Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முகவரிகளை மறைத்து படைப்பாளிகளைக் கொச்சைப்படுத்தலாமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

View Postnunavilan, on Sep 5 2009, 12:25 PM, said:

http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=5437.135 :lol::wub:முன்பு இலக்கியன் யாழில் கவிதைகள் எழுதியவர் என நினைக்கிறேன்.

முன்பு இலக்கியன் யாழில் கவிதைகள் எழுதியவர் என நினைக்கிறேன்.

நுணாவிலான் யாழில் கவிதைகள் எழுதிய இலக்கியன் போல்தான் உள்ளது.

ஒன்றைக் கவனித்தால் குழப்பம் தீர்ந்துவிடும். இந்த இலக்கியன் அண்மைக்கால ஈழத்துக்கவிதைகளைச் சேகரித்துப் போட்டுள்ளார். அதில் பலருடைய கவிதைகளை இணைத்துள்ளார். எல்லோருடைய பெயர்களையும் அறியாதவிடத்து மிகத் தெளிவாகத் தெரிந்தவர்களின் பெயரை இணைத்துள்ளார் மற்றப்படி அவர் இன்னொருவர் கவிதையை தனதாகக் காட்டிக் கொள்ளவில்லை. கவிதையை யாத்தவர் பெயரைத் தெரியாவிட்டால் பரவாயில்லை. மாற்றிப்பதிந்து சிக்கல்களைத் தோற்றுவித்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அப்படியே விட்டிருக்கலாம். ஒன்று மட்டும் உணர முடிகிறது. இது ஒரு காலப்பதிவாக அவர் செய்கிறார். கொஞ்சம் அதிக கவனமெடுத்தால் நல்லது என்று நினைக்கிறேன். இக்காலத்தில் வாழ்ந்த பல கவிஞர்களின் பெயரையும் தாங்கியதாக இருக்கும் பதிவாகவும் மாறும். இலக்கியனின் இப்பணிக்கு நாங்கள் ஒத்துழைப்புக் கொடுப்பதே சிறந்தது.

மேற்கூறிய இவ்விடயம் பற்றிக் கருத்தாடியது கீழ்க்காணும் திரியில் உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=63427&st=40

வணக்கம் யாழ்க்கள நண்பர்களே!

பொதுவாக சமூகச் சாளரம், மெய்யியல், அரசியல், போன்ற பகுதிகளில் என்னுடைய எழுத்தின் எல்லைகளை நீட்டியதில்லை.

குறிப்பாக படைப்பிலக்கியங்களோடே என்னுடைய எழுத்தாணியை மட்டுப்படுத்தியிருந்த எனக்கு இப்போது சோதனைக் காலம் போலும்...

நாங்கள் படைப்பிலக்கியங்களோடு மட்டும் நிற்கிறோம் என்று

நிம்மதியாக இருந்து விட முடியாத சூழலைத் தற்போதைய காலம் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது.

சில வேளைகளில் மற்றவர்கள் செய்யும் தவறுகளைப் பெருந்தன்மையாக நாங்கள் கண்டு கொள்ளாமல் விடுவதென்பது மிகவும் ஆபத்தானது.

சின்ன விடயந்தானே இதைப் பெரிது படுத்தலாமா? என்று நாங்கள் விட்டுவிடும் சில விடயங்கள்

அதுவும் எழுத்தியலில் பயணிக்கும் படைப்பாளிகளுக்கு

அவர்களின் இலக்குகளையே அல்லது அவர்களுக்குரிய தனித்தன்மையையே சாகடித்துவிடும் அபாயத்தைக் கொண்டதாக மாறிவிடும்.

இந்த இணைய யுகத்தில் ஒருவருடைய ஆக்கத்தை அப்படைப்பாளியின் அனுமதி இன்றி எடுப்பது இலகுவானது.,

இருப்பினும் அது யாருடைய ஆக்கம் என்பதைக் குறிப்பிடும் நாகரீகத்தை அவ்வாக்கத்தை

இன்னொரு இடத்தில் பதிவு செய்யும்போது கடைப்பிடிக்கவேண்டியது மிக முக்கியம் இல்லாதவிடத்து

ஒருவருடைய படைப்பினை இணைக்கும் நபர் வெளியிடும் மற்றைய ஆக்கத்தின் அவதூறுகள் அனைத்தும்

தனக்கென்று சில இலக்குகளை உடைய படைப்பாளியைப் பாதிக்கும்.

முன்பொருமுறை யாழ்க்கள உறவான டங்குவார் இதைப்பற்றி என்னுடன் கருத்துரையாடி இருந்தார்

அந்தச் சந்தர்ப்பத்தில் அந்த களத்தில் சென்று பார்வையிட்டதில் அத்தளத்தில் இணைக்கப்பட்டிருந்த அனைத்தும்

ஒரு காலப்பதிவாக இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.

அதனால் அங்கு அதைத் தவறாக கருத முடியாத நிலை தோன்றியிருந்தது

ஆனால் இன்று இங்கு நான் இணைக்கும் இத்திரியினை சரியான செயல் என்று விட்டுவிட முடியாது.

படைப்புகளை ஓரிடத்தில் இருந்து எடுத்து இன்னொரு இடத்தில் பதிவிடும் போது

தயவு செய்து அப்படைப்பாளியின் பெயரை இணையுங்கள்.

நீங்கள் யாரேனும் ஒரு படைப்பாளியின் பெயரை தெரிவிக்காது

நீங்களே எழுதியதுபோல் பதிவிடும் செயலானது

அதற்குப்பின் நீங்கள் இணைக்கும் வேறு பலரின் கொள்கை ரீதியான, எழுத்து ரீதியான பாதிப்பை

அப்படைப்பாளிகளுக்கு உருவாக்கும் ஈனத்தனத்தை ஏற்படுத்துவதாக அமையும்.

பொழுது போக்காக எழுதுபவர்களுக்கும், இலக்கு நோக்கி எழுதுபவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

தயவு செய்து படைப்பாளிகளைக் கொச்சைப்படுத்தக் கூடிய இச்செயலை செய்யாதீர்கள்.

இன்று நான் இங்கு பதிவு செய்யும் இத்திரிக்கானது கீழ்வரும் இணைப்பில் உள்ளது.

இங்கு சுடர் என்பவர் எனது "கண்ணீரில் கருத்தரிக்கட்டும் கால நெருப்பு" எனும் கவிதையை இணைத்துள்ளார்.

யாருடையது என்று குறிப்பிடவில்லை.

அதே நபர் வேறு செய்திகள் பலவற்றை வெட்டி ஒட்டி நிறையவே செய்துள்ளார்.

இந்த சுடர் என்பவர் யாரென்றே எனக்குத் தெரியாது.

அப்படியிருக்கத் தனது கவிதைபோல் இவர் எனது கவிதையைப் பதிவிட்டது மிகவும் தவறானது.

இதே கவிதையை வேறு இடத்தில் எனது பெயரில் வாசித்த ஒரு தோழர்

சுடர் என்னும் பெயரில் இந்தக்கவிதையை நான் முன்பே வாசித்துள்ளேன் என்றும்

சுடரும் நீங்களும் ஒருவரா என்றும் என்னைக் கேட்டபோதுதான் எனக்கு இதன் தாக்கம் புரிந்தது.

இந்தச்சூழலை நீங்கள் கூடச் சந்தித்திருக்கலாம்.

நண்பர்களே ஆதாரங்களுடன் இங்கு இணைத்து அத்தகைய தவறுகள்

தொடர்ந்து இடம்பெறாமலிருக்க உங்கள் கருத்துகளையும் முன்வையுங்கள்.

yarl.com/phpbb/viewforum.php?f=13

yarl.com/phpbb/viewtopic.php?f=13&t=900&sid=1aade675781cf1ea477c524e28a9c13e

இவ்விரு இணைப்புகளும் யாழில் தடைசெய்யப்பட்டிருக்கிறது

இந்தப் பதிவைப் பார்த்தவுடன் குறிப்பிட்ட கருத்துக்களம் திருத்தம் செய்யக்கூடும்

இருப்பினும் இப்பதிவு என்பது சிலரின் தவறுகள் என்பது படைப்பாளிகளைப் பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான் பதிவு செய்கிறேன்.

Edited by valvaizagara

சாகரா,

Intellectual திருட்டு என்பது மிக இலகுவாக, எந்தவிதமான குற்றவுணர்வும் இன்றி இப்போது நடைபெறுகின்றது. அதில் ஒருவரின் ஆக்கத்திலிருந்து ஒரு செய்தி நிறுவனத்தின் செய்திகள் வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தம்முடையதாக உரிமை கோரப்பட்டு வெளியிடப்படுகின்றன. அதிலும், முக்கியமாக தமிழ் இலக்கிய சூழலிலும். தமிழ் ஊடக துறையிலும் இன்று வெட்கப்படும் நிலையில் இவை நடைபெற்று வருகின்றன. ஒன்றில் அப்பட்டமாக பிரதி எடுத்து அப்படியே வெளியிடப் படுகின்றமை அல்லது, அதன் தம் பங்குக்கு ஒரு சில வசனங்களை மாற்றி விட்டு பிரசுரிக்கின்றமை. போக்கிரித்தனமான இந்த நடவடிக்கைகளால் ஏற்படுகின்ற விளைவுகள் பற்றிக் எந்தவிதமான பிரக்ஞையும் அற்று வெறும் வியாபார நோக்கிற்கோ அல்லது புகழாசைக்கோ இவை நடைபெறுகின்றன. திருடனாப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போலத்தான் இதுவும்.

அண்மையில் நெருடல் இணையத்தளம், டங்குவாரின் கட்டுரை ஒன்றை தன் கட்டுரை போன்று எந்தவிதமான நன்றியும் தெரிவிக்காது பிரசுரித்து இருந்தது.

நீங்கள் இணைத்த இணைப்புகள் அநேகமானவை வேலை செய்கின்றது இல்லை... சரி பார்க்கவும்.

Edited by நிழலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அவ்விணைப்புகள் யாழில் தடைசெய்யப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள பயலுகள் எல்லா இடமும் தான் சகாரா. திருந்தவே மாட்டாங்கள். யாழில் இருந்து பிரதி பண்ணாமல் மோகன் அண்ணா செய்யலாம். சில தளங்கள் ஏற்கனவே செய்ய ஆரம்பித்துள்ளன.

இளங்கவி அண்ணாவும் தன் கவிதையை யாரோ வேறு தளத்தில் போட்டிருப்பதாக சொல்லியிருந்தார். இப்படி மற்றவருடைய படைப்புக்களை களவாட எத்தன பேர் தான் கிளம்பியிருக்கிறாங்களோ :lol: யாழில் வரும் படைப்புக்களை பிரதி பண்ணாமல் தடை செய்வது தான் சிறந்த வழி போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த இலக்கியன் ..............?

அஞ்சலி அஞ்சலி கணீர் அஞ்சலி .......என்பது என் கவிதை .எனது கவிதையும்

திருட்டு போய்விட்டதா? ........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த இலக்கியன் ..............?

அஞ்சலி அஞ்சலி கணீர் அஞ்சலி .......என்பது என் கவிதை .எனது கவிதையும்

திருட்டு போய்விட்டதா? ........

நிலாமதியக்கா இலக்கியனின் பதிவில் பெயர்களை போடவில்லை ஒரு காலப்பதிவாக எல்லோருடைய கவிதைகளும் இணைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் நான் இங்கு இணைத்தது 'எதிரி' என்னும் இணையத்தளம்

அதில் 'சுடர்' என்ற பெயரில் என்னுடைய கவிதை இணைக்கப்பட்டிருக்கிறது.

அதே "சுடர்" ஊர் மேய்கிற தகவல்கள் தரவுகள் என்று கண்டவற்றையும் சுடர் என்ற பெயரில் பதிவு செய்துள்ளார்.

ஒருவருடைய ஆக்கத்தை எடுத்து இணைக்கும்போது

எங்கு எடுக்கப்பட்டது அல்லது எவருடையது என்று பதிவிடவேண்டும்.

அப்படி செய்யாமல் முகவரியில்லாமல் கோமாளித்தனமாகப் பதிவிடுவது

உண்மையான படைப்பாளியை பெரும் தாக்கத்திற்கு உள்ளாக்கும்.

என்னைப் பாதித்த ஒரு விடயத்தையே இங்கு பதிவிட்டேன்.

எனக்கே தெரியாத முகமறியாத கோமாளியான சுடரும்,

வல்வை சகாறாவும் ஒருவரா என்று கேள்வி முளைத்தபின்தான்

ஒரு தோழர் மூலம் எனக்கு இவ்விடயம் தெரிய வந்தது.

அதனாலே இந்தப் பதிவை சமூகச் சாளரத்தில் பதிவு செய்தேன்.

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் , ஈழமகள் உங்கள் இருவரின் கருத்திற்கும் நன்றிகள்.

Edited by valvaizagara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.