Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மாவா , அப்பாவா .....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரதி , உங்களுக்கு அம்மாவை விட அப்பாவை அதிகம் பிடிப்பதால் ....... அதற்கு ஏதாவது விசேட காரணங்கள் உண்டா ?

நான் நினைக்கிறேன் சுப்பண்ணா சொன்ன மாதிரி பால் சம்மந்தப்பட்டதாகத் தான் இருக்கலாம்.அப்பாவிலும் பார்க்க அம்மா தான் எங்களை வளர்க்க கஸ்டப்பட்டவ அப்பாவுக்கு வேலை பகல்,இரவு மாறி மாறி வந்ததால் அம்மா தான் அநேகமாக எங்களுக்கு எல்லாம் செய்தவர் ஆனால் எதற்கு என்று தெரியவில்லை அப்பாவை தான் அதிகம் பிடிக்கும் அவர் தற்போது உயிருடன் இல்லை.அதை தவிர‌ நான் பெண் என்பதால் அம்மா கொஞ்சம் கண்டிப்புடன் வளர்த்தார்கள் அதனால் எனக்கு அம்மாவிலும் பார்க்க அப்பாவை கூட பிடித்திருக்கலாம்.

நல்ல தலைப்பாக இருந்தாலும், இந்தத் தலைப்பை பார்த்ததிலிருந்து சில தினங்களாக எனக்குள்ளேயே ஒரு விதமான மன அழுத்தம்....

ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து வயிற்றுக்குச் சாப்பாடு கொடுப்பதற்க்குத் தாயும், அறிவை வளர்ப்பதர்த்கு தந்தையின் பங்கும் அத்தியாவசியமாகிறது...

பொதுவாக பிள்ளைகளுக்கு பெற்றோரின் அறிவுரைகளையோ, மன நிலைமைகளையோ புரிந்துகொள்ளும் தன்மை குறைவு. பிள்ளைகள் வளர்ந்தது தாயாகவோ, தந்தையாகவோ வரும் போது தான் அந்த உண்மைகளை அனுபவ வாயிலால அறிந்து கொள்ளும் தன்மை உருவாகும்...

எனக்கு அம்மாட அன்பு, அரவணைப்பு, அராத்தல் எல்லாம் பிடிக்கும், ஆனால் ஒரு பிரச்சனை என்று வரும்போது அழுது, குளறி தனது இயலாமையை வெளிப் படுத்துவது பிடிக்காது (பெண்களுக்குரிய குணம் என்றே நினைக்கிறேன்) ஆனால் அதே பிரச்சனைகளுக்கு புத்திசாலித்தனமாகக் கையாளும் முறை அப்பாவிடம் அதிகமாகவே காணப்பட்டது...

குடும்பத்தில் மூத்த குழந்தை ஆணாகவும் கடைசி பெண்ணாக இருந்தால் அவர்களுக்கு என்று ஒரு தனி ஸ்பெஷல்.... இது இரண்டும் எனக்கு இல்லை... சில நேரங்களில் கடுப்பாகி, அம்மாவுடன் எரிஞ்சு விழுந்த அனுபவங்களும் உண்டு... "பெரியவரை என்னத்துக்கு எப்பவும் அம்மா தலையில் தூகிவைச்சுக் கொண்டு இருக்கிறா?" என்று கேட்டால் "அப்படி எல்லாம் இல்லை... அம்மா எல்லாரிலையும் ஒரே அளவு அன்பு தான் வைச்சு இருக்கா," என்று கொடுப்புக்குள் சிரிப்பார்; அப்பா பொதுவாக எல்லாப் பிள்ளைகளுடனும் ஒரே அளவு அன்பும் கண்டிப்பும் காட்டியதாக காண முடிந்தது...

சின்னப் பிள்ளையாக இருக்கும் போது, அம்மா தான் என்ன சொன்னாலும், செய்ய வேணும் என்று எதிர் பார்ப்பா... சில நேரங்களில் கடுப்பாகி அப்பாவிடம் போய் முறையிடுவேன்... முதலில் சமாதானப் படுத்தினாலும், கடைசியில் அம்மா சொன்னதை செய்யச் சொல்லியும் அதன் அவசியத்தையும் விளங்கப் படுத்துவார்... அப்பா சொன்னது விளங்கியதோ இல்லையோ அப்பா சொல்லுறார் என்று செய்வேன். அம்மா எல்லாத்துக்கும் பேசுவா, அடிப்பா...(செய்கிற குழப்படிகளும் அப்படியானது தானே... :lol: ) ஆனால் அப்பாவின் அதிகப் படியான தண்டனை முழங்காலில் இருத்துவது... பேச்சுக்கும், அடிக்கும் தான் பயம்... ஒரே ஒரு முறை அப்பாவிடம் அடிவாங்கியதும் ஞாபகம்...

இரண்டு நாட்களாக வைற்ரோட்டம், வைத்தியரிடம் மருந்து எடுத்தும் நிக்கவில்லை... ஓரிரு நாட்களில் இந்தியாவுக்கு வான்வெளிப் பயணம்... எப்படியாவது குணமாக வேண்டும் என்று அம்மா சொல்லி இருந்தா... என்னை தனியாக விட்டுப் விட்டு எல்லோரும் வெளி அலுவலாகப் போய்விட்டார்கள்... கண்டனத்தையும் எடுத்து வாயில போடாத, வரேக்க சாப்பாடு வாங்கிக் கொண்டு வாரம் என்று சொன்னார்கள்...

நான் தனிய இருக்கேக்க பக்கத்து வீடுக்கார அம்மம்மா மூக்கைத் துளைக்கிற மாதிரி சாப்பாடு தந்தா, திறந்து பார்த்தன் நண்டுப் பிரட்டல்... போனவர்கள் திரும்பினால் எனக்கு ஒன்றும் இருக்காது என்று நினைத்தானோ... இல்லை சாப்பாடு இல்லாமல் இருந்த எனக்கு ஏற்பட்ட ஆவாவோ என்னால சரியாய் சொல்ல முடியவில்லை... :unsure: குமரிமுத்து சிரித்ததுபோல் சிரித்துவிட்டு :) ... குழைத்து சாப்பிடுவிடேன்.

வெளிய போனவர்கள் வரும் போது எனக்கும் சாப்பாடு வாங்கி வந்தார்கள்... நான் சொன்னான் "எனக்கேன் உது... நான் நண்டுக்கறியோட வெட்டிடன்" என்று... சொல்லும் போதே வயிறைத் திரும்பக் கலக்கியது... :huh:

சொல்லுக் கேட்காததாலும், நாவடக்கம் இல்லாததாலும், மருந்து எடுத்தும் சில தினங்களுக்குள் வருத்தம் மாற்றமுடியாமல் போனதால் அப்பா தனது கோபத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் போனதோ என்னவோ... என் முதுகில் ஒரே ஒரு அடி விழுந்தது... அம்மா நெடுக அடிப்பதால் சூடு சுரணை இல்லாமல் போனது ஒரு பக்கம்... ஆனால் அப்பாவிடம் ஒரு அடி வாங்கிடனே என்று மனம் நிறைய கனத்துக் கஷ்டப்பட்டது... அந்த சில தினங்களுக்கு நானோ, அப்பவோ ஒருவரோடு ஒருவர் முகம் குடுத்துக் கதைக்கவே இல்லை... அப்பாவுக்கும் மனம் கஷ்டப் பட்டு இருந்திருக்க வேண்டும், அதனாலோ என்னவோ... இந்தியா வந்தது உறவினர் வீட்டில் தங்கினோம், இரண்டாம் நாள், தானே நண்டுப் பிரட்டல் சமைத்துத் தந்தார்.... அப்படி ஒரு நண்டுப் பிரட்டலை நான் இதுவரைக்கும் சாப்பிட்டதே இல்லை... இனியும் சாப்பிடுவன் என்ற நம்பிக்கையும் போய்விடாது...

அப்பா இங்கு வந்திருந்த போதும் சரி, சமாதான காலத்தில் நான் அங்கு போயிருந்த நேரமும் சரி... அப்பா ஸ்பெஷலாக சமைத்து தருவார்... சாப்பாட்டுக்கு முதல் 1பேக் அடிச்சுப் போட்டுதான் சாப்பிடுவோம்... அம்மாவின் பார்வை சுட்டேரிப்பதைப் போல இருந்தாலும், "கொஞ்சம் எடுக்கிறது பிழை இல்லை" என்று அப்பா சொல்வது, பிள்ளைகளை சமஉரிமையுடன் நடத்துறார் என்று பெருமையாக இருக்கும்! அம்மாவுடன் பல நேரங்களில் சிரித்துக் கதைத்தாலும், சில கருத்து வேறுபாடுகளில் தெறித்துப் போகும்... எனக்கு அம்மாவை பிடிக்கும், இருந்தாலும், ஒரு படி மேல போய் அப்பாவை எனக்கு அதிகம் பிடிக்கும்...

நிலை இல்லா இந்த உலகத்தில் யார் தான் நிலையா இருக்கிறார்கள்??? நாம் யாரில் அதிகம் அன்பு வைத்திருக்கிறோமோ அவர்கள் எம்மிடமிருந்து நிரந்தரமாகப் பிரிவது ஏற்றுக்கொள்ள முடியாத யதார்த்தம்.... :wub:

கேள்விப் பட்டது...

ஒரு பெண் தான் மலடு இல்லை என்பதற்கு அடையாளமாக முதல் பிள்ளையையும், ஒரு ஆண் தனக்கு இன்னும் இளமை இருக்கு என்பதற்கு அடையாளமாகக் கடைசிப் பிள்ளையையும் அன்பு செய்வார்களாம்... இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது...

சிறி அண்ணா நீங்கள் சொன்ன பாடல் இதுவா?

சுஜி , ஒரு குழந்தை பிறக்க முன்பே ...... தாயையோ , தந்தையையோ இழப்பது என்பது எவ்வளவு கொடுமை என்பதி என்னுடன் படித்த பாடசாலை நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன் .

அவர்களின் முகத்தில் எப்போதும் ..... இனம்புரியாத ஏக்கம் ஒன்று குடிகொண்டிருப்பதை அவதானித்துள்ளேன் . அப்படியானவர்களிடம் நான் அதிக அன்பு செலுத்துவேன் .

ஆமாம் தமிழ்சிறி அண்ணா பெரிய ஏக்கம்தான்... அதுவும் நீங்கள் தலைப்பு குடுத்து அப்பாவை பிடிக்குமா அம்மாவை பிடிக்குமா என்று வேறு தலைப்பு குடுத்து இருக்கிறிர்கள்...அப்பாவின் முகமே அறிய பிள்ளையிடம் இந்த கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்லும்... அந்த ஏக்கம்த்தில்தான்ன் கேள்விக்கு சமந்த மில்லாதா விடை குடுத்து சென்று விட்டேன்...ஆனால் திரும்ப இன்று வந்து பார்க்கும்போது கூடுதலான பேர் அப்பாவை பிடிக்கும் எழுதி உள்ளார்கள் எனக்கும் என் அப்பாவை பிடிக்கும் என்று எழுத வேண்டும் போல் இருக்கு ஆனால் முகம் கூட அறிய பிள்ளை என்னத்தை எழுதும்...அதுக்காக என் அம்மா பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை... என் அம்மாவும் எனக்கு பிடிக்கும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இருவரையும் பிடிக்கும்.ஆனாலும் இன்றைய போட்டி,பொறாமை மற்றும் பணம் தான் மனிதனின் முதன்மை நிலையை தீர்மானிக்கும் என்றதொரு நிலை இருக்கும் உலகில் நான் எந்தவித பாதிப்புகளும் இன்றி நானும் சிரித்து இயன்றவரை மற்றவர்களையும் சிரிக்க வைத்து,காசில்லாமலே என்னைச்சுற்றி எப்பவும் ஒரு சிறு கூட்டம் இருக்ககூடியதாக இருக்குது என்றால் அதுக்கு காரனம் எனது அப்பாதான்.இப்ப இருவரும் இல்லை.

சஜீவன் உங்களுடைய அப்பாவின் மூலம் நகைச்சுவையுணர்வு உங்களுக்கு ஏற்பட்டதாக கூறியுள்ளீர்கள் .

எனது அப்பா எப்போதும் சீரியஸ் ரைப் . எப்போதும் கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும் .

படிக்கும் காலத்தில் நான் எங்கு போகின்றேன் , வருகின்றேன் , எப்படிப்பட்ட நண்பர்களுடன் சேருகின்றேன் என்று அறிய ஒரு புலனாய்வுத்துறையே வைத்திருந்தார் .

நல்ல தலைப்பாக இருந்தாலும், இந்தத் தலைப்பை பார்த்ததிலிருந்து சில தினங்களாக எனக்குள்ளேயே ஒரு விதமான மன அழுத்தம்....

ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து வயிற்றுக்குச் சாப்பாடு கொடுப்பதற்க்குத் தாயும், அறிவை வளர்ப்பதர்த்கு தந்தையின் பங்கும் அத்தியாவசியமாகிறது...

பொதுவாக பிள்ளைகளுக்கு பெற்றோரின் அறிவுரைகளையோ, மன நிலைமைகளையோ புரிந்துகொள்ளும் தன்மை குறைவு. பிள்ளைகள் வளர்ந்தது தாயாகவோ, தந்தையாகவோ வரும் போது தான் அந்த உண்மைகளை அனுபவ வாயிலால அறிந்து கொள்ளும் தன்மை உருவாகும்...

எனக்கு அம்மாட அன்பு, அரவணைப்பு, அராத்தல் எல்லாம் பிடிக்கும், ஆனால் ஒரு பிரச்சனை என்று வரும்போது அழுது, குளறி தனது இயலாமையை வெளிப் படுத்துவது பிடிக்காது (பெண்களுக்குரிய குணம் என்றே நினைக்கிறேன்) ஆனால் அதே பிரச்சனைகளுக்கு புத்திசாலித்தனமாகக் கையாளும் முறை அப்பாவிடம் அதிகமாகவே காணப்பட்டது...

குடும்பத்தில் மூத்த குழந்தை ஆணாகவும் கடைசி பெண்ணாக இருந்தால் அவர்களுக்கு என்று ஒரு தனி ஸ்பெஷல்.... இது இரண்டும் எனக்கு இல்லை... சில நேரங்களில் கடுப்பாகி, அம்மாவுடன் எரிஞ்சு விழுந்த அனுபவங்களும் உண்டு... "பெரியவரை என்னத்துக்கு எப்பவும் அம்மா தலையில் தூகிவைச்சுக் கொண்டு இருக்கிறா?" என்று கேட்டால் "அப்படி எல்லாம் இல்லை... அம்மா எல்லாரிலையும் ஒரே அளவு அன்பு தான் வைச்சு இருக்கா," என்று கொடுப்புக்குள் சிரிப்பார்; அப்பா பொதுவாக எல்லாப் பிள்ளைகளுடனும் ஒரே அளவு அன்பும் கண்டிப்பும் காட்டியதாக காண முடிந்தது...

சின்னப் பிள்ளையாக இருக்கும் போது, அம்மா தான் என்ன சொன்னாலும், செய்ய வேணும் என்று எதிர் பார்ப்பா... சில நேரங்களில் கடுப்பாகி அப்பாவிடம் போய் முறையிடுவேன்... முதலில் சமாதானப் படுத்தினாலும், கடைசியில் அம்மா சொன்னதை செய்யச் சொல்லியும் அதன் அவசியத்தையும் விளங்கப் படுத்துவார்... அப்பா சொன்னது விளங்கியதோ இல்லையோ அப்பா சொல்லுறார் என்று செய்வேன். அம்மா எல்லாத்துக்கும் பேசுவா, அடிப்பா...(செய்கிற குழப்படிகளும் அப்படியானது தானே... :lol: ) ஆனால் அப்பாவின் அதிகப் படியான தண்டனை முழங்காலில் இருத்துவது... பேச்சுக்கும், அடிக்கும் தான் பயம்... ஒரே ஒரு முறை அப்பாவிடம் அடிவாங்கியதும் ஞாபகம்...

இரண்டு நாட்களாக வைற்ரோட்டம், வைத்தியரிடம் மருந்து எடுத்தும் நிக்கவில்லை... ஓரிரு நாட்களில் இந்தியாவுக்கு வான்வெளிப் பயணம்... எப்படியாவது குணமாக வேண்டும் என்று அம்மா சொல்லி இருந்தா... என்னை தனியாக விட்டுப் விட்டு எல்லோரும் வெளி அலுவலாகப் போய்விட்டார்கள்... கண்டனத்தையும் எடுத்து வாயில போடாத, வரேக்க சாப்பாடு வாங்கிக் கொண்டு வாரம் என்று சொன்னார்கள்...

நான் தனிய இருக்கேக்க பக்கத்து வீடுக்கார அம்மம்மா மூக்கைத் துளைக்கிற மாதிரி சாப்பாடு தந்தா, திறந்து பார்த்தன் நண்டுப் பிரட்டல்... போனவர்கள் திரும்பினால் எனக்கு ஒன்றும் இருக்காது என்று நினைத்தானோ... இல்லை சாப்பாடு இல்லாமல் இருந்த எனக்கு ஏற்பட்ட ஆவாவோ என்னால சரியாய் சொல்ல முடியவில்லை... :unsure: குமரிமுத்து சிரித்ததுபோல் சிரித்துவிட்டு :) ... குழைத்து சாப்பிடுவிடேன்.

வெளிய போனவர்கள் வரும் போது எனக்கும் சாப்பாடு வாங்கி வந்தார்கள்... நான் சொன்னான் "எனக்கேன் உது... நான் நண்டுக்கறியோட வெட்டிடன்" என்று... சொல்லும் போதே வயிறைத் திரும்பக் கலக்கியது... :huh:

சொல்லுக் கேட்காததாலும், நாவடக்கம் இல்லாததாலும், மருந்து எடுத்தும் சில தினங்களுக்குள் வருத்தம் மாற்றமுடியாமல் போனதால் அப்பா தனது கோபத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் போனதோ என்னவோ... என் முதுகில் ஒரே ஒரு அடி விழுந்தது... அம்மா நெடுக அடிப்பதால் சூடு சுரணை இல்லாமல் போனது ஒரு பக்கம்... ஆனால் அப்பாவிடம் ஒரு அடி வாங்கிடனே என்று மனம் நிறைய கனத்துக் கஷ்டப்பட்டது... அந்த சில தினங்களுக்கு நானோ, அப்பவோ ஒருவரோடு ஒருவர் முகம் குடுத்துக் கதைக்கவே இல்லை... அப்பாவுக்கும் மனம் கஷ்டப் பட்டு இருந்திருக்க வேண்டும், அதனாலோ என்னவோ... இந்தியா வந்தது உறவினர் வீட்டில் தங்கினோம், இரண்டாம் நாள், தானே நண்டுப் பிரட்டல் சமைத்துத் தந்தார்.... அப்படி ஒரு நண்டுப் பிரட்டலை நான் இதுவரைக்கும் சாப்பிட்டதே இல்லை... இனியும் சாப்பிடுவன் என்ற நம்பிக்கையும் போய்விடாது...

அப்பா இங்கு வந்திருந்த போதும் சரி, சமாதான காலத்தில் நான் அங்கு போயிருந்த நேரமும் சரி... அப்பா ஸ்பெஷலாக சமைத்து தருவார்... சாப்பாட்டுக்கு முதல் 1பேக் அடிச்சுப் போட்டுதான் சாப்பிடுவோம்... அம்மாவின் பார்வை சுட்டேரிப்பதைப் போல இருந்தாலும், "கொஞ்சம் எடுக்கிறது பிழை இல்லை" என்று அப்பா சொல்வது, பிள்ளைகளை சமஉரிமையுடன் நடத்துறார் என்று பெருமையாக இருக்கும்! அம்மாவுடன் பல நேரங்களில் சிரித்துக் கதைத்தாலும், சில கருத்து வேறுபாடுகளில் தெறித்துப் போகும்... எனக்கு அம்மாவை பிடிக்கும், இருந்தாலும், ஒரு படி மேல போய் அப்பாவை எனக்கு அதிகம் பிடிக்கும்...

நிலை இல்லா இந்த உலகத்தில் யார் தான் நிலையா இருக்கிறார்கள்??? நாம் யாரில் அதிகம் அன்பு வைத்திருக்கிறோமோ அவர்கள் எம்மிடமிருந்து நிரந்தரமாகப் பிரிவது ஏற்றுக்கொள்ள முடியாத யதார்த்தம்.... :o

கேள்விப் பட்டது...

ஒரு பெண் தான் மலடு இல்லை என்பதற்கு அடையாளமாக முதல் பிள்ளையையும், ஒரு ஆண் தனக்கு இன்னும் இளமை இருக்கு என்பதற்கு அடையாளமாகக் கடைசிப் பிள்ளையையும் அன்பு செய்வார்களாம்... இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது...

சிறி அண்ணா நீங்கள் சொன்ன பாடல் இதுவா?

name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="
type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>">
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடன் தமிழ் சிறி

நன்றி உங்கள் கருத்து.

என் கருத்து:- அம்மா, அப்பா அவர்கள் சொற்கேட்டு நல்ல படி நடந்து, அவர்களுக்கு இளமையிலும், வயோதிபத்திலும் உதவியாக இருந்து இருவரிடத்திலும் நல்மதிப்புபெறுவது, அவர்கள் ஆசீர்வதம் பெற்றால். அது தான் சிறப்பு.

இப்படிக்கு

பென்மன்

அச்சாபிள்ளை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது அப்பா எப்போதும் சீரியஸ் ரைப் . எப்போதும் கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும் .

படிக்கும் காலத்தில் நான் எங்கு போகின்றேன் , வருகின்றேன் , எப்படிப்பட்ட நண்பர்களுடன் சேருகின்றேன் என்று அறிய ஒரு புலனாய்வுத்துறையே வைத்திருந்தார் .

:lol:

சிறி அண்ணா நீங்கள் குறிப்பிட்ட இந்த புலனாய்வுதுறையில் தான் நான் சுமார் ஒரு மூன்று வயதில் இருந்து பத்து வயது வரை சிரேஷ்ட உறுப்பினராக பணியாற்றினேன்! :unsure:

எனது கண்காணிப்பில் இருந்த எத்தினையோ "மூத்தபிள்ளைகளின்" அவல :mellow: நிலையறிந்து பிற்காலத்தில் - "என்ன பிழைப்படா இது!?!" என்று என்னை நானே மாற்றி கொண்டேன்! அதுக்கு பிறகு ஒரு 180 டிகிரி அடிச்சு நானே எல்லாரிட கள்ள வேலையளுக்கும் உடந்தையாகிட்டேன்! :)

என் கருத்து:- அம்மா, அப்பா அவர்கள் சொற்கேட்டு நல்ல படி நடந்து, அவர்களுக்கு இளமையிலும், வயோதிபத்திலும் உதவியாக இருந்து இருவரிடத்திலும் நல்மதிப்புபெறுவது, அவர்கள் ஆசீர்வதம் பெற்றால். அது தான் சிறப்பு.

மன்னிகோணும்... மிக நல்ல கருத்து ஆனால் நடைமுறையில் சரி வருமா?

இப்படி அநியாயத்துக்கு நல்ல மாதிரி இருந்தால் தாய் தகப்பனுக்கே அலுக்காதா?!

என்ட பிள்ளை ஒருவேளை இப்படி இருந்தால் முதல் வேலையாய் ரத்த பரிசோதனைக்கு தான் அனுப்புவேன்... ஏதும் குறைபாடு இருக்கா என்று அறிய! :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலவேளை ..... என்ன இருந்தாலும் கடைசியில் அந்தப்பிள்ளை தானே இறந்தபின்பு எனக்கு கொள்ளி வைக்கப் போகின்ற பிள்ளை என்ற ஒருவித ஆசையோ தெரியாது . இந்த கூற்று கொஞ்சம் விசனத்தை ஏற்படுத்தினாலும் ........ ஊரில் பலர் சொல்ல நான் கேட்டுள்ளேன் .

:unsure:

கொள்ளி வைக்க போறவனில ஏன் இவளவு ஆசையாம் தமிழ் பெற்றோருக்கு....??

உயிரோட இருக்கேக்கையே - அயர்த்து மறந்து நித்தா கொள்ளேக்க - அவன் கொள்ளி வச்சிர கூடாது என்று தாஜா பண்ணி வைக்கினமோ?!!:unsure:

சொல்ல ஏலாது..... :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிகோணும்... மிக நல்ல கருத்து ஆனால் நடைமுறையில் சரி வருமா?

இப்படி அநியாயத்துக்கு நல்ல மாதிரி இருந்தால் தாய் தகப்பனுக்கே அலுக்காதா?!

என்ட பிள்ளை ஒருவேளை இப்படி இருந்தால் முதல் வேலையாய் ரத்த பரிசோதனைக்கு தான் அனுப்புவேன்... ஏதும் குறைபாடு இருக்கா என்று அறிய! :mellow:

உண்மையிலேயே நீங்கள் ஒரு யதார்த்தவாதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் தமிழ் சிறி

நன்றி உங்கள் கருத்து.

என் கருத்து:- அம்மா, அப்பா அவர்கள் சொற்கேட்டு நல்ல படி நடந்து, அவர்களுக்கு இளமையிலும், வயோதிபத்திலும் உதவியாக இருந்து இருவரிடத்திலும் நல்மதிப்புபெறுவது, அவர்கள் ஆசீர்வதம் பெற்றால். அது தான் சிறப்பு.

இப்படிக்கு

பென்மன்

அன்பின் பென்மன் ,

நீங்கள் சொன்ன கருத்து நல்ல கருத்து . ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறி .

எல்லா இளைஞர்களுக்கும் இருபது வயதுக்குள் வருகின்ற வாலிபக்குறும்பு அவர்களின் இரத்தத்தில் கலந்துள்ளதே .......

அவர்கள் செய்த குறும்புகளை நினைத்து திருந்தும் போது இளமைகாலம் முடிந்திருக்கும்.

அதற்கு பரிகாரமாக வயது வந்த பெற்றோரை எமது குழந்தைகள் போல் பார்ப்பது தான் அதற்கு பரிகாரமாக இருக்கும் .

:)

சிறி அண்ணா நீங்கள் குறிப்பிட்ட இந்த புலனாய்வுதுறையில் தான் நான் சுமார் ஒரு மூன்று வயதில் இருந்து பத்து வயது வரை சிரேஷ்ட உறுப்பினராக பணியாற்றினேன்! :unsure:

எனது கண்காணிப்பில் இருந்த எத்தினையோ "மூத்தபிள்ளைகளின்" அவல :unsure: நிலையறிந்து பிற்காலத்தில் - "என்ன பிழைப்படா இது!?!" என்று என்னை நானே மாற்றி கொண்டேன்! அதுக்கு பிறகு ஒரு 180 டிகிரி அடிச்சு நானே எல்லாரிட கள்ள வேலையளுக்கும் உடந்தையாகிட்டேன்! :)

-----

இளையபிள்ளை சரியாச்சொன்னீங்கள் , அப்பாவின் புலனாய்வுத்துறையில் மூன்றுவயது குழந்தைகளிலிருந்து பென்சன் எடுத்த எழுபத்தி ஐந்து வயது குழந்தைகள் வரை இருந்தார்கள் . :lol:

அந்த சின்ன வட்டன்கள் , நான் போகும் எல்லாஇடமும் சரியான செய்திகளை சேகரித்து ..... :lol: நான் வீட்டிற்கு வர முன்னம் செய்திகளை கொடுத்து விட்டு தலைமறைவாகி விடுவார்கள் . :D

அப்பாவுக்கு இது எல்லாம் உடனுக்குடன் எப்படி தெரியும் என்று கண்டுபிடிக்கவே ..... எனக்கு கன காலம் எடுத்தது . :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பின் பென்மன் ,

நீங்கள் சொன்ன கருத்து நல்ல கருத்து . ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறி .

எல்லா இளைஞர்களுக்கும் இருபது வயதுக்குள் வருகின்ற வாலிபக்குறும்பு அவர்களின் இரத்தத்தில் கலந்துள்ளதே .......

அவர்கள் செய்த குறும்புகளை நினைத்து திருந்தும் போது இளமைகாலம் முடிந்திருக்கும்.

அதற்கு பரிகாரமாக வயது வந்த பெற்றோரை எமது குழந்தைகள் போல் பார்ப்பது தான் அதற்கு பரிகாரமாக இருக்கும் .

இளையபிள்ளை சரியாச்சொன்னீங்கள் , அப்பாவின் புலனாய்வுத்துறையில் மூன்றுவயது குழந்தைகளிலிருந்து பென்சன் எடுத்த எழுபத்தி ஐந்து வயது குழந்தைகள் வரை இருந்தார்கள் . :unsure:

அந்த சின்ன வட்டன்கள் , நான் போகும் எல்லாஇடமும் சரியான செய்திகளை சேகரித்து ..... :lol: நான் வீட்டிற்கு வர முன்னம் செய்திகளை கொடுத்து விட்டு தலைமறைவாகி விடுவார்கள் . :lol:

அப்பாவுக்கு இது எல்லாம் உடனுக்குடன் எப்படி தெரியும் என்று கண்டுபிடிக்கவே ..... எனக்கு கன காலம் எடுத்தது . :unsure:

:mellow::) உங்க அப்பாவை ஏதாவது ஒரு புலனாய்வு அமைப்பில் சேர்த்திருக்கலாம். இல்லை அப்படி தான் இருந்தாரா? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஜீவா ஒராமாண்டு பிள்ளையால் மாதிரி அப்பா சொக்கா வாங்கி தாறவர் அதால பிடிக்கும் என்று சொல்லுறிங்கள் :mellow:

:unsure: :unsure:

சுப்ஸ் நான் நினைக்கிறேன் ஒரு பெண்ணிடம்..சீ..அம்மாவிடம் இருந்து அன்பு கிடைக்கிறது அதிகம்,சகஜம் அதே நேரம் ஒரு ஆண் அவ்வளவு சீக்கிரம் அன்பை காட்டுவாங்களா என்பது தெரியலை.

அதைவிட எனக்கு அப்பாவை ரொம்ப பிடிக்க காரணம் என் மச்சான் ஒருத்தன் 28 வயதிலை விபத்து ஒன்றிலை இறந்திட்டான் அங்கை உண்மையிலையே நான் அழுது மூச்சு அடக்கிற மாதிரி வந்திட்டுது.

அப்பாவும் வந்தவர் உடனை எல்லாம் எனக்கு நெஞ்சை எல்லாம் பிடிச்சு விட்டு எல்லாம் செய்திட்டு சொன்னார். நான் இறந்தால் கூட என்ரை பிள்ளைகள் அழக்கூடாது என்று.

எனக்கு அப்பாவை எந்தளவுக்கு பிடிக்கும் என்று சொல்ல வார்த்தையே இல்லை. அதுக்காக அப்பாவுடன் சண்டை போடாமல் இருந்ததும் இல்லை இப்ப கூட போன் பண்ணும் போது அப்பா,அம்மா கூட சண்டை பிடிக்காமல்

போன் வைச்சதில்லை. அம்மாவையும் பிடிக்கும் ஆனால் அம்மா எல்லாத்திலையும் நுணுக்கம் பார்ப்பா. அப்பா எது செய்தாலும் எங்க விருப்பத்துக்கு விட்டு விடுவா.

சஜீவன் உங்களுடைய அப்பாவின் மூலம் நகைச்சுவையுணர்வு உங்களுக்கு ஏற்பட்டதாக கூறியுள்ளீர்கள் .

எனது அப்பா எப்போதும் சீரியஸ் ரைப் . எப்போதும் கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும் .

படிக்கும் காலத்தில் நான் எங்கு போகின்றேன் , வருகின்றேன் , எப்படிப்பட்ட நண்பர்களுடன் சேருகின்றேன் என்று அறிய ஒரு புலனாய்வுத்துறையே வைத்திருந்தார் .

ஓம் குட்டி .... மூத்த பிள்ளையிலும் , கடைசிப்பிள்ளையிலும் அதிக பாசம் செலுத்துவதை அநேக தமிழ் குடும்பங்களில்களில் அவதானித்துள்ளேன் .

இது மற்றைய இனத்தவர்களில் இல்லை என்றே நினைக்கின்றேன் . சிலவேளை ..... என்ன இருந்தாலும் கடைசியில் அந்தப்பிள்ளை தானே இறந்தபின்பு எனக்கு கொள்ளி வைக்கப் போகின்ற பிள்ளை என்ற ஒருவித ஆசையோ தெரியாது . இந்த கூற்று கொஞ்சம் விசனத்தை ஏற்படுத்தினாலும் ........ ஊரில் பலர் சொல்ல நான் கேட்டுள்ளேன் .

உங்களுடைய நிலைமையில் நானும் சுகமில்லாமல் இருந்து ....... அடுத்த நாள் இந்தியாவுக்கு பயணமாக இருந்திருந்தாலும் ........

பக்கத்துவீட்டு அம்மம்மா செய்து தந்த நண்டுக்கறிக்கே நான் முக்கியத்துவம் கொடுத்திருப்பேன் . :unsure:

அது என்ன குமரி முத்துசிரிப்பு ?

ஓம் குட்டி நான் தேடிய பாடல் இது தான் . எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று .

இந்து முறைப் படி நீங்கள் சொல்வது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம் என்று வைத்தாலும், மற்றைய மதங்களைச் சார்ந்த பிள்ளைக்கும் இந்தக் கூற்று பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறதே??? பொதுவாக தமிழ் பெற்றோர்களிடையே இந்த முறை பெரிதளவில் காணக் கூடியதாக இருக்கிறது என்பதே எனது அபிப்பிராயம்....(இது பிழையாகக் கூட இருக்கலாம்... :mellow: )

குமரிமுத்துவின் சிரிப்பை எப்படி என்று கேட்டல், நான் எப்படி இங்க வெளிப் படுத்துவேன்....??

இந்த வீடியோ கிளிப்பில் 03-05 வினாடிகளுக்குள் அந்த smiley-laughing024.gif வருகிறது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையிலேயே நீங்கள் ஒரு யதார்த்தவாதி.

Sabesh, நீங்கள் சொல்வது சரியென்றால் - இதுக்கு பதில் சொல்லுங்கோ :unsure: :

யதார்த்தவாதிக்கு :mellow: சாப்பிட வேற சாப்பாடு இருந்தும் முரல் மீன் சொதியும், நெத்தலி பொரியலும் மட்டும் பசிக்குமா?? :unsure:

எனக்கு அது தான் பசிக்குதே இப்ப!!!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Sabesh, நீங்கள் சொல்வது சரியென்றால் - இதுக்கு பதில் சொல்லுங்கோ :) :

யதார்த்தவாதிக்கு :rolleyes: சாப்பிட வேற சாப்பாடு இருந்தும் முரல் மீன் சொதியும், நெத்தலி பொரியலும் மட்டும் பசிக்குமா?? :lol:

எனக்கு அது தான் பசிக்குதே இப்ப!!!! :(

முரல் மீன் சொதியும், நெத்தலிப் பொரியலும் செய்யுறதுக்கு தேவையான எல்லாம், சமைக்கிறதுக்கு ஆளும் தான், இருந்து, உங்களுக்கும் அது மட்டும் பசித்தால், நீங்கள் யதார்த்தவாதிதான். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes::lol: உங்க அப்பாவை ஏதாவது ஒரு புலனாய்வு அமைப்பில் சேர்த்திருக்கலாம். இல்லை அப்படி தான் இருந்தாரா? :D

சேர்த்திருக்கலாம் தான் ...... emoticon-tv-002.gifஆனால் தந்தைக்கு உபதேசம் பண்ணுகிற அளவு தைரியம் எனக்கு இருக்கவில்லையே ...... ஜீவா . :)

------

குமரிமுத்துவின் சிரிப்பை எப்படி என்று கேட்டல், நான் எப்படி இங்க வெளிப் படுத்துவேன்....??

இந்த வீடியோ கிளிப்பில் 03-05 வினாடிகளுக்குள் அந்த smiley-laughing024.gif வருகிறது...

குட்டி உங்களுடைய வருத்தத்தோடை அந்த நண்டுப்பிரட்டலை , smiley-laughing001.gifகுமரிமுத்து சிரிப்பு சிரித்து விட்டு சாப்பிட்டதை நினைக்க சிரிப்பாயிருக்கு.smiley-laughing013.gif

Sabesh, நீங்கள் சொல்வது சரியென்றால் - இதுக்கு பதில் சொல்லுங்கோ :) :

யதார்த்தவாதிக்கு :lol: சாப்பிட வேற சாப்பாடு இருந்தும் முரல் மீன் சொதியும், நெத்தலி பொரியலும் மட்டும் பசிக்குமா?? :(

எனக்கு அது தான் பசிக்குதே இப்ப!!!! :(

இது என்ன இளையபிள்ளை ....... ஒரு நாளைக்கு கொத்து ரொட்டி smiley-eatdrink020.gif ,இன்னும் ஒரு நாளைக்கு முரல் மீனும் சொதியும்smiley-eatdrink022.gif , நெத்தலிப் பொரியலும் என்று......smiley-eatdrink023.gif

பெரிய பிளானோடை தான் வீட்டை வருவீங்களோ ........ smiley-happy006.gif

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.