Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணமகளை மணமகனின் வலப்புறத்திலும் பின்னர் இடப்புறத்திலும் அமரவைத்தல்

Featured Replies

இனிய வணக்கங்கள்,

எனது ஆசான் ஒருவர் கனடாவில சட்டரீதியாக திருமணம் செய்துவைக்கும் அதிகாரத்தை பெற்று இருக்கிறார். பல திருமணங்களும் செய்து வைத்து இருக்கிறார். அண்மையில அவர் என்னிடம் திருமண உறுதிமொழியை (அதான் திருமணபதிவின் போது மாப்பிளையும், பொம்பிளையும் ஆளாளிண்ட கையைக்கோர்த்துக்கொண்டு சொல்லுவீனமே.. அது) தமிழில உருவாக்குவதற்கு உதவி கேட்டு இருந்தார்.

நானும் சரி ஓம் என்று சொல்லி அவர் அலுவலகத்துக்கு சென்று அவருடன் உட்கார்ந்து திருமண உறுதிமொழி வாசகத்தை, மற்றும் அங்கு கையாளப்படவேண்டிய நடைமுறைகளை ஓர் ஒழுங்குமுறையாக தமிழில் எழுதிக்கொண்டு இருந்தோம்.

இதன்போது திருமண வைபவத்தின்போது மாப்பிளை, பொம்பிளை எப்படி இருக்கையில் உட்காருவார்கள் என்பதுபற்றிய விடயத்திற்கு வந்தோம். அவர் சொன்னார்.. உறுதிமொழியை எடுக்க முன்னம் பொம்பிளை மாப்பிளையின்ட வலப்பக்கத்திலும், உறுதிமொழியெல்லாம் எடுத்து மோதிரம் மாற்றி உட்காரும்போது பொம்பிளை மாப்பிளையின்ட இடப்புறத்திலும் உட்காரவேணும் எண்டு இப்படி சொன்னார்.

எனக்கு விளங்கவில்லை. நான் கேட்டன். அது ஏன் உறுதிமொழி எடுக்கமுன்னம் பொம்பிளை மாப்பிளையிண்ட வலப்பக்கதிலையும், உறுதிமொழி எடுத்தாப்பிறகு பொம்பிளை மாப்பிளையிண்ட இடப்பக்கத்திலும் உட்காரவேண்டும் எண்டு.

அவர் சொன்னார்.. அது ஏனெண்டாவாம் எங்களிண்ட உடலில இடப்பக்கத்திலதானாம் இதயம் இருக்கிது. இதனால மாப்பிளையிண்ட இடதுபுறமாக சட்டரீதியாக திருமணம் செய்தபின்னர் பொம்பிளை உட்காரும்போது அவ அவரிண்ட இதயத்துக்கு அருகாக இருக்கிறாவாம். இந்த தத்துவத்திண்ட அடிப்படையிலதானாம் அப்படியாக இருவரும் இருக்கையில உட்காரவைக்கப்படுறீனமாம்.

நான் அவரிடமும் கேட்டன், இந்தவிசயம் பற்றின அறிவு, அனுபவம் யாருக்காவது இஞ்ச இருந்தால் உங்களிடமும் கேட்கிறன்.. அப்பிடி எண்டால்... பொம்பிளையிண்ட இதயத்துக்கு அருகாக மாப்பிளை இருக்கத்தேவை இல்லையோ? உறுதிமொழி எடுக்கமுன்னம் மாப்பிளை பொம்பிளையிண்ட வலதுபக்கத்திலையும், உறுதிமொழி எடுத்து மோதிரம் மாற்றிய பின்னர் மாப்பிளை பொம்பிளையிண்ட இடதுபக்கத்திலையும் இருந்தால் இன்னமும் நல்லதுதானே?

அதுக்கு அவர் சொன்ன பதில் என்ன எண்டால் அவையளுக்கு குழந்தை பிறந்தபிறகு அது வந்து பொம்பிளையிண்ட இடப்பக்கமாக உட்கார்ந்துகொள்ளுமாம். :rolleyes:

சடங்குகள், சம்பிரதாயங்களில எப்பிடி எல்லாம்.. திட்டமிட்டு ஆண் + பெண்ணை வகுத்து, வரைப்படுத்தி, மட்டம்தட்டி அல்லது மட்டுப்படுத்தி வச்சு இருக்கிறார்கள் எண்டுறதுக்கு இதுவும் ஓர் நல்ல உதாரணம் போல தெரிஞ்சிது. இதனால இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்ளுறன்.

பிறகு, தாய்க்குலம் உதுகளை வாசிச்சுப்போட்டு அட இந்த விசயம் எனக்கு இவ்வளவு காலமும் தெரியாமல் போச்சிதே எண்டு மனதுக்க யோசிச்சுப்போட்டு.. இனி வீட்டில குடும்ப படங்கள் ஏதாவது எடுக்கேக்க தந்தையர் குலத்தை உங்கட இடப்பக்கமாக வந்து உட்காரச்சொல்லி கரைச்சல் குடுக்காதிங்கோ.

மாப்பிளைக்கும், பொம்பிளைக்கும் எது வசதியாக இருக்கிதோ அந்தப்பக்கம் அவையள் உட்கார்ந்துகொள்ளட்டும்.. மேல இவர் சொன்ன விளக்கம் தவறு எண்டு நீங்கள் நினைச்சால்.. அல்லது இப்படி செய்யுறதுக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிது எண்டு தெரிஞ்சால் சொல்லுங்கோ.

வணக்கம்

ஐரோப்பாவில் பெண்ணை ஆண் இடது பக்கமாக அழைத்துச் செல்வார். முற்காலத்தில் வலது கையை உறையிலுள்ள வாளில் வைத்திருப்பதால் அல்லது வாளை வலது கையால் வாளை இலகுவாக உருவலாம் என்பதற்காக இடது கையால் பெண்ணைப் பிடித்திருப்பார்கள். அதே வழக்கம் இன்றும் நிலவுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கலியாணங்கள் கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலத்துக்கு மேல் நடப்பதால் .......

மாப்பிளையும் , பொம்பிளையும் ஒரே இடத்தில் இருந்தால் கால் விறைச்சுப் போகும் எண்டு மாறி , மாறி இருக்க சொல்லியிருப்பார்கள்.

உண்மையில் உமை சிவனுக்கு இடப்புறத்தில் இருப்பதால் (புராணத்தில்) தான் திருமணம் முடிந்த பின் பெண்ணை இடது பக்கம் அமரச்செய்கிறார்கள். இது காலந்தோறும் தொடர்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு நீங்கள் கிறிஸ்தவ முறையை சொல்ல வில்லை தானே அதால உங்களுக்கு ஒரு டிப்ஸ் இந்த தலைப்பையும் வாசித்து பாருங்கள் உள்ள யூ ரியுப்பில ஒரு கல்யாணமும் இருக்கு அதையும் பாருங்கள் [நன்றி குட்டி] அதுவும் கனடாவாம் :wub::wub::)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=60025&view=findpost&p=521909 :rolleyes:

Edited by முனிவர் ஜீ

  • தொடங்கியவர்

இணையவன், உங்கள் விளக்கம் ஏற்புடையதாய் இருக்கிது. ஆனாலும்.. எல்லாருக்கும் வலக்கையோ அல்லது இடக்கையோ வலமானது எண்டும் சொல்லிறதுக்கு இல்லைதானே. பெரும்பாலானவர்கள் வலக்கை பழக்க உள்ள ஆக்களாக இருக்கிறபடியால சிலது அப்படியோவும் தெரியாது. இந்தக்காலத்தில வலதுபக்கம் பொக்கற்றுக்கை தொலைபேசி, ஐபோன்தான் இருக்கும். மனுசி இடப்பக்கம் இருக்கிறதால யாராச்சும் பொண்ணுகள் அழைப்பு கொடுக்கேக்க மனுசியிடம் மனுசன் மாட்டிக்கொள்ளாமல் இருக்க இது உதவும்.

தமிழ்சிறீ, நீங்கள் சொல்லிறதும் ஏற்புடைய விளக்கம்தான். ஆனால் கால்விறைக்கிது எண்டுறதுக்காகத்தான் இப்பிடி ஆக்களை மாறி இருத்திறீனம் எண்டால் பிறகு ஏன் வலப்பக்கம், இடப்பக்கம் எண்டு எல்லாம் பார்க்கவேணும். தவிர, இந்துமத கலியாண எண்டால் மாப்பிளைதானே கனநேரமாய் ஒரு இடத்தில குந்திக்கொண்டு இருப்பார். ஒண்டுக்கு இருக்கிறதுக்கும் எழும்பி போக ஏலாது. ஆனால் பொம்பிளையை புடவை மாத்திறதுக்கும், மேக் அப் போடுறதுக்கும் இழுத்துக்கொண்டு போவீனமே.

ஈஸ், இந்துமத கலியாணங்களில இப்பிடி செய்யுறதுக்கு நீங்கள் சொல்லுறது காரணமாய் இருக்கலாம்.

சுவாமி,

உங்களுக்கு கனடா எண்ட உடன ஒரு சிரிப்பு என..

மேல எல்லாரும் சொல்லிறதை வச்சு பார்த்தால் கூட.. சாரம்சமாய் பார்க்கேக்க.. ஆம்பளையிண்ட வலப்பக்கம் அவருக்கு வசதிக்காய் freeஆய் இருக்கோணும், ஆனால் பொம்பிளையிண்ட வலப்பக்கம் இடைஞ்சலாக இருந்தாலும் பரவாயில்லை எண்டுறதுபோல இருக்கிது. அதாவது ஆண்களுக்கு வசதியாய், comfortable ஆய் இருக்கிறதுக்கு பெண்களைவிட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிதுபோல தெரிகிது.

+++

சரி என்னமோ.. இந்த திருமணபதிவு செய்கிற விசயங்கள்.. கலியாணத்தை நடாத்திவைக்கிற விசயங்களும் லேசுப்பட்டவை அல்ல. தற்செயலாய் கலியாண தம்பதியரிண்ட வாழ்க்கையில ஏதாவது ஏடாகூடமாக நடந்தால் இல்லாட்டிக்கு பிரச்சனை ஏற்பட்டால் பிறகு எங்கடை ஆக்கள் சொல்லுவீனம்.. கலியாணம் அண்டைக்கு வழமைமாதிரி இல்லாமல் பொம்பிளை மாப்பிளையிண்ட வலப்பக்கம் மாறி இருந்தவ. அதனாலதான் உவையுக்கு வாழ்க்கையில உப்பிடி நடந்தது, கஸ்டங்கள் வருகிது எண்டு. கடைசியில புரட்சிகரமாய் இல்லாட்டிக்கு.. மூடநம்பிக்கையை களைவம் எண்டு நினைச்சு யாராச்சும் கலியாணத்தை நடத்திவைக்க அவருக்கு சனத்திட்ட இருந்து கல்லெறிகள்தான் விழும். சனங்கள் ஐயோ இவன் இப்பிடி சரியான முறைகளை, ஒழுங்குகளை கடைப்பிடிக்காமல் அவையுக்கு கலியாணம் செய்துவச்சபடியாலதான் அந்தக்குடும்பம் அப்பிடி நாசமாய் போட்டிது எண்டு திட்டிக்கொண்டு இருக்கிங்கள்.

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணமகளை மணமகனின் வலப்புறத்திலும் பின்னர் இடப்புறத்திலும் அமரவைத்தல்.

இந்து சமய முறைப்படி திருமணத்தில் மணமகன் மணமகள்

சிவனும் சக்தியும் என பாவனை செய்தே திருமணம் நடைபெறுகின்றது.

இதனால் சிவனின் இடப்பாகத்தில் சக்தி இருப்பதால் இவ்வாறு

மணமகளை மணமகனின் வலப்புறத்திலும் பின்னர் இடப்புறத்திலும் அமரவைக்கப்படுகின்றது.

  • தொடங்கியவர்

எனக்கு என்னமோ இணையவன் சொன்னமாதிரி.. ஆண்களிண்ட வசதிகருதி அப்படி இடப்பக்கமாய் பொண்ணு நிற்கவைக்கபடுவதாயே தெரிகிது வாசா.

கீழ யப்பான் நாட்டு திருமண வைபவத்திலயும் நீங்கள் சொன்னமாதிரி சிவன் சக்கிதியிண்ட வலப்பக்கத்தில நிண்டு குடை பிடிச்சுக்கொண்டு வாறார். வலது கையில புத்தகம் ஏதோ வச்சு இருக்கிறார். மாப்பிளையிண்ட comfortable க்குத்தான் இப்பிடி வலம், இடம் செய்யப்பட்டு இருக்கிது என்றே நினைக்கிறன்.

shinto-wedding-ceremony2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ இணையவன் சொன்னமாதிரி.. ஆண்களிண்ட வசதிகருதி அப்படி இடப்பக்கமாய் பொண்ணு நிற்கவைக்கபடுவதாயே தெரிகிது வாசா.

கீழ யப்பான் நாட்டு திருமண வைபவத்திலயும் நீங்கள் சொன்னமாதிரி சிவன் சக்கிதியிண்ட வலப்பக்கத்தில நிண்டு குடை பிடிச்சுக்கொண்டு வாறார். வலது கையில புத்தகம் ஏதோ வச்சு இருக்கிறார். மாப்பிளையிண்ட comfortable க்குத்தான் இப்பிடி வலம், இடம் செய்யப்பட்டு இருக்கிது என்றே நினைக்கிறன்.

shinto-wedding-ceremony2.jpg

அவா நோஞ்சு போடுவா எண்டு குடை பிடிச்சு கொண்டு வாறார்....மாப்பிளையிண்ட comfortable க்குத்தான் இப்பிடி வலம், இடம் செய்யப்பட்டு இருக்கிது எண்டு சொல்லுறிங்கள்.

நீங்கள் பொண்ணுங்களுக்கு ஆலவட்டம் பிடியுங்கோ... அதுக்கு ஏன் எங்களை இழுக்கிறிங்கள்? :)

  • தொடங்கியவர்

ஏதோ தாய்க்குலத்துக்கு ரெண்டு நல்லகாரியம் செய்யேக்க நாலுபேரை கூப்பிட்டு செய்வம் எண்டுதான். வேற ஒண்டும் இல்லை சபேஸ்.:D

Edited by மச்சான்

  • தொடங்கியவர்

மேல பரவாயில்லை ஆலவட்டம் பிடிக்கிறார். இதிலை மணமகன் மணமகளை தூக்கிக்கொண்டே போறார். உடம்பில பலம் இருக்கிற மணமகன்மார் இப்பிடியும் செய்து பார்க்கலாம.

3944713987_8d682137ae.jpg

  • கருத்துக்கள உறவுகள்

RiversideSeniorCenterAfricanMockWedding08077.jpg

இங்கு கொஞ்சம் முன் யோசனையாக ......

"விளக்குமாற்றால் அடிக்கக் கூடாது" என்று சத்தியம் வாங்குகிறார்.

RiversideSeniorCenterAfricanMockWedding08077.jpg

இங்கு கொஞ்சம் முன் யோசனையாக ......

"விளக்குமாற்றால் அடிக்கக் கூடாது" என்று சத்தியம் வாங்குகிறார்.

தமிழ் சிறி எங்கயோ போயிற்றீங்க :D

ஆமா இது உங்கட பட்டறிவா? முன் யோசனையா?

RiversideSeniorCenterAfricanMockWedding08077.jpg

இங்கு கொஞ்சம் முன் யோசனையாக ......

"விளக்குமாற்றால் அடிக்கக் கூடாது" என்று சத்தியம் வாங்குகிறார்.

:D:):D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.