Jump to content

நீல கதிர்இறுவெட்டு


Recommended Posts

நீலகதிர் இறுவெட்டு தொடர்பாக யாரவது விளக்கம் தரமுடியுமா தந்தால் உதவியாய் இருக்கும்.

வீடியோ ஒளிப்பதிவு கருவி வேண்டுவதற்கு என்ன என்ன முக்கியமாக பார்க்க வேண்டும் என்பதையும் யாராவது தெரிந்தவர்கள் உதவி செய்வீர்களா.

Link to comment
Share on other sites

Blu-Ray disc க்கு வாங்கப்போகும் ஓளிப்பட கருவிக்கும் எந்த விதமான நேரடி சம்பந்தமும் இல்லை சகோதரி...

நீங்கள் ஒளிப்பட கருவி வாங்குவதாக இருந்தால் அந்த கருவியின் உணர் திறனை தான் தெரிந்து கொள்ள வேண்டும்.. High Definition தர உணர் திறன் கருவிகள் Hard disk drive வுடன் வருகின்றன... சாதாரண உபயோகத்துக்கு ( தனிப்பட்ட பாவனைக்கு) இவையே இப்போதைக்கு அதிகூடிய தரமான ஒளிப்பட கருவியாக இருக்கின்றன...

நீங்கள் இந்த கருவியினால் எடுத்த படத்தை உங்களின் கணனியில் ஏற்றி பின்னர் நீங்கள் குறிப்பிட்ட Blu-Ray தட்டுகளில் பதிவு செய்து தரம் குண்றாமல் பதிவு செய்த அதே தரத்துடன் பார்க்க முடியும்...

Digital Versatile Disc எனப்படும் DVD யிலும் பார்க்க மிகவும் தரமாக ஒளிப்படங்களை Blu-Ray தகடுகளில் பதிவு செய்ய முடியும்...

Blu-Ray Disc கள் 25GB முதல் 50GB வரை அதிகூடிய தரமான படங்களை பதிவு செய்ய முடியும்... ஆனால் DVD க்களில் 4.7GB தொடக்கம் 9.4GB வரையான படங்களை மட்டுமே பதிவு செய்து கொள்ள முடியும்...

(ஏதோ என்னாலை முடிஞ்ச மாதிரி சொல்லி இருக்கிறன்.. புரிய இல்லை எண்டால் திட்டாமல் வேற யாரையாவது கேட்டுக்கொள்ளுங்கோ)

Link to comment
Share on other sites

உங்களுக்கு மிக்க நன்றி . எனக்கு வீடியோ கமரா கொஞ்சம் பெரியது வேண்ட வேண்டும் அதாவது வீட்டுப்பாவனைக்கு அல்ல. அதுதான் வேண்டப்போனன் அதில நிறைய அழுத்திகள் எல்லாம் இருக்கு அதுதான் எதை முக்கியமா பார்க்கவேண்டும் என்ன கம்பனி நல்லது போன்ற தரவுகள் இருந்தால் தாருங்கோ மிகவும் புண்ணியமாப்போகும் உங்களுக்கு..

Link to comment
Share on other sites

நீங்கள் தொழில் ரீதியான Camcorder ஒண்றை வாங்க வேண்டுமாக இருந்தால் என்னால் உதவ முடியாது..

ஆனால் உங்களுக்கு தேவையானது கையடக்கமானதும் மிகவும் தரமானதும் உங்களின் சொந்த தேவைக்கு எண்றால் நீங்கள் இதை தாராளமாக வாங்கலாம்... கொஞ்சம் விலை அதிகம் எண்றாலும்...

http://www.amazon.co.uk/exec/obidos/ASIN/B001PGXA50/300003082-21/?m=A3P5ROKL5A1OLE

HDR-XR200VE%20small.jpg

அவர்கள் தரும் Video வை தயாரிக்கும் மென்பொருள் கொஞ்சம் குழப்பமானது... மற்றும்படி மிகவும் சிறப்பானது...

ஆனால் 120 GB வரையாகதும் அதிகமானதுமான சேமிப்பு HDD யை கொண்டது... High Definition தரமான 50 மணிநேரம் வரையான ஒளிப்படங்களை உங்களால் சேமிக்க முடியும்... பின்னர் கணனிக்கும் இலகுவாக மாற்றிக்கொள்ள முடியும்...

எதுக்கும் வேறு யாரையும் கேட்டு உறுதிப்படித்தி வாங்கி கொள்ளுங்கள்...

மேலதிகமாக இதே தரமுள்ளது வேறு ஒண்றை நீங்கள் தெரிவு செய்ய இதன் தரவுளகளோடு ஒப்பிட ஒருவேளை இந்த தரவுகள் உங்களுக்கு உதவ முடியும் என்பதான் இதை இணைத்து இருக்கின்றேன்..

Link to comment
Share on other sites

நன்றி தாயா அண்ணா தொழிழ் ரீதியாகத்தான் ஆனால் சம்பாதிக்க அல்ல வேறு தேவைக்கு முடியுமாயின் விசாரித்து கூறவும்

Link to comment
Share on other sites

நன்றி தாயா அண்ணா தொழிழ் ரீதியாகத்தான் ஆனால் சம்பாதிக்க அல்ல வேறு தேவைக்கு முடியுமாயின் விசாரித்து கூறவும்

தலைப்பில வேற நீலம் எண்டு போட்டு இருக்கறீர். என்னமோ படம் எடுத்து முன்னேற வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

தலைப்பில வேற நீலம் எண்டு போட்டு இருக்கறீர். என்னமோ படம் எடுத்து முன்னேற வாழ்த்துகள்!

அப்படி ஒன்றும் இல்ல அதுக்கு அப்படி ஒரு பெயர் வைத்திருகிறார்கள் அதுக்கு நான் என்ன செய்வது வேற எப்படி கூறுவது

Link to comment
Share on other sites

கிருபா..

உங்களின் தேவையால் நிறைய நான் கற்று கொள்ள முடிந்தது.. அதுக்கு உங்களுக்கு நண்றி சொல்ல வேண்டும்...

கற்று கொண்டதால் மிகவும் குழப்பமா இருக்கிறது எதை உங்களுக்கு பரிந்துரைப்பது எண்று..

எனது நண்பர் Sony வகை கமெராக்களை பரிந்துரைக்க சொன்னார்... ஆனால் Broadcast & Professional கமெராக்களில் எடுக்கும் படங்களை மெருகேற்றுவதுக்கு வேறு உபகரணங்களும் வாங்க வேண்டி இருக்கும் போல கிடக்கு...

அதில் வேறு நீங்கள் தொழில் ரீதியில் தான் ஆனால் பணம் ஈட்டுவதுக்கு இல்லை என்கிறீர்கள்... ஆதாலால் அதனால் உங்களுக்கு பலன் இருக்குமா என்பது தெரியவில்லை...

உங்களின் தேவை சுமாராக திருமண வைபவங்களை படமாக எடுத்து மணமகள் உலங்கு வானூர்தியில்( போகாமலே) போவது போல ஜிகினா வேலை காட்டுவதான வேலையா...??

நேரடியாக ஒளிபரப்புக்கள் எதையாவது செய்ய விரும்புகிறீர்களா..??

படங்களை எடுத்து பின்னணி காட்ச்சிகளை மாற்ற விரும்புகிறீர்களா...??

இப்படி ஒண்றும் இல்லை எண்றால் மட்டும் உங்களின் பணத்துக்கு திருப்தியாக கமெராவாக முன்னர் நான் தந்த Sony கமெராவையே தெரிவு செய்யுங்கள்...

மேற் குறிப்பிட்டவையில் ஏதாவது சேர்ப்பதாக இருந்தால் சொல்லுங்கள்... முயல்கிறேன்..

DSR-PD170P_2.jpg

இந்த கமெராவின் விலை 2299 பவுன்ஸ்களாம் கேட்டது தலையை சுற்றியது... இதுதான் நான் காட்டியதுக்கும் அடுத்த கட்டதில் இருக்கும் நல்லது... அதுவும் DV நாடாக்களை சேமிக்க போட வேண்டியது... HDV தரம் அற்றது..

இதுதான் SONY தவிர்ந்த மற்றய தயாரிப்புக்களின் நிலையும்..

பணம் ஈட்டவில்லை எண்றால் உங்களுக்கு இது உதவாது என்பது என்கருத்து..

Link to comment
Share on other sites

நன்றி தயா அண்ணா உங்களுக்கு மிக்க நன்றி எனக்காக சிரமப்பட்டு இருக்கிறியல்

உண்மையாக நன்றி.

திருமண வைபவங்களுக்கும் சில நாடகங்கள் நடித்தும் தமிழ் தொலைக்காட்சிகளுக்கும் வழங்குவதற்கு தேவை படுகிறது அதற்காக நாங்கள் நாடகபட்டறை ஒன்றும் நடத்தவில்லை எமது நண்பர்கள் எமது குடும்பம் என்று எமக்குள் சில தாயகம் தொடர்பான நாடகங்கள் தயாரித்து வழங்குவதற்கு தேவைப்படுகிறது இதில் எமக்கு இலாபம் இல்லை ஆனால் விடியோஒளிப்பதிவு கருவி நான் மட்டும் வேண்டவில்லை ஒன்று சேர்ந்து வேண்டுவதால் பிரச்சனைவராது என நினைக்கிறேன்.

மேலதிக தகவல் இருந்தால் விடியோ எடிற்ரிங் தொடர்பான தகவல் இருந்தால் நல்லம்

Link to comment
Share on other sites

நீண்டகால தேவையாக இருந்தால் உங்களின் தேவைக்கு இந்த கமெரா சரியானதாக இருக்குமா பாருங்கள்.

http://www.sony.co.uk/product/hdd-hdv/hdr-fx1000e

அதன் பின்னரான உங்களின் தேவைக்கு நீங்கள் ஒரு தனியான திறண் அதிகமான கணனி ஒண்றை வடிவமைத்து கொண்டு நீங்கள் ஒளிப்பிடித்ததை சரியான முறையில் தயாரிக்கலாம்.

அதுக்கு Pinnacle போண்ற மென்பொருள்கள் உதவலாம்.

Link to comment
Share on other sites

நன்றி பொய்கை உங்கள் தரவுக்கு தற்பொழுது என்னிடம் Ulead VideoStudio 11 எனும் மென்பொருள் இருக்கிறது நீங்கள் கூறும் Pinnacle மென்பொருள் எனக்கு முதலில் ஒரு நண்பர் தந்தார் ஆனால் என்னால் அதை சரியாக பிரயோகிக்க தெரியாததால் தற்பொழுது இதனை பாவிக்கிறேன்.Pinnacle மென்பொருள் எப்படி பயன்படுத்துவது என்பது கூறமுடியுமா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.