Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக் கழகம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் பல்கலைக் கழகம்

தயவு செய்து கீழ் கண்ட இணைய தளத்தில் கட்டுரையைப் படிக்கவும்

http://www.uthr.org/SpecialReports/spreport32.htm

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

யாழ் பல்கலைக் கழகம்

தயவு செய்து கீழ் கண்ட இணைய தளத்தில் கட்டுரையைப் படிக்கவும்

http://www.uthr.org/SpecialReports/spreport32.htm

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

நன்றி சாண்டில்யன்

அடடா...யாழ் பல்கலைக்கழக மனித உரிமைகள் ஆசிரியர் குழு எம்மால் பச்சை துரோகி என்று முத்திரை குத்தப் பட்ட குழுவாச்சே... ராஜன் கூலில் இருந்து அவரின் சகோதர் வரை இதே முத்திரையை நாம் குத்தி பல நாட்களாயிற்றே

எமக்கு வேண்டியது எம்மை புலிகளை கொஞ்சம் கூட விமர்சிக்காது, எதிரியை நார் நாராக கிழிக்கும் அறிக்கைகள் தான். அப்படியானவற்றை வாசித்துதான் எமக்கு பழக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரியாது ராஜன் கூல் சகோதரர்கள் தமிழ் மக்களுக்கு சேவை செய்தவர் என்று. அப்படியானால் எப்பவில் இருந்து என்று தமிழ மக்கள் அறிய மிக மிக ஆவலாக உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் தமிழ் மக்களதோ அன்றி தமிழ் ஈழத்தினதோ பிரச்சினைகளை விட தமது வித்துவக்காய்ச்சலுக்கும் எசமானர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை.விமர்சிப்பது தவறு அன்று....ஆனால் இவர்களோ தம்மை போராடும் இனமாக அடையாளம் காட்டுவதை விட....அந்நியராக அடையாளம் காட்டியதே அதிகம். இவர்க்ள் விடையத்தில் அவதானமாக் இருப்பது மிக மிக அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று thatstamil ல் வந்த பிரபாகரன் தனது இளைய மகன் பாலச்சந்திரனின் முன்னிலையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்ற செய்தியின் மூலம் கூலினாலும்,சிறிதரன் (ரஜனி திரணகமவின் 2ஆவது கணவன்/காதலன்) ஆகியோரால் மேற்படி தளத்தில்(uthr.org) தான் செய்தி வந்தது. இதன் மூலம் இவர்கள் யார் என்பதை சொல்ல தேவையில்லை. ஒரு Phd வைத்திருந்தால் எதுவும் எழுதலாமா? அல்லது அது தான் விமர்சனமா?

பி.பி.சி. டமிழோசையும் இந்த அமைப்பை சேர்ந்த ஒருத்தரை கடந்த வாரம் பேட்டி கண்டவைகள் .எல்லாம் ஒரு ஜனநாயக முயற்சி தான் என நினைக்கிறன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா...யாழ் பல்கலைக்கழக மனித உரிமைகள் ஆசிரியர் குழு எம்மால் பச்சை துரோகி என்று முத்திரை குத்தப் பட்ட குழுவாச்சே... ராஜன் கூலில் இருந்து அவரின் சகோதர் வரை இதே முத்திரையை நாம் குத்தி பல நாட்களாயிற்றே

எமக்கு வேண்டியது எம்மை புலிகளை கொஞ்சம் கூட விமர்சிக்காது, எதிரியை நார் நாராக கிழிக்கும் அறிக்கைகள் தான். அப்படியானவற்றை வாசித்துதான் எமக்கு பழக்கம்

என்ன தான் நடக்குது இங்கே ???

பி.பி.சி. டமிழோசையும் இந்த அமைப்பை சேர்ந்த ஒருத்தரை கடந்த வாரம் பேட்டி கண்டவைகள் .எல்லாம் ஒரு ஜனநாயக முயற்சி தான் என நினைக்கிறன்

jil Just nowonly I come across your quotes under your name,

Pls dont think all the tamils are not the great karuna, people like us are in minority category, so pls push away us

I dont know you but I am having a attachment on as a tamil

pls dont mistake all

yours,

ramathevan

  • கருத்துக்கள உறவுகள்

ராமதேவன், ஒன்று ஆங்கிலத்தை ஒழுங்காக எழுதுங்கள். அல்லது தமிழில் எப்படி எழுதுவது என்று கற்றுக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"The Army had for the most part conducted itself in a disciplined manner in trying to protect civilians"

நல்ல முயற்சி. ஆனால் இது போன்ற சில வாசகங்களை இடை செருகி, உங்கள் உண்மை சொரூபத்தை காட்டிவிட்டீர்களே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D

அன்பார்ந்தவர்களே

ஒரு சில விடயங்களை கூறலாமென்று எண்ணுகின்றேன்.

1. முதலாவதாக;- ராஜினி திரணகமவின் கூற்று,

“Our colleague Dr. Rajani Thiranagama felt this very keenly and wrote these prophetic words in the Broken Palmyra exactly 21 years ago and paid for her convictions with her life:

“The Tigers’ history, their theoretical vacuum, lack of political creativity, intolerance and fanatical dedication will be the ultimate cause of their own break up. The legendary Tigers will go to their demise with their legends smeared with the blood and tears of victims of their own misdoings. A new Tiger will not emerge from their ashes. 0nly by breaking with this whole history and its dominant ideology, can a new liberating outlook be born.”

நாம் எல்லோரும் ஒன்றை ஒருதலைப்பாட்டாகப் பார்க்காமல் பக்கவாட்டாகப் பார்க்கவேண்டும் plus lateral thinking. ஆராயவேண்டும். அப்படிச்செய்யாவிடின் தவறுகள் நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. ராஜினி திரணகம 21 வருடத்திற்கு முன்பு கூறியது உண்மை.

2. ஜீவன் ஹ¥லைப் பற்றிய உண்மைகளில் ஒன்று

ஹ¥ல் ஆபிரிக்கா நாட்டொன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1977ம் ஆண்டு இனக் கலவரத்திற்குப் பின்னர் மக்கள், இளய பட்டதாரிகள் இலங்கையில் கஷ்டப்பட்டார்கள். ஜீவன் ஹ¥ல், தன்னுடைய தனிப்பட்ட சொந்த முயற்ச்சியால் 500 க்கும் மேற்பட்ட தமிழ் பட்டதாரிகளுக்கு அந்த நாட்டில் ஆசிரியர்களாக வேலை வாய்ப்புக்கள் கிடைத்தது. இந்த 500ம் மேற்பட்ட பட்டதாரிகள் இன்று லண்டனிலும், கனடாவிலும், அமெரிக்காவிலும் சகல வசதிகளோடும் வாழுகின்றார்கள். இங்கே கூறியது ஹ¥ல் செய்த பணிகளில் ஒன்றுதான்.

3. தமிழ் மக்கள் பலவீனம் சில என்று சொன்னால்; நாம் ஒன்றை ஆராய்வதில்லை. நாலு பேர் சொன்னவுடன் அது உண்மை என்று கொடுக்கைக் கட்டி விடுவோம். தலைவர் இறந்துவிட்டார், இல்லை உயிரோடு இருக்கின்றார், என்பதிலேயே எத்தனை வாதாட்டம் போராட்டம். இன்று தமிழ் மக்களின் அவல நிலைக்குக் காரணம் என்ன? புலம் பெயர்ந்த நாம் கோழிக்கறியும் சாதமும் உண்டு எதையும் கூறலாம். யாரைய்யா இறப்பது, உணவு இன்றித் தத்தளிப்பது?

4. தமிழீழ விடுதலை என்று கூறி பணம் சேர்த்து ஆயுதங்கள் வீணாகின. ஆனால் ஒன்று நிஜம். இந்தப்பணத்தால் ஒரு சில தனிப்பட்டவர்கள் கோடீஸ்வரராகிவிட்டார்கள். எப்படி; இந்தப்பணங்கள் தனிப்பட்டவர்கள் பெயரில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக கருத்துக்கள் வெளிவரத் தொடங்கிவிட்டது. இவர்கள் இந்தப்பணத்தை தமிழ் மக்களின் முதலீட்டுப் பணமென்று முழு விபரமும் மக்களுக்கு அறிவிப்பார்களா?

http://asiantribune.com/oldsite2/?q=node/18391

5. கட்டப்பொம்மன் ஒரு விவேகமுள்ள, மக்களுக்காக வாழ்ந்த மன்னனா? இல்லை. இறுதியில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டு இறந்தான்??

6. 10க்கும் மேற்பட்ட ஆயுதக்குழுக்கள் புலிகளுக்கு எதிராகச் செயல்பட்டார்கள். காராணம் யாதோ?

7. கோடீஸ்வரன் சிங்கள மொழி காரணமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இலங்கையில் தோற்று, இறுதியில் 1969ம் ஆண்டு privy council லில் வாதாடி வெற்றி பெற்றார். சோல்பரி அரசியல் அமைப்பின் S29(2) பிரகாரம் வெற்றி பெற்றார். 1948ம் ஆண்டு 10 லட்சம் மலையக மக்களின் குடி உரிமை பறிக்கப்பட்டபோது எமது சட்டத்தரணிகள் எங்கே போனார்கள். அவர்களுக்குச் சட்டம் தெரியவில்லையா? சோல்பரி அரசியல் அமைப்பின் S29 பகுதி தெரியவில்லையா?

8. தமிழன் விட்ட பிழைகள் சுழலும் சக்கரம் போல தோன்றி மறைகின்றது.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

Edited by Sandilyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சாண்டில்யன்.

நீங்கள் ஏசியன் ட்ரிபியூன் இல் இடைச்செருகல் செய்ததால் உங்களுக்கு பதில் எழுதாமல் விடுவது நலம் என எண்ணினேன்.இருப்பினும் கூல் ஐயா பற்றி நீங்கள் எழுதியதற்கு பதில் எழுத வேண்டியிருப்பதால் இதை எழுதுகிறேன்.

விடுதலைப்போராட்டத்தை விட்டு விடுவோம், அந்த விடயத்தில் எமக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு மிக நீண்டது போல் படுகிறது. ஆகவே உங்களுடன் அந்த விடயத்தில் கருத்தாடுவதை விட அந்த நேரத்தை வேறெதிலாவது செலவு செய்வது சிறந்தது என எண்ணுகிறேன்.

ஜீவன் கூல் என நீங்கள் குறிப்பிடுவது, பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் என எண்ணுகிறேன். அவர் எழுதிய ஒரு புத்தகம் நீங்கள் வாசித்திருக்க்றீர்களோ எனக்குத்தெரியாது. அந்தப்புத்தகதை அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளதால் ஈழத்தமிழரின் பண்பாடு பற்றி ஆராய முற்படும் வெளியார் அதை ஒரு மூலமாக எண்ணக்கூடும். அதில் அவர் எழுதியிக்கும் பல விடயங்கள் தவறு என்பது ஒருபுறமிருக்க, தான் ஒரு அடிப்படை நாகரிகமற்ற போக்கிரி (மன்னிக்கவும்) என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். அவர் கற்றதனலான பயன் யாது எனும் வினா அந்நூலை வாசிக்கும் எவருக்கும் எழும். அவ்வளவு கேவலமாக எமது பண்பாட்டையும் எம்மையும் எள்ளி நகையாடியிருக்கிறார். நூலின் தலைப்பே கண்டனத்துக்குரியதால் நான் இங்கு அதைக்குறிப்பிடவில்லை.

Edited by Viduthalai Virumby

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D

அன்பார்ந்தவர்களே

......................................

நண்பரே!

கலொனெல் கருணாவை 'துரோகி கருணா' வாக மாற்றியதில் பெரும்பங்கு நீங்கள் சுட்டிக்காட்டிய ஏசியன் டிரிப்யுன் பத்திரிக்கையின் ஆசிரியருக்கு உண்டு என்று அருள்தந்தை ஜகத் கஸ்பர் நக்கீரன் பத்திரிக்கையில் எழுதியுள்ளாரே, எந்தளவுக்கு உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

சாண்டில்யன் யாரென்பது இங்கே ..........

http://www.yarl.com/forum3/index.php?showt...15886&st=20

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D

அன்பார்ந்தவர்களே!!

பார்த்தீர்களா? உடனே முத்திரை குத்தி விடுவீர்களே. எதிரியின் பத்திரிக்கையையும் படித்தால்தான் நமக்கு எல்லாம் விளங்கும். அதில் கூறியவைகள் சிலவற்றை பொய் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? எனக்குத் தெரிந்தவரையில் பணத்தைச் சூறையாடியவர்கள் பலர்.

ஜீவன் மாறியதற்கு காரணம் என்னவென்று அறியுங்கள். இன்று சித்தார்தர், ஆனந்த சங்கரி, இப்படி பல பலர் மற்றய கும்பலில். இவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள். கருணா மாறியதற்கு காரணத்தை இங்கு கூற விரும்பவில்லை. .. .. .. குப்பையைக் கிளறுவதாகும். கருணா மாத்திரம் மாறவில்லை. அவரோடு ஆயிரக்கணக்கில் மாறினார்கள். கருணாவை மாத்திரம் சுட்டிக்காட்டுகின்றீர்கள். காரணம் யாதோ?

ஒற்றைப்பக்கம் பார்க்காதீர்கள். எல்லாவற்றையும் படித்து ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வாருங்கள். இன்றய தமிழர் அழிவிற்கு காரணத்தை ஆராயுங்கள். எதிரியின் பத்திரிக்கைகளையும் படியுங்கள்.

Intellectualism is “the doctrine that knowledge is wholly or mainly derived from pure reason”, and, “an intellectual is a person possessing a good understanding, enlightened person”.

நான் பிடித்த முயலுக்கு மூன்று காலென்றால் என் செய்வது? இதற்கு மேலும் விவாதிக்க விரும்பவில்லை. உங்களிடமே விடுகின்றேன்.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பில் இருந்தே நீங்கள் முழுமையாக வாசிக்கவில்லை என்று தெரிகிறது. யானையை பார்த்த குருடனாக இருந்து கொண்டு இரண்டு பக்கமும் பார்க்க வேண்டும் என்று அறிவுரை வேறு. ஈழவனின் கேள்விக்கு முடித்தால் விடையளிக்க முயற்சிக்கவும். சாண்டில்யன் கதைகள் கேட்டு கேட்டு புளித்து போய்விட்டது. :D

அத்தோடு உங்களுக்கு பட்டம் தர நானொன்றும் பல்கலைகழகம் நடாத்தவில்லை. :D

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரிப்பில் இருந்தே நீங்கள் முழுமையாக வாசிக்கவில்லை என்று தெரிகிறது. யானையை பார்த்த குருடனாக இருந்து கொண்டு இரண்டு பக்கமும் பார்க்க வேண்டும் என்று அறிவுரை வேறு. ஈழவனின் கேள்விக்கு முடித்தால் விடையளிக்க முயற்சிக்கவும். சாண்டில்யன் கதைகள் கேட்டு கேட்டு புளித்து போய்விட்டது. :)

அத்தோடு உங்களுக்கு பட்டம் தர நானொன்றும் பல்கலைகழகம் நடாத்தவில்லை. :)

வணக்கம் நுணாவிலன்

தாங்கள் வைத்திருக்கும் பெயரிலேயே தெரிகின்றது தங்களுடைய ஊர் பேதமும் துவேஷமும். நான் ஈழவனுடைய கேள்விக்கு விடை அளிப்பதற்கு இங்கு வரவில்லை. ஒவ்வொருவனுக்கும் தன்னுடைய கருத்தைக் கூறுவதற்கு சுதந்திரம் உள்ளது. உங்களில் ஒரு சிலரின் அதிகாரச் சிந்தனை, தங்களுடைய சொல்லைத்தான் மக்கள் கேட்கவேண்டும் என்று நினைக்கின்றீர்கள். இந்த அதிகார துஷ்பிரயோகத்தால்தான் இன்று தமிழர்கள் அகதிகளாக நாடு நாடாக தவழ்ந்து வந்து வாழுகின்றார்கள். தங்களுடைய சொந்த மண்ணிலும் அகதிகள். நான் நாட்டை விட்டு 42 வருடங்களுக்கு முன்பு வெளியேறினேன். ஒருவரைப்பற்றி அறியாமல் கருத்து தெரிவிப்பது மூடத்தனம். யானையைப்பார்த்த குருடன் என்று என்னைச்சொல்லி தாங்கள் இன்னமும் கிணற்றுத் தவளைபோல் வாழுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன்.

மற்றவர்களை குறை சொல்லுவது, பிழை பிடிப்பது, சாதி மத பேதம் பார்ப்பது இந்த வெறியில் இருந்து தயவு செய்து வெளிவாருங்கள். என்று தமிழன் சாதி வெறியை ஒழிக்கின்றானோ அன்று தமிழ் நாடென்பது உதிக்கும். அன்று வரை தமிழனுடைய போட்டி, பொறாமை, சாதி வெறி, மத வெறி தமிழனையே அழிக்கும்.

நான் எழுதிய கருத்தை முழுமையாகப் படித்துச் சிந்திக்காது எதை, எதையோ எழுதுகின்றீர்கள்.

மலையகத் தமிழ் மக்கள் அன்று போட்ட சாபம்தான் இன்று முருகனே கல்லாகிவிட்டான்.

தங்களுடைய கல்வித்தரம் என்னவென்று எமக்குத் தெரியாது, ஆனால், என்னுடைய கதைகள் கேட்டுப் புளித்தால் தயைவு செய்து அவைகளைப் படிக்காதீர்கள்.

“” சிந்தனையற்ற செயல்கள் முட்டாள்தனம்

செயலற்ற சிந்தனைகள் சோம்பேறித்தனம்””

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

Edited by Sandilyan

  • கருத்துக்கள உறவுகள்

:)

அன்பார்ந்தவர்களே

ஒரு சில விடயங்களை கூறலாமென்று எண்ணுகின்றேன்.

1. முதலாவதாக;- ராஜினி திரணகமவின் கூற்று,

“Our colleague Dr. Rajani Thiranagama felt this very keenly and wrote these prophetic words in the Broken Palmyra exactly 21 years ago and paid for her convictions with her life:

“The Tigers’ history, their theoretical vacuum, lack of political creativity, intolerance and fanatical dedication will be the ultimate cause of their own break up. The legendary Tigers will go to their demise with their legends smeared with the blood and tears of victims of their own misdoings. A new Tiger will not emerge from their ashes. 0nly by breaking with this whole history and its dominant ideology, can a new liberating outlook be born.”

நாம் எல்லோரும் ஒன்றை ஒருதலைப்பாட்டாகப் பார்க்காமல் பக்கவாட்டாகப் பார்க்கவேண்டும் plus lateral thinking. ஆராயவேண்டும். அப்படிச்செய்யாவிடின் தவறுகள் நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. ராஜினி திரணகம 21 வருடத்திற்கு முன்பு கூறியது உண்மை.

2. ஜீவன் ஹ¥லைப் பற்றிய உண்மைகளில் ஒன்று

ஹ¥ல் ஆபிரிக்கா நாட்டொன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1977ம் ஆண்டு இனக் கலவரத்திற்குப் பின்னர் மக்கள், இளய பட்டதாரிகள் இலங்கையில் கஷ்டப்பட்டார்கள். ஜீவன் ஹ¥ல், தன்னுடைய தனிப்பட்ட சொந்த முயற்ச்சியால் 500 க்கும் மேற்பட்ட தமிழ் பட்டதாரிகளுக்கு அந்த நாட்டில் ஆசிரியர்களாக வேலை வாய்ப்புக்கள் கிடைத்தது. இந்த 500ம் மேற்பட்ட பட்டதாரிகள் இன்று லண்டனிலும், கனடாவிலும், அமெரிக்காவிலும் சகல வசதிகளோடும் வாழுகின்றார்கள். இங்கே கூறியது ஹ¥ல் செய்த பணிகளில் ஒன்றுதான்.

3. தமிழ் மக்கள் பலவீனம் சில என்று சொன்னால்; நாம் ஒன்றை ஆராய்வதில்லை. நாலு பேர் சொன்னவுடன் அது உண்மை என்று கொடுக்கைக் கட்டி விடுவோம். தலைவர் இறந்துவிட்டார், இல்லை உயிரோடு இருக்கின்றார், என்பதிலேயே எத்தனை வாதாட்டம் போராட்டம். இன்று தமிழ் மக்களின் அவல நிலைக்குக் காரணம் என்ன? புலம் பெயர்ந்த நாம் கோழிக்கறியும் சாதமும் உண்டு எதையும் கூறலாம். யாரைய்யா இறப்பது, உணவு இன்றித் தத்தளிப்பது?

4. தமிழீழ விடுதலை என்று கூறி பணம் சேர்த்து ஆயுதங்கள் வீணாகின. ஆனால் ஒன்று நிஜம். இந்தப்பணத்தால் ஒரு சில தனிப்பட்டவர்கள் கோடீஸ்வரராகிவிட்டார்கள். எப்படி; இந்தப்பணங்கள் தனிப்பட்டவர்கள் பெயரில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக கருத்துக்கள் வெளிவரத் தொடங்கிவிட்டது. இவர்கள் இந்தப்பணத்தை தமிழ் மக்களின் முதலீட்டுப் பணமென்று முழு விபரமும் மக்களுக்கு அறிவிப்பார்களா?

http://asiantribune.com/oldsite2/?q=node/18391

5. கட்டப்பொம்மன் ஒரு விவேகமுள்ள, மக்களுக்காக வாழ்ந்த மன்னனா? இல்லை. இறுதியில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டு இறந்தான்??6. 10க்கும் மேற்பட்ட ஆயுதக்குழுக்கள் புலிகளுக்கு எதிராகச் செயல்பட்டார்கள். காராணம் யாதோ?

7. கோடீஸ்வரன் சிங்கள மொழி காரணமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இலங்கையில் தோற்று, இறுதியில் 1969ம் ஆண்டு privy council லில் வாதாடி வெற்றி பெற்றார். சோல்பரி அரசியல் அமைப்பின் S29(2) பிரகாரம் வெற்றி பெற்றார். 1948ம் ஆண்டு 10 லட்சம் மலையக மக்களின் குடி உரிமை பறிக்கப்பட்டபோது எமது சட்டத்தரணிகள் எங்கே போனார்கள். அவர்களுக்குச் சட்டம் தெரியவில்லையா? சோல்பரி அரசியல் அமைப்பின் S29 பகுதி தெரியவில்லையா?

8. தமிழன் விட்ட பிழைகள் சுழலும் சக்கரம் போல தோன்றி மறைகின்றது.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில துளி விசங்களை கொட்டுவதற்கு ஒரு குடம் பாலையும் வீணாக்கிறீர்களே. அறிஞர்களே அரசியல் வித்துவான்களே புலிகள் கொடுமை செய்து நாம் அழிந்துதான்விட்டோம்......... இப்போதுதான் அவர்கள் போய்விடார்களே. உங்களைபோல வித்தகர்களுக்கு சாணக்கியர்களுக்கு இங்கு என்ன வேலை போய் கொழும்பில் இருந்து கிழிக்க வேண்டியதுதானே சோல்பரி சட்டத்தையும் சோமஜா திட்டத்தையும் மக்ளுக்கு புரியவைத்து மாத்தையாக்காளிடம் மன்றாடலாமே....... சும்மா அரட்டையடிக்கும் இடத்தில் நின்று உங்கள் பொன்னான புத்திகளை வீணாக்குகிறீர்களே. நீங்கள் என்ன வெறும் முட்டாள்களா?மூடர்களா? மூதேசி என திட்டுவார்களே அவர்களா? இல்லை முந்தைய பிறவியிலும் இப்படி மூளை முத்தி பிறந்தவரா?

வணக்கம் மருதங்.. .. .. கேணி

தங்களுடைய பெயரிலும் தெரிகின்றது தாங்களும் ஒரு தவளை என்று. வார்த்தையைக் கவனித்துக் கொட்டவேண்டும். தங்களுடைய எழுத்திலிருந்து தெரிகின்றது தாங்கள் ஒரு கல்வித் தரம், பண்பு, கண்ணியம், கட்டுப்பாடு, குறைந்தவரென்று. தங்களுடன் உரையாடுவது time waste. இத்துடன் இந்த உரைகளை முடித்துக்கொள்வோம்.

நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சாண்டில்யன்,

உங்கள் எழுத்தில் அடிக்கு ஒருமுறை கல்வித்தரம் பற்றி அதிகம் அலட்டுகின்றீர்கள். உங்கள் குரு "எல்லாம் தெரிந்த எமநாதர்", கூல் போல நீங்களும் அறப்படித்துக் கூழ் காய்ச்சியவர் போலும். சரி சாதி , மற்றும் நாகரிகம் பற்றி பேசும் நீங்கள், அவரது நூலின் தலைப்பில் சாதி வருவதை கண்டுகொள்ளவில்லை போலும்.மேலும் அவர் எழுதும் ஆபாச நாவல் (sorry, his book is almost like that) எல்லாம் சுத்த நாகரிகம் போலும்.

சரி கட்டப்பொம்மனுக்கும், இன்றைய எமது நிலைக்கும் என்ன சம்பந்தம்.....கண்டியளோ.சற்று விளக்கமாய்ச்சொன்னால், படிப்பு அறிவு இல்லாத (உங்கள் கணிப்பில்) எம்போன்றோருக்கு பெரிய உதவி பாருங்கோ.

நிறைகுடம் தழும்பாது.

Edited by Viduthalai Virumby

  • கருத்துக்கள உறவுகள்

:)

5. கட்டப்பொம்மன் ஒரு விவேகமுள்ள, மக்களுக்காக வாழ்ந்த மன்னனா? இல்லை. இறுதியில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டு இறந்தான்??

அப்ப உங்கட ஹீரோ யார்? எட்டப்பனா? :)

  • கருத்துக்கள உறவுகள்

4. தமிழீழ விடுதலை என்று கூறி பணம் சேர்த்து ஆயுதங்கள் வீணாகின. ஆனால் ஒன்று நிஜம். இந்தப்பணத்தால் ஒரு சில தனிப்பட்டவர்கள் கோடீஸ்வரராகிவிட்டார்கள். எப்படி; இந்தப்பணங்கள் தனிப்பட்டவர்கள் பெயரில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக கருத்துக்கள் வெளிவரத் தொடங்கிவிட்டது. இவர்கள் இந்தப்பணத்தை தமிழ் மக்களின் முதலீட்டுப் பணமென்று முழு விபரமும் மக்களுக்கு அறிவிப்பார்களா?

http://asiantribune.com/oldsite2/?q=node/18391

கருணாவை இயக்கும் எட்டப்பன்! பாகம்-3

ராஜசிங்கத்தாலும், அவருடைய சீடர்களாலும் பாதிக்கப்பட்ட பல பெண்கள் இன்னும் மௌனமாக இருந்து வருகிறார்கள். இவர்களால் போதைப் பொருட்களுடன் பிடிபட்டு, பல வருடங்களாக ரஸ்யா மற்றும் ஐரோப்பிய சிறையில் வாடும் தமிழ் பெண்கள் பற்றிய செய்திகள் பலர் அறியாத அதிர்ச்சிகரமான உண்மைகளாக இருக்கின்றன.

இதை விட கொடுமை என்னவெனில், இவர்களால் பாதிப்பிற்கு உள்ளான சில பெண்களே, ஐரோப்பிய நாடுகளிற்கு வந்து சங்கங்கள் அமைத்து பெண்ணியவாதம் என்று பிதற்றித் திரிவதுதான். இந்தத் துரோகிகளால் சிறையில் வாடும் பெண்களுக்காகவும், பாலியல்ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்ட பெண்களுக்காகவும் இந்தப் பெண்ணியவாதிகள் இதுவரை குரல் கொடுத்ததாக தெரியவில்லை. இந்த துரோகிகளில் பெரும்பாலானோரும் பாதிக்கப்பட்ட பெண்களும் ஐரோப்பாவில்தான் இருக்கின்றார்கள். சங்கம் அமைத்து பெண்ணியம் பேசுபவர்கள் இந்தத் துரோகிகளை கூண்டில் ஏற்ற முன்வருவார்களா என்று நான் இவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்.

இவ்வாறு பல சமூக விரோத செயல்களைப் புரிந்த ராஜசிங்கம் பணத்தில் புரளத் தொடங்கினார். அத்தோடு பல நாடுகளின் உளவுப்பிரிவினருடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். நீலன் திருச்செல்வத்திற்கு ஊடாக இவரது தொடர்பு சிஐஏ வரை வளர்ந்திருந்தது. சிஐஏயும் இவரை முழுமையாக ஏற்றுக் கொண்டது. சிஐஏ இவரை சில ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்பி தமது உளவு வேலைக்கு பயன்படுத்தவும் செய்தது. இதில் இருந்தே ராஜசிங்கத்தின் உளவுத்திறமை அலட்சியப்படுத்தக் கூடிய ஒன்றல்ல என்பதை புரிந்து கொள்ள முடியும்.

அதே நேரம் பாங்கொக்கில் தொடர்ந்து இருப்பதற்காக அங்குள்ள இராணுவ உளவுப் பிரிவினருடனும் நெருக்கமாக இருந்து கொண்டார். அத்துடன் இந்திய உளவுத்துறையான றோவுடனும் இணைந்து வேலை செய்தார். ஆரம்பத்தில் இவரது இந்தியத் தொடர்பு பலர் அறியாத ஒன்றாக இருந்தது. நரசிம்மராவ் காலத்தில் ஏற்பட்ட ஊழல்கள், சந்திரசுவாமியின் கைது ஆகியவற்றின் மூலம், இவரது இந்தியத் தொடர்பு ஓரளவு வெளிச்சத்திற்கு வந்தது. சந்திரசுவாமியின் வெளிநாட்டுப் பின்னணிகள் குறித்து விசாரிப்பதற்காக ராஜசிங்கத்தை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர சிபிஐ முயற்சி செய்தது. ஆனால் றோவினது அழுத்தம் காரணமாக இந்த முயற்சி கைவிடப்பட்டது. சந்திரசுவாமியும் விடுதலையானார்.

கன்னடத்து நடிகர் ரஜனிகாந்த் இமயமலைக்கு சென்று தியானத்தில் ஈடுபடுவதாகச் சொல்லிவிட்டு, பாங்கொங்கிற்கு சென்று இளைப்பாறிக் கொள்வார். அப்பொழுது ரஜனிகாந்தின் "தேவைகளை" ராஜசிங்கமே செய்து கொடுப்பார். சந்திரசுவாமி, ரஜனிகாந்த் போன்றவர்கள் தமது அரசியல் குறித்த ஆலோசனைகளையும், தமது மற்றைய விடயங்களையும் ராஜசிங்கத்தின் அலுவலகத்திலேயே வைத்தே நடத்திக்கொள்வார்கள். அந்த அலுவலகத்தின் முகவரி House No 8/6, Muban Amoropan Nakorn, Sukapibal Road 2, Suan Siam, Bangok -10230, Thailand. இந்த முகவரியை யாரும் அணுக முடியாதபடி தாய்லந்து உளவுத்துறையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராஜசிங்கம் என்கின்ற இந்த சர்வதேச உளவாளியின் பலத்தை அறிந்த டக்ளஸ் தேவானந்தா, இவரோடு ஒட்டிக்கொண்டார். போராளியாக இருந்த டக்ளஸிற்கு அனைத்து விதமான கெட்ட பழக்கங்களையும் கற்று கொடுத்தது இந்த ராஜசிங்கம்தான். அத்துடன் அரசின் பின்னணியோடு "AsianTribune" என்ற இணையத் தளத்தை ராஜசிங்கம் நடத்திக் கொண்டு இருக்கிறார். இதற்காக ராஜசிங்கத்திற்கு 12 மில்லியன் டொலர் வழங்கப்பட்டதாகவும், இந்த பணத்தில் டக்ளஸ் தேவாநந்தாவும் பங்கு போட்டதாகவும் செய்தி கசிந்துள்ளது.

கருணா வரலாற்றுத் துரோகம் இழைத்த பொழுது, இதன் பின்னணியில் இருந்து செயற்பட்டவர் இந்த ராஜசிங்கம்தான். அப்பொழுது ராஜசிங்கம் எழுதிக் கொடுத்ததை வாசித்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்தவர் டக்ளஸ் தேவானந்தா. கருணாவையும் ராஜசிங்கத்தையும் ஒன்று சேர்த்த பெருமை டக்ளஸையே சாரும். இந்த மூவர் கூட்டணியை இயக்குவது இந்திய உளவுத்துறையான றோ என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கருணாவின் பின்னணியில் ராஜசிங்கம் இருக்கிறார் என்பதை காட்டுவதற்கு, ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.

கருணா இந்தியா செல்வதற்கு கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தெரியாமலே விசா அனுமதி எடுத்து கோவா சென்று ஒளித்திருந்தார். இதற்கு உதவியவர்கள் ராஜசிங்கமும் டக்ளஸ் தேவாநந்தாவுமே ஆகும். விசா எடுப்பதற்கு உதவியவர் சுவிஸ் எயர் விக்கி எனப்படும் விக்னேஸ்வரன். இவர் ராஜசிங்கத்தின் முன்னாள் முகவர் ஆவார். இவரும் பருத்தித்துறையை சேர்ந்தவர்தான். இவர் பிரபலமான பிரயாண ஒழுங்கு நிறுவனம் ஒன்றை கொழும்பு கலடறி ஹோட்டலில் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்பு ஒன்றில் விக்னேஸ்வரன் சிறு காயங்களுக்கு உள்ளாகி உயிர் தப்பியவர். இந்தக் குணடு வெடிப்பின் பி;ன்னர் இவர் தனது மனைவி பிள்ளைகளை கனடாவிற்கு அனுப்பிவிட்டார். விக்கி மட்டும் கொழும்பில் இருந்து கொண்டு ராஜசிங்கத்தின் கையாளாக வேலை செய்கிறார்.

கருணா கோவாவில் ஒளித்துக்கொண்டிருந்த பொழுது, கருணாவின் மனைவிக்காக விசா எடுக்க முயன்ற போதுதான், இந்திய தூதரகத்திற்கு தங்களை மீறி நடந்த இந்த சம்பவம் தெரிய வந்தது. கருணாவின் மனைவிக்கு விசா அனுமதி தர இந்திய தூதரகம் மறுத்த போது, அவர் கிலியில் அனைத்து விடயத்தையும் போட்டு உடைத்துவிட்டார். ஆனால் பல மாதங்கள் கழிந்து அண்மையில்தான் இந்த செய்தி வெளியே கசிந்தது. ஆனால் கருணா புலிகளை விட்டு பிரிந்த ஆரம்ப காலத்திலேயே இந்தச் சம்பவம் நடந்தது.

கருணா கோவாவிற்கு சென்றதும் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்தது ராஜசிங்கத்தின் பழைய கூட்டாளி ஒருவரே. அவர் வேறு யாரும் அல்ல. ராஜசிங்கத்தின் நெருங்கிய நண்பரும், சென்னை திருச்சி முகவராக இருந்தவரும், பல காரணங்களால் சுவிஸ் பொலிஸாரால் தெடப்பட்டு தற்பொழுது சிறையில் வாடும் ரிபிசி ராமராஜனே அவர். இவரது வானொலி கருணாவின் பேட்டிகளை பல முறை நேரடியாக ஒலிபரப்பியதையும் இந்த நேரத்தில் நினைவில் கொள்ளுங்கள். இந்த வானொலி பல வருடங்களாக பணத் தட்டுப்பாடின்றி இயங்குவதற்கு ராஜசிங்கத்தின் உளவுத் தொடர்புகளே மிகவும் உதவின.

ஆரம்பத்தில் கருணா மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை. காரணம், கருணா பெண்கள் விடயத்தில் மிகவும் பலவீனமானவர் என்பது உலகு அறிந்த ஒரு விடயம். விடுதலைப்புலிகளால் கருணா மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் பெண்கள் சம்பந்தமான குற்றச்சாட்டும் அடங்கியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் அன்ரன் பாலசிங்கமும் இந்த விடயத்தை தனது உரையொன்றில் சுவையாக புட்டு புட்டு வைத்திருந்தார்.

கருணாவின் இத்தகைய பலவீனத்தை பயன்படுத்திய ராஜசிங்கம், இதன் மூலம் கருணாவை வளைத்துப் போட்டார். பின்பு ராஜசிங்கம் கருணாவை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார். அங்கு கருணாவிற்கு அனைத்துவிதமான உதவிகளையும் ராஜசிங்கத்தின் மகள் செய்து கொடுத்தார். இதனால் கருணா தனது மனைவியின் சிந்தனை இன்றி இருக்க, கருணாவின் மனைவியோ டக்ளஸ் மற்றும் முக்கிய முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக ராஜசிங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து சிங்கப்பூரை வந்தடைந்தார். கருணாவின் தலைமறைவு வாழ்க்கை ராஜசிங்கத்தின் உதவியுடன் தொடர்கிறது. அத்துடன் ராஜசிங்கமும் சுவீடன் நாட்டில் குடும்பத்தினருடன் தலைமறைவு வாழ்க்கையை நடத்திக் கொண்டு, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது பல நாடுகளுக்குச் சென்று, றோவுக்கு ஆள் பிடிப்பதிலும், தமிழ் துரோகிகள் டக்ளஸ் மற்றும் கருணாவிற்கு உதவுவதிலும், இலங்கை, இந்தியா, அமெரிக்கா அகிய நாடுகளுக்கு உளவு புரிவதிலும் முனைப்புடன் செயலாற்றிக் கொண்டு இருக்கிறார்.

ஆனால் இந்த எட்டப்பர்கள் எப்படித்தான் தலைமறைவு வாழ்க்கை நடத்தினாலும், எத்தகயை பாதுகாப்போடு இருந்தாலும் காலம் இவர்களின் துரோகத்திற்கான தண்டனையை வழங்கியே தீரும். எம்மவர்கள் காற்று புக முடியாத இடத்திலும் புகுவார்கள் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்தக் கட்டுரைய முடிக்கின்ற இந்த நேரத்தில் வாசகர்களிடம் சில வார்த்தைகள். இந்த துரோகக் கும்பல் பற்றி முற்று முழுதாக எழுதுவதாயின், அது மிகவும் ஆபாசமாகத்தான் இருக்கும். நாகரீகம் கருதி பெரும்பாலான விடயங்கள் இதில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் சிலவற்றை தவிர்க்க முடியமால் குறிப்பிட்டிருக்கிறேன். வாசகர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இங்கு நான் குறிப்பிட்ட அனைத்து விடயங்களிற்கு தகுந்த ஆதரங்கள் வைத்திருக்கிறேன் என்பதையும் என்னால் இவைகளை நிரூபிக்க முடியும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

முற்றும்.

- வன்னியிலிருந்து புலோலியூரான்

http://www.eddappar.com/content/view/24/3/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.