள்ளவில்லை.

மேற்கு, ஈழத்தில் தனது முதலாவது இலக்கான புலி-அழிப்பு என்பதில் தற்போது கருத்தொருமித்து நிற்கிறது. தற்போது இம்முதலாம் இலக்கு ஒரளவிற்கு எட்டபட்டு விட்டதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். இனி, தமது பெறுமதிகளின் அடிப்படையில் சிக்கலான இலங்கைப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு அமைத்து, தமது பெறுமதிகள் காலத்தால் அழியாத கனவான் பெறுமதிகள் என்று ஆசியாவில் நிறுவ வேண்டியது மேற்கின் இரண்டாவது இலக்கு.

தம்மைத் தவிர உலகில் வேறு எவருமே போராட்ட குணம் கொண்டிருத்தலாகாது என்பது மேற்கின் எழுதாவிதி. வன்முறையற்ற பேச்சுவார்த்தை, சனநாயகம், அரசியல் பன்முகம், சட்டம் ஒழுங்கு என்ற மேற்கத்தேய ஏய்ப்பு நாடகங்களை ஆசியாவில் ஆணித்தரமாக இலங்கையில் நிலைநாட்டலாம் என்று மேற்கு இப்போது நம்பிக்கிடக்கின்றது. அதனால் தான் சிங்களம் கரிபூசிய பின்னும் கனடாவின் பெவ் ஓடா மந்திரி மூன்று மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கிச் சிரித்தார். (கனடாவின் வெளியுறவு அமைச்சர் லோறன்ஸ் கனன் இலங்கை செல்லாது சர்வதேச ஒத்துழைப்பு மந்திரி பெவ் ஓடா என்ற ஜப்பானிய வழித்தோன்றிய கனேடியன்—ஆசியாவில் ஜப்பானின் மேற்கு சார்ந்த பாத்திரம்--இலங்கை சென்றதும் சுவாரசியம் நிறைந்த உதிரித் தகவல்கள்).

எனினும், மேற்கு விரைவில் சிங்களத்தின் ஆப்பின் வலியை உணரும். சீனா மீது மேற்குக் கொண்டுள்ள பயம் மற்றும் வெறுப்போடு ஒப்பிடுகையில் தமிழர்களின் போராட்டம் தொடர்பான மேற்கின் கொள்கைகள் மிகச் சொற்பம். அவ்வகையில் சிங்கள-சீன நல்லுறவு வீரியம் பெற்று வளர்வதும் இலங்கை சீனத் தளம் ஆவதும் மேற்கிற்குப் பாகைக்காய். தற்போது மேற்கு நம்புகிறது, புலிகளைச் சமன் பாட்டில் இருந்து தாம் நீக்கிவிடுவோம் (புலிகள் பேரம் பேசும் பாத்திரத்தை இழந்துவிட்டார்கள் என்ற நோர்வேயின் அண்மைய அறிக்கை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு) அதன் பின், சிங்களத்தின் மணிக்கட்டை முறுக்கி, தாம் விரும்பும் தமது பெறுமதிகளின் அடிப்படையில் அமைந்த தீர்வை இலங்கையில் ஏற்படுத்தி விடுவோம் என்று. ஆனால் சிங்களம் ஒரு தீர்வு ஏற்படாது தடுக்க எந்த எல்லைகளிற்கு எல்லாம் செல்லும் என்று தமிழர்கள் நாம் கொண்டுள்ள பட்டறிவு, மேற்கிற்கு இனிமேல் தான் வரவேண்டும்.

எனினும் மேற்கிற்குச் சிங்களத்தின் மனவமைப்புத் தொடர்பான பட்டறிவு நிச்சயம் வரும். அப்போது, மேற்கு தனது கொள்கையின் தவறை ஒத்துக்கொள்ளாது என்றபோதும், மறைமுகமாய்த் தனது பலத்தைச் சிங்களத்திற்குக் காட்ட விரும்பும் என்பதைக் காட்டிலும், சீனா என்ற சத்தி உள்ள நிலையில் மேற்கிற்கு இலங்கையில் தனது ஆதிக்கத்தை உறிதிசெய்தல் கட்டாயம் ஆகிப்போகும்.

மேற்கு விடுதலைப் புலிகளிற்கு ஆயுதம் கொடுத்து சீனாவிற்கு பாடம் புகட்ட முனையலாம். அல்லது, சிங்களத்திற்குள் இருந்து ஒரு ஆயுத போராட்டத்தை (ஜே.வி.பி போன்று) மேற்கு உருவாக்க முனையலாம். இலங்கையின் சிங்களவர்களிற்குள் உள்ள வர்க்க வித்தியாசங்களும் பிரச்சினைகளும் தற்போது தமிழர்களுடனான போர் மற்றும் இனவாதம் என்ற போர்வைகளிற்குள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பி

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்
மேற்கு விடுதலைப் புலிகளிற்கு ஆயுதம் கொடுத்து சீனாவிற்கு பாடம் புகட்ட முனையலாம். அல்லது, சிங்களத்திற்குள் இருந்து ஒரு ஆயுத போராட்டத்தை (ஜே.வி.பி போன்று) மேற்கு உருவாக்க முனையலாம். இலங்கையின் சிங்களவர்களிற்குள் உள்ள வர்க்க வித்தியாசங்களும் பிரச்சினைகளும் தற்போது தமிழர்களுடனான போர் மற்றும் இனவாதம் என்ற போர்வைகளிற்குள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பி
  • தொடங்கியவர்

உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி புத்தன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இந்நிலையில், தனித் தமிழ் ஈழம் என்ற இலட்சியத்தில் இருந்து சொற்பமும் வழுவாது, ஆனால் அவ்விலட்சியத்தை அடைவதற்கான முறைமைகள் தொடர்பில் திறந்த மனத்தோடும் சாத்தியங்கள் தொடர்பில் தெளிவோடும் பயணிக்க வேண்டியது இன்றெமக்கு இன்றியமையாத தேவை ஆகும். "

-------

மெய் தான்... ஆனால் ஈழத்தில் தமிழ் உறவுகளை இலங்கை அரசாங்கம் இப்படி கொன்று குவித்து கொண்டு இருப்பதை யாராலும் தவிர்க்க முடியாமல் இருக்கிறது.....

யாராலும் என்று சர்வதேசத்தை மட்டும் அல்ல எம்மையும் எம்மவரையும் சேர்த்து தான் வருத்தத்துடன் சொல்கிறேன்...

அங்கு ஈழம் மலர்வதற்கு மக்களும் தேவை, போராளிகளும் தேவை.... அவர்களின் அழிவையே நிறுத்த முடியாது உள்ளோம் இங்கு - ஜனநாயக முறையில், அஹிம்சா வழியில்...

ஐ. நா வுக்கு அக்கறை எம்மில் இல்லாது போனாலும், தனது கோரிக்கைகள் இலங்கை அரசாங்கத்தால் நிராகரிக்க படுகிறதே என்ற பட்சத்தில் கூட நடவடிக்கை எடுக்கும் நோக்கம் இருப்பதாக தெரியவில்லை....

இந்திய தேர்தல் முடிவதற்குள், பாதுகாப்பு வலயத்தை மரண வலயமாக்கி விட்டு தான் ஓய்வார்கள் போல சிங்கள அரசாங்க காடைகள்...

மேற்கு நாடுகளும் தங்களுக்கு பொருளாதார அழுத்தம் இருப்பின் மட்டுமே ஏதும் உருப்படியான, அதிரடியான முடிவுகள் எடுப்பார்கள்....இலங்கை தமிழர் பிரச்சனையில் தலையிட்டு தங்கள் பொருளாதாரத்தை / அரசாங்க உறவுகளை முறித்து கொள்ள மாட்டார்கள்... அத்துடன் மேற்கு நாடுகளின் சொல்லுக்கு முன்னர் இருந்த மரியாதை இப்போது இலங்கையை பொறுத்த வரை இல்லை...Sweden அமைச்சருக்கு நடந்ததை பாருங்கள்... அத்துடன் Channel 4 ஊடகத்தினருக்கு நடந்தது...நிலைமை இப்படி இருக்கும் போது எமது பக்கம் நியாயம் இருப்பதை உலகம் உணர்ந்தாலும்.....அநியாயத்தை தடுத்து நிறுத்த முடியாமல் இருக்கிறது...

ஆர்பாட்டங்கள் நடத்தி வாய் கிழிய கத்தி கோஷமிட்டாலும், நாங்கள் எதோ எமது மன சாந்திக்காக கத்தி குழறி விட்டு போகிறோம் என்பது அவர்களின் விளக்கத்தில் ஒன்று! மனசாட்சியும் விளக்கமும் இல்லாத பிறப்புகளில் இதுவும் ஒரு வகை! நிம்மதிக்காக கத்தி குளறுவதை விட எமக்கு கடித்து குதறினால் கொஞ்சம் வேகம் அடங்கும் என்று விளங்காத பிறப்புகள் இதுகள்...

இந்த நரகத்து முள்ளுகளிடம் தொண்டை கிழிய கத்துவதிலே எமது பெலனும் தளருகிறது... ஆக்கபூர்வமாக அமையும் என்று நம்பி தொடங்கினோம்...ஆனால் இங்கு நாம் கத்த கத்த அங்கு வீழ்ந்து மடிந்து கொண்டு தான் உள்ளார்கள் மக்கள்..

பாவம், வலிந்த தாக்குதலை நடத்தும் பெலனை புலிகள் இழந்து விடவில்லை என்று நம்பிக்கை வார்த்தைகள் தந்த இழந்திரையர் கூட அடுத்த நாளே காய பட வேணுமா?

வேதனையாக இருக்கிறது....

தளர்ந்து போய் இருக்கும் நேரத்தில் நம்பிக்கை தரும் ஆய்வுகள்? வார்த்தைகள்?

அண்ணர் பருத்தியன் எங்கே?

--------தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்---------

(தாகத்துடன் மரணித்த தமிழர் நேற்று மட்டும் ஆயிரத்திற்கும் மேல்) :unsure::(

விடுதலைப் போராட்டம் முடிவடையவில்லை, விடுதலைக்கான திறக்கப்படாத பாதைகள் இன்னும் உள்ளன என்பதைத் தெளிவுபடுத்தும் உங்களது கட்டுரை நம்பிக்கையை வலுவாக்குகிறது.

திறந்த மனத்தோடும் சாத்தியங்கள் தொடர்பில் தெளிவோடும் பயணிக்க வேண்டியது இன்றெமக்கு இன்றியமையாத தேவை ஆகும்.

இந்தாங்கோ பொல்லு… தலைப்பில் ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது. - மோகன்

ஆமாம் நீண்டதூரம் பயணிக்க வேண்டும் நாம்

:unsure:

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

Edited by Innumoruvan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.