Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வே: 99 (%) வீதமான தமிழர்கள் தனிநாடு தான் ஒரே தீர்வென வாக்களித்துள்ளார்கள்.!

Featured Replies

நோர்வேயில் வாழ்கின்ற தமிழர்களில் 99 (%) வீதமானவர்கள் தனிநாடு தான் ஒரே தீர்வென வாக்களித்துள்ளார்கள்.!

ஈழ சரித்திரத்தில் இடம் இடம்பெற்ற மிகவும் முக்கியமான பொதுஜன வாக்கெடுப்பு இதுவாகும். நோர்வேயில் வாழ்கின்ற 14000 மேற்பட்ட தமிழர்களில் பெரும்பாலானோர் இந்த சந்ர்ப்பத்தை தவற விடாமல் பயன்படுத்தியுள்ளனர்.

ஈழத்தமிழர்களின் தன்னாட்சியையும், இறைமையையும் கோரிநின்ற வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை மீளுறுதிப்படுத்தலுக்கான வாக்களிப்பானது நேற்று(10.05.09) நோர்வேயில் நடைபெற்றது. ஊத்றூப் (Utrop) எனும் நேர்வேஜிய பிரபல பத்திரிகை நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் நோர்வேயில் வாழ்கின்ற தமிழர்களில் 80(%) வீதத்திற்கு மேற்பட்ட மக்கள் வாக்களித்து ஒரு பெரிய வரலாற்றைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த பொதுஜன வாக்கெடுப்பின் முடிவுகள் இன்று (11.05.09) 13:00 மணிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட போதும்.

ஊத்துறூப் (utrop.no) இணையத்தளப் பத்திரிகையில: 12:11 மணிக்கு இந்தச் செய்தி வெளி வந்துள்ளது.

இது தொடர்பான தகவல்கள்:

http://www.utrop.no/Nyheter/Innenriks/16585

99 % av tamiler i Norge ønsker egen stat.

Søndag gikk 5 633 tamiler fra hele landet til stemmeurnene.

98,9 % stemte for opprettelsen av en selvstendig tamilsk stat på Sri Lanka.

Utrop gjennomførte den uoffisielle folkeavstemingen.

Edited by Tamizhvaanam

நோர்வேயில் நேற்று (10.05.2009) தமிழர்கள் மத்தியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வட்டுக் கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதில் 99%வீதமான தமிழ் மக்கள் தமிழீழ தனி நாடு உருவாக வேண்டும் என வாக்களித்துள்ளார்கள்.

ஈழத் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையையும், வடக்குக் கிழக்கு இணைந்த பாரம்பரிய தாயகத்தின் சுதந்திரத்தையும் இறைமையையும் வலியுறுத்தி, அவற்றின் அடிப்படையில் தமிழீழத் தனியரசு உருவாக்கப்படுவதே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் நிரந்தரத் தீர்வு என 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பு இதுவாகும்.

நோர்வே வாழ் தமிழ் மக்களின் தீர்ப்பைக் கணிக்கும் இம்முயற்சிக்கான ஒழுங்கமைப்பினை ஊத்துறூப் (UTROP) எனப்படும் பக்கச்சார்பற்ற பல்லின பண்பாட்டு நோர்வேஜிய ஊடகம் முன்னெடுத்தது.

வாக்குப் பதிவுகள் நடைபெற்ற இடங்களும்... விபரங்களும்....

http://www.tamilseythi.com/tamilar/norway-...2009-05-11.html

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து தமிழர்களுக்கும் நன்றிகள்

எனது உறவுகள் அனைவரையும் கேட்டிருந்தேன்

தமது வரலாற்றுக்கடமையை செய்துள்ளனர்

நன்றி

வானொலி தொலைக்காட்சிகளில் வாக்கெடுப்பு தொடர்பான செய்திகளைக்கானவில்லை.

இதன் பலாபலன்களை யாராவது அறியத்தாருங்கள்!

இதன் தாக்கம்தான் என்ன? நாம் எப்போது ஈழத்துக்கு எதிராக இருந்தோம்? துரோகிகளைத்தவிர

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sted ஆம் இல்லை செல்லுபடியற்றது.

Oslo Stovner 1456 9 6

Oslo Grorud 1421 9 0

Oslo Bryn 1011 13 2

Stavanger 251 5 0

Bergen 536 4 0

Trondheim 157 1 0

Tromsø 37 0 0

Florø 76 5 0

Nordfjordeid 41 1 0

Ålesund 205 1 0

Molde 79 1 0

Narvik 24 0 0

BØ 17 0 0

Lørenskog 263 1 1

Totalt 5574 50 9

நமக்குள்ளே துரோகிகள் சிலர் இருப்பதையும் இதிலே பார்வையிடலாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி உறவுகளே

1வீதாமான மக்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஏற்க மறுத்திருப்பதால் நோர்வே எரிக் கொல்கைம் அவர்கள் மக்கள் பிரிந்து போகும் உரிமையற்றவர்கள் என்றும் வட்டுக்கோட்டை தீரமானம் புட்டு போய்விட்டதாக தெரிவித்துள்ளாராம் ஐயாமாரே 100 வீதமக்கள் அமாம் என்றாலும் இந்தியா இருக்கும் வரை நமக்கு ஒரு விதமான தீர்வும் வராது! மீண்டும் சோனியா பதவிக்கு வந்தால் ஜேஆர் ராஜீவ் ஒப்பந்தம் பற்றி ஒரு சர்வஜனவாக்கெடுப்பை நடாத்த நோர்வே முன்வரலாம்!

இதனை அனைத்து நாட்டு ஊடகங்களிற்கும் அனுப்பி அவர்களையும் இதனை செய்யும்படி தூண்ட வேண்டும். அதனை எப்படி நாம் செய்யலாம். யார் செய்யப்போகின்றீர்கள்?

இரண்டு வீதத்தினர் ஈனத் தமிழர்கள்.

தமிழீழத் தனியரசே' தீர்வு - நோர்வே தேர்தலில் 98 வீதமானவர்கள் ஆதரவு

நோர்வேயில் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட 'வட்டுக்கோட்டை தீர்மானத்தின்' மீதான மீள் வாக்குப் பதிவில் 98.95 விழுக்காடு வாக்காளர்கள், இலங்கைத் தீவின் வடக்கு - கிழக்கு இணைந்த பாரம்பரிய தாயகப் பிரதேசங்களை உள்ளடக்கிய சுதந்திரமும் இறைமையும் கொண்ட 'தமிழீழத் தனியரசே' தீர்வென்று தமது அவாவை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் நோர்வேயின் நகரங்களில் இந்த வாக்குப்பதிவு நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணியில் இருந்து இரவு 7:00 மணி வரை நடத்தப்பட்டது. தலைநகர் ஒஸ்லோவில் வாக்களித்தோர் தொகையின் சராசரி 89.8 விழுக்காடு எனவும், நோர்வே தழுவிய ரீதியில் வாக்களித்தோர் தொகையின் சராசரி 80 விழுக்காடு எனவும் வாக்குப்பதிவு ஏற்பாடுகளை முன்னெடுத்த 'ஊத்துறூப்' பல்லின பண்பாட்டு வார இதழ் தெரிவித்துள்ளது.

இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வாக்குப்பதிவு முடிவுகளை 'ஊத்துறூப்' இதழ் வெளியிட்டுள்ளது. 5 ஆயிரத்து 633 வாக்குகள் மொத்தமாக பதிவாகியுள்ளன. இவற்றில் 5 ஆயிரத்து 574 பேர் தமிழீழத் தனியரசுக்கு ஆதரவாகவும், 50 வாக்குகள் எதிராகவும், 9 வாக்குகள் செல்லாத வாக்குகளாகவும் பதிவாகியுள்ளதாக 'ஊத்துறூப்' தெரிவித்துள்ளது.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் 3 வாக்குச் சாவடிகளிலும், பர்கன், துறொண்ட்ஹைம், ஸ்தவாங்கர் ஆகிய பெருநகரங்கள் மற்றும் லோறன்ஸ்கூக், ஓலசுண்ட், மொல்ட, புளூறோ, துறொம்சோ, நூர்பியூர்ட் ஐட், நார்வீக், வோ (Bø) ஆகிய ஏனைய பிரதேசங்களிலுமாக மொத்தம் 14 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்றன.

பிரதேசங்களின் அமைவிட அடிப்படையில் இவ்வாறாக அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்கக்கூடிய நடைமுறை வசதியுடனும், அதேவேளை வாக்குரிமையுடையவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலும், வாக்காளர் தொகை 7 ஆயிரம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த 7 ஆயிரம் பேரில் 5 ஆயிரத்து 633 பேர் வாக்களித்துள்ளனர் என்பதோடு, இவர்களில் 5 ஆயிரத்து 574 பேர் தமிழீழத் தனியரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். நோர்வே முழுவதிலும் வாக்குரிமையுடைய, அதாவது 18 வயதும், அதற்கு மேற்பட்டவர்களுமாக 8 ஆயிரத்து 767 ஈழத் தமிழர்கள் உள்ளதாக நோர்வேயின் மத்திய கருத்தாய்வு நிறுவனத்தின் (SSB) தரவுகள் தெரிவிக்கின்றன.

நோர்வேயில் நடைபெறுகின்ற நாடாளுமன்ற, மாநகர- மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் கூட, வாக்களிப்பில் பங்கேற்கின்ற மக்கள், ஏறத்தாழ 60 விழுக்காடுகளாகவே பதிவாகி வந்துள்ளன.

தமிழீழத்திற்கான ஆணையைப் பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்குப்பதிவில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமான நோர்வே தமிழ் வாக்காளர்கள் வாக்களித்தமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என 'ஊத்துறூப்' இதழ் ஆசிரியர் மயூரன் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையையும், வடக்கு - கிழக்கு இணைந்த பாரம்பரிய தாயகத்தின் சுதந்திரத்தையும் இறைமையையும் வலியுறுத்தி, அவற்றின் அடிப்படையில் தமிழீழத் தனியரசு உருவாக்கப்படுவதே தமிழ் மக்களின் அரசியல் அவாக்களை நிறைவேற்றும் நிரந்தரத் தீர்வு என 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பு இதுவாகும்.

1976 ஆம் ஆண்டு ஜனநாயக முறையில் வெளிக்கொணரப்பட்டதும், 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் மிகப் பெருவாரியான வாக்குகளுடன் தமிழர் தரப்பை வெற்றியீட்டச் செய்த மக்கள் ஆணை இதுவாகும்.

1977 ஆம் ஆண்டிற்குப் பின்னர், தமிழ் மக்கள் தமது அரசியல் அவாக்களை ஜனநாயக வழிமுறைகளில் வெளிப்படுத்த முடியாதவாறு, 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டமும், பின்னர் 1983 கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பின் 6 ஆவது திருத்தச்சட்டமும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக பிரயோகிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

அந்த வகையில், நோர்வேயில் நடைபெற்ற இந்த தேர்தல் மூலம், 33 ஆண்டுகளுக்குப் பின்னர், முழுமையான ஜனநாயக வழிமுறை மூலம் தமது அரசியல் வேணவாவினை வெளிப்படுத்துகின்ற வாய்ப்பு ஈழத் தமிழ் மக்களுக்கு எட்டியுள்ளதாக நோர்வே தமிழர்களால் கருதப்படுகின்றது.

இந்த தேர்தலானது பல வழிகளில் முக்கியத்துவம் பெறுவதாக சமூக அரசியல் ஆய்வாளரும் பேராசிரியருமான கிறிஸ்தியான ஸ்தொக்க 'ஊத்துறூப்' இதழுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியிலும் இவ்வாறான தேர்தல்களை நடத்துவதற்குரிய உந்துசக்தியை இத்தேர்தல் வழங்கும். இதன் மூலம் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை (சுயநிர்ணய உரிமை) அங்கீகரிக்க கோரி, அனைத்துலக சமூகத்தை நோக்கிய அழுத்தங்கள் முன்வைக்கப்படும் என்று ஸ்தொக்க தெரிவித்துள்ளார். கிறிஸ்தியான் ஸ்தொக்க கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத் தீவின் இனப்பிணக்கு தொடர்பாக ஆய்வுசெய்து வருபவர் என்பது குறிப்பிடத்துக்கது.

அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு நாடுகளில் இருந்து புலம்பெயர் தமிழர்களால் இந்த கோரிக்கை எழுப்பப்படும் பட்சத்தில், சிறிலங்கா அரசாங்கத்தை நோக்கியும் அழுத்தங்களுக்கு இட்டுச்செல்லும் வாய்ப்பு உள்ளது என்றார்.

அண்மையில் பிரான்சிலும் 'வட்டுக்கோட்டை தீர்மானத்தின்' மீதான மீள் வாக்குப் பதிவு இடம்பெற்றது. இதன்போது இந்த வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்த பல்வேறு சங்கங்கள் மற்றும் கழகங்களைச் சேர்ந்தவர்கள் வாக்களித்திருந்தனர். இதன்போது நூற்றுக்கு நூறு வீதமானவர்கள் தமிழீழத் தனியரசிற்கான தங்கள் ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.sankathi.com/

  • கருத்துக்கள உறவுகள்

இதன் பலாபலன்களை யாராவது அறியத்தாருங்கள்!

இதன் தாக்கம்தான் என்ன? நாம் எப்போது ஈழத்துக்கு எதிராக இருந்தோம்? துரோகிகளைத்தவிர

இத்தேர்தலில் எனக்கு விளங்காத ஒரு விடயம் ....... என்னவென்றால் ,

நாளை இப்படியான தேர்தல்களை முன் மாதிரியாக வைத்து , தற்போதைய சூழலில் வடக்கிலோ , கிழக்கிலோ பயங்கரவாத அரசு தானும் ஒரு தேர்தலை நடத்தினால் அதன் முடிவை காட்டி சர்வதேசத்தை ஏமாற்ற முனையலாம் .

அந்த தேர்தலை தான் சர்வ தேசம் நம்பும் என்பது எனது எண்ணம் .

நாங்களே பொல்லை கொடுத்து அடி வாங்குவது மாதிரி உள்ளது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தேர்தலில் எனக்கு விளங்காத ஒரு விடயம் ....... என்னவென்றால் ,

நாளை இப்படியான தேர்தல்களை முன் மாதிரியாக வைத்து , தற்போதைய சூழலில் வடக்கிலோ , கிழக்கிலோ பயங்கரவாத அரசு தானும் ஒரு தேர்தலை நடத்தினால் அதன் முடிவை காட்டி சர்வதேசத்தை ஏமாற்ற முனையலாம் .

அந்த தேர்தலை தான் சர்வ தேசம் நம்பும் என்பது எனது எண்ணம் .

நாங்களே பொல்லை கொடுத்து அடி வாங்குவது மாதிரி உள்ளது .

நீங்கள் சொல்வது சரி மச்சான் ஆனால் உலக நாடுகளுக்கு தெரியும் ஊடக சுதந்திரமே இல்லாத ஒருநாட்டில் இப்படியான தேர்தல்கள் சர்வதேசத்தின் கண்காணிப்பு இல்லாமல் நடைபெற்றால் எப்படி இருக்குமென்று சர்வதேசத்தை இப்படியான தேர்தல்களை நடத்த ஸ்ரீலங்கா பயங்கரவாத அரசு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. ஆனால் தற்போது நடைபெற்றிருக்கும் தேர்தல்களில் சர்வதேசம் நம்பிக்கையில்லாமல் சர்வதேச கண்காணிப்போடு நடைபெற வேண்டும் என்றால் கூட கிடைக்கப்போகும் விடை இதுவே. முக்கியமான ஒன்றை நிரூபித்திருக்கின்றார்கள் இந்த தேர்தல் மூலம் அதாவது ஸ்ரீலங்கா பயங்கரவாத அரசு உலக நாடுகளுக்கு சொல்லிவருகின்றது தமிழ்மக்கள் ஒன்றுபட்ட ஸ்ரீலங்காவுக்குள்ளே வாழவே விரும்புகிறார்கள் புலிகள் தான் தமிழீழம் என்று கூறி சிறிலங்காவை பிரிக்கப்பார்க்கிறார்கள் என்று ஆகவே இது ஒரு சான்று மற்றது தமிழர்களின் பெரும்பான்மையினரின் தமிழீழத்துக்கான ஆதரவு எப்படி இருக்கின்றது என்பது இதன் மூலம் நிரூபணம் இது துரோகிகளுக்கு சமர்ப்பணம் :lol: .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.