Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர் இன்னும் முடியவில்லை !

Featured Replies

பிராபகரன் கொல்லப்பட்டதாக பி.பி.சி, ராய்ட்டர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று காலை ஒரு ஆம்புலன்சு வண்டி மூலம் ராணுவத்தை ஊடுறுவி வெளியேற முயன்றபோது பிரபாகரன், பொட்டு அம்மன், சூசை மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறுகிறது இராணுவம். நேற்றிரவு பிரபாகரனது மகன் சார்லஸ் ஆண்டனி, அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், செய்தித் தொடர்பாளர் புலித்தேவன், உட்பட சுமார் 250 புலிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சார்லஸ் ஆண்டனி மரணமடைந்த காட்சிகளை இலங்கை அரசு தொலைக்காட்சி நிறுவனம் தொடர்ந்து ஒளிபரப்புகிறது.

இன்று மாலை அதிபர் மகிந்த ராஜபக்க்ஷே இந்தத் தகவல்களை அதிகாரப்பூர்வமாக தொலைக்காட்சியில் தெரிவிப்பார் என்று பி.பி.சி கூறுகிறது. அதற்கு முன்னர் இந்த விசயம் தொடர்பாக அவர் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் தொலைபேசியில் பேசும் போது பிரபாகரன் கொல்லப்பட்டு போர் முடிவுற்றதாக பேசியிருக்கிறார். நேற்றே இராணுவத் தளபதி பொன்சேகா புலிகளின் கடைசி இடத்தையும் பிடித்துவிட்டதாகவும் தற்போது முழு இலங்கையும் பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் பேசியிருக்கிறார். சிங்களர மக்கள் மத்தியில் இந்த செய்தி பெரும் ஆரவாரத்தையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. தலைநகர் கொழும்பில் தாரை தப்பட்டைகளுடன், இனிப்பு வழங்கி தேசிய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதிபரின் பேச்சிற்குப் பிறகு நாளை தேசிய விடுமுறை அறிவிக்கப்படலாம். ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்களினால் இனவெறி ஊட்டப்பட்ட சிங்கள மக்கள் உண்மையில் நிம்மதியை இழப்பதன் துவக்கம்தான் என்பதை அவர்கள் இப்போது உணர வாய்ப்பில்லை.

பிரபாகரன் போர்க்களத்திலேயே இல்லை அவர் கிழக்கு மாகாணத்தின் காடுகளுக்கு பெயர்ந்திருக்கக்கூடுமெனவும

ஐயா நீங்கள் மகிழ்ச்சி கொள்ளலாம். உங்கள் மகிழ்ச்சி எத்தனை காலம் வரை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் உயிருடன் இருக்கிறார் என்பது ஆறுதலான செய்தி. ஆனால் போர் முடிந்தது முழு இடத்தையும் சிறி லங்கா கைப்பற்றி வீட்டது என்று நாம் அமைதியாக இருந்து விட முடியாது. புலம் பெயர் தமிழர்களாகிய நாம் மிகவும் காலதாமதமாகவேனும் விழித்து கொண்டு வீதியில் இறங்கினோம், எமது இலக்கு இன்னும் அடையப்படவில்லை.

மீண்டும் நாம் தூங்கிவிடாது சிறி லங்கா மீது போர்குற்ற விசாரணை நடத்தவும், சர்வதேச சமூகம் மறுபடியும் எமது பிரச்சனையை கிடப்பில் போட்டுவிடாமல் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களின் நலனை பேணவும், எமது இலக்கு புலிகளை சிறி லங்கா இல்லாது செய்துவிட்டது என்ற செய்தியுடனும் ஓய்ந்துவிடப்போவதில்லை என்பதை தெளிவாக எடுத்துரைப்போமா? புலம் பெயர் மக்களது போராட்டங்கள் தொடருமா?

தொடரவேண்டும் அதன் மூலம் தான் எமது கருத்தை மேலும் தெளிவாக சொல்ல முடியும், எமது தனி நாட்டு கோரிக்கை என்பது புலிகள் இயக்கத்தை அழித்து விடுவதால் தீர்க்கப்படுவதல்ல, எமக்கான உரிமைகள் வழங்குவதன் மூலமே தீர்க்க முடியும் என்பதற்க்காக நாம் தொடர்ந்து போராடியே ஆகா வேண்டும்.

The idea that Tamils in Sri Lanka face annihilation if they do not secure an independent homeland drives many of the most passionate voices in the Tamil diaspora. On the Monday morning edition of the BBC’s Global News podcast, Vinothini Kanapathipillai, who is an editor at the Tamil Guardian, argued that the end of the military campaign would not bring peace to Sri Lanka because, she said, the government has been using the war as a pretext to wipe out the Tamil population. Ms. Kanapathipillai told the BBC’s Fergus Nichol: “It seems to me that the conditions that created the L.T.T.E. have not changed and therefore, Is this the end for the Tamil resistance against what we see as genocide and oppression? I would argue not.”

http://thelede.blogs.nytimes.com/2009/05/1...nder/?ref=world

Edited by yarlpaadi

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆக்கத்தின் உள்நோக்கம் சற்று சந்தேகத்தை கொடுக்கின்றது, அளவுக்கு அதிகமாக விடுதலைப்புலிகளை விமர்சிப்பதுபோல் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகின்றது. அதாவது விடுதலைப்புலிகள் அரசியல் அறிவோ, அல்லது தூரநோக்கம் இல்லாதவர்கள் என்ற கருத்துப்பட உங்கள் ஆக்கம் நீண்டு செல்கின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா, வந்து தங்கத்தாம்பாளத்தில் ஈழத்தை அப்படியே பெற்றுத்தரும்” என்று நீங்கள் நினைத்திருக்கலாம் ஆனால் பல்லாயிரக்கணக்கான மாவீரர்களை விதைத்துக்கொண்ட நாம் நினைத்திருக்கவில்லை. மக்கள் பலமே புலிகளின் பலம்.

இழப்புக்கள் புதிதல்ல. ஆனால் அதை பலவீனம் என நினைத்துக்கொண்டு உங்கள் சொற்பலத்தை எப்படியெல்லாம் காட்டுகின்றீர்கள். பலத்துடன் இருந்த போது புலி புலி என்ற வாய்கள் இப்போது ‘பணிந்துகிடந்திருந்தால் பலம் பெற்றிருக்கலாம் என்று சவடால் விடுகின்றன அந்த எழுத்தில் இருந்து நீங்களும் தப்பவில்லை. இத்தனை காலம் உங்கள் எழுத்தை ஒரு நேர்மையான கண்ணோட்டத்துடன் பார்க்க வைத்துவிட்டு கடைசியில் நானும் ‘இந்தியன்’ என்பதை முத்திரை குத்திக்காட்டி விட்டீர்கள் நன்றி வினவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் என்ற சொல் அதன் பாரிய அரசியல் பொருளில் புலிகளால் புரிந்து கொள்ளப்படவில்லை. ஒரு போராட்டமும், அதன் எழுச்சியும், ஏற்ற இறக்கமும் மக்களின் உணர்வு நிலையைக் கொண்டே தீர்மானிக்கப்படவேண்டும். இந்த மக்கள் கூட்டம் அரசியல் ரீதியில் திரட்டப்பட்டிருந்தால் ஐந்து இலட்சம் மக்கள் தெருவில் இறங்கி ஈழத்திற்காக குரல் கொடுத்திருந்தால் எந்தப் பெரிய இராணுவமும் ஒன்றும் செய்திருக்க இயலாது. அதை நேபாளத்தில் கண்டோம்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிங்களவனோடு இந்த மக்கள் புரட்சி எல்லாம் செல்லுபடியாகாது. அவனுக்கு நாம் மனிதர்களே இல்லை. ஆயத பலம் மட்டுமே நம் மானம் காத்தது. கடந்த கால சரித்திரத்தை மறந்து இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கின்றது. எத்தனை கொலை, மானபங்கம், சித்திரவதை, கைது, ஏளனம், உடைமை அபகரிப்பு, நிராகரிப்பு...மறக்க முடியுமா?

போராட்டத்தின் போது தமிழர்கள் அந்த அந்த நாட்டு கொடிகளை கட்டாயம் காட்ட வேண்டும்.

கனடா , அமெரிக்க , இங்கிலாந்து , பிரான்ஸ் , நோர்வே நாட்டு கொடிகளை நாம் உபயோகிக்க வேண்டும்.

இது முக்கியம். ஏன் என்றல் மேற்கு உலக நாடுகளின் மக்கள் துணை நமக்கு தேவை ஈழம் அமைய !

எமது தேசியமும் எம்மக்களின் உரிமைப் போராட்டமும் பரிமாண மாற்றமடையும் ஒரு முக்கியமான காலகட்டதில் நிற்கும் இந்நிலையில், எமது பேச்சிலும் எழுத்திலும், நிதானமும் அவதானமும் இருக்கவேண்டியது அவசியமானதாகும். தேசியத்தின் தேவையையும், சுயநிர்ணயத்தின் கருப்பொருளையும், தாயகதின் மதிப்பையும் எம்மக்களுக்கு உணர்திவிட்ட புலிகள்மீது எதிரி பூசமுற்பட்ட சேற்றினை - இந்தக் கட்டுரை பூச முற்படுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமை வாழ்வைநோக்கிச் சென்றுகொண்டிருந்த எம் மக்களின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தவர்கள் புலிகள். புலிகள் கூவி அழைத்தபோதும், ஒதுங்கிவாழமுற்பட்ட பெருந்திரளான எம் மக்களைத் தவிர்த்துதுவிட்டு, புலிகளின்மீது குறைகூற முனையும் இந்த எழுத்து சற்று சந்தேகத்திற்குரியதே. கடந்தகாலத் தவறுகளில் இருந்து திருந்திக் கொள்ளவெண்டும் என்ற நல்ல நோக்கில் எழுதப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஈழத் தமிழன் ஒவ்வொருவனும் பூசிக்கும் தெய்வங்கள் எங்கள் புலிகள். இதுவரை புலிகள் போன்ற புனிதர்கள் ஈழதிலோ தமிழ் நாட்டிலோ பிறந்ததில்லை.

புலிகளும் இல்லையேல் இந்நாளில் - எலிகளும் தின்னும் தமிழரை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இவ்வளவு நாளும் நடந்த போரில் மக்கள் அழிவது கண்டு போரை நிறுத்தாத சர்வதேசம் போர்க்குற்றம் பதிவதில் முனைப்புக்காட்டுகின்றது. எஞ்சிய தமிழனாவது சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க விடுதலைக்கு வழி செய்யுங்கள். போர்க்குற்றங்கள் நடக்கின்றன என்று தெரிந்தும் குருடனும். செவிடனும் போல் இருந்துவிட்டு பிரச்சினைக்குத்தீர்வு காண்பதைவிடுத்து போர்க்குற்றம் பதிவதில் தமிழனுக்கு என்ன லாபம்? இவங்கள் இருவரிலும் போர்க்குற்றம் பதிய இந்தியா விடாது. ஏனெனில் அவர்கள் புரிந்தது தான் இது. தமிழனை வாழவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் அளப்பரிய ஆற்றலைக் கொண்டு மாபெரும் அரசியல் எழுச்சிகளை தோற்றுவிக்கமுடியும் என்பதை புலிகள் எந்தக் காலத்திலும் உணரவில்லை.

மக்கள் புரட்சி எல்லாம் எழுத நல்லாத்தான் இருக்கும் நடைமுறையில் சரிவராது.....

சோத்துக்கும் ( 1கீலோ அரிசி) சீரியலுக்கும் ( வண்ண தொலைக்காட்ச்சி) இனமானத்தை அடகு வைத்த பெரும்பான்மை தமிழக மக்களில் நிங்களும் ஒருவர். நேபாளத்தையும் எமது ஈழ போராட்டத்தையும் ஒப்பிடமுடியாது. இரண்டும் வேறுபட்ட வடிவங்கள்.

தலைவர் நலமாக உள்ளார் என்பதே போதுமானது. அவரே எமது ஆத்மபலம் உயிர் முச்சு. விழ விழ எழவோம் விடுதலை படைப்போம்.

பல நிஜங்களை இக்கட்டுரை தொட்டுச் செல்கின்றது. இழவு வீட்டில் இலாப நட்டக் கணக்கு பார்த்தல் எவ்வளவு பொறுத்தம் என்று தெரியவில்லை. இருப்பினும் நன்றி. தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு நன்றி ..தொடர்ந்து எழுதுங்கள். இன்னும் நீண்ட கால பணி உண்டு .......வடிவம் மாறலாம் கொள்கை ஒன்றே அதற்காக முன்னின்று உழைப்போம். இழவு வீட்டில் இலாப நட்டக் கணக்கு பார்த்தல் எவ்வளவு பொறுத்தம் என்று தெரியவில்லை. இருப்பினும் நன்றி. தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல நிஜங்களை இக்கட்டுரை தொட்டுச் செல்கின்றது. இழவு வீட்டில் இலாப நட்டக் கணக்கு பார்த்தல் எவ்வளவு பொறுத்தம் என்று தெரியவில்லை. இருப்பினும் நன்றி. தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்.

நல்ல பதிவு நன்றி ..தொடர்ந்து எழுதுங்கள். இன்னும் நீண்ட கால பணி உண்டு .......வடிவம் மாறலாம் கொள்கை ஒன்றே அதற்காக முன்னின்று உழைப்போம். இழவு வீட்டில் இலாப நட்டக் கணக்கு பார்த்தல் எவ்வளவு பொறுத்தம் என்று தெரியவில்லை. இருப்பினும் நன்றி. தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்.

நல்ல பதிவு ????????

நல்ல பதிவு ????????

பத்மநாதன் தமிழ் நெற் இற்கு அளித்த பேட்டியின் தொனி புலிகள் ஒரு மாற்றத்திற்கு உட்படுகின்றார்கள் என்பது தான்.

கடந்தகால தவ‌றுகள் சுட்டிக்காட்டப் படுவது, வடிவ‌ங்கள் மாறும் போது மீண்டும் அதே தவற்றை இழைக்காமல் இருக்க.

இனிவ‌ரும் கால‌க‌ட்ட‌த்தில் புல‌ம்பெய‌ர்ந்த‌வ‌ர்கள் போராட்ட‌த்தில் முக்கிய‌ பங்க‌ளிக்க‌ இருப்ப‌தால், அர‌சிய‌ல் ஆய்வுக‌ள் ம‌க்க‌ளைச் சென்ற‌டைய‌ வேண்டும். புலிகளே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள் என்ற மன நிலையில் மாற்றம் வேண்டும்.

த‌னித்து நின்று போராடி இல‌க்கை புலிக‌ள் அடைய‌ முடியுமா என்று, இன்று நாம் அறிந்து கொண்டுள்ளோம்.

புல‌ம் பெய‌ர்ந்த‌வ‌ர்க‌ள் அர‌சிய‌ல் பொருளாதார‌ ரீதியாக‌த் தான் பங்களிக்க முடியும். ஆகவே அவர்களின் "சுயாதீன" அரசியல் தெளிவு முக்கியம். அப்படி இருந்தால் தான் சிக்கல் மிகுந்த உலக அரசியலினூடாக ஈழப் போராட்டத்தை அவர்களால் நகர்த்த முடியும். சார்பான, சார்பற்ற கருத்துக் களினூடாக ஈழம் என்ற இலக்கை நோக்கி சிந்திக்கும் திறன் அவர்களுக்கு வேண்டும்.

மாற்ற‌ங்க‌ளுக்கு உட்ப‌டுகின்ற இந்த ஒரு முக்கிய‌மான‌ கால‌க‌ட்ட‌தில், கடந்துவந்த பாதையில் உள்ள தவறுகள் என்ன, தீமைகள் என்ன என்ற ஆய்வு அவசியம். புதிய பாதையில் இவற்றை தவிர்பதற்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த 2 நாட்களாக மிக மிக கவலை யோடு இருந்த நான் யாழ் இணையத்தில் தலைவர் நலமாக இருக்கிறார் என்ற செய்தியை பார்த்த உடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவேண்டும், ஆய்வுகள் மக்கள் முன் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லாத போதும் வேண்டுமென்றே வரும் விமர்னங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை யாருக்கும் இல்லை என நினை;ககின்றேன். எமது போராட்டத்தை பற்றி பார்வைகள் தமிழகத்திலிருந்து பார்வையாளராக எழுதுபவர்களுக்கு எந்தளவுக்கு புரியும் என்பது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

மாற்றத்தை விரும்பும் நீங்கள் அனைவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன் மாற்றம் பெற்றிருந்தால் நிச்சயம் பாரிய மாற்றமே நிகழ்ந்திருக்கும். உங்களை வீதியில் இறங்கி போராட வேண்டாம் புலிகள் ஒருபோதும் சொன்னதில்லை. தலமை, நாடு என்று மற்றவர்களை முட்டாளாக்கிய படியே வேலை வீடு, உணவு உறக்கம் என்று இருந்த படியே கணினியில் செய்தி பார்த்து களைப்பதை தவிர வேறு என்னத்தை செய்து கொட்டினீர்கள்? தலைவர் தெளிவாக தனது எண்ணத்தை மாவீரர் தின உரையில் சொன்ன போதும் அதை செயற்படுத்த தவிறியது அல்லது செயற்பாடுகளை தவிர்த்தது புலிகளும் எமது தலைவரும் என்று கூற போகின்றீர்களா?

இப்போது வாதாடுவதற்க்கு ஒன்றுமில்லை. எனது கருத்து எடுபட வேண்டும் என்ற தேவை கூட இன்று இல்லை. காலம் கடந்த ஞானம் புலத்தில் வந்திருப்பதே அதிக பட்ச முன்னேற்றமே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரை அருமையானது . கருத்துக்கள் உணமையானவையாக, யதார்தமானவையாக இருக்ககலாம். ஆனால் கதைப்பதும் எழுதுவதும், குற்றம் கண்டு பிடிப்பதும், அறிவுரை வழங்குவதும் மிக இலகு. ஆனால் நிலத்தில் நின்று மாவீரர்கள் போல் செயல் பாட்டில் காட்டுவது மிக மிக கடினம். தேசம் விட்டு உயிருக்கு பயந்து எனது குடும்பம், உறவுகள் என நாடு விட்டு நாடு வந்த வந்தேறு குடிகள் நாங்கள். கதைப்பற்கும், குற்றம் கண்டு பிடிப்பதற்கும் அருகதையற்றவர்கள்.

புலம்பெயர்ந்த தேசத்தில், தேசத்தின் பெயரில் வேலை செய்பர்களிடையே எவ்வளவு போட்டிகள், பொறாமைகள், நான் பெரிது நீ பெரிதுகள், இருக்கும் போது, உலகின் மிக பெரிய சுதந்திர போராட்ட அமைப்பை ஒரு நேர் கோட்டில் இட்டுச்செலவது மிக கடினம். எமது போராட்டமும், எமது தலைமையும் எவ்வளவு துரோகங்கள், தடைகள், கட்டுபாடுகள், முதுகு குத்தல்களை தாண்டி உயிரின் கடைசி நிமிடம் வரை போராட்டம் தொடர்ந்தது.

எமது இயக்கமும் சரி, தலைவரும் சரி, மற்றய வித்தான வித்துக்களும் சரி, பிழை விட்டவர்களாக இருக்கலாம் ஆனால், அவை எல்லாம் அவர்கள் செய்த தியாகத்தின் முன்னால் தூசாகி போச்சு. அவர்களில் பிழை கண்டு பிடிப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அறிவுரை கூறுபவர்கள் போராட்ட களத்தில் நின்று கொண்டு வழி முறை படுத்துதல் நியாயமானது.

குற்றம் கண்டு பிடிப்பவர்களுக்கு எனது பதில்,,,,பிரபாகரனும் சரி அவன் படைகளும், சரி, இலங்கை அரசு செய்யும் பொய் பிரச்சாரம் போல் இறந்திருந்தாலும் கூட, அவன் போல், அவன் வளர்த்த படை யணி போல் வீரம், உறுதி, தன்னம்பிக்கை, ஒழுக்கம் மிக்க படையணி எங்கும் காண முடியா... அவர்கள் சுத்தமான ரத்ததில் பிறந்த, அதி உயர் வீரர்கள். அவர்களாலும் கரு நாகம் கருணா போல், தேவானந்தா போல், இனத்தை காட்டி குடுத்து பிழைப்பு நடத்தியிருக்க முடியும். ஆனால் கடைசி நிமிடம் வரை களத்தில் நின்று கடைசி மூச்சு வரை போராடினார்கள்.

முடிந்த வரை செய்யாமல் முடியும் வரை செய்து காட்டி விட்டு சென்று விட்டிருக்கிறார்கள். முடிவு?????? இன்னும் எட்டவில்லை.... தொடரும்......

செயல் வீச்சில் காட்டி சாதிக்க முடியாதவர்கள் வாய்வீச்சில் சாதிக்க நினைப்பது மிக தவறு. தலைமை மீதும் அமைப்பு மீதும் குற்றம், குறை கண்டு பிடிப்பதை நிறுத்துங்கள். அவர்கள் அது செய்தார்கள் இது செய்தார்கள் என்பதை விட்டு விட்டு இனி உருப்படியாய் என்ன செய்வோம் என்பதை யோசிப்போம். கடைசியாய் இன்னொரு சந்தர்ப்பம் ... பயன்படுத்துவோம் பயனுள்ள வகையில்........

தமிழர் நாம் சாம்பல் பறவைகள் என்பதை நிரூபிப்போம்..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.