Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தியுள்ளவனை முட்டாளாக்கி, முட்டாளை புத்திமானாக்கி, நெத்தலிப்பயில்வானை நிஜப்பயில்வானாக்கி..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் வணக்கம்.

எனது நாவலான " கரையைத்தேடும் கட்டுமரங்கள்" வெணியீட்டு விழா சென்ற வாரத்தில் நன்றாகவே நடந்தேறியது.

அதே நாள் இன்னும் மூன்று புத்தகவெளியீட்டு விழாக்கள் அண்மையிலேயே நடந்தன. பார்வையாளர்கள் திணறிப்போய்விட்டார்கள். வடலிவெளியீடுகள் (இளங்கவியின் கவிதைநூல் உட்பட)விற்பனைக்கு வைக்கப்பட்டன.

கள உறவு கவிஞனின்விமர்சனத்தைப்பற்றி என்னுரையில் குறிப்பிட்டேன்.. அவர்வந்தாரோ தெரியவில்லை. வல்வைசாகிறா வந்திருந்தார். அவர் கருத்தை அறிய விருப்பமாக இருக்கிறது.படங்கள் முடியுமானால் இணைக்கிறேன். நன்றி

கே.எஸ்.பாலச்சந்திரன்

வானம் நொறுங்கிக் கண்ணாடித் துகள்களாக கொட்டுண்டதுபோல்

கனடாவில் அந்தச் சனிக்கிழமை மாலை ஐஸ்கட்டி மழை சடசடத்துப் பொழிந்து கொண்டிருந்தது.

வாகனத்தைச் செலுத்த மிகுந்த சிரமமான பொழுதாக அந்நேரம் அமைந்திருந்தது.,

இருப்பினும் நிமிடங்களின் விரைவும், வீதியில் வாகன நகர்வுகளின் தாமதமும் “கரையைத் தேடும் கட்டுமரங்கள்” நூல் வெளியீட்டு மண்டபத்திற்கு என்னை உரிய நேரத்திற்கு சேர்ப்பிக்குமோ என்ற ஐயத்தை உருவாக்கி,

சரியாக 6.05 மணியளவில் அவ்விடத்தில் என்னைக் கொண்டு சேர்த்தது.

இந்நூல் வெளியீட்டு விழாவானது

அந்தச் சமூக நிலையத்தின் இரண்டாம் மாடியில் நடாத்தப்படுவதாக வாசலில் நின்றவர்கள் வழி காட்டினார்கள்.

நான் அங்கு சென்ற போது கிட்டத்தட்ட அம்மண்டபத்தில் அரைவாசிப் பகுதியே நிறைந்திருந்தது.

முன்னிருக்கைகள் பலவும் காலியாக இருக்க,

பின்னிருக்கைகளை வாசக, கலைஞ வட்டம் ஆக்கிரமித்திருந்தது.

வாசலோரமாய் சிறிது நிதானித்து விழா நாயகனைத் தேடினேன் சற்றுத் தள்ளி நிறையவே கலைஞர்கள் சூழ்ந்து நிற்க,

அவர்களோடு விழா நாயகன் பேசிக் கொண்டிருந்தார்.

குறுக்கே புகுந்து பேசும் பழக்கம் இல்லாததால் பின்னர் அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன்

வெறுமையாகக் கிடந்த முன்னிருக்கைகளை நோக்கி அமரச் சென்றபோது

எனக்கு ஏற்கனவே பரிச்சயமான ஒரு முதியவரைக் கண்டு அவருடன் அமர்ந்து கொண்டேன்.

நட்பு மிக்க முதியவருடன் நலம் விசார்த்தபடியே யாழ்க்கள நண்பர்கள் யாரேனும் தென்படுகிறார்களா என்று நோட்டம் விட்டேன்.

நான் அறிந்தவரை யாழ்க்கள நண்பர்கள் எவரையும் அங்கு காணவில்லை.

அதே நேரம் அங்கு வானொலி, தொலைக்காட்சி, நாடகம், தயாரிப்புத்துறை சார்ந்தவர்கள் என்று

பெரும் கலைக்குடும்பமே பிரசன்னமாகி இருந்தனர்.

திரு. கே. எஸ். பாலச்சந்திரன் அவர்களும், அவருடைய துணைவியாரும்

வந்தவர்களை வரவேற்று இருக்கைகளில் அமர்த்தி உபசரித்து வரும்போது

எனக்கு அருகாமையில் வந்தமர்ந்த விழா நாயகனுக்கு என்னை அறிமுகப்படுத்த முற்பட்டேன்.

என்னை அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

என் பெயரை கூறுமுன்பு சிறிது சங்கடத்துடன் நெளிந்த அவரிடம் சிரித்தபடியே

அவருக்கு மட்டுமே தெரிந்த யாழ் இணையத்தோடு சம்பந்தப்பட்ட விடயத்தைக் கூறினேன்.

விழா நாயகனின் முகத்தில் வியப்பு மின்னலிட்டது.

விழி அகல என்னைப் பார்த்து “தமிழச்சியா நீங்கள்” என்றார்.

நான் சிரித்தபடியே மறுத்தேன். உடனே ‘சினேகிதியா’ என்றார்.

அதற்கும் நான் மறுக்க, “ரசிகையா” என்றார். முறுவலுடன் மறுத்தேன்.

விழா நாயகன் சிறிது குழப்பமுற்றுவிட்டார்.

அவருடைய குழப்பத்தை எனக்கு அருகாமையில் அமர்ந்திருந்த முதியவர் இடையில் புகுந்து தெளிவித்துவிட்டார்.

அவருடைய குழப்பத்திற்குக் காரணம்

எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத ஒருவரைச் சந்தித்ததாக இருக்கக்கூடும்.

ஏனெனில் என்னைப் பொறுத்தவரை முற்று முழுதாக அந்நியப்பட்ட கலைத்துறையினரே அங்கு நிறைந்திருந்தனர்.

முன்னெப்போதுமே அவர்கள் என்னை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சரி என்னுடைய இந்த ஊகிப்பை நிறுத்திக் கொண்டு நிகழ்வுக்குள் நுழைவோம்.

அன்றைய தினம் ரொரண்டோ, ஸ்காபுரோ பகுதியில் மூன்று படைப்பாளிகளின் வெளியீட்டு விழாக்கள் குறுகிய இடைவெளி தூரத்தில் வெவ்வேறாக நிகழ்ந்தன என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

ஏனென்றால் இங்கு நூல் வெளியீடு என்பது உண்மையான படைப்பாளிகள், வாசகர்களால்

நிறைவதென்பது சாத்தியமற்றதாகவே புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ளது.

மண்டபம் நிறைந்ததாக கொள்ளப்படும் வெற்றி என்பது

படைப்பாளியின் உறவினர்களாலும் , நண்பர்களாலும் மட்டுமே சாத்தியமாக்கக் கூடியதாகவும் இருக்கும்.

அப்படி இருந்தும் இவ்விழா ஆரம்பிக்கும் நேரம் கணிசமான இருக்கைகள்

படைப்பாளர்கள், வாசகர்கள் என்ற வகையில் நிறைந்துவிட்டன.

அந்த வகையில் இவ்வெளியீட்டுவிழா மிகுந்த வெற்றி பெற்றதே என்று கொள்ளவேண்டும்.

சரியாக 6.30 மணியளவில்

இந்நூல் வெளியீட்டு விழா பாரதி ஆர்ட்ஸ் நுண்கலைக்கூட மாணவிகளின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகியது.

கனடாத் தமிழ் சமூகத்தில் இன்றைய நாளில் உலாவரும்

நவீனத்துவத்தின் சிறந்த கலைஞனான துசி ஞானப்பிரகாசம் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்க,

வரவேற்புரையை பத்திரிகையாளர் பி. ஜே. திலீப்குமாரும்,

நட்புரைகளை வைத்திய கலாநிதி கதிர் துரைசிங்கம், மற்றும் சொக்கல்லோ சண்முகநாதனும்,

வாழ்த்துரைகளை உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிங்கம், ரிவிஐ புகழ் வரகுணன் மகாதேவனும்,

ஆய்வுரைகளை மகாஜனக் கல்லூரி அதிபர் திரு கனகசபாபதி,

மற்றும் ரிவிஐ தொலைக்காட்சித் தயாரிப்பாளர் பி.விக்னேஸ்வரனும் நிகழ்த்தினர்.

சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் அவர்கள் சிறப்புரையை நிகழ்த்தினார்.

தொடர்ந்து தமிழக வானொலிக் கலைஞர் சுந்தரம் அவர்கள்

தமிழகக் கலைஞர்கள் சார்பில் பொன்னாடையை விழா நாயகனுக்கு அணிவித்தார்.

இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிம்மக் குரலோன் திரு அப்துல் ஹமீத் அவர்கள்

தொலையேசியூடாக தனது வாழ்த்துரையை பரிமாறிக் கொண்டார்.

இறுதியாக நன்றியுரையை விழா நாயகன் உரைத்தபோது மறக்காமல்

யாழ் இணையத்தில் இந்நாவலுக்கு விமர்சனம் எழுதிய கலைஞனுக்கும் நன்றியுரைக்கத் தவறவில்லை.

இவ்வெளியீட்டு விழாவில் நூலின் முதற்பிரதியை கே. எஸ். பாலச்சந்திரன் அவர்களின் தாயார் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து பல கலைஞர்களை அழைத்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.

“கரையைத் தேடும் கட்டுமரங்கள்” நூல் வெளியீடானது மிகுந்த வெற்றியை அடைந்தது என்றால் மிகையாகாது.

ரிவிஐ, தமிழ்1, ஒம்னிரிவி ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்கள் இவ்விழாவை ஒளிப்பதிவு செய்தன.

சிறைகளே பல எழுத்தாளர்களை பிரசவித்திருக்கிறது.

இந்த வானொலிக் கலைஞனை நாவலாசிரியராக ஆக்கிய பெருமை

அவரை அடைத்து வைத்திருந்த சிறைக்கூடங்களுக்குச் சொந்தமானது.

இந்த நாவல் பிறந்த கதையே ஒரு பெருநாவலை உருவாக்கக் கூடியதாக இருக்கும் என்பதனை

அங்கு உரையாற்றியவர்களும், நன்றியுரை ஆற்றிய விழா நாயகனும் தெரிவித்திருந்தனர்.

அந்தச் சிறை அனுபவம் பதிவிற்கு வரும்வரை காத்திருப்போம்.

எனது பார்வையில் இருந்து விடுபட்டவையில் வடலி பதிப்புகளும் அடங்கும்.

விழா நாயகனிடம் நூலைப் பெற்ற மறுகணமே நான் அங்கிருந்து விடைபெற்றுவிட்டேன்.

ஆதலால் சில விடயங்களைத் தவறவிட்டு விட்டேன். மன்னிக்கவும்.

இன்னும் “கரையைத் தேடும் கட்டுமரங்கள்” நூலை என் வாசிப்பிற்கு உட்படுத்தவில்லை

வாசித்தபின்னர் இந்நூல் பற்றிய எனது பார்வையைப் பதிவிடுகிறேன்.

ஒரு படைப்பாளியின் எதிர்பார்ப்பை முழுமைப்படுத்த முடியாமைக்கு மனம் வருந்துகிறேன்.

நேரமின்மையே பெருங்காரணியாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானம் நொறுங்கிக் கண்ணாடித் துகள்களாக கொட்டுண்டதுபோல்

கனடாவில் அந்தச் சனிக்கிழமை மாலை ஐஸ்கட்டி மழை சடசடத்துப் பொழிந்து கொண்டிருந்தது.

வல்வை சாகரா

ஒரு அட்டகாசமான சிறுகதையைப்போல விழாபற்றிய வர்ணனையை ஆரம்பித்திருக்கிறீர்கள். வாசிக்க சுவையாகவிருந்தது. நாவல் வாசித்தபின்வு உங்கள் கருத்தை அறிய ஆவலாகவுள்ளேன்

கே.எஸ்.பாலச்சந்திரன்

சகாரா அக்கா,

உண்மையில உங்கட விழா அனுபவம் சூப்பராய் இருக்கிது. சகாரா அக்காவுக்கு இப்பிடியும் எழுதத்தெரியுமோ...? :lol:

நன்றி கலைஞன்,

சிரமம் தந்துவிட்டேன் போலிருக்கிறது.

சிரமம் ஒன்றும் இல்லை ஐயா. அழகான ஒரு நாவலை படைச்சு இருக்கறீங்கள். எத்த்தனையோ பல விசயங்களை உங்கட நாவலை வாசிச்சபிறகு நிதானமாக சீர்தூக்கி - சிந்திச்சுப் பார்க்கக்கூடியதாக இருந்திச்சிது. எல்லாருக்கும் ஒன்றிண்ட பெறுமதி தெரிவது இல்லை. ஆனால்.. எனக்கு தெரிஞ்சு இருக்கிது. அதனால என் கடன் பணி செய்து கிடப்பதே தொடர்கிறது.

வல்வை சகாராவை படத்தில் கண்டுபிடிப்பவர்க்கு பரிசு கொடுப்போமா?

அன்புடன்

கே.எஸ்.பாலச்சந்திரன்

நான் மேல எழுதினதை சகாரா அக்கா இன்னமும் வாசிக்க இல்லைப்போல. படத்தை கண்டுபிடிக்கற ஆளுக்கு பரிசுகுடுத்துப்போட்டு பிறகு சகாரா அக்காவிட்ட நான்தான் முதுகுமுறிய பரிசு வாங்கவேணும். :lol:

Edited by மாப்பிள்ளை

என் பெயரை கூறுமுன்பு சிறிது சங்கடத்துடன் நெளிந்த அவரிடம் சிரித்தபடியே

அவருக்கு மட்டுமே தெரிந்த யாழ் இணையத்தோடு சம்பந்தப்பட்ட விடயத்தைக் கூறினேன்.

விழா நாயகனின் முகத்தில் வியப்பு மின்னலிட்டது.

விழி அகல என்னைப் பார்த்து “தமிழச்சியா நீங்கள்” என்றார்.

நான் சிரித்தபடியே மறுத்தேன். உடனே ‘சினேகிதியா’ என்றார்.

அதற்கும் நான் மறுக்கஇ “ரசிகையா” என்றார். முறுவலுடன் மறுத்தேன்.

விழா நாயகன் சிறிது குழப்பமுற்றுவிட்டார்.

அவருடைய குழப்பத்தை எனக்கு அருகாமையில் அமர்ந்திருந்த முதியவர் இடையில் புகுந்து தெளிவித்துவிட்டார்.

அவருடைய குழப்பத்திற்குக் காரணம்

எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத ஒருவரைச் சந்தித்ததாக இருக்கக்கூடும்.

ஏனெனில் என்னைப் பொறுத்தவரை முற்று முழுதாக அந்நியப்பட்ட கலைத்துறையினரே அங்கு நிறைந்திருந்தனர்.

முன்னெப்போதுமே அவர்கள் என்னை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சரி என்னுடைய இந்த ஊகிப்பை நிறுத்திக் கொண்டு நிகழ்வுக்குள் நுழைவோம்.

ஆஹா!!! என்னுடைய பெயர் இவ்வளவு பிரபலம் ஆகியிருப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. இதனையறியத்தந்த சஹாராக்காவிற்கு மிகவும் நன்றி.

:lol::blink::huh: சஹாராக்கா, யாழ்க்களம் மூலம், உங்களைவிட நான் அதிகம் பிரபல்யமாக்கும். :wub::wub::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா!!! என்னுடைய பெயர் இவ்வளவு பிரபலம் ஆகியிருப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. இதனையறியத்தந்த சஹாராக்காவிற்கு மிகவும் நன்றி.

:lol::blink::huh: சஹாராக்கா, யாழ்க்களம் மூலம், உங்களைவிட நான் அதிகம் பிரபல்யமாக்கும். :wub::wub::wub:

யாழ்களம் என்றவுடன் உங்கள் பெய்ர் என் நினைவுக்கு வந்ததுக்கு காரணம் இருக்கிறது. அது சகாராவுக்கு தெரியும். கேட்டுப் பாருங்கள்.

இருந்தாலும் உங்கள் பிரபல்யம் சற்று கூடத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் என்றவுடன் உங்கள் பெய்ர் என் நினைவுக்கு வந்ததுக்கு காரணம் இருக்கிறது. அது சகாராவுக்கு தெரியும். கேட்டுப் பாருங்கள்.

இருந்தாலும் உங்கள் பிரபல்யம் சற்று கூடத்தான்.

தமிழச்சியின் பெயர் உங்கள் நினைவிற்கு வந்ததற்கான காரணம் எனக்குத் தெரியும் என்று போட்டிருக்கிறீர்கள்.

உண்மையிலேயே அவரின் பெயர் உங்களின் ஞாபகத்திற்கு வந்த காரணம் எது என்று எனக்கு தெரியாது.

கே. எஸ் அண்ணா ஏன் எனக்குத் தெரியும் என்று இங்கு பதிவிட்டீர்கள் என்று புரியவில்லை.

சகாரா அக்காவும் ஒரு படத்தில சின்னதாய் இருக்கறா. யாராவது முடியுமானால் கண்டுபிடிச்சு சொல்லுங்கோ.

:huh:மாப்பு நான் கண்டு பிடிச்சிட்டன். உங்களுக்கு அருகில் விரல்களால் காதைப் பொத்தியவாறு (நீங்க பிளேடு போடுவதால்) அமர்ந்திருப்பவர் தானே ?? :wub: எப்படிக் கண்டு பிடிச்சன் பார்த்தீங்களா ?? :lol::blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழச்சியின் பெயர் உங்கள் நினைவிற்கு வந்ததற்கான காரணம் எனக்குத் தெரியும் என்று போட்டிருக்கிறீர்கள்.

உண்மையிலேயே அவரின் பெயர் உங்களின் ஞாபகத்திற்கு வந்த காரணம் எது என்று எனக்கு தெரியாது.

கே. எஸ் அண்ணா ஏன் எனக்குத் தெரியும் என்று இங்கு பதிவிட்டீர்கள் என்று புரியவில்லை.

சகோதரி நீங்கள் என்னைபார்த்தவுடன் ஒரு பெயரை சொன்னீர்களே.. அவ்ரை யாழ்கள்ம் மூலமாக தமிழச்சிக்கு தெரியும் என்பதினால் தான் உங்களை தமிழச்சியா என்று கேட்டேன்.குழ்ப்புகிறேனா?

  • கருத்துக்கள உறவுகள்

நூல் வெளியீட்டின் படங்களை இணைத்த கலைஞனிற்கும்..நிகழ்வு பற்றி எழுதிய சகாராவிற்கும்..நன்றிகள்..நான் டிசம்பர் மாதம் பாரிசிற்கு செல்வதாக இருக்கிறேன்..அப்பொழுது பாரிசில் பாலாண்ணாவின் புத்தகத்தை வாங்க முடியும் என நினைக்கிறேன்..நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நூல் வெளியீட்டின் படங்களை இணைத்த கலைஞனிற்கும்..நிகழ்வு பற்றி எழுதிய சகாராவிற்கும்..நன்றிகள்..நான் டிசம்பர் மாதம் பாரிசிற்கு செல்வதாக இருக்கிறேன்..அப்பொழுது பாரிசில் பாலாண்ணாவின் புத்தகத்தை வாங்க முடியும் என நினைக்கிறேன்..நன்றி.

அன்பின் சாத்திரி,

கனடாவில் மட்டும் எனது நாவல் வெளியிடப்பட்டிருக்கிறது. நீங்கள் பாரிசுக்கு போவதிற்கிடையில் அங்கும். லண்டனிலும் கிடைக்கும்படி செய்ய முயல்கிறேன்.

கலைஞனைத்தவிர வேறு யாருடைய விமர்சனங்களும் வரவில்லை. விழாவில் செய்யப்பட்ட ஆய்வுரைகள் தவிர.

விமர்சனங்கள் தான் எங்கள் படைப்பு முயற்சிகளுக்கு முழுமை தரும் என்று நினைக்கிறேன்.

கே.எஸ்.பாலச்சந்திரன்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை சாகரா.. எனது நாவல் படித்துப்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் உங்கள் அபிப்பிராயத்தை எழுதலாமே.

எதிர்பார்க்கிறேன்

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான கலைஞன். இழப்பின் துயரிலும் உங்கள் மீள்பதிவு நீனைவுக்கு நன்றிகள் சகாரா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.