Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களை நீங்கள் பேணிக்காக்கா விட்டால் உங்களை வைத்தியர் சுற்றவேண்டிய துர்பாக்கியம் ஆகிவிடும்;!

Featured Replies

உங்களை நீங்கள் பேணிக்காக்கா விட்டால் உங்களை

வைத்தியர் சுற்றவேண்டிய துர்பாக்கியம் ஆகிவிடும்;!!!

„உண்டிசுருங்குதல் பெண்டிற்கழகு“ என்ற வசனத்தை தாயகத்தில் கேட்ட ஞாபகம்! எமக்கு அறுசுவையும் சமைத்து தந்த தாய் சொன்னவிடையங்களை நாம் கேட்டு என்றும் ஒழுகியிருந்தால். இன்று வைத்தியர்கள் என்றும் பருமன் குறைப்பு என்று பல நோய்களுக்கு பல வழிகளில் பணத்தை விரையம் செய்ய வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எனினும் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் கோவில்கள் மற்றும் தமிழ்பாடசாலைகள் இத்தகைய நற்பழக்கத்தை இதுவரை காலமும் முன்னெடுக்காது இருப்பது தமிழர்கள் செய்த துர்பாக்கியம். இன்றைய தாய்மார்களுக்குத் தெரியாத விடையங்களை மாணவ மாணவிகளுக்கு பகிர்ந்து கொடு;க்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ் ஆசிரிய ஆசியர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் சந்தர்ப்பம் பார்த்து பணத்தை மட்டும் எப்படி புடுங்குவது என்ற நிலைக்குள் இன்று தள்ளப்பட்டு விட்டார்கள் என்பதால் எமது சமூகம் என்றும் பணத்தை மட்டும் குறிவைத்து எதையும் செய்யும் என்ற நிலை அதிகம் புலம் பெயர் நாடுகளில் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதனால் இன்றைய வளரும் இளையவர்களும் பணத்திற்கே அலைகின்றார்கள். இது எம்மினம் செய்த துர்பாக்கியம். பணத்தை மட்டும் புடுங்கும் விடையங்களில் எம்மை தயார் செய்து கொண்டு தமிழ் என்றும் சமயம் என்றும் கொக்கரித்துக் கொண்டு உள்ள எமது சமூகம் பலவழிகளில் அழிந்து போகின்றது. என்பது தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவம் அதிக கவனம் எடுக்கவில்லை. என்று பலமூத்தோரின் கவலை என்பதை மீண்டும் சுட்டிக்காட்டும் „ஈரனல்“ என்றும் தயங்காது. புஜம் என்றால் தோள் புஜங்கள் என்றால் சர்ப்பம். இந்த புஜங்காசனமானது ஒரு பாம்பு படம் எடுத்து நின்றால் எப்படி இருக்குமோ அப்படியே காட்சியளிக்கிறது. இதில் 15 வகை புஜங்காசனங்கள் உண்டு. இவற்றை ஒவ்வொரு மனிதனும் தினமும் செய்தால் அதில் பல பயன்கள் உண்டு.

செய்முறை: 1. முதலில் ஒரு துணியை விரித்து குப்புறப் படுத்துக் கொள்ளுங்கள்.

2. இரண்டு கைகளையும் முழங்கையடியில் மடக்கி இடது கைவிரல்களின் மீது வலது கை விரல்களை வைத்துக் கொள்ளவும்.

3. கைவிரல்களுக்கு மேலே நாடியை (கவாய் கட்டை) வைத்து படுத்து இளைப்பாறவும். இரண்டு ஆழமான மூச்சை இழுத்து விடவும்.

4. இரண்டு கைகளையும் எடுத்து இடுப்பின் வலது பக்கம் வலது கையையும் இடுப்பின் இடது பக்கம் இடது கையையும் (உள்ளங் கைகளை) நன்றாக ஊன்றிக் கொள்ளுங்கள்.

5. கழுத்தை மட்டும் உயர்த்தி முன்னால் அண்ணாந்து பாருங்கள்.

6. இந்த நிலையில் கண்களை எவ்வளவு தூரம் உயர்த்திப் பார்க்க முடியுமோ அவ்வளவு தூரம் பாருங்கள். இந்த நிலையில் கண்களை மூடி ஒரு நிமிடமாவது நிற்கப் பழகவும். பின்னர் மெதுவாக தலையை கீழே இறக்கி நாடியை நிலத்தில் வைக்கவும்.

7. இப்போது உள்ளங்கைகளை விலா எலும்பின் கடைசிப் பகுதிக்கு பக்கவாட்டில் வைக்கவும்.

முழங்கைகள் வெளிநோக்கி சயாமல் இரண்டு கை புஜங்களும் ஒன்றுக்கு ஒன்று சமாந்தரமாக இருக்கட்டும்.

8. மூச்சினை உள் இழுத்த வண்ணம் முகத்தை நிமிர்த்தி உள்ளங்கைகளை சற்று அழுத்தி தலையை தூக்கி தோள் பகுதியை மேலே தூக்க வேண்டும். உள்ளங்கையிலிருந்து தோள்பட்டை வரை கையில் எந்த இறுக்கம் இல்லாமல் முதுகை கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி வளையுங்கள்.

இச் சமயத்தில் சாதாரண நிலையில் சுவாசிக்கவும்.

9 தலைநெஞ்சுப் பகுதியை கீழே இறக்கும் போது மூச்சை வெளிவிட்ட வண்ணம் மெதுவாக இறக்குங்கள்.

நேர அளவு: இறுதி நிலையை (8 ஆம் நிலை) அடைந்ததும் 20 வினாடிகள் சாதாரண சுவாசத்தில் நிற்கவும்.

பழகப் பழக ஒரு நிமிட நேரம் வரை நிற்கலாம்.

சுவாசம்: உடம்பை மேலே தூக்கும் போது உட்சுவாசிக்கவும். இறுதி நிலையில் சாதாரண சுவாசத்தில் நிற்கவும் இறுதி நிலையின் 20 வினாடி முதல் 1 நிமிடம் வரை நிற்க முயலவும்.

உடம்பை கீழே இறக்கும்போது வெளி சுவாசிக்கவும்.

குறிப்பு கால் பாதங்கள் சேர்ந்து இருக்க வேண்டும்.கால் விரல்கள் பின்னோக்கி நீட்டப்பட்டிருக்க வேண்டும். தொப்புளில் இருந்து கால் வரையிலும் விப்பில் ஒட்டியவாறே வைத்துக் கொள்ளவும். இறுதி நிலையில் கண்மணிகள் மேல் நோக்கியவாறு கண்கள் மூடிய நிலையிலும் இருக்க வேண்டும். உங்களால் முடியுமான அளவிற்கே உடம்பை வளைத்து மேல் உயர்த்த வேண்டும். முழங்கைகள் உடம்புடன் சேர்ந்து இருக்க வேண்டும். முடிந்த அளவு முழங்கைகளை நேராக்க முயலவும்.

மனோ நிலை இடுப்புஇ கால் தொடைகள்இ கால்பாதம் நிலத்திலேயே இருக்கின்றன என்ற எண்ணம் கவனிக்க வேண்டியதொன்றாகும். இடுப்பு தசைகளை சுருக்குகிறேன்இ கால் தொடைகளை இறுக்கி வைத்திருக்கிறேன். முழங்கால்கள் நீட்டப்பட்டு நிலத்தில் பட்டும் படாமலும் இருக்கின்றன போன்ற எண்ணங்கள் மனதில் இருக்கட்டும்.

பலன்கள் 1. முதுகெலும்பு நன்றாக தூண்டப்பட்டு உடம்பில் சுறுசுறுப்பு தன்மை ஏற்படும்.

2. சளி சம்பந்தமான நோய்கள்

டி.பி. ஆஸ்துமா வராமல் இருப்பதோடு இந்த நோய் உள்ளவர்களுக்கு இந்த ஆசனம் ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கும்.

3. மார்பு எலும்பு வியும். பிராண சக்தி உடம்பில் அதிகம் சேரும்.

4. ஜீரணக் கோளாறுகளில் இருந்து விடுபடலாம்.

5. பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

6. இடைப்பகுதி (இடுப்பு) மெலிந்து பலமடைகிறது.

7.இரண்டு தோல்களும் வலுவடைந்து கழுத்து உறுதி பெற்று பிட வலுவுள்ளதாகிறது.

8. கூனல் வராமல் தடுக்கிறது. முதுகெலும்பை வலிமை பெறச் செய்கிறது.

9. குதிக்கால்களில் உள்ள நோவை அகற்றும்.

10. உடலில் சேர்ந்து இருக்கும் அலுப்புஇ சோம்பல்இ மந்த தன்மைகளை இல்லாமல் செய்யும்.

11. உற்சாகம் சுறுசுறுப்பும் உள்ள மனிதனாக இந்த ஆசனம் செய்பவரை மாற்றி அமைக்கிறது

.

12. மூளையில் இருந்து முதுகெலும்புக்குள் வரும் மைய நரம்புத் தொகுதியைத் நல்ல இயக்க நிலைக்கு கொண்டு வந்து உடலினுள் இருக்கும் எல்லா உறுப்புகளையும் நல்ல நிலையில் இயங்க இந்த ஆசனம் உதவுகிறது.

13. இதயம் ஈரல் இரப்பை சிறுநீரகங்களின் தொழிற்பாட்டை மேம்படுத்துகிறது.

14. மாணவர்களுக்கு நல்ல மன ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்துகிறது.

எச்சரிக்கை: அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு தான் இந்த ஆசனத்தைச் செய்ய முயல வேண்டும்.முதுகெலும்பில் விலகல் உள்ளவர்கள் ஒரு யோகா சிகிச்சை நிபுணன் ஆலோசனையுடன் செய்து வர குணமடையலாம். மாற்றாசனம் ஹலாசனம் அல்லது பஸ்சிமோத்தாசனம் செயயலாம்.இதைவிட முக்கியம் அழகுசாதனங்களும் அழகுப்பொட்களும் முகஅலங்காரமும் சிகையலங்காரமும் பூச்சுக்களும் மலிவுவிற்பனை ஆடை அணிகளும் வாங்கி அணிய முன் எமது உடல் பருமன் குறைந்திருந்தால் இயற்கையின் அழகு என்றும் „நோயற்றவாழ்வும் குறைவற்ற செல்லவத்தையும்“; அள்ளித்தரும் என்று இன்றாவது நம்புங்கள் என் அருமை தாய்மார்களே!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல்களுக்கு நன்றி.

இன்று இதனைச் செய்துபார்க்க போறேன்..உடம்பு எங்காவது சிக்குப்பட்டு கோணல் மாணாலாக போச்சுது என்றால், தமிழ் மாறன் தான் பொறுப்பு

பி.கு: தமிழ் மாறன், அழகான உங்கள் பெயரையும் தமிழ் எழுத்துகளில் மாற்றுங்களன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று இதனைச் செய்துபார்க்க போறேன்..உடம்பு எங்காவது சிக்குப்பட்டு கோணல் மாணாலாக போச்சுது என்றால், தமிழ் மாறன் தான் பொறுப்பு

கவனம்!!!!!!!!!!!!!!!!!!!

கண்டகண்ட இடங்களளிலை சுழுக்கப்போகுது

கனவிசயம் வில்லங்கமாய்ப்போகும் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

கவனம்!!!!!!!!!!!!!!!!!!!

கண்டகண்ட இடங்களளிலை சுழுக்கப்போகுது

கனவிசயம் வில்லங்கமாய்ப்போகும் :wub:

சுழுக்கு எடுக்க , மசாஜ் பண்ண போனால் ..... ஒரு கல்லிலை இரண்டு மாங்காய்.

  • தொடங்கியவர்

சுழுக்கு எடுக்க மசாஜ் பண்ண போனால் ..... ஒரு கல்லிலை இரண்டு மாங்காய்.

உடம்பு சுகாதாரமாயும் மெலிவாயும் இருந்தால் தான் அடிக்கடி வில்லங்கம் இல்லாமல் சுழுக்கு எடுக்கலாம்..................

கண்டகண்ட இடங்களளிலை சுழுக்கப்போகுது

கனவிசயம் வில்லங்கமாய்ப்போகுது

என்ன கு ம அண்ணை அனுபவமோ!!!!!!!!!!

பரிமள மாமி பாவம் பாத்து நடவுங்கோ!!!!!!!

நிழலி செய்து பார்த்து ஒண்டும் ஆகேலை தானே!!!!!!!

எனக்கும் என்ர பெயரை தமிழிலை எழுத ஆசை தான்

ஆனால் எழுத தெரியவில்லை!!!!!!

மற்றும் பதில் கொடுக்க விரும்பும் உறவின் கருத்தையும் வெட்டி ஒட்ட

தெரியவில்லை????

முடிந்தால் தனி மடலிலோ அல்லது இங்கேயோ அறிய தாருங்கள்!!!!!

Edited by thamilmaran

  • கருத்துக்கள உறவுகள்

மற்றும் பதில் கொடுக்க விரும்பும் உறவின் கருத்தையும் வெட்டி ஒட்ட

தெரியவில்லை????

முடிந்தால் தனி மடலிலோ அல்லது இங்கேயோ அறிய தாருங்கள்!!!!!

கறுமம் புடிச்ச கணணி பற்றி தெரிந்தால் உங்களுக்கு சொல்லி தாரத்திற்கு என்ன?? :wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

சுழுக்கு எடுக்க மசாஜ் பண்ண போனால் ..... ஒரு கல்லிலை இரண்டு மாங்காய்.

உடம்பு சுகாதாரமாயும் மெலிவாயும் இருந்தால் தான் அடிக்கடி வில்லங்கம் இல்லாமல் சுழுக்கு எடுக்கலாம்..................

-----

தமிழ்மாறன் , சுழுக்கு எடுக்க உடம்பு சுகாதாராமாய் இருக்க வேணுமெண்டது சரி ,

ஆனால் மெலிவாக இருக்க வேணுமெண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது .

"வல்லவ‌னுக்கு புல்லும் ஆயுதம்"

நிழலி செய்து பார்த்து ஒண்டும் ஆகேலை தானே!!!!!!!

மனிசி முதலுக்கே மோசம் வந்து விட்டிடும் என்ற அக்கறையில் (பயத்தில் ??) உந்த ஆசனத்தை செய்து பார்க்க வேண்டாம் என்று உத்தரவிட்டுட்டா... ம.சொ.மந்திரம்

எனக்கும் என்ர பெயரை தமிழிலை எழுத ஆசை தான்

ஆனால் எழுத தெரியவில்லை!!!!!!

இங்கே சென்று ஒருக்கா மாத்தச் சொல்லிக் கேட்டுப் பாருங்கோ

link

மற்றும் பதில் கொடுக்க விரும்பும் உறவின் கருத்தையும் வெட்டி ஒட்ட

தெரியவில்லை????

முடிந்தால் தனி மடலிலோ அல்லது இங்கேயோ அறிய தாருங்கள்!!!!!

reply என்று இருக்கும் பொத்தானை அழுத்தினால், எதற்கு பதில் எழுதவேண்டுமோ அது quote என்று அடைப்புக் குறிக்குள் இருக்கும். அந்த அடைப்பு குறி முடிவடைந்த இடத்தில் பதில் போடுங்கள். தமிழ் சிறி இதனை மிகத் தெளிவாக ஒரு இடத்தில் விளங்கப்படுத்தி இருந்தார்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.