Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மழையின் சங்கீதம்

Featured Replies

மழையின் சங்கீதம்

என்னமோ தெரியவில்லை இந்த இயற்கையின் சங்கீதம் எனக்கு நன்றாக பிடித்துக்கொண்டது.

மழைபெய்யும்போது இப்படி இரசித்திருப்போமா? எதுவும் அது இல்லாதபோதுதான் அதன் அருமை தெரிகிறது.

மனது அப்படியே குழந்தைபோல் தாவச்சொல்கிறது.

இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது

Edited by kssson

  • கருத்துக்கள உறவுகள்

மழையின் சங்கீதம்

என்னமோ தெரியவில்லை இந்த இயற்கையின் சங்கீதம் எனக்கு நன்றாக பிடித்துக்கொண்டது.

மழைபெய்யும்போது இப்படி இரசித்திருப்போமா? எதுவும் அது இல்லாதபோதுதான் அதன் அருமை தெரிகிறது.

மனது அப்படியே குழந்தைபோல் தாவச்சொல்கிறது.

இடி முழத்துடன் ..... வரும் மழையை நான் யன்னல் ஊடாக நின்று ரசிப்பேன்.

ஒவ்வொரு மழைத்துளியும் ......, ஆயிரம் சொல் சொல்லும்.

  • தொடங்கியவர்

தமிழ்சிறி மழையை இரசிப்பதுடன் விட்டுவிடுவீர்களா? மழையில் நனையும் இன்பத்தைஅனுபவிக்கவேண்டாமா?

புத்தகம் படிக்கும்போது ஏற்படும் பரவசம், ஏனோ அதை நாடகமாகவோ திரைப்படமாகவோ பார்க்கும்போது ஏனோ (எனக்கு) ஏற்படுவதில்லை. அதை வாசிக்கும்போது நாமே இயக்குனர்கள், எப்படி எல்லாம் கற்பனை பண்ணி வைத்திருப்போம். எமது கற்பனையில் வரும் காட்சிகள் எவ்வளவு தத்ரூபமாக இருக்கும். அதை திரையில் கொன்றிருப்பார்கள்.

அது போலவே இந்த மழையின் சங்கீததிற்கு எனது கற்பனைக்குதிரை கட்டுப்பாடின்றி பறக்கிறது. மற்றவர் வரைந்த பாடலோ கவிதையோ இல்லாது உள்ள இந்த இயற்கையின் சங்கீதம் எனக்குள் தூண்டும் எண்ணங்கள் பல.

Edited by kssson

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி மழையை இரசிப்பதுடன் விட்டுவிடுவீர்களா? மழையில் நனையும் இன்பத்தைஅனுபவிக்கவேண்டாமா?

புத்தகம் படிக்கும்போது ஏற்படும் பரவசம், ஏனோ அதை நாடகமாகவோ திரைப்படமாகவோ பார்க்கும்போது ஏனோ (எனக்கு) ஏற்படுவதில்லை. அதை வாசிக்கும்போது நாமே இயக்குனர்கள், எப்படி எல்லாம் கற்பனை பண்ணி வைத்திருப்போம். எமது கற்பனையில் வரும் காட்சிகள் எவ்வளவு தத்ரூபமாக இருக்கும். அதை திரையில் கொன்றிருப்பார்கள்.

அது போலவே இந்த மழையின் சங்கீததிற்கு எனது கற்பனைக்குதிரை கட்டுப்பாடின்றி பறக்கிறது. மற்றவர் வரைந்த பாடலோ கவிதையோ இல்லாது உள்ள இந்த இயற்கையின் சங்கீதம் எனக்குள் தூண்டும் எண்ணங்கள் பல.

rainanddrops.gifraindrops.gif

kssson மழையை ரசிப்பதுடன் நின்று விடுவேன் . அதில் நனைந்து ..... எங்காவது போகும் போது உடுப்புகள் நனைந்து ..... அதுகாய அரை நாள் எடுக்கும் என்னும் பயம் . :)

  • தொடங்கியவர்

செவ்விந்திய மக்களின் வாழ்வும் எமது மக்களின் வாழ்க்கையைப்போல மிகவும் துன்பகரமானது. இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த இந்த இனம் பெரும் இனப்படுகொலைகளை சந்தித்திருக்கிறது. அவர்களின் காலை வணக்கப்பாடல் ஒன்று. நவீன இசையுடன் சேரும்போது அதன் சுவையே தனி.

கண்களை மூடிக்கொண்டு எங்கே கேட்டுப்பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=1VqoxOcEqpk

ம்....... கீழுள்ள இசையையும் கொஞ்சம் கேட்டுப்பார்க்கலாமே. ஆனால் கண்களை மூடிவிடாதீர்கள். இணைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களும் தத்ரூபமாக இருக்கின்றன. மூங்கிலின் துளைக்குள் ஊடுருவும் காற்றுக்கு இப்படி ஒரு கிறங்கடிக்கும் சக்தியா?

நல்லிசைக்கு வார்த்தையின் அலங்காரங்கள் தேவை இல்லை. கவிதை எனும் அலங்காரியை கொஞ்சம் தள்ளிவைப்போம்.

Edited by kssson

மிக அருமையாக இருக்கின்றது

எனக்கு மழை என்பது என்றுமே மிக மிக இன்பம் தரும் ஒரு இயற்கையின் நிகழ்வு. அதிலும் குளிர் மழையில் நனைவது என்பது பேரின்பமான ஒரு அனுபவம். ஊரில், அப்பாவுடன் சைக்கிள் Bar இல் இருந்து கொண்டு மழையின் போது நனைத்த அனுபவமும், அதன் போது அப்பா சொல்லித் தந்த ரசிப்பும் இன்னும் புது மழைபோல் மனதுள் இதமாக இருக்கின்றது. கனடா வந்தும் கூட கடும் குளிர் 0 இல் இருக்கும் போது கூட மழையில் நனைந்திருக்கின்றேன். இன்று வரை வாழ்க்கையில் நான் குடை பாவித்ததும் இல்லை...

YouTube இல் இருந்து சத்தத்தை மட்டும் பிரித்தெடுக்கும் ஏதேனும் மென்பொருள் இருக்கின்றதா? இந்த மழையின் சத்தத்தை மட்டும் பிரித்தெடுக்க விரும்புகின்றேன். இசை மேதை யானியின் ஒரு தொகுப்பில் மழையின் இயற்கை சத்தம் உள்ளது.. அதன் பின் நான் கேட்ட அருமையான மழைச் சத்தம் இது

மிக்க நன்று Ksson (உங்கள் பெயரை எப்படி தமிழில் எழுதுவது?)

  • தொடங்கியவர்

இதுவும் அருமை.

kssson ஐ எப்படி தமிழில் எழுதுவதா? தலையை பிய்த்துக்கொண்டிருக்கிறேன்.

Edited by kssson

  • 2 weeks later...

இந்தப் படத்தில் கதாநாயகனையும் துட்டர்களையும் விட மற்றயவர்கள் எல்லோரும் சியூ (செவிந்தியர்) இடம் டகோட்டா

In 1865, Civil War hero Lt. John Dunbar (Kevin Coster) asks to be reassigned to the western frontier (Sioux & Sioux's land) before it disappears. At his isolated post he develops a relationship with ... Dances with Wolves- Trailer !!

கவனம் ! கவனம் ! இது இனிப்பானதல்ல !!!

இவர்களின் மொழி லக்கோடா, இன்ததின் பேயர் சியூ ...வுண்டெட்ணி Wounded Knee என்ற இடத்தில்

1890 ல் ப்பிக் ஃவுட் (Big Foot) ன் தலைமையில் தங்கள் விடுதலைக்கான ( Ghost Dance - ஆன்மாவின் நடனம் ) கடைசி நடனத்தை ஆடி எப்படி விடுதலை அடைந்தார்கள் ? !!!

தற்போது செவ்விந்தியரின் நிலை ஒரு கணோட்டம், உண்மைக்கதை (ஓக்லலா)

An FBI man with Sioux background is sent to a reservation to help with a murder investigation, where he has to come to terms with his heritage. Slowly he rejects the ...

Thunderheart 1992 Part 1

http://www.youtube.com/watch?v=wHwjB8OWYK0

Thunderheart 1992 Part 2

இப்படியான உலகதிலே நாங்களும் எங்கள் ஒருமையும் ... ?

Edited by ஜெகுமார்

  • தொடங்கியவர்

இப்படியான உலகதிலே நாங்களும் எங்கள் ஒருமையும் ... ?

புரியவில்லை.

Edited by kssson

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.