Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமிர்தலிங்கம் மறைந்து இரு தசாப்தங்கள்; போரின் முடிவுக்குப் பின்னர் ஒரு மீள்பார்வை---வி.வி.ஆர்

Featured Replies

ஈழத் தமிழர் அரசியலில் மக்கள் தலைவனாக தடம் பதித்தவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மறைந்து இன்று ஜூலை 13 ஆம் திகதியுடன் 20 வருடங்கள் நிறைவுறுகின்றன.

ஈழத்தமிழர் உரிமைக்காக போராடிய அதேவேளை, அப்போராட்டத்தின் நியாயங்களை சர்வதேசம்

ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் எடுத்துச் சொன்ன ஒரு மிதவாதியின் மறைவினால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடம் 20 வருடங்கள் கடந்த நிலையில் இன்று தமிழ்மக்களை அவரின் வழித்தடங்களை திரும்பிப் பார்க்க வைக்கின்றது.

"தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று இப்போது அதனைக் கொண்டு நடத்தும் அமிர்தலிங்கத்திடம் நான் காணும் சிறப்பியல்பு அவருடைய அஞ்சாமையாகும். மிகப்பலம் வாய்ந்த எமது எதிரியாகிய இலங்கை அரசை எதிர்த்து நாம் போராடுவதற்கு அஞ்சா நெஞ்சம் படைத்தவர்களே வேண்டும். தலைவன் ஒருவனுக்கு வேண்டிய அனைத்துக் குணங்களும் அமிர்தலிங்கத்திடம் உண்டு. ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு போராடுவதற்கு அவருக்கு போதிய காலம் இருக்கின்றது' இவ்வாறு கூறியுள்ளார் தந்தை செல்வநாயகம்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக அவர்களின் உரிமைக்காக, சிங்கள சிறி எதிர்ப்பு போராட்டம், கறுப்புக்கொடி போராட்டம் போன்றவற்றின் ஆரம்பகர்த்தாவான அமிர்தலிங்கம் பல தடவைகள் சிறை சென்றுள்ளார். சிங்கள இனவாதிகளாலும் காவல் துறையினராலும் தாக்கப்பட்டு குருதி சிந்திய சம்பவங்களும் உண்டு.

1956 ஆம் ஆண்டு, ஆனி மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அரச கருமமொழியாக சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்ட அன்றைய தினம் அதனை எதிர்த்து பாராளுமன்றத்திற்கு எதிரேயுள்ள "கோல்பேஸில்' அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் சத்தியாக்கிரகம் செய்தபோது காடையர்களின் தாக்குதல்களுக்கிலக்கானார்க

Edited by தராக்கி

போகிற போக்கைப் பார்த்தால் அல்பட் துரையப்பா, கதிர்காமர், புளட் மோகன் போன்றவர்களைப் பற்றிய ஆக்கங்களையும் இணைப்பீர்கள் போலக் கிடக்கிறது.

போகிற போக்கைப் பார்த்தால் அல்பட் துரையப்பா, கதிர்காமர், புளட் மோகன் போன்றவர்களைப் பற்றிய ஆக்கங்களையும் இணைப்பீர்கள் போலக் கிடக்கிறது.

:D:D இனி நாங்க புலிகளை விமர்சனம் செய்வோம்.மற்றவர்களுடன் கை கோர்த்து ஒற்றுமை ,கருத்துபகிர்வு,யனநாயகம் ,சோசலிசம் எல்லாம் கதைப்போம்,மனித இயல்பு. : :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் உரிமைக்காக போராடிய அதேவேளை, அப்போராட்டத்தின் நியாயங்களை சர்வதேசம்

ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் எடுத்துச் சொன்ன ஒரு மிதவாதியின் மறைவினால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடம் 20 வருடங்கள் கடந்த நிலையில் இன்று தமிழ்மக்களை அவரின் வழித்தடங்களை திரும்பிப் பார்க்க வைக்கின்றது.

அமிர்தலிங்கம்.. எந்தெந்த வகையில் தமிழ் மக்களின் உரிமை.. சுயநிர்ணய உரிமை.. தமிழீழம் போன்றவற்றிற்காகப் போராடி.. அதனை உலகம் ஏற்கச் சொன்னார் என்பதை எவராவது நிறுவட்டும் பார்க்கலாம்...

இன்றைய அரசியல் வெற்றிடத்தை தமிழீழ விடுதலைப்புலிகளின் பின்னடைவை.. அமிர்தலிங்கத்தின் பெயரால் அடைக்க இந்திய வல்லாதிக்கம்.. எடுக்கும் சில முயற்சிகளின் பின்னணிதான் இப்படியான கட்டுரைகள்.

இது மாவீரர்களின் மக்களின் 30 வருட தியாகத்துக்கு விடுக்கப்படும் சவால்.

நான் துரையப்பாவை விட மோசமான ஒரு அரசியல்வாதியாகவே அமிர்தலிங்கத்தைக் காண்கிறேன்.

அமிர்தலிங்கம் எமது போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தவைல்லை. இந்திய வல்லாதிக்க மயப்படுத்தினார் என்று சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.

வன்னியில் இருந்த மக்களை மீட்க அமெரிக்க கடற்படையை தயார் நிலையில் வைத்திருந்த போது அதை தனது வல்லாதிக்க நலனுக்காக தடுத்தது இந்தியா. அப்பாவி மக்களை தனது நலனுக்காகக் கொன்று குவிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் அல்லாமல்.. சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களை மூடி மறைத்தது.

3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட விட்டதாக கலைஞர் கருணாநிதி மூலம் அறிவித்து உலகத்தமிழினத்தையே வன்னி பேரவலம் தொடர்பில் கவனத்தை திசை திருப்ப முற்பட்ட நாடு இந்தியா.

இதே அமிர்தலிங்கம்.. தமிழ் மக்களின் நலனை விட இந்திய நலனைஅதிகம் முன்னிலைப்படுத்திய இந்திய இராணுவம் செய்த ஈழப்படுகொலைகளை இன்று கருணாநிதி செய்தது போல அன்று ஒரு ஈழத்தமிழனாக தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருந்து கொண்டு மறைக்க முற்பட்ட ஒரு கொடுமையான மனிதன்.

எனது உறவினர்கள் உட்பட பலர் கொக்குவிலில் இந்திய இராணுவத்தின் டங்கிகளின் தாக்குதல்கலில் சிக்கி இறந்தது கூட வலிக்கவில்லை. ஆனால் இந்த அமிர்தலிங்கம் இந்திய இராணுவம் ரப்பர் செல் அடித்துக் கொண்டு ஆயுதக் களைவை செய்வதாக விட்ட அறிக்கை.. வரலாற்றில் மன்னிக்கப்பட முடியாதது மட்டுமன்றி.. இப்படியான ஒரு இனத்துரோகி.. மக்களின் பிரதிநிதியாக அவர்களின் விடுதலைக்காக உழைத்தான் என்று காட்ட முனைவது வெட்கக் கேடான மக்களை முழு முட்டாள் ஆக்கும் நடவடிக்கை.

அமிர்தலிங்கம் போன்றோரை முன்னிலைப்படுத்தி ஒரு அரசியல் ஆரம்பிக்கப்பட்டால் அதை நிர்மூலமாக்க வேண்டிய கடமை.. தாயகத்தில் இத்தனை வருடம் தமிழீழக் கனவோடு போராடி வீழ்ந்த வீரர்களின் இலட்சியத்தை சுமந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் கடமை.

இளைஞர்கள் எனி அரசியலை முன்னெடுத்துச் செல்லும் நிலை தாயகத்தில் வர வேண்டும். விடுதலைப்புலிகளின் அரசியல் கொள்கை மற்றும் அவர்களின் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டமே உலக அரங்கில் தமிழ் மக்களுக்கு பிரச்சனை உள்ளதென்பதை கொண்டு வந்தது மட்டுமன்றி சர்வதேச மத்தியஸ்தத்தை இப்பிரச்சனைக்குள் கொண்டு வந்தது.

விடுதலைப்புலிகள் கடந்த சமாதான காலத்தில் சமர்ப்பித்த இடைக்கால நிர்வாக சபை திட்டமே சர்வதேச அளவில் சட்ட வல்லுனர்களின் உதவியோடு வடிவமைக்கப்பட்ட ஒரு இடைக்கால நிர்வாக சபைத்திட்டம்.

அமிர்தலிங்கத்தின் இந்திய மயப்படுத்தல் கொள்கையே எமது போராட்டத்தின் வீழ்ச்சிக்கு காரணமானது. இந்தியாவை நம்பி எமது அரசியலை செய்ய முற்பட்டதன் விளைவே.. தமிழீழ விடுதலைப் போராட்டம் பின்னடைவைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டது. இந்தியா எப்போதுமே தமிழ் மக்களின் அரசியல் உரிமையை தனது நாட்டு அதிகார வரம்புக்கு அப்பால் வழங்க முன்வந்த நாடு அல்ல. ஆனால் சர்வதேசத்தின் நிலைப்பாடு அப்படியன்று. அவர்கள் நியாயமான காரணங்களூடு பல நாடுகளை சுதந்திர தேசங்களாக உருவாக்கி இருக்கின்றனர். கிழக்குத் திமோர் பிரிவினையை அடக்க ஒரு காலத்தில் உதவிய அமெரிக்கா போன்ற நாடுகளே பின்னர் அதன் விடுதலைக்கு உதவின.

தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்த மேற்கு நாடுகளே பின்னர் நெல்சன் மண்டேலாவுக்கு நோபல் பரிசளித்தன. தங்கச் சிலை வைத்தன.

தமிழீழ விடுதலைப்புலிகளே எமது விடுதலைப் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தினர். சர்வதேச மத்தியஸ்தம் வரை நகர்த்திச் சென்றனர். சர்வதேச அளவில் கலந்து பேசி ஒரு இடைக்கால நிர்வாக சபையை உருவாக்க பாடுபட்டனர். சிறீலங்காவில் தமிழர்களின் நிலப்பரப்புக்கு எல்லை வகுத்து சர்வதேச கண்காணிப்போடு ஒரு சிறீலங்கா - விடுதலைப்புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையை சர்வதேச கண்காணிப்பின் கீழ் செய்தனர்.

ஆனால் அமிர்தலிங்கம் வால்பிடித்த இந்தியா இத்தனை நகர்வுகளையும் நாசமாக்கியதோடு.. ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் அழிவைக் கூட திட்டமிட்டு மறைக்கும் செயலில் இறங்கியுள்ளது. இந்த வேளையில் மீண்டும் அமிர்தலிங்கம் போன்ற இனத்துரோகிகளை முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டிய இழிநிலையில் தமிழினம் இன்றுள்ளதா என்ற கேள்வியே இங்கிருக்கிறது.

என்ன விடுதலைப்புலிகளும் தமிழீழ விடுதலைப்போராட்டமும் முற்றாக சிதைந்து போய்விட்டது என்ற கனவிலா.. துணிவிலா.. இத்தனை கட்டுரைகளும் உண்மைக்குப் புறம்பான வகையில் தீட்டப்படுகின்றன.

அமிர்தலிங்கம்.. தமிழ் மக்களின் நலனை விட இந்திய நலனுக்காகவே உழைத்தார். இறுதியில் இந்தியாவிற்காகவே உயிரும் விட்டான். அவரின் மனைவி மங்கையக்கரசி கூட சாபம் போட்டாராம்.. தமிழீழமும் தமிழ் மக்களும் பிரபாகரனும் நாசமாப் போக வேண்டும் என்று. இப்படிப்பட்ட நாதாரிகளா எமது இனத்தின் அரசியல் வாரிசுகள். சிங்களத்தின் அருவருடிகள்.. எமது இனத்தின் எதிர்கால அரசியலை தீர்மானிக்க நாம் இளைஞர்கள் அனுமதிக்கலாமா. எமக்கு வழிகாட்டிய தலைவனின் போராளிகளின் மக்களின் குருதி கூட உறையவில்லை. அதற்குள்.. இந்திய வல்லாதிக்க நலனை காக்க அமிர்தலிங்கத்துக்கு அஞ்சலியும்.. அரசியல் வாரிசுத் தகமையும் அளிக்க கங்கணம் கட்ட ஆரம்பித்துவிட்டனர்.

அமிர்தலிங்கம் ஒரு துரோகி என்பது மட்டுமல்ல.. மங்கையக்கரசி என்ற இவரின் மனைவி பத்தினி வேசம் போட்டு சாபம் இட்டு மக்களை அழித்தாராம். அவர் இட்ட சாபமே இன்றைய பின்னடைவுகளாம் என்று ஒரு தரப்பு கதையளந்து திரிகிறது.

இன்றைய பின்னடைவு என்பது மங்கையக்கரசி இட்ட சாபம் அல்ல. இந்தியா என்ற தேசம் செய்த துரோகத்தின் விளைவு. இன்றைய உலக ஒழுங்கில் இருக்கும்..வல்லாதிக்க நலன்கள் சார்ந்து எழுந்த ஒரு நிலையே அன்றி வேறல்ல..! இது அமிர்தலிங்கம் உயிரோடு இருப்பினும் இன்னொரு வடிவில் நடந்தே இருந்திருக்கும்..! அமிர்தலிங்கம் உயிரோடு இருந்த போதும் தமிழ் மக்கள் வகை தொகையின்றிக் கொல்லப்பட்டனர் தான். அப்போ மங்கையக்கரசி.. எவருக்கு சாபம் இட்டார்..???! அது ஏன் பலிக்காமல் போனது..??!

இதே மங்கையக்கரசி.. கொடுங்கோலன்.. மகிந்தவை.. லண்டனில் சந்தித்து என்ன பேசினார்... அதன் பின்னரே வன்னிக்கான படுகொலையை மகிந்த ஆரம்பித்தார்..!

அமிர்தலிங்கம்.. ஒரு இனத்துரோகி என்பதை.. தமிழ் இனத்தைக் காட்டிக்கொடுத்த படு முட்டாள் என்பதை மட்டும் இங்கு சொல்லலாம். அவரை அரசியல் வாரிசாக வரிந்து கொள்ள வேண்டிய தேவை.. தமிழீழ தேசிய தலைவரின் வழியில்.... தியாகி திலீபன்... அண்ணா.. மில்லரண்ணா வரிசையில் நிற்கும் மக்களிற்கு அவசியமில்லை. எமது மதிப்புக்கும் அன்புக்குமுரிய மாவீரர்கள் காட்டிச் சென்ற தெளிவான உருப்படியான அரசியல் பாதை எம்முன் விரிந்து கிடக்க ஒற்றர்களும் ஓணாய்களும் எலும்பு பொறுக்கிகளும் எமக்கு அரசியல்வாரிசுகள் ஆவதா..??!

சிந்தியுங்கள் மக்களே..! :D

Edited by nedukkalapoovan

அமிர்தலிங்கம் ஒரு நயவஞ்சகம் பிடித்த அரசியல் சாக்கடை. இப்பவும் மங்கை அக்கா தமிழர் போராட்டத்துக்கு எதிராக கடைசி வரை செயற்படுகின்றா. மகன் மார் சொகுசா இலண்டனில்.

ஒருத்தன் தமிழ் பள்ளி நாடாத்தி நாட்டாண்மைசெலுத்துகிறார். அண்மையில் அவரது பள்ளியில் ஊர்வலத்துக்கு போகபள்ள்ளிக்கூடம் மூட படாது எண்டு பிரச்சனை பட்டவர்.

இளைஞர்கள் எனி அரசியலை முன்னெடுத்துச் செல்லும் நிலை தாயகத்தில் வர வேண்டும். விடுதலைப்புலிகளின் அரசியல் கொள்கை மற்றும் அவர்களின் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டமே உலக அரங்கில் தமிழ் மக்களுக்கு பிரச்சனை உள்ளதென்பதை கொண்டு வந்தது மட்டுமன்றி சர்வதேச மத்தியஸ்தத்தை இப்பிரச்சனைக்குள் கொண்டு வந்தது.

புலிகளின் அரசியல் பிரிவினரை(இளைஞர்கள்)திட்டமிட

்டு இந்தியா நாசம் செய்திருக்கிறது போல தெரிகிறது.ஆயுதமேந்திய புலிகளைவிட அரசியல் மயப்படுத்தப்பட்ட புலிகள்தான் ஆபத்தானவர்கள் என்பதை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள்.

நான் 100 க்கு 100 விதம் அடித்துச் சொல்வேன் அமிர்தலிங்கம் என்ற நபர் இல்லாது இருந்திருந்தால் தமிழீழ விடுதலை என்றோ கிடைத்திருக்கும். தமிழீழம் என்ற நாட்டின் இறைமையை சிறீலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசு என்ற நாட்டுக்கு விற்ற மிகப் பெரிய துரோகி அவர்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை எழுதினாலேயே வெட்டு விழுமோ என்று அஞ்சிய படியே எழுத வேண்டியுள்ளது.

சில வருடங்கள் கழிந்த ஒரு மீள் பார்வை....... (பாகம் 1)

"ராசிக்" தமிழர்களாக ஈழத்தில் பிறந்தவர்களால் எளிதில் மறந்துவிட முடியாத ஒரு மாவீரன். இலங்கை என்ற தீவில் குறிப்பிட்ட சில மக்களால் இன்றும் தமிழ் பேசவும் தமிழால் உரையாடவும் முடிகிறது என்றால் அந்த தைரியத்தை அந்த மக்களுக்கு கொடுத்தவன் அவனே. அச்சம் என்பது அவன் அறியாத ஒன்று அதலால்தான் பகலிலேயும் பள்ளி மாணவிகளை அவனால் பாலியல் பலத்காரம் செய்ய முடிந்தது. பலியல் பலாத்காரம் என்ற சொல்லின் உண்மையை சில மூடர்கள் அவன் இறந்துவிட்டான் என்ற தைரியத்தில் மூடிமறைக்கின்றார்கள். ஆனால் 16வயதை அடைந்த ஒரு மாணவிக்கான உடல்தேவை எவ்வளவு அவசியமானது என்பதை அந்த தியாகி நன்அறிந்திருந்தான்...... அதலால்தான் தனது பல ஆயிரம் மணி நேரங்களை அற்காக செலவு செய்தான் அல்லது தியாகம் செய்தான். வெள்ளைவான் வெள்ளைவான் என்றால் அந்த தேசபக்த்தன் வந்த வான் மட்டும் வெள்ளையில்லை அவனது உள்ளமும் அதேபோல் வெள்ளை அதலால்தான் சிலநாட்களில் அவன் பச்சை நிற வானில் வந்த போதும் மக்கள் அவனை வெள்ளைவான் வீரன் வருகிறான் என்று பண்போடு பணிந்தார்கள். உண்மைகளை எதிரிக்கே உரைத்தவன் அவன். பொய்யையும் யாரிடம் சொல்கிறோம் என்பதை தெரிந்து சொல் என்கின்றது குறள். அவன் குறளுக்கும் மேல் அதலால்தான் மக்கள் எங்கே பதுங்குகிறார்கள் பெண்கள் எந்தெந்த வீட்டீல் தனியா இருக்கிறார்கள் என்ற உண்மையைகளையும் எதிரிக்கும் கயவர்களுக்கும் சொல்லியே வந்தன். வாய்மையே வாழ்வென்று வாழ்ந்தான்......

மட்டகிளப்பில் பிறிதொரு நாளி;ல் நடந்து பெரும் துரோகம் ஒன்றிற்கு பலியான அந்த தேசபக்த்தனை பற்றி எழுத ஒரு தலைப்பு போதாது ஆனால் என்னால் முடிந்ததை நான் தொடர்ந்தும் எழுதுவேன். யாழ்கள நிர்வாகிகள் உங்கள் சேவர் எத்தனை மெமோரியை உடையது என்பதை தெரிய தந்தால் நன்றாக இக்கும். அவனது உழைப்பையும் சிறப்பையும் பதிவு செய்துவைக்க உலத்தில் தற்போதுள்ள சேர்வர்களால் முடியாது என்பது மக்கள் அறிந்தது

பாகம் 2 வெகு விரைவில்.......

Edited by Maruthankerny

:D:rolleyes:

அப்படியே முடிஞ்சா கருநாவின் வீர தீர சாகசங்களையும் புகழ்ந்து ஒரு கட்டுரை எழுதவும்.

இந்த நன்றி கெட்ட நாய் சாதி இனத்துக்காக பிரபாகரன் என்ற மனிதர் தன்ட வாழ்நாளை அர்ப்பணித்தவர் என்டு நினைக்கேக கவலையா இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

:D:rolleyes:

அப்படியே முடிஞ்சா கருநாவின் வீர தீர சாகசங்களையும் புகழ்ந்து ஒரு கட்டுரை எழுதவும்.

இந்த நன்றி கெட்ட நாய் சாதி இனத்துக்காக பிரபாகரன் என்ற மனிதர் தன்ட வாழ்நாளை அர்ப்பணித்தவர் என்டு நினைக்கேக கவலையா இருக்கு

நூறுவீதம் உண்மை

தலைவன் இத்தனை நா....... களை வைத்து எப்படி ஒரு சுட்டுவிரலால் வழி நடத்தினான்

அதுதான் பிரபாகரன்...................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ ஒரு புள்ளியில் எங்கோ ஓரிடத்தில் பலரின் அடி மனதில் கிடந்தவை இன்று வெளிப்படுகின்றன. தமது கருத்துக்களை வெளிப்படுத்தாமல் ஒரே பக்கத்தில் நிற்பதாய் தங்கள் பெயர்களை தமிழ்த் தேசிய வாதிகள் என்ற அடைமொழிக்குள் வைத்திருந்தவர்களின் தேசியவாதம் எதுவரை என்பது தெரிகின்றது.

நாளுக்கு நாள் தொடாந்து செல்லும் இந்த கருத்துக்களின் மாற்றம் என்பது ஏதோ ஒரு தவறான செய்தியை எம் மக்களிடம் கொண்டு சேர்க்கிறது என்பதை யாழ் இணையமும், அதன் நிர்வாகமும் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.

இத்தனை நாளும் யாழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்கு வெறும் கருத்து சுதந்திரம், ஜனநாயக கோட்பாடு என்ற கத்தரிக்காய், புடலங்காய்களால் கருத்தற்று போகின்றது.

அமிர்தலிங்கம் ஒரு மாவீரனாக இருக்கலாம், சிறந்த அரசியல் வாதியாக கூட இருக்கலாம். ஆனால் அவர் எம் மக்களிற்காக் என்ன செய்தார்? தம் மக்களை, உறவுகளை அவசரப்பட்டு வெளிநாடு அனுப்பி வைத்தாNரு ஒழிய பதவியில் இருந்த படி எதையும் அவர் சாதிக்கவில்லை. எதிர்கட்சி என்ற நிலையில் இருந்தும் கூட அவரால் எதையும் சாதிக்க முடியவில்லை. தந்தை செல்வாவின் வழியில் வந்தாலும் கூட அவருக்கு நேர் எதிரான கொள்கை வழிநின்று இலகுவில் விலை போக கூடிய ஒருவராகவே அமிர்தலிங்கம் அவர்கள் இருந்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்கட்சி என்ற நிலையில் இருந்தும் கூட அவரால் எதையும் சாதிக்க முடியவில்லை. தந்தை செல்வாவின் வழியில் வந்தாலும் கூட அவருக்கு நேர் எதிரான கொள்கை வழிநின்று இலகுவில் விலை போக கூடிய ஒருவராகவே அமிர்தலிங்கம் அவர்கள் இருந்துள்ளார்.

இருந்தும் இறந்த வாழ்க்கை வாழ்ந்து விட்டுப்போன மனிதர்.

  • கருத்துக்கள உறவுகள்

:D:rolleyes:

அப்படியே முடிஞ்சா கருநாவின் வீர தீர சாகசங்களையும் புகழ்ந்து ஒரு கட்டுரை எழுதவும்.

இந்த நன்றி கெட்ட நாய் சாதி இனத்துக்காக பிரபாகரன் என்ற மனிதர் தன்ட வாழ்நாளை அர்ப்பணித்தவர் என்டு நினைக்கேக கவலையா இருக்கு

உங்கள் உணர்வுகளையும் தாக்கங்களையும் என்னால் புரிந்துகொள்ள கூடியதாக இருக்கின்றது. எமது இனம் என்று நினைத்து விட்டு மனம் சலித்துவிடாதீர்கள்.... உலகில் உள்ள எல்லா இனங்களுமே இப்படித்தான் இருக்கின்றன இருந்திருக்கின்றன. சொந்த மகளையே கற்பழிக்கும் மனிதர்கள் இந்த உலகில் இருக்கிறார்ள். சொந்த நலனுக்காகவும் வாழ்விற்காகவும் நாட்டைவிற்ற எத்தனையோ பேர் எல்லா நாட்லும் இருக்கிறார்கள.; தமிழர்கள் பிறருக்கு தீங்கிழைக்காது தாம் ஒதுங்கி வாழவேண்டும் என்று நினைக்கின்றார்கள்...... வாராலாறுகளை புரட்டினால் நீங்கள் புரிந்துகொள்ள கூடியதுதான். இப்போது கூட எமது மக்களை எந்த ஈவிரக்கமும் இன்றி இந்தியாவும் சிங்களவனும் கொன்றார்கள். ஆனால் எத்தனையோ தற்கொலை போராளிகளை கொண்டிருந்த தமிழர் தரப்பு சிங்கள மக்களை அழிப்பது பற்றி ஒருபோதும் சிந்திக்வில்லை. கடைசியாக சென்ற கரும்புலிவிமானங்கள் கூட தமது விமானத்தை பல குண்டுகள் துளைத்துகொண்டிருந்த போதும் தமது இலக்கான இராணுவ இலக்கை நோக்கியே செல்கின்றர்கள்...... இது சிங்களவனே காட்டிய வீடியோபதிவு. காரணம் அத்தனை தூரம் அவர்களை வளர்hத்த தலைவன் அவர்களுக்கு கண்டிப்பாக அதை ஆணையிடுகிறான். தமிழருக்காக என்று இந்த மண்ணில் பிறந்த எல்லா தமிழ் மன்னர்களிடையேயும் நீங்கள் இந்த ஒற்றுமையை பார்க்கலாம். நான் நினைபதுண்டு சில வேளைகளில் ஒருவர்தான் காலங்கள் கட்ந்து மீண்டும் மீண்டும் பிறக்கி;ன்றாரோ என்று. எல்லா மன்னர்களுடனும் துரோகிகள் இருந்திருக்கின்றார்கள் துரோகங்கள் எப்போதும் நடக்கின்றன...... அவர்களின் பரம்பரையோ என்னமோ அந்த சகதி கூட்டமும் எம்மை பின்தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆனால் தலைவர்கள் அதை பெருதுபடத்தவில்லை..... காரணம் அவர்களது பாதையும் தேர்வும் சத்தியமாகவும் தார்மீகமானதாகவும் இருக்கின்றது. அவர்கள் சத்தியத்தைதான் எல்லாவற்றிற்கும் மேலாக நம்புகிறார்கள். அதை ராஜசோளனின் கதைகளையும்........ பாண்டியநாட்டு.... இளையபல்லவனின் கதைகளையும் படித்தால் தெரிகின்றது..... ஏன் பண்டார வன்னியன் கூட காக்கை வன்னியன் பற்றி அதிகம் அலட்டிகொள்ளவில்லை. அதே பாணியில்தான் 1987ம் எமது ஆயுதங்களை நாம் மீண்டும் எடுக்கிறோம் என்று தலைவர் பிரகாரன் சொன்னபோது. எல்லோருமே அதிர்ந்து போனார்கள் ஆனால் சில மூத்த பத்திரிகையாளர்களையும் கல்விமான்களையும் உடனடியான திருநெல்வேலிக்கு அழைத்த தலைவர் சொல்கிறார்........ நாம் அஞ்சுவதற்கு ஏதும் இல்லை நாம் தர்மத்தின் பக்கம் நிற்கிறோம் என்று. அந்த ஒன்றை தவிர அந்த (காலத்தில்)நேரத்தில் அந்த மனிதனால் எதை நம்பியிருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீhகள்?. 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் புலிகள் இனியும் வாழ்வார்கள் என்று யார் நினைத்தார்கள்? நான் கூட அழிவார்கள் என்றுதான் நினைத்தேன்...... உங்கள் நெஞ்சில் கையைவைத்து சொல்லுங்கள் நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லை என்று? ஆனால் தார்மம்தானே வெற்றி பெற்றது? அதர்மகாரன் அடுத்தசில ஆண்டுகளிலேயே அழிந்துபோனான். ரோமராஜ்ஜியம் கிரேக்கராஜ்ஜிம் என்றல்லாம் நாம் படிக்கின்றோம் ஆனால் எத்தனையோ ஆண்டுகளுக்க முன்பு எழுந்த அந்த ராஜ்ஜியங்களில் தர்மம் சாயவில்லை. வீண் நில ஆக்கிரமிப்பே இருந்து. இன்றைக்கு றோமும் கிரேக்கமும் சும்மா சாதாரண இடமாயிற்று. நாளைக்கு அமெரிக்காவிற்கும் இதே கதிதான் இதை யாராலும் தடுக்க முடியாது. தமிழ் தலைவர்கள் தர்மத்தின் வசலால் வந்து அந்த வழியாலேயே போகிறார்கள். அதனால்தான் அவர்கள் துரோகத்தின் துரங்களை நின்று அழந்துவிடுவதில்லை..... அதனால் பலபேர் கிட்டதட்ட எல்லா தமிழ் மன்னர்களுமே துரோகத்தால்தான் இறக்கின்றார்கள். மக்கள் கூட்டம் என்று பார்த்தால் எல்லா வகையும் கலந்துதான் இருக்கும்...... சகித்துகொள்வதை தவிர வேறு வழியேதுமில்லை. உங்களது மனங்களை சிதறடித்துவிடாதீர்கள்...... எமது வாழ்நாளில் எம்மால் முடிந்தளவு போராடுவோம். எமது தலைவரின் ஆசையா எப்போதும் இருந்தது...... இந்த போராட்ட சுமையை அடுத்த சந்ததியிடம் விடக்கூடாது என்பது. எமது விடுதலையை அதற்குள்ளேயே பெற்றுவிட வேண்டும் என்பது அது. ஆகவே உங்கள் உழைப்பை தயவு செய்து நிறுத்திவிடாதீர்கள்......... எல்லா மூலைகளிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கைகளை கோர்த்துகொள்ளுங்கள்

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது மனங்களை சிதறடித்துவிடாதீர்கள்...... எமது வாழ்நாளில் எம்மால் முடிந்தளவு போராடுவோம். எமது தலைவரின் ஆசையா எப்போதும் இருந்தது...... இந்த போராட்ட சுமையை அடுத்த சந்ததியிடம் விடக்கூடாது என்பது. எமது விடுதலையை அதற்குள்ளேயே பெற்றுவிட வேண்டும் என்பது அது. ஆகவே உங்கள் உழைப்பை தயவு செய்து நிறுத்திவிடாதீர்கள்......... எல்லா மூலைகளிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கைகளை கோர்த்துகொள்ளுங்கள்

அருமையான வரிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.