Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மக்கள் சுதந்திரம் பெறட்டும்!

Featured Replies

அப்பொழுது இரண்டாம் உலகப் போர் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. உலகின் பேரரசாக விளங்கிய பிரித்தானியா கடும் சேதங்களை சந்தித்துக் கொண்டிருந்தது. உலகின் பல முனைகளிலும் நடந்து கொண்டிருந்த போரை எதிர்கொள்வதற்கு பெரும் ஆட்பலம் பிரித்தானியாவிற்கு தேவைப்பட்டது. தன்னுடைய காலனித்துவ நாடுகளில் இருந்து படைக்கு தேவையான ஆட்களை பிரித்தானியா பெற வேண்டி வந்தது.

அதே நேரம் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள மக்களிடம் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என்கின்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. உலகப் போரில் தமக்கு ஆதரவு அளித்தால் இந்தியாவுக்கு “டொமினியன்” அந்தஸ்து அளிப்பதாக ஆங்கிலேய அரசு கூறியது. பெரும் மத, இன, சாதிக் கலவரங்கள் நிறைந்த இந்தியாவை இனியும் கட்டி மேய்க்க முடியாது என்பது ஆங்கிலேய அரசுக்கு புரிந்திருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருந்தது.

(டொமினியன் அந்தஸ்து என்பது குறிப்பிட்ட நாடு சுயாட்சியை பெற்றாலும் அந்த நாட்டின் பெயரளவிலான மன்னராக இங்கிலாந்து மன்னரே இருப்பார் என்பதாகும்)

இந்தியர்களைக் கொண்ட ஒரு பெரும் இராணுவத்தை பிரித்தானியா உருவாக்கியது. ஏறக்குறைய இரண்டரை மில்லியன் பேர் அந்தப் படையில் இருந்தார்கள். உலகப் போரில் பல சாதனைகளை இந்திய இராணுவம் நிகழ்த்தியது. இந்திய இராணுவத்தின் வீரதீரச் செயல்களுக்காக பெரும் மதிப்பு மிக்க 30 விக்டோரியாப் பதக்கங்கள் கிடைத்தன.

இதே வேளை எதிரிகளால் கைது செய்யப்பட்ட இந்தியப் படையினரைக் கொண்டு “இந்திய தேசிய இராணுத்தை” உருவாக்கி இந்தியாவை விடுதலை பெற வைப்பதற்கு சுபாஸ் சந்திர போஸ் முயன்றார்.

பிரித்தானியாவை பெரும் சேதத்திற்கு உள்ளாகிய இரண்டாம் உலகப் போர், இதில் இங்கிலாந்திற்காக பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் உயிர்தியாகம் செய்து நடத்திய போர்கள், சுபாஸ் சந்திர போஸ் நடத்திய போர்கள், உள்நாட்டில் நடைபெற்ற ஆங்கிலேயர்களுக்கு எதிரான போர்கள், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் நடந்த போர்கள்.. இப்படியாக நடைபெற்ற பல போர்களும் உயிர்த் தியாகங்களும் இந்தியாவிற்கு 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15இல் டொமினியன் அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தன.

1947ஆம் ஆண்டு சுதந்திரச் சட்டத்தின்படி இந்தியர்களை ஆளும் உரிமை இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. ஆயினும் இங்கிலாந்து மன்னரின் பிரதிநிதியாக அதிகாரம் அற்ற ஒரு ஆளுனர் நியமிக்கப்பட்டிருந்தார். பெயரளவில் இந்தியாவின் மன்னராக பிரித்தானிய அரசரே தொடர்ந்தும் இருப்பது போன்று இது அமைந்தது. இந்தியாவிற்கு என்று தனியான ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர், 1950ஆம் ஆண்டு இந்தியா முற்று முழுதான குடியரசு நாடாக மாறியது.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக சொல்லிக் கொண்டாலும் இந்திய மக்கள் அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள். தாழ்த்தப்பட்ட மக்களும், பல தேசிய இன மக்களும் சுதந்திரம் அற்ற நிலையில் வாழ்கிறார்கள்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அம்பேத்கர் தனித் தொகுதி கேட்டார். ஆங்கிலேய அரசு சம்மதித்தது. இஸ்லாமிய மக்களுக்கு தனித் தொகுதி வழங்குவதற்கு எதிர்ப்புக் காட்டாத மோகன்தாஸ் கரம்சந் காந்தி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதி வழங்குவதை கடுமையாக எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதி வழங்கப்படக் கூடாது என்று சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதி வழங்கினால், அது அவர்களை பிரித்து வைப்பது போலாகும் என்று காந்தி ஒரு வேடிக்கையான விளக்கத்தையும் சொன்னார். பிரித்து வைக்கப்பட்டதால் ஏற்பட்ட இழிவுகளில் இருந்து மீட்சி பெறவே தனித் தொகுதி கேட்கப்படுகிறது என்பது காந்திக்கு புரியவில்லை. அல்லது புரியாதது போல் நடித்தார்.

காந்தி உண்ணாவிரதத்தை தொடர்ந்ததால் அம்பேத்கர் மீது அழுத்தம் அதிகரித்தது. இந்தியா முழுவதும் உள்ள தலைவர்கள் காந்தியைக் காப்பற்றும்படி அம்பேத்கரை கேட்டனர். தந்தை பெரியார் ஒருவர்தான் தனித் தொகுதி கோரிக்கையை கைவிட வேண்டாம் என்று அம்பேத்கரிடம் சொன்னார். ஆயினும் பல இடங்களில் இருந்து அழுத்தங்கள் தொடர்ந்ததால் அம்பேத்கர் தனித் தொகுதிக் கோரிக்கையை கைவிட்டார்.

இன்று வரை தொடரும் இது போன்ற மேலாதிக்க சதிகளால் தாழ்த்தப்பட்ட மக்கள் சுதந்திரம் அற்ற மக்களாகவே தொடர்ந்தும் இருக்கிறார்கள்.

1942இல் ஆங்கிலேய அரசின் பிரதிநிதியாக இருந்த கிரிப்ஸ் என்பவரால் ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. உலகப் போரில் இந்தியர்கள் இங்கிலாந்திற்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட நிலையில் கைமாறாக இந்தத் திட்டத்தை கிரிப்ஸ் கொண்டு வந்தார். போர் முடிந்ததும் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து கொடுக்கப்படும் என்பதே அத் திட்டம். ஆனால் காந்தி இதை நிராகரித்தார்.

கிரிப்ஸின் திட்டத்தில் இந்தியாவின் அரசியல் அமைப்பை ஏற்காத மாகாணங்கள் பிரிந்து தனியரசை அமைக்கலாம் என்று ஒரு அம்சம் இருந்ததே காந்தி இதை நிராகரித்ததற்கு காரணம். இதையடுத்து “வெள்ளையனே வெளியேறு” என்னும் இயக்கத்தை காந்தி ஆரம்பித்தார்.

கிரிப்ஸின் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்

சபேசன்,

உங்களது இந்தப் பதிவை வைத்து எனது ஒரு பொதுவான அபிப்பிராயத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு முதலில் மன்னிக்கவும். உங்களின் இந்தப் பதிவு எனது அவதானிப்பைப் பகிர நல்லதொரு உதாரணம் என்று கருதுவதால் இப்பின்னூட்டத்தை இங்கு இடுகின்றேன்.

இப்பதிவில், நீங்கள் அடிப்படையில் கூறுகின்ற விடயமான “இந்தியத் தலைவர்கள் ஈழத்தமிழர் பற்றி இனி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை” என்ற ஆக்ரோசமான கருத்தோடு சேர்த்து, "பெரியார் தூரதரிசனப் பார்வையைக் கொண்டிருந்தவர்" என்ற உங்களின் விசுவாசம் நிறைந்த ஒரு கருத்தையும் நீங்கள் இங்கு பேசி விட முயன்றுள்ளீர்கள் என்றே எனக்குப் படுகிறது. இதை நான் விமர்சிக்கவோ, தவறு என்று கூறவோ இங்கு துளியளவும் முயலவில்லை. உங்களுடன் பெரியாரிசம் பற்றிச் சண்டை பிடிக்கும் எண்ணமோ, சக்தியோ, ஆர்வமோ, உந்துதலோ என்னிடம் இல்லை. அப்படியாயின், நீங்கள் பெரியார் பற்றிக் கூறியதை "முட்டையில் மயிர் புடுங்குவது" போல் ஏன் இங்கு நான் குறிப்பிடுகிறேன் என்பதைக் கீளே விளக்க முயலுகிறேன்.

இன்றைய காலப்பகுதியில், புலம்பெயர் தமிழர் அளவிற்கு உலகில் வேறெங்கேனும் இத்தனை குளப்பகரமான மனநிலையில் வேறு எவரேனும் இருக்கமுடியாது என்று நாம் நினைக்கத் தோன்றும் அளவிற்கு நாம் குளம்பிப்போயுள்ளோம். தாயகத்தில் உள்ள மக்கள் பொதுவில் எங்களை “பொத்திக் கொண்டிருங்கள்” என்று சொல்லாமல் சொல்லுகின்றனர். எமக்குள்ளோ, நாய்கடி பூனை கடியாக ஏதேதோ புடுங்குப்பாடுகளும் குடுமி பிடி சண்டைகளும் நடந்தபடியே உள்ளன. ஊரில் உள்ளவர்களிற்கு, எல்லாமே கவலைகரமாக உள்ளபோதும், அவர்கள் வேர் பாய்ச்சி ;வாழும் அவ்களது பாரம்பரிய சூழல் உள்ளார அவர்களிற்குத் துணைக்கு நிற்கிறது. எம்மில் பலரிற்கோ, நங்கூரத்தை அங்கு பாய்ச்சி விட்டு, போராட்டம் என்ற உரத்தை நம்பி புது அடையாளங்களில் இங்கு திமிராய்த் திரிந்தநிலை, புலிகளோடு இல்லாது போயுள்ளது. இன்று, அடையாளம் பற்றிய பல குளப்பங்கள் பலரிற்குப் பிரச்சினையாகியுள்ளது. ஆனால் நாங்கள் எமது குளப்பங்கள் பற்றி ஆக்கபூர்வமாக எதையும் செய்ய முடியாதவர்களாக, சமூகம் என்ற பாதுகாப்பு வலை அற்றவர்களாக, நங்கூரம் அறுந்தவர்களாகவே காணப்படுகின்றோம். எங்களின் உளநிலை தாயத்தில் உள்ளவர்களிற்கோ, இந்தியாவில் உள்ளவர்களிற்கோ புரியாது. எனவே, பதின்ம வயதுப் பிள்ளைகள் எடுத்ததெற்கெல்லாம் றெபல் பண்ணுவதைப் போல, நாங்களும் கோபத்தை போதைப் பொருளாகப் பாவிக்கத் தொடங்கியுள்ளோம்.

எங்களைத் தவிர மற்றைய எல்லோரையும் நாங்கள் விமர்சிக்கிறோம். சிங்களவனிலும் உலகத்திலும் உள்ள ஆத்திரத்தை எங்களது முகங்களில் மாறி மாறி அறைந்து நாங்கள் தீர்த்துக் கொள்ள முயல்கிறோம். ஆரை எல்லாம் திட்டலாம் என்று தேடித்தேடித் திட்டுகிறோம். இத்தகைய திட்டல்களும் சண்டைகளும் எமது உளநிலையின் negative வெளிப்பாடுகளாக இருக்கையில், positive வெளிப்பாடுகளில் ஒன்றாக “தோற்றுப் போன” எமது போராட்டம் என்ற தளத்திற்குப் பிரதியீடு செய்யப்படக்கூடிய இதர நம்பிக்கைத் தளங்களைத் நாங்கள் தேடுகின்றோம். நானறிந்தவர்களில் இவ்வாறான நம்பிக்கைத் தளங்களாக நான் அடையாளப் படுத்திக் கொண்டவற்றுள் சிலவாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்:

1) இனி அதி உச்சப் பணக்காரன் ஆவது மட்டுமே எனது குறி. பணம் பற்றி மட்டுமே இனி நான் சிந்திப்பேன். பணத்தால் என்னை நிறைக்கும் அளவு நான் பணம் சேர்ப்பேன். நான் இனி குபேரன்.

2) நான் இப்போது ஒவ்வொரு நாளும் குடிக்கிறேன். நல்ல மதுவை விபரம் அறிந்து விலையுயர்ந்த விடுதிகளில் விற்பன்னர்களுடன் சேர்ந்து குடிக்கிறேன். அதற்காகவம் உழைக்கிறேன் படிக்கிறேன். திராட்சை பற்றி ஆழ்ந்து ஆராய்கிறேன். இவ்வாறான ஆர்வமுடையவர்களோடு விபரங்களைப் பற்றிப் பேசுகிறேன் விவாதிக்கிறேன் படித்துக் கொள்கிறேன். நான் இனி ஒரு “வைன் கானசூவர்” (connoisseur)

3) பாவ புண்ணியங்கள் பற்றி அதிகம் நான் சிந்திக்கிறேன். சமயத்தில் சொல்லப்பட்டவற்றை ஆழ்ந்து பரிசீலிக்கிறேன். சில சமயங்களில் எனது மூளையை முடக்கி நம்பிக்கை மட்டும் கொள்ள முயல்கிறேன். ஆண்டவனை ஆழ்ந்து தேடுகிறேன். நான் இனி ஒரு ஆழ்ந்த பக்தன்.

4) நான் இப்போது ஒரு குருவினை அடையாளங் கண்டுகொண்டேன். அம்மகான் எப்பேர்ப்பட்டவர் என்று ஒவ்வொரு கணமும் பூரித்துப் போகின்றேன். நான் இனி ஒரு ஆழ்ந்த சீடன்.

5) கல்வியை இப்போது நான் அறிந்து கொள்ளவதற்காகப் படிக்கத் தொடங்கியுள்ளேன். கல்வியில் நான் கரை காண்பேன். நான் இனி ஒரு கல்விமான்..

6) உலகில் அனைத்து மக்களையும் இப்போது நான் என் மக்களாய்ப் பார்க்கத் தொடங்கியுள்ளேன். எனது இருதயத்திற்கு நெருக்கமான பல வாழ்வாதாரப் போராட்டங்களை நான் புதிதாய்ப் பார்க்கிறேன். இனி நான் இனி ஒரு உலகளாவிய போராளி.

7)மரங்களை, பூக்களைக், கனிகளை நான் ஆழ்ந்து பார்கத்தொடங்கியுள்ளேன். நான் இனி ஒரு தோட்டக் காரன்.

இவ்வாறு "சின்னவனாய் நானிருந்து பெரியவனாய் ஆகும் போது என்னவாக நானிருப்பேன் என்னவாக நானிருப்பேன்" என்ற மழலைப் பாடலைப் போல் இன்று எமது நிலை.

மேலே பட்டியலிடப்பட்டவை, மிகச் சிலவே. பட்டியல் முடிவற்றது. இந்தப் பட்டியலிற்குட்பட்டதாகவே நான் பெரியாரிஸ்டுக்களையும் பார்க்கிறேன். உங்களது பதிவில் நீங்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களை நோக்கிக் காட்டும் கோபத்தையும் பெரியாரை நோக்கிக் காட்டும் கனிவையும், மேலே குறிப்பிட்பட்டது போன்ற negative/positive வெளிப்பாடுகளாகவே நான் பார்க்கின்றேன்.இவை அனைத்துமே ஆரொக்கியமானவையே. எமது உள்ளத்திற்கான சுகாதாரத்தை நாம் தான் காத்துக்கொள்ளவேண்டும். எனவே மற்றையவர்கள் எதைச் செய்யலாம் செய்யக்கூடாது என்ற சிந்தனைகளிலும் பார்க்க, அவ்வாறான உரைகளிலும் பார்க்க, நாம் என்ன செய்யலாம் என்ற எமது தேடல் எமக்கு ஆரொக்கியமாய் இருக்கும் என்பது என்னுடைய அபிப்பிராயம்.

இன்னொருவன் அண்ணை,

உது நீங்கள் புலம்பெயர்ந்தவையின்டை தீர்மாணங்களைத்தான் புட்டுப் புட்டு வைச்சிருக்கிறியல்.

நானும் சில தீர்மாணங்களை எடுத்திருக்கிறன்,

1) புதினம், சங்கதி, யாழ் வாசிகிறதில்லை (உடனடியா ஏலாம இருக்குது) ரூபவாகினியும், டெய்லிமிரர் போன்ற அரசாங்கம் மக்களுக்கு செய்கிற நன்மைகளை (மட்டும்) சொல்லுற ஊடகங்களை பார்த்து ஒரு உண்மையான அரசாங்க ஆதரவாளனா மாறுவதற்கு முயற்சி செய்கிறது.

2) கோலிவுட், கிறிக்கட் என்று மிக முக்கியமான, சகல மட்டங்களிலும் மிகவும் மதிக்கப்படுகிற விடையங்களில என்ற ஆர்வத்தை செலுத்தி ஒரு பொது இடத்தில யாருக்கும் சளைக்காமல் நானும் உதப்பற்றி நாலுவார்த்தை கதைத்து மரியாதையாக வாழ்வது. (இவ்வளவு நாளும் அரசியல் கதைத்ததாலை ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்வது)

3) மேல சொன்ன 1, 2 செய்ய கஸ்டமா இருந்தா.... கொஞ்சம் முயற்சி செய்து உங்களை மாதிரி வெளிநாட்டுக்கு போய் செட்டிலாகி பாதுகாப்பா இருந்து கொண்டு பிறகு நல்ல தமிழுணர்வாளனாக மாறி தமிழர்களுக்காக போராடுவது.

Edited by சாணக்கியன்

  • தொடங்கியவர்

இன்னுமொருவன்,

உங்கள் கருத்துக்கு நன்றி. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனித் தொகுதிக் கோரிக்கை, இந்திய சுதந்திரத்திற்கு எதிரான சிந்தனை, தனித் தமிழ்நாடு போன்றவை பற்றிப் பேசுகின்ற பொழுது நாம் தந்தை பெரியாரை தவிர்க்க முடியாது. அதனாற்தான் அவர் என்னுடைய பதிவில் இடம் பெறுகின்றாரே தவிர, வேண்டும் என்றே திணிக்கப்பட்டு அல்ல.

என்னுடைய பதிவில் நான் சொல்ல வரும் விடயங்கள்

- இந்திய சுதந்திரம் போரின் ஊடாகவே பெறப்பட்டது. (எமது ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்பு சிலர் எமக்கு காந்தியையும் அகிம்சையையும் பற்றி போதிக்க முனைவதை நினைவில் கொள்க)

- இந்தியாவின் சுதந்திரம் என்பது இந்திய ஆதிக்க சக்திகளை அதிகாரத்தில் அமர்த்தியது.

- தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு காந்தி கூட எதிர்ப்புக் காட்டினார்.

- தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், தனி மாநிலங்களுக்கும் ஆதரவான சிந்தனைகளும் இந்துத்துவத்தின் பிற்போக்குத்தனத்திற்கு எதிரான சிந்தனைகளும் வெள்ளையர்களிடம் காணப்பட்டதனாலேயே இந்தியாவை விட்டு வெள்ளையர்கள் வெளியேற வேண்டும் என்று இந்தியாவின் ஆதிக்க சக்திகள் கோரின

- இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள மக்கள் சுதந்திரம் பெற வேண்டும்.

சரி, இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்கிறேன்.

இந்திய துணைக் கண்டத்தில் வாழும் மக்கள் சுதந்திரம் அடைவதற்கான உதவிகளை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களை மாநில சுயாட்சி கோருவதற்கு தூண்ட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அதிக அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து மாநிலங்களிலும் கேட்பதற்கான வேலைகளை செய்ய வேண்டும்.

தற்பொழுது உள்ள இந்தியாவே தொடர்ந்தும் இருக்கும் என்றால், அதனுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் வராது. ஆகவே இந்தியாவின் தோற்றத்திலோ, அரசியலமைப்பிலோ மாற்றங்களை உருவாக்குவதற்கான தூண்டுதல்களை நாம் செய்ய வேண்டும்.

இந்திய துணைக் கண்டத்தில் வாழும் மக்கள் சுதந்திரம் அடைவதற்கான உதவிகளை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களை மாநில சுயாட்சி கோருவதற்கு தூண்ட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அதிக அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து மாநிலங்களிலும் கேட்பதற்கான வேலைகளை செய்ய வேண்டும்.

தற்பொழுது உள்ள இந்தியாவே தொடர்ந்தும் இருக்கும் என்றால், அதனுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் வராது. ஆகவே இந்தியாவின் தோற்றத்திலோ, அரசியலமைப்பிலோ மாற்றங்களை உருவாக்குவதற்கான தூண்டுதல்களை நாம் செய்ய வேண்டும்.

தமிழ்படம் தோத்துப் போகும்.... தமிழகத்தமிழர்கள் என்ன இழிச்சவாய் இலங்கைத்தமிழர்கள் மாதிரி என்று நினைத்தீர்களா இருந்த கச்சையையும் கொடுத்துவிட்டு நிற்க?

  • தொடங்கியவர்

சாணக்கியன்,

தமிழ்நாடு மட்டும் மாநில சுயாட்சி பெற முடியாது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சுயாட்சிக்கான கோரிக்கைகள் எழ வேண்டும். அப்பொழுது யாரும் எதையும் பறி கொடுக்கத் தேவையில்லை.

ஈழத் தமிழர்களுக்காக வெட்டிப்புடுங்குவது போன்று பேசுகின்ற தலைவர்கள் அனைத்து மாநிலத் தலைவர்களையும் சந்தித்து சுயாட்சிக்கான ஆதரவைத் திரட்ட வேண்டும். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் சுயாட்சி பற்றிய சிந்தனை இருக்கின்றது. அதை முன்னெடுத்துச் செல்வதற்குத்தான் யாரும் இல்லை.

கூட்டாட்சியைக் கொண்ட நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் இனிமேல் போராடட்டும். எமக்காக போராடி நேரத்தை வீணாக்க வேண்டாம்.

கூட்டாட்சியைக் கொண்ட நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் இனிமேல் போராடட்டும். எமக்காக போராடி நேரத்தை வீணாக்க வேண்டாம்.

ஓகோ அப்படியானால் சரி... பனையால் விழுந்த வவுனியா முகாம் மக்களை மாடேறி மிதிப்பது போன்ற இவர்களது அறிக்கை அரசியலை நிறுத்துவதற்கு இதுதான் சரியான வழி!

இதற்கு முக்கியமான சில நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்,

நெடுமாறன் ஐயாவுக்கு ஒரு மன ஆறுதலுக்கு புலம்பெயர்தமிழர்கள் அவரை தத்தமது நாடுகளுக்கு சுழற்சி முறையில் சுற்றுப்பயணம் அழைத்து விருது வழங்கி கொளரவிக்கலாம். நக்கீரன் கோபால் ஐயாவுக்கு ஒரு நஷ்டஈட்டை வழங்கி இனிமேல் ஈழத்தமிழரை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம் என்று கேட்கலாம். வைகோ ஐயாவை இனி கர்நாடக தமிழர்களுக்காக போராடச் சொல்லி கேட்கலாம்.

Edited by சாணக்கியன்

இந்தியமக்கள் சுதந்திரம் பெறட்டும்

அதனுர்டாக ஈழத்தமிழர்கள் சுதந்திரம் பெறட்டும்

இந்தக் கருத்துக்கு முன்னால் எமக்கான சுதந்திரம் என்ன?

எங்களிடம் சுதந்திரம் குறித்து எந்த வரையறையும் இல்லை. எமது போராட்டம் சிங்கள வன்செயல்களில் இருந்து பாதுகாப்பு என்ற குறிக்கோளை மட்டும் கொண்டது. அதற்கப்பால் மேற்குறிப்பிடும் இந்தியமக்களின் சுதந்திரம் மற்றும் ஈழமக்களின் சுதந்திரம் ஒன்றே. இந்தியாவின் தாழ்த்தப்படட் மக்களுக்கெதிரான ஒடுக்குமுறை மற்றும் வர்க்க ஒடுக்கு முறை அனைத்தும் எமக்குள்ளும் இயங்கும் ஒன்றே.

இந்திய உபகண்டத்து மக்களும் ஈழத்தமிழர்களும் தமது அழிவுகளை தாமே உருவாக்குபவர்களாக வடிவமைக்கப்பட்டவர்கள். சாதியம் மதம் போன்ற அலகுகள் ஊடாக இனம் என்ற தனித்துவத்தில் இருந்து தாமாகவே சிதைந்து போகும் விதமாக வடிவமைக்கப்பட்டவர்கள். எமது தூரநோக்கிலான அழிவுகள் என்பது என்னுமொரு இனத்தால் தான் ஏற்பட வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை.

ஏற்றதாழ்வு நிலை சாதிய ஒடுக்குமுறை மத அடக்குமுறை என்ற பல்வேறு அம்சங்கள் அடிப்படை மனிதக்குணத்தை சீரளித்து நாகரீக வளர்ச்சியுடன் ஒத்துப்போக முடியாத தன்மையை இயல்பாக்கி விட்டது. ஜனநாயகம் என்பதுக்கும் இந்த இயல்;புநிலைக்கும் எந்த தொடர்பும் இருக்க முடியாது. இந்த இயல்புநிலையே பாசிசத்தின் தோற்றப்பாடு. எமது இனம் இந்த பாசிச இயல்புநிலையை அடித்தளமாககொண்டு பயணிக்கின்றது.

எமக்கான இனம் குறித்த தனித்துவத்தில் நாம் உறுதியுடையவர்காள இருக்க முடியாது. நலுமதத்தை சேர்ந்தவர்களும் நாலு சாதியை சேர்ந்தவர்களும் தமிழ் என்ற பல்லாக்கை துர்க்கிக் கொண்டு வரலாறு நீளவும் பயணிக்க முடியாது. அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை. இப்போது நான்கு நான்கு பேரும் பல்லாக்கை ஒன்றாக தூக்காமல் தனித்தனியே தூக்கி செல்வது பின்னர் பல்லாக்கில்லாமல் அவரவரே நடந்து செல்வது. இதுவே இன்றைய நிலை. இது என்றோ சுயத்தை இழக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒன்று.

தமிழ் தமிழினம் தமிழ்தேசியம் போன்ற தனித்துவமான பெர்து அம்சங்களின் அழிவு என்பது எமது விருப்பு வெறுப்புக்கு அப்பால் எம்மாலேயே அழிக்கப்படும் என்பது விதி. இந்த விதியில் இருந்து நாம் மாற முடியாது. வேணுமானால் சற்றுத் தள்ளிப்போட முடியும்.

இங்கே விதி என்பதை கடவுளுடன் சம்மந்தப்படுத்தாமல் சாதிய மத ஒடுக்குமுறைக்குள்ளானவன் இனத்தில் இருந்து முற்றாக வெளியேறுதலை சுதந்திமாக கருதும் சுழற்ச்சி முறை இயக்கத்தை விதியாக பார்த்தல் அவசியமானது.

மீளவும் சிங்கள இன ஒடுக்கலுக்கு எதிரான மனிதாபிமான குரல்கள் மட்டுமே எமது எல்லை. அதை தாண்டி தேசியம் போராட்டம் தன்னாட்சி என்பது சாத்தியப்படும் என்று நம்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கான இனம் குறித்த தனித்துவத்தில் நாம் உறுதியுடையவர்காள இருக்க முடியாது. நலுமதத்தை சேர்ந்தவர்களும் நாலு சாதியை சேர்ந்தவர்களும் தமிழ் என்ற பல்லாக்கை துர்க்கிக் கொண்டு வரலாறு நீளவும் பயணிக்க முடியாது

இந்த விதி சகல இனங்களுக்கும் பொருந்தும்,அந்த வகையில் பார்க்கப்போனால் சிறிலங்கா என்ற தேசியமும் ஒரு காலகட்டத்தில்(எமது வாழ்நாள் அல்ல...100 வருடங்களின் பின்பு)அடையாளங்களை இழக்கும் சந்தர்ப்பம் உண்டுதானே?

என்றோ ஒரு நாள் சுயத்தை இழக்கப்போகிரோம் என்று வாழ்வதற்கான ஜனநாயக உரிமைகளை குட தட்டி கேட்காமல் வாழ

வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பு வெறுப்புக்கு அப்பால் எம்மாலேயே அழிக்கப்படும் என்பது விதி. இந்த விதியில் இருந்து நாம் மாற முடியாது. வேணுமானால் சற்றுத் தள்ளிப்போட முடியும்
.

இன்று நான் அவதானித்த விடயம்

சிட்னி சைவ மன்றத்தால் சைவவகுப்பு பல

வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது இங்கு கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையோ மிகவும் குறைவு..

ஆனால் சாய்பாபாவின் பக்தர்களால் நடத்தப்படும் பால்விகாஸ் கல்விகற்கும் மாணவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம்..

சைவத்தை இழந்து இதற்கு நம்மவர்கள் நாட்டம் கொள்ள காரணம் .....சிங்களவனுமல்ல ....வட இந்தியனுமல்ல....நாஙகளேதான் காரணம்

Edited by putthan

இந்த விதி சகல இனங்களுக்கும் பொருந்தும்இஅந்த வகையில் பார்க்கப்போனால் சிறிலங்கா என்ற தேசியமும் ஒரு காலகட்டத்தில்(எமது வாழ்நாள் அல்ல...100 வருடங்களின் பின்பு)அடையாளங்களை இழக்கும் சந்தர்ப்பம் உண்டுதானே?

என்றோ ஒரு நாள் சுயத்தை இழக்கப்போகிரோம் என்று வாழ்வதற்கான ஜனநாயக உரிமைகளை குட தட்டி கேட்காமல் வாழ

வேண்டுமா?

எல்லா இனங்களுக்கும் இது பொருந்தப்போவதும் இல்லை எல்லா இனங்களும் சந்திக்கும் மாற்றங்கள் ஒரே மாதிரியானவையும் இல்லை.

எமது இனத்தின் தொன்மையும் மொழியின் தொன்மையும் சிதைந்து கொண்டே வருகின்றது. இரண்டாயிரம் வருடத்துக்கு முற்பட்ட திருக்குறளும் பழமைவாய்ந்த சித்தர் நெறிகளும் காலத்தை ஒப்பிடும் போது எமக்கே வியப்பானவையாக இருக்கின்றது. புலம்பெயர் தேசத்தில் உள்ள அடுத்த தலைமுறைக்கும் மொழிக்குமான தொடர்பு என்பது இயல்பாகவே துண்டிக்கப்படும். ஒரு மொழி உயர்வாழ வேண்டுமாயின் அதற்கொரு நாடு இருக்க வேண்டும். தமிழ்மொழியின் அழிவு என்பது தீர்மானிக்கப்பட்ட திசையிலேயே செல்கின்றது. தமிழகம் இந்தியா என்பதுள் கரைந்து போகின்றது. தமிழீழம் இலங்கைக்குள் கரைந்து போகின்றது.

சிங்களமொழி என்பது சில நூற்றாண்டுகளுக்கு முன்னம் வரை எழுத்துவடிவமற்றது. அது தன்னை வளர்த்துக்கொண்டது. பொய்யோ மெய்யோ தனக்கென்று ஒரு வரலாற்றை எழுதி உண்மை பொய்களுக்கு அப்பால் அதை அனைவருமாக ஏற்றுக்கொண்டது. அதன் தேசியத்துக்காக ஈ எறும்பைக் கூட கொல்ல இடமில்லாத புத்த மத அடிப்படை வாதிகளே அதற்கு எதிர்வடிவம் எடுத்து தேசியத்தை வலிமைப் படுத்தினர். பிக்குகள் படைக்கு அட்சேர்ப்பதில் தேசமெங்கும் அலைந்து திரிந்து வெற்றி பெற்றனர். அவர்களுக்கென்று ஒரு நாட்டை வலிமைப்படுத்தினார்கள். 100 வருடங்கள் என்ன ஆயிரம் வருடங்களானாலும் அவர்களால் மாற்றங்களூடாக தமது தேசிய அடயாளங்களை தக்க வைக்க முடியும். அதற்குரிய இடம் அவர்களுக்கு இருக்கின்றது.

சிங்கள இனத்திற்கென்று ஒரு வடிவம் இருக்கின்றது. அது குறித்து அவர்களுக்கு தெளிவு இருக்கின்றது. இனத்தின் அகத்திலும் புறத்திலுமான அசைவியக்கம் குறித்து அவர்களிடம் தெளிவு இருக்கின்றது. இலங்கைத் தீவை சிங்கள தீவாக மாற்றுவது குறித்த சிந்தனையில் அவர்கள் தெளிவாக இருக்கின்றார்கள். மகிந்தாவும் ரணிலும் தமிழர் போராட்டத்தை நசுக்குவது குறித்து ஒன்றானார்கள். அதே நேரம் அழிவை தடுப்பதற்காக எனினும் தமிழக கட்சிகளால் ஒன்றாக முடிந்ததா இல்லை நாம் தான் கருத்துக்களை தாண்டி ஒன்றானோமா? அல்லது முடியுமா? அழிவிலும் லாபம் தேடினார்கள். ஜெயலலிதா தமிழீழம் பெற்றுத்தருவதாக ஓட்டுக்கேட்டார்.

எமது இனத்திற்கான அகம் அல்லது புறம் என்ற எதற்குமான வரையறை இல்லை. எம்மை நாமே அழித்துக்கொள்வோம். இதற்குரிய பிரதான காரணம் எமக்குள் நாம் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்பவர்கள் இல்லை. இதில் சாதியம் நீண்ட காலமாக பிரதான பங்கு வகித்துவருகின்றது. இது எமக்கு புரியாமல் இல்லை. அதனால் இதிலிருந்து மீள முடியும். ஆனால் இந்த ஏற்றுக்கொள்ளாமை வடிவமைத்துவிட்ட மனப்பாங்கு என்பதில் இருந்து மீள்வது கடினம். ஒரு பேராசிரியர் இலங்கை பிரச்சனை குறித்து ஆராய்வதற்கு பல்கலைக் கழகத்தில் மானியம் கோருகின்றார். அதற்கான சிபார்சுக்காக இரண்டு தமிழ் பேராசிரியர்களையும் இரண்டு வேற்றினத்தவர்களையும் தனது விண்ணப்ப மனுவில் குறிப்பிடுகின்றார். இரண்டு வேற்றினத்தவர்களும் இதற்கு மானியம் கொடுக்கலாம் என்று பரிந்துரைக்கின்றனர் எம்மவர்கள் நிராகரித்து அதை முடக்குகின்றனர். இவ்வாறான பல சம்பவங்கள் தினம் நடந்தேறுகின்றது. புத்திஜீவி மட்டத்தில் உள்ள இந்த போட்டிநிலையானது மேல குறிப்பிட்ட வடிவமைக்கப்பட்ட மனப்பாங்கிலானது. இது ஒரு உதாரணம். இது இனமெங்கும் வியாப்பித்து நிற்கின்றது. ஒருவன் ஒன்றை சொன்னால் அதன் நோக்கம் இலக்கு என்பதை கருத்தில் கொள்ளாது நிராகரித்தல் என்பது எமது இயல்பு. இதுவே வடிவமைக்கப்பட்ட மனப்பாங்கு. எமக்காக போராட்டம் அதற்கு எதிரான எம்மவர்களின் நிலைப்பாடு. இரண்டும் அகத்திலே சுழற்சியை கொண்டுள்ளது. இனத்துக்கென்று புறநிலை எதுவும் கிடையாது. இந்த அடிப்படையில் நாம் எம்மை சிங்கள இனத்துடனோ அல்லது யுத இனத்துடனோ ஒப்பிடுவது அபத்தம். அவர்கள் புறநிலை குறித்த தெளிவுடன் பயணிக்கின்றார்கள். நாம் இனத்தை மையமாக வைத்து புறநிலையில் ஒரு அடியை கூட எடுத்துவைக்க முடியாமல் எமக்குள் நாமே இரைதேடி சிதைந்து அழிந்து போய்க்கொண்டிருக்கின்றோம்.

நாம் முதலில் ஜனநாயகப் பண்புடைய இனமாக இருக்க வேண்டும். அடிப்படையில் நாம் அதை இழந்து நிற்கின்றோம். அதற்கு எதிரானவார்காள சர்வசாதராணமாக வாழ்கின்றோம். எங்கள் எல்லோருக்கும் தெரியும் நாம் சாதியவாரியாகவும் மதவாரியாகவும் பிரதேசவாரியாகவும் என்னும் பல குரோத தனிமனித மனப்பான்மை காரணமாகவும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளாமல் மிகமோசமான சுயநலத்துடன் மேலும் பல அர்த்தமற்ற செயற்பாடுகளுடனும் வாழ்கின்றோம். இதுவே அடிப்படையில் ஜனநாயகத்தக்கு எதிரானது. பாசிசத்தின் தோற்றமே இதுதான். இந்த நிலை அனைத்தையும் மூடி மறைத்து எமக்கான பொதுவான ஜனநாயக உரிமைகளை கோருகின்றோம். அது எமக்கு நிச்சயம் கிடைக்காது ஏனெனில் நாம் அதற்கு தகுதி உடையவர்களாக எம்மை நாம் மாற்றவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மக்கள் முழு சுதந்திரம் பெறும் போது ஏலியன்ஸ் உலகத்தில் தோன்றி விடுவார்கள். :blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.