Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் இன்னமும் பலத்துடனையே இருக்கின்றார்கள்: ரம்புகவெல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுடனான இராணுவப் போர் முடிந்து விட்டாலும் கூட முழுமையாக அவர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக கருத முடியாது என்று கெஹலிய ரம்புகவெல கூறியுள்ளார்.

கெஹலிய ரம்புகவெலஅளித்துள்ள தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளதாவது:

விடுதலைப்புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டதாக நாம் கருத முடியாது. தற்போது விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் செயற்படுகின்றனர். சூசை ஒரு சமயத்தில் குறிப்பிட்டார் "உண்மையான யுத்தம் தரையில் அல்ல கடலிலேயே இருப்பதாக". எனினும், அவை அனைத்தும் தற்போது வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வெள்ளையர்களும் செயற்பட்டார்கள். உலகில் எந்தவொரு அமைப்பிற்கும் இல்லாத பலத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தார்கள். அவர்கள் விமானம் வைத்திருந்தார்கள். எனினும், அந்த பலத்தை சிறீலங்காப் படைவீரா்கள் முறியடித்து விட்டனர்.

விடுதலைப் புலிகள் மீண்டும் எழுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. போர் முடிவடைந்தாலும் அதன் மாயை இன்னமும் முடியவில்லை. கரையோரப் பாதுகாப்பு அண்மையில் பலப்படுத்தப்பட்டது. எப்படி இருப்பினும் மீண்டும் புலிகள் ஆயுதங்களை ஏந்தும் அளவுக்கு நாங்கள் இருந்து விட மாட்டோம் என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் கொரில்லாத் தாக்குதலில் ஈடுபடத் தயாராகி வருவதாக சிறீலங்கா உளவுத்துறை அரசை எச்சரித்துள்ளதாக செய்திகள் தற்போது கசிந்துள்ளது. வன்னிப் பகுதியில் நடந்த இறுதிப் போரின்போது 2000க்கும் மேற்பட்ட போராளிகள் காடுகளுக்குள் ஊடுருவியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்படும் போராளிகளில் பெரும்பாலானோர் கிழக்கில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அவர்கள் கொரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக சிறீலங்கா அரசை உளவுத்துறை எச்சரித்துள்ளது.

மேலும், கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக 5 ஆயிரம் இந்தியப்படையினர் இலங்கை சென்றுள்ளனர். ஐந்நூறு வீரர்கள் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், 5 ஆயிரம் வீரர்களை இந்திய அரசு அனுப்பியுள்ளது. இவர்கள் காட்டுப்பகுதிகளுக்குள் தேடுதல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தேவையேற்படும் போது மேலதிக இந்தியப்படை அனுப்பிவைக்கப்படலாம் எனவும், இனிவரும் காலங்களில் காடுகளுக்குள் இரகசியமாக படை நடவடிக்கைகளை இந்தியப்படை மேற்கொள்ளும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

Edited by kuddipaiyan26

புலிகள் ஒட்டு மொத்தமாக அழிக்க முடியாது என்பதை காலம் கடந்து புரிந்து கொண்டதாக சொல்வது சும்மா ஓரு ஏமாற்று வேலை... தமிழர்கள் யாரிலாவது தங்களின் பாரத்தை போட்டு விட்டு சோம்பிக்கிடக்க வேண்டும் சிங்களவனுக்கு எதிராக எழுச்சி கொள்ள விடாமல் இருக்க இப்படி பல ஏமாற்றுக்களை சிங்களம் செய்வது வழமை...

தமிழர்கள் ஒட்டு மொத்தமாகவே புலிகள் எனும் எண்ணம் சிங்களவனுக்கு இருக்கும் அளவு கூட எங்கட தமிழருக்குள் இருக்குது இல்லை... சிங்களவன் புலிகள் எண்று விளிப்பது தமிழர்களை, இந்த தமிழர்களினால் சிங்களவனுக்கு ( சில காலம் முன் போராட்டங்கள் மூலம்) வெளிநாடுகள் மூலம் கொடுத்த அழுத்தங்களை சிங்களவன் புலியின் செயலாகவே பார்க்கிறான்...

தமிழர்கள் இந்த செய்தியை பார்த்து நிம்மதியாக வேற வேலைகளில் ஈடு படலாம்.... புலிகள் இருக்கிறார்கள்.. அவர்கள் இனி போராடுவார்கள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தயா,

இனித் தமிழர்கள்தான் புலிகள். ஆகவே அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன். புலிகள் அழிந்தாலும் தனி ஈழத்துக்கான தேவையும், ஆசையும் இன்னும் தமிழர்களிடையே அப்படியே இருக்கிறது என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தமிழர்களின் ஆசை தமிழீழமாக இருக்கலாம். ஆனால் இன்றைய தேவை அதுவல்ல. இன்று தாயகத்தில் இருப்பவர்களின் தேவை நிம்மதியான வாழ்வு மட்டுமே. அதை யார் மூலமாவது எந்த வடிவத்திலாவது பெறத் தயாராக உள்ளனர். வரவிருக்கும் தேர்தலில் த. தே. கூட்டமைப்பினரின் வெற்றிகூடச் சந்தேகமானதே. தமிழீழம் என்பதெல்லாம் அதற்கு அடுத்ததுதான்.

முதலில் செய்ய வேண்டியது அங்குள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே. அதுவரை புலம்பெயர்ந்த நாடுகளில்தான் தனி ஈழம் பற்றிச் சிந்திக்க முடியும்.

ஆனால் இன்றைய தேவை அதுவல்ல. இன்று தாயகத்தில் இருப்பவர்களின் தேவை நிம்மதியான வாழ்வு மட்டுமே. அதை யார் மூலமாவது எந்த வடிவத்திலாவது பெறத் தயாராக உள்ளனர். வரவிருக்கும் தேர்தலில் த. தே. கூட்டமைப்பினரின் வெற்றிகூடச் சந்தேகமானதே. தமிழீழம் என்பதெல்லாம் அதற்கு அடுத்ததுதான்.

முதலில் செய்ய வேண்டியது அங்குள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே. அதுவரை புலம்பெயர்ந்த நாடுகளில்தான் தனி ஈழம் பற்றிச் சிந்திக்க முடியும்.

இன்று அம்மக்களின் வாழ்வுதான் முக்கியம் ,இணையவனின் கருத்துடன் உடன் படுகிறென்

தயா,

இனித் தமிழர்கள்தான் புலிகள். ஆகவே அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன். புலிகள் அழிந்தாலும் தனி ஈழத்துக்கான தேவையும், ஆசையும் இன்னும் தமிழர்களிடையே அப்படியே இருக்கிறது என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இங்கை நடக்கும் நாடகங்களையும் மக்களின் பேச்சுக்களையும் பார்க்கும் போது... இவ்வளவு காலமும் எல்லாரும் கட்டுண்டு கிடந்தது பிரபாகரன் எனும் மந்திர சொல்லுக்காக மட்டும் தான் என்பதை அப்பட்ட மாக தெரிகிறது...

நாளுக்கு ஒரு கருத்துவேறு பாடுகள், ஒருங்கிணைப்பு கட்டுப்பாடு இல்லாத போக்கு எண்று நாளாந்த பிளவு பட்டு கொண்டு இருக்குது எங்கட இனம்...

மாற்று கருத்தோடு இருந்தாலும் வீரியம் இல்லாது இருந்தவர்கள் எல்லாம் இப்போ மிக குதூகலமாக இருக்கிறார்கள்... ஆனால் தேசியம் பேசியவர்களில் பலர் ஏதோ குற்றவாளிகள் போல பலராலும் விமர்ச்சிக்க படுகிறார்கள்...

சுருங்க சொன்னால் தமிழர்கள் தங்களின் சுயரூபத்தை காட்டி கொண்டு இருக்கிறார்கள்... ஆனால் சிங்களம் ஒட்டு மொத்த தமிழரையும் புலியாகத்தான் பார்க்கிறது...

ஒட்டு மொத்த தமிழர்களும் தாங்கள் தான் புலிகள் எண்று சொல்லி கொள்ள இன்னும் பத்து பிரபாகரன் வந்தாலும் போதாது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தேசங்களில் பரந்துபட்டு வாழ்கின்ற எமதுறவுகள் பொருளாதார பலத்தில் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை. இவர்கள் செய்ய வேண்டிய ஒரேயொரு வேலை அனைவரும் சேர்ந்து இலங்கைப் பொருளாதாரத்தையும் அதன் ஊற்றுக்கண்களையும் தமது வசப்படுத்துவதேயாகும் . எமது நவீன தொழில்நுடப அறிவினைக் கொண்டு. இலங்கைத்தீவின் தொழிற்துறையினையும் நம் கைவசப்படுத்தினால் இன்னுமொரு ஈழப்போரினை வேறுவேறு முனைகளில் திறந்து விடலாம் தமிழ்த்தேசியம் தனது சுயநிர்ணய உரிமையைப் பெறுவதற்கான போராட்டத்தை முன்னெடுக்கும் அதேவேளை அதற்க்குச் சமாந்தரமாக வெறு வழிமுறைகளில் நாம் சிங்களத்தை வெற்றிகொள்ள சிந்தித்துச் செயற்படவேண்டிய காலம் இதுவே.

தற்போது வடக்குக் கிழக்கில் வாழகின்ற தமிழர்களது பணத்தினைக் குறிவைத்து பலவேறு நாடுகளும் தங்களது நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அதிவேகமாக அவ்விடம் நோக்கிச் செல்கின்றனர். இது எமை முற்றிலும் அடிமைப்படுத்தவே தவிர வேறு எதுவுமில்லை. ஏன் நாம் எமது பிரதேசத்தில் மிகத் தகுதியான தொழில்நுட்ப உதவிகளுடன் முதலீடுகளை முன்னெடுக்கக்கூடாது?

புலம்பெயர் தேசங்களில் பரந்துபட்டு வாழ்கின்ற எமதுறவுகள் பொருளாதார பலத்தில் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை. இவர்கள் செய்ய வேண்டிய ஒரேயொரு வேலை அனைவரும் சேர்ந்து இலங்கைப் பொருளாதாரத்தையும் அதன் ஊற்றுக்கண்களையும் தமது வசப்படுத்துவதேயாகும் .

83 இனக்கலவரத்தின் பின், மேற்குலகில் இருந்து வெளிவரும் பிரபல பொருளாதார சஞ்சிகை, ....... "இலங்கையின் பொருளாதாரத்தில் 60 விழுக்காடுகளை, 20 விழுக்காட்டுக்கு குறைந்த தமிழினம் கொண்டிருந்ததே, இவ்வினக்கலவரத்தின் முதன்மைக் காரணம்" .... என எழுதியிருந்தது!!

இனியும் கொண்டு சென்று போடுவோமாயின் ...... வரலாற்றுப் பாடத்தை மறப்பதற்குரியதா????????

இணையவன்,

அங்குள்ள மக்கள் ஈழத்தைப் பற்றி சிந்திப்பதற்கே இனி முன்வருவார்களா?? என்பதே கேள்விக்குறி!!! ....... அவர்கள் பட்டவைகள் ......... சொல்லிலடங்காதவை!!!! அவர்களெதை எதை இழக்கக்கூடாதோ .... அவைகளையெல்லாம் இழந்து .......... எம் புலம்பெயர்ந்தவர்களின் தன்மானப்பிரட்சனைக்கு ..... வேள்விக்கு வளர்த்த கடாக்களாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்!!!

அம்மக்களின் மீள் குடியேற்றத்தை தடுத்து, முகாங்களில் இழிவு வாழ்க்கையை ஓட்ட தொடர்ந்து அடைத்து வைத்திருக்க ...... இனி சிங்களமே, நாம் விரும்பும் ....... இருக்கிறார் .... பலத்துடன் இருக்கிறார்கள் .. பெருமளவில் இருக்கிறார்கள் .... மட்டுமல்ல தாக்குதல்களையும் தொடுக்கிறார்கள் என்றெல்லாம் கதை விடுவார்கள்!!! இது அவர்களுக்கு சர்வதேச மட்டங்களில் இருந்து எழும் கண்டனங்களுக்கு பதில் கூறுவதற்குரிய நொண்டிச்சாட்டுக்கள்!!!

........ ஆனாலும் நாம் தொடர்ந்து புலத்தில் இருந்து விசிலடிப்போம் ......... எம்மை விட உலகில் வடித்தெடுத்த முட்டாள்கள் இருக்க முடியாது ........

  • கருத்துக்கள உறவுகள்

83 இனக்கலவரத்தின் பின்இ மேற்குலகில் இருந்து வெளிவரும் பிரபல பொருளாதார சஞ்சிகைஇ ....... "இலங்கையின் பொருளாதாரத்தில் 60 விழுக்காடுகளைஇ 20 விழுக்காட்டுக்கு குறைந்த தமிழினம் கொண்டிருந்ததேஇ இவ்வினக்கலவரத்தின் முதன்மைக் காரணம்" .... என எழுதியிருந்தது!!

இனியும் கொண்டு சென்று போடுவோமாயின் ...... வரலாற்றுப் பாடத்தை மறப்பதற்குரியதா????????

அதனாலென்ன ஜனநாயக வழிமுறைகளில் எமது இலக்கினை நோக்கி நகர்வதற்கான தீர்க்கமான பாதைகளே இவை .மாறாக இப்போது உலகமயமாக்கல் எமமை வியாபித்துள்ளது. நாம் விரும்பியோ விரும்பாமலோ தற்காலிகமாகவேனும் உலகமயமாக்கலெனும் வாகனத்தில் பயணம் செய்தே ஆகவேண்டும்.

ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களில் முப்பது விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்கள் புலம் பெயர்ந்தே வாழகின்றார்கள் அவர்களில் அனேகர் புதிய தொழில் நுட்பங்களை உள்வாங்கியே தமர் வாழ்க்கை முறையினை தாம் வாழ்கின்ற நாடுகளில் அமைத்துக் கொள்கிறார்கள். குறிப்பாக இளையோர் பல்வேறுபட்ட துறைகளில் கல்வியறிவினை கொண்டுள்ளார்கள் அவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தினாலேயே மிகப் பெரிய தொழில் நிறுவனங்களை உருவாக்கும் நிர்வகிக்கும் திறமை பெற்ற சமுகத்தை நாம் உலகின் முன் நிறுத்தலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.