Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

(BTF) தமிழ் மக்களின் குரலின் மீள்பார்வை மீளமைப்பு மற்றும் மீள்நிர்மாணம்

Featured Replies

இது BTF நடத்தும் கருத்துக் கணிப்பு. உங்கள் கருத்துக்களை இங்கேயே பதிவு செய்து கொள்ளலாம். எல்லாரும் பார்க்க வசதியா இருக்கும். (எங்கிருந்தாலும் சபேசன் உடனடியாக மேடைக்கு வரவும்)

1. எதிர்காலத்தில் தமிழ்மக்களின் குரல் எவ்வாறு பலப்படுத்தப் படவேண்டும்.

1.1 BTF தற்போது நடைமுறையில் உள்ளவாரே இதனைச் செய்யவேண்டும்.

1.2 BTF விரிவாக்கப்பட வேண்டும். அது தமிழ் மக்களின் அனைத்து குரல்களையும் உள் வாங்கவேண்டும்.

1.3 புதியதோர் அமைப்பை உருவாக்க வேண்டும்

1.4 BTF கலைக்கப்பட்டு கைவிடப்பட வேண்டும்

1.5 வேறு ஜோசனைகள்.

2. BTF அல்லது புதியதோர் அமைப்பு எவ்வாறு மீள் அமைக்கப்படவேண்டும்

2.1 : அதிகாரமையப்படுத்தப்பட்ட அமைப்பாக

2.2 : அதிகாரம் பகிரப்பட்ட அமைப்பாக

2.3 : இருவகை அமைப்புக்களையும் இணைத்து ஓர் இசைவுத்தன்மை கொண்ட அமைப்பாக

2.4 : வேறு ஜோசனைகள்.

3. பின்வரும் ஏதாவது காரணிகள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டுமா ?

3.1 : புலமைத்துவத்திற்கான உபகுழு உருவாக்கப்பட வேண்டும்.

3.2: நடைமுறையில் உள்ள அமைப்பு ஏற்கப்பட்டு பொறுப்புக்கள் அளிக்கப்படவேண்டும்

3.3 : உப குழுக்களுக்கான தேவை இல்லை.

3.4 : வேறு ஜோசனைகள்.

4. தமிழ்மக்களின் அபிலாசைகளை பிரித்தானியாவில் எடுத்துச் செல்வதற்கான சிறந்த வழி எதுவாக இருக்கும்.

4.1 : பாராளுமன்றத்திற்கு முன்னதாக அரசியல் ஆர்ப்பட்டங்கள்

4.2 : பாரிய ஊர்வலங்கள் ஏற்பாடு செய்தல்

4.3 : அரசியல் கொள்கை முன்னெடுப்பு வேலைகள்

4.4: மேற்சொன்னவை

4.5 : வேறு கருத்துக்கள்

5. உலகளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகளின் தேவை உள்ளதா ?

5.1 : இல்லை . ஒவ்வொரு நாடும் தமக்குரிய பணிகளைச் செய்யட்டும்

5.2 : ஆம் . கட்டமைப்பு முறையற்றதும் தொடர்ந்ததொடர்புகளைக் கொண்டதுமான ஓர் முயற்சி அவசியம்.

5.3 : ஆம் . அனைத்து நாடுகளையும் இணைக்கக்கூடிய முறைப்படியான கட்டமைப்பைக் கொண்ட அமைப்பு

5.4 : வேறு கருத்துக்கள்

6. எங்களினுடைய குறுகிய கால உடனையான இலக்கு என்ன? எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் ?

6.1: வதைமுகாம்களில் இருக்கும் மக்களின் விடுதலையை கவனமெடுக்கவேண்டும்

6.2 : முகாம்களில் வாழும் மக்களிற்கான உதவிகளைக் கிடைக்கச் செய்தல்

6.3 : இலங்கைப் பொருட்களைப் புறக்கணிக்கும் பிரச்சாரம்

6.4: போர்க்குற்றத்திற்கான தடயங்கள் சேகரிக்கப்பட்டு அதன்மூலம் இனப்படுகளையை நிருபித்தல்

6.5 : வேறு கருத்துக்கள்

7. எமது இடைக்கால இலக்கு என்ன ?

7.1 : இடைக்கால நிர்வாக சபைக்காகப் போராடுதல்

7.2 : கிடைக்கும் ஏதாவது ஒரு தீர்வை ஏற்றுக் கொள்ளுதல்

7.3 : முழுமைபெறாத தீர்வுகளை நிராகரித்தல்

7.4 : வேறு கருத்துக்கள்

8. எமது இறுதி இலக்கு என்ன?

8.1 : இருவேறு நாடுகள் : தனித்தமிழீழம்

8.2 : தமிழ் மக்களிற்கான படிநிலைத்தீர்வுகளை ஏற்றுக்கொண்டு பலப்படுத்தல்.

8.3: வேறு கருத்துக்கள்

9. வேறு கேள்விகள் அல்லது ஜோசனைகள்.... saniyan says >>> !!!! இது தான் முக்கியம் !!!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றிற்கும் முதல் ஈழவிடுதலைக்காக தன்னையும் தன்து குடும்பத்தையும் அர்ப்பணித்த எம் தலைவரிற்கு உரிய மரியாதையை B.T.F காரரை செய்யச் சொல்லவும்.. :(

எல்லாவற்றிற்கும் முதல் ஈழவிடுதலைக்காக தன்னையும் தன்து குடும்பத்தையும் அர்ப்பணித்த எம் தலைவரிற்கு உரிய மரியாதையை B.T.F காரரை செய்யச் சொல்லவும்.. :lol:

பிறகு புலி முத்திரை குத்தி போடுவினம் B.T.F. க்கு அதுதான் பயமாயிருக்கு. :(

சாத்திரி அண்ணா அவசரப்படவேண்டாம் நடப்பது விடுதலைப்போராட்டம். நடந்தது மன்னர் ஆட்சி அல்ல. தவறான இடத்தில் உங்கள் கருத்தை பதிவு செய்து திசை திருப்புவது அரோக்கியமாக இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"எங்கிருந்தாலும் சபேசன் உடனடியாக மேடைக்கு வரவும்"

:(:o:lol:

கேள்விகளை படித்தேன், இன்னும் தெளிவாக கொஞ்சம் சிந்தித்து விட்டு பதில் சொல்கிறேன்....

கேள்விகளை இங்கே பதிந்தமைக்கு நன்றி...சனியன்.

"எல்லாவற்றிற்கும் முதல் ஈழவிடுதலைக்காக தன்னையும் தன்து குடும்பத்தையும் அர்ப்பணித்த எம் தலைவரிற்கு உரிய மரியாதையை B.T.F காரரை செய்யச் சொல்லவும்.."

கலைவாணி சாத்ரி அண்ணா திசை திருப்புவதாக தெரியவில்லை, பேரவையை பற்றிய இடத்தில் தான் தனக்கு பேரவையுடன் உள்ள ஆதங்கத்தை குறிபிட்டது போல தெரிகிறது.... ஏன் அடிக்கடி டென்ஷன் ஆகிறீங்கள்?

மரியாதையை செய்வதில் அவர்கள் ஒரு போதும் தடம் மாறியது இல்லையே...இருப்பினும், எமது மக்களே இன்னும் தலைவரின் மறைவு செய்தியின் அதிர்ச்சியில் இருந்து மீளாமல், ஏற்று கொள்ளாமல் இருக்கும் நேரத்தில் அஞ்சலி செலுத்த முயலுவது சிறப்பாக பட வில்லை... சிலர் துக்கத்தால் துவண்டு தற்கொலை மனநோய் என்று ஆகி விட கூடும்... அதே நேரத்தில், தலைவருக்கு செய்ய வேண்டியதை நாம் அவர் காட்டிய வழியில் சென்று எமது இனத்திற்கு விடுதலை பெற்ற பின் - செய்வது தான் அவருக்கும் தகுந்த மரியாதையாக இருக்கும் - என்பது எனது கருத்து....

----தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ------

பிறகு புலி முத்திரை குத்தி போடுவினம் B.T.F. க்கு அதுதான் பயமாயிருக்கு. :o

"WE ARE TAMIL TIGERS...WE FIGHT FOR OUR FREEDOM!!" என்று தானே இப்போது தொண்டை கிழிய கத்துகிறோமே?!!!!! பிறேகேன் பயம்?!

:o

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா அவசரப்படவேண்டாம் நடப்பது விடுதலைப்போராட்டம். நடந்தது மன்னர் ஆட்சி அல்ல. தவறான இடத்தில் உங்கள் கருத்தை பதிவு செய்து திசை திருப்புவது அரோக்கியமாக இல்லை.

ஓஓஓ அப்படியா நான் ஏதோ வேலிச்சண்டை என்று நினைத்து உளறிவிட்டேன் மன்னிக்கவும்..

நான் புறநிலை அரசு பற்றி பலருடன் விவாதிக்கின்ற பொழுது, இதற்கு BTF குறிப்பிட்ட பங்களிப்பை வழங்க முடியும் என்று சொல்லியிருக்கிறேன்.

ஆனால் தற்பொழுது உள்ள ஒரு அமைப்பு அப்படியே புறநிலை அரசாக மாறி விட முடியாது. அது மற்றைய அமைப்புகளை மக்களையும் இணைத்து புதிய கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்

புதிய கட்டமைப்பு (புறநிலை அரசு) உருவாவதன் அர்த்தம் மற்றைய அமைப்புகள் கலைக்கப்பட வேண்டும் என்பது அன்று. தற்பொழுது உள்ள அமைப்புகளும் தொடர்ந்து செயற்பட வேண்டும்.

BTF சார்ந்த கேள்விகளை தவிர்த்து விட்டு மற்றைய பொதுவான கேள்விகளுக்கு என்னுடைய கருத்தை சொல்கிறேன்.

2 - 2.3

3 - 3.1

4 - 4.4

5 - 5.3

6 - 6.1 6.3 6.4

7 - இடைக்கால இலக்கு தமிழர் தாயகத்திற்கான சுயாட்சியாக இருக்கலாம்

8 - 8.1

கடந்த இரண்டு மாதங்களாக எமது தாயவிடுதலைக்கு தெருவில் இறங்கி போராட பறப்பட்டபோது குறிப்பாக பிரித்தானியா, நோர்வே நாடுகளில் உள்ள தமிழ் அரசியல் வாதிகள், போராட்ங்களுக்கு அனுமதி எடுக்கும் பாண்டித்தியம் உடையவர்கள் வெள்ளைக்கு மனங்கோணாமல் போராட்டம் நடத்தவேண்டும் என்றார்கள் வெள்ளையளின் நிகழ்சி நிரலுக்கு போராட்டம் நடத்தினார், இளையவர் நாம் விழித்தெழுந்து தாயக விடுதலைக்கு தெருவில் இறங்கி போராடுவதற்கு புறப்பட்ட போது சர்வதேச கூட்டு சதிகாரர்களுடன் போராடவேண்டி இருந்தது.

யாருடைய நிகழ்சி நிரலுக்கு இந்த புதிய அமைப்பு செயல்படும்.

30 வருடம் நடந்த போரட்டத்திற்கு என்ன நடந்துள்ளது. வதை முகாங்களில் உள்ள மக்களின் விடுதலை என்பனவற்றிட்கு என்ன செய்யலாம் என்பதைப்பற்றி சிந்தியுங்கள், செயல்படுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நீங்களே தீர்மானித்துவிட்டீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. எதிர்காலத்தில் தமிழ்மக்களின் குரல் எவ்வாறு பலப்படுத்தப் படவேண்டும்.

1.2 BTF விரிவாக்கப்பட வேண்டும். அது தமிழ் மக்களின் அனைத்து குரல்களையும் உள் வாங்கவேண்டும்.

2. BTF அல்லது புதியதோர் அமைப்பு எவ்வாறு மீள் அமைக்கப்படவேண்டும்

2.1 : அதிகாரமையப்படுத்தப்பட்ட அமைப்பாக

3. பின்வரும் ஏதாவது காரணிகள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டுமா ?

3.1 : புலமைத்துவத்திற்கான உபகுழு உருவாக்கப்பட வேண்டும்.

4. தமிழ்மக்களின் அபிலாசைகளை பிரித்தானியாவில் எடுத்துச் செல்வதற்கான சிறந்த வழி எதுவாக இருக்கும்.

4.4: மேற்சொன்னவை (4.1 : பாராளுமன்றத்திற்கு முன்னதாக அரசியல் ஆர்ப்பட்டங்கள், 4.2 : பாரிய ஊர்வலங்கள் ஏற்பாடு செய்தல், 4.3 : அரசியல் கொள்கை முன்னெடுப்பு வேலைகள்)

4.5 : வேறு கருத்துக்கள் -சர்வதேச ஊடகங்களோடு தொடர்பில் இருக்க வேண்டும்.... அரசாங்கத்துடன் ஆன பேச்சு வார்த்தைகளை ஊடகங்களுக்கு அறியதர வேண்டும்.... அரசியலில் ரகசியங்கள் பேண பட வேண்டி இருக்கலாம்....ஆனால் அரசியல்வாதிகள் சாட்சிகள் இன்றி தரும் வாக்குறிதிகள் பெரும்பாலும் கண்துடைப்பாக தான் ஆகிறன...

அதோடு ஐ பி சி, சங்கதி என்பதோடு எமது போராட்டங்கள் எமது போராட்ட செய்திகள் அடங்கி விடாமல் - சர்வதேச அளவில் ஒரு பத்திரிக்கையில் என்றாலும் பங்குதாரராய் ஆனால்- ஒரு சிறு அளவிலாவது எமது செய்திகளை பிரசுரிக்க நாம் செய்விக்கலாம்...அதற்கு தனி நபர் முதலீடு செய்வதில் சாத்தியம் இல்லை, தமிழரின் அமைப்பு என்ற ஒன்றால் தான் நிதி திரட்டி செய்விக்க முடியும்... அல்லது முயற்சி என்றாலும் செய்யலாம்..

5. உலகளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகளின் தேவை உள்ளதா ?

5.2 : ஆம் . கட்டமைப்பு முறையற்றதும் தொடர்ந்ததொடர்புகளைக் கொண்டதுமான ஓர் முயற்சி அவசியம்.

5.4 : வேறு கருத்துக்கள்

- கவன ஈர்ப்பு போராட்டங்களில் நாம் உணர்ந்த ஒன்று - அதிக அளவிலான சனம் வருகை தருவது இடைக்கிட தான்... ஒரு கிழமைக்கு ஒரு நாள் என்றாலும் சர்வதேச அளவில் கவன ஈர்ப்பு போராட்டங்கள் பெரிய அளவில் ஒரே நேரத்தில் எடுக்க பட வேண்டும்... தனியாக ஒரு அரசாங்கம் கதைத்து ஒன்றும் வர போவதில்லை, அதிக எண்ணிகையிலான அரசாங்கங்களுக்கு ஒரே நேரத்தில் அழுத்தம் பாரிய அளவில் எழுச்சியுடன் கொடுக்கும் போது அவர்களுக்குள் நிச்சயம் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த ஒரு நேரத்தில் என்றாலும் விவாதிப்பார்கள்.... ஒரே நேரத்தில் மாபெரும் எழுச்சி போராட்டம் உலகெங்கும் நடத்த வேண்டும் என்றால் அந்த அந்த நாட்டு மக்களில் புரட்சி "பொறுப்பாளர்கள்" ஒருமித்து செயற்பட வேண்டும்....

6. எங்களினுடைய குறுகிய கால உடனையான இலக்கு என்ன? எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் ?

6.1: வதைமுகாம்களில் இருக்கும் மக்களின் விடுதலையை கவனமெடுக்கவேண்டும்

6.4: போர்க்குற்றத்திற்கான தடயங்கள் சேகரிக்கப்பட்டு அதன்மூலம் இனப்படுகளையை நிருபித்தல்

-இந்த இரண்டுமே முக்கியம்...பேரவை இதை இரு பொறுப்பாக பிரித்து இரு குழுக்களுக்கு கொடுத்தால் நல்லது என்றது எனது அபிப்ராயம்...இந்த இரு குழுக்களும் மக்களுடனும், நிவாரண பணி அமைப்புகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புடனும், ஊடகங்களுடனும் தொடர் தொடர்பில் இருந்து இயங்கினால், இந்த குழுக்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் அரசாங்கங்களுடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு அழுத்தங்கள் கொடுக்கலாம்...

7. எமது இடைக்கால இலக்கு என்ன ?

7.4 : வேறு கருத்துக்கள்: இறுதி இலக்கிட்காக போராடுதல்!

இறுதி இலக்கை அடையும் வரை அங்கு இருக்கும் எமது உறவுகளை பாதுகாப்பது... அவர்கள் வவுனியா தடுப்பு முகாமில் இருந்தாலும் சரி, யாழ்பாணத்தில் இருந்தாலும் சரி, கொழும்பில் இருந்தாலும் சரி...

8. எமது இறுதி இலக்கு என்ன?

8.1 : தனித்தமிழீழம்

9. வேறு கேள்விகள் அல்லது ஜோசனைகள்.... saniyan says >>> !!!! இது தான் முக்கியம் !!!

-ஒரே ஒரு கேள்வி - சனியன் என்ற நல்ல பெயரை எவ்வாறு தேர்ந்து கொண்டீர்கள்? அம்மா வைத்த பெயரா? இல்லை நுமேரோலோஜி பார்த்து நீங்களே மாற்றினீர்களா?!

-ஜோசனைகள்: ஜோசித்து கொண்டே உள்ளேன்....உருப்படியாக ஏதும் படும் போது பதிகிறேன்...மேல் பதிவு செய்த கருத்துக்கள் எனது அறிவிற்கு எட்டியதே தவிர அதிக பிரசங்கி தனம் ஒன்றும் இல்லை...

பேரவையின் செயற்பாடுகள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது, எனவே ஏற்கனவே அவர்கள் செய்து கொண்டு இருக்கும் எதையும் நான் குறிப்பிட்டு இருந்தால் மன்னிக்கவும்... அப்படியே அவர்களின் இணையதளத்தை அப்டேட் பண்ண சொல்லவும்... thanks! :wub:

------------தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ------------------

1. எதிர்காலத்தில் தமிழ்மக்களின் குரல் எவ்வாறு பலப்படுத்தப் படவேண்டும்.

1.2 BTF விரிவாக்கப்பட வேண்டும். அது தமிழ் மக்களின் அனைத்து குரல்களையும் உள் வாங்கவேண்டும்.

2. BTF அல்லது புதியதோர் அமைப்பு எவ்வாறு மீள் அமைக்கப்படவேண்டும்

2.1 : அதிகாரமையப்படுத்தப்பட்ட அமைப்பாக

3. பின்வரும் ஏதாவது காரணிகள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டுமா ?

3.1 : புலமைத்துவத்திற்கான உபகுழு உருவாக்கப்பட வேண்டும்.

4. தமிழ்மக்களின் அபிலாசைகளை பிரித்தானியாவில் எடுத்துச் செல்வதற்கான சிறந்த வழி எதுவாக இருக்கும்.

4.4: மேற்சொன்னவை (4.1 : பாராளுமன்றத்திற்கு முன்னதாக அரசியல் ஆர்ப்பட்டங்கள், 4.2 : பாரிய ஊர்வலங்கள் ஏற்பாடு செய்தல், 4.3 : அரசியல் கொள்கை முன்னெடுப்பு வேலைகள்)

4.5 : வேறு கருத்துக்கள் -சர்வதேச ஊடகங்களோடு தொடர்பில் இருக்க வேண்டும்.... அரசாங்கத்துடன் ஆன பேச்சு வார்த்தைகளை ஊடகங்களுக்கு அறியதர வேண்டும்.... அரசியலில் ரகசியங்கள் பேண பட வேண்டி இருக்கலாம்....ஆனால் அரசியல்வாதிகள் சாட்சிகள் இன்றி தரும் வாக்குறிதிகள் பெரும்பாலும் கண்துடைப்பாக தான் ஆகிறன...

அதோடு ஐ பி சி, சங்கதி என்பதோடு எமது போராட்டங்கள் எமது போராட்ட செய்திகள் அடங்கி விடாமல் - சர்வதேச அளவில் ஒரு பத்திரிக்கையில் என்றாலும் பங்குதாரராய் ஆனால்- ஒரு சிறு அளவிலாவது எமது செய்திகளை பிரசுரிக்க நாம் செய்விக்கலாம்...அதற்கு தனி நபர் முதலீடு செய்வதில் சாத்தியம் இல்லை, தமிழரின் அமைப்பு என்ற ஒன்றால் தான் நிதி திரட்டி செய்விக்க முடியும்... அல்லது முயற்சி என்றாலும் செய்யலாம்..

5. உலகளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகளின் தேவை உள்ளதா ?

5.2 : ஆம் . கட்டமைப்பு முறையற்றதும் தொடர்ந்ததொடர்புகளைக் கொண்டதுமான ஓர் முயற்சி அவசியம்.

5.4 : வேறு கருத்துக்கள்

- கவன ஈர்ப்பு போராட்டங்களில் நாம் உணர்ந்த ஒன்று - அதிக அளவிலான சனம் வருகை தருவது இடைக்கிட தான்... ஒரு கிழமைக்கு ஒரு நாள் என்றாலும் சர்வதேச அளவில் கவன ஈர்ப்பு போராட்டங்கள் பெரிய அளவில் ஒரே நேரத்தில் எடுக்க பட வேண்டும்... தனியாக ஒரு அரசாங்கம் கதைத்து ஒன்றும் வர போவதில்லை, அதிக எண்ணிகையிலான அரசாங்கங்களுக்கு ஒரே நேரத்தில் அழுத்தம் பாரிய அளவில் எழுச்சியுடன் கொடுக்கும் போது அவர்களுக்குள் நிச்சயம் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த ஒரு நேரத்தில் என்றாலும் விவாதிப்பார்கள்.... ஒரே நேரத்தில் மாபெரும் எழுச்சி போராட்டம் உலகெங்கும் நடத்த வேண்டும் என்றால் அந்த அந்த நாட்டு மக்களில் புரட்சி "பொறுப்பாளர்கள்" ஒருமித்து செயற்பட வேண்டும்....

6. எங்களினுடைய குறுகிய கால உடனையான இலக்கு என்ன? எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் ?

6.1: வதைமுகாம்களில் இருக்கும் மக்களின் விடுதலையை கவனமெடுக்கவேண்டும்

6.4: போர்க்குற்றத்திற்கான தடயங்கள் சேகரிக்கப்பட்டு அதன்மூலம் இனப்படுகளையை நிருபித்தல்

-இந்த இரண்டுமே முக்கியம்...பேரவை இதை இரு பொறுப்பாக பிரித்து இரு குழுக்களுக்கு கொடுத்தால் நல்லது என்றது எனது அபிப்ராயம்...இந்த இரு குழுக்களும் மக்களுடனும், நிவாரண பணி அமைப்புகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புடனும், ஊடகங்களுடனும் தொடர் தொடர்பில் இருந்து இயங்கினால், இந்த குழுக்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் அரசாங்கங்களுடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு அழுத்தங்கள் கொடுக்கலாம்...

7. எமது இடைக்கால இலக்கு என்ன ?

7.4 : வேறு கருத்துக்கள்: இறுதி இலக்கிட்காக போராடுதல்!

இறுதி இலக்கை அடையும் வரை அங்கு இருக்கும் எமது உறவுகளை பாதுகாப்பது... அவர்கள் வவுனியா தடுப்பு முகாமில் இருந்தாலும் சரி, யாழ்பாணத்தில் இருந்தாலும் சரி, கொழும்பில் இருந்தாலும் சரி...

8. எமது இறுதி இலக்கு என்ன?

8.1 : தனித்தமிழீழம்

------------தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ------------------

எல்லாவற்றிற்கும் முன்னர் சிறைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் மக்களையும் விடுவிப்பதற்காக உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் கவனயீர்ப்புப் பேரணியொன்றை சகல புலம்பெயர்நாடுகளிலும் மேற்கொள்வதற்கு இந்த அமைப்புகள் முன்வருவார்களா?

தவிட்டு சாக்கை நனைத்து சுமந்து விடுலை அடைய முடியாது. கடந்த ஆறுமாத காலத்தில் பல தலைவர்களுக்கு, பல சர்வதேச அமைப்புகளுக்கும் அறிக்கை விடவேண்டிய தேவை ஏற்பட்ட காலத்தில் தமது அமைப்புகளின் பெயரால் அறிக்கை விடவேண்டும் என்ற சிந்தனையே இல்லாத அமைப்புகள்.

இப்பவும் இந்த அமைப்புகள் தமது இருப்பை வெளிப்படுத்துவதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கு அறிக்கை விட்டு தமது இருப்பை வெளிக்காட்டினால்.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.