Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்சவப்பெட்டியில் விழுந்த ஆணிகள்

Featured Replies

சிறீலங்கா இட்டது சிறு ஆணி - அப்போதும்

சிந்தை கலங்கவில்லை

ஐரோப்பா இட்டது ஐந்தாறு ஆணி - அப்போதும்

ஐயோவென்று அழவில்லை

அமேரிக்கா இட்டது ஆறேழு ஆணி - அப்போதும்

அச்சம் எழவில்லை

சீனா இட்டது சில ஆணி - அப்போதும்

சிறிதும் வாடவில்லை

இந்தியா இட்டது இரும்பாணி - அப்போதும்

இதயம் நோகவில்லை

பாகிஸ்தான் இட்டது பல ஆணி - அப்போதும்

பயந்து போகவில்லை

தமிழகம் இட்டது தனி ஆணி - அப்போது

தொலைந்தது எம்மூச்சு

http://gkanthan.wordpress.com/index/eelam/nails/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்கா இட்டது சிறு ஆணி - அப்போதும்

...................................

http://gkanthan.wordpress.com/index/eelam/nails/

மன்னிக்க வேண்டும் நண்பரே!

1. எந்த இந்தியா தமது விடுதலையை ஆதரிக்காது என்று தீர்க்க தரிசனமாக தலைவர் சொன்னாரோ (இயக்கம் இந்தியாவில் பயிற்சிகள் பெற்றுக்கொண்ட ஆரம்ப காலங்கள்) அதே இந்தியா எங்களை அங்கீகரிக்கும், நிச்சயம் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தபோது சில ஆணிகள்,

2. இலங்கை ராணுவம் மிகவும் பலவீனமாகவும், புலிகள் பலத்தின் உச்சியிலும் இருந்தபோது, இந்தியாவை திருப்திப்படுத்த யாழ் முற்றுகையை விலக்கிக்கொண்ட பொது சில ஆணிகள்,

3. கருணா போன்ற இன துரோகிகளை சரியான சமயத்தில் களையெடுக்க தவறியபோது சில ஆணிகள்,

4. "உலகம் தர்ம, நியாயத்தில் இயங்கவில்லை. வல்லரசுகளும், பிராந்திய அரசுகளும் தங்கள் நலனை முன்னிறுத்தியே செயல்படுகின்றன. நாம் சிறிது விட்டுகொடுத்துதான் (திருகோணமலையை சீனாவுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ) ஈழம் வென்றெடுக்க முடியும்" என்று பாலா அண்ணன் படித்து படித்து சொன்னபோதும், பிடிவாதமாக மறுத்தபோது சில ஆணிகள்,

5. "இந்தியாவுக்கு எதிரான சில சக்திகளுடன் (வேறு யார், அமெரிக்கா ,சீனா தான்) ரகசிய பேரங்கள் செய்துகொண்டிருந்தால் தமிழ் ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும்" என்று அருள்தந்தை ஜகத் கைசபஅருக்கு 2002-இல பெட்டி கொடுத்தார் தலைவர்,

அப்போது சில ஆணிகள்,

6. இந்தியாவின் அனுசரணையுடன்தான் நார்வே மத்யஸ்தம் செய்ய வருகிறது என்று தகவல்கள் கசியவிடப்பட்டபோது, இந்தியா தங்களை அங்கீகரித்ததாக ஏமாந்து, இயக்கத்தில் துரோகிகள் இடம்பெற/உருவாக காரணமாக இருந்தபோது சில ஆணிகள்,

என்று நமக்கு நாமே அழகாய் அடித்துகொண்டோம் ஆணிகளை. எதிரியின் வேலையெல்லாம் பொறுமை காத்தது மட்டும்தான். இதுதான் விதி என்பதா?

  • தொடங்கியவர்

என்று நமக்கு நாமே அழகாய் அடித்துகொண்டோம் ஆணிகளை. எதிரியின் வேலையெல்லாம் பொறுமை காத்தது மட்டும்தான். இதுதான் விதி என்பதா?

நாம் கடந்த காலங்களில் பிழை விட்டிருக்கிறோம் என்பது உண்மை தான். இத்தனை பெரிய உளவுத்துறையும் படைப் பலமும் கொண்ட அமேரிக்கா போன்ற நாடுகளே தப்புக் கணக்குகளைப் போட்டு வியட்நாம், ஈராக் போன்ற நாடுகளிலே தங்கள் கைகளைச் சுட்டுக்கொண்ட பொது நாம் சில தவறான கணிப்பீடுகளைச் செய்வது தவிர்க்க முடியாதது. ஆனால் பிழைகளை அடையாளம் கண்டு திருத்திக் கொண்டு தொடர்ந்து போராடுவது தான் தமிழர்களாகிய எங்கள் கடமையும் காலத்தின் தேவையுமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் இட்ட ஆணி .........அதன் துரோகதனமா?சிலர் எமக்காக பாடுபடார்களே. அவர்களை அடக்கி விடார்களா ?

அல்லது தலைமையாக இருந்தவர் விலைபோய்விடாரா ?......அல்லது தமிழகத்தை நம்பியது நம் குற்றமா ?.இறுதியில் செயலில் காட்டி விடார்கள்

எம்மை நாம் (ஈழத்தமிழர்) தான் காக்க வேணும் என்று

  • கருத்துக்கள உறவுகள்

:wub: நம் கையே நமக்கு உதவி.

வெறுங்கை என்பது முடத்தனம்......

விரல்கள் பத்தும் முலதனம்......

பலமிளந்து நிற்கும் கைகளை நாமே

பலப் படுத்துவோம். :D

பிரியமுடன்:யாயினி கனா.

  • கருத்துக்கள உறவுகள்

1. எந்த இந்தியா தமது விடுதலையை ஆதரிக்காது என்று தீர்க்க தரிசனமாக தலைவர் சொன்னாரோ (இயக்கம் இந்தியாவில் பயிற்சிகள் பெற்றுக்கொண்ட ஆரம்ப காலங்கள்) அதே இந்தியா எங்களை அங்கீகரிக்கும், நிச்சயம் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தபோது சில ஆணிகள்,

அவை ஆணிகள் அல்ல நெஞ்சாங்கட்டைகள்.

மொத்த ஆணியையும் குத்தகை;கு எடுத்து எரிக்சொல்கைம் வைச்சான் பாருங்கள் ஓரு ஆணி அதுதான் ஆணி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.