Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொல்லாமல் போகார் எம் தலைவர்: 02

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த வாரம் எழுதிய இந்தக் கட்டுரைக்கு பலரிடம் இருந்தும் ஆதரவுகளும், அச்சுறுத்தல்களும் வந்ததாக ஈழமுரசு நிர்வாகத்தினர் சொன்னார்கள். தலைவர் இருக்கின்றாரா..? இல்லையா..? என்ற விவாதத்தை இந்தக் கட்டுரை எழுப்பவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தலைவர் இல்லை என்று சொல்கின்றவர்களிடமும் இருக்கின்றார் என்று நம்பிக்கை கொள்கின்றவர்களிடமும் அதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை.ஆனால், எங்கள் தலைவருக்கு என்றைக்குமே சாவு இல்லை என்பதே என்னுடைய வாதம்.

மக்களை வழி நடத்துகின்ற ஒரு தலைவருக்கு, மக்களால் நேசிக்கப்படுகின்ற ஒரு தலைவருக்கு மரணம் என்பது எப்போதும் வருவதில்லை. காலம் காலமாக - வரலாறு வரலாறாக அவர்கள் அந்த நேசிக்கப்படுகின்ற மக்களிடம் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். அவரை அந்த மக்களிடம் இருந்து பிரித்து எவராலும் இலகுவில் சாகடித்துவிட முடியாது.

சேகுவரா இறந்து விட்டதாக சொன்னார்கள். ஆனால், இன்று உலகம் முழுவதும் உள்ள அவரை நேசிக்கின்ற அவர் வழி நடக்கின்ற மக்கள் மனங்களில் அவர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார். அதனால்தான் 30 வருடங்கள் கழித்து அவரது எலும்புகளை கியூபாவிற்கு எடுத்துவந்தபோது, கியூபாவின் அப்போதைய அதிபர் பிடல் கஸ்ரோ அழுத்தமாகச் சொன்னார் ‘சேகுவரா மீண்டும் திரும்பி வந்திருக்கின்றார்" என்று. அந்த மக்களும் அதனைத்தான் ஏற்றுக்கொண்டார்கள். அவர் உயிருடன் வந்திருப்பதாகவே அவர்கள் கருதினார்கள், இன்றும் அப்படித்தான் கருதுகின்றார்கள்.

எனவே, இன்று தலைவரை சாகடித்துவிடத் துடிப்பவர்களின் சிந்தனைக்குப் பின்னால் இருக்கின்ற அர்த்தம் புரியவில்லை. அவரை நேசிக்கின்ற மக்கள் அவரது சாவினை நம்பவில்லை அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னால் அதனைப் புரிந்துகொண்டு, அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லாமல், தங்கள் வழியில் தங்களைப்போல இறந்ததை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அடம்பிடிப்பதன் அர்த்தம் அல்லது அதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்ற கேள்வியே எழுகின்றது.

சரி, நாங்கள் எங்கள் விடயத்திற்கு வருவோம்.

தலைவர் எப்போதும் தன்னுடைய உயிர்ப் பாதுகாப்பை பொருட்படுத்துவதில்லை. மக்களுடைய விடுதலைக்காக போராட புறப்பட்டபின் உயிரைப் பாதுகாக்க ஒதுங்குவதென்பதை தலைவரின் மனது ஏற்றுக்கொண்டதில்லை என்பதை களமுனையில் கண்ட அனுபவங்களின் ஊடாக நான் அறிந்துகொண்டிருக்கின்றேன்.

அது, இந்திய இராணுவத்தினரிடம் ஆயுதங்களை ஒப்படைத்து ஒரு சில நாட்கள் கடந்திருந்த நிலை. தியாகி திலீபனின் உண்ணாவிரதப் போராட்டமும் அப்போது ஆரம்பித்திருக்கவில்லை. சாவகச்சேரி எழுதுமட்டுவாள் பகுதியில் தென்னந்தோப்பில் இருந்த போராளிகளின் தளம் ஒன்றுக்கு வந்திருந்த தலைவர், ஆயுத ஒப்படைப்பிற்கு பின்னான விளக்க உரையொன்றை போராளிகளின் முன் நிகழ்த்தினார். அப்போது அவர், அரசியல்பிரிவு தங்களுடைய வேலையைப் பார்க்கும். ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் எங்கள் பயிற்சிகளை நாங்கள் தொடர்ந்து வழமைபோல் செய்வோம் என்று கூறியிருந்தார்.

அதன் பின்னர் தியாகி திலீபனினதும், பன்னிரு போராளிகளினதும் வீரச்சாவினைத் தொடர்ந்து இந்தியப் படையினருடான போர் 10.10.1987 அன்று தொடங்கியது. தலைவர் யாழ்ப்பாணத்தில்தான் இருக்கின்றார் என்பது இந்தியப் படையினருக்கு நன்றாகவே தெரிந்திருந்தமையால்தான் இந்தியப் படையினரின் போர் யாழ்குடாவிலேயே முதலில் தொடங்கியது. தலைவர் இருக்கும் பகுதியை அடையாளம் கண்டுகொண்டே இந்தியப்படையினர் யாழ். பல்கலைக்கழகத்தில் படையினரை விமானமூலம் தரையிறக்கினார்கள்.

அவர்களின் புலனாய்வுத்துறை எடுத்திருந்த தகவல் சரியாகவே இருந்தது. படையினர் தரையிறக்கப்பட்ட பகுதிக்கு முன்னாலேயே தலைவர் தங்கியிருந்த வீடு இருந்தது. வழமையாக அந்த வீட்டிற்குள் நுழையும் தலைவர் அங்கிருந்து பின் பக்க வழியாகச் சென்று சற்று தொலைவில் உள்ள வீட்டிலேயே தங்குவார்.

அதேபோல் திரும்ப வெளியே செல்லும்போது அந்த வீட்டிற்கு வந்தே அங்கிருந்து வெளியில் செல்வார். எனவே புலனாய்வுத்துறையினரின் தகவல்கள் தலைவர் அந்த வீட்டிலேயே இருப்பதாக உறுதிப்பட வைத்தது. அதனால்தான் அதிரடியாக அந்த வீட்டிற்கு முன்னால் இருந்த பல்கலைக்கழக மைதானத்தில் படையினரைத் தரையிறக்கினார்கள்.

ஆனால், அங்கு நின்றிருந்த போராளிகள் படையினர் தரையிறங்குவதற்கு முன்னமே படையினரை சுட்டு வீழ்த்தத் தொடங்கிவிட்டனர். இதேவேளை, தாக்குதல் தொடங்கியதை அறிந்து அந்தச் சண்டைக் களமுனைக்கு தலைவரும் வந்தவிட்டார். அத்துடன், அதன் பின்னர் இடம்பெற்ற இந்தியப் படையினருடனான மோதல்களில் தலைவர் நேரிலேயே பங்கேற்றிருந்தார்.

தலைவரை அங்கிருந்து வெளியேற்றுவதே போராளிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் பெரும்பாடாக இருந்தது. ஒருகட்டத்தில் இந்தியப் படையினரின் எறிகணைகள் தொடர்ச்சியாக களமுனையில் வந்து விழத்தொடங்கிவிட்டன. அதற்கு மத்தியிலும் கோள்சரையும் கட்டிக்கொண்டு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு தலைவர் முன்னணிக் களமுனைக்கு செல்ல முயல, தலைவரைப் போராளிகள் இழுத்துப்பிடிப்பதும், ஒரு கட்டத்தில் தலைவர் அவர்களை உதறித்தள்ளிவிட்டு முன்னோக்கி செல்ல அப்போது எறிகணைகள் வேறு அருகில் வந்து விழுந்து வெடித்துக்கொண்டிருக்க அங்கு நின்றிருந்த இம்ரான் (லெப்.கேணல் இம்ரான்) ஓடிச்சென்று தலைவரின் காலை இழுத்து கீழே விழவைக்க போராளிகள் பலர் தலைவருக்கு மேலே கவசமாகக் கிடந்துவிட்டார்கள்.

அதன் பின்னர் மேஜர் பசீலனின் வற்புறுத்தலால் அங்கிருந்து முல்லைத்தீவுக்கு தலைவரை அழைத்துச் சென்றபோது வழிகளில் இந்தியப் படையினருடன் மோதல்கள் வெடித்தபோதும் தலைவரும் தாக்குதலில் ஈடுபட்டுவிடுவார். அவரை அதற்குள் இருந்து மீட்டெடுத்துச் செல்வதே போராளிகளுக்கு பெரும் பாடாக இருந்தது. அவ்வளவிற்கு தனது உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் களமுனையில் தலைவர் நடந்துகொள்வார்.

சாதாரண தளபதிகளே களமுனையில் நின்றுவிட்டால் அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு போராளிகள் எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கும்போது, தலைவரே நிற்கின்றார் என்றால் சற்று யோசித்தப் பாருங்கள்.

களமுனையில் தளபதி முன்னே நடந்து சென்றால் போராளிகள் ஓடியோடி அவருக்கு முன்னே நடப்பார்கள். அவரைக் காப்பாற்றினால்தான் அடுத்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தமுடியும் என்ற நம்பிக்கைதான் அதற்குக்காரணம்.

அன்று ஒரு கரந்தடிப்படையாக இருந்துகொண்டு எந்த வளங்களுமே இல்லாமல் தலைவரைப் பாதுகாப்பதற்கு முயன்றவர்கள், இன்று முப்படைகளையும் கொண்டிருந்த நிலையில், முள்ளிவாய்க்காலில் ஒரு சதுரக் கிலோ மீற்றர் பரப்பிற்குள் களமுனை சுருங்கிய நிலையில், தலைவரே விரும்பினாலும் போராளிகளும் தளபதிகளும் அவரை அங்கு நிற்பதற்கு விட்டு வைத்திருப்பார்கள் என்று நம்புகின்றீர்களா..?

- விதானையார்

ஒரு முன்னாள் போராளியின் நினைவுப் பதிவில் இருந்து

நன்றி : ஈழமுரசு (10.07.2009)

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

எங்களை அனாதையாக விட்டிட்டு போய்ட்டானே என்று ஒரு பெண்மணி சொன்னா,இன்னொரு பெண்மணி சொன்னா எங்கள எமாற்றிப்போட்டான் இப்படி மக்கள் புலம்பிக்கொண்டுதிறியினம்

எங்களை அனாதையாக விட்டிட்டு போய்ட்டானே என்று ஒரு பெண்மணி சொன்னா,

எனக்கும் அதே கவலைதான். என்ன தான் குத்தி முறிந்தாலும் இனி யாரை நம்புவது?

புலிகளின் தலைமை இன்னும் இருக்குமாக இருப்பினும் அதனைத் தற்போதைக்கு வெளிக்காட்டிக் கொள்ளுதல் அரசியல் மற்றும் இராணுவ ரீதியாகச் சூழ்நிலைச் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் அப்படியாக தமது இருப்பினைக் காட்டிக் கொள்ளாதிருக்கும் போது தமிழ் மக்களிடையில் பெரும் குழப்பமானதொரு நிலை தோன்றுவதனையும் நிறுத்த இயலாது என்பது திண்ணம். சில செய்திகள் கூறுவது போன்று புலித்தலைமைகள் அழிக்கப்பட்டிருப்பின் இனிமேல் தற்போதைக்கு தமிழர் போராட்டத்தினை இலங்கைத் தீவில் முன்னெடுப்பதும் அவ்வளவு இலகுவானதொன்றுமல்ல.

இப்படியானதொரு நிலையின புலிகளுக்கும், ஈழத்தமிழருக்கும் சிங்களத் தலைமைகள் வெளிநாட்டுதவிகள் கொண்டு மிகச் சாதுர்யமாக உருவாக்கி அதனை மேலும் பல விதங்களில் முனைப்புடன் முன்னெடுத்தும் வருகின்றன என்பதுவும் வெள்ளிடைமலை. ஆகவே புலித் தலைமைகளத் தேடுவதையோ அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இல்லையா என்னும் வாதப் பிரதிவாதங்களிலும், வாயத் தர்க்கங்களிலும், ஆய்வுகளிலும் நேரம் செலவிடுவதனைத் தவிர்த்து விட்டு முன்னொரு காலத்தில் பலர் திகைத்துச் செயலற்றுப் போயிருந்த வேளையிலும் தலைவர் தாம் தனி ஒரு நபராக முன்னேறி எப்படி மற்றும் பலரை ஒன்று சேர்த்துப் போராட முற்பட்டாரோ அதே போன்று தமக்குள்ளான சச்சரவுகளைத் தவிர்த்து விட்டு ஈழத் தமிழர்கள் மீண்டும் ஒன்றிணைவார்களாயின், மீண்டும் முன்னெப்போதுமில்லாதளவுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆழமான கருத்து

ஆனால் நாட்கள் நகர..........

நாமெல்லோரும் ஒரு நிலைக்கு வருவோம்

அல்லது ஸ்ரீலங்காவால் வரவைக்கப்படுவோம்

இந்த தலையங்கம் சரியானது

எனக்கும் அந்த ஏக்கம் உள்ளது

எனக்கு சொல்லாமல் போகார் எம் தலைவர்

அவரிடமிருந்து எந்த அறிவித்தலுமில்லாமல் ......????

சொல்லாமல் போகார் எம் தலைவர்

யாருடய உணார்ச்சிகளையும் நான் நாடிபிடிச்சுப் பார்க்கவோ அல்லது கேள்விக்கு உள்ளாக்கவோ விரும்பவில்லை.

ஆனாலும் நாங்கள் இன்னும் சுத்தி சுத்தி சுப்பற்ற கொள்ளைக்குள்ளதான் இருக்கிறம்.

ஊரில விடுதலைக்காக இருத சனமும் கொஞ்சம் கொஞ்சமாக செத்து முடிஞ்சாப்பிறக்கு

விடுதலையை, இருக்கு இரண்டும் கெட்டானுகளுடன் முன்னெடுங்கள்.

எண்டைக்கு திருந்தப்பொறிங்களடா நீங்கள்?

அன்று ஒரு கரந்தடிப்படையாக இருந்துகொண்டு எந்த வளங்களுமே இல்லாமல் தலைவரைப் பாதுகாப்பதற்கு முயன்றவர்கள், இன்று முப்படைகளையும் கொண்டிருந்த நிலையில், முள்ளிவாய்க்காலில் ஒரு சதுரக் கிலோ மீற்றர் பரப்பிற்குள் களமுனை சுருங்கிய நிலையில், தலைவரே விரும்பினாலும் போராளிகளும் தளபதிகளும் அவரை அங்கு நிற்பதற்கு விட்டு வைத்திருப்பார்கள் என்று நம்புகின்றீர்களா..?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அன்று ஒரு கரந்தடிப்படையாக இருந்துகொண்டு எந்த வளங்களுமே இல்லாமல் தலைவரைப் பாதுகாப்பதற்கு முயன்றவர்கள், இன்று முப்படைகளையும் கொண்டிருந்த நிலையில், முள்ளிவாய்க்காலில் ஒரு சதுரக் கிலோ மீற்றர் பரப்பிற்குள் களமுனை சுருங்கிய நிலையில், தலைவரே விரும்பினாலும் போராளிகளும் தளபதிகளும் அவரை அங்கு நிற்பதற்கு விட்டு வைத்திருப்பார்கள் என்று நம்புகின்றீர்களா..?
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்று ஒரு கரந்தடிப்படையாக இருந்துகொண்டு எந்த வளங்களுமே இல்லாமல் தலைவரைப் பாதுகாப்பதற்கு முயன்றவர்கள், இன்று முப்படைகளையும் கொண்டிருந்த நிலையில், முள்ளிவாய்க்காலில் ஒரு சதுரக் கிலோ மீற்றர் பரப்பிற்குள் களமுனை சுருங்கிய நிலையில், தலைவரே விரும்பினாலும் போராளிகளும் தளபதிகளும் அவரை அங்கு நிற்பதற்கு விட்டு வைத்திருப்பார்கள் என்று நம்புகின்றீர்களா..?

நான் நப்ப வில்ல உறவே..

எங்கள் அண்ணன் ஒரு நாள் வருவார்.. அந்த நாள் தான் எங்களின் பொன் நாள்

எனக்கு உந்த புழுதி வழுதி :icon_idea: மேல நம்பிக்கை இல்லை. எனக்கு அவங் யார் என்று கூட தெரியாது...எனக்கு என் மேல தான் நம்பிக்கை

Edited by ரவுடி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தொழில்நுட்ப ஆய்வு.

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தொழில்நுட்ப ஆய்வு.

">

அன்று ஒரு கரந்தடிப்படையாக இருந்துகொண்டு எந்த வளங்களுமே இல்லாமல் தலைவரைப் பாதுகாப்பதற்கு முயன்றவர்கள்இ இன்று முப்படைகளையும் கொண்டிருந்த நிலையில்இ முள்ளிவாய்க்காலில் ஒரு சதுரக் கிலோ மீற்றர் பரப்பிற்குள் களமுனை சுருங்கிய நிலையில்இ தலைவரே விரும்பினாலும் போராளிகளும் தளபதிகளும் அவரை அங்கு நிற்பதற்கு விட்டு வைத்திருப்பார்கள் என்று நம்புகின்றீர்களா..?

கிளிநொச்சி விழுந்த கையோடையே தலைவரை அனுப்பிவிட்டதாக தகவல்

அப்போ கடைசியாக நடந்த சண்டைப்பகுதியில் தலைவர் இருந்ததாக

சொல்லப்பட்டதேயென யாராவது கேட்கலாம் நினைக்கலாம்

அப்படிக்கேட்பவர்கள் அல்லது நினைப்பவர்கள்

ஏன் அப்படி சொல்ல வைக்கப்பட்டிருக்கக்கூடாது என்றும்

சிந்தித்து கொள்ளுங்கள்

அப்படியானால் தற்கொலை தாக்குதல் நடாத்திய

வானூர்திகளை ஓட்டிய வானோடிகளுடன் தலைவர்

சேர்ந்து நின்றெடுத்த புகைப்படம் வெளியிட்டிருந்தார்களே?

என நீங்கள் கேட்கலாம்

அவை ஏன் ஒவ்வொரு வானோடிகளுடனும் முன்னரே தனித்தனியாக

எடுத்த புகைப்படமாக இருக்கக்கூடாது?

என்று நான் சொல்லலாம்

நீங்களும் நினைக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

காலம் பதில் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக களத்தில் நின்ற போராளி ஒருத்தர்

தற்போது வெளியே வந்து சொன்ன தகவல் என்றார்கள்

தம்மை வழி நடத்த ஆள் இல்லாமையால்தான் தாம் சரணடைந்ததாக.

  • கருத்துக்கள உறவுகள்

prabha.jpg

" உலகம் உன்னை இறந்தவன் என்கிறது..

உறவுகளோ இறைவனாய் நம்புகிறது...

உண்மை தாமதமாகவே வெளிப்பட்டாலும்,

சாதகமாய் இருந்தால் போதும் என்ற

நம்பிக்கையில் நாட்கள் செல்கிறது!!"

நிகழ்வு: ஒரு சுவர் ஓவியம்.

இடம்: தமிழர் தலைநகர் சென்னை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.