Jump to content

முகம் தெரியாத நண்பனும் நாங்களும்

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகம் தெரியாத நண்பனும் நாங்களும்

“வணக்கம்”

அங்கிருந்தொருவன்

அருகிருப்பதுபோல் பேசுவான்

தொலை தூர வாழ்வில்

அதிகாலைப்பொழுதில்

தினந்தோறும் வருவான்.

தாய்நாட்டு வாசனை

தன் குரலாலே தெளிப்பான்.

முன்னைய நாட்களில்..

தனித்தேசக் கனவை

தன்மான உணர்வை

செயல் திறன் ஆற்றலை

எங்களுக்குள்

இன்னும் அதிகமாக்கியவன்

இறுதி நாட்களில்..

முள்ளி வாய்க்கால்

இப்போது என்ன சொல்லுதென்று

வரி விடாமல் சொல்லுவான்

நீர்க்குமிழி வாழ்வுக்குள்ளிருந்தபடி

நிமிர்ந்து வந்து

குரல் தருவான்.

எங்களைப்போல்

முகம் தெரியா நண்பர்கள்

அவனுக்கு அதிகம்.

அத்தனை பேரும்

தேடுகின்றோம் அவனை.

இப்போது

நீண்ட நாட்களாய்

காணவில்லை.

அவனை?

அவன் குரலை?

இன்று..

அருகிருப்பவன்

சொன்னான்

அவன் வீர மரணமென்று

படம் கிடைத்தது.

முதன் முதலாய்

முகம் பார்த்தோம்.

முகத்தோடு முகம் புதைத்து

அழுதோம்

இனம் புரியா உணர்வால்

தவித்தோம்

அவன் செய்தி படித்தோம்

“அழுகை நிறுத்துங்கள்”

அதில் ஒன்று.

“எழுந்து நடவுங்கள்”

இன்னொன்று.

விழுப்புண்ணாய் இருக்கையிலே

வெளி வேலை செய்வாயாம்

ஆறிய மறுகணமே

களம் நோக்கி

நடப்பாயாம்.

புல்லரித்துப்போகின்றோம்

உன்னைத் தொட்டபடி

நடந்தது வரம்.

தொலைத்துவிட்டுத்

தவிப்பது சாபம்.

நாங்கள் பதில் போடவும்

எங்கள் முகம் காணவும்

நீயில்லை

எங்கள் முகந்தெரியாத நண்பனே!

இப்போது

புடம் போடுகின்றோம்,

நீ சொன்னதுபோல்

விடுதலைக்காய்

எங்களை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரவி இந்திரன் இது ஒரு கால அனுபவம். பத்திரப்படுத்தி உங்கள் இலக்கியத்திற்குள் புகுத்தி வையுங்கள். ஒரு நூற்றாண்டுக்குப் பின் இவையெல்லாம் பெறுமதி மிக்கவையாக எங்கள் இனத்தின் தேடல்களில் இருக்கும். முகங்கள் அறியாமலே இனத்தின் விடுதலைக்காக கண்காணாத் தூரவெளிகளில் இருந்தவர்கள் எப்படிப் பிணைக்கப்பட்டார்கள் என்பன எல்லாம் நாளைய நாட்களில் தேடலில் ஈடுபடப்போகும் எங்கள் வருங்கால சந்ததிகளுக்கு இன்றைய நாட்களின் கதைகளைக் கூறுபவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அற்புதமான கவிதை..எப்படி பாராட்ட என்று தெரியவில்லை.

எத்தனை பேரை தட்டி எழுப்பிய நண்பன் அவன்... :icon_idea::D

Link to comment
Share on other sites

முகம் அறியாமல் போனவன் போல் ஆயிரமாயிரமாய் எங்கள் முகவரிகள் போய்விட்டனர் இந்திரன்.

கவிதை கனத்துக் கண்ணீர் விடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை, நெஞ்சைத் தொட்டுவிட்டது. நாம் எல்லாம் தமிழராய் பிறந்துவிட்ட குற்றம். இது நம்மைப் படைத்தவனுக்குகே சமர்ப்பணமாக வையுங்கள் ரவி இந்திரன்.

நன்றியுடன்

பென்மன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரவி இந்திரன் இது ஒரு கால அனுபவம். பத்திரப்படுத்தி உங்கள் இலக்கியத்திற்குள் புகுத்தி வையுங்கள். ஒரு நூற்றாண்டுக்குப் பின் இவையெல்லாம் பெறுமதி மிக்கவையாக எங்கள் இனத்தின் தேடல்களில் இருக்கும். முகங்கள் அறியாமலே இனத்தின் விடுதலைக்காக கண்காணாத் தூரவெளிகளில் இருந்தவர்கள் எப்படிப் பிணைக்கப்பட்டார்கள் என்பன எல்லாம் நாளைய நாட்களில் தேடலில் ஈடுபடப்போகும் எங்கள் வருங்கால சந்ததிகளுக்கு இன்றைய நாட்களின் கதைகளைக் கூறுபவையாக இருக்கும்.

வல்வை சகாரா அக்கா உங்கள் கருத்துக்கு நன்றிகள்

இன்றைய காலகட்டத்தில், எமக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஆவணப்படுத்துதலும், வீரம் தியாகம் நிறைந்த விடுதலைப் போராட்டத்தை முற்றுமுழுதாக கலை, இலக்கிய படைப்புக்களுக்குள் உள்வாங்கி பத்திரப்படுத்துதலும், நம்முன்னுள்ள முக்கிய பணி ஆகும். ஏனெனில் எங்களுக்கு உலகம் பதில் சொல்லாவிட்டாலும் வரலாறு நிச்சயம் பதில் சொல்லும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அற்புதமான கவிதை..எப்படி பாராட்ட என்று தெரியவில்லை.

எத்தனை பேரை தட்டி எழுப்பிய நண்பன் அவன்... :lol::)

ஜீவா உங்கள் கருத்துக்கு நன்றிகள்

அந்த நண்பன் எங்களை உருவாக்கியது போல் நாங்கள் ஒவ்வொருவரும் நிறைய நண்பர்களை உருவாக்குவது காலத்தின் தேவை.

அதுவே ஈழத்தின் எதிர்காலத்திற்கு தேவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகம் அறியாமல் போனவன் போல் ஆயிரமாயிரமாய் எங்கள் முகவரிகள் போய்விட்டனர் இந்திரன்.

கவிதை கனத்துக் கண்ணீர் விடுகிறது.

முகமறியாமல் அவர்கள் போயிருந்தாலும் அவர்களே எங்கள் முகவரிகள்.

எங்கள் முகவரிகளை நாங்கள் தொலைக்கவில்லை விதைத்துள்ளோம். மீண்டும் முளைகொண்டு விருட்சமாய் விரியும் விடுதலை வேட்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை, நெஞ்சைத் தொட்டுவிட்டது. நாம் எல்லாம் தமிழராய் பிறந்துவிட்ட குற்றம். இது நம்மைப் படைத்தவனுக்குகே சமர்ப்பணமாக வையுங்கள் ரவி இந்திரன்.

நன்றியுடன்

பென்மன்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் பென்மன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.