Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறையில் உள்ள போராளிகளுடன் இலங்கை அரசு பேசவேன்டும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறையில் உள்ள போராளிகளுடந் இலங்கை அரசு பேசவேன்டும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

1.

என்னுடைய 4 தசாப்த தோழன் புதுவை சிறைப் பட்டுள்ளதாகச் சேதிகள் சொல்கின்றது. என்னுடைய பல தோழர்கள் இன்று சிறைப் பட்டிருக்கிறார்கள். சிங்களத்தலைமை உண்மையிலேயே அரசியல் யதார்த்தத்தை உணர்ந்த தலைமையாகவும் நீண்டகால அடிப்படையில் சிந்திக்கும் தலைமையாகவும் இருந்தால் சிறைப்பட்ட எங்கள் போராளிகளோடு தீர்வு திட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும். இன்று ரி என் ஏ முன்னுள்ள வரலாற்றுத் தெரிவுகளுள் இத்தகைய ஒரு பேச்சுவார்த்தையின் சாத்தியம் பற்றிய முயற்சிகளும் அடங்கும். இத்தகைய ஒரு கனவை நாம் காண்பது தவறல்ல.

ரிஎன் ஏ பாராளுமன்ற உறுப்பினர்களும் புலம்பெயர்ந்த நாடுகளில் முன்னணியில் இருந்து இயங்குபவர்களும் இந்தக் கோரிக்கையையும் முன்னிலைப் படுத்தவேணும் என்பதுதான் எனது வேன்டுகோள். இதற்காக சர்வதேச சமூகத்தை நாம் அணிதிரட்ட வேண்டும். இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக ஆர்வம்காட்டும் சர்வதேச ஆர்வலர்களையும் இராசதந்தரிகளையும் இதுதொடர்பாக நாம் அணுக வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன். கனவு காண்பதும் கனவுகளைச் செயல்படுத்த முனைவதும் வரலாறு நெடுக இடம்பெற்று வரும் நிகழ்வுகள்தான்.

புலம்பெயர்ந்த ஆர்வலர்கள் தோல்விக்கு வழிவகுத்த பழைய அணுகுமுறைகளை மீழாய்வு செய்யாமலும் சாத்தியமான புதிய வழிமுறைகளைப் பற்றி பரந்துபட்ட கலந்துரையாடல்கள் இல்லாமலும் தடை பண்ணப் பட்ட காலத்து பழைய வடிவங்களில் தொடர்ந்தும் போராடுவது பயனில்லை என்பதையே சர்வதேச அரசியல் அறிஞர்களதும் இராசதந்திரிகளதும் கருத்தோட்டங்களில் இருந்து உணர முடிகிறது.. எங்கள் பலத்தை நாம் எதிரிக்கு மட்டுமே காட்டவேண்டும். சர்வதேச சமூகத்தை அவர்கள் வருக என்னும் வகையிலான வடிவத்தில் அணுகி அவர்களில் எதவது ஒரு சாராரையென்றாலும் வென்றாக வேண்டும்.

நாம் செய்தது செய்வதெல்லாம் சரி. விமர்சனங்களுக்குக் காரணம் உலகம் முழுவதும் எமக்கு எதிராக இருப்பதும் நம்மவர்கள் சிலர் துரோகிகளாக இருப்பதும்தான் என்கிற நம்மைத் தோல்விக்குத் தள்ளிய தற்கொலைச் சிந்தனையை கைவிடாமல் நாம் ஒருபோதும் முன்னே செல்லப் போவதில்லை.

நாம் சரியான பாதையில் நின்று தவறுகளும் விட்டிருக்கிறோம். நாம் தவறுகளைத் திருத்த முனைகிறோம். (உண்மையிலேயே நாம் நமது தவறுகளை அடையாளம்க கண்டு திருத்த முனைய வேண்டும்) ஆனால் எதிரியின் பாதையும் பார்வையும் செயல்களும் எல்லாமே தவறானவை. மேலும் மேலும் தவறுகளைச் செய்யவே எதிரி முனைகிறான். இதைத்தான் நாம் சர்வ தேச சமூகத்திடம் சொல்லவேண்டும். இத்தகைய மொழி மேற்குலக அரசியல் மொழியாகும். வரலாற்றின் துன்பம் என்னவென்றால் எம் தவறுகள் தோல்விக்கு இட்டுச் செல்ல எதிரி இமாலயத் தவறுகளுடன் வெற்றி பெற்றிருக்கிறான். இதற்க்கு காரணம் என்ன? இதற்க்கு எதிரி தன்னை தனிமைப் படுத்தாமல் தங்கள் தரப்பில் அரசியல் இராணுவ இராஜதந்திர அறிஞர்களும் நிபுணர்களும் சொல்வதைச் செவிமடுத்தது அவர்களது ஆலோசனையுடன் செயல்பட்டதுதான் அடிப்படையாக இருந்தது.

மேற்க்கு நாடுகளுக்கு நேரடிப் பிரதிநிதிகளும் சர்வதேச தொண்டர் அமைப்புகளின் பிரதி நிதிகளும் களத்தில் உள்ளனர். செய்மதிப் படங்கள் உட்பட தகவல் திரட்டும் வாய்ப்பும் வளங்களும் அவர்களுக்கு உள்ளது. இரண்டு பக்கத்தையும் அவர்கள் கண்காணிக்கிறார்கள். போரிடும் இருதரப்புகள் தொடர்பான தகவல்கள் பலவற்றை சேகரிப்பதில் அவர்கள் வளங்களைச் செலவு செய்கிறார்கள். அரசாங்கம் மட்டுமல்ல தமிழர் தரப்பும் போதிய தகவல்கள் இல்லாமலும் பொய்மையோடும் அவர்களுடன் பேசுவது சாத்தியமில்லை.

2.

சிங்கள அரசின் பலம் அவர்களது வெற்றிகரமான சர்வதேசச் செயல்பாடுகள்தான். சிங்களவரின் பிரசாரம் நம் போராளிகள் தரப்பின் தற்கொலைத் தாக்குதல் உத்தி மேற்குலகின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்பதை மையப் படுத்தியது. மேற்க்கு நாடுகளில் நாம் வெளிப்படுத்திய பலமும் மேற்க்கு நாடுகளில் 1985- 1995 காலக்கட்டத்தில் மக்களைவிட நிதி திரட்டுவதை முன்னிலைப் படுதியதால் அதிகரித்த வன்முறை சார்ந்த குற்றச் சாட்டுகளும் அயல்மண்ணில் இடம்பெற்ற ரஜீவ்காந்தி கொலையும் இலங்கை அரசாங்கத்தின் பிரசாரத்துக்கு வலுச் சேர்த்தது. இவற்றை மேற்குலக சமூகம் அச்சுறுத்தலாகவே பார்த்தது. கலையில் தங்களைச் சந்திக்கும்போது சமாதானத்துக்கு உண்மையாய் இருக்கிறோம் என உறிதிமொழி கூறிய வன்னிப் பிரமுகர்கள் அன்று மாலையே பொதுக்கூட்டங்களில் இறுதி யுத்தத்துக்குப் பணம் திரட்டும் கோசங்களை வைக்கும் முரண்களை மேற்க்கு நாடுகள் கவனத்தில் எடுத்தன. நாம் இதனை உணர்ந்துகொள்ளவில்லை. இதனால்தான் நாம் சீனா ரஸ்சியா ஈரான்போன்ற இலங்கையின் நண்பர்களுக்கு எதிராக தள்ளப்பட்டபோதும் அதன் ஆதாயத்தை சர்வதேச சமூகத்திடமிருந்து பெறமுடியாத சூழல் ஏற்ப்பட்டது. சிங்கள அரசு சீனா ரஸ்சியா ஈரான் பாகிஸ்தானை தனது அணியாக அடையாளம் கண்டுகொண்டு உறவுகளைப் பலப்படுத்தியது. ஆனாலும் எதிரி சீனா பாகிஸ்தானோடு மட்டும் நிற்காமல் அமரிக்கா ஐரோப்பா அரபுநாடுகள் போன்ற ஏனையவர்களுடனும் நம்மை ஆபத்தாகக் காட்டி தொடர்ந்து செயல்பட்டு வந்தான். எதிரியின் அணியில் தேர்ந்த அரசியல் ராஜதந்திரிகள் இருந்தார்கள். சிங்கள அரசின் பிரதிநிதிகள் பொறுப்பெடுத்துப் பேச செயல் அதிகாரம் உள்ளவர்கள் தமிழர் தரப்பினர் அப்படியில்லை என்று தொடர்ந்து சர்வதேச இராஜதந்தரிகளால் குறை சொல்லப் பட்டு வந்தது. உங்களுடன் பேச்ச நாங்கள் வன்னிக் காட்டில் பரசூட்டில் குதிக்கவா முடியும் என்று ஐரோப்பிய இராஜதந்திரிகளும் அரசியல் அறிஞர்களும் வினவுவதைக் கேட்டிருக்கிறேன். ஒருபோதும் மேற்படி கேழ்விக்கு என்னிடம் எந்த ஒரு பதிலும் இருக்கவில்லை. ஜப்பானுக்குப் போகமாட்டோம் இலங்கையோடு பேசமாட்டோம் என்று

பேச்சுவார்த்தை நெருக்கடிக்கு ஊள்ளான தருணத்தில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஒதுக்கப் படுவதாக சர்வதேச இராஜதந்திரிகள் மத்தியில் பரவலான கருத்து இருந்தது. அதன்பின் வன்னியைத் தவிர்த்து பிறருடன் பேசுவதில் அதிகம் பயனில்லை என்கிற கருத்து அவர்கள் மதியில் மேலோங்கியது. ஜெனிவா சிக்கல்களின்போது வன்னியிலும் அதிகாரமற்ற ஏனையவர்களோடு பேசுவதில் பயனில்லை தலைமையுடன் பேசுவது மட்டுமே அர்த்தமுள்ளது என்கிறதாக சர்வதேச அவிப்பிராயம் இறுகிப்போனது. தலைமையை சந்திக்க முடியாவிட்டால் வன்னிக்கு வர தயாரில்லை என்று சர்வதேசச் சமூகம் வெளிப்படையாகவே சொன்னதும் உண்டு. இத்தகைய பின்னணியில்தான் வன்னியில் பரசூட்டிலா நாம் குதிக்கமுடியும் என்கிற கிண்டல் பேச்சு அடிபட்டது. நான் இக்காலக் கட்டத்தில் வன்னியினதும் இந்தியாவினதும் உறவுகள் தொடர்பாக இருதரப்பின் உதியோகபூர்வமற்ர அங்க்கீகாரத்துடன் செயல்ப்பட்டதோடு நண்பர் எரிக் சோல்கைம் அவர்களது வெளிவாரி ஆலோசகராகவும் செயல்பட்டேன். இந்தச் சூழலில் எனக்குத் தெரியவந்த உண்மைகளையே எழுதுகிறேன். இன்று நம்முன்னுள்ள கேழ்வி மேற்குலகின் நிலைபாடு சரியா பிழையா என்பதல்ல. மேற்குலகுடன் ஆக்கபூர்வமான செயல்படக்கூடிய உறவை உருவாக்க முடியுமா இல்லையா என்பதுதான் நம்முன்னே உள்ள வரலாற்றுச் சவால். இது இந்தியாவுக்கும் பொருந்தும்.

சிங்களத் தரப்பில் எம்மது பிரச்சினையைக் கையாண்ட இராஜதந்திரிகளும் அரசியல் பதவி வகித்தவர்களும் தமது அரசாங்கத்தோடு இருவழித் தொடர்பு உள்ளவர்களாக இருந்தார்கள். சிங்கள அரச தரப்பினர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச சமூகத்தையும் மோதலின் ஏனைய தரப்புகளையும் சந்திக்க மறுக்கவில்லை. ஆனால் பேச்சுகளில் சிங்களத் தரப்பு எப்பவும் ஏமாற்றும் நரிகளாகவே இருந்தார்கள். இலங்கை அரசு தனது அதிகாரத்தை நிபுணத்துவமுள்ள தனது அணியினருடன் பகிர்ந்து கொண்டது. ஆரம்ப காலகட்டத்தில் அன்ரன் பாலசிங்கம் புறநடையாக இருந்தபோதும் நமது தரப்பில் அதிகாரம் பகிரப் பட்டிருக்கவில்லை இத்தகைய பகிர்தல் இல்லாத நிலையில் நமது பிரதிநிதிகளால் சர்வதேச சமூகத்துடன் உருபடியான எந்த உறவு நிலையையும் வளர்த்தெடுக்க முடியவில்லை. எமது தவறான அணுகுமுறை உலகம் முழுவதும் எமக்கு எதிர் என்கிற நிலைபாட்டுக்குத்தான் நாம்மை இட்டுவந்தது.. ஆனால் எதிரியின் மத்தியில் அதிகார பரவலாக்கம் செயல்பட்ட்மைதான் சர்வதேச அமைப்புக்களுக்கு எதிரியின் அணியினருடன் பேசுவது இலகுவாக இருந்தது. சர்வதேச சமூகத்தவர்கள் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களை மட்டுமே அதுவும் பேச்சுவார்த்தையின் முற்பாதிக் காலக்கட்டத்தில் மட்டுமே ஓரளவு அதிகாரத்துடன் செயல்படுகிறவராகக் கணித்தது. இந்த நிலமை இலங்கை அரசின் அணிக்கு இருக்கவில்லை. எங்கள் தரப்பில் இத்தகைய அணுகுமுறை ஒருபோதும் இருக்கவில்லை. இவற்றையெல்லாம் நான் வன்னியிலேயே உரத்துச் சொல்லி இருக்கிறேன். இன்னும்கூட நாம் அத்தகைய அணுகுமுறையை நாம் வளர்த்தெடுக்கவில்லை.

3.

நாம் ஏகப் பிரதிநிதிகள் என்கிற கருத்து உள்ளார்ந்த எல்லா விவாதங்களையும் ஆய்வுகளையும் நிராகரித்துவிட்டது. சர்வதேச சமூகமுகத்தின் ஜனநாயக அகராதியில் முன்னணி அல்லது முதன்மை அமைப்பு என்ற சொல்மட்டுமே இருக்கிறது. மேற்க்கு நாடுகளில் ஏகப் பிரதிநிதிகள் என்ற சொல்லை பாசிஸ்ட்டுகளின் பதம் என்றே அடையாளம் காணுகிறார்கள் என்பதை வன்னியில் பலதடவை தெரிவிதிருக்கிறேன். இதுபற்றியெல்லாம் நாம் சிந்திக்க வேன்டும். எங்களை எதிரியும் நாமும் மூடி வைத்திருக்கிறோம். இந்த குண்டுச் சட்டியை உடைத்துக்கொண்டு வெளியில் வரவேன்டுமென்றால் சர்வதேச அணி ஒன்றை வென்றெடுக்க வேணுமென்றால் அவர்களது அரசியல் அகராதியை அவர்களது அரசியல் மொழியை புரிந்து கொள்வது மிக முக்கியமாகும். அதற்கான ஆழுமையை வெளியில் உள்ள ஆளுமைகளை capacity இணைத்தும் இளைய தலைமுறையை முன்னணிப் படுத்தியும் பயிற்ச்சிகள் மூலமும் நாம் வளர்த்துக் கொள்ள முடியும். நாம் எப்படியும் வென்றாக வேன்டும் வல்வைசாகரா.

சிறைப் பட்ட போராளிகளுக்கும் அரசுக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தையை உருவாக்குவது சாத்தியாமா என்பதை வெளிநாட்டில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச சமூகத்துடனும் தங்களுடன் தொடர்புள்ள சிங்கள முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆர்வலர்களூடாகவும் முயன்று பார்ப்பது அவசியமானது என்றே கருதுகிறேன். இப்பணியே நல்லுறவில் ஆர்வமுள்ள தோழர்கள் விக்கிரமபாகு கருணரட்ண, பேராசிரியர் உயாங்கொட, ஜெகான்பெரரா மற்றும் BBC Sinhala பிபிசி சிங்களப் பிரிவின் தோழர்கள் போன்றோரின் முன்னுள்ள வரலாற்றின் சவாலாகும். தனிப்பட்ட முறையிலும் BBC Sinhala பிபிசி சிங்களப் பிரிவுத் தோழர்களை இம்முயற்ச்சியை முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்துங்கள். இக்கருத்தை விவாதிப்பீர்களானால் நன்று.

4.

இடம்பெற்ற பெரிய யுத்தமொன்றில் தோற்றுப் போயுள்ளோம். ஆனால் எங்கள் போராட்டம் தோற்க்கவில்லை என்பதையே சர்வதேச ரீதியாக எழும் ஆதரவுக் குரல்களும் நம்மவர்களது துடி துடிப்பும் புலப் படுத்துகின்றது. தாய்மண்ணில் வேர் ஊன்றாத போராட்டங்கள் எதுவும் நீண்டகால அடிப்படையில் பயன்தரப் போவதில்லை. தாய் மண்ணில் வேரூண்றுவது இன்றைய நிலையில் ரி.என்.ஏ உடனும் சிறையின் உள்ளும் வெளியிலும் இருக்கும் போராளிகளுடனும், மேற்படி அமைப்புகளுக்கு வெளியில் இருக்கும் தேசிய சக்திகளோடும் தொடர்புபடுவதன் மூலமே உருவாக முடியும். ரி.என்.ஏ தலைவர் சம்பந்தன் இன்றுள்ள ஆற்றலும் அனுபவமும் உள்ளவர்களுள் முதன்மையானவர். கிழக்குமாகாண தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்ட தலைவர்களுள் முஸ்லிம் மக்களது நன்மதிப்பைப் பெற்ற ஒரே தலைவர் சம்பந்தர்தான். சர்வதேச ராஜதந்திரிகளோடும் இந்தியாவுடனும் வெற்றிகரமாகச் செயல்படக்கூடிய நிலையில் சம்பந்தர் இருக்கிறார். திரு அன்ரன்பாலசிங்கம் அவர்கள் 2002 பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் வெற்றிகரமாகச் செயல்ப் படுத்திய சர்வதேசக் கொள்கையின் ஒரு பங்காளியாக அடேல் பாலசிங்கம் இருக்கிறார். மேற்குலகின் ஜனநாயக விழுமியங்களை வரித்துக்கொண்டவர். மாற்றுக் கருத்தாளர்களுடன் செயல்ப்படக்கூடியவர். துரதிஸ்ட வசமாக திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களது பாதையில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுத்துச் செல்லப் படவில்லை. அதனால்தான் ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் சர்வதேசச் சமூகத்தை எரிச்சல்ப் படுத்திய நமது பக்கத் தவறுகள் உருவாகியது. திரு அன்ரன் பாலசிங்கம் உருவாக்கிய சர்வதேச அணுகுமுறையும் சம்பந்தர் நடைமுறைப் படுத்தும் இந்தியாவுடனான சரியான அணுகுமுறையும் ஒரு புள்ளியில் இணைக்கப் படுவது அவசியம்.

5.

கடந்த காலத்தில் தளத்திலும் புலத்திலும் நடைமுறைப் படுத்தப்பட்ட சில கெடுபிடிகள் புலம்பெயர்ந்த ஒரு சில தேசிய சக்திகளை வெளியே தள்ளிவிட்டன. ஜெயதேவன் போன்றவர்கள் தீவிரமாக எதிர் முகாமுக்குள் தள்ளப்பட்டு விட்டனர். எவ்வித தயக்கமும் இன்றி எல்லா தவறுகளையும் தாண்டி சொந்த விருப்பு வெறுப்புகளைப் புறம் தள்ளிவிட்டு மீண்டும் இணைக்கக்கூடிய யாவரையும் இணைத்துக் கொள்கிற மனபக்குவம் எமக்கு அவசியம். இன்றைய அவசரத் தேவை நமது தேசிய அரசியல் சக்திகளை தேசிய சர்வதேசிய ரீதியாக ஒருங்கிணைப்பதாகும். ரி.என்.ஏ தலைமை, எஞ்சியிருக்கும் போராளிகள், அடேல் பாலசிங்கம் போன்றவர்கள் சர்வதேச ரீதியாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துச் செல்கிற புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் அவற்றுக்கு வெளியில் இருக்கும் தமிழ் தேசிய சக்திகள் குறிப்பாக இளையவர்கள், நமக்கு ஆலோசனை சொல்லக்கூடிய சர்வதேச விமர்சகர்கள் எல்லோரும் கூடி ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பதும் சில பொது முடிவுகளை எடுப்பதும் மிக அவசியமும் அவசரமுமான கடமையாகும்.

பரந்துபட்ட ஆலோசனைகளும் விவாதங்களும் அவற்றின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட புதிய மூல உபாயமும் ஒருங்கிணைப்பும் இன்றி பழைய பாணி ஆர்பாட்ட ஊர்வலங்களின் வடிவில் அவற்றின் தொடற்ச்சியாக இந்றைய போராட்டங்களை நீண்டு செல்வதில் பயன் ஏதுமில்லை. இப்படி நமது சக்தியை தொடர்ந்தும் வீணடிக்க முடியாது. உலகளாவிய இலங்கைத் தமிழர்களின் காங்கிரஸ் மாநாடு ஒன்றை நோக்கமாகக் கொண்டு நமது சக்திகள் ஒருங்கிணைக்கப் படவேண்டும்.

6

வன்னொயோடு 1996ல் இருந்து வேலை செய்தவன் என்ற முறையிலும் 1996ல் இருந்து 2006 வரை ஒவ்வொரு வருடமும் 6 மாதத்துக்கு மேல் வன்னியிலும் கிழக்குமாகானத்திலும் களப்பணிகளுடன் வாழ்ந்தவன் என்ற முறையிலும் ஒரு சின்ன திருத்தம் சொல்ல விழைகிறேன். ஆய்வாளர்கள் பலரை திட்டாதீர்கள். ஜயசுக்குறு வெற்றிவரைக்கும் வன்னியில் இருந்த நிலமைவேறு. சமாதானப் பேச்சுக்குபின் நிலமை வேறு. அதன்பின் பலர் காதுகளை மூடிக்கொண்டார்கள். ஜெயசுக்குறு காலத்தில் இரவுகளில் நான் தூங்கியதில்லை. சமாதான காலத்தில் எனது விமர்சனங்கள் கெரிலா அமைப்பை கைவிட்டு அரசையும் நேரடி இராணுவத்தையும் முன்னிலைப் படுத்துவது, பெச்சுவார்த்தையில் பாலா அண்னனின் நிலைபாட்டை உதறியது, ஜனாதிபதி தேர்தல், ஜப்பான் போக மரறுத்தமை, ஜெனீவா பேச்சுவார்த்தையில் வில்கியமை, மழை வெள்ளம் போட்டபோது முற்றுகையை உடைத்துக் காடுகளுக்கு நகராமல் கடற்கரை நோக்கி தற்காப்பு நிலையில் நகர்ந்தது தொடர்பானவை. பால்ராஜ், யாழ்வேந்தன், நியூட்டன், சாள்ஸ் இருந்போது செவிமடுத்தார்கள் என்று தோன்றுகிறது. ஜெயசுக்குறு காலப் பங்களிப்புக்கு நன்றியாக இருந்தபோதும் சமாதானகாலத்தில் செவிமடுக்கவில்லை. முக்கியமான ஒரு துறைத் தலைமை எனக்கு அச்சுறுத்தலான தொல்லைகொடுத்தபோது தலைமை அமைப்பு என்னை பாதுகாத்தது எனினும் செவிமடுக்கவில்லை. நான் எல்லா தொழிலையும் விட்டுவிட்டுஏன் மனைவியின் பரமரிப்பில் வாழ்ந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டேன். பல ஆய்வாளர்களது நிலமையும் என்னுடையதுபோலவே இருந்திருக்கும் என நம்புகிறேன். தற்கொலைத் தாக்குதலைக் கவிட்டும் அடிப்படையில் அமரிக்காவுடன் பேச வாய்ப்பிருந்தது. தைமாதமளவில் இந்தியாவில் சுமூகமாக விரும்பிய பிரிவினர் ஒரு போர்முலாவை முன்வைத்தனர். அதையும் அவர்கள் பரிசீலிக்கவில்லை. எனவே பொத்தாம் பொதுவாக ஆய்வாளர்களைத் திட்டாதீர்கள். எங்களில் பலரின் நிலை இதுவாகத்தான் இருந்திருக்கும். தை மாதத்தில் கையறு நிலையில் பாடுக மனமே என்ற கவிதையை எழுதினேன். இதயச் சந்திரனும் பலவிடயங்களில் தீவிரமாக உழைத்தார். தரக்கியின் மரனம் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது என்பதும் உண்மை. அதிற்ச்சி தரும் வகையில் வன்னியில் இருந்த ஆய்வாளர்கள் இருவர் சமாதானத்தை நிராகரிக்கும் தோரனையில் பேசினார்கள். சமாதான காலக் கட்டத்தில் என்ன நிகழ்ந்தது என்று தெரியவில்லை. யார்சொல்லை நம்பினார்கள் என்பதும் தெரியவில்லை. இதை எழுதியதற்க்காக என்மீது கோபப் படாதீர்கள்.

7

ஒரு கலைஞனான என்னால் இந்த விவாதத்தை ஒரு மட்டத்துக்குமேல் முன் எடுத்துச் செல்ல முடியாது. எனது வரலாற்றுக் கடமை அதுவல்ல. இனி அரசியல் ஆய்வுகளல்ல வரலாற்றை அதன் படிப்பனைகளோடும் காவியத் தன்மையோடும் பதிவு செய்வதே என்தலையாய பணி என்பதை உணர்கிறேன். எனினும் நமது தேசத்திலும் வெளியிலும் உள்ள பல்வேறு தேசிய சக்திகள் ஒருங்கிணந்து ஜனநாயாக அடிப்படையில் ஒரு அமைப்பாக உருவாகினால் அந்த அமைப்பை நானும் ஏற்றுகொண்டு இயன்ற வகையில் விமர்சனரீதியான எனது பங்களிப்பை

தொடர்வேன்.

8

http://www.cbc.ca/thecurrent/2009/200905/2...514.html#"]http://www.cbc.ca/thecurrent/2009/200905/20090514.html#

http://suthumaathukal.blogspot.com/2009/01...-post_1482.html

http://www.tamilcanadian.com/tamil/?cat=10&id=97

http://kadarkarai.blogspot.com/2008/02/blog-post_28.html

http://tamilthesiyam.blogspot.com/2009/02/...-post_7693.html

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறையில் உள்ள போராளிகளுடந் இலங்கை அரசு பேசவேன்டும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

என்னுடைய 4 தசாப்த தோழன் புதுவை சிறைப் பட்டுள்ளதாகச் சேதிகள் சொல்கின்றது. என்னுடைய பல தோழர்கள் இன்று சிறைப் பட்டிருக்கிறார்கள். சிங்களத்தலைமை உண்மையிலேயே அரசியல் தெரிந்த தலைமையாகவும் நீண்டகால அடிப்படையில் சிந்திக்கும் தலைமையாகவும் இருந்தால் சிறைப்பட்ட எங்கள் போராளிகளோடு தீர்வு திட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும். இன்று ரி என் ஏ முன்னுள்ள வரலாற்றுத் தெரிவுகளுள் இத்தகைய ஒரு பேச்சுவார்த்தையின் சாத்தியம் பற்றிய முயற்சிகளும் அடங்கும். இத்தகைய ஒரு கனவை நாம் காண்பது தவறல்ல.

ரிஎன் ஏ பாராளுமன்ற உறுப்பினர்களும் புலம்பெயர்ந்த நாடுகளில் முன்னணியில் இருந்து இயங்குபவர்களும் இந்தக் கோரிக்கையையும் முன்னிலைப் படுத்தவேணும் என்பதுதான் எனது வேன்டுகோள். இதற்காக சர்வதேச சமூகத்தை நாம் அணிதிரட்ட வேண்டும். இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக ஆர்வம்காட்டும் சர்வதேச ஆர்வலர்களையும் இராசதந்தரிகளையும் இதுதொடர்பாக நாம் அணுக வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன். கனவு காண்பதும் கனவுகளைச் செயல்படுத்த முனைவதும் வரலாறு நெடுக இடம்பெற்று வரும் நிகழ்வுகள்தான்.

புலம்பெயர்ந்த ஆர்வலர்கள் தோல்விக்கு வழிவகுத்த பழைய அணுகுமுறைகளை மீழாய்வு செய்யாமல் சாத்தியமான புதிய வழிமுறைகளைப் பற்றி பரந்துபட்ட கலந்துரையாடல்கள் இல்லாமல் தடை பண்ணப் பட்ட காலத்து பழைய வடிவங்களில் தொடர்ந்தும் போராடுவது பயனில்லை என்பதையே சர்வதேச அரசியல் அறிஞர்களதும் இராசதந்திரிகளதும் கருத்தோட்டங்களில் இருந்து உணர முடிகிறது.. எங்கள் பலத்தை நாம் எதிரிக்கு மட்டுமே காட்டவேண்டும். சர்வதேச சமூகத்தை அவர்கள் வருக என்னும் வகையிலான வடிவத்தில் அணுகி அவர்களில் எதவது ஒரு சாராரையென்றாலும் வென்றாக வேண்டும்.

நாம் செய்தது செய்வதெல்லாம் சரி. விமர்சனங்களுக்குக் காரனம் உலகம் முழுவதும் எமக்கு எதிராக இருப்பதும் நம்மவர்கள் துரோகிகளாக இருப்பதும் என்கிற நம்மைத் தோல்விக்குத் தள்ளிய தற்கொலைச் சிந்தனையை கைவிடாமல் நாம் ஒருபோதும் முன்னே செல்லப் போவதில்லை. நாம் சரியான பாதையில் நின்று தவறுகளும் விட்டிருக்கிறோம். நாம் தவறுகளைத் திருத்த முனைகிறோம். (உண்மையிலேயே நாம் நமது தவறுகளை அடையாளம்க கண்டு திருத்த முனைய வேண்டும்) ஆனால் எதிரியின் பாதையும் பார்வையும் செயல்களும் எல்லாமே தவறானவை. மேலும் மேலும் தவறுகளைச் செய்யவே எதிரி முனைகிறான். இதைத்தான் நாம் சர்வ தேச சமூகத்திடம் சொல்லவேண்டும். இத்தகைய மொழி மேற்குலக அரசியல் மொழியாகும். வரலாற்றின் துன்பம் என்னவென்றால் எம் தவறுகள் தோல்விக்கு இட்டுச் செல்ல எதிரி இமாலயத் தவறுகளுடன் வெற்றி பெற்றிருக்கிறான். இதற்க்கு காரணம் என்ன? இதற்க்கு எதிரி தன்னை தனிமைப் படுத்தாமல் தங்கள் தரப்பில் அரசியல் இராணுவ இராஜதந்திர அறிஞர்களும் நிபுணர்களும் சொல்வதைச் செவிமடுத்தது அவர்களது ஆலோசனையுடன் செயல்பட்டதுதான் அடிப்படையாக இருந்தது. எதிரி சர்வதேச ரீதியில் தனது அணியை அடையாலம் கண்டுகொண்டு அதனைப் பலப்படுதியதோடு ஏனையவர்களுடனும் தொடர்ந்து செயல்பட்டு வந்தான். எதிரியின் பிரதிநிதிகள் பொறுப்பெடுத்துப் பேச செயல் அதிகாரம் உள்லவர்கள் தமிழர் தரப்பினர் அப்படியில்லை என்று திஒடர்ந்து சர்வதேச இராஜதந்தரிகளால் சொல்லப் பட்டு வந்தது. உங்களுடன் பேச்ச நாங்கள் வன்னிக் காட்டில் பரசூட்டில் குதிக்கவா முடியும் என்று ஐரோப்பிய இராஜதந்திரிகளும் அரசியல் அறிஞர்களும் வினவுவதைக் கேட்டிருக்கிறேன். அதற்க்கு என்னிடம் எந்த ஒரு பதிலும் இருக்கவில்லை. எதிரி தரப்பு இராஜதந்திரிகள் அரசியல்வாதிகள் அரசாங்கத்தோடு இருவழித் தொடர்பு உள்ளவர்களாக இருந்தார்கள். சர்வதேச சமூகத்தைச் சந்திக்கவும் பேசவும் பேசும்படியான அவர்களது அறிவுறுத்தல்களைச் செவிமடுக்கவும் அவர்கள் மறுக்கவில்லை. ஆனால் பேச்சுகளில் எப்பவும் அவர்கள்ேமாற்றும் நரிகளாகவே இருந்தார்கள்.ிலங்கை அரசு தனது அதிகாரத்தை நிபுணத்துவமுள்ள தனது அணியினருடன் பகிர்ந்து கொண்டது. இத்தகைய பகிர்தல் இல்லாவிட்டால் சர்வதேச சமூகத்துடன் உருபடியான எந்த உறவு நிலையையும் வலர்த்தெடுக்க முடியாது. உலகம் எமக்கு எதிர் என்கிற நிலைபாட்டுக்குத்தான் நாம் வரவேண்டி இருக்கும். எதிரியின் அதிகார பரவலாக்கம் செயல்பட்ட்மைதான் சர்வதேச அமைப்புக்கு எதிரியின் அணியினருடன் பேசுவது இலகுவாக இருந்தது. சர்வதேச சமூகத்தவர்கள் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களை மட்டுமே அதுவும் பேச்சுவார்த்தையின் முற்பாதிக் காலக்கட்டத்தில் மட்டுமே ஓரளவு அதிகாரத்துடன் செயல்படுகிறவராகக் கணித்தது. இந்த நிலமை இலங்கை அரசின் அணிக்கு இருக்கவில்லை. எங்கள் தரப்பில் இத்தகைய அணுகுமுறை ஒருபோதும் இருக்கவில்லை. இவற்றையெல்லாம் நான் வன்னியிலேயே உரத்துச் சொல்லி இருக்கிறேன். இன்னும்கூட நாம் அத்தகைய அணுகுமுறையை வளர்த்தெடுக்கவில்லை.

நாம் ஏகப் பிரதிநிதிகள் என்கிற கருத்து உள்ளார்ந்த எல்லா விவாதங்களையும் ஆய்வுகளையும் நிராகரித்துவிட்டது. சர்வதேச சமூகமுகத்தின் ஜனநாயக அகராதியில் முன்னணி அல்லது முதன்மை அமைப்பு என்ற சொல்மட்டுமே இருக்கிறது. மேற்க்கு நாடுகளில் ஏகப் பிரதிநிதிகள் என்ற சொல்லை பாசிஸ்ட்டுகளின் பதம் என்றே அடையாளம் காணுகிறார்கள் என்பதை வன்னியில் பலதடவை தெரிவிதிருக்கிறேன். இதுபற்றியெல்லாம் நாம் சிந்திக்க வேன்டும். எங்களை எதிரியும் நாமும் மூடி வைத்திருக்கிறோம். இந்த குண்டுச் சட்டியை உடைத்துக்கொண்டு வெளியில் வரவேன்டுமென்றால் சர்வதேச அணி ஒன்றை வென்றெடுக்க வேணுமென்றால் அவர்களது அரசியல் அகராதியை அவர்களது அரசியல் மொழியை புரிந்து கொள்வது மிக முக்கியமாகும். அதற்கான ஆழுமையை வெளியில் உள்ள ஆளுமைகளை capacity இணைத்தும் இளைய தலைமுறையை முன்னணிப் படுத்தியும் பயிற்ச்சிகள் மூலமும் நாம் வளர்த்துக் கொள்ள முடியும். நாம் எப்படியும் வென்றாக வேன்டும் வல்வைசாகரா.

சிறைப் பட்ட போராளிகளுக்கும் அரசுக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தையை உருவாக்குவது சாத்தியாமா என்பதை வெளிநாட்டில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச சமூகத்துடனும் தொடர்புள்ள சிங்கள ஆர்வலர்களூடாகவும் முயன்று பார்ப்பது அவசியமானது என்றே கருதுகிறேன். இக்கருத்தை விவாதிப்பீர்களானால் நன்று.

poet உங்கள் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே....

ஏகபிரதிநிதிகள் என்ற பதம் அல்லது ஏகபிரதிநிதிகள் என்ற நிலையால் எம்மிடையே ஒற்றுமை இல்லாமல் போனது என்பது மறுக்க முடியாத உண்மையே. அத்தோடு பலரின் நல்ல ஆலோசனைகளைக்கூட நாம் புறந்தள்ளி அல்லது ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டோம். ஏகபிரதிநிதிகள் என்பதை தவிர மாற்றுக்கருத்துக்கள் எம்மிடம் இருக்கவில்லை...இல்லை அதை உள்வாங்க விரும்பவில்லை. இதனால் தான் விடுதலைப்புலிகளுக்கு பின் இவ்வளவு வெற்றிடம் அல்லது ஒரு தலைமைத்துவம் இல்லாமல் போயுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு பின் யார் இதை முன்னெடுக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. புலம்பெயர் மக்களை பொறுத்தவரையும் சரி,இளைய சமுதாயத்தைப் பொறுத்தவரையும் சரி தமக்குரிய தீர்வைப்பெறுவதற்கு என்ன விலையும் கொடுக்க தயார் என்பதற்கு புலம்பெயர்நாடுகளில் நடக்கும் போராட்டங்கள் கண்கூடு ஆனால் இவ்வளவு செய்தும் எம் மக்களின் கருத்துக்கள் எடுபடவில்லையே என்பது வருத்தத்திற்குரிய விடயங்களே அதாவது எமது நிலைப்பாடுகள் தெளிவாக சர்வதேசத்திடம் போய்ச்சேரவில்லை என்பதே அத்தோடு எதிரியின் பிரச்சாரங்கள் எடுபடுவதற்கு எம்மில் பல புத்திஜீவிகளே அரசின் பிரச்சாரப் பீரங்கிகளாக செயற்படுவதுதான். எம்மை வைத்தே எதிரி எம்மினத்தை அழிக்கிறான் அதுக்கு எம்மவரும் துணைபோவதுதான் வேதனை.

அத்தோடு மாற்றுக்கருத்தாளர்களை அல்லது பிரிந்து நிற்கும் மற்றவர்களையும் ஒன்றுசேர்த்து ஓரணியில் செயற்பட்டு எமது இலக்கை வென்றெடுப்பதே இன்று எமக்குள்ள தெரிவு.

இது எந்தளவுக்கு சாத்தியம்,இதை யார் முன்னெடுக்கப்போகிறார்கள் என்பதே இன்று எம்முன்னுள்ள கேள்வி?

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...........!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி ஆளாளுக்கு கதைப்பம்..

Edited by காவடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய ஜீவாவுக்கும் காவடிக்கும் எனது நன்றிகள். மேலும் பல கருத்துக்களை உள்வாங்கி அவை தொடர்பாக என்னுடைய அவிப்பிராயங்களை எழுதுகிறேன். இடம்பெற்ற பெரிய யுத்தமொன்றில் தோற்றுப் போயுள்ளோம். ஆனால் எங்கள் போராட்டம் தோற்க்கவில்லை என்பதையே சர்வதேச ரீதியாக எழும் ஆதரவுக் குரல்களும் நம்மவர்களது துடி துடிப்பும் புலப் படுத்துகின்றது. தாய்மண்ணில் வேர் ஊன்றாத போராட்டங்கள் எதுவும் நீண்டகால அடிப்படையில் பயன்தரப் போவதில்லை. தாய் மண்ணில் வேரூண்றுவது இன்றைய நிலையில் ரி.என்.ஏ உடனும் சிறையின் உள்ளும் வெளியிலும் இருக்கும் போராளிகளுடனும், மேற்படி அமைப்புகளுக்கு வெளியில் இருக்கும் தேசிய சக்திகளோடும் தொடர்புபடுவதன் மூலமே உருவாக முடியும். ரி.என்.ஏ தலைவர் சம்பந்தன் இன்றுள்ள ஆற்றலும் அனுபவமும் உள்ளவர்களுள் முதன்மையானவர். கிழக்குமாகாண தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்ட தலைவர்களுள் முஸ்லிம் மக்களது நன்மதிப்பைப் பெற்ற ஒரே தலைவர் சம்பந்தர்தான். சர்வதேச ராஜதந்திரிகளோடும் இந்தியாவுடனும் வெற்றிகரமாகச் செயல்படக்கூடிய நிலையில் சம்பந்தர் இருக்கிறார். திரு அன்ரன்பாலசிங்கம் அவர்கள் 2002 பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் வெற்றிகரமாகச் செயல்ப் படுத்திய சர்வதேசக் கொள்கையின் ஒரு பங்காளியாக அடேல் பாலசிங்கம் இருக்கிறார். மேற்குலகின் ஜனநாயக விழுமியங்களை வரித்துக்கொண்டவர். மாற்றுக் கருத்தாளர்களுடன் செயல்ப்படக்கூடியவர். துரதிஸ்ட வசமாக திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களது பாதையில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுத்துச் செல்லப் படவில்லை. அதனால்தான் ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் சர்வதேசச் சமூகத்தை எரிச்சல்ப் படுத்திய நமது பக்கத் தவறுகள் உருவாகியது. திரு அன்ரன் பாலசிங்கம் உருவாக்கிய சர்வதேச அணுகுமுறையும் சம்பந்தர் நடைமுறைப் படுத்தும் இந்தியாவுடனான சரியான அணுகுமுறையும் ஒரு புள்ளியில் இணைக்கப் படுவது அவசியம். கடந்த காலத்தில் நந்தவனம் நடைமுறைப் படுத்திய சில கெடுபிடிகள் புலம்பெயர்ந்த தேசிய சக்திகளை வெளியே தள்ளிவிட்டன. ஜெயதேவன் போன்றவர்கள் தீவிரமாக எதிர் முகாமுக்குள் தள்ளப்பட்டு விட்டனர். எவ்வித தயக்கமும் இன்றி எல்லா தவறுகளையும் தாண்டி சொந்த விருப்பு வெறுப்புகளைப் புறம் தள்ளிவிட்டு மீண்டும் இணைக்கக்கூடிய யாவரையும் இணைத்துக் கொள்கிற மனபக்குவம் எமக்கு அவசியம். இன்றைய அவசரத் தேவை நமது தேசிய அரசியல் சக்திகளை தேசிய சர்வதேசிய ரீதியாக ஒருங்கிணைப்பதாகும். ரி.என்.ஏ தலைமை, எஞ்சியிருக்கும் போராளிகள், அடேல் பாலசிங்கம் போன்றவர்கள் சர்வதேச ரீதியாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துச் செல்கிற புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் அவற்றுக்கு வெளியில் இருக்கும் தமிழ் தேசிய சக்திகள் குறிப்பாக இளையவர்கள், நமக்கு ஆலோசனை சொல்லக்கூடிய சர்வதேச விமர்சகர்கள் எல்லோரும் கூடி ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பதும் சில பொது முடிவுகளை எடுப்பதும் மிக அவசியமும் அவசரமுமான கடமையாகும்.

பரந்துபட்ட ஆலோசனைகளும் விவாதங்களும் அவற்றின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட புதிய மூல உபாயமும் ஒருங்கிணைப்பும் இன்றி பழைய பாணி ஆர்பாட்ட ஊர்வலங்களின் வடிவில் அவற்றின் தொடற்ச்சியாக இந்றைய போராட்டங்களை நீண்டு செல்வதில் பயன் ஏதுமில்லை. இப்படி நமது சக்தியை தொடர்ந்தும் வீணடிக்க முடியாது. உலகளாவிய இலங்கைத் தமிழர்களின் காங்கிரஸ் மாநாடு ஒன்றை நோக்கமாகக் கொண்டு நமது சக்திகள் ஒருங்கிணைக்கப் படவேண்டும்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியின் பிரதிநிதிகள் பொறுப்பெடுத்துப் பேச செயல் அதிகாரம் உள்ளவர்கள் தமிழர் தரப்பினர் அப்படியில்லை என்று தொடர்ந்து சர்வதேச இராஜதந்தரிகளால் சொல்லப் பட்டு வந்தது. உங்களுடன் பேச்ச நாங்கள் வன்னிக் காட்டில் பரசூட்டில் குதிக்கவா முடியும் என்று ஐரோப்பிய இராஜதந்திரிகளும் அரசியல் அறிஞர்களும் வினவுவதைக் கேட்டிருக்கிறேன்.ோருபோதும் மேற்படி கேழ்விக்கு என்னிடம் எந்த ஒரு பதிலும் இருக்கவில்லை.

பிரிட்டிஷ் தமிழ் fபோரம், கனேடியத் தமிழ் காங்கிரஸ், சுவிஸ் தமிழர் பேரவை, நோர்வே தமிழர் அமைப்பு இவையெல்லாம் வன்னிக் காட்டிலா இயங்கின? இவற்றில் ஒன்றாவது ஈழ மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த வரலாறு உண்டா? இவையெல்லாம் அவசரத்துக்கு பேசி தமிழர் தரப்பு நிலையை அறிய, தமிழர் தரப்புக்கு பின்னூட்டல் கொடுக்க உகந்த அமைப்புகளாக தெரியவில்லையா? இவை இராசதந்திரிகளுடன் பேசும் நபர்களுக்கு நினைவுக்கு வர வேண்டிய தெரிவுகள் என நினைக்கிறேன். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அமெரிக்கத் தமிழ் அமைப்புகளின் சம்மேளனத்துடன் தான் பேச்சு வார்த்தை நடத்தியது. அவர்களூடாகத் தான் தமிழர் தலைமைக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கியது. உண்மை என்னவெனில் தமிழர் தரப்பு நியாயத்தை நாங்கள் கேட்கப் போவதில்லை என முடிவெடுத்த நாடுகள் அதைப் பின்பற்றின என்பதே. கொடியைக் கைவிட்டு ஒட்டாவா போன தமிழ் காங்கிரஸ் காரர்களையும் மாணவர்களையும் எந்தக் கனேடிய ஆட்சி அதிகாரிகளும் சந்திக்கவில்லை. இதை எப்படி விளங்கிக் கொள்வது? பிரிட்டிஷ் நாடாளுமன்றம் முன் கூடிய மக்களின் பிரதினிதிகளை யாரும் சந்திக்கவில்லை. அங்கே பரசூட் இல்லாதது தான் சந்திக்க இயலாமைக்கான காரணம் போலக் கிடக்கு. வெள்ளைக் காரன் சொன்னால் சரியாத் தான் இருக்கும் என்று நம்புறது இராசதந்திரமாத் தெரியேல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக் காவடிக்கு,

Edited by poet

இனி தொடங்க்கிட்டாங்கள் படை எடுக்க. உபதேசம் செய்து உள்ளவனையும் நோகடிச்சு அழிக்கிறதுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி தொடங்க்கிட்டாங்கள் படை எடுக்க. உபதேசம் செய்து உள்ளவனையும் நோகடிச்சு அழிக்கிறதுக்கு.

நன்றி நேசன். உங்கள் விமர்சனத்துக்கு நன்றி. மேலும் விரிவாக உங்கள் விமர்சனgகளையும் ஆய்வுக் கருத்துக்களையும் முன்வையுங்கள். ஆய்வுகளுக்கும் ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கும் செவிகொடுக்காததன் விழைவுகள் பயங்கரமாகிவிட்டது. கண்ணீரில் இருந்து நாம் இன்னமும் மீழவில்லை. நிச்சயமாக நான் தோற்றுப்போன நமது காலக் கட்டதில் இருந்து வரலாற்றின் பாடத்தைக் கற்றிருக்கிறேன். அதனால் நண்பரே உங்கள் ஆய்வுக் கருத்துக்களையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் வரவேற்க்கின்றேன். மீண்டும் நாம் எழ அனைவரதும் கருத்தியல் பங்களிப்புகள் அவசியம்.

Edited by poet

நீங்கள் மெதுவாக விடுதலையின் பின்னடைவை ஒருவர் மேல் சுமத்த முற்படுகிறீர்கள். ஏகப்பிரதிநிதிகள் என்ற சொற்பதத்தை அவர்கள் பாவித்ததே இல்லை. பத்திரிகைகளும் வெகுசன போராட்டத்தை முன் எடுத்த அமைப்புக்களும் தான் சொற்பதத்தை பாவித்தார்கள்.

தாங்கள் களத்தில் நிற்பதால் தங்களுடன் பேச வேண்டும் என்றார்கள். பலம் அங்கு தான் இருந்தது.

ஏகப்பிரதிநிதிகள் என்றதும் முதன்மை போராளிகள் என்ற அர்த்ததோடு தான் வந்தது அங்க ஒன்றும் பாசிசம் வரவில்லை.

அவர்கள்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பை உருவாக்கி தேர்தலுக்கு வந்தார்கள்.

சுனாமி கட்டமைப்ப்பு திடடத்தை நோர்வேயிடம் கொடுத்தார்கள்.

பல உலக தமிழ் அறிவாளிகளை கொண்டு இடைக்கால நிர்வாக சபை ஒன்றை ஏற்படுத்த அரசியலமைப்பை தயாரித்து கொடுத்தார்கள்.

முள்ளிவாய்க்கால் போர்வரை விடுதலை தங்களை அர்ப்பணித்து விடுதலையை தோளில் சுமந்தார்கள்.

சரிமாற்று கருத்தாளர்களிடம் என்ன இருந்தது. புலிகளை பலவீனப்படுத்தவே , அழிக்கவே முயற்சி செய்தார்கள். சிங்ககளத்திற்கு சேவகம் செய்தார்கள் . ஒரு கொள்கை இருக்கவில்லை. அப்படி கொள்கை இருந்திருந்தால் இன்று போர்தோற்றபின் அவர்களது கொள்கை முன்வந்திருக்க வேண்டும்.

அடுத்து என்ன செய்யலாம் என்று எழுதுங்கள் நான் வன்னியில் கத்தினேன் ப்டுங்கினேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மெதுவாக விடுதலையின் பின்னடைவை ஒருவர் மேல் சுமத்த முற்படுகிறீர்கள். ஏகப்பிரதிநிதிகள் என்ற சொற்பதத்தை அவர்கள் பாவித்ததே இல்லை. பத்திரிகைகளும் வெகுசன போராட்டத்தை முன் எடுத்த அமைப்புக்களும் தான் சொற்பதத்தை பாவித்தார்கள்.

தாங்கள் களத்தில் நிற்பதால் தங்களுடன் பேச வேண்டும் என்றார்கள். பலம் அங்கு தான் இருந்தது.

அடுத்து என்ன செய்யலாம் என்று எழுதுங்கள் நான் வன்னியில் கத்தினேன் ப்டுங்கினேன்

நான் எழுதியது ஒன்று. நீங்கள் எழுதுவது மற்றொன்று. ஒவ்வொருவரும் தாங்கள் மட்டும்தான் பங்களிப்புச் செய்தவர்கள் மற்றவர்கள் துரோகிகள் என்று கருதும் போக்கு இனியும் வேண்டாம். குற்றம் சுமத்தி துரோகி முதிரை அடித்து ஆக்கபூர்வமான விவாதங்களை அழிததுபோதும். விளக்கை ஏற்றவேண்டிய தருணமிது. குற்றப் பதிரிகை எழுதுவதை விட்டுவிட்டு அவர் அவருக்கு தெரிந்த உண்மையின் பகுதிகளைக் கண்டறியும் விவாதங்களை முன்வையுங்கள்.

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுய விமர்சனம் எவ்வளவு அவசியமோ, அதைவிட முக்கியம் அதை ஆக்கபூர்வநோக்குடன் மட்டும் செய்தல்......என்ற உண்மையை ஒவ்வொருவரும் உணரத்தலைப்படுதல் இன்றைய காலத்தின் தேவை என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்று ஒரு இனம் இலங்கையில் இருப்பதையே வெளிகொண்டுவந்தவர்கள் "மாவீரர்கள்". ஆனாலும் அவர்களது கனவினி மெல்ல சாகும். நரிகளின் நாட்டியம் அரங்கேறும். வேதாளங்களை கூட்டிவைத்து கதைத்து என்ன ஆக்கபூர்வமான விடயங்களை கதைக்கக முடியும் என்பது யாபருக்கும் தெரிந்தும்..... தெரியாதது போல் நடிப்பதே வாழ்வாகின்றதே?

"கீழ்தரமான தந்திரங்களால் மகாத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது. இது எனது உறுதியான நம்பிக்கை"

.விவேகானந்தர்

  • கருத்துக்கள உறவுகள்

பூனை இல்லாத வீட்டிற்குள் எலிகளுக்கு கொண்டாட்டமாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூனை இல்லாத வீட்டிற்குள் எலிகளுக்கு கொண்டாட்டமாம்.

புலவர், இங்கு எல்லோரும் சரிநிகர் சமானமான தமிழர்கள். பூனையுமில்லை எலிகளுமில்லை. உங்கள் பூனை எலிப்பார்வையின் பலனைத்தான் இன்று தமிழினம் அனுபவிக்கிறது. உங்கள் பூனை எலிக் கோட்பாட்டை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. பாதை தவறிவிட்டோமா என்பதை ஆராய்கிற மாற்றுக்கருத்துக்கெல்லாம் எலிப்பட்டமும் துப்பாக்கிக் குண்டும் பரிசளித்தால் அதல பாதாளத்துகுள் கால் வைக்க வேண்டியதுதான். பாதை எங்கு பிழைத்தது என்று திரும்பிபாராமல் குழல் ஊதியின் பின்னே சென்ற எலிகள்போல கண்மூடித் தொடர்ந்து செல்வதுதான் சரியென்றால். முன்னெ செல்லுங்கள். எலிகள் தொடரட்டும். இடிப்பாரை இல்லாத மன்னன்தான் உங்களுக்கு வேண்டுமென்றால் என்னுடைய நல்வாழ்த்துக்கள் இத்தகைய விவாதங்களில் ஈடுபடுவதில் எனக்கு இஸ்டமில்லை. இனி கவிதைக் களத்தைத் தவிர வேறு எங்கும் வந்து உங்களுக்கு எரிச்சல் மூட்ட விருப்பமில்லை.

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.