Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முகாம்களில் வாழும் அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களைச் சொற்களில் விளக்க முடியாது: சிறிலங்காவின் தலைமை நீதிபதி கவலை

Featured Replies

முகாம்களில் வாழும் இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களை சொற்களில் விளக்க முடியாது என்று சிறிலங்காவின் தலைமை நீதிபதி சரத் என்.சில்வா கவலை தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் உள்ள மாரவிலவில் நீதிமன்ற வளாக திறப்பு விழா நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வன்னிப் பகுதியைச் சேர்ந்த இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் குடும்பங்கள் தங்கியுள்ள 'நிவாரண ஊர்களுக்கு' சென்றிருந்தேன். அவர்களின் துன்பங்களையும், வேதனைகளையும் என்னால் சொற்களில் விளக்க முடியாது.

நாட்டில் பெரும்பான்மை இனமோ, சிறுபான்மை இனமோ இல்லை ஒரே இனம்தான் இருக்கிறது என்று நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்போம் என்றால் அது முழுப் பொய்யாகத்தான் இருக்க முடியும்.

இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் குடும்பங்கள் வாழும் செட்டிக்குளம் முகாம்களுக்கு நான் சென்றிருந்தேன். அவர்களின் பரிதாப நிலையை என்னால் விளக்க முடியாது. அவர்களுக்கு என்னால் ஆறுதல் சொல்ல முடியவில்லை. அளவற்ற துன்பத்துக்கும் இடர்களுக்கும் இடையே அவர்கள் உயிர் வாழ்கின்றனர்.

நமது பகுதிகளில் நாம் மாபெரும் கட்டடங்களைக் கட்டி வருகிறோம். ஆனால் இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் கூடாரங்களில் வாழ்கின்றனர். ஒரு கூடாரத்தில் 10 பேர் தங்கியுள்ளனர். கூடாரத்தின் நடுப்பகுதியில் மட்டுமே அவர்கள் நேராக நிமிர்ந்து நிற்க முடியும்.

கூடாரத்தின் மற்ற பக்கத்தில் நிமிர்ந்தால் கழுத்து முறிந்துவிடும். கழிப்பிடங்களுக்குச் செல்வதற்குக்கூட அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

என் உணர்வுகளை என்னால் அவர்களிடம் வெளிப்படுத்த முடியவில்லை. அவர்களின் துன்பங்களைக் கண்டு நாங்களும் அழுகிறோம் என்பதை அவர்களிடம் என்னால் சொல்ல முடியவில்லை. அவர்களுக்கு நிவாரண உதவிகளை நாம் போதிய அளவுக்கு வழங்க வேண்டும். அதைச் செய்யத் தவறினால் நாம் பழிக்கு ஆளாவோம்.

இந்த நாட்டின் சட்டத்தில் நீதி கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்க முடியாது. அந்த மக்களின் துன்பங்கள் இந்த நாட்டின் நீதிமன்றங்களுக்குக் கொண்டு வரப்படவில்லை.

இடம்பெயர்ந்த மக்களின் நலனில் இந்த நாட்டின் சட்டம் எந்த அக்கறையும் காட்டவில்லை. இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். இவ்வாறு சொல்வதற்காக நான் தண்டிக்கப்படலாம் என்று சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என்.சில்வா குறிப்பிட்டார்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

வியாழக்கிழமை, 4, ஜூன் 2009 (11:55 IST)

தமிழர் நிலை கண்டு பதைபதைத்தேன்: இலங்கை தலைமை நீதிபதி

வன்னியில் அரசு முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் வார்த்தைகளில் விவரிக்க முடியாத மிகக்கொடுமையான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களை நேரில் பார்த்து நெஞ்சம் பதைபதைத்தேன் என்று இலங்கையின் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இலங்கையின் சட்டத்தின் மூலம் அவர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இலங்கை நாட்டின் தலைமை நீதிபதி சரத் என்.சில்வா, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நீகோம்பு மாவட்டத்தில் மரவிலா என்ற இடத்தில் ஒரு நீதிமன்ற வளாகத்தை திறந்து வைத்து விட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், வன்னிப்பகுதியில் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்கள் இலங்கை நாட்டின் சட்டப்படி நீதியை பெற முடியாது. போரால் இடம் பெயர்ந்த தமிழர்களின் நலனில் இந்த நாட்டு சட்டம் எந்த அக்கறையும் செலுத்தாது. இதனை நான் பகிரங்கமாகவே கூறுகிறேன். இவ்வாறு நான் சொல்வதற்காக என்னை அதிகாரிகள் தண்டிக்கக் கூடும்.

நான் வன்னிப்பகுதி தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள "நிவாரண கிராமங்களுக்கு' சென்று பார்த்தேன். அவர்கள் படும் துன்ப துயரங்களையும், வேதனைகளையும் என்னால் வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை. ஒரே ஒரு இனம் தான் நாட்டில் உள்ளது: பெரும்பான்மை என்றோ, சிறுபான்மை என்றோ எதுவும் கிடையாது என்றெல்லாம் நாம் கூறுவது பச்சை பொய்யாகும்.

போரால் இடம் பெயர்ந்த தமிழ் குடும்பங்கள் வசிக்கும் செட்டிக்குளம் முகாம்களுக்கு சென்று நான் பார்த்தேன். அவர்கள் சந்தித்து வரும் மிகப்பரிதாபமான நிலையை என்னால் வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை. அவர்களுக்கு நான் எந்த ஆறுதலையும் கூற முடியவில்லை. மிகக்கடுமையான துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும் இடையே அவர்கள் உயிர் வாழ்த்து வருகிறார்கள்.

மிக பிரம்மாண்டமான கட்டிடங்களை ஒருபுறம் நாம் கட்டி வருகிறோம். ஆனால் போரால் இடம் பெயர்ந்த இந்த தமிழர்கள் மிகச்சிறிய கூடாரங்களில் வசித்து வருகிறார்கள். ஒரே கூடாரத்தில் 10 பேர் வாழ்கிறார்கள். அந்த கூடாரத்தில் அவர்கள் நேராக நிற்கத்தான் முடியும். கூடாரத்திற்கு வெளியே செல்ல முயன்றால் அவர்கள் கழுத்தே உடைந்து விடும் என்று நிவாரண முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

இயற்கை உபாதைகளுக்கு செல்வதற்கு கூட 50 பேர், 60 பேர் என்று நீண்ட வரிசையில் நின்று அவர்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது. செட்டிக்குளம் முகாமில் தங்கி உள்ள வன்னித் தமிழர்களின் வாழ்க்கை நிலைதான் இது.

அவர்களுக்கு போதுமான அளவிற்கு நாம் நிவாரணம் வழங்க வேண்டும் அப்படி செய்யத் தவறினால் அதற்கான பழியை நாம் தான் ஏற்க வேண்டும். இந்த நாட்டின் சட்டத்தின் மூலம் அவர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. அவர்களுடைய துயர நிலைகள், நீதிமன்றத்திற்கு முன் கொண்டுவரப்படவில்லை. இதனை நான் பகிரங்கமாகவே கூறுகிறேன். இதற்காக நான் தண்டிக்கப்படலாம் என்றும் சரத் என்.சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இம்மாத இறுதியில் இவர் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளார். அந்த நாட்டின் தலைமை நீதிபதியே போரால் இடம் பெயர்ந்த வன்னித் தமிழர்களின் துயர நிலையை பகிரங்கமாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நக்கீரன்

நக்கீரனுக்கு தனியாக பேட்டி கொடுத்தவரோ,ஏன் இலங்கை பத்திரிகையில் ஒண்றிலும் வரவில்லையோ.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நண்பரே தமிழ்நெட்டிலும் அவர் பற்றிய செய்தி வந்திருக்கிறது. இது உங்களுக்காக!

Vanni IDPs live under appalling condition: Sri Lankan Chief Justice

[TamilNet, Thursday, 04 June 2009, 01:03 GMT]

"Vanni IDPs sheltered in transit centres in Cheddiku'lam cannot expect justice under the Sri Lanka’s law. Law of the country does not show any interest on these IDPs. I openly say this. The authorities can penalize me for telling this," said Sri Lanka's Chief Justice Sarath N. Silva when he addressed a public meeting which followed the ceremonial opening of a court complex at Marawila in Negombo district Tuesday. These transit centres are described as internment camps by human rights activists.

Sarath N. Silva further said:

“I visited 'relief villages' where Vanni IDP families are sheltered. I cannot explain their suffering and grief in words. It is an utter lie if we continue to say that there is only one race and no majority or minority in the country. I visited Cheddiku'lam camps where IDP families live. I cannot explain the pathetic situation they undergo. I was unable to console them. They survive amid immense suffering and distress.

"We construct massive building on our side. But these IDPs live in tent-shelters. Ten IDPs live in one tent-shelter. They could stand straight only in the centre of the tent shelter. Their neck will break down if they move to aside of the tent-shelter.

"IDPs are seen waiting in queues, extending from 50 to 100 yards to take their turn to answer a call of nature. This is the life of Vanni IDPs in Cheddiku'lam camp

"I attempted to smile at these IDPs. But it was without success. I failed to express my feeling towards them. I was unable to tell them that we also were crying with them for their suffering. I was unable to tell them that I would supply new clothes to them.

"They should be provided with enough relief. We would be blamed if we fail to supply them with enough relief.

"They cannot expect justice from the law of the country. Their plight and suffering are not brought to the court of law in our country. I openly say this. I will be penalized for telling this”, said Mr.Sarath Silva who is to retire from the post of Chief Justice at the end June when he reaches 60 years of age.

Sarath Silva's address was aired with Tamil translation Wednesday night in MTV News bulletin.

நன்றிகள் ரகு..

இம்மாத இறுதியில் இவர் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளார்

எல்லோருக்கும் ஞாணம் இளைப்பாரும் பொழுதுதான் வருகிறது,படை அதிகாரி-அரசியல்வாதி-நீதிபதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியா....................?

நாசி குணமுடைய இனங்களில் இரண்டு முகமும் இருக்கும். தாங்கள் நல்ல இனம் போல் காட்டுவதற்கு இப்படியான செய்திகளை அதே இனத்தவர் வெளியிடுவது.

அப்ப வெளியில் நின்று பார்ப்பவர்கள் செய்யும் இன அழிப்பை பெரிதாக எடுத்து கொள்வதில்லை.

சிங்களவன் உலகை நல்லா புரிஞ்சு கொண்டான்.

நக்கீரன் பேப்பரில் போட்டால் தமிழகம் இதை எப்படி அர்த்தப்படுத்தி வாசிப்பார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடு நனையுதென்று ஓநாய் ஆழுகிறதோ?

D எஸ் சேன நாய்யக்கனிலிருந்து எத்தனை பேரப்பாத்திட்டம் போங்கடடோய்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில் இவர்தான்

ஐ.தே.கட்சி வேட்பாளர் என்று கதைவந்தது

அதுதான்

யானைவரும்......

மணி ஓசைவரும்...??????

எந்த சிங்களவனையும் நம்புவதுக்கு இல்லை... ( நாங்கள் தமிழர்களையே நம்புறது இல்லை எண்டது வேறை விடயம்) தாங்கள் தமிழர்களுக்காக வருந்துவதாகவும் தங்களுக்கும் மனிதாபிமானம் எல்லாம் இருக்கிறது எண்று உலகுக்கு காட்ட போடும் நாடகம் இது...

இண்று மாலை தமிழர் தரப்பின் எந்த கொடுமையான செய்திக்கும் முக்கியத்துவம் கொடுக்காத BBC Tamil சேவை முக்கியம் கொடுக்க இது உகந்த செய்தி என்பது மட்டும் உண்மை...

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலோ????அதுவரைக்கும் கோத்தபாய விட்டு வைப்பானோ?????????யாரையும் நம்ப தயாராகவில்லை என்பதே உண்மை!!!!!!!!சமாதானம் பேச வந்த பீரிசே என்ன மாதிரியெல்லாம் கதைச்சவர் என்று எமக்கு நல்லாத் தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.