Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதற்காகவா இத்தனை இழப்புகளும்?கொடியவரே உங்கள் கோபம் தணிந்ததா?

Featured Replies

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தில் கடந்த செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க-

“விடுதலைப் புலிகள் புதிய தலைமையின் கீழ் ஒன்றிணைய முனைகின்றனர். அவர்கள் எந்த வடிவத்தில் தலையெடுக்க முயன்றாலும் வேரோடு அழிக்கப்படுவர்” என்று கூறியிருந்தார்.

அவர் இந்தக் கருத்தை தெரிவித்து 24 மணிநேரம் முடிவதற்கு முன்னரே- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலரான செல்வராசா பத்மநாதன் (கே.பி) மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகத் தகவல்.

கே.பி அவர்கள் கைது செய்யப்பட்ட முறையும், அவர் கைது செய்யப்பட்டிருக்கும் காலமும்- இலங்கை புலனாய்வுத்துறையின் திறமையால் மட்டும் இது சாத்தியப்படவில்லை என்பதை உறுதி செய்கின்றன.

உள்ளிருந்தே கொல்லும் வியாதி படைத்தவர்களே இதற்குத் துணை போயிருப்பதாக தமிழ் மக்கள் பலரும் நம்புகின்றனர். உண்மைகளின் உயிர் நாடி என்று ஆய்வு செய்து ஆய்வு செய்து துரோகம் புரிந்தவரின் செயல்களும் இக் கைதுக்கு துணை புரிந்ததாகவே ஆதங்கப்படுபவரும் உண்டு

மலேசியாவில் வைத்துக் கடத்தப்பட்ட கே.பி அவர்கள் தாய்லாந்து வழியாக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதும்- அங்கு இடம்பெறும் விசாரணைகளும், புலிகள் இயக்கத்தை வேரோடு கருவறுக்கும் நோக்கத்தை மட்டும் கொண்டதல்ல.

புலிகளுக்கு இதுவரையும் முண்டு கொடுத்தவர்கள், உதவியோர் பற்றிய தகவல்களைக் கறந்து அவர்களின் மூலங்களையும் தேடியழிப்பது தான் சிங்கள அரசின் திட்டம்.

கே.பி அவர்களை கைது செய்திருக்கும் இலங்கை அரசு அடுத்த கட்டமாகப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்கள் மீது கை வைக்கலாம் என்ற பரவலான கருத்து உருவாகத் தொடங்கி விட்டது. இதை இலங்கை இராணுவப் பேச்சாளர் உறுதி செய்துமுள்ளார்

இஸ்ரேலின் மொசாட் உளவுப்பிரிவு தான் இதுபோன்ற காரியங்களை துணிந்து மேற்கொண்டது.

ஆசியாவின் மற்றொரு இஸ்ரேலாக- இலங்கை வளர்ந்திருப்பதாக சிங்களதேசம் குதூகலிக்கிறது.

இதிலிருந்து கே.பியைப் போன்று மேலும் பலரைக் கடத்தி கொழும்புக்குக் கொண்டு செல்லும் எண்ணம்- சிங்கள அரசுக்கு இருப்பது தெளிவாகிறது.

இலங்கை அரசு வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளின் துணையுடன் தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக, அவற்றுக்கு

நன்றி கூறியிருக்கிறது. ஆனால் அரசாங்கம் வெளிப்படையாக நன்றி கூறாத தரப்பு ஒன்றும் இருக்கலாம்.

கே.பிக்கு எதிரானவர்கள் இவரது இருப்பிடம் பற்றிய தகவல்களை இலங்கையின்புலனாய்வுஅமைப்பு

ஒரு கட்டுக்கோப்பான இராணுவ அமைப்பாக உலகெங்கும் அறியப்பட்ட- புகழப்பட்ட புலிகள் இயக்கத்துக்குள் இப்படியெல்லாம் நடக்கும் என்று சில மாதங்களுக்கு முன்னர் எவரும் கற்பனை கூடச் செய்திருக்க முடியாது.

ஆனால் முள்ளிவாய்க்கால் இறுதிச் சமருக்குப் பின்னர் எல்லாமே தலைகீழாகியிருக்கின்றன.

:icon_idea:

நீங்கள் ஒன்றுபடுன்கோடா என்று சொன்னதிலேயே பிழை பிடிக்க இப்ப வெளிக்கிடுவாங்கள்

இவங்களுக்கு விடுதலை ஒரு கேடா?

முடிந்தளவுக்கு முகாம்களில் இருக்கும் சனம் வெளில வந்தாலே போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளிருந்தே கொல்லும் வியாதி படைத்தவர்களே இதற்குத் துணை போயிருப்பதாக தமிழ் மக்கள் பலரும் நம்புகின்றனர். உண்மைகளின் உயிர் நாடி என்று ஆய்வு செய்து ஆய்வு செய்து துரோகம் புரிந்தவரின் செயல்களும் இக் கைதுக்கு துணை புரிந்ததாகவே ஆதங்கப்படுபவரும் உண்டு

இதன் மூலம் அமைப்புக்குள் பிரிவினையை உருவாக்கும் மேலதிக நயவஞ்சகத்தைக் கட்டுரையாளர் செய்கின்றார். இதை்த தான் சிங்கள தேசமும் விரும்புகின்றது.

அதன் மூலம் திரும்பவும் பிரிவினைகளை உருவாக்கி மற்றவர்களையும் பிடிக்கவே முயற்சிக்கக்கூடும். அந்த வஞ்கத்தில், இந்தக் கட்டுரையாளரும் வஞ்சப் புகழ்ச்சி செய்கின்றார்.

கேபி நயவஞ்சகமாகக் கடத்தப்பட்டது, உண்மையில் வேதனையான விடயம். 60 வயது தாண்டிய முதியவர் அவர். ஆனால் தன்னுடைய அடையாளங்களைக் காட்ட வேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டதால் தான் இந்த துன்பமான விளைவு வந்தது. அது தலைவர் கைவிட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து செயற்படுத்த, எவருமில்லாத நிலையால் தான் அப்படி ஆனது.

ஒரு விடயம் என்பது உண்மை... சிறிலங்கா அரசு எனி வரும் காலங்களில் நம்பகத்தன்மையுள்ள குழப்பமான கதைகளை வெளியிடுவதன் மூலம், தன்னுடைய பொறியை விரிவாக்க முயலும். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். உங்களுக்கு இணையம் ஓட வேண்டும் என்றால், நக்கமாவையும், நயந்தாராவையும் பற்றிக் கிளுகிளுப்பாக எழுதி ஓட வையுங்கள்.

பெரிய புடுங்கிகள் மாதிரிச் சிங்கள அரசு சொல்லுகின்ற சொல்லுக்கு அர்த்தம் கற்பிக்காதீர்கள்.

எல்லாப் பு... களும் இப்படி லூசுத்தனமான ஆராய்வுகளை நிறுத்தி ஆராய்வாளர்கள் ஆகுவதை விட்டுப்போட்டு, ஏதாவது தொடர்ச்சியாகக் செய்யலாமோ பாருங்கள்...

நல்லா சொன்னீங்கள் தூயவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.