Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மோசடி அரசியல் : கள்ள வாக்கெடுப்புகள் மூலம் சாதித்த இன்றைய அரசு.

Featured Replies

இன்று காங்கிரஸ் வென்றிருக்கின்றது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. மீண்டும் பலமாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது என்றால் அது சோனியாவின் பங்கோ, மன்மோகன் சிங்கின் பங்கோ, அதைக்காட்டிலும் தயாநிதி மாறனின் பங்களிப்பே முக்கியத்துவம் பெறுகின்றது என்றால் மிகையல்ல.

தகவற் தொழிநுட்ப துறையில் தனக்கிருக்கும் செல்வாக்கினைப் பாவித்து ஓர் வாக்களிப்பு மோசடி வேலைமூலம் வெற்றி அடைந்த அரசு என்றால் இன்றைய தேர்தல் வெற்றி பெற்ற அரசாகத்தான் கருதப்படவேண்டும்.

இன்றைய தேர்தல் முடிவுகள் வெளியாகி இருந்தாலும் தேர்தல் வன்முறையில் இறந்த தங்கவேல் மற்றும் காயமடைந்த அந்த ஆத்மாக்களின் மனச்சாட்சியானது தொட்டுச்சொல்லும். பாவிக்கப்பட்ட இலத்திரனியல் வாக்குப்பதிவுக் கருவிகள் பெரும்பாலும் மாற்றி அமைக்கப்பட்டன. தயாநிதிமாறனின் விசேட நிபுணத்துவக்குழு மூலம் மாற்றி அமைக்கப்பட்டன. அனைத்து கருவிகளும் இம்முறை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை, அப்படி உட்படுத்தப்பட்டவையும் தமது செல்வாக்கு உள்ள இடங்களில் குறுகிய கால இடைவெளியில் மாற்றி அமைக்கப்பட்டன. விசேடமாகத் தயாரிக்கப்பட்ட சில வழிமுறைகள் மூலம் அதிலே காணப்படும் சில பொத்தான்களை அழுத்தினால் அது நடப்பு அரசுக்கு வாக்களிக்குமாறு மாற்றி அமைக்கப்பட்டது மட்டுமன்றி, நேரடியாக கள்ளவோட்டுக்கள் போடுவதற்கும் என்று குழுக்களாக களமிறக்கப்பட்டு வெற்றி காணப்பட்டுள்ளது.

மோசடி மூலம் ஆட்சியைப் பிடித்தாலும் அவை பற்றிய எந்தச் செய்திகளும் வெளியில் கசியாதவாறு தமது அதிகாரங்களைப் பிரயோகித்து இரகசியமான முறையில் அவை மாற்றி அமைக்கப்பட்டமை, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

ஆதாரம்: மோசடி வாக்குப்பதிவு பற்றிய மேலதிக ஆதாரம் ஒன்று

இன்னொரு திரியில் சொன்ன பதில் தான் இங்கும் எழுதுகின்றேன்.

இப்படிச் சொல்லி எம்மை நாமே ஏமாற்ற வேண்டியது தான் . இலத்திரனியல் வாக்கு எந்திரத்தின் மூலம் கள்ள வாக்குகள் போடுவது மிகவும் கடினம் என்பதுடன் கள்ள வாக்குகள் ஒரு பெரிய அளவில் மாற்றத்தினை கொண்டுவருவது ஒருபோதும் கிடையாது. ஜெயா போன்றவர்கள் தவிர வேறு யாரும் இவ்வாறு சொல்வதில்லை. கள்ளா வாக்குகளும் வாக்கு இயந்திர மோசடியும் மாற்றத்தினை கொண்டு வந்து இருந்தால், இளங்கோவனும் தங்கபாலுவும் கூட வென்று இருக்க வேண்டும்

பா.ஜ.க வே தன் தோல்வியினை ஒத்துக் கொண்டு மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகின்றது. அவர்கள் நொண்டிச் சாக்கு சொல்லவில்லை

தமிழக மக்கள் ஈழப் பிரச்சனையை பிரதான பிரச்சனையாக பார்க்கவில்லை என்பதும், காங்கிரஸ் ஈழ மக்களுக்கு செய்து வரும் அநியாயம் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்பதும் தான் யதார்த்தம். தமிழ மக்கள் தனித் தமிழீழக் கோரிக்கையை தமது முக்கிய விடயமாக அங்கீகரிக்க வில்லை என்பது உண்மை

எம் இந்தியா பற்றிய கனவுகள் இந்த யதார்த்ததினை உள்வாங்கியே இருக்க வேண்டும்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பமுடியாது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பமுடியாது.

ஏன்?

பிரபல எழுத்தாளரும் இலத்திரனியல் இயந்திரவியலாளருமான சுஜாதா இந்த இயந்திரத்தின் வடிவமைப்பு, அதன் செயல் பாடு, பாதுகாப்பு ஏற்பாடு என்பன பற்றி மிக விளக்கமாக ஒரு கட்டுரை ஒன்றை காலச்சுவடிலும் ஆந்த விகடனிலும் எழுதியிருந்தார். அவர்தான் இந்த மின்னனு இயந்திர வடிவமைப்பின் பிரதான பாத்திரம் ஏற்று இருந்தார் என்பதால் மிக விளக்கமாக இருந்தது அக் கட்டுரை. ஒரு சில வாக்களிக்கும் நிலையங்களில் வேண்டும் என்றால் கள்ள இயந்திரங்களை (Original design அல்ல) வைத்து வாக்கை மாற்ற முடியும், தமிழகம் போன்ற பரந்த ஒரு பிரதேசத்தில் அப்படி duplicate இயந்திரங்களை வைக்க முடியாது

ஜெயா கடந்த பாரளுமன்ற தேர்தலில் 40 இலும் தோற்ற போதும் மின்னணு இயந்திரத்தினை குறை சொல்லி இருந்தார். ஆனால் அப்ப எமக்கு தி.மு.க வின் வெற்றி இனித்தமையால் அதனை அப்படியே ஏற்று இருந்தோம்... ஆனால் இப்போது அது கசக்கின்றது

எம் போராட்டம் அடுத்த கட்டத்தினை நோக்கி எடுத்துச் செல்லப் படுவது முக்கியமெனில், எமக்கு பாதகமான விடயங்களின் யதார்த்ததினையும் புரிந்து கொள்ள வேண்டும். நாமே எமக்கு உவப்பான வித்ததில் எம்மை சமாதானம் செய்வது எந்த பலனையும் ஏற்படுத்தாது.

கசப்போ புளிப்போ... தமிழக மக்களின் தீர்ப்பினை நாம் படிப்பினையாக கொண்டு மேலும் எம் பயணத்தினை தொடரவேண்டும்

நான் நினைச்சன் நீங்கள் சுஜாதாவை படிச்சிட்டுத்தான் இப்படி சொல்லுறீங்கள் என்று அது உண்மையாகிட்டுது :icon_idea:

நிழலி உண்மை இயந்திரத்தை திருத்த முடியாது ஆனால் கள்ள ஓட்டு போடலாம் தானே?

வைகோவின் தொகுதியில் மேலதிக வாக்குகள் போடப்பட்டது ஒரு உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப்புள்ளைத் தனமாகக் பேசக்கூடாது

ஐயா, மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் மனிதனுடைய சக்திக்கு அப்பாற்பட்டதல்ல. அதனது செயற்பாட்டை மாற்றியமைக்க முடியாது என்பது இருபத்தோராம் நூற்றாண்டின் இலகுவான நகைச்சுவை.

தற்போது பாவனைறிலுள்ள இவ்வியந்திரத்தை வடிவமைத்தே பல காலம் போய்விட்டது.

மூணாம் கிளாஸ் பையனே இதில் திருகுதாளம் செய்யுமளவிற்கு தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேறிக்கிடக்கின்றது. உலகெங்கும் பரந்து கிடக்கும் கணணி தொடர்பான விளையாட்டுக்களில் முப்பத்தைய்து வீதமானவை இந்தியாவில்தான் உருவாக்கப்படுவதென்பது இதற்கான சின்ன உதாரணம்.

அப்போ எதற்காக இந்தியர்கள் இத்துறையில் குற்றச்செயல்லளில் ஈடுபடவில்லை எனக் கேட்கிறீர்களா?

இந்திய அரசு வெளிநாட்டு முதலீட்டாளர்கட்கு தகவற்தொழில்நுட்ப விடையத்தில் மிகவும் பாதுகாப்பானதுடன் கூடியதான நம்பிக்கையை கட்டியெழுப்பி வைத்திருக்கின்றது. தவறு செய்து பிடிபட்டால் பென்டுநிமிர்த்திவிடுவார்கள

  • கருத்துக்கள உறவுகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பமுடியாது

நிச்சயமாக. வழமையாக வாக்களித்தவர்களை விட அதிகமான வீதமானோர் இம்முறை வாக்களித்துள்ளார்கள். நான் முதலில் இம்மக்கள் ஏதோ செய்திகள் சொல்ல போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் கள்ள வாக்குகள் முலம் தான் இந்த வீதம் இப்படி அதிகரித்தது என்று உய்த்தறிய முடிகிறது.வாக்கு போடாதவர்களின் வாக்குகளை எந்த (secure system) மூலமாகவும் வாக்களிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யமுடியாது என்றால் சிவகங்கையில் முதல் கணக்கெடுப்பில் மண் கௌவிய சிதம்பரம் இரண்டாம் முறை கணக்கெடுப்பில் வென்றது எப்படி?

இம்முறை இந்திய தேர்தல் வாக்குப்பதிவில் கைவேலை நிறையவே இருந்ததற்கு ஆதாரமுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் ஒரு ஆதாரம் .

விருது நகரில் வைக்கோ வெற்றியா ? தோல்வியா ?

விருதுநகரில் கூடுதல் வாக்குகள்-முடிவு நிறுத்தி வைப்பு

விருதுநகர்: விருதுநகரில் கூடுதலாக 25 ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளதால் அங்கு முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் தொகுதியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் இடையே நேரடிப் போட்டி நிலவியது.

கடும் இழுபறியாக இருந்து வந்த நிலையில் இறுதியில், 15,764 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக் தாகூர் வென்றதாக அறிவி்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஒரு வாக்குச் சாவடியில் மொத்த வாக்குகளை விட கூடுதலாக 25 ஆயிரம் வாக்குகள் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ப.சிதம்பரம் போட்டியிட்ட சிவகங்கை தொகுதியில் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வைகோ தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்ட விருதுநகரில் கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளதாக கண்டுபிடிக்கு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி தற்ஸ் தமிழ்

இப்படிச் சொல்லி எம்மை நாமே ஏமாற்ற வேண்டியது தான் . இலத்திரனியல் வாக்கு எந்திரத்தின் மூலம் கள்ள வாக்குகள் போடுவது மிகவும் கடினம் என்பதுடன் கள்ள வாக்குகள் ஒரு பெரிய அளவில் மாற்றத்தினை கொண்டுவருவது ஒருபோதும் கிடையாது. ஜெயா போன்றவர்கள் தவிர வேறு யாரும் இவ்வாறு சொல்வதில்லை. கள்ளா வாக்குகளும் வாக்கு இயந்திர மோசடியும் மாற்றத்தினை கொண்டு வந்து இருந்தால், இளங்கோவனும் தங்கபாலுவும் கூட வென்று இருக்க வேண்டும்

பா.ஜ.க வே தன் தோல்வியினை ஒத்துக் கொண்டு மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகின்றது. அவர்கள் நொண்டிச் சாக்கு சொல்லவில்லை

தமிழக மக்கள் ஈழப் பிரச்சனையை பிரதான பிரச்சனையாக பார்க்கவில்லை என்பதும், காங்கிரஸ் ஈழ மக்களுக்கு செய்து வரும் அநியாயம் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்பதும் தான் யதார்த்தம். தமிழ மக்கள் தனித் தமிழீழக் கோரிக்கையை தமது முக்கிய விடயமாக அங்கீகரிக்க வில்லை என்பது உண்மை

எம் இந்தியா பற்றிய கனவுகள் இந்த யதார்த்ததினை உள்வாங்கியே இருக்க வேண்டும்

நமக்கு பாதகமான நிலை வரும்போது நாம யாரும் உண்மையை ஏத்துக்கிறது கிடையாது. நீங்க சொல்றது உண்மைதான். ஆனால் இந்த தேர்தல்ல பணம் பாதளம் வரைக்கும் பாய்ந்திருக்கிறது அதைவிட உண்மை.

தி.மு.க வை பொறுத்தவரைக்கும் ஈழப்பிரச்சனையில் மட்டுமில்லை மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற இன்னும் சில பிரச்சனைகள்ள மக்கள் மத்தியில் அதிருப்தி இருந்திருக்கு. அ.தி.மு.க வோடு பார்க்கும்போது காங்கிரஸ் செல்லாக் காசு. ஈழப்பிச்சனையால அவங்க நிலைமை காறித்துப்புற நிலைக்கு வந்தது.

அப்படி இருந்தும் ஜெயிச்சிருக்கிறாங்க என்றால் அது பணம் பாதளம் வரை பாய்திருக்கிறது என்பதுதான் உண்மை. அப்படி இருந்தும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மணிசங்கர ஐயர், தங்கபாலு போன்ற தமிழ் விரோதிங்க தோத்திருக்கிறாங்க என்றால் அதையும் மீறி தமிழ் உணர்வு பாய்திருக்கிறது.

தமிழ் விரோதி சிதம்பரத்தோட பண பட்டுவாடாவையும் தாண்டி மக்கள் அவரைத் தோற்காடிச்சாங்க, மறுபடியும் பணத்தை கொட்டி சிதம்பரம் ஜெயிச்சிருக்கிறார்.

பணத்தாலயே 40 தொகுதி எடுத்திருப்பானுங்க அதைத் தடுத்தது தமிழ்தான்.

பணத்தைத் தவிர தயாநிதி மாறனுக்கு என்ன தகுதியிருக்கு ?

ரவுடியிசத்தைத் தவிர அழகிரிக்கு என்ன தகுதியிருக்கு ?

உள்ளுர் கொள்ளைக் காரங்களும், பேட்டை ரவுடிகளும், தாதாக்களும் ஜெயிச்சிருக்காங்கன்ன என்னங்க காரணம்?

பணத்தால் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டிருக்கு

Edited by ஜனனி

ஏன்?

பிரபல எழுத்தாளரும் இலத்திரனியல் இயந்திரவியலாளருமான சுஜாதா இந்த இயந்திரத்தின் வடிவமைப்பு, அதன் செயல் பாடு, பாதுகாப்பு ஏற்பாடு என்பன பற்றி மிக விளக்கமாக ஒரு கட்டுரை ஒன்றை காலச்சுவடிலும் ஆந்த விகடனிலும் எழுதியிருந்தார். அவர்தான் இந்த மின்னனு இயந்திர வடிவமைப்பின் பிரதான பாத்திரம் ஏற்று இருந்தார் என்பதால் மிக விளக்கமாக இருந்தது அக் கட்டுரை. ஒரு சில வாக்களிக்கும் நிலையங்களில் வேண்டும் என்றால் கள்ள இயந்திரங்களை (Original design அல்ல) வைத்து வாக்கை மாற்ற முடியும், தமிழகம் போன்ற பரந்த ஒரு பிரதேசத்தில் அப்படி duplicate இயந்திரங்களை வைக்க முடியாது

இலத்திரனியலில் வல்லவனுக்கு வல்லவன் எப்போதும் உண்டு. இவ்வியந்திரங்கள் எத்தனையோ ஆண்டு பழமையானது முழுமையாக நம்பமுடியாது. பெரிய பெரிய வல்லரசுகளின் வலையமைப்புகளையே ஊடுருவுகிளார்கள். இதற்கு மாற்று software கண்டுபிடிப்பது ஒன்றும் கடினமில்லை..

  • தொடங்கியவர்

நான் இங்கே ஓர் அடிக்கோடிடப்பட்ட விடயத்தினை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 1. தேர்தல் இடம்பெற்ற பல தொகுதிகளில் காலையிலிருந்தே வாக்குப்பதிவுக்கருவிகள் வேலை செய்யவில்லை.

2.உடனடியாக அவை திருத்தப்பட்டபின்னரே அவை மீண்டும் தேர்தலில் பயன்படுத்தப்பட்டன.

3. தயாநிதிமாறன் சொந்தமாக பல மென்பொருள், வன்பொருள் உற்பத்தி நிறுவனங்களை நடாத்துவதோடு மட்டுமல்ல அவரே இந்தியாவின் தகவற் தொழிநுட்பத்துறை அமைச்சராக இருந்தாவர். உயர் தகவற் தொழில்நுட்ப பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு அவரே வேலைகளையும், கொடுத்தவர் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும்

4. ஒரு அரசை நிர்ணயிக்கப்போகும் அந்த இலத்திரனியற் கருவிகள் எவையும் தகுந்த சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.

5. பலருடைய பெயர்கள் வாக்குச்சீட்டில் பதியப்படவில்லை (உ.ம்:- நடிகர் கமலஹாசன்)

6. சில தொகுதிகளில் மொத்த வாக்குகளிலும் பார்க்க இருமடங்கு எண்ணிக்கையான வாக்குகளும் பெறப்பட்டிருக்கின்றன

7. தேர்தல் அதிகாரியின் மாற்றம்

8. தற்கொலை செய்துகொண்ட நபர் தற்கொலை செய்துகொண்டதற்காக குறிப்பிடப்படும் காரணம் "நான் பொத்தானை அழுத்தினேன், ஆனால் அது வேறு சின்னத்தில் வெளிச்சம் எரிந்தது".

9. உண்மையான வாக்காளர்கள் கூட பொலிசாரினால் திருப்பி அனுப்பப்பட்டமை

10. தட்டிக்கேட்டவர்களை அடிதடிக் கும்பல் வந்து வெட்டிச் சென்றமை. மற்றும் அவர்களுக்கே பொலீஸ் பாதுகாப்புக்கொடுத்தமை, அத்தோடு மட்டுமல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் மேலேயே தேர்தல் வன்முறைக்குற்றச்சாட்டு வழக்குப் பதியப்பட்டுள்ளமை.

இதனைவிட இன்னும் ஆயிரமாயிரம் உண்டு. பணம் மட்டும் தேர்தலில் விளையாடவில்லை. இங்கே தந்திரோபாயம் என்பதற்கு அப்பால் மக்களது உண்மையான எண்ணங்கள் கண்ணோட்டங்கள் அனைத்துமே சிதறடிக்கப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்த தமிழகமும் கேட்டால் சொல்லும் என்ன நடந்தது என்று...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அதன் நடைமுறை என்ன ? ....

அரசு அதிகாரிகளிடம் பேசிய போது, அவர்கள் சொல்லும் நடைமுறையைப் பார்த்தால், ப்ரோகிராமில் மாற்றுவது இயலவே இயலாது எனத் தெரிகிறது.

* ஒரு வோட்டிங் மெஷின் ரெடியானதும், ரிட்டர்னிங் ஆஃபிஸர் (இவர் டெபுடி ஐ ஏ எஸ் ரேங்கில் இருப்பவர்) கையில் ஒப்படைக்கப்படுகிறது.

* அவர் எல்லாக் கட்சி ஏஜெண்டுகளையும் அழைத்து, எல்லா பட்டனிலும் வாக்கு போட்டு, மீண்டும் அதை சரிபார்த்து கையெழுத்து வாங்கிக்கொள்கிறார்.

* பின்னர் அந்த மெஷின்கள் காவல்துறை வசம் ஒப்படைக்கப்படுகின்றன.

* மீண்டும் காலையில் வோட்டிங் துவங்கும்போது, மெஷினில் ரீசெட் பட்டன்கள் எல்லா ஏஜெண்டுகளின் முன் அமுக்கப்பட்டு, பதிவான வாக்குகளின் எண்ணிக்கை பூஜ்யம் என உறுதி செய்யப்படுகிறது.

* வாக்குப் பதிவு முடிந்ததும், ஒவ்வொரு மெஷினிலும் எத்தனை வாக்குகள் பதிவாகியிருக்கின்றன எனப்தை மெஷினிலேயே எல்லா ஏஜெண்டுகளிடம் காண்பித்து, அதில் கையெழுத்தும் வாங்கிக்கொள்கிறாகள்.

* மெஷின்கள், எல்லாக் கட்சி ஏஜெண்டுகளிடமும் கையெழுத்து வாங்கப்பட்ட படிவங்களுடன், பெட்டிக்குள் வைத்துப் பூட்டப்படுகின்றன. ஏஜெண்டுகளின் மோதிர முத்திரையோடு கூடிய அரக்கு சீல் வைக்கப்படுகிறடு.

* வாக்கு எண்ணிக்கையின்போது திறக்கப்படும் பெட்டிகளில், இந்த அரக்கு சீல் முத்திரையை ஏஜெண்ட் ஒப்புக்கொண்ட பின்பே, எண்ணிக்கை ஆரம்பிக்கிறது.

* ஒவ்வொரு மெஷினிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை ஏஜெண்ட் சரி பார்க்கிறார். வாக்குப் பதிவின் போது நடந்த எண்ணிக்கையும் இதுவும் ஒன்றா என சரிபார்க்கப்படுகிறது. பின்பு மெஷினில் ஒவ்வொரு எண்ணுக்கும் வாக்குகள் காண்பிக்கப்படுகின்றன. எண்ணும் கட்சியும் ஒப்பு நோக்கப்பட்டு கட்சிக்கான வாக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதை ஒவ்வொரு பூத் ஏஜெண்ட்டும் சரி பார்த்து கையெழுத்துப் போடுகிறார்கள்.

* நாம் சந்தேகப்படுவது போல் ப்ரோகிராம் செய்திருந்தால், ஒரு மெஷினில் அதிமுக 0 மற்றும் திமுக 4000 என வந்திருக்கவேண்டும். இப்படி வந்தால், எந்த ஏஜெண்ட்டும் சந்தேகித்துவிடுவான். எனவே இது நடக்க வாய்ப்பில்லை.

* ஒட்டுமொத்த மெஷினும் எண்ணிக்கையும், பூத் போலிங் எண்ணிக்கயும் ஒப்பிடப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றனவாம்.

* ஒரு மெஷினில் 1000 வாக்குகள் மட்டுமே அளிக்க இயலும். எனவே ஒரு பூத்தில் 1000க்கு உட்பட்ட மக்கள் வாக்களுக்குமாறு பார்த்துக்கொள்கிறார்கள். கூடினால் அவரை இரண்டு பூத்துகளாகப் பிரிக்கப்படும். அல்லது அருகில் குறைந்த வாக்காளர்கள் எண்ணிக்கையுள்ள பூத்துடன் இணைக்கப்படும்.

* அப்படியானால், சிதம்பரம் வென்றதாக நடந்த இடத்தில் நடந்த விஷயம் என்ன? ஆபிசர் மிரட்டப்பட்டு, ஏஜெண்டுகள் விலைக்கு வாங்கப்பட்டு, அதிகாரிகளுக்குத் தெரியாமல், அப்சர்வர் (இரண்டு அதிகாரிகள்) விலைக்கு வாங்கப்பட்டு, எத்தனை வாக்குகள் பதியப்பட்டனவோ அதற்கு இணையான வாக்குகளை ஒரு மெஷினில் பதிந்து, இந்த மெஷினை வைத்தால் மட்டுமே இது சாத்தியம். இருக்கும் குறைவான நேரத்தில் இது சாத்தியமா?

* வைகோ விஷயத்தில் நடந்தது பெரிய மர்மம்தான். 27000 வாக்குகள் எங்கிருந்து வந்தன? புதியதாக மெஷின்கள் சேர்க்கபப்ட்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம். இதை எளிதாகக் கண்டுபிடுத்துவிடலாம். எத்தனை மெஷின்களுக்கு பூத் ஏஜெண்ட்டுகள் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள் எனப் பார்த்து அவற்றைப் பிரிக்கவேண்டும். அவற்றில் ஏதேனும் காணாமல் போய், அதற்குப் பதிலாக புதிய மெஷின்கள் இருந்தால் (அதிக மெஷின்கள் சேர்க்க வாய்ப்பில்லை. ஏனென்றால், ஒரு மெஷின் என்பது ஒரு பூத். திடீரென இரண்டு பூத்துகளை யார் சேர்க்கமுடியும்) அதை உறுதி செய்யவேண்டும். செய்தால், இருக்கும் ஒரே வழி, எந்த இரண்டு மெஷின்க்ள் காணாமல் போனதோ, அந்த இரண்டு பூத்துகளில் வாக்குப்பதிவே.

* இதிலிருந்து தெரிவது என்ன? ஒரு குறிப்பிட்ட இடத்தில், மிரட்டி என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும் என்றாலும், அதைக் கண்டுபிடிக்க பல வழிகள் இருக்கின்றன. அதை செய்யப்போவது யார்? ஆனால், ஒரு கட்சிக்கு வாக்களித்தால் இன்னொரு கட்சிக்குப் போகுமாறு செய்யமுடியாது என்பது உண்மைதான்.

இணையத்தில் சுட்டது.......

இப்படி எத்தனை சான்றுகளை முன் வைத்தாலும் ஒரு சிலருக்கு அது பிடிக்காது, கேட்கமாட்டார்கள். எமக்கு உவப்பில்லா விடயம் நடந்துள்ளது என்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாவிடின் பிரச்சனைகளின் ஆழ வேர்களை இனம் கண்டு தீர்க்க முடியாது.

கள்ள வாக்கு பலத்தால் தான் தி.மு.க கூத்தணி வென்றுள்ளது என்று தம்மையே தாமும் ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்றுகின்றனர். நன்கு பட்ட பின்பும் கூட, இன்னும் இந்தியா ஏதாவது செய்யும் என்று நினைப்பவர்களை என்னவென்பது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.